Sunday, May 30, 2010

பெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது - வெற்றிகொண்டான் உரை





தமிழ் நாடல்ல - தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் நமக்கு மிகப் பெரிய பெருமை அலைகடல் வெற்றிகொண்டான் உரை.

தமிழ்நாடு என்று சொல்லுவதை விட தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் நமக்கு மிகப் பெரிய பெருமையென்றார் அலைகடல் வெற்றிகொண்டான்.

சென்னை - புரசைவாக்கம் தாணா தெருவில் வடசென்னை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நேற்று (28.5.2010) நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் பெரியாரும் வீரமணியும் என்ற தலைப்பில் தி.மு.க. சொற்பொழிவாளர் வெற்றிகொண்டான் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

நான் எனது சொந்த வீட்டில், தாய் வீட்டில் பேசும் உணர்ச்சியோடு பேசுகின்றேன். இங்கு நான் உரையாற்றும்போது புதுத் தெம்பும், புத்துணர்ச்சியும் பெறுகின்றேன்.

பிரித்துப் பார்க்காதே

தந்தை பெரியாரும்_ வீரமணியும் என்று சொல்லும்போது இருவரையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. பெரியார் சிந்தித்தார்- சொன்னார்- செயல்பட்டார் - நம்மை மனிதராக்கினார். கொள்கைச் சொத்துக்களை விட்டுச் சென்றார்- நமக்கு வீரமணியையும் தந்தார்- வீரமணியோ பெரியார் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். இதில் ஏன் இவர்களைப் பிரித்துப் பார்க்க வேண்டும்?

பிரித்துப் பேச ஆரம்பித்தால் உள்ளே எதிரி புகுந்துவிடுவான். இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கருஞ்சட்டைத் தொண்டன் என்பவன் யார்?

இந்திய எல்லையில் இராணுவ வீரர்கள் நாட்டைப் பாதுகாப்பது போல ஒவ்வொரு கருஞ்சட்டைத் தோழனும் இந்த நாட்டைப் பாதுகாத்து வருகிறான்.

இன்றைக்கு நாம் பெற்றிருக்கிற வாழ்வு எல்லாம், வளம் எல்லாம் பெரியார் என்ற தலைவன் கொடுத்துச் சென்றது.

ஒரு காலத்தில் வடநாட்டான் நம்மை ஆண்டான். நம் ஆட்சியை இருமுறை கவிழ்த்தான். இன்றைக்கு இந்திய ஆட்சியைக் கவிழாமல் காக்கும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கு அல்லவா கிடைத்திருக்கிறது! இந்தப் பலம் நமக்கு எங்கே இருந்து கிடைத்தது? காரணம் பெரியார் அல்லவா!

இந்தியாவின் தலைநகரம் டில்லியா? தமிழ் நாடா? என்று கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளதே! நம்மைப் பெரியார் ஆளாக்கி வைத்து விட்டுச் சென்ற தன்மையில் கிடைத்த மரியாதை இது.

பெரியார் நாடு

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நம் நாட்டைத் தமிழ்நாடு என்று சொல்லுவதை விட தந்தை பெரியார் நாடு என்று சொல்லுவதுதான் சரியானது, - நமக்குப் பெருமை அளிக்கக்கூடியதும் ஆகும்.

பெரியார் என்ற ஒரு மாமனிதன் நம்மிடம் தோன்றியிருக்காவிட்டால் இந்தத் தமிழ் ஏது? தமிழன் ஏது? எதிரி நம்மை ஏப்பமிட்டிருக்க மாட்டானா?

எதிரியின் கைகளில் இருந்த ஆயுதங்களை யெல்லாம் பறிமுதல் செய்து தந்தவர் பெரியார்தான்.
சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆதிக்கவாதிகள் மிரட்டிய போது கூட தம் எழுத்தாலும் பேச்சாலும் அவற்றையெல்லாம் முறியடித்துக் காட்டியவர் பெரியார்.

பெரியார் கொள்கைக்கு அழிவு கிடையாது

உலகில் எத்தனையோ சீர்திருத்தவாதிகள் தோன்றினார்கள்; கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். அவர்கள் எல்லாம் விரட்டப்பட்டார்கள் - ஒழிக்கப்பட்டார்கள். ஆனால் நம் அய்யாதான் எல்லா எதிர்ப்புகளையும் பொடிப்பொடியாக்கிக் கொள்கையில் வெற்றி பெற்றார்.

உலகத்தில் எந்த கொள்கை அழிந்தாலும் நம் பெரியார் தந்த கொள்கைக்கு அழிவே இல்லை. அது நம்மிடம் இருக்கும் வரைக்கும்தான் நமக்குப் பாதுகாப்பு.

கடைசிக் கருஞ்சட்டைக்காரன் உள்ளவரை தந்தை பெரியார் கொள்கைக்கு அழிவே இல்லை.

பெரியார் இருந்த காலத்தில் இருந்த எதிர்ப்புக்கும் ஆசிரியர் வீரமணி காலத்தில் இருக்கும் எதிர்ப்புக்குமிடையே வேறுபாடுகள் உண்டு.

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் ஊடகங்கள்

இப்பொழுது இருக்கும் ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு மூடநம்பிக்கைகளைப் பரப்பி வருகின்றன. காலை முதல் இரவு வரை மூடச் சரக்குகள்தான்.

நீ பிரதமராக வேண்டுமா? உன் பெயரோடு இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக் கொள் என்கிறான். அந்த ஜோதிடனை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அட முட்டாளே! அடுத்தவனை ஏண்டா பிரதமராக்க ஆசைப்படுகிறாய்? உன் பெயரில் இரண்டு எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டு நீ ஜனாதிபதியாகப் போகவேண்டியதுதானே? என்று கேட்பேன். என் கண்களுக்கு அவன் சிக்க மாட்டேங்குறான்.

காந்தியைச் சுட்டபோது
கடவுள் ஏன் காப்பாற்றவில்லை?

கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்கிறோம். இருக்கு, இருக்கு என்பவனைப் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன். காந்தியார் மேல்சட்டை கூட இல்லாமல் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு திரிந்தார். உண்மையான ஆசிரமவாசி போல இருந்தவர். அவரை கோட்சே என்ற பார்ப்பான் சுட்டபோது எங்கேடா போச்சு உன் கடவுள்? எதற்கு எடுத்தாலும் ராம் ராம் என்பவராயிற்றே காந்தியார்! அந்த ராமன் வந்து காப்பாற்றினானா? ( பலத்த கைதட்டல்)

வேலும் சூலாயுதமும் ஏன்?

எவ்வளவு காலமாக இந்த தெய்வங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். வளரவே யில்லையே! பிள்ளைக் குட்டிகளைக் காணவில்லையே! இது கூட இல்லாமல் எதற்கடா உன் கையில் வேலு, சூலாயுதம் என்று கேட்பதில் என்ன தப்பு?

அது என்ன மரண யோகம்?

இராகு காலம் என்கிறான் மரண யோகம் என்கிறான். இப்படியெல்லாம் சொல்லி நாள் ஒன்றுக்கு நம்மை மூன்று மணி நேரம் நான்கு மணி நேரம் படுக்க வைத்துவிட்டானே!

மரண யோகத்தில் அந்த ஒன்றரை மணி நேரத்தில் என்ன நடக்கிறது? ஒன்றரை மணி நேரத்தில் செத்துப் போய் மீண்டும் பிழைத்துக் கொள்கிறானா? இப்படியெல்லாம் கேட்கக்கூடிய பகுத்தறிவை நமக்குக் கொடுத்துச் சென்ற தலைவர்தான் நம் பெரியார். இப்படிப்பட்ட கேள்வியைக் கேட்கக் கூடிய ஒரு கூட்டம் உலகிலேயே தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. அதற்குக் காரணம் தந்தை பெரியாரே.

கர்ப்பக்கிரகத்துக்குள் என்னென்ன அக்கிரமங்கள்?

நாம் கோயில் கர்ப்பக் கிரகத்திற்குள் சென்றால் தீட்டு என்கிறான். நீ செய்கிற வேலை என்ன? அந்தக் கடவுளுக்கு முன்னால்தான் எல்லாம் நடக்குது. பிரேமானந்தா என்ற சாமியார் செய்யாத அக்கிரமமே இல்லை. இந்தியாவிலேயே பெரிய வக்கீலைப் பிடித்தான். அவர்தான் ராம் ஜெத்மலானி. கடைசியில் இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்ததே. எங்கே போனான் கடவுள்?

சாமியார் ஆகுமுன் அறுவை சிகிச்சை

நித்தியானந்தாவாம். அடேயப்பா ; என்ன கெட்டிக்காரன்? நான் சட்டப்படி தவறே செய்யவில்லை என்கிறானே. இனிமேல் ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும். சாமியார் ஆகவேண்டும் என்றால் அரசின் அனுமதி பெறவேண்டும். சாமியாராவதற்கு முன் அவனை மருத்துவமனையில் வைத்து சில அறுவை சிகிச்சைகளைச் செய்யவேண்டும்.

ராமனை செருப்பால் அடித்தாரே பெரியார்!

பெரியார் சேலத்தில் ராமனை செருப்பால் அடித்தார். எவன் எதிர்த்தான்? சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தில் ராமன்பாலம் என்று குறுக்குச் சால் ஓட்டுகிறார்கள். ராமன் கட்டிய பாலம் என்கிறார்கள். ராமன் என்பவன் என்ஜினீயரா என கலைஞர் கேட்டார். பதில் தெரிந்தால் மரியாதையாகச் சொல். உடனே நாக்கை அறுப்பேன் என்கிறானே! பெரியார் இல்லை என்ற தைரியமா? பெரியார் இல்லை என்றால் என்ன? இதோ கருப்புச் சட்டைக்காரர்கள் இருக்கிறார்களே, விட்டு விடுவார்களா?

பெரியார் கொள்கை நாளும் வெற்றி பெற்று வருகிறது

டில்லி உச்ச நீதிமன்றத்துக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தலைமை நீதிபதியாக வந்தாரே பெரியார் மறைந்து வீரமணி காலத்திலே! - இது பெரியாருக்கும் வீரமணிக்கும் கிடைத்த வெற்றியல்லவா?

542 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையிலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் தலைவராக வந்துவிட்டாரே! ராமன் பிறந்ததாகக் கூறும் உத்தரப் பிரதேசத்திலே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முதல் அமைச்சராக வந்துவிட்டாரே! இது பெரியார் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியல்லவா? பெரியார் மறைந்திருக்கலாம் ஆனால் அவர் கொள்கை மறையவில்லை. நாளும் வெற்றி பெற்றே வருகிறது.

இந்த நாட்டிலே முதல் கவர்னர் ஜெனரல் யார் என்றால் ராஜகோபாலாச்சாரி என்ற பார்ப்பனர்தான். கவர்னர் ஜெனரலாக இருந்தவர் தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராகவும் வந்தார்.

பெரியார் கொடுத்த சீதனம்

பச்சைத் தமிழர் காமராசர் பார்த்தார் பெரியார். சுற்றிச் சுற்றிப் பார்ப்பான்தானே அதிகாரத்துக்கு வருகிறான். இதற்கொரு முடிவைக் கண்டுபிடித்தார் பெரியார். அந்தக் கண்டுபிடிப்புதான் பச்சைத் தமிழர் காமராசர். காமராசரை நேருவா கண்டுபிடித்தார்? காங்கிரஸ்காரர்களா கண்டுபிடித்தார்கள்? கண்டு பிடித்தது பெரியார்தானே?

பெரியார் கொடுத்த சீதனம்தான் காமராசர். காமராசர் தயங்கினார்; தைரியம் கொடுத்தவர் பெரியார். குடியாத்தம் தேர்தலில் தானாகச் சென்று ஆதரித்தார். பெரியாரைத் தொடர்ந்து அண்ணாவும் ஓடோடிச்சென்று ஆதரித்தார். குணாளா,- குலக்கொழுந்தே - அஞ்சாதே! என்று தைரியம் கொடுத்து எழுதினார் அண்ணா.

காமராசரின் சாதனை

தொட்டால் தீட்டு என்று ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரனை அல்லவா இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆக்கினார் பச்சைத் தமிழர் காமராசர் காரணம் பெரியார் அல்லவா?

தமிழுக்குச் செம்மொழி தகுதி கிடைத்தது. உலக உயர் மொழிகளின் வரிசையிலே நம் அன்னைத் தமிழ்.

கோவை செம்மொழி மாநாட்டிலே

நமது தலைவர்கள்

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலே நமது முதல்வர் கலைஞர் அருகில் ஆசிரியர் வீரமணி அவர்களும் அமர்ந்திருக்கும் அந்த அழகிய காட்சியைக் காணவேண்டுமே!

மனிதாபிமானம் பெரியார் கற்றுத் தந்தது

தலைவர் கலைஞர் ஆட்சியிலே மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை. உயிர் காக்கும் மருத்துவம், - அவசர உதவிக்கு 108,தம் சொந்த வீட்டையே மருத்து-வமனைக்கு அர்ப்பணிப்பு; தளபதி ஸ்டாலினோ தம் குடும்பத்தோடு மருத்துவ மனைக்கு உடல் ஒப்படைப்பு இந்த மனிதநேயம் நம் அய்யா கற்றுக் கொடுத்த கொள்கையிலிருந்து கிடைத்த தல்லவா?

நம் உயிரைக் கொடுப்போம்!

திருவள்ளுவர் தோன்றி இரண்டாயிரம் ஆண்டுகளாகிவிட்டது. இன்னொரு திருவள்ளுவர் வரவில்லை.

இன்னொரு தந்தை பெரியார் தோன்ற இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை.

நம்மிடம் வாழும் நமது தலைவர்களை கலைஞரை, ஆசிரியர் வீரமணியை நம் அனைவரின் உயிரையும் தந்து அவர்களின் ஆயுளை நீள வைப்போம் என்று குறிப்பிட்டார்.

Saturday, May 29, 2010

நக்கீரனுக்கு ஏன் இந்த துரோக வேலை??

உலகம் ஒரு நாடக மேடை அதில் நாம் எல்லாம் நடிகர்கள்’ என்ற மகா தத்துவத்தை
அலாக்காய் தூக்கி விழுங்கிவிட்டு எம்மையே நாடக மேடையாக்கி இந்த உலகே
ஆடுகிறதே ஒரு நாடகம். அப்பப்பா என்னவா ஆடுறாங்கப்பா.. என வடிவேல்
பாணியில் கேட்கத்தோன்றுகிறது.

ஏன் இந்த ஆலாபனை என வாயைப் பிளக்காதீர்கள். நேரடியாகவே விடயத்திற்கு
வருகிறேன். இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு
வாரப்பத்திரிகை அண்மையில் வெளியிட்ட பரபரப்பு தகவலே எனது இந்த
கொதிப்பிற்கு
காரணம்.

அதற்கு முன் சில முக்கியமான தகவல்களை கூறிவிட்டு நான் விளக்கவந்த
விடயத்திற்கு வருவது மிகப் பொருத்தம் எனக் கருதுகிறேன்.

2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தை ஆரம்பித்த சிங்கள அரசு
அங்கு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை கைப்பற்றியதுடன்
அவர்களின் தலைமறைவு செயற்பாடுகள் இடம்பெறக்கூடிய எனக் கருதப்படும்
இடங்களையும் குறிவைத்து தாக்கத் தொடங்கியது.

இதனை அடுத்து, கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் மரபு ரீதியான
படையணியாக மட்டுமல்ல கெரில்லா அணியாகவும் இலகுவாக நிலைகொள்ள முடியாத நிலை
ஏற்பட்டது.

இதனை அடுத்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை
மாவட்டங்களில் விடுதலைப்புலிகள், படையணிகளாக நிலைகொள்வது சாத்தியம்
அற்றுப் போனது. இதனை அடுத்து தளபதி கேணல் ஜெயம் தலைமையில் கிழக்குப்
பகுதியில் நிலைகொண்டிருந்த விடுதலைப்புலிகளின் படையணிகள் கடல்வழியாக
வன்னிப்பகுதிக்கு திரும்ப வேண்டியதாயிற்று. அவர்கள் கிழக்கில்
நிலைகொண்டிருந்தபோது அவர்களுக்கான முக்கிய வழங்கல்கள்
வன்னிப்பகுதியிலிருந்து கடல் வழியாக மிகுந்த
அச்சுறுத்தல் சூழலுக்குள்ளாலேயே இடம் பெற்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பகுதியில் தரை இறங்கி வன்னிப்பகுதிக்கு
வந்த போராளிகளை அக்காலத்தில் நான் சந்தித்தபோது அவர்கள்
கிழக்குமாகாணத்தில்
எதிர்கொண்ட சவால்கள் குறித்து என்னால் அறியமுடிந்தது.

தாம் பெருந்தொகையில் காடுகளுக்குள் நிலைகொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை
பெற முடியாது சிரமப்பட்டதாகவும் இதனால் பல நாட்கள் பட்டினி கிடக்க
நேர்ந்ததாகவும்
இந்நிலையில் உணவுப்பொருட்களை எடுத்துவர ஊர்மனைகளுக்கு செல்கின்றபோது
இராணுவத் தாக்குதல்களுக்கு உள்ளாகி உயிரிழப்புகளை எதிர் கொண்டதாகவும்
இதன்போது
காயமடைகின்ற போராளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலை காணப்பட்டதாகவும்
விபரித்த அவர்கள், தாம் வன்னிப்பகுதிக்கு வருவதற்குள் பல தடவைகள்
இராணுவத்தை
எதிர் கொண்டு பல போராளிகளை இழக்க நேர்ந்ததாகவும் தெரிவித்தனர்

இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் சிறு சிறு அணிகளாக செயற்படுவதே
பொருத்தம் எனக் கருதிய தலைமை, ராம், நகுலன் ஆகியோரின் தலைமையில் கரந்தடி
படையணிகளை செயற்பட பணித்தது. இதற்குமேல் வரலாறு கூறத்தேவை இல்லை என
நினைக்கிறேன். தொடர்ந்து விடயத்திற்கு வருகிறேன்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுமார் 6000 போராளிகளை
அணிதிரட்டி எதிர்காலத் திட்டத்திற்காக காத்திருக்கிறார்களாம்
விடுதலைப்புலிகள். இந்த தகவலை
ஒரு பத்திரிகையாளரை வலிந்து அழைத்து கூறியிருக்கிறாராம் தளபதி ராம்.
அதற்கு ஆதாரமாய் சில புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறது நக்கீரன்
பத்திரிகை.

தேவையென்றால் இதனை நம்ப தமிழக மக்கள் தயாராய் இருக்கலாம். ஆனால் களநிலையை
அறிந்த ஈழத்தமிழர்கள் நம்பத் தயாரில்லை என்பதுடன் இது குறித்த
சந்தேகங்களையும்
வெளியிடத் தொடங்கியுள்ளனர்.

விடுதலைப்புலிகள் எப்போதுமே செயற்பாடுகள் மூலமாகவே வெளியில் தெரிந்த
அமைப்பு. அவர்கள் மக்கள் மத்தியில் ‘கீறோ’க்களானதும் அவர்கள் நடாத்திய
அசாத்திய தாக்குதல்களாலேயே. அவர்கள் எப்போதுமே தமது உறுப்பினர்களின்
எண்ணிக்கையை வெளியிட்டதில்லை. தமது பயிற்சி தந்திரோபாயங்களையும்
வெளியிட்டதில்லை.
கூப்பிட்டு வைத்து தம்மைப்பற்றி பேட்டி கொடுத்ததுமில்லை.

குறிப்பாக தம்மைப்பற்றிய இரகசியங்களை காத்தலையே முதல் வெற்றியாகக்
கருதினர். இரகசியம் காத்தலுக்காக தமது உயிரையே இழக்கத் தயாராய்
இருந்தனர். உயிரையும் மாய்த்தனர். இதன் அடையாளமே ‘சையனற்’.

இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு தளபதி ராம் கொடுத்த பேட்டியின்
சாராம்சத்திற்கு வருகிறேன்.

‘காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்று விருப்பமாக இருக்கும்
எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது,
வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம்
பெற்றிருக்கிறோம. பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின்
கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு
நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களைச்
சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான்
எங்களுக்கான பாதுகாப்பு கேடயம்…படம் எடுக்காதீர்கள் அதன்மூலம் நாம்
இருக்கும் இடம் தெரிந்துவிடும்.’

படம் எடுக்காதீர்கள் அதன்மூலம் நாம் இருக்கும் இடம் தெரிந்துவிடும் என்று
வலிந்து இரகசியத்தை காப்பதாய் காட்டிக்கொள்ள முயலும் ராம், ஒரு
பத்திரிகையாளரை
அழைத்து தாம் இருக்கும் காட்டுப்பகுதி பற்றியும் தமது படை எண்ணிக்கை
குறித்தும் தாம் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்தும் தாம் பலம் பெறுவது
குறித்தும் கூறுவது, அவர் வாயாலேயே தான் உண்மையான புலி இல்லை என்பதை
தெளிவுபடுத்தும் செயல்
அல்லவா.

6000 உறுப்பினர்களுக்கான உணவுப் பொருட்களை பெற எப்படியோ ஊர் மனைக்கு
சென்றாக வேண்டும். அப்போது சிஙகளப்படைகள் கண்ணைகட்டிக் கொண்டிருக்கும்
மர்மம் என்ன?
இந்த 6000 பேருக்குமான உணவுக்கான நிதி எஙகிருந்து பெறப்படுகிறது?
வாகனத்தில் காட்டுப்பகுதிக்கு சுதந்திரமாகச் செல்லமுடிகிறதென்றால் அங்கு
இராணுவமே இல்லையா?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையும் அங்கேயே இருக்கிறது. ராமினை மையமாக
வைத்து உருவாக்கப்படும் இந்த கதையின் உண்மைத் தன்மை மிகவும் விபரீதமானது.
தமிழ் மக்களில் எஞ்சியிருக்கும் போராட்ட உணர்வை ராம் தலைமையில் ஒன்று
திரட்டி அதனை தேக்க நிலைக்கு கொண்டுபோய் செயலிழக்க வைப்பதுதான் இந்தச்
சதியின்
நோக்கமாக இருக்கமுடியும். இந்த சதித்திட்டத்தின் பங்குதாரர்கள்
இந்தியாவும் இலங்கையும்தான் என்கிறது உள் தகவல் ஒன்று.

தற்போது சர்வதேச அளவில் செயற்படதொடங்கி உள்ள ஈழத்தமிழர்களின் போராட்ட
வீச்சையும் அதற்கான அவர்களின் முன்னெடுப்புக்களையும் திசை திருப்பி,
அவர்களின்
நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் ராம் என்ற பொறிக்கிடங்கிற்குள்
விழுத்திவிட நடக்கும் சதித்திட்டமே இது என்பதை ஓரளவிற்கு ஊகிக்க
முடிகிறது.

இது தவிர ஈழத்தில் போராட்ட உணர்வில் உள்ள இளைஞர்களை வலிந்து இழுத்து
அழிக்கும் நயவஞ்சக திட்டமும் ராம் என்ற புள்ளியை வைத்து நடப்பதாக ஏற்கனவே
தகவல் வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மத்திய அரசின் கைப்பொம்மையாகிவிட்ட தமிழக அரசின் ஊதுகுழலாகச்
செயற்படும் நக்கீரன் இந்தச் சதித்திட்டத்தின் விளம்பர ஒப்பந்தத்தை
பெற்றுக்கொண்டுள்ளதாக சக
பத்திரிகை நண்பர்கள் விசனப்படுகின்றனர்.

சத்தியமங்கல பெருங்காட்டுக்குள் சில உறுப்பினர்களுடன் இயங்கிய வீரப்பன்
எப்படியெல்லாம் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டி வந்தது என்பது நக்கீரன்
ஆசிரியருக்கு தெரியாதது அல்ல.

நிலமை அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட காட்டுக்குள் 6000 புலிகள் எந்தவித
தாக்குதலையும் நடத்தாது தலைமறைவாக காட்டுக்குள் இருக்கமுடியும் என்பது
எவ்வளவு பெரிய பொய் என்பது நக்கீரன் கோபாலுக்கு தெரியாதது அல்ல. அப்படி
இருக்க ஏன் இந்த
கோடாலிக் காம்பு வேலை.

பிற்சேர்க்கை
வெறுமனே தமிழ் நாட்டில் உள்ள பத்திரிகைகளையும்; தமிழ் உணர்வாளர்களையும்
கோடாரிகாம்பு எனச்சொல்வதற்கு முதல் எமது பொக்கற்றுக்களை
சரிபார்க்கவேண்டும். தமிழக நண்பர்களுக்கு தவறான தகவல்களைக்கூறி வழி
நடத்துபவர்கள் *புலம்பெயர் நாடுகளில் வதியும் தமிழ் மக்குகள் தான்*.
ஆரம்பத்தில் கேபி துரோகியென(கேபி மலேசியாவில் கைதாகும்
முன்னர்)நெடுமாறனை வைத்து துரோகியென அறிக்கை விட வைத்தவர்கள் புலத்து
மக்குகள். அதேபோல் கேணல் ராம் கிழக்கில் தலைமறைவாக இருப்பதாக கூறி
இந்த பத்திரிகையாளரை ஒழுங்கு செய்து அனுப்பி வைத்தவர்கள். புலத்தின்
இன்னொரு தொகுதி மக்குகள். ஆக தமிழீழ விடுதலை போராட்டத்தை வைத்து
பிழைப்பு நடத்தும் தமிழக பிழைப்புவாதிகளை பாவிக்கும் மனப்பான்மை
புலத்து தமிழ் மக்குகளின் கோடரி காம்பு வேலையே என அய்வு கருதுகிறது.

நன்றி- க.ப.பிரபு

கொழும்பு விழாவில் பங்கேற்கும் நடிகர்களின் படங்களுக்கு தென்னகத்தில் தடை! – அதிரடி முடிவு



கொழும்பு விழாவில் இந்திய திரை நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது. மீறி பங்கேற்போர் படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது, என தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்பு நிர்வாகிகள் அதிரடியாக அறிவித்துள்ளது.
வரும் ஜூன் மாதம் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் சர்வதேச திரைப்பட விருதுகள் விழா நடைபெறவுள்ளது.
இலங்கையில் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்கள வெறிபிடித்த அரசு, தமிழர்களின் மயான பூமியில் விழா மேடை அமைத்து இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது.
இதில் வட இந்திய நடிகர் – நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இன்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் அனைத்து தென்னிந்திய திரைப்படத்துறை அமைப்புக்களையும் அழைத்து கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டத்தில், “எமது சொந்தங்களின் இரத்தக் கறை படிந்த இலங்கையில் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டாம்” என எங்களது வட இந்திய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர் தோழர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்:
1. இனி தென்னிந்திய மொழி திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் கலை விழாக்கள் இலங்கையில் நடத்தப்பட மாட்டாது.
2. இந்த விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து இந்திய நடிகர்கள், தொழில் நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் தென்னிந்திய திரைப்படத் துறையினர் தொழில் ஒத்துழைப்புத் தரமாட்டார்கள்.
3. இந்த விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் – நடிகையர் திரைப்படங்களை தென்னிந்தியாவில் எங்கும் திரையிடப்படமாட்டாது.
4. இந்த திரைப்பட விழாவை நடத்தும் குழுவினருக்கு எங்களது வேண்டுகோள் என்னவென்றால், “இந்த விழாவை அன்பு கூர்ந்து எங்கள் சொந்தங்களின் ரத்தக் கறை படிந்த இலங்கையில் நடத்த வேண்டாம். வேறு எந்த நாட்டிலாவது நடத்துங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதற்காக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் 15-பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நாளை மும்பை சென்று IIFA – குழுவினரைச் சந்தித்து இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவை நடத்த வேண்டாம் என நேரில் சென்று வலியுறுத்தவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைப்புக்கள்
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கம்.
இந்த அமைப்புக்களின் சார்பில் கலந்து கொண்டோர்:

கல்யாணம், இராம.நாராயணன், ராதாரவி, வி.சி.குகநாதன், ஆனந்தா எல்.சுரேஷ், சிவசக்தி எஸ்.டி.பாண்டியன், பன்னீர்செல்வம், கலைப்புலி ஜி.சேகரன், மெட்ரோ ஜெயக்குமார், அன்பாலயா பிரபாகரன், ரவிக் கொட்டரக்கரா, கே.எஸ்.சீனிவாசன், டி.சிவா, கலைப்புலி எஸ்.தாணு, பி.எல்.தேனப்பன், காட்ரக்கட்டபிரசாத், வேணுகோபால், ஏடித நாகேஸ்வரராவ், வி.ஞானவேலு, என்.விஜயமுரளி, ஜி.சிவா, செளந்திரபாண்டியன், மங்கை அரிராஜன், ஆனந்தி நடராஜன், எம்.பாஸ்கர், ஏ.எஸ்.பிரகாசம், டி.ஜானி, ஸ்ரீதர், டைமன்ட்பாபு உள்பட அனைத்து சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்...

நன்றி - என்வழி

Friday, May 28, 2010

கேரள சாலைகளில் மறியல்… கோவையில் வைகோ கைது





நதி நீர் பிரச்னை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து கேரள எல்லையில் மறியல் செய்த மதிமுக பொதுச் செயலர் வைகோ, கணேசமூர்த்தி எம்பி உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர் பிரச்னைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்கு கேரளம் பங்கம் விளைவிப்பதாகக் கூறி கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடியில் கேரளத்துக்கு செல்லும் சாலையில் வைகோ தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
இதில் மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா உள்ளிட் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மறியல் செய்ய முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், வேலந்தாவலத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 500 பேரும், ஆனைக்கட்டியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 340 பேரும், பொள்ளாச்சி கோபாலபுரத்தில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் உ. தனியரசு உள்ளிட்ட 750 பேரும், வலந்தாயமரத்தில் தமிழ் தேசப் பொதுவுடமை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட 150 பேரும், நடுப்புணியில் மதிமுக விவசாயி அணித் தலைவர் சூலூர் பொன்னுசாமி மற்றும் உடுமலை 9-6 சோதனைச் சாவடியில் ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேச மூர்த்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

செங்கோட்டையில் கேரள சாலை மறிப்பில் ஈடுபட்ட மதிமுகவின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், முன்னாள் எம்பி் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

Thursday, May 27, 2010

மே 28 அழைக்கிறது! அறப்போருக்கு வாரீர்! வைகோ



அறப்போர் களம் காணும் நாளான மே 28 இதோ நெருங்கி விட்டது! இந்த அறப்போராட்டம் நியாயமானது; மிகவும் தேவையானது -- செந்தமிழ் நாட்டின் நலன்களைக் காக்க, வருங்காலத் தலைமுறையினரின் உரிமைக்கு அரண் அமைக்க!

முல்லைப்பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல், ஆகிய நதிநீர்ப் பிரச்சினைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்குப் பங்கம் விளைவிக்கிறது கேரளம். சட்டத்தை உடைக்கிறது, நீதியைக் குப்பையில் வீசுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே காலில் போட்டு மிதித்து விட்டதே?

அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் நயவஞ்சகத்தைத்தானே மத்திய அரசு செய்கிறது? அப்படியானால், நம்மைக் காக்க என்ன வழி? போராட்டம்தானே ஒரே வழி?

அதுவும், அறப்போராட்டம்!

வன்முறை துளியும் தலைகாட்டாத போராட்டம்.

இந்தப் போராட்டத்தை, அள்ளித் தெளித்த அவசரக் கோலத்தில் நடத்தவில்லை நாம்.

நாடு சுற்றி வந்து, இலட்சோ பலட்சம் மக்களைச் சந்தித்து, மாதக்கணக்கில், வருடக்கணக்கில், பிரச்சினையை எடுத்து விளக்கி, மே 28 இல் நடக்கும் அறப்போரையும், ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, பாதிக்கப்படும் பகுதிகளில் உள்ள நகரங்களிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் சென்று, பிரச்சாரம் செய்து, மக்களை ஆயத்தப்படுத்தி உள்ளோம்.

அறப்போருக்கு எதிர்பார்த்ததைவிடப் பலத்த ஆதரவு,தமிழகம் எங்கும், குறிப்பாக, பாதிக்கப்படும் பகுதிகளிலும் வலுவாக ஏற்பட்டு இருப்பது, தெம்பைத் தருகிறது.

போராட்டத் திட்டம் வகுக்கப்பட்டு விட்டது. அதன்படி, கலந்து கொண்டு தலைமை தாங்குவோர் வைகோ, டாக்டர் ஆர்.மாசிலாமணி, மல்லை சத்யா, திருப்பூர் சு.துரைசாமி (ம.தி.மு.க.) கந்தேகவுண்டன் சாவடி (கோவை தெற்கு) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் மதுக்கரை, தொண்டாமுத்தூர், பேரூர் ஒன்றியங்கள், குனியமுத்தூர், குறிச்சி நகரங்கள், வடசென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலம்

பழ.நெடுமாறன் (முல்லைப் பெரியாறு உரிமை மீட்புக் குழு), கம்பம் கே.எம்.அப்பாஸ், (ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம்), சேக் தாவூத், தலைவர், தமிழ் மாநில முÞலிம் லீக் - குமுளி ரோடு லோயர் கேம்ப் (தேனி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் தேனி, திண்டுக்கல், மதுரை மாநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள்

நாசரேத் துரை, எஸ்.இரத்தினராஜ், ஆர்.ஞானதாஸ் (ம.தி.மு.க.) - களியக்காவிளை (கன்னியாகுமரி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்

துரை.பாலகிருஷ்ணன் (ம.தி.மு.க.) - கம்பம் மெட்டு (தேனி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் மதுரை புறநகர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள்

அ.கணேசமூர்த்தி எம்.பி., (ம.தி.மு.க.) செ.நல்லுசாமி எம்.ஏ.பி.எல்., (தமிழ்நாடு கள் இயக்கம்), என்.எஸ்.பழனிசாமி (கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்), ஆடிட்டர் மு.பாலசுப்பிரமணியம் (விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொருளாளர்), மு.செந்திலதிபன் (ம.தி.மு.க.) - 9/6 சோதனைச்சாவடி (கோவை மாவட்டம், உடுமலை) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் உடுமலை கிழக்கு, உடுமலை மேற்கு, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்கள் மற்றும் உடுமலை நகரம், ஈரோடு மாவட்டத்தின் தாராபுரம், மூலனூர், வெள்ளக்கோவில், குண்டடம், காங்கேயம் ஒன்றியங்கள், தாராபுரம், வெள்ளக்கோவில் நகரங்கள் மற்றும் கரூர் மாவட்டம்

நாஞ்சில் சம்பத், டாக்டர் தி.சதன்திருமலைக்குமார், ஆர்.வரதராசன் (ம.தி.மு.க.) - செங்கோட்டை எல்லை (நெல்லை மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் திருநெல்வேலி, திருநெல்வேலி மாநகர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்

கொளத்தூர் மணி - தலைவர், பெரியார் திராவிடர் கழகம், கோவை கு.இராமகிருஷ்ணன் பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம் - ஆனைகட்டி சோதனைச்சாவடி (கோவை வடக்கு) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் பெரியநாயக்கன் பாளையம் வடக்கு, பெரியநாயக்கன்பாளையம் தெற்கு, எஸ்.எஸ்.குளம், அன்னூர், காரமடை கிழக்கு, காரமடை மேற்கு ஒன்றியங்கள் மற்றும் கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம் நகரங்கள்

தியாகு- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் - வளந்தாயமரம் சோதனைச்சாவடி (கோவை மாவட்டம், பொள்ளாச்சி) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் திருப்பூர் ஒன்றியங்கள், பொள்ளாச்சி தெற்கு கிழக்கு, பொள்ளாச்சி தெற்கு மேற்கு, வால்பாறை, அவினாசி, ஆனைமலை கிழக்கு, ஆனைமலை மேற்கு ஒன்றியங்கள், திருப்பூர், 15. வேலாம்பாளையம், நல்லூர் நகரங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டம்.

பெ. மணியரசன் -தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - நடுப்புணி சோதனைச்சாவடி (கோவை மாவட்டம், பொள்ளாச்சி) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சி வடக்கு கிழக்கு, சூலூர் வடக்கு, சூலூர் தெற்கு, சுல்தான்பேட்டை ஒன்றியங்கள், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்திலிருந்து 9/6 சோதனைச் சாவடியில் பங்கேற்கும் பகுதியினர் தவிர்த்து இதரப் பகுதியினர்

உ.தனியரசு- மாநில அமைப்பாளர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை - கோபாலபுரம் சோதனைச் சாவடி (கோவை மாவட்டம், பொள்ளாச்சி) கோவை மாவட்டத்தின் பல்லடம், பொங்கலூர், பொள்ளாச்சி வடக்கு மேற்கு ஒன்றியங்கள் மற்றும் பல்லடம், பொள்ளாச்சி நகரங்கள்

அர்ஜூன் சம்பத் -இந்து மக்கள் கட்சி - வேலந்தாவளம் சோதனைச் சாவடி (கோவை தெற்கு) பங்கேற்கும் பகுதிகள் கோவை மாநகர், நீலகிரி மற்றும் சேலம் மாவட்டங்கள்

பி.வி.கதிரவன் -தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் அகில இந்திய பார்வர்ட் பிளாக் - போடி மெட்டு (தேனி மாவட்டம்) பங்கேற்கும் பகுதிகள் சிவகங்கை, திருச்சி, திருச்சி மாநகர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள்

இந்தப் போராட்டத்தில், நாம் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது, ஒழுங்கும், கட்டுப்பாடும் ஆகும். எள் முனை அளவு வன்முறையும் தலைகாட்ட நாம் அனுமதிக்கக் கூடாது. கேரள மக்களிடம் நம்மைத் தவறாகச் சித்தரிக்கவே அது பயன்படும்.

முல்லைப்பெரியாறு பிரச்சினையில், 2,17,000 ஏக்கர் பாசன உரிமையை இழக்கும் அபாயம்; 65 இலட்சம் மக்கள் குடிநீரை இழக்க நேரும் துயரம்;

பாம்பாறு பிரச்சினையால், 78, 000 ஏக்கர் பாசனத்தை இழக்க நேரும் அவலம்;

செண்பகவல்லி தடுப்பு அணையால், 30 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை இழக்கும் இன்னல், நெய்யாறு இடதுகரைச் சானலில், 9,200 ஏக்கர் பாசனத்தை இழந்து நிற்கும் துயரம்.

இது மட்டும் அன்றி, நிலத்தடி நீரும் எதிர்காலத்தில் வறண்டு, ஒன்றரைக் கோடி மக்கள் குடிதண்ணீரை இழக்கின்ற விபரீதம். இவற்றையெல்லாம், கவலையோடு கவனத்தில் கொண்டே, அறப்போரை நடத்துகிறோம்.

முல்லைப்பெரியாறு அணை உடைவதைப் போலவும், இலட்சக்கணக்கான கேரள மக்கள் மடிவதைப் போலவும், மாயாஜால கிராஃபிக்Þ காட்சிகளைக் குறுந்தகடுகளாகத் தயாரித்து, கேரள மாநிலம் முழுவதும் ஐந்து இலட்சம் சி.டி.க்களை வழங்கி, மக்களிடம், பதற்றத்தை பீதியை ஏற்படுத்தி வரும் அச்சுதானந்தன் அரசு, உச்சநீதிமன்றத்திலும் இதை ஆவணமாக ஆக்கி உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையை உடைக்கவும் கேரள அரசு திட்டமிட்டுகிறது.

புதிய அணை கட்டுவது அவர்களது உண்மையான நோக்கம் அல்ல. அப்படியே கட்டினாலும், வருங்காலத்தின் கேரள அரசே முயன்றாலும்,தமிழகத்துக்குத் தண்ணீர் தர முடியாது. ஏனெனில், அணை பள்ளத்தில் அமைய இருக்கிறது. இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை உடைந்தால், தென்பாண்டி மண்டலம், பேரிழப்புக்கு ஆளாகும். பஞ்சமும், பசியும், பட்டினியும்தான் பின்னர் வாட்டும். பாலைவனமாகும் அப்பகுதி.

எனவே, இப்பிரச்சினையில், தமிழகம் கொந்தளிக்கிறது;தமிழர் மனம் எரிமலை ஆகிறது என்பதை, உச்சநீதிமன்றத்துக்கும், மத்திய அரசுக்கும் உணர்த்துவது காலத்தின் கட்டாயம் ஆகும். நாம் நடத்திட இருக்கும் அறப்போரையே, தமிழக அரசு சாதகமாக ஆக்கிக்கொள்ளலாம், கேடயமாக ஆக்கிக் கொள்ளலாம்.

ஏனெனில் 2006 நவம்பரில், அரசு ஆளும் தி.மு.கழகமே, முன் அறிவிப்பு ஏதும் செய்யாமல், திடீரென்று, கேரளச் சாலைகளிலும், புகைவண்டிப் பாதைகளிலும், திடீர் மறியலை நடத்தியது. நவம்பர் 23 ஆம் தேதி நண்பகலில், திடீரென்று, நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலையில், தி.மு.க.வினர் மறியல் செய்தனர். வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இங்கு மட்டும், தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அன்றும், மறுநாள், நவம்பர் 24 இலும், கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி பாதைகளில் மட்டும் அன்றி, அந்தச் சாலைகளை நோக்கிச் செல்லுகின்ற, தேனி மாவட்டத்தின் உட்புறச் சாலைகளிலும், தி.மு.க.வினர் திடீர் மறியல் நடத்தினர்.

கோவை மாவட்டத்தில் வாழையார் பகுதியிலும், கந்தேகவுண்டன்சாவடி, ஆனைகட்டி, வேலந்தா வளம், வளந்தராயபுரம், நடுப்புணி, உடுமலைக்கு அருகே உள்ள, 9/6 சோதனைச் சாவடியிலும், கோபாலபுரம் சோதனைச் சாவடியிலும், தி.மு.க.வினர் திடீர் மறியல் நடத்தினர்.

மதுரை-பாலக்காடு பாசஞ்சர் ரயிலை, 23 மாலையில் இருந்து, 24 பகல் வரையிலும் தடுத்து நிறுத்தினர். பல இடங்களில், கல்வீச்சு நடந்ததாகவும், கேரள அரசுப்போக்குவரத்துக் கழக வாகனங்கள் உடைக்கப்பட்டது என்றும், இதனால், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளானார்கள் என்றும், ‘இந்து’ பத்திரிகை, நவம்பர் 28 இல் எழுதியது. ஆளுங்கட்சியினர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் எழுதியது.

முன் அறிவிப்பே செய்யாமல், தி.மு.க. சாலைகளை மறித்தபோது எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், அதே காலகட்டத்தில், அண்ணன் பழ. நெடுமாறன் அவர்களும், கே.எம்.அப்பாஸ் அவர்களும், 20 நாள்களுக்கு முன்னரே அறிவித்து, டிசம்பர் 4 ஆம் தேதி, கம்பத்தில் முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக மறியல் செய்தனர். மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்களும் அதில் பங்கு ஏற்றனர். அண்ணன் நெடுமாறன், கே.எம்.அப்பாஸ் மற்றும் தோழர்களும் கைது செய்யப்பட்டனர்.

இந்த அறப்போர், கேரள மக்களுக்கு, உண்மையை உணர்த்தட்டும். நியாயத்தின் கதவுகள் திறப்பதற்கு வழி அமைக்கட்டும்.

28 ஆம் தேதியோடு போராட்டம் நின்றுவிடாது. உரிமை காக்கும் அறப்போர்ப் பயணத்தில், இதுவும் ஒரு மைல் கல் ஆகும்.

‘கேரள முற்றுகை-சாலை மறியல்’ என்று, ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவித்து, ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு உள்ளோம்.

அறப்போரில் 12 சாலைகளிலும் பங்கு ஏற்கும் தலைவர்களோடு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அனைத்து இடங்களிலும் கலந்து கொள்வார்கள். எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த இடங்களில் கலந்து கொள்வார்கள் என்பது முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காக்க நடைபெறும் இந்த அறப்போரில் விவசாயப் பெருமக்களும், அனைத்துத் தரப்பினரும் அரசியல் எல்லைகளைக் கடந்து பெருமளவில் பங்கேற்க வருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

Tuesday, May 25, 2010

கொலைக்களத்தில் கும்மாளமா? என்ன செய்யப் போகிறோம்??

இலங்கையில் பலநாடு ராணுவம் மற்றும் தளவாடங்கள் உதவியுடன், துரோகிகள் பலர் துணையோடு குழந்தைகள் பெண்கள் என்கிற பேதமின்றி எண்ணற்ற தமிழர்களை சிங்கள ராணுவம் கொண்று குவித்து போர் முடிந்து ஒரு ஆண்டு முடிந்தும் தமிழர்கள் இன்னும் வதைக்கப்படுகிறார்கள்.

இன்னும் சுமார் 1 லட்சம் தமிழர்கள் அகதிகள் என்று வெளியுலகுக்கு சொல்லிவிட்டு முள்வேலி முகாம்களில் அவர்களை கைதிகளாக வதைக்கப்படுகிறார்கள்.

முள்வேலி முகாம்களிலும் இன்னபிற இடங்களிலும் தமிழ் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் இழைப்பதுமாக நம் தமிழினத்திற்கு தொடர்ந்து பேரின்னல்களை அளித்து வருகிறது சிங்கள அரசு.

தமிழர் பகுதிககளில் சிங்களர்களை கட்டாயக் குடியேற்றம் செய்துள்ளது சிங்கள அரசு.

இம்மாதிரி எண்ணற்ற போர்குற்றங்களை தொடர்ந்து செயல்படுத்திவரும் சிங்கள அரசை அகிம்சை இந்தியாவை ஆளும் சுயநல கட்சிகள் ஆதரிக்க்கின்றன. ஏனைய சில நயவஞ்சக நாடுகளைத்த் தவிர பல்வேறு உலகநாடுகள மற்றும் பல சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசின் மீதான போர்குற்றங்கள நிரூபித்து இலங்கையில் மெல்ல மெல்ல அழிக்கப்படும் தமிழினத்தை காப்பாற்றும் முயற்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தன் மீதுள்ள போர்குற்றங்களையும் தமிழர்களுக்கு புரிந்த அநீதிகளையும் மறைக்கும்வன்னம் இலங்கை அரசு வரும் ஜூன் 3ஆம் தேதி சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவை இலங்கையில் நடத்தவுள்ளது. இங்குள்ள பணத்தாசை பிடித்த திரைப்பட மற்றும் ஊடகப்ப பேய்களுக்கு பெருமளவு பொருள் பட்டுவாடா நடந்துள்ளதாகவும் தகவலக்ள் உண்டு!

தமிழ் திரையுலகமும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் விடுத்த வேண்டுகோள்களை புறக்கணித்து அவ்விழாவில் பங்குபெறப்போகும் நடிகர் நடிகைகளின் திரைப்படங்களையும், அவ்விழாவை ஸ்பான்சர் செய்யவுள்ள நிறுவனங்களின் தயாரிப்புகளையும் இந்திய வாழ் தமிழர்களாகிய நாம் இனி வாழ்நாள் முழுக்க புறக்கணித்து நம் எதிர்ப்பை தெரிவிக்கலாமா?

இந்தி சினிமாவை தமிழ்நாட்டில் நம்மால் புறக்கணிக்க முடியுமா?

இந்த விஷயத்தில் தமிழ் பத்திரிக்கைகள் பலவும் அமுக்குனிகளாக செயல்படுவதன் காரணம் என்ன?

அரசியல்ரீதீயாக நம் தமிழ் தலைவர், முதலமைச்சர் இன்னும் ஏன் குரல் கொடுக்கவில்லை?

மும்பை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நம் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லவில்லை! மும்பையில் பலியானவர்களை விட அதிகமான எண்ணிக்கையில் நம் தமிழ்நாட்டு தமிழர்களாகிய இராமேஸ்வர மீனவர்கள் இலங்கைக் கடற்ப்படையால் கொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்!

கொல்லப்பட்ட இராமேஸ்வரத் தமிழர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தானே!

இந்திய அரசு ஏன் இப்படி மௌனம் சாதிக்கிறது!

மும்பையில் வாழ்பவன் மரியாதைக்குரிய இந்தியன் எனில், இராமேஸ்வரத்தில் வாழ்கிற தமிழன் இளப்பமான இந்தியனா?


இந்தி சினிமாவை தமிழ்நாட்டில் வாழவைக்கும் நம்முள் உள்ள எட்டப்பர்களின் துரோகங்களை தாண்டி நம் எதிர்ப்பை காட்ட உண்மைத தமிழர்களாகிய நமக்கு அவ்வளவு தைரியம் உள்ளதா?

இலங்கை சென்று நம் தமிழர்களுக்காக நம்மால் போராடவும் முடியவில்லை! இலங்கைவாழ் தமிழர்களுக்கு நாமும் நம் தமிழ் அரசும், உலகவாழ் தமிழர்களும், மற்ற நல் உள்ளங்களும் அனுப்பிய உதவிப்பொருட்கள் முழுதும் நம் தாய்த் தமிழர்களுக்குத்தான் போனதா என நம்மால், நம் அரசால், நம் செய்திப் பத்திரிக்கைகளாலும் உறுதி செய்யவும் முடியவில்லை!

ஆனால் இப்போது நம் கண்முன்னே, நம்முடைய வீட்டுக்குள், நம்முடைய தெருவில், நாம் மளிகை மற்றும் வேறு பொருட்கள் வாங்கும் இடத்தில், நம் இந்தி சினிமா பார்க்கும் பழக்கத்தில்………………. சிங்கள அரசின் மீதான நம் எதிர்ப்பை, வன்மையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு வந்திருக்கிறது!

கூடவே தமிழர்களுக்கு எதிரான கொடியவர்களுக்குத் துணைபோகும் துரோகிகளுக்கும், குருதி வழிந்தோடும் இழவு வீட்டிலும் வியாபாரம் செய்யப்போகும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தமிழர்களாகிய

நமது மானத்தை,

எதிர்ப்பை,

உணர்வை

பதிவுசெய்யும் தைரியம் வாய்ப்பு நம்மிடம் வந்துள்ளது!!

என்ன செய்யப் போகிறோம்?????????????

-நன்றி - சிந்தனி

Monday, May 24, 2010

பகத்சிங்கும் தேசிய தலைவரும் -கண்மணி



புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. குறிக்கோளை அடைவதற்கு அவை சில வேளைகளில் வெறும் வழிகளாக அமைவதுண்டு. நான் பயங்கரவாதி இல்லை. என் பலம் முழுவதையும் ஒன்றுக்கூட்டி உறக்க அறிவிக்கிறேன். நான் பயங்கரவாதி இல்லை. இங்கு விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நீண்ட போராட்டம் பற்றிய உறுதியான கருத்துக்களைக் கொண்டிருக்கும் புரட்சியாளன் நான். தோழர் பகத்சிங்க தம்மைக் குறித்த ஒரு சுயவிமர்சனமாக மேற்கண்ட அடையாளங்களை தருகிறார். இது இந்த காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக இருக்கிறது.

பகத்சிங் என்கின்ற ஒரு தனிமனிதன் குறித்த எவ்வித அக்கறையும் நமக்கும் இல்லை. ஆனால் அவன் இந்திய விடுதலையின் உயிர் மூச்சாய் தமது வாழ்வை, தமது உயிரை விடுதலைக் காற்றிலே வலம்வரச் செய்தவனாய் தம்மின் அனைத்து ஆற்றல்களையும் விடுதலை என்கின்ற ஒற்றைச் சொல்லுக்காக அர்ப்பணித்தவனாக இருந்தான். பகத்சிங்கின் புகழை அவன் அணிந்திருந்த விடுதலை அடையாளத்தை அழிக்க காந்தி செய்த முயற்சிகள் தோல்வி கண்டது. பகத்சிங்கின் புகழ் மேலோங்கி விடக்கூடாது என்பதற்காக பகத்சிங் பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டான்.

நாடாளுமன்றத்தில் குண்டுவீசிய பகத்சிங் எந்தநிலையிலும் தாம் மக்களின் எதிரி அல்ல; ரத்த வெறி பிடித்த பயங்கரவாதி அல்ல; என்பதை உயிர் சேதம் இல்லாத பரப்புரையாக தமது வெடிகுண்டு எரிப்பை ஒரு கவிதையாகப் படைத்தான். தாம் கைது செய்யப்பட்டால் கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவோம் என்று தெரிந்திருந்தும்கூட அந்த அவையிலிருந்து தப்பித்துச் செல்லாமல் தாம் திட்டமிட்டப்படி நீதிமன்ற வளாகங்களை பரப்புரைக் களமாக்க முடிவுசெய்து, தம்மீது திணிக்கப்பட்ட கொடும் சித்ரவதைகளை மனமுவந்து ஏற்றுக் கொண்டான். இன்றுவரை பகத்சிங் இளையத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாக, விடுதலை உணர்வாளர்களுக்கு பாதையாக, அடக்குமுறையாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக வாழ்ந்து வருகிறான். அவனை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள்.

ஆனால் அவன் இந்த நாட்டின் கோடிக்கணக்கான விடுதலை வேட்கைக் கொண்ட இளைஞர்களாக நடமாடிக் கொண்டிருக்கிறான். ஒரு பகத்சிங்கை கொல்ல முடிந்த அரச பயங்கரவாதிகளால், இன்று கோடிக்கணக்கில் இருக்கும் பகத்சிங்கை விளைவிக்க முடிந்ததே தவிர, பகத்சிங் என்ற பெயரையோ அவனின் ஆளுமையையோ இதுவரை யாராலும் அழிக்க முடியவில்லை. இயேசுவை சிலுவையில் அறைந்துவிட்டு பின்னர் இருகரம் கூப்பி வணங்கும் மக்களைப் போல, பகத்சிங்கை கொன்றுவிட்டு, இன்று தேச பக்தன் என்ற பட்டத்தை அவனுக்கு வழங்கி கௌரவிக்கிறார்கள், காங்கிரஸ்காரர்கள். யாரை பயங்கரவாதி என்றார்களோ, அவன் தேச பக்தனாக்கப்பட்டான். எப்போதுமே லட்சியவாதிகள் தமது எதிர்காலம் குறித்த எந்த வேட்கையும் அவர்களிடம் நிலைப்பதில்லை. அவர்களுக்கான ஒரே வேட்கை இருந்தது. அது விடுதலை என்கின்ற உணர்வாக, உயிராக, அவர்களின் குருதி அணுக்களில் இறுகிப் போய் இருந்தது. ஆகவேதான் தேச பக்தர்கள் அரச பயங்கரவாதிகளால் பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

காரணம், எந்த பயங்கரவாதம் ஒழிய வேண்டும் என்பதற்காக இவர்கள் குருதி சிந்தி களமாட முனைப்புக் காட்டுகிறார்களோ, அந்த முனைப்பை மழுங்கடிக்கவே இந்த அவப்பெயரை சுமக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கித் தருகிறது. ஆனாலும்கூட காற்று ஒரே திசையில் வீசுவதில்லை. அவை மாறி வீசும்போது இந்த மடையர்கள் அடித்துச் செல்லப்படுவார்கள். அதை குறித்தெல்லாம் இவர்களுக்கு பெரும் அக்கறை இல்லை. ஆனாலும்கூட வரலாற்றில் இவர்கள் பேசப்படுவார்கள். ஒவ்வொரு முறையும் கதாநாயகனைப் பற்றி பேசும்போது வில்லனைக் குறித்த தகவல் வருவதைப் போலவே, நமது தேச பக்தி இளைஞர்களைக் குறித்த செய்திகள் மக்கள் மனங்களில் சம்மனமிட்டு அமர்ந்திருக்கும் காலங்களிலெல்லாம் இந்த அயோக்கியர்களின் பெயரும் அதோடு ஒட்டியிருக்கும், கால்தூசுக்கு சமமாக. வரலாறு என்பது ஆளுமை வாய்ந்தது. அது மாந்த வாழ்வை நேர்த்தியாக வடிவமைக்கிறது. அடங்க மறுக்கும் அடலேறுகளை உருவாக்குகிறது. காரணம், வரலாறு எப்போதும் அடிமையை விரும்புவது கிடையாது.

அடிமைகளாக வாழ்வது வாழ்க்கை இல்லை என்பதை காலத்திற்கேற்றவாறு பல்வேறு தத்துவங்களால் நமக்கு படைத்தளித்த மாந்தகுல படைப்பாளிகளின் வரிசையில் நாம் வாழும் காலத்தில் வந்துதித்து அவரோடு இணைந்து நாம் வாழ்கிறோம் என்கின்ற பெருமையை நமக்கு வழங்கிய மேதகு தேசிய தலைவர் அவர்களை நாம் நன்றியோடு திரும்பிப் பார்க்கிறோம். சற்றேறக்குறைய மேற்கூறிய பகத்சிங் கூற்றுகளுக்கு இடைவெளி இல்லா வாழ்வையும், வரலாற்றையும் உள்வாங்கியவராக நமது தேசிய தலைவர் வாழ்வு தொடர்கிறது என்பதே பெரும் வியப்பாக இருக்கிறது. பகத்சிங்கிடம் காணப்பட்ட சாவிற்கு அஞ்சாமை என்கின்ற உயரிய விடுதலைக் கோட்பாடு, நமது தேசியத் தலைவரிடம் முழுதுமாய் மண்டியிட்டுக் கிடந்தது. ஆக, தேசிய தலைவருக்கும், தோழர் பகத்சிங்கிற்கும் பெரும் இடைவெளி இல்லை. மாசினி என்ற மாபெரும் தத்துவ ஞானி கீழ்க்கண்டவாறு கூறினான். விடுதலை என்பது வெறும் கருவிதான். அதுவே நம் இலட்சியமாகிவிட முடியாது என்று. இந்தியாவின் விடுதலைக்காக போராடியவர்கள், விடுதலை என்கின்ற இலட்சியத்தோடு தமது போராட்டத்தை நிறைவு செய்து கொண்டார்கள்.

ஆனால் நமது தேசிய தலைவர் அதைத்தாண்டி, புதிய அரசியலை உருவாக்க திட்டமிட்டார். சாதி, வர்க்கம், பெண்ணடிமைத்தனம் இல்லாத சமத்துவம் கொண்ட புதிய அரசியலை அவர் தமிழீழத்திலே படைத்தளித்தார். இந்த ஏற்றத்தாழ்வற்ற சமூகமே, விடுதலையின் அடுத்த நகர்வாக இருக்க வேண்டும் என்கின்ற ஒரு தொலைநோக்கை நமது தேசியத் தலைவர் உள்வாங்கிக் கொண்டிருந்த காரணத்தினால், அதற்கான கட்டமைப்புகளை திறம்பட நிகழ்த்திக் காட்டினார். தமிழீழ தேசிய அரசு, தமது அசைவுகளை எவ்வாறு நடைமுறைப்படுத்தும் என்பதை அவர் சொல்லாமல் செய்தார். அதுதான் சிங்கள பேரினவாத அரசிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. இந்த அச்சுறுத்தலே உலகம் முழுக்க இவர்கள் பயங்கரவாதிகள் என்கின்ற பரப்புரையை செய்யும் அளவிற்கு இவர்களை உந்தித் தள்ளியது. ஆனால் விரைவில் அமைய இருக்கும் தமிழீழ தேசிய அரசை இப்போது எந்த நாடுகள் எல்லாம் எதிர்த்ததோ, அவர்கள் எல்லாம் இணைந்தே வாழ்த்தும் காலம் விரைவில் வரும். அப்போது பயங்கரவாதம் என்ற வார்த்தை எங்கிருந்து உருபெற்றது என்பதை உலக மக்கள் உணர்ந்து கொள்வார்கள். அது, நமது விடுதலையின் தேவைகளை முன்னிருத்தியதாக இருக்கும்.

கடந்த சில நாட்களாக ஒரு போராளி சிறுக சிறுக வெட்டிக் கொல்லப்படும் நிழற்படங்கள் நமது நெஞ்சங்களை சிலிர்த்தெழச் செய்கின்றன. இதற்கெதிராக என்ன செய்வது என்று புரியாமல் பலர் கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தைப் பார்த்த நாள் முதல் என்னால் உறங்க முடியவில்லை, உண்ண முடியவில்லை என்று உலகெங்கும் பலர் தெரிவிக்கிறார்கள். நாமறிந்தவரை, விடுதலை என்பது குருதி கொட்டப்பட்டுத்தான் விளையும். வீணாக விளையும் விடுதலை என்பது வீணாகத்தான் போகும். ஆக, குருதி அடையாளத்தின் குறிப்பாக அந்த வீர இளைஞனின் முகம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நாளைய வரலாறு தமிழீழ விடுதலையைக் குறித்து பேசும்போது எங்கள் விடுதலையின் வேர்களில் நீருக்கு பதிலாக செந்நீர் கொட்டினோம். உரத்திற்கு பதிலாக எமது சதையை கொட்டினோம் என்று அடையாளப்படுத்துவதற்காக சிங்கள பேரினவாத அரசின் பயங்கரவாதத்தின் செயல்பாடாக இந்த படம் நம்மை பார்த்து பேசுகிறது.

அந்த இளைஞனின் கண்களில் இருந்து புறப்பட்ட ஒளியில் அச்ச உணர்வு அற்றுப் போயிருந்ததை புரிந்து கொள்ள முடிகிறது. நம்மால் தீர்மானமாக சொல்ல முடியும், எமது போராளிகள் எமது தேச விடுதலைக்காக எதையும் அளிக்க தயாராக இருந்தார்கள். தயக்கம் இல்லாமல் உயிரை கொடுக்க அவர்கள் உறுதியாய் இருந்தார்கள். அதுதான் தமிழீழத்தின் அடிக்கல்லாக அமைந்தது. தமிழீழம் அமையும்போது இந்த மாவீரர்களின் உடல்கள்தான் அஸ்திவாரமாக இருக்கும். அவர்களின் உயிர்காற்றுத்தான் தமிழீழ மண்ணின் தேசிய கீதமாக ஒலிக்கும் என்பதை நாம் எந்த நிலையிலும் மறந்துவிட வேண்டாம். முன்னர் நாம் குறிப்பிட்டத்தைப் போன்று பகத்சிங்கின் தீரச் செயல்கள் இன்று காங்கிரசாரால் போற்றப்படுவது போல, நமது தேசிய தலைவரின் விடுதலை உணர்வுகள் நாளை சிங்கள அடக்குமுறையாளர்களால் போற்றப்படும். அந்த போற்றுதலுக்குரிய தலைவனின் தலைமை தமிழீழத்தை கட்டியமைக்கும்.

ஒப்புமைப்படி நாம் பகத்சிங்கை பார்க்கவில்லை, பகத்சிங்கின் களமாடிய திறனை வாசித்துத்தான் இருக்கிறோம். ஆனால் தேசிய தலைவரை விழிகளால் பார்க்க முடிந்தது. உணர்வோடு கலக்க முடிந்தது. நமது உயிராதரமான விடுதலையை தேசியத் தலைவரால் மட்டும்தான் பெற்றுத் தர முடியும் என்கின்ற உள்ளப்பாங்கை பெற முடிந்தது. நாம் தேசிய தலைவரின் காலத்தில் வாழ்கிறோம். அவர் காலத்திலேயே தமிழீழததை அடைவோம். பகத்சிங்சின் போராட்டம் இன்று வாழ்த்துக்குள்ளானதைப் போன்று நாளை தேசியத் தலைவரின் போராட்டம் வாழ்த்துக்குள்ளாக்கப்படும். இதை வரலாறு செய்துமுடிக்கும். ஏனெனில் தேசிய தலைவர் சொல்கிறார், நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல; புரட்சியாளர்கள் என்று. புரட்சி ஒருபோதும் அணையாது. புரட்சியை இந்த சாதாரண மகிந்தாவின் குடும்பம் அணைத்துவிட முடியாது. சோனியாவின் கருவிகள் வீழ்த்திவிட முடியாது. சீனத்தின் தோட்டாக்கள் துடைத்துவிட முடியாது. காரணம், அனைத்து கருவிகளையும் தாண்டி அவை மனங்களாக மாறி நிற்கின்றன. அந்த மனங்களில் புதைந்துள்ள விடுதலை என்கின்ற தீ, அடக்க அடக்க கொழுந்துவிட்டு எரியும். அதன் அனலில் ஆதிக்கத்தின் சுவடுகள் அழியும் என்பதை மறந்துவிட வேண்டாம். தமிழீழம் பெறும்வரை தளராமல் களம் அமைப்போம்..

Sunday, May 23, 2010

நிறம் மாறும் ஜுனியர் விகடன்






ஜுனியர் விகடன். ஒரு காலத்தில், தரமான பத்திரிக்கையாக, மக்களின் நம்பிக்கையை பெற்ற இதழாக வலம் வந்து கொண்டிருந்தது ஜுனியர் விகடன். இப்போது, சிறிது சிறிதாக நிறம் மாறி, தற்போது மஞ்சள் நிறமாகவே ஆகி விட்டது.

விகடன் குழுமத்தில் உள்ள மற்ற பத்திரிக்கைகள் அனைத்தையும் விட, அக்குழுமத்தில் பணியாற்றுபவர்களுக்கு, ஜுனியர் விகடன் என்றாலே ஒரு தனி மதிப்பு உண்டு. அரசு அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் என அனைவரிடத்திலும், ஜுனியர் விகடன் செய்திகள் என்றால் ஒரு மதிப்பும், தங்களைப் பற்றிய தவறான செய்திகள் வெளி வந்தால் அச்சமும் இருந்தது உண்டு. இதெல்லாம், பாலசுப்ரமணியன் என்ற விகடன் குழுமத்தின் மூத்த ஆசிரியர் இருந்த பொழுது.

இதற்குப் பிறகு, இரண்டாவது தலைமுறை தலையெடுத்த பிறகு, தொழிலை விரிவாக்க வேண்டும் என்றும், சினிமாவிலும், சின்னத் திரையிலும் கால் பதிக்க வேண்டும் என்றும், எடுக்கப் பட்ட முயற்சிகள், பாலசுப்ரமணியன் தனது விருப்பமின்மையை தெரிவித்த போதும், அவரது எதிர்ப்பு உதாசீனப் படுத்தப் பட்டது. இதையும் தாண்டி தீவிரமாக எதிர்த்தால், எக்ஸ்பிரஸ், இந்து, குமுதம் போன்ற பத்திரிக்கை குழுமங்களில் நடக்கும் குழாயடி சண்டை இங்கேயும் நடக்கும் என்ற புரிதலில், தனது மகனின் விருப்பப் படி, விட்டு விட்டார்.

ஆனால், தொடர்ந்து நடந்த சம்பவங்கள், பாரம்பரியம் மிக்க விகடன் குழுமம், பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில், செக்சை மூலதனமாக வைத்து, செக்ஸ் பத்திரிக்கையாக மாறி வந்ததை கண்டு மனம் பொறுக்கவில்லை அந்த பெரியவருக்கு. சரி. செக்சை மூலதனமாக வைத்து பத்திரிக்கை நடத்துவதென்றால், அதில் ஆசிரியர் என்று என்னுடைய பெயரை போடாதே என்று முடிவெடுத்து, பொறுப்புக்களை ஒப்படைத்து, 2008ம் ஆண்டில் ஒதுங்கிக் கொண்டார் அந்த பண்பான பெரியவர்.

ஜுனியர் விகடன் எப்படிப் பட்ட இதழாக இருந்தது தெரியுமா ? 2003ம் ஆண்டில், தமிழகத்தில் கடும் வறுமை தாண்டவமாடிய போது, வெறும் பத்திரிக்கை பணியை மட்டும் செய்யக் கூடாது, அதையும் தாண்டி, சமுதாயத்தில் உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப் பட்டு, விகடன் ட்ரஸ்ட் என்று ஒரு ட்ரஸ்ட் உருவாக்கப் பட்டு, பாலசுப்ரமணியனின் சொந்த கிராமமான நரிமணம், தத்தெடுக்கப் பட்டது.

ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ அரிசி என்ற வகையில் வழங்கப் பட்டது. விகடனின் இந்த திட்டத்துக்கு கிடைத்த ஆதரவு, ஒன்றரை கோடி நிதியை பெற்றுத் தந்தது.
இதற்குப் பிறகு, பொறுப்பேற்ற, பா.சீனிவாசன் விகடன் குழுமம் பல்லாண்டுகளாக உழைத்து, எடுத்த நற்பெயரை, நாறப் பெயராக்கும் பணியில், தன்னை ஈடுபடுத்திக் கொள்ள தொடங்கினார். இதன் முதல் படி, விகடன் டாக்கீஸ் என்ற சின்னத் திரை. சின்னத் திரையில் சீரியல் தயாரிப்புத் தொடங்கியவுடனே, பிரபலமான, விஐபிக்களின் ஆதரவைப் பெற்ற சின்னத் திரை நடிகையோடு கிசுகிசுக்கப் பட்டார். விகடன் ஊழியர்கள் பலருக்கு இந்த விஷயங்கள் அரசல் புரசலாக தெரிய வந்தும், முதலாளிக்கு எதிராக என்ன பேச முடியும் என்று வாயை மூடிக் கொண்டு இருந்தார்கள். அந்தக் குற்றச் சாட்டுகளை சீனிவாசன் மறுக்கவும் இல்லை. ஆனால், நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இவரது சரச சல்லாபங்கள் வளர்ந்து கொண்டே இருந்தன.

பா.சீனிவாசன்

சரி. சீனிவாசன் என்ற தனிப்பட்ட மனிதனின் அந்தரங்கம் இது. இதைப் பற்றி விமர்சிக்க யாருக்கு உரிமை உண்டு என்ற கேள்வி எழும். மிக மிக நியாயமான ஒரு கேள்வி. யாருக்கும் உரிமை இல்லைதான். சீனிவாசனின் ஜுனியர் விகடன் பத்திரிக்கை மற்றவரின் அந்தரங்கத்தில் தலையிடாத வரை, இந்த உரிமை யாருக்கும் இல்லை. கடந்த இதழ் ஜுனியர் விகடனில் ஒரு கவர் ஸ்டோரி. ஒரு ஆண், பல பெண்களோடு, உறவில் இருந்து, அந்த நெருக்கமான உறவை படம் பிடித்து வைத்துள்ளதையும், அந்தப் படங்களை, அவனது கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கிலிருந்து அந்தப் பெண் எடுத்து விட்டாளாம்.

இதை கவர்ஸ்டோரியாக போட்டு, தன்னுடைய மிகப் பெரிய சமுதாய சேவையை செய்திருக்கிறது ஜுனியர் விகடன்
அதற்கு அடுத்த இதழில், வழக்கம் போல, நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா.

இது போன்ற சீரழிவிற்கு ஆளாகியுள்ள ஜுனியர் விகடன், தனது பாரம்பரியத்தையும், விழுமியங்களையும், சிறிது சிறிதாக இழந்து கொண்டு வருகிறது.

இதற்கு முன்பு, மிஸ்டர் மியாவ் என்ற ஒரு கண்றாவி தொடர். அந்தத் தொடரில், எந்த நடிகர் யார் கூட தற்பொழுது படுத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு யார் கூட படுத்துக் கொண்டிருந்தார் என்ற ஆராய்ச்சி. இப்போது, அதே தொடரையே கொஞ்சம் பெயர் மாற்றி, சினி விசித்திரன் ஹியர் என்ற ஆராய்ச்சி தொடர்.

பேசாமல், ஜுனியர் விகடன், சரோஜா தேவி கதைகளை தொடராக வெளியிடலாம். அதில் வரும் படங்கள் அந்தத் தொடர்களுக்கு பொருத்தமாகவே இருக்கும். அடுத்த முயற்சியாக, சரோஜா தேவி கதைகளை விகடன் டாக்கீஸ் மூலமாக சின்னத் திரையிலோ, பெரிய திரையிலோ, தயாரித்து வெளியிடலாம். நல்ல லாபம் கிடைக்கும். அந்தப் பட ஷுட்டிங்குக்கு, தற்போது பா.சீனிவாசனுடன் நெருக்கமாக இருக்கும் காவல் துறை அதிகாரிகள், ஆதரவு தருவார்கள் என்பது உறுதி.

பேசாமல், பத்திரிக்கை நடத்துகிறேன் என்று போலியாக நடித்துக் கொண்டிருக்காமல், கன்னட பிரசாத் போல, நேரடியாக தொழிலுக்கு வாருங்கள். கன்னட பிரசாத் போல மாட்டிக் கொள்ளாமல், பத்திரமாக தொழில் நடத்த, உங்களுக்கு, ஆதரவு தர, பல போலீஸ் அதிகாரிகள் வருவார்கள்.

நன்றி- நாம்தமிழர்

Saturday, May 22, 2010

அவசியம் படிக்கவும் - லைலாவுக்கெல்லாம் லைலா ??



அது என்ன லைலாவுக்கெல்லாம் லைலா? கோடையின் கடும் வெம்மையில், காதலியின் குளிர்ச்சியான பார்வையும், வார்த்தைகளுமே வறண்டு போய் எரிச்சலை உண்டு பண்ணும் வேளையில், இனிய தென்றலாய், நமக்கெல்லாம், அரிதிலும், அரிதான மழையை தந்து, நம்மை ஒரு நாள் கட்டாய ஓய்வு எடுக்க வைத்ததற்கு லைலாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். அட, அதாங்க லைலா புயல்!

இதுபோல பெயரிடுவதற்கு காரணம், புயலுக்கு இவ்வாறு பெயர் வைத்தால், எளிதாக தகவல் சொல்வதற்கும், அபாய எச்சரிக்கைகள் வழங்குவதற்கும் ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் தான் லைலா, பாண்டெல்லாம் புயலுக்கே பெயர் சூட்டும் கலாசாரம் வந்திருக்கிறது.

சரி, புயலுக்கு இப்படி பெயரிடும் வழக்கம் எப்போது வந்தது தெரியுமா? ஆரம்பத்தில், இவ்வாறு பெயரிடுவதை ஒழுங்குபடுத்தும் வரையில், அந்தந்த நாடுகள் அவர்களுக்கு தகுந்தாற்போல புயலுக்கும் பெயரிட்டு வந்தன.

2000-ம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த வானியல் அமைப்புகளுக்கான மாநாட்டில் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் ஏற்படும் புயல்களுக்கு பெயரிடுவது என்று ஒத்தக் கருத்துக்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 2004-ம் ஆண்டு முதல் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் தொடங்கி விட்டது.

இதற்காக, ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளெல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அட்டவணை தயாரித்து, புதிதாக உருவாகும், ஒவ்வொரு புயலுக்கும், இந்த அட்டவணையின் படி பெயரிட்டு வருவதை வாடிக்கையாக்கி இருக்கிறார்கள். இப்படி அட்டவனைப் பட்டியலில் வந்ததுதான் லைலா. அதான் நம்ம சென்னையை குளிர்வித்து சென்றிருக்கிறதே, அதே லைலாதான்..

சரி, லைலா தென்றலாய் வந்து கோடையின் சூட்டைத் தணித்து விட்டுப் போயிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும், தமிழ்நாட்டை தினசரியும் தாக்கும் புயல்களுக்கு தமிழக அரசியல் தலைவர்களின் பெயரைச் சூட்டினால், அந்தப் புயல்களின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும், இது குறித்த வானிலை எச்சரிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தமாஸாக சிந்தித்தன் விளைவு - மேலே படிங்க...

’ராமதாஸ்’ புயல்:


தமிழ்நாட்டின் வடமாவட்டங்களின் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது என்று உத்தேசிக்கப்பட்ட இந்தப் புயல், குறுகிய இடமான தைலாபுரத்தில் மட்டுமே நீண்ட நெடுங்காலம் மையம் கொண்டதன் விளைவு, விரைவிலேயே வலுவிழந்து போனது. கடந்த 2009-ம் ஆண்டு இந்த ராமதாஸ் புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்தப் புயலால் ஒரு குடிசையையும் பெயர்த்துப் போடமுடியவில்லை. வந்த சந்தடி தெரியாமல் போனது. இனிமேல், இந்த ராமதாஸ் புயல் வந்தால் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என்ற காரணத்தால், வானிலை நிலையத்தில் எச்சரிக்கை செய்வதையே விட்டுவிடப் போகிறார்களாம்.

அவ்வப்போது ராமதாஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்ற தகவல் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால், அது ஒரு ’டம்மி பீசு’ என்று மீனவர்கள் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிடுகிறார்கள் என்பதைக் கேட்டு, தைலாபுரம் கொதித்திக் கிடக்கிறதாம்.

’வைகோ’ புயல்:

முதன்முதலில் இந்தப் புயல் எச்சரிக்கை வந்தபோது, அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை மையம் ஏகத்துக்கும் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒங்கி அடித்தது. அதற்கேற்பவே இந்தப் புயல், ’புரட்சிப் புயல்’ என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால், வந்த சில நாட்களிலேயே, இந்தப் புயல், பெரிய அளவு தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. வெகு வேகமாக மையம் கொண்ட இந்தப் புயல், சில நாட்களாக, வேலூர் அருகே, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் மையம் கொண்டிருந்தது. பிறகு, டெல்லியில் ஏற்பட்ட சில வானிலை மாற்றங்கள் காரணமாக, நெடுநாட்களாக மையம் கொண்டிருந்த வேலூரிலிருந்து வடக்கே நகர்ந்து, சென்னை போயஸ்தோட்டம் பகுதியில் மையம் கொண்டிருக்கிறது.

இப்போதைக்கு இந்தப் புயல், போயஸ்தோட்டம் பகுதியை விட்டு நகர வாய்ப்பில்லை என்றும், நகர்ந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், இந்தப் புயல் குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என்றும் வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்த் புயல்:

கோடம்பாக்கத்தில் வெகு நாட்களாக மையம் கொண்டிருந்த புயல், திடீரென்று அரசியல் அரங்குக்கு நகர்ந்து வந்தபோது, வானிலை ஆய்வாளர்களே அசந்து போனார்கள். இந்தப் புயலும், வந்த சில காலத்துக்கு, மற்ற புயல்களை வலுவிழக்கச் செய்யும் பணியை செய்து வந்தது. வானியல் ஆய்வர்களும் இந்தப் புயல்... அடுத்து எந்த திசையை நோக்கி நகரும் என்பதில் குழப்பத்தில்தான் இருந்தனர்.

அடுத்தடுத்து, இந்தப் புயல் தமிழ்நாட்டை தாக்கியபோதும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தததால், இப்போது இந்தப் புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது என்று வானியல் ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக திடீரென்று ஏற்படும் புயல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்தப் புயல் குழப்பத்தை ஏற்படுத்தாமல், தானே குழம்பி நிற்பது தான் விந்தையிலும் விந்தை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இதை புயல் என்று சொல்வதை விட, ஒரு வறண்ட வயல் என்பது பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லியும் சிரிக்கிறார்கள் அவர்கள்.

ஜி.கே.வாசன் புயல்:

இதைப் புயல் என்பதை விட, ஒரு சிறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனேன்றால், இந்தப் புயல் வானியல் மாற்றங்களால் உருவானதல்ல. இதற்கு முன்பு, டெல்லியில் ஏற்பட்ட வானியல் மாற்றங்களால், தமிழ்நாட்டில் இருந்த ஒரு புயலின் பின்னால் உருவான ஒரு குட்டிப் புயல் இது. அந்தப் பெரிய புயல் இல்லாவிட்டால், இந்த குட்டிப் புயல் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை என்று இந்தப் புயல் பற்றிய பூர்வீகத்தை வாசிக்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

அந்தப் பெரிய புயலைப் போலவே, இந்தப் புயலும், எப்போது வருகிறது, எங்கே நகருகிறது என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இந்தப் புயல் உண்மையில் புயலா, இல்லை வெறும் பயலா என்று புரியாமல் பல வானியல் ஆய்வாளர்கள் இன்றளவ்விலும் குழம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த வகைப் புயல்கள், தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் நகர்வதால், இந்தப் புயல்களை தேசியப் புயல் என்று வானியல் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

இந்த தேசிய வகைப் புயல்கள், எப்போதுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் சிறு சிறு புயல்களாக இருக்கும் தன்மை கொண்டவையாம். இந்த சிறு சிறு புயல்கள், ஒன்றோடு ஒன்று மோதி, எந்த வகையிலும் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கடைசியில் வலுவிழந்து போகக்கூடிய தன்மை பெற்றவை.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புயல்:

இந்தப் புயல், அவ்வப்போது, பெரும் காற்றை எழுப்பி சத்தமிடும். ஆனால், சத்தத்தை உண்டுபண்ணும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன், இது ஒருபோதும் கடலை கடந்ததில்லை என்பது இதன் வரலாறு. அதனாலேயே இதனால் பாதிப்பு இல்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

இந்தப் புயல் அவ்வப்போது, தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ‘காமராஜ் புயலை’ நினைவுபடுத்தும். ஆனால் காமராஜ் புயலுக்கும் இதற்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை தன்னுடைய நடவடிக்கைகளில் இருந்து அப்பட்டமாக வெளிப்படுத்திவிடும்.

அவ்வப்போது, சூறைக் காற்றுடன் பெரும் ஓசை எழுப்பவில்லை என்றால், தன்னை வானிலை ஆய்வாளர்களும் பொதுமக்களும் கண்டுகொள்ளவில்லை என்கிற நினைப்பிலேயே இது, அவ்வப்போது பெரும் சத்தத்தை கிளப்பும். 2009-ல் இந்த ’ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்’ என்ற புயலை, ’முத்துக்குமார்’ என்ற ஒரு பெரும் புயல் இருந்த இடம் தெரியாமல் செய்ததும் அப்படியே சந்தடியில்லாமல் அடங்கிக்கிடக்கிறது.

ராஜ்யசபா என்ற சக்தியைக் கொண்டு தன்னை டெல்லியில் மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளலாமா என்று, இந்தப் புயல் மீண்டும் லேசாக தலைதூக்கி இருக்கிறது. இருந்தாலும், கூடவே இருக்கும் மற்றப் புயல்கள் இதன் தலையில் கருணாநிதி புயல் மூலமாக கல்லைத் தூக்கிப் போட, சத்தமில்லாமல் மீண்டும் அடங்கி விட்டதாம் இந்தப் புயல்.

தமிழக சி.பி.எம். புயல்:

தமிழ்நாட்டின் மிக மிக பழமையான புயல்களில் இதுவும் ஒன்று. இது ஒரு பலமான புயல் என்று தோற்றத்திற்கு தோன்றினாலும், இந்தப் புயல், மேற்கு வங்கம் மற்றும் கேரள கரையோரமே பெரும்பாலான நேரங்களில் மையம் கொண்டிருக்கும். அவ்வப்போது இடியுடன் கூடிய மழையை வர வைத்தாலும், இந்தப் புயல் பெரும்பாலான நேரங்களில் தமிழ்நாட்டில் வலுவிழந்தே இருந்திருக்கிறது.

இந்தப் புயலால் அவ்வப்போது லேசான சாரலை வரவைக்க முடிந்திருக்கிறதே தவிர, வேறு கடுமையான பாதிப்புகளளை ஏற்படுத்தியதே இல்லை. இந்தப் புயல் வலுவாக மையம் கொண்டிருந்த மேற்கு வங்கத்தில் கூட, ’மம்தா’ என்ற புதிய புயல் சமீபத்தில் தாக்குதல் நடத்த, பெட்டிப் பாம்பாக கடலுக்குள்ளேயே அடங்கியிருக்கிறதாம் இந்தப் புயல். இனி இந்தப் புயல், மேலெழும்பி வர வேண்டும் என்றால், புதிய சக்தி ஏதேனும் தேவைப்படும் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

தமிழக சி.பி.ஐ. புயல்:

இதுவும், தமிழகத்தின் பழமையான புயல்களுள் ஒன்றுதான். இந்தப் புயல், மிகப் பழமையான புயல்களுள் ஒன்றாய் இருந்தாலும், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு எப்போதும் துணைப் புயலாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்தப் புயல், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு, துணைப் புயல் அல்ல என்று காட்டிக் கொள்வதற்காக, பெரும் பிரயத்தனம் செய்தாலும், இது சி.பி.எம்-மின் வால்ப் புயலாகவே, வானியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

கருணாநிதி புயல்:

தமிழகத்தை மிக மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கியதில், இந்தப் புயல் மிக மிக முக்கியமான புயல். தஞ்சை அருகே, திருக்குவளை என்ற இடத்தில் இந்தப் புயல் உருவானதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முதலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, மெல்ல மெல்ல வலுவடைந்து, இன்று தமிழகம் முழுவதையும் இந்தப் புயல் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் போயஸ் தோட்டம் பகுதியிலிருந்து கருத்து தெரிவிக்கிறார்கள்.

திருக்குவளையில் உருவாகி, மெல்ல, மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று வங்காள விரிகுடாவின் அருகே, மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயல், தன்னுடைய அசாத்திய வலிமையால், தமிழ்நாட்டில், ஜனநாயக சக்திகள் என்று அழைக்கப்படும் அனைத்தையும், அனைத்து பத்திரிகைகளையும்கூட எளிதாக வளைத்து, தன்னுள் போட்டுக் கொண்டதாக இதுகுறித்து புகார் பட்டியல் வாசிக்கிறது இதன் உடன்பிறவா இன்னொரு புயலான வைகோ புயல்.

இந்த ’கருணாநிதிப் புயல்’ சென்னையில் மையம் கொண்டிருந்த போதே, தன்னுடன் பலப் பல குட்டிப் புயல்களை உருவாக்கியது. இந்தக் குட்டிப் புயல்கள், ’கருணாநிதிப் புயலை’ விட, தமிழகத்துக்கு அதிக சேதம் விளைவித்தன என்று போயஸ் தோட்டத்துப் புயல் அவ்வபோது அழுது அரற்றுவதை தடுக்க முடியவில்லையாம். பல்வேறு குட்டிப் புயல்களும் சேர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியையும், அதிக சேதத்தையும் விளைவித்துள்ளன என்று இடியோசையாக முழங்குகிறார்கள் வானிலை ஆய்வார்கள், தாயகத்தில் ஒதுங்கியபடியே.

இந்தப் புயல் எப்போது கரையைக் கடக்கும், எப்போது நமக்கெல்லாம் விமோசனம் பிறக்கும் என்று, தமிழக மக்கள் வேண்டாத நாளில்லை என்கிறது ஜெயலலிதா புயல். ஆனாலும், இந்தப் புயல் இப்போதைக்கு கரையை கடக்காது என்று வானியல் ஆய்வர்கள் அடித்து ஆரூடம் சொல்கிறார்கள்..


மற்ற புயல்களுக்கு இல்லாத ஒரு குணம் இந்தப் புயலுக்கு உண்டு. மற்ற புயல்கள் வந்து, மையம் கொண்டு, போதுமான சேதாரங்களை விளைவித்து விட்டு நகர்ந்து விடும். ஆனால், இந்தப் புயல், தமிழகத்தில் உள்ள பல்வேறு வானியல் ஆய்வறிஞர்களான, ஜெகதரட்சகன், கமலஹாசன், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, போன்றவர்கள் எப்போதும் இந்தப் புயலைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் தன்மை கொண்டதாக இருப்பதால், இந்தப் புயலைச் சுற்றியே இந்த வானிலை ஆய்வாளர்கள் திரிந்து கொண்டிருப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்களாம்.


இப்படிப்பட்ட வானிலை ஆய்வாளர்களையெல்லாம் தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொள்வதற்காக மேலவை என்ற ஜால்ரா புயல் அரங்கத்தை விரைவில் அமைத்துக் கொள்ளவும், இந்த கருணாநிதி புயல் படாதபாடு படுவதாக தெரிவிக்கிறது போயஸ் தோட்டத்து வானிலை ஆய்வு மையம்.


இதனால் இந்தப் புயல், வாரத்தில் ஏழு நாட்களும் நேரு உள்விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம், காமராஜர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடம் போன்ற இடங்களில் மாலை நேரங்களிலும், காலையில், புதிய தலைமைச் செயலக கட்டிட வளாகத்திலும் மையம் கொண்டிருப்பதை வழக்கமாக்கி விட்டதாம்.

அடுத்த மாதம் இந்தப் புயல்... வடக்கு நோக்கி நகர்ந்து, கோவை கொடீசியா அரங்கில், ஒரு வார காலம் மையம் கொண்டிருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இருந்தை விட, கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து இந்தப் புயலும், இதனுடன் இருக்கும் குட்டிப் புயல்களும் விளைவித்த சேதம் அதிகம் என்பதால், எப்போது இந்தப் புயல் கரையைக் கடக்கும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக போயஸ் தோட்டம் பகுதியில் ஒதுங்கிய வானிலை ஆய்வாளர்கள் அங்கலாக்கின்றனர்.


ஜெயலலிதா புயல்:

இந்தப் புயல், 1991-ம் ஆண்டு, முதன் முதலில் தமிழகத்தை பலமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் தமிழகம் அடைந்த சேதத்துக்கு அளவே இல்லை. 1991-ம் ஆண்டு, தமிகத்தில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல், ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு பலத்த சேதத்தை உருவாக்கியது.


இந்தப் புயலின் சிறப்பம்சம், துணைப் புயல் இல்லாமல் கடலை விட்டு வெளியே வரவே வராது. 1991-ம் ஆண்டிலிருந்து, 1996-ம் ஆண்டு வரை, இந்தப் புயல் விளைவித்த சேதங்களை விட, இதன் உடன் இருக்கும் துணைப் புயலும், அந்தத் துணைப் புயலுக்கு, துணையான மற்ற புயல்களும் விளைவித்த சேதமே மிக அதிகம் என்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.


1996-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ வந்து, இந்தப் புயலை வலுவிழக்கச் செய்தது. வலுவிழக்கச் செய்ததும், இந்தப் புயல், மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்று வானியல் ஆய்வர்கள் தெரிவித்த கருத்தை பொய்யாக்கும் விதமாக, மீண்டும் பலமாக தமிழகத்தை 2001-ம் ஆண்டு தாக்கியது. அந்தத் தாக்குதலில், ’கருணாநிதிப் புயல்’ நிலை குலைந்து போனது. 2001-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் மையம் கொண்ட ஜெயலலிதா புயல், அரசு ஊழியர் குடியிருந்த பகுதிகளில் பலத்த சேதத்தை விளைவித்ததால், கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க தொடங்கியது. 2006-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ மீண்டும் இந்தப் புயலை வலுவிழக்கச் செய்து, தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கி, இன்றுவரை இடியை கிளப்பிக் கொண்டே இருக்கிறது..


இந்த ’ஜெயலலிதா புயல்’ மீண்டும் தமிழகத்தில் மையம் கொள்ள வாய்ப்பு இருப்பதாக பெசண்ட் நகர் ஏரியாவிலிருந்து வானியல் ஆய்வாளர்கள் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். 1996-ல், இந்தப் புயல் மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்ற அறிஞர்களின் கூற்றை பொய்யாக்கி, தமிழகத்தை 2001-ல் தாக்கியது போலவே மீண்டும் நடக்கக்கூடும் என்றும் நடராஜராக நர்த்தனமாடி தங்கள் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.


இந்தப் புயல்,பெரும்பாலான நாட்களில், கொடநாடு போன்ற மலைப் பிரதேசங்களில் மையம் கொண்டிருப்பதோடு, அவ்வபோது சிறுதாவூரிலும் மையம் கொள்வதால், சட்டென வலுவிழந்து தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தப் புயல், மீண்டும் பெரும் புயலாக வந்து, ’கருணாநிதிப் புயலை’ வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால், கூட இருக்கும் சக புயல்களை அனுசரிப்பதோடு, தாக்கவேண்டும் என்கிற ஒரே இலக்கோடு கடலிலிருந்து புறப்பட்டு வந்து கடலைக் கடக்க வேண்டும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். அது நடந்தால், இந்தப் புயலுக்கு ‘லைலாவுக்கெல்லாம் லைலா...’ என்று பெயர் சூட்டுவோம் என்றும் சொல்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.


நன்றி - நாம்தமிழர்

அவசியம் படிக்கவும் - லைலாவுக்கெல்லாம் லைலா ??

அது என்ன லைலாவுக்கெல்லாம் லைலா? கோடையின் கடும் வெம்மையில், காதலியின் குளிர்ச்சியான பார்வையும், வார்த்தைகளுமே வறண்டு போய் எரிச்சலை உண்டு பண்ணும் வேளையில், இனிய தென்றலாய், நமக்கெல்லாம், அரிதிலும், அரிதான மழையை தந்து, நம்மை ஒரு நாள் கட்டாய ஓய்வு எடுக்க வைத்ததற்கு லைலாவுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். அட, அதாங்க லைலா புயல்!

இதுபோல பெயரிடுவதற்கு காரணம், புயலுக்கு இவ்வாறு பெயர் வைத்தால், எளிதாக தகவல் சொல்வதற்கும், அபாய எச்சரிக்கைகள் வழங்குவதற்கும் ஏற்ற வகையில் இருக்கும் என்பதால் தான் லைலா, பாண்டெல்லாம் புயலுக்கே பெயர் சூட்டும் கலாசாரம் வந்திருக்கிறது.

சரி, புயலுக்கு இப்படி பெயரிடும் வழக்கம் எப்போது வந்தது தெரியுமா? ஆரம்பத்தில், இவ்வாறு பெயரிடுவதை ஒழுங்குபடுத்தும் வரையில், அந்தந்த நாடுகள் அவர்களுக்கு தகுந்தாற்போல புயலுக்கும் பெயரிட்டு வந்தன.

2000-ம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த வானியல் அமைப்புகளுக்கான மாநாட்டில் வங்காள விரிகுடா மற்றும் அரேபியக் கடலில் ஏற்படும் புயல்களுக்கு பெயரிடுவது என்று ஒத்தக் கருத்துக்களின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 2004-ம் ஆண்டு முதல் புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் தொடங்கி விட்டது.

இதற்காக, ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளெல்லாம் ஒருங்கிணைந்து ஒரு அட்டவணை தயாரித்து, புதிதாக உருவாகும், ஒவ்வொரு புயலுக்கும், இந்த அட்டவணையின் படி பெயரிட்டு வருவதை வாடிக்கையாக்கி இருக்கிறார்கள். இப்படி அட்டவனைப் பட்டியலில் வந்ததுதான் லைலா. அதான் நம்ம சென்னையை குளிர்வித்து சென்றிருக்கிறதே, அதே லைலாதான்..

சரி, லைலா தென்றலாய் வந்து கோடையின் சூட்டைத் தணித்து விட்டுப் போயிருப்பது ஒருபக்கம் இருக்கட்டும், தமிழ்நாட்டை தினசரியும் தாக்கும் புயல்களுக்கு தமிழக அரசியல் தலைவர்களின் பெயரைச் சூட்டினால், அந்தப் புயல்களின் தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும், இது குறித்த வானிலை எச்சரிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தமாஸாக சிந்தித்தன் விளைவு - மேலே படிங்க...

’ராமதாஸ்’ புயல்:


தமிழ்நாட்டின் வடமாவட்டங்களின் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வல்லமை பெற்றது என்று உத்தேசிக்கப்பட்ட இந்தப் புயல், குறுகிய இடமான தைலாபுரத்தில் மட்டுமே நீண்ட நெடுங்காலம் மையம் கொண்டதன் விளைவு, விரைவிலேயே வலுவிழந்து போனது. கடந்த 2009-ம் ஆண்டு இந்த ராமதாஸ் புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்தப் புயலால் ஒரு குடிசையையும் பெயர்த்துப் போடமுடியவில்லை. வந்த சந்தடி தெரியாமல் போனது. இனிமேல், இந்த ராமதாஸ் புயல் வந்தால் எவ்விதமான பாதிப்பும் இருக்காது என்ற காரணத்தால், வானிலை நிலையத்தில் எச்சரிக்கை செய்வதையே விட்டுவிடப் போகிறார்களாம்.

அவ்வப்போது ராமதாஸ் புயல் மையம் கொண்டுள்ளது என்ற தகவல் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டால், அது ஒரு ’டம்மி பீசு’ என்று மீனவர்கள் கண்டு கொள்ளாமல் வழக்கம் போல, கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுவிடுகிறார்கள் என்பதைக் கேட்டு, தைலாபுரம் கொதித்திக் கிடக்கிறதாம்.

’வைகோ’ புயல்:

முதன்முதலில் இந்தப் புயல் எச்சரிக்கை வந்தபோது, அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வானிலை மையம் ஏகத்துக்கும் எச்சரிக்கை மணியை ஓங்கி ஒங்கி அடித்தது. அதற்கேற்பவே இந்தப் புயல், ’புரட்சிப் புயல்’ என்றும் அழைக்கப்பட்டது.

ஆனால், வந்த சில நாட்களிலேயே, இந்தப் புயல், பெரிய அளவு தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. வெகு வேகமாக மையம் கொண்ட இந்தப் புயல், சில நாட்களாக, வேலூர் அருகே, ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் மையம் கொண்டிருந்தது. பிறகு, டெல்லியில் ஏற்பட்ட சில வானிலை மாற்றங்கள் காரணமாக, நெடுநாட்களாக மையம் கொண்டிருந்த வேலூரிலிருந்து வடக்கே நகர்ந்து, சென்னை போயஸ்தோட்டம் பகுதியில் மையம் கொண்டிருக்கிறது.

இப்போதைக்கு இந்தப் புயல், போயஸ்தோட்டம் பகுதியை விட்டு நகர வாய்ப்பில்லை என்றும், நகர்ந்தாலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், இந்தப் புயல் குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை என்றும் வானியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்த் புயல்:

கோடம்பாக்கத்தில் வெகு நாட்களாக மையம் கொண்டிருந்த புயல், திடீரென்று அரசியல் அரங்குக்கு நகர்ந்து வந்தபோது, வானிலை ஆய்வாளர்களே அசந்து போனார்கள். இந்தப் புயலும், வந்த சில காலத்துக்கு, மற்ற புயல்களை வலுவிழக்கச் செய்யும் பணியை செய்து வந்தது. வானியல் ஆய்வர்களும் இந்தப் புயல்... அடுத்து எந்த திசையை நோக்கி நகரும் என்பதில் குழப்பத்தில்தான் இருந்தனர்.

அடுத்தடுத்து, இந்தப் புயல் தமிழ்நாட்டை தாக்கியபோதும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தததால், இப்போது இந்தப் புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்று ஓரளவுக்கு அனுமானிக்க முடிகிறது என்று வானியல் ஆய்வர்கள் தெரிவிக்கின்றனர். பொதுவாக திடீரென்று ஏற்படும் புயல் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றாலும், இந்தப் புயல் குழப்பத்தை ஏற்படுத்தாமல், தானே குழம்பி நிற்பது தான் விந்தையிலும் விந்தை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். இதை புயல் என்று சொல்வதை விட, ஒரு வறண்ட வயல் என்பது பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லியும் சிரிக்கிறார்கள் அவர்கள்.

ஜி.கே.வாசன் புயல்:

இதைப் புயல் என்பதை விட, ஒரு சிறிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனேன்றால், இந்தப் புயல் வானியல் மாற்றங்களால் உருவானதல்ல. இதற்கு முன்பு, டெல்லியில் ஏற்பட்ட வானியல் மாற்றங்களால், தமிழ்நாட்டில் இருந்த ஒரு புயலின் பின்னால் உருவான ஒரு குட்டிப் புயல் இது. அந்தப் பெரிய புயல் இல்லாவிட்டால், இந்த குட்டிப் புயல் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை என்று இந்தப் புயல் பற்றிய பூர்வீகத்தை வாசிக்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

அந்தப் பெரிய புயலைப் போலவே, இந்தப் புயலும், எப்போது வருகிறது, எங்கே நகருகிறது என்று யாராலும் புரிந்து கொள்ள முடியாது. இந்தப் புயல் உண்மையில் புயலா, இல்லை வெறும் பயலா என்று புரியாமல் பல வானியல் ஆய்வாளர்கள் இன்றளவ்விலும் குழம்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த வகைப் புயல்கள், தமிழ்நாடு மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் நகர்வதால், இந்தப் புயல்களை தேசியப் புயல் என்று வானியல் ஆய்வாளர்கள் வகைப்படுத்துகின்றனர்.

இந்த தேசிய வகைப் புயல்கள், எப்போதுமே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் சிறு சிறு புயல்களாக இருக்கும் தன்மை கொண்டவையாம். இந்த சிறு சிறு புயல்கள், ஒன்றோடு ஒன்று மோதி, எந்த வகையிலும் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் கடைசியில் வலுவிழந்து போகக்கூடிய தன்மை பெற்றவை.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் புயல்:

இந்தப் புயல், அவ்வப்போது, பெரும் காற்றை எழுப்பி சத்தமிடும். ஆனால், சத்தத்தை உண்டுபண்ணும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏன், இது ஒருபோதும் கடலை கடந்ததில்லை என்பது இதன் வரலாறு. அதனாலேயே இதனால் பாதிப்பு இல்லை என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.

இந்தப் புயல் அவ்வப்போது, தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய ‘காமராஜ் புயலை’ நினைவுபடுத்தும். ஆனால் காமராஜ் புயலுக்கும் இதற்கும் கடுகளவு கூட சம்பந்தம் கிடையாது என்பதை தன்னுடைய நடவடிக்கைகளில் இருந்து அப்பட்டமாக வெளிப்படுத்திவிடும்.

அவ்வப்போது, சூறைக் காற்றுடன் பெரும் ஓசை எழுப்பவில்லை என்றால், தன்னை வானிலை ஆய்வாளர்களும் பொதுமக்களும் கண்டுகொள்ளவில்லை என்கிற நினைப்பிலேயே இது, அவ்வப்போது பெரும் சத்தத்தை கிளப்பும். 2009-ல் இந்த ’ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்’ என்ற புயலை, ’முத்துக்குமார்’ என்ற ஒரு பெரும் புயல் இருந்த இடம் தெரியாமல் செய்ததும் அப்படியே சந்தடியில்லாமல் அடங்கிக்கிடக்கிறது.

ராஜ்யசபா என்ற சக்தியைக் கொண்டு தன்னை டெல்லியில் மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ளலாமா என்று, இந்தப் புயல் மீண்டும் லேசாக தலைதூக்கி இருக்கிறது. இருந்தாலும், கூடவே இருக்கும் மற்றப் புயல்கள் இதன் தலையில் கருணாநிதி புயல் மூலமாக கல்லைத் தூக்கிப் போட, சத்தமில்லாமல் மீண்டும் அடங்கி விட்டதாம் இந்தப் புயல்.

தமிழக சி.பி.எம். புயல்:

தமிழ்நாட்டின் மிக மிக பழமையான புயல்களில் இதுவும் ஒன்று. இது ஒரு பலமான புயல் என்று தோற்றத்திற்கு தோன்றினாலும், இந்தப் புயல், மேற்கு வங்கம் மற்றும் கேரள கரையோரமே பெரும்பாலான நேரங்களில் மையம் கொண்டிருக்கும். அவ்வப்போது இடியுடன் கூடிய மழையை வர வைத்தாலும், இந்தப் புயல் பெரும்பாலான நேரங்களில் தமிழ்நாட்டில் வலுவிழந்தே இருந்திருக்கிறது.

இந்தப் புயலால் அவ்வப்போது லேசான சாரலை வரவைக்க முடிந்திருக்கிறதே தவிர, வேறு கடுமையான பாதிப்புகளளை ஏற்படுத்தியதே இல்லை. இந்தப் புயல் வலுவாக மையம் கொண்டிருந்த மேற்கு வங்கத்தில் கூட, ’மம்தா’ என்ற புதிய புயல் சமீபத்தில் தாக்குதல் நடத்த, பெட்டிப் பாம்பாக கடலுக்குள்ளேயே அடங்கியிருக்கிறதாம் இந்தப் புயல். இனி இந்தப் புயல், மேலெழும்பி வர வேண்டும் என்றால், புதிய சக்தி ஏதேனும் தேவைப்படும் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.

தமிழக சி.பி.ஐ. புயல்:

இதுவும், தமிழகத்தின் பழமையான புயல்களுள் ஒன்றுதான். இந்தப் புயல், மிகப் பழமையான புயல்களுள் ஒன்றாய் இருந்தாலும், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு எப்போதும் துணைப் புயலாகவே இருந்து வந்திருக்கிறது.

இந்தப் புயல், ’தமிழக சி.பி.எம்’ என்ற புயலுக்கு, துணைப் புயல் அல்ல என்று காட்டிக் கொள்வதற்காக, பெரும் பிரயத்தனம் செய்தாலும், இது சி.பி.எம்-மின் வால்ப் புயலாகவே, வானியல் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

கருணாநிதி புயல்:

தமிழகத்தை மிக மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கியதில், இந்தப் புயல் மிக மிக முக்கியமான புயல். தஞ்சை அருகே, திருக்குவளை என்ற இடத்தில் இந்தப் புயல் உருவானதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முதலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, மெல்ல மெல்ல வலுவடைந்து, இன்று தமிழகம் முழுவதையும் இந்தப் புயல் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் போயஸ் தோட்டம் பகுதியிலிருந்து கருத்து தெரிவிக்கிறார்கள்.

திருக்குவளையில் உருவாகி, மெல்ல, மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து, இன்று வங்காள விரிகுடாவின் அருகே, மையம் கொண்டிருக்கிறது. இந்தப் புயல், தன்னுடைய அசாத்திய வலிமையால், தமிழ்நாட்டில், ஜனநாயக சக்திகள் என்று அழைக்கப்படும் அனைத்தையும், அனைத்து பத்திரிகைகளையும்கூட எளிதாக வளைத்து, தன்னுள் போட்டுக் கொண்டதாக இதுகுறித்து புகார் பட்டியல் வாசிக்கிறது இதன் உடன்பிறவா இன்னொரு புயலான வைகோ புயல்.

இந்த ’கருணாநிதிப் புயல்’ சென்னையில் மையம் கொண்டிருந்த போதே, தன்னுடன் பலப் பல குட்டிப் புயல்களை உருவாக்கியது. இந்தக் குட்டிப் புயல்கள், ’கருணாநிதிப் புயலை’ விட, தமிழகத்துக்கு அதிக சேதம் விளைவித்தன என்று போயஸ் தோட்டத்துப் புயல் அவ்வபோது அழுது அரற்றுவதை தடுக்க முடியவில்லையாம். பல்வேறு குட்டிப் புயல்களும் சேர்ந்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியையும், அதிக சேதத்தையும் விளைவித்துள்ளன என்று இடியோசையாக முழங்குகிறார்கள் வானிலை ஆய்வார்கள், தாயகத்தில் ஒதுங்கியபடியே.

இந்தப் புயல் எப்போது கரையைக் கடக்கும், எப்போது நமக்கெல்லாம் விமோசனம் பிறக்கும் என்று, தமிழக மக்கள் வேண்டாத நாளில்லை என்கிறது ஜெயலலிதா புயல். ஆனாலும், இந்தப் புயல் இப்போதைக்கு கரையை கடக்காது என்று வானியல் ஆய்வர்கள் அடித்து ஆரூடம் சொல்கிறார்கள்..


மற்ற புயல்களுக்கு இல்லாத ஒரு குணம் இந்தப் புயலுக்கு உண்டு. மற்ற புயல்கள் வந்து, மையம் கொண்டு, போதுமான சேதாரங்களை விளைவித்து விட்டு நகர்ந்து விடும். ஆனால், இந்தப் புயல், தமிழகத்தில் உள்ள பல்வேறு வானியல் ஆய்வறிஞர்களான, ஜெகதரட்சகன், கமலஹாசன், ரஜினிகாந்த், வாலி, வைரமுத்து, போன்றவர்கள் எப்போதும் இந்தப் புயலைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பும் தன்மை கொண்டதாக இருப்பதால், இந்தப் புயலைச் சுற்றியே இந்த வானிலை ஆய்வாளர்கள் திரிந்து கொண்டிருப்பதை வாடிக்கையாக்கி இருக்கிறார்களாம்.


இப்படிப்பட்ட வானிலை ஆய்வாளர்களையெல்லாம் தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொள்வதற்காக மேலவை என்ற ஜால்ரா புயல் அரங்கத்தை விரைவில் அமைத்துக் கொள்ளவும், இந்த கருணாநிதி புயல் படாதபாடு படுவதாக தெரிவிக்கிறது போயஸ் தோட்டத்து வானிலை ஆய்வு மையம்.


இதனால் இந்தப் புயல், வாரத்தில் ஏழு நாட்களும் நேரு உள்விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம், காமராஜர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு கட்டிடம் போன்ற இடங்களில் மாலை நேரங்களிலும், காலையில், புதிய தலைமைச் செயலக கட்டிட வளாகத்திலும் மையம் கொண்டிருப்பதை வழக்கமாக்கி விட்டதாம்.

அடுத்த மாதம் இந்தப் புயல்... வடக்கு நோக்கி நகர்ந்து, கோவை கொடீசியா அரங்கில், ஒரு வார காலம் மையம் கொண்டிருக்கும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை இருந்தை விட, கடந்த 2006-ம் ஆண்டிலிருந்து இந்தப் புயலும், இதனுடன் இருக்கும் குட்டிப் புயல்களும் விளைவித்த சேதம் அதிகம் என்பதால், எப்போது இந்தப் புயல் கரையைக் கடக்கும் என்பதில் தமிழக மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருப்பதாக போயஸ் தோட்டம் பகுதியில் ஒதுங்கிய வானிலை ஆய்வாளர்கள் அங்கலாக்கின்றனர்.


ஜெயலலிதா புயல்:

இந்தப் புயல், 1991-ம் ஆண்டு, முதன் முதலில் தமிழகத்தை பலமாகத் தாக்கியது. இந்தத் தாக்குதலில் தமிழகம் அடைந்த சேதத்துக்கு அளவே இல்லை. 1991-ம் ஆண்டு, தமிகத்தில் மையம் கொண்டிருந்த இந்தப் புயல், ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு பலத்த சேதத்தை உருவாக்கியது.


இந்தப் புயலின் சிறப்பம்சம், துணைப் புயல் இல்லாமல் கடலை விட்டு வெளியே வரவே வராது. 1991-ம் ஆண்டிலிருந்து, 1996-ம் ஆண்டு வரை, இந்தப் புயல் விளைவித்த சேதங்களை விட, இதன் உடன் இருக்கும் துணைப் புயலும், அந்தத் துணைப் புயலுக்கு, துணையான மற்ற புயல்களும் விளைவித்த சேதமே மிக அதிகம் என்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.


1996-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ வந்து, இந்தப் புயலை வலுவிழக்கச் செய்தது. வலுவிழக்கச் செய்ததும், இந்தப் புயல், மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்று வானியல் ஆய்வர்கள் தெரிவித்த கருத்தை பொய்யாக்கும் விதமாக, மீண்டும் பலமாக தமிழகத்தை 2001-ம் ஆண்டு தாக்கியது. அந்தத் தாக்குதலில், ’கருணாநிதிப் புயல்’ நிலை குலைந்து போனது. 2001-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் மையம் கொண்ட ஜெயலலிதா புயல், அரசு ஊழியர் குடியிருந்த பகுதிகளில் பலத்த சேதத்தை விளைவித்ததால், கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்க தொடங்கியது. 2006-ம் ஆண்டு, ’கருணாநிதிப் புயல்’ மீண்டும் இந்தப் புயலை வலுவிழக்கச் செய்து, தமிழகத்தில் இடியுடன் கூடிய பலத்த சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கி, இன்றுவரை இடியை கிளப்பிக் கொண்டே இருக்கிறது..


இந்த ’ஜெயலலிதா புயல்’ மீண்டும் தமிழகத்தில் மையம் கொள்ள வாய்ப்பு இருப்பதாக பெசண்ட் நகர் ஏரியாவிலிருந்து வானியல் ஆய்வாளர்கள் ஆசையை வெளிப்படுத்துகிறார்கள். 1996-ல், இந்தப் புயல் மீண்டும் தமிழகத்தை தாக்க வாய்ப்பே இல்லை என்ற அறிஞர்களின் கூற்றை பொய்யாக்கி, தமிழகத்தை 2001-ல் தாக்கியது போலவே மீண்டும் நடக்கக்கூடும் என்றும் நடராஜராக நர்த்தனமாடி தங்கள் கருத்தைத் தெரிவிக்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.


இந்தப் புயல்,பெரும்பாலான நாட்களில், கொடநாடு போன்ற மலைப் பிரதேசங்களில் மையம் கொண்டிருப்பதோடு, அவ்வபோது சிறுதாவூரிலும் மையம் கொள்வதால், சட்டென வலுவிழந்து தமிழகத்தை தாக்கும் வாய்ப்பு இல்லாமல் போகிறது என்றும் புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்தப் புயல், மீண்டும் பெரும் புயலாக வந்து, ’கருணாநிதிப் புயலை’ வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்றால், கூட இருக்கும் சக புயல்களை அனுசரிப்பதோடு, தாக்கவேண்டும் என்கிற ஒரே இலக்கோடு கடலிலிருந்து புறப்பட்டு வந்து கடலைக் கடக்க வேண்டும் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். அது நடந்தால், இந்தப் புயலுக்கு ‘லைலாவுக்கெல்லாம் லைலா...’ என்று பெயர் சூட்டுவோம் என்றும் சொல்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.


நன்றி - நாம்தமிழர்

Thursday, May 20, 2010

செம்மொழி மாநாடு தமிழ் வளர்ச்சிக்கா? கருணாநிதியின் விளம்பரத்திற்கா?


தமிழ்நாட்டில் தமிழிலேயே படிக்காமல் மழலை முதல் உயர்கலவி வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், தமிழே தெரியாமல் அண்டை மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலம் மொழி வழிகளிலேயே படிக்கிற வாய்ப்பு தமிழகத்தில் உள்ளது ஆனால், மருத்துவ படிப்பு மற்றும் உயர் கல்விகளே தமிழிலில் படிக்க வழியில்லை.


தமிழகத்தின் உயர் வழக்கு மன்றத்திற்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம், என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் இன்னும் மாற்றவில்லை அதிலும் தமிழில் பேச தர்க்கமிட முடியாது.

தமிழக அரசு அலுவலகங்களில் கூட தமிழில் ஆட்சி நடைமுறைகள் முழுமையாக இல்லை. தமிழகத்தில் இருக்கிற இந்திய அரசு அலுவலகங்களில் தமிழகமே நுழைய முடியாது.

வங்கிகளில் தமிழ் இல்லை, வழிபாட்டில் தமிழ் இல்லை இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவர வேண்டுமான முயற்சி திராவிட கட்சிகளிடம் இல்லை. முத்தமிழ் அறிஞர், ஐந்தமிழ் அறிஞர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் கருணாநிதிக்கு தமிழனைத் தமிழில் படிக்க வைக்க முடியவில்லை.

தில்லியில், மும்பையில் ஓடும் வண்டிகளில் இந்தியில் எண்கள் உள்ளன. கருநாடகத்தில் கன்னடத்தில் எண்கள், குஜராத்தில் குஜராத்திதியில் எண்கள், வங்காளத்தில் வங்காள மொழியில் எண்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தமிழில் எண்கள் எழுதினால் விதி மீறல் என்று சிறைப்படுத்துகிறது தமிழக அரசு.

தமிழினத் தலைவர் ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்தும் தமிழை கல்வி மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ நடைமுறைப்படுத்த இயலவில்லை என்றால் அவர் எதை நோக்கி மாநாடு அறிவிக்கிறார்.

செம்மொழி என்று இந்திய அரசு தமிழை ஏற்றிருப்பது சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கூட அல்ல.

ஆண்டுதோறும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி உருவாய் ஒதுக்குகிற இந்திய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு ஒரு கோடி மட்டும் ஒதுக்குகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்தால் தமிழ் எந்த அளவு இழிவுக்குள்ளாக்கப்படுகிறது என்பது தெரியும்.

தமிழக மக்களின் வாயை அடைப்பதற்கு தமிழைச் செம்மொழி என்கிற அறிவிப்பை ஒப்புக்கு இந்திய அரசு செய்திருக்கிறது என்றால், அதற்கு விழாச் சிறப்பு மாநாடு நடத்தி பெருமைப்பட்டுக் கொள்வது தமிழர்களின் காதுகளில் பூச்சுற்றவே அல்லாமல் வேறொன்றும் இல்லை.

மொத்தத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஏதும் செய்ய இயலாத கலைஞர் கருணாநிதி, தமிழுக்குச் செய்ததாய் விளம்பரம் தேடிக் கொள்வதற்குத்தான் இந்த மாநாடு.

இப்படி விளம்பரம் தேடத் தான் இந்த மாநாடு பயன்படும் என அறிந்தே உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினர் 9 ஆம் உலகத் தமிழ் மாநாட்டினை இப்போது நடத்த இசைவு தரவில்லை.

அந்த தோல்வியை மறைப்பதற்காக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் புதிதாக ஒரு தலைப்பை உருவாக்கிப் புது வேடம் கட்டித் தன் காட்சித் திரையை இறக்குகிறார் கருணாநிதி.

ஆக, தமிழ் வளர்ச்சிக்குரிய மாநாடு இது இல்லை என்பதும் கலைஞர் கருணாநிதி தம் விளம்பரத்திற்கு நடத்திக் கொள்ளும் மாநாடு என்பதும் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.

நாம் தமிழர்.

Wednesday, May 19, 2010

நெஞ்சில் ஈரமில்லை

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் எந்தவிதமான விதிமுறை மீறல்களும் இல்லை என்று திரும்பத் திரும்பத் தமிழக அரசு விளக்கம் அளித்தபோதிலும்,​​ கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.​ இப்போது திட்டம் தொடங்கப்பட்டு,​​ பணிகள் நடைபெற்றுவரும் நேரத்தில்,​​ இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் ​ தொடுக்கும் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது கர்நாடக அரசு.
கர்நாடக மாநிலத்தின் நீர்த் தகராறு வழக்குகளைக் கவனித்துவரும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் எப்.எஸ்.​ நாரிமன்,​​ ஒகேனக்கல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்று ஆலோசனை வழங்கியிருப்பதாகவும்,​​ அதே கருத்தை மாநில அரசு நிறுவியுள்ள சட்ட வல்லுநர் குழு கூறியிருப்பதாகவும்,​​ அதனால் கர்நாடக அரசு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு,​​ எதிர்ப்புத் தெரிவித்து வழக்குத் தொடுப்பது உறுதி என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இச்செய்திகள் வெளியான அதே நாளில்,​​ தமிழகத் துணை முதல்வர் மு.க.​ ஸ்டாலின் இக் குடிநீர் திட்டப் பணிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது,​​ எந்தவித விதிமுறை மீறலும் இல்லை என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.​ ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் காவிரியிலிருந்து பெறப்படும் நீரின் அளவு 1.4 டிஎம்சி மட்டுமே.​ கர்நாடக அரசு கூறுவதைப்போல,​​ 2.5 டிஎம்சி தண்ணீர் எடுக்கும் திட்டம் ஏதுமில்லை.​ மேலும்,​​ இந்த 1.4 டிஎம்சி அளவு என்பது,​​ தமிழகத்துக்கான நீர்ப் பங்கீட்டிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் என்று இத்தனை தெளிவாகப் பதில் அளித்த பிறகும்,​​ கர்நாடக அரசு,​​ உச்ச நீதிமன்றத்தை அணுகினால்,​​ அது நீர்த்துப்போன அரசியலைக் காட்டுவதாகவே அமையும்.
1998-ல் ஜே.எச்.​ பாட்டீல் முதல்வராக இருந்தபோது கர்நாடக அரசுக்கும்,​​ தமிழ்நாடு அரசுக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில்,​​ தமிழகம் தனது நீர்ப் பங்கீட்டில் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதில் கர்நாடகத்துக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை என்று தெரிவித்த கருத்தை,​​ இப்போது கர்நாடகமே மறந்துவிட்டு,​​ அரசியலாக்கப் பார்க்கிறது.
கர்நாடக அரசின் இத்தகைய ஒப்புதல்,​​ 1998-ம் ஆண்டு கூட்ட நடவடிக்கைக் குறிப்பில் இடம்பெற்றுள்ளதால்,​​ தற்போது கர்நாடக அரசு தெரிவிக்கும் எதிர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் அதிக முக்கியத்துவம் தராது என்று சட்ட வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தாலும்,​​ கர்நாடக அரசு இப்பிரச்னையுடன் இன்னொரு பிரச்னையையும் முடிச்சுப் போட்டுத்தான் நீதிமன்றத்தில் வழக்காடப் போகிறது.​ அதாவது,​​ தற்போது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்காக கிணறுகள் அமைக்கப்படும் இடம் கர்நாடக எல்லைக்குள் அமைந்துள்ளது.​ எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் கிணறுகள் அமைத்தல் கூடாது என்பதுதான் கர்நாடக அரசின் முக்கிய வாதமாக இருக்கும் என்று தெரிகிறது.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியைக் காண வரும் சுற்றுலாப் பயணிகளால் கர்நாடக அரசுக்கும்,​​ கர்நாடக வியாபாரிகளுக்கும் வருவாய் கிடைக்கச் செய்வதற்காக ஆண்டுதோறும் ​ எழுப்பப்படும் எல்லைப் பிரச்னை நாடகம்,​​ இப்போது தேவையில்லாமல் குடிநீர்த் திட்டத்துக்கு எதிராக நடத்தப்படவிருக்கிறது என்பதை நினைத்துப் பார்த்தாலே வேதனையாக இருக்கிறது.
கர்நாடகத்தின் உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சாரியா ஒரு பேட்டியில் இப்பிரச்னை குறித்துப் பேசுகையில்,​​ ""ஒகேனக்கல்லில் கர்நாடகம் புனல் மின்நிலையம் அமைக்க தமிழ்நாடு சம்மதிக்குமேயானால்,​​ நாங்களும் இந்தக் குடிநீர்த் திட்டத்துக்குச் சம்மதிப்போம்'' என்று கூறியுள்ளார்.​ இவர்கள் நோக்கம் என்னவென்று இப்போது தெரிந்துகொள்ளலாம்.​ எந்தப் பிரச்னையை எதனுடன் தொடர்புபடுத்துவது!
காவிரியிலிருந்து எடுக்கப்படும் 1.4 டிஎம்சி தண்ணீர் விவசாயத்துக்காக அல்ல,​​ குடிநீருக்காக.​ அந்தத் தண்ணீரைக் கொண்டு மேலும் பல லட்சம் ஆயக்கட்டுதாரர்கள் சாகுபடிப் பரப்பை அதிகரித்துவிடுவார்களோ என்ற ஐயத்துக்கு அவசியமே இல்லை.​ இந்தத் தண்ணீரும் தமிழகத்தின் நீர்ப் பங்கீட்டுக்குள் அடங்குவது.​ இந்தப் புள்ளிவிவரங்களை விட்டுத் தள்ளுவோம்.​ இந்தத் தண்ணீர் இரு மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் ​ மக்களின் குடிநீர்த் தேவையைத் தீர்ப்பதற்காக.​ இந்த மாவட்ட மக்கள் நல்ல குடிநீர் இல்லாத ஒரே காரணத்தால் நிலத்தடி நீரைக் குடித்துக்குடித்து ஃபுளோரஸிஸ் என்கிற நோய்க்கு ஆளாகி,​​ பற்சிதைவுகளுக்கு ஆட்பட்டு வாடுகிறார்கள் என்பதைக் கருதியாவது,​​ குறைந்தபட்ச மனிதாபிமானத்துக்காகவாகிலும் கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் நெஞ்சில் ஈரத்துடன் செயல்படலாமே.
தமிழ்நாட்டில் ஃபுளோரஸிஸ் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் 10 மாவட்டங்களில் கிருஷ்ணகிரி,​​ தருமபுரி இரு மாவட்டங்களும் உள்ளன.​ இந்த மக்களுக்கு நல்ல குடிநீர் அவசியத் தேவை.​ அதைக் கருத்தில்கொண்டுதான்,​​ ஃபுளோரஸிஸ் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கையாகத்தான்,​​ ஐப்பான் வங்கி இத்திட்டத்துக்கு ரூ.1,334 கோடிக்கும் அதிகமாக நிதியுதவி அளிக்கிறது.
தவிக்கிற வாய்க்குத் தண்ணீர் கொடுக்க இத்தனை பாடா?​ ​
அயல்நாட்டான் நெஞ்சில் கசியும் ஈரம்கூட அண்டை மாநிலத்தானுக்கு இல்லை என்றால்,​​ அதனை என்னவென்று சொல்லலாம்?​​

Tuesday, May 18, 2010

நாம் தமிழர் கட்சி: புலிக்கொடி ஏற்றி வீரவணக்கம்






இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா செவ்வாய்க்கிழமை மாலை மதுரையில் நடந்தது. பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக உதயமானது.

செவ்வாய்க்கிழமை மாலை, மதுரை ரிங் ரோடு அருகே உள்ள மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் நாம் தமிழர் கட்சி, பாயும் புலி கொடியோடு உதயமானது.


மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மற்றும் காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தனர்.


பின்னர், ஈழப் போர்க்களத்தில் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த மக்களுக்கும் போராளிகளுக்கும் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அடுத்து, சீமான் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியை சீமான் படிக்க, தொடர்ந்து கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் அதைத் திருப்பிச் சொன்னார்கள்.

Sunday, May 16, 2010

வித்தாகிய எம் பிள்ளைகளை மறந்தோம்; மடிந்த எம் மக்களை மறந்தோம்; மொத்த ஈழத்தையுமே மறந்தோம்; இருப்பவரின் எதிர்காலம் கருதியாவது நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டாமா?




ஆயுதப் போராட்டம் ஓய்ந்து ஆண்டொன்றை எட்டி நிற்கிறது. எத்தனையோ துன்பங்கள், துயரங்களை கடந்தும் எந்தக் குறிக்கோளையும் எட்டாமலே இறுதி முடிவை எட்டிவிட்டது ஆயுதப் போராட்டம். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வன்னி மண்ணில் அரங்கேறிய கொலை வெறியாட்டம், நம் இனத்தின் வாழ்வாதார ஆணி வேர்களையே அடியோடு சாய்த்துவிட்டது.


மூன்று லட்சம் மக்களின் உயிர்களோடு விளையாடியது இந்த உலகம். மனித குலத்தின் பண்புகளுக்குள் அடங்காத அரக்கத்தனத்தை இலங்கை அரசும், அதன் படைகளும் தமிழ் இனத்தின் மேல் கட்டவிழ்த்து விட்டபோது இந்த உலகமே கைகட்டிப் பார்த்து நின்றது. ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் உண்மையான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக எடைபோட்டு, எப்படியும் அடக்க வேண்டும் என்ற ஒரு கோணத்திலேயே சிந்தித்தது இந்த உலகம். ஆண்டாண்டு காலமாக ஒரு கொடிய அரசின் அடக்கு முறையால் அல்லலுறும் மக்களைப் பற்றி அவர்கள் அக்கறைப்படவே இல்லை. அரசுக்கு அரசு என்ற ஆதரவுத் தளத்திலேயே அவர்கள் நின்றிருந்தார்கள்.

உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டங்கள் தோற்றுவிட்ட நிலையிலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்பதும், ஆயுத சமபலத்தின் வாயிலாகத்தான் பேரம் பேசல் மூலம் உரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற யதார்த்த நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டதும், அதற்கான கட்டமைப்புகள் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டதும் வரலாறாகிவிட்டன. ஒரு நாட்டுக்குத் தேவையான அத்தனை கட்டமைப்புகளையும் குறிப்பிட்ட காலம்வரை தம்மிடம் வைத்திருந்தவர்கள் புலிகள். பொலிஸ் நிர்வாகம், நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாகம், தரைப்படை, கடற்படை, விமானப்படை என்று அத்தனையும் கொண்ட ஒரு அரச நிர்வாகம் இறுதிக் காலம் வரை இயங்கி வந்ததை எவரும் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட ஒரு தனித்துவத்தை எட்டுவது அவ்வளவு இலகுவான விசயம் அல்ல என்பதை இந்த உலகமே அறிந்திருந்தது. ஆனாலும், அந்த வலிமையை பெற்றுக் கொண்டதனால் ஏற்பட்ட அதீத நம்பிக்கைதான் புலிகளின் வீழ்ச்சிக்கு வித்திட்டதோ! என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

புலிகளை அழித்தது சர்வதேச பயங்கரவாதம்!

புலிகளின் வளர்ச்சியை மேற்குலகமும், இந்தியாவும் விரும்பவில்லை என்பதன் விளைவே புலிகளின் வீழ்ச்சியாகும். தமிழ் மக்களின் போராட்ட நியாயங்களை புரிந்து கொண்டாலும் கூட புலிகள் போன்ற ஒரு கட்டுக்கோப்பான, அதிசக்தி வாய்ந்த, வசதி படைத்த ஒரு இயக்கத்தை ஆதரிக்க அவர்கள் மட்டுமல்ல இந்தியாகூட தயாராக இருக்கவில்லை. அதனால்தான் ஆயிரக் கணக்கான மக்களை இலங்கை அரசு கொன்றொழித்த போதும், இறுதிநேரத்தில் புலிகள் முற்றாக சிதைவடையும்வரை இவர்கள் பார்த்து நின்றார்கள். மகிந்த அரசின் அலட்சியப் போக்கையும், அதிகார வெறியையும் இப்போது உணர்ந்துகொண்டு, போர் குற்றம்பற்றி ஓலமிடும் மேற்குலகம், அன்று தன் நெற்றிக் கண்ணை திறந்திருந்தால், எத்தனையோ உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். வெளிநாடுகளில் வாழும் எம்மைப் பொறுத்தவரை, பத்து லட்சம் தமிழரை வாழ வைப்பவர்கள் என்ற நன்றிக் கடனுக்காக இவர்கள் செய்த துரோகத்தை மறக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.

கொடூரத்தின் உச்சம்!

கடந்த வருடம் இதே காலப் பகுதியில் தமிழனுக்கு நடந்ததை போன்ற கொடுமைகள் வேறு எந்த ஒரு இனத்துக்குமே இந்த நூற்றாண்டில் நடக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு அராஜகத்தின் உச்சம் இலங்கையில் அரங்கேறியது. மூன்று லட்சம் மக்களை ஒரு மூலைக்குள் ஒதுங்க வைத்து பட்டினி போட்டு, குண்டுகளை வீசி மரணிக்கவும், உடல் அவயவங்களை இழக்கவும், கர்ப்பிணி தாய்மாரும், சிறுகுழந்தைகளும், வயோதிபர்களும் உடல் சிதறி மாண்டு போகும்படியான கொடூரத்தை இலங்கைப் படைகள் செய்வது தெரிந்தும் பார்த்து நின்றது இந்த உலகம். ஆயிரக் கணக்கில் மண்ணோடு மண்ணாக உயிரோடு மாண்டுபோன எமது மக்களை நினைக்கையில் உள்ளம் பதறுகிறது. என்ன பாவம் செய்தார்கள் நம் மக்கள்? உரிமையைத் தாருங்கள் என்று கேட்டுப் போராடியதற்கா இந்தத் தண்டனை. புலிகளை வென்றதாக வீரம் பேசுகிறது சிங்கள அரசு. அது உண்மை தான், மறுப்பதற்கில்லை. ஆனால் தனித்து நின்றா வென்றீர்கள்? பயங்கரவாதம் என்ற உங்கள் பொய்யான வார்த்தைகளை நம்பி உலக வல்லரசுகளே உங்கள் பின்னால் நின்றனவே. ஒரு சிறிய இயக்கத்தை அழிப்பதற்கு இத்தனை நாடுகளின் உதவி உங்களுக்கு தேவைப்பட்டதே! நேரடியாகவே உங்களோடு அயல்நாட்டு இராணுவம் களத்தில் நின்றதே! தனித்து நின்று வென்றீர்கள்? அன்னியப் படைகளின் உதவியோடும், ஆள் கொல்லி ஆயதங்களோடும், ஆயிரக்கணக்கில் மக்களை கொன்று குவித்துத்தானே இறுதி வெற்றியை நீங்கள் பெற்றீர்கள். அதிஉச்ச அழிவுகளை செய்தாவது வெற்றி பெறவேண்டும் என்ற அசுரத்தனமான உங்கள் இனவாதச் சிந்தனைதான் உங்களை வெல்ல வைத்திருக்கிறது. நீங்கள் தமிழ் மக்களை கொன்றதிலும் பார்க்க, அதிக அளவு சிங்களப் பொதுமக்கள் இறக்கும் நிலை இறுதி நேரத்தில் உருவாக்கப்பட்டிருந்தால், போரின் திசை மாறியிருக்கும் என்பதை மார்தட்டுபவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

வன்னிப் பெருநிலம் சிறுபான்மை நிலமாகிறது!

எது எப்படியோ, போர் முடிந்துவிட்டது! புலிகள் இலங்கையில் இல்லை என்றாகிவிட்டது. அப்படியிருந்தும் தமிழ் மக்களுக்கு நிம்மதி கிடைத்துவிட்டதா? இன்னமும் வலியை சுமந்து கொண்டுதானே தமிழன் வாழ்கிறான். தமிழினம் சிதைவைக் கண்டு பன்னிரண்டு மாதங்கள் ஆகின்றன. இவ்வளவு தூரம் தமிழனுக்கு அழிவைத் தந்த சிங்களவர் மனதில் சிறுதுளி இரக்கமாவது பிறந்திருக்கிறதா? ஒருவருட இடைவெளியில் மூன்று நான்கு தேர்தல்களை வைத்து மக்களை பிரித்தாள நினைத்ததோடு, வெளியுலகின் பார்வையை திசை திருப்பச் செய்தார்கள். இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களில் அனேகரை அவரவர் சொந்தங்களையே நம்பி வாழ வெறுங்கையோடு அனுப்பி வைத்தார்கள். வன்னியில் கொண்டு சென்று இறக்கப்பட்டவர்கள் வாழ வழியின்றி, நிவாரணம் கூட கிடைக்காமல் தவிக்கின்றதான தகவல்கள் இப்போது வந்தவண்ணம் உள்ளன. தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு ஊர்களிலும் ஆயுதப்படைகளை நிறுத்தியிருப்பதின் மூலம் அந்த மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு போவதானால்கூட கரையெங்கும் காவல்படை. மண்சுமந்த மேனியராய் வாழ்ந்த வன்னித் தமிழினம் விதைத்து வாழ்வதற்கு கூட வழியில்லாமல் தவிக்கிறது. சிதைந்துவிட்ட வீடுகளை திருத்த வழியில்லாமல் மரத்தின் கீழ் வாழும் நிலை அவர்களுக்கு. ஆயுதப் படைகளின் இரவு நேர நடமாட்டத்தால் வெளியே தலைகாட்ட முடியாத நிலையில் பெண்ணினம். இதுவே வன்னிப் பெருநிலத்து நிலமை. தமிழ் இனத்தின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அடியோடு அழித்துவிடும் முனைப்போடு வன்னி நிலப்பரப்பெங்கும் புத்தர் சிலையும், இராணுவ நினைவுச் சின்னங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

நம் இனம் எங்கே போகிறது?

ஓராண்டு போர் வெற்றியை புதைக்கப்பட்ட தமிழ் மக்களின் புதை குழியின் மேல் நின்று கொண்டாடத் துடிக்கிறது இலங்கை அரசு. இவ்வளவுக்குப் பின்னும் இப்போது கூட தமிழ் மக்களின் வேதனைகளையும், இழப்புக்களையும் பொருட்படுத்தாது தங்கள் வக்கிரபுத்தியை வெளிக்காட்ட நினைக்கும் இலங்கை அரசு எமக்கு ஏதாவது தீர்வைத் தரும் என்று நம்பி இருக்க முடியுமா? அவர்கள் செய்யும் கொடுமைகளையும் கொலைகளையும் மறந்து மறக்கத்தான் முடியுமா? கடந்துபோனவை எல்லாம் முடிந்து போனவையாகவே இருக்கட்டும் என்று விட்டுவிட்டு இணங்கிப் போக நினைத்தால் கூட, அவர்கள் எங்களை மேலும் மேலும் துன்புறுத்துவதிலும், எங்கள் இனத்தை சிதைப்பதிலும், சமூக சீரழிவுகளை ஏற்படுத்துவதிலும், தாயகத்தின் தமிழின அடையாளத்தையும், தனித்துவத்தையும் அழித்து சின்னாபின்னமாக்கி தனிச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதையே குறிக்கோளாக கொண்டு காரியம் ஆற்றிவருகிறார்களே! இந்தக் கொடுமைகளிலிருந்து எப்படி விடுபடுவோம்? விடுபடத்தான் முடியுமா? வலிமை இல்லாமல் போய்விட்டோமே! அடிமைப்பட்ட இனமாக, சீரழிவுகள் மலிந்த ஒரு இனமாக நாம் மாறிக் கொண்டிருக்கிறோமே என்ற ஏக்கம்தான் மிஞ்சி இருக்கிறது. கடந்த ஒரு வருடத்திலேயே பிளவுபட்ட இனமாக மாறிவிட்டோம். வலிசுமந்த மக்களைப் பற்றிய சிந்தனையே அற்றவர்களாக போட்டி, பொறாமை, காட்டிக் கொடுப்பு, சொத்துச் சண்டை, பதவிப் போட்டி என்று சீரழிந்த வாழ்வுக்குள் நுழைந்துவிட்டோம் என்பதே வேதனையான விடயம்.

சிங்களவனின் திட்டமிட்ட சதி வலைக்குள் தமிழினம் விழுந்துவிட்டதற்கான அறிகுறிகளே தாயகத்தில் தெரிகிறது. அவனுக்கு உடந்தையாக இருந்து தங்கள் வயிறை வளர்க்க நினைக்கும் எட்டப்பர் கூட்டத்தின் கடத்தல், கப்பம், கொலை இன்று உச்சத்தை எட்டி, இன்று நம் இனத்தையே வதைத்து வருகிறது. இந்த நிலை உருவாவதற்கா முள்ளிவாய்க்காலில் நாம் இத்தனை உயிர்களை இழந்தோம். வலி சுமந்த இந்த மாதத்தில் உயிர் துடிதுடிக்க மடிந்தார்களே நம் மக்கள்! அவர்களை நினைத்தாவது எம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டாமா? பட்டினியால் மாண்டவர்களும், எறிகணையால் மடிந்தவர்களுமாக ஆயிரம் ஆயிரம் உறவுகளை இழந்தோமே, அவர்களின் ஆன்மாக்கள் துடித்து மாண்டதை நாம் மனமார நினைக்கின்றோமா? மாண்ட மாவீரரின் கல்லறைகளே இடிக்கப்படும்போது புதையுண்ட நம் மக்களின் புதைகுழிகள் எங்கே இருக்கப் போகின்றன? அவர்களது எச்சங்கள் சாட்சிகள் ஆகிவிடும் என்று பயந்தே தோண்டி அழித்திருப்பார்களே அந்த அரக்கர்கள்! தங்கள் உறவுகளை இழந்து இன்னமும் தவித்துக்கொண்டிருக்கும் எமது இனத்தின் சொந்தங்கள் கரைசேர முடியாமல் தவிக்கின்றனவே! அவர்களின் எதிர்காலம் கருதியாவது நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டாமா?

- க. ரவீந்திரநாதன்