Saturday, July 17, 2010

நம்பிக்கையுடன் நாம் தமிழராய் விடிவோம்..

நம் நிகழ்காலத்துக்கு முழுமையான சமகாலத்தவராக ஒரு போதும் நாம் இருப்பதில்லை. மாறுவேடத்துடனேயே முன்னேறுகிறது வரலாறு .முந்தைய காட்சியின் முகமூடியை அணிந்த படியே மேடையில் தோன்றுகிறது அது

-புரட்சிக்குள் புரட்சியில் ரெஜி டெப்ரே.


என்றுமே சமூகம் சமநிலையாக இருந்ததில்லை என்பதில் இருந்து நம் சிந்தனையை துவக்குவோம். அரை நூற்றாண்டு காலமாக போராடிய நம் தேசிய இனத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்பட்ட ஈழ சகோதர சகோதரிகள் இன்று மிகப் பெரிய பின்னடைவில் இருக்கிறார்கள். சர்வ உரிமைகளுடன் வாழ ஒரு நாடு என்ற அடிப்படை மனித தேவையை மனித விழுமியங்களை சுரண்டி கொழிக்கும் வல்லாதிக்கம் மிகத் தீவிர எதிர்க்கிறது. வல்லாதிக்கத்தின் இருப்பு எளிய இனங்களின் அழிவின் மேல் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஈழத்தின் பூர்வ குடி மக்களாகிய தமிழர்கள் ஒரு நாடு அடைய வேண்டியதற்கான அனைத்து அவசியங்களையும் ஒருங்கே பெற்றிருந்தார்கள். அவர்களின் சுதந்திர வேட்கைக்கான புள்ளி சிங்கள பேரினவாதத்தின் மீறல்களில் இருந்து எழுகிறது. உலக மானுட சமூகம் யாரும் சிந்தித்துப் பார்க்க கூட இயலா உச்சியில் அவர்களின் வீரம் செறிந்த சமரும், தியாகமும் இருந்தன. இருந்தும் உலக வல்லாதிக்கங்கள் கூட்டமைவு கொண்டு நடத்திய போரில் நம் சகோதரர்கள் தோற்றார்கள்.


ஒரு தோல்வியை தோல்வியாக உணரும் போது தான் மீள் எழுவதற்கான சாத்தியப்பாடுகளை சிந்திப்பதற்கான மன வலு கிடைக்கும். எனவே நம் தோற்றோம் என்பதை மிக நேர்மையாக ஒப்புக்கொள்வோம். தோற்றோம் என்ற சொல்லில் அவ்வளவாக உண்மையில்லை என்பதனால் இன்னும் உண்மைக்கு நெருக்கமான சொல்லாக இருக்கக் கூடிய தோற்கடிக்கப்பட்டோம் என்பதை ஒப்புக் கொள்வோம். நம் சம காலத்தில் ..நம் கண் முன்னால்.. நாம் அனைத்தையும் இழந்து தோற்கடிக்கப்பட்டோம் என்பதுதான் நம்மால் எளிதில் செரிக்க முடியாத உண்மையாக இருக்கிறது. ஆனால் தோல்விகளையும், பின்னடைவுகளையும் உலக வரலாறு வேறு மாதிரியாக கணிக்கிறது. ஒரு தேசிய இனம் தன் உயரிய இலட்சியமான இறையாண்மை உடைய ஒரு நாடு அடைவதற்கான போராட்டத்தில் பல்வேறு காலக் கட்டங்களை சந்திக்கிறது. பலவிதமான பின்னடைவுகளுடன் கூடிய தியாகங்களுக்கு மத்தியில் அப் போராட்டம் தன்னைத்தானே செழுமைப் படுத்திக் கொண்டு ,புதிய புதிய பாடங்களை கற்றுக் கொண்டு இலக்கு நோக்கி முன்னேறிக் கொண்டே இருக்கிறது.


முதலாளித்துவம் மனித மனங்களில் வரையறுத்து உள்ள எதையும் உடனே துய்க்கிற நுகர்வு மனநிலைதான் எளிய தோல்வியை கூட சந்திக்க இயலா பலவீனத்தினை பரிசாக அளித்திருக்கிறது. சம காலத்து மனிதனுக்கு எதுவும் உடனே வேண்டும் . தமிழனும் இம் மனநிலைக்கு விதி விலக்கானவன் இல்லை. முள்ளிவாய்க்கால் துயர் முடிந்து இன்னும் ஓரு வருட காலத்திற்கு பின்னரும் தமிழினம் தனக்கான பாதையை வகுத்துக் கொள்வதில் தலையாய சிக்கல் என்னவென்றால் தற்காலத்து தமிழன் கொண்டிருக்கிற நுகர்வு மனநிலை தொடர்ச்சியான பயணத்திற்கு தயாராக இல்லை என்பதுதான்.


ஆனால் மீள் எழுந்துதான் ஆக வேண்டும். ஒரு நாட்டினை இன்னொரு இனத்திடம் இருந்து மீட்பதற்கான போராட்டம் அவ்வளவு எளிதானதல்ல. இந்திய பெருந்தேசத்தின் சுதந்திர போராட்டம் இரண்டு நூற்றாண்டுகளாக நடந்து..இரு நாடுகளாக பிரிவதாக குழப்பத்தில் முடிந்தது. கியூபப் புரட்சியை லத்தீன் அமெரிக்காவில் மற்றொரு முறை நிகழ்த்திட இயலாது என்று ஒரு சொற்றொடர் உண்டு. கியூப புரட்சியின் மீது கட்டமைக்கப்பட்டுள்ள அதீத காவியத் தன்மையின் வெளிப்பாடு இது. கியூபப் புரட்சி காலக் கட்டத்தில் இருந்த சமன்பாடுகள் தற்காலத்தில் வெகுவாக மாறி விட்டன என்றாலும் அதன் ஊடாக நாம் கற்க வேண்டிய பாடங்கள் இருக்கின்றன. கியூபப் புரட்சி என்பது 12 பேரில் துவங்கி கணக்கின்றி பெருகி தலைவர் பிடல் ,தளபதி சே குவேரா போன்றோரின் சாகச உத்திகளால் வல்லாதிக்கத்தினை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டிய கதை என இரண்டு வரிகளில் இனிப்புத் தடவி கூறி விட முடியாது. கியூபப் புரட்சிக்கு தேவையான சூழலும், அகக்காரணிகளும், புறக்காரணிகளும் ஈழப் போராட்டத்திற்கு ஒப்பாகவே இருந்தன. தலைவரும், தளபதிகளும் கியூப புரட்சியாளர்களை தாண்டிய சாகசக் காரர்களாகவும், மிகு ஒழுங்கினை உடையவர்களாக இருந்தார்கள் . இருந்தும் கியூபாவில் புரட்சியாளர்கள் வெற்றியடைந்தனர். நாம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோம்.


தோல்விக்கான காரணங்களை மாசற்ற தலைமையின் மீதும் இயக்கத்தின் மீதும் போட்டு விட்டு எதிரியின் வெற்றியில் குளிர்காயும் துரோகிகளின் எழுத்துக்களை நாம் ஏறெடுத்துக் கூட பார்க்க மறுப்போம். நம் தேசியத் தலைவரின் சொல்லும் , வாழ்க்கையும் நமக்கு போதித்தது இதுதான் .எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.


ஆனால் நமக்குள்ளாக நம் மீள் எழுதலுக்கான சக்தியை பெற நடந்து முடிந்த ஈழப் போரின் வாயிலாக சில பாடங்களை கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முதலில் ஈழம் என்பது அந்நிலப்பகுதியில் வசிக்கக் கூடிய தமிழர்களுக்கான நாடு என்பது உண்மை என்றாலும் அது உலகம் முழுக்க வாழக் கூடிய தமிழர்களுக்கான நாடும் அதுதான் என்பதில் நாம் உறுதிக் கொள்ள வேண்டும் . வெறும் நிலப்பகுதியும், புறவியல் காரணிகளும் மட்டுமே ஒரு நாடாக நாம் கருதி விட இயலாது. மாறாக நாடு என்பது ஒரு உணர்ச்சி. ஒரு தேசிய இனத்தின் அடிப்படையான குணம். மனித வரலாறு நாடுகளை அடையும் போராட்டங்களாகத்தான் பகுக்கப்பட்டிருக்கிறது. எனவே ஈழம் என்ற ஒற்றைக் கனவினை சுமக்க உலகில் வாழும் 12 கோடி தமிழர்களின் விழியும் தயாராக வேண்டும்.


அடுத்து . நம் தேசியத் தலைவர் மீது நாம் வைத்திருக்ககூடிய விசுவாசம். இன்றளவும் சிங்களன் திகைப்பது இதில் தான். நம் தேசியத் தலைவர் கொல்லப்பட்டார் என்று கூறி ஒரு உடலையும் காண்பித்து விட்ட பிறகு கூட உலகமெங்கும் பரவி வாழக் கூடிய நம் இன மக்கள் அதை நம்பக் கூட மறுத்து ஒற்றை அலைவரிசையில் ஒரே குரலாய் எம் தலைவர் சாக வில்லை என்று உரத்தக் குரலில் முழங்கினோமே…அது தான்.. அந்த விசுவாசம் தான் எதிரி அடைந்திருக்கும் வெற்றியில் கூட பதட்டமாக வைத்திருக்கிறது. இந்த உலகம் கண்டிராத ஒரு மாபெரும் வீரனை.. உலக இலக்கியங்களின் சாறாய் தொகுத்த நற்பண்புகள் உடையவனை.. தம் மொழியின் மேல் ,தம் இனத்தின் மேல் தன் உயிரைக்காட்டிலும் மதிப்பு உடையவனை நாம் தலைவராக அடைந்திருக்கிறோம். இன்றளவும் பிரபாகரன் என்ற பெயர்தான் உலகம் முழுக்க பரவிக் கிடக்கின்ற தமிழர்களை இணைக்கிற…இயக்குகிற சொல். தொன்மை வாய்ந்த தமிழினத்தின் உயரிய பெருமிதம் நம் தேசியத் தலைவர் அவர்கள் . அவரின் மீதான நம் பற்றையும் ..விசுவாசத்தினையும் நாம் தலைமுறைகளாக கடத்திப் போவோம். வீட்டுக்கு வீடு பிரமாண்டமாய் அவரது புகைப்படங்களை நாம் மாட்டுவோம். நம் பிள்ளைகளுக்கு அவரை நம் அண்ணனாக காட்டுவோம். பிள்ளைகள் அவரை பெரியப்பா என்றே அழைக்கட்டும். நம் தேசியத் தலைவர் இல்லாத தமிழன் வீடு இல்லை என்ற மிகப் பெரிய தோற்றத்தினை உருவாக்குவோம்.. நம் வீட்டு விழாக்களில் அவரையே விழா நாயகனாக முன் நிறுத்துவோம் . திருமண அழைப்பிதழ்களில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வாழ்த்துகளோடு என்று அச்சிடுவோம். நம் குழந்தைகளுக்கு இரவில் பயம் வந்தால் தேசியத் தலைவரை நினைத்துக் கொள் எனக் கூறுவோம். தேர்வுக்கு முன்னால் தலைவரை நினைத்து விட்டு போ என்று அறிவுறுத்துவோம். நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியிலும் அவரின் பங்கு இருக்கட்டும்.


அடுத்து நம் மரபின் மேல் , நம் மொழியின் மேல் ஆழ்ந்த பற்றும், மதிப்பும் உடையவர்களாக மாறுவோம். உலகின் எந்த மூலையில் நாம் வசித்தாலும் நம் குழந்தைகளை தமிழில் அப்பா, அம்மா என அழைக்கச் சொல்வோம். பண்டிகை காலங்களில் வேட்டி கட்டுவோம். தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் சந்தித்துக் கொண்டால் நம் மொழியில் வணக்கம் , நன்றி எனச் சொல்வோம். கூடிய மட்டும் பிற மொழிக் கலப்பின்றி பேசுவோம்.


இப்படிப்பட்ட பிடிவாதம் மிக்க நிபந்தனைகளின் பேரில் தான் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் . ஒரு தோற்ற சமூகம் எப்படி மீள் எழக் கற்றது என்பதனை நம் எதிரிக்கு உதவிய இஸ்ரேலில் இருந்து கற்போம். அடுத்தாண்டு இஸ்ரேலில் சந்திப்போம் என்ற அவர்களது ஆழ்ந்த நம்பிக்கைதான் அவர்களுக்கு இஸ்ரேலை பெற்றுத் தந்தது. எனவே நாமும் அடுத்தாண்டு ஈழத்தில் சந்திப்போம்.


தாயக தமிழர்கள் இனி திராவிடர்களாக அடையாளம் காட்டப்படுவதை பெரும் கோபங் கொண்டு மறுப்போம். திராவிடமும்,இந்தியமும் தான் எங்களை வீழ்த்தின என்று உரத்தக் குரலில் சொல்வோம். சாதீயம் பேசி அரசியலுக்காக அணி மாறிக் கொண்டு பேரம் பேசும் போலிமைகளை புறக்கணிப்போம். சமூகத்தினுள் ஆழமாக புரையோடிப் போன சாதீயத்தினை வெல்ல இனம் வாயிலாக ஒன்று படுவதை அவசியமாக கொள்வோம் . நாம் வாழ நாம் நதி ஆள்வோம். தர மறுக்கும் அயலானுக்கு நாமும் எதையும் தர மறுப்போம். நம் இனத்து ஆளுமைகள் ஏராளம் இருக்கையில் மாற்றான் இனத்து ஆளுமைகளை முன் நிறுத்தும் அபத்தம் ஒழிப்போம். நம் நாட்டினை நாம் ஆள வேண்டும். குறைந்த பட்சம் ஆள்பவனை தீர்மானிக்கும் சக்தியை நாம் பெறும் வல்லமையை நாம் பெற வேண்டும் . அதற்காக தான் நாம் தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும் . அமைப்பு ரீதியாக ஒன்றிணைந்து குடும்பமாக இறுகி ..பல்கி பெருகிய கூட்டமாய் அதிகாரத்தினை நோக்கிய பயணத்தினை துவக்க வேண்டும். நம் மொழிக்கும், நம் மக்களுக்கும் இன்னல் இழிவென்றால் சீற்றம் கொண்டு கேட்க வேண்டும். சினம் மறந்த இனம் பிணம். நமக்குள் நம் தொன்ம மரபின் வாயிலாக பெற்றிருக்கிற அற சீற்றப் பண்பை நாம் அவ்வப் போது பயன்படுத்திட வேண்டும். மதுவிற்கும் ,தொலைக்காட்சிக்கும், காசுக்கும் மயங்கும் மாண்பினை கைவிட வேண்டும். நமக்கான உரிமைகளை எதன் பொருட்டும் யாருக்கும் விற்கவோ ,அடகு வைக்கவோ கூடாது. தமிழை வாழ வைப்போம். தமிழனையே ஆள வைப்போம்.


தமிழின இளைஞர்கள் மற்ற இனத்து இளைஞர்களை விட அதிகமாக உழைக்க வேண்டும். நாம் அடைந்த தோல்வி நம்மை வன்மம் கொள்ள வைத்திருக்கிறது. நமக்கான .. நம் இனத்திற்கான ..பொருளாதார முன்னேற்றத்தினை அடைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும். இரவு பகல் பாராது உழைக்க வேண்டும். மற்ற இனத்தவரைக் காட்டிலும் நம் திறமையை அதிகம் உபயோகித்து பொருள் சேர்க்க வேண்டும் . நம் வருமானத்தில் நம் இன மானம் காக்க ஒரு குறிப்பிட்ட தொகையை மாதம் தோறும் ஒதுக்கி இன நலப் பணிகளுக்கு செலவிட வேண்டும்.


உடல் முழுக்க காயங்களோடு..ரத்தம் வழிய வழிய… தீரா வன்மத்துடன் ..ஒரு மிருகம் போல நாம் நின்று கொண்டிருக்கிறோம். எதிரி எக்காளம் வழிய ஏளனம் பேசுகிறான். நம்முடன் இருந்தவர் பிழைக்க துரோகிகளாக மாறி எதிரியின் காலை நக்கிக் கொண்டிருக்கும் வேளை இது. நாம் பொறுமையாக காத்திருப்போம். காத்திருப்பு என்பது ஒய்வல்ல. மாறாக வலுவோடு தாக்க நமக்கு கிடைத்திருக்கும் இடைவேளை. தருணம் பார்த்து தாக்குவோம். தாக்குதல் என்பது இனி நேருக்கு நேரல்ல. மாறாக நம் போர் வாக்காய், வாழ்க்கையாய், பேச்சாய், செயலாய், முழக்கமாய், எண்ணமாய் , கனவாய், நினைவாய், ஆற்றலாய், அறிவாய்., தெளிவாய், கொள்கையாய், கோட்பாடாய், விரியட்டும் . எதிரியின் கழுத்து நம் கூரிய பற்களுக்கு அருகில் தான் என்பதனை நம் அறிவு தெளியட்டும்.


கொலை வாளினை எடடா .


நாம் தமிழர்.


-- மணி செந்தில்...

Thursday, July 15, 2010

ரூபாய்க்கான அடையாள சின்னம் உருவாக்கிய தமிழர்



அம்பிகா சோனி தலைமையிலான அமைச்சரவையால் நேற்று(15ந்தேதி) ஏற்றுக்கொள்ளப்பட்ட , இந்திய ரூபாய்க்கான புதிய அடையாள குறியீட்டை வடிவமைத்த த.உதயகுமார் சென்னைத் தமிழர் ஆவார்.


ஐ.ஐ.டி முதுநிலை பட்டதாரி மாணவரான த.உதயகுமார், சென்னை தண்டையார் பேட்டை கார்ப்பரேசன் காலனி 4வது தெருவைச் சேரந்தவர். இவரது தந்தை, ரிஷிவந்தியம் தொகுதியின் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏவும், மு.க.அழகிரி பேரவையின் தலைவருமான தர்மலிங்கம் ஆவார். தாயார் பெயர் ஜெயலட்சுமி ஆகும். உதயகுமார், 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 10ந் தேதி பிறந்தார்.

இவர்களது பூர்வீகம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் என்பதாகும்.

உதயகுமாருக்கு, ராஜ்குமார் என்ற அண்ணனும், விஜயகுமார்,மற்றும் விஜயகுமாரி என்ற தம்பி, தங்கையும் உள்ளனர். இவர்களில் விஜயகுமாரிக்கு மாட்டும் கல்யாணம் ஆகியுள்ளது. அண்ணன் ராஜ்குமார் ஷார்ஜாவில் என்ஜீனியராக பணியாற்றி வருகிறார்.

ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உள்ள விஜயகுமார், ஓவியத்திற்காக பல பரிசுகளைப் பெற்று உள்ளார்.

உதயகுமார், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லாசேட்லியர் உறைவிட ஜூனியர் கல்லூரியில் +2வரை படித்தார். பின்னர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். உதயகுமார், பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.

அதன் பிறகு, மும்பை ஐ.ஐ.டியில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேசன்) முதுகலை பட்டம் பெற்று உள்ளார். இவர், சில நிறுவனங்களுக்கு டிசைன் வடிவமைத்து கொடுக்கும் பணிகளையும் செய்து வந்தார்.

இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு அறிவித்த ரூபாய்க்கான அடையாள குறியீட்டு போட்டிக்கு தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பிவைத்தார் உதயகுமார்.

போட்டிக்கு வந்த 3000,அடையாள குறியீட்டில், உதயகுமாரின் அடையாள சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதன் மூலம் 2 .5 லட்சம் பரிசு கிடைக்க உள்ளது.

மேலும், தான் படித்த மும்பை கவுகாத்தி ஐ.ஐ.டியில் தொழில் டிசைனிங் பிரிவில் உதவிப் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday, July 14, 2010

முதல்வரின் பிள்ளையொன்று சிங்களப்படையினரால் கொல்லப்பட்டிருந்தால் இப்படித்தான் அமைதி காத்திருப்பீர்களா?

நல்ல சினிமா இயக்குனராக அறியப்பட்ட செந்தமிழன் சீமான், பெரியாரின் சுயமரியாதை பகுத்தறிவுப்பாசறையில் வளர்ந்த கண்ணியமான இளைஞரானதால் தமிழர்களின் அடக்குமுறையை சகிக்க முடியாமல். தன்சுயமான சொகுசு வாழ்வைத்துறந்து, ஏழை எளியவர்களுக்கு குரல் கொடுக்கும். “நாம்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைபாளராகவும் இருந்து வருகிறார்.




நேற்றய முந்தினம் சீமான் தமிழக அரசினால் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சீமான் கைது செய்யப்படுவதற்கான காரணமாக அமைந்தது. தமிழகமீனவரான செல்லப்பன் கடந்தவாரம் கடலில்வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் அடித்துக்கொல்லப்பட்டதை ஆட்சேபித்து. ஆற்பாட்டம் நடத்தி உணர்ச்சிவசப்பட்டு பேசினார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் கடலில் சுட்டும், வெட்டியும், அடித்தும், கொல்லப்பட்டுவருவதை மத்திய, மானில, அரசுகள் கவனத்தில் கொள்ளாததால் சீமானின் நாம்தமிழர் இயக்கம் வீதியிலிறங்கி நியாயம் கேட்டுப்போராடியிருக்கிறது.

சீமானின் கைதுக்கு காட்டப்பட்டிருக்கும் காரணங்கள். இறையாண்மையை மீறிச்செயற்பட்டதாகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேசினார் என்று சொல்லப்படுகிறது.

தமிழகமீனவர்கள் 600, பேர், சென்றவாரம்வரை கொல்லப்பட்டதற்கு. 2020 ல் தான் ஒரு வல்லரசு நாடு என கூறும், பாரத நாட்டின் மத்திய மானில அரசுகள் நடவடிக்கை எடுத்து கொலைகளை தடுக்க சிறுமுயற்சிகூட செய்யவில்லை. இலங்கை இராணுவத்தை காப்பாற்றுவதற்காக தமிழன் கொலைகளை கணக்கிலெடுக்காமலேயே தமிழ்நாடு அரசும் மத்திய அரசும் வந்திருக்கின்றன.

அரசுகள் சரியான தருணத்தில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் மிகச்சிறிய கட்சியான நாம்தமிழர் இயக்கம் வீதியில் இறங்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் இயலாமை, காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே இந்தக்கைது நடந்திருப்பதாக இதயமுள்ள எவரும் புரிந்து கொள்ளலாம்,

இறையாண்மையை மீறி சீமான் பேசியதாக குற்றம் சுமத்தும் முதல்வர், எவ்வளவு இழிதரமான வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் மேல் பலமுறை பிரயோகித்திருக்கிறார்.

சென்றவருடம் 2009 ல் வட இந்திய தொலைக்காட்சியான N TV.யின் ஆங்கிலச்சனல் ஒன்று, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகளின் தலைவர் திரு வே.பிரபாகரன். சம்பந்தமான கேள்வியொன்று கேட்டபோது. தனது மகள் கனிமொழியை அருகில் வைத்துக்கொண்டு, pirabakaran is my friend ,he is not terrorist. என ஆங்கிலத்தில் பதிலளித்தார், அந்தக்கூற்று இறையாண்மையை மீறியதாக அமையாதா. மறு நாள் சுதாகரித்து தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை N TV, தி மு க வுக்கு எதிரானது, செய்தியை திரித்து வெளியிட்டுவிட்டனர் என தன்னிலை விளக்கமும் கலைஞர் தொலைக்காட்சி மூலம் தந்திருந்தார். அரசுக்கட்டில் இருந்தால் எதுவும்பேசலாம் என்றுதானே பொருள்.

இவை அரசியலில் சகசமாக இருந்தாலும். தந்திரசாலியான முதல்வர் தனதும், தனதுவாரிசுகளின் இருப்புக்கும். பங்கம் வந்துவிடக்கூடாதென்பதற்காக. மீனவர்களின் படுகொலைகள் பற்றி மத்திய அரசிடம் எந்த நெருக்கடியையும் கொடுத்திருக்கவில்லை.பதவிகளுக்காக மத்திய அரசுக்குதுணை போய்க்கொண்டே இருக்கிறார், இந்த மோசமான பலவீனம்தானே சீமான் போன்றவர்களை வீதிக்கு கொண்டு வரக்காரணமாகியிருந்தது.

அரசின் கவலையீனங்கள்தானே இவை எல்லாவற்றிற்கும் ஊற்றுவாய், நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு அரசுக்குத்தான் உண்டு,

சீனிமாவில் நல்லவருமானமும் புகழும் சந்தோசமும் உள்ள வாழ்க்கையைத்துறந்து, இனமானத்திற்காக துடிப்புடன் தமிழர்களுக்காக சேவைசெய்யும் சீமான், கடலில் கொல்லப்பட்டவர் அப்பாவி ஏழைத்தமிழன் என்பதால், தொடரும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் படுகொலைகளை சகிக்க முடியாமல், உணர்ச்சிவசப்பட்டிருப்பார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இவையனைத்தையும் அறிந்தும் தமிழ்நாட்டின் பொது அமைப்புக்களும், சீமான் சார்ந்திருக்கும் பலமிக்க சினிமா உலகமும், மெளனமாக இருப்பது மிகுந்த வேதனைக்குரிய விடயமாகும். இன உணர்வுடன் தட்டிக்கேட்கக்கூடிய தகுதியிலிருக்கும், பலமிக்க மூத்த சினிமா தமிழ் மைந்தர்களான பாரதிராஜா,
சகோதரர் மணிவண்ணன், செல்வமணி, சத்தியராஜ், இளைஞர் சூர்யா, போன்றவர்கள் தொடர்ந்தும் மெளனமாகிப்போனால் அது தமிழனின் இயலாமையாகவே கவலை கொள்ளவைக்கிறது,

இங்கு முதல்வர் கருணாநிதியை எவரும் எதிர்க்க வேண்டுமென்பதில்லை, நியாயமாக அப்பாவித்தமிழனின் படுகொலைக்கு கொதித்த சீமானின் கைதை கண்டித்து பக்கத்துணையாக குரல் கொடுக்கத்தவறிவிட்டனர் என்பதுதான் உறுத்துகிறது,

முதல்வரின் பிள்ளையொன்று சிங்களப்படையினரால் கொல்லப்பட்டிருந்தால் இப்படித்தான் அமைதி காத்திருப்பீர்களா?

- கனகதரன்

Tuesday, July 13, 2010

அழிந்த தமிழ் ஈழம் அழியபோகும் தமிழகம்

இலங்கையில் உள் நாட்டு போர் முடிந்து முதலாம் ஆண்டு வெற்றியை சிங்களர்கள் கொண்டாடும் வேளையில் தமிழர்களின் இனப்பிரச்சனைக்கு இந்தியா இதுவரை செய்த நிகழ்வுகள் அனைத்தையும் உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.இலங்கையில் தற்பொழுது நடைபெரும் நிகழ்வுகளையும் இதற்கு முன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தியா நங்கு அறியும்.

தமிழ் ஈழத்தில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து விடுதலை புலிகளை ஒழித்தாக ராஜபட்சே தன்னை பாராட்டி கொண்டுவரும் வெளையில் இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை தமிழ் மக்களிடம் இருந்து பறித்து அந்த பகுதிகளை சிங்கள மயமாக ஆக்கும் நிகழ்வு நடந்து வறுவதை இந்தியாவும் அறியும் உலக நாடுகள் பலவும் அறியும்.2.5வீ£டுகை இடித்து,வெடிகுண்டு வீசி தன் நாட்டு மக்களை தன் சொந்த நாட்டிலே அகதிகளாக வைத்து வேடிக்கை பார்க்கும் ஒரே நாடு இலங்கையாக மட்டும் தான் இருக்க முடியும். இதனை உலக நாடுகளும், ஐ.நா சபையும், மனித உ¡¢மை அமைப்புகளும், பல சர்வதேச அமைப்புகளும் வேடிக்ககை மட்டும் தான் பார்க்கிறது.

போர் முடிந்து ஓர் ஆண்டு ஆன நிலையில் போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களை தங்கள் சொந்த இடஙகளுக்கு சென்று மீள் குடியேற்றம் செய்ய இலங்கை முன் வரவில்லை.போ¡¢னால் பாதிக்கப்பட்டு சொந்த இடங்களை இழந்த மக்களை மீள் குடியமர்த்த இந்தியாவும், உலக நாடுகளும், ஐ.நா சபையும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும், மனிதாபிமான உதவிகையும் இதுவரை இலங்கை செய்யவில்லை. இதறக்கு இந்தியாவும், உலக நாடுகளும், ஐ.நா சபையும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிர கணக்கான மக்களை கொடுரமாகவும் போர் சட்டங்களை மீறியும் கொலை செய்த ராஜபட்க்சே மீது இது வரை போர் குற்ற விசாரனை நடத்தபடாமல் உள்ளது § தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது பாதிக்கப்பட்ட மக்களை முள் வேளிக்குள் வைத்து வேடிக்கை பார்க்கும் இலங்கையை இதுவரை எந்த நாடும் தட்டி கேக்காதது மிகவும் வேதனையான நிகழ்வாகும். இலங்கை அரசு தமிழ் மக்களை முள் வேளிக்குள் வைத்து வேடிக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் தமிழர் பகுதிகளை சிங்கள மய மாக்கி வருகிறது. வட இலங்கையில் தமிழர்களின் 80 சதவிகித விவசாய நிளங்கள் இரணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் புத்த விஹார், புத்தர் சிலையையும் நிறுவி தமிழர்களின் அடையாளங்களை அழித்து பாதிக்கப்பட்ட மக்களின் மீள் குடியேற்றம் செய்யாமல் தமிழர் பகுதிகளில் இராணுவ முகாம், தரைப்படை தளம்,விமான தளம்,கடற்படை தளம்,என அமைத்து இராணுவ பலத்தின் மூலம் தமிழர் பகுதிகளை சிங்கள தேசமாகவும் இராணுவ முகாமாகவும் மாற்றி அமைத்து வரும் இந்த வேளையில் தற்பொழுது இந்தியா வேடிக்கை பார்ப்பது எதிர் காலத்தில் மிகப்பொ¢ய ஆபத்தையும்,பெரும் அழிவையும் இந்தியா எதிர் நோக்கி உள்ளதை இதுவரை அறியவில்லை. இலங்கையில் விடுதலைப்புலிகளை ஒழிக்க இந்தியா, சீனா, பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் பல வழிகளில் போட்டி போட்டுக்கொண்டு உதவி பு¡¢ந்ததை உலக நாடுகளும் அறியும்,உலக மக்களும் அறிவார்கள் இலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் அங்கே சீனாவின் ஆதிக்கம் விரைவாக வளர்வதை இந்தியா வேடிக்கை மட்டும் தான் பார்த்துக்கொண்டு இருகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் விரைவாக வளர்வதன் மூலம் எதிர் காலத்தில் இந்தியாவிற்கு மிகப்பொ¢ய ஆபத்தும், அச்சுருத்தழும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இலங்கை விடுதலைப்புலிகளை ஒழிக்க உதவிய சீனாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் நன்றி கடனாக பல வழிகளில் உதவி வருகிறது குறிப்பாக அபிவிருத்தி என்று சொல்லிக்கொண்டு சீனா இலங்கையில் துறைமுகம் மேம்பாட்டு பனி என்ற பெயா¢ல் கடற்படை தளத்தை அமைக்க நடவடிக்கை மேற்க்கொண்டு வருகிறது இது எதிர் காலத்தில் இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கும் வரப்போகும் மிகப்பொ¢ய ஆபத்திற்கு அடித்தளமாகும். இலங்கையில் சுமார் 1.5 லட்சம் சீனர்கள் அபிவிருத்தி திட்டதில் பங்கு பெற்று வருகின்றனர் இந்த எண்ணிக்கையில் அதிக அளவு இராணுவ வீரர்கள், முண்ணாள் இராணுவ வீரர்கள் இருப்பதாக பல தகவல்கள் தெருவிக்கின்றன இந்த எண்ணிக்கை எதிர் காலத்தில் கூடக்கூடும். இலங்கையில் சீனா அபிவிருத்தி என்ற பெயா¢ல் கடற்படைத்தளத்தையும், தரைப்படை தளத்தையும், விமாண தளத்தையும் மேம்படுத்தி வருவதை கண்டு இதுவரை இந்தியா அச்சம் கொள்ளவில்லை. இலங்கை அதிபர் ராஜபட்சே இந்தியாவைவிட பாக்கிஸ்தானையும், சீனவையும் நட்பு கொண்டு உதவிகள் பல பெற்று வருகிறார் எதிர் காலத்தில் இராணுவ ¡£தியான உதவிகளை பெறவும் உள்ளார். இலங்கையில் சீனா அமைக்கும் அபிவிருத்தி திட்டம் வட இலங்கை பகுதியில் அதிகமாக அமைய உள்ளது இந்த பகுதியானது தமிழ் நாட்டிற்கு மிகவும் நெருங்கிய பகுதியாகும்.

இந்தியாவின் அண்டை நாடுகளான பங்களாதேசம், மியான்மர், பூடான், நேபாளம், திபெத், போன்ற நாடுகளால் நமக்கு எப்பொழுதும் ஆபத்து ஏற்படலாம். இந்தியாவின் தென் பிராந்தியத்தில் பாதுகாப்பில் இந்த நாள் வரை எந்த அச்சுருத்தளும்,ஆபத்தும் இல்லாமல் இருந்து வந்தது ஆனால் இலங்கையின் நடவடிக்கையினால் எதிர் காலத்தில் மிகப்பொ¢ய ஆபத்தும் ,அச்சுருதளும் ஏற்படலாம். குறிப்பாக தமிழ் நட்டிற்க்கு பொ¢ய அளவு அபத்தும் அழிவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இலங்கையில் தற்பொழுது சீனாவும்,பாக்கிஸ்தாணும் கால் ஊன்றி உள்ள நிலையில் பூளோக ¡£தியாக எதிர்காலத்தில் இந்தியாவிற்கும், தென் இந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ் நாட்டிற்கும் மிகப்பொ¢ய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் இந்தியா இலங்கையில் சீனா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் கால் பதிக்க விடாமல் தடுத்து அனைத்து முதலீடுகளையும் இந்தியா செய்து இரு நாடுகளையும் இலங்கையில் நுழைய விடாமல் இலங்கையை இந்தியா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். அதற்கு போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளையும் உள் கட்டமைப்புகளையும் உடனடியாக இந்தியா செய்து கொடுக்க முன்வரவேண்டும்.மேளும் போ¡¢னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தங்கள் சொந்த இடத்தில் மீண்டும் குடி அமரவும், மீள்குடியேற்றம் நடைபெறவும் இந்தியா தேவையான நடவடிக்கையை உடனடியாக செய்ய முன் வரவேண்டும். குறிப்பாக தமிழர் பகுதிகள் சிங்கள மய மாவதை உடனடியாக தடுத்து நிறுத்தி இலங்கையில் அரசியல் சுய நிர்னயம் செய்து தமிழர்கள் அமைதியாக வாழ வழி செய்து தேவையான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளவேண்டும். இந்தியாவில் உள்ள அரசியல் அமைப்பு போன்று இலங்கையில் புதியதாக ஒரு ஒருஅரசியல் அமைப்பு ஏற்படுத்தி தமிழர் மாநில சுய ஆட்சி ஏற்பட இந்தியா இலங்கையை நிர்பந்திக்க வேண்டும். மேலும் தமிழர் பகுதிகளில் சமயசார்பற்ற மக்களாட்சி நடைபெற இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே இலங்கையில் அமைதி நிலவும்.

எதிர்காலத்தில் மூண்றாம் உலக போர் என வந்தால் அதில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.அதே போன்று இலங்கையும் மிக முக்கிய நாடாக திகழும் காரனம் இலங்கையில் சீனாவும், பாக்கிஸ்தனும் அமைத்துவரும் அடித்தளமாகும்.இலங்கையில் தற்பொழுது சீனாவும் பாகிஸ்தானும் அமைக்கும் அடித்தளம் மூண்றாம் உலக போ¡¢னை கவனத்தில் கொண்டு அமைக்கபடுகிறது.இந்த அடித்தளத்திற்கு துனை போகும் இலங்கையினால் அதிகம் பாதிக்கபட போவது இந்தியாவும்,தமிழகமும் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இலங்கையும் தான்.மூன்றாம் உலக போர் வந்தால் தெற்கு ஆசியாவில் இலங்கை போர் களமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்கு பூளோகா£தியாக நாண்கு பக்கமும் ஆபத்து நெருங்கிவரும் வேளையில் இந்தியா இப்பொழுதே விழித்துக்கொண்டால் நாட்டிற்கு பாதுகாப்பு.

இந்தியா இதுவரை செய்ததை மறந்து எதிர் கால பாதுகாப்பை கவனத்தில் கொண்டு தனது நடவடிக்கையை இப்பொழுதே மாற்றிக்கொள்ள வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் நாடு கடந்த தமிழ் ஈழம் என்ற அமைப்பை நிறுவி தனி ஈழம் அமைக்க தேவையான சட்டநடவடிக்கைகளை அமைதியின் மூலம் எடுத்துவருகின்றனர். நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு அமொ¢க்கா, பி¡¢ட்டன், பிரான்சு,கணடா,போன்ற நாடுகள் ஆதரவு தொ¢வித்து உதவி வருகின்றன.நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலம் தனி ஈழம் அமைக்க விசுவநாதன் உருத்திரகுமாரன் அவர்கள் அமொ¢க்காவின் ஆதரவுடனும், இங்கிலாந்து ஆதரவுடனும் தனி ஈழம் அமைய நடவடிக்கை எடுத்து வருகிறார். யூதர்களுக்கு அமைந்த தனி நாடு போன்று தமிழர்களுக்கு தனி நாடு அமைந்தால் அமைக்கப்படும் தமிழ் ஈழம் கண்டிப்பாக அமொ¢க்காவிற்கும், பி¡¢ட்டனுக்கும், பிரான்சுக்கும் ஆதரவாகதான் செயல்படும்.இலங்கையில் எதிர்காலத்தில் சீனா, பாக்கிஸ்தான் இரானுவ தளம், கப்பல் படை தளம், விமான தளம் போன்றவற்றை அமைத்தால் இந்தியாவிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் அதே போன்று தனி ஈழம் அமைக்கப்பட்டால் இந்தியாவிற்கு எதிராக செயல்பட வாய்ப்பு உள்ளது காரணம் இதுவரை தனி ஈழம் அமையாததற்கு இந்தியா காரணம் என புலம் பெயர்ந்த தமிழர்கள் மட்டுமல்ல உலக தமிழர்கள் அனைவரும் அறியுவர்.தனி ஈழம் அமைக்கப்பட்டால் அமைய போகும் ஈழத்தில் அமொ¢க்காவும்,பி¡¢ட்டனும் சீனா.பாக்கிஸ்தான் ஆகியவற்றிக்கு போட்டியாக எதிர்காலத்தில் இராணுவ தளம்.கடற்படை, விமாணத்தளம், போன்றவற்றை அமைத்தால் இதுவும் இந்தியவிற்க்கு மிகப்பொ¢ய ஆபத்தும் அச்சுருத்தளும் ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.மூண்றாம் உலகப்போர் வந்தால் அமொ¢க்கா,பி¡¢ட்டன் ஒரு அணியாகவும். சீன,பாக்கிஸ்தான் ஒரு அணியாகவும் மாறி செயல் பட வாய்ப்பு உள்ளது இதில் இந்தியா எந்த அணியில் சேர்ந்தாளும் நடுநிலை வகித்தாளும் மிகப்பொ¢ய போர் ஆபத்தை சந்திக்க நோ¢டும்.

இலங்கை தீவில் சீன,பாக்கிஸ்தான்,அமொ¢க்கா,பி¡¢ட்டன்,இஸ்ரேல்,போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தி ராடார்களையும்,இராணுவத்தளங்களையும் எதிர் காலத்தில் அமைத்து விட்டால் தென் இந்தியவில் உள்ள கூடங்குளம், கல்பாக்கம், ஸ்ரீஹா¢கோட்டா, மஹேந்திரகி¡¢, கைகா, பெங்களுரு,ஹைத்ராபாத், தும்பா, சென்னை, கொச்சி,போன்ற பகுதிகளுக்கு அச்சுருத்தளும்,ஆபத்தும்,ஏற்பட வாய்ப்பு உள்ளது.மேலும் இலங்கையை பல நாடுகள் போர்களமாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.இதனை கருத்தில் கொண்டு இந்தியாவும்,இலங்கையும், ஆபத்து வரும் முன்னரே தடுத்து நிறுத்த முயற்ச்சி மேற்க்கொண்டு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் . மூண்றாம் உலக போர் வந்தால் ஜப்பான் தீவில் இரண்டம் உலகப்போ¡¢ல் நடந்த அதே நிகழ்வு இலங்கை தீவில் நடந்தாளும் நடக்கலாம் இதற்க்கு இந்தியாவும்,இலங்கையும் இடம் அளிக்க கூடாது இப்பொழுதே இரு நாடுகளும் தங்கள் நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியில் ஒரு பல மொழி உள்ளது “இரண்டு வீட்டு விருந்தாளி பசி வந்து இறந்தான்” என்ற பல மொழிக்கு உதாரணமாக இந்தியா மாறிவிட கூடாது .அதற்க்கு இப்பொழுதே இலங்கையில் ஈழ தமிழ் மக்கள் அரசியல் சுய ஆட்சியையும்,தன்னாட்சியையும் பெற்று இந்தியா போன்று இலங்கையில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ தேவையான நடவடிக்களை எடுத்து தமிழர் பகுதிகளை தமிழர்களே ஆட்சி செய்யவும் இந்தியா, இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்க்கு தனி ஈழம் மட்டுமே தீர்வாக முடியும் இல்லை என்றால் தமிழர் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என்பதே கிடையாது தனி ஈழம் அமைய இந்தியா உதவி செய்வதன் மூலம் தமிழ் மக்களின் நன் மதிப்பை பெற்று விடலாம் இலங்கையும் அமைதி பூங்காவாக மாற்றம் அடையும்.

கட்டுரையாளர்,
ஏ.பி.முருகானந்தம்.
http://meenakam.com/?p=2294#more-2294

Monday, July 12, 2010

"பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!"

சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்!
ப.திருமாவேலன்

முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது.

இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க... அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க... ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க... இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி 'நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம்.

"இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமித்து இருப்பது வரவேற்கத்தக்க செய்திதானே?"

"எங்கள் சமூகத்தை நான்கு புறமும் சூழ்ந்து சுற்றி வளைத்துக் கொலை செய்த காலத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்ததும் இந்த அவைதான் என்ற வருத்தம் இருந்தாலும், இது ஆறுதலான ஆரம்பம். இந்த விசாரணையையும் எப்படியாவது தடுத்து முடக்கிவிட, இலங்கையும் அதனை ஆதரிக்கும் நாடுகளும் நினைக்கலாம். அப்பாவிகளை அங்குலம் அங்குல மாக நகர்த்திக்கொண்டு போய் கடலம்மாவின் காலடியில் வைத்து சுட்டுப் பொசுக்கிய சண்டாளர்களைப் பழிவாங்கும் தொடக்கப் புள்ளியாக இது அமையும்!"



"இந்தியாவே இதில் எந்தக் கருத்தும் சொல்லவில்லையே?"

" 'இந்தியா விரும்பிய போரை நாங்கள் நடத்தி முடித்தோம்' என்று மகிந்தா ராஜபக்ஷே பகிரங்கமாக அறிவித்தார். 'இந்தப் போரை நடத்துவதற்கு எங்கள் நாட்டில் இருந்து மூன்று பேர்கொண்ட குழுவை அமைத்தோம். இந்தியா சார்பில், எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், ஸ்ரீவிஜய சிங் ஆகிய மூவரை நியமித்தார்கள். நாங்கள் நித்தமும் தொடர்புகொண்டு பேசித்தான் இந்த யுத்தத்தை நடத்தினோம்' என்று கோத்த பய ராஜபக்ஷே சொன்னார். இந்த யுத்தத்துக்காகஇந்திய அரசு என்னென்ன உதவிகளைச் செய்தது என்று இலங்கை நாடாளுமன்றத்தில், அந்த நாட்டு அமைச்சர் பகிரங்கமாக அறிவித்தார். 'இந்தியாவுக்கு நன்றி' என்ற பதாகைகளை ஏந்தி, கொழும்பு வீதிகளில் சிங்களக் காடையர்கள் ஊர்வலம் போனார்கள். இதற்கெல்லாம் இந்தியா இதுவரை கருத்துச் சொல்லவில்லையே. அதற்கு என்ன அர்த்தம்? உண்மையைத்தானேசொல் கிறார்கள் என்று மௌனமாகிவிட்டார்கள் இப் படிப்பட்ட இந்தியா இலங்கைக்கு எதிராக எப்படிப் பேச முடியும்?

ஏழு கோடித் தமிழர்களை உள்ளடக்கிய எம் தேசம் இப்படிப்பட்ட துரோகத்தைச் செய்யக் கூடாது என்று தானே திரும்பத் திரும்ப நாம் வீதி களில் நின்று கத்தினோம். தமிழ், தமிழன் என்று பேசினால், அது இந்திய தேசியத்துக்கு எதிரானது என்று மத்திய ஆட்சியாளர்கள் நினைத்தார்கள். இந்தியாவின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகிகளைக் கொடுத்தவன் தமிழன். ஆயுதம் தூக்கிய கட்டபொம்மன் தொடங்கி, அகிம்சை காலத்து வ.உ.சி வரை எத்தனையோ தியாகிகள் இங்கு உண்டு. காந்தி, நேரு, நேதாஜி, திலகர், பகத்சிங், அம்பேத்கர், இந்திரா, ராஜீவ்... என்று வடபுலத்துத் தலைவர்கள் பெயரை அதிகம் வைத்துக்கொண்டவன் தமிழன். வட இந்தியாவில் எந்த காங்கிரஸ்காரனாவது தனது பிள்ளைக்கு காமராஜ், கக்கன் என்று பெயர் வைத்திருப்பானா? வ.உ.சி பெயரோ, பெரியார் பெயரோ உண்டா? காவிரியில் தண்ணீர் தராவிட்டாலும், முல்லைப் பெரியாரில் முரண்டு பிடித்தாலும், என் மக்களுக்குத் துரோகம் செய்தா லும், சட்டத்துக்குக் கட்டுப்பட்டு இந்திய தேசிய எல்லைக்குள் இருக்கிற எங்களைத் துரோகிகளாகப் பார்த்தால், இழப்பு யாருக்கு என்பதைக் காலம்தான் சொல்லும்!"



" 'பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போரில் இந்தியா உதவி செய்தது' என்று பதில் தரப்படுகிறதே?"

"அதைத் துணிந்து சொல்வதற்கான யோக்கியதை இன்றைய ஆட்சியாளர்களுக்கு உண்டா? இதுவரை இலங்கைக் கடற்படையால் 500 தமிழ் மீனவர்கள் கொல்லப்பட்டார்களே... அவனெல்லாம் பயங்கரவாதியா? அதை, மன்மோகன் சிங்கும் சோனியாவும் கண்டித்தார்களா? 'தமிழக மீனவர்களைக் கொல்கிறார்கள்' என்றால், 'யாரும் பயப்படத் தேவை இல்லை' என்கிறது டெல்லி. 'சீனாக்காரன், அருணாசலப் பிரதேசத்துக்குள் வருகிறான்' என்றால் 'யாரும் பயப்பட வேண்டாம்' என்கிறது டெல்லி. நாங்கள் எது எதற்குப் பயப்படலாம், எதற்கெல்லாம் பயப் படக் கூடாது என்று டெல்லி பட்டியல் போட்டுத் தந்தால் பரவாயில்லை.

மீனவனை அடிக்கும்போது 'ப்ளடி இண்டியன்ஸ்... ப்ளடி தமிழன்ஸ்' என்று ஒரு சிங்களவன் கத்துகிறான். 'நோ... நோ... பிரபாகரன் ரிலேஷன்ஸ்' என்று இன்னொருவன் எடுத்துக் கொடுக்கிறான். இந்தியன் என்றாலே பிரபாகரனின் உறவுக்காரன் என்று சிங்களவன் நினைக்கிறான். சீனாவும் பாகிஸ்தானும் உங்களுக்கு உதவி செய்கிறோம் என்று வந்தபோது மறுத்தவர் பிரபாகரன். இந்தியாவைத் தன்னுடைய தந்தையர் தேசமாக அவர் நினைத்தார். இதை இந்தியா உணர மறுத்தது. அதற்கான பலனை விரைவில் அனுபவிக்கப் போகிறது. சீனாவின் காலனி ஆதிக்க நாடாக இலங்கை மாற்றப்பட்டு, பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப்போகிறது!"

"இன்றைய நிலையில் ஈழம் எப்படி இருக்கிறது?"

"ஏழைகள் அனைவரையும் கொன்றுவிட்டு, ஏழ்மையை ஒழித்துவிட்டதாக சொல்வதைப்போல மக்கள் அனைவரையும் கொலை செய்துவிட்டு, நாடு அமைதியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள். மரண வாசனைக்கு மத்தியில், சிங்களத் தலைவர்கள் சும்மா இருக்கவில்லை. ஐந்து விதமான கொடூரங்களை இரக்கம் இல்லாமல் செய்ய ஆரம்பித் திருப்பதாக எனக்குத் தகவல்கள்வரு கின்றன.

அம்பாந்தொட்டை என்ற இடத்தில் கப்பல் கட்டும் தளத்தை சீன அரசு அமைத்து வருகிறது. அதில் வேலை பார்க்க சீன தேசத்தில் இருந்து 25 ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கைதிகளாம். ஒழுக்கமும் கட்டுப்பாடும் பின்பற்ற வேண்டிய ராணுவ வீரர்களே சீரழிவின் உச்சத்துக்குச் செல்லும் ஒரு தேசத்தில் வந்து இறங்கிய சீனக் கைதிகள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதைச் சொல்ல வேண்டியது இல்லை. வந்திருப்பதில் 5,000 பேர் சீன உளவாளிகள் என்றும், 10 ஆயிரம் பேர் சீனத் தீவிர வாதிகள் என்றும் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். தமிழ் ஆண் மக்கள் அனைவரையும்கொன்றுவிட்டு, சீனக் கலப்பினத்தை உருவாக்கும் திட்டத்துடன்தான் இவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளார்கள். இது முதலாவது ஆபத்து.

முள்வேலி முகாமில், தடுப்புக் காவல் முகாம்களில் இருக்கும் எம் தமிழ்ச் சகோதரிகளில் பலரும் இப்போது கர்ப்பமாக இருக்கிறார்கள். அதாவது, சிங்கள ராணுவவீரர் களின் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுஉள்ளார் கள். அவர்களது கருக்களைக் கலைக்கவிடாமல் கொடுமைப்படுத்துகிறார்கள். சிங்களக் கலப்பினம் பச்சையாக உருவாக்கப்பட்டுவிட்டது. இது இரண்டாவது ஆபத்து.

தமிழர் வாழ்ந்த பகுதிகள் அனைத்திலும் இருந்த தமிழ் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள மற்றும் புத்த அடையாளங்கள் நிறுவப்படுகின்றன. இந்துக் கோயில்கள் இருந்த இடங்களில் புத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. சிங்களக் கடைகளில் பொருட்கள் வாங்கி, புத்த சாமிகளை வணங்கித்தான் இனி தமிழன் வாழ முடியும். இது மூன்றாவது ஆபத்து.

முக்கியமான மீன் பிடி இடங்கள்அனைத் தும் சீனாவுக்குத் தாரை வார்க்கப்பட்ட தால், அவர்கள் ராட்சச இயந்திரங்கள் மூலமாக மீன்களை உறிஞ்சினால், இனி இந்திய மீனவர்கள் கடலில் பிடிக்க மீனே இருக்காது. அதாவது, நம்முடைய நாட்டின் மீன் பிடி வர்த்தகம் முழுமையாக அழியப்போகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான மீனவர் வாழ்க்கையில் மண் விழப்போகிறது. இது நான்காவது ஆபத்து.

பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் வடக்கில் இருப்பதால்தான், தென்னகத்தில் மிக முக்கியமான நிறுவனங்களை மத்திய அரசு அமைத்தது. ஆனால், இன்று நம்மு டைய எதிரிகள் ஈழத்தில் முழுமையாகக் கால் ஊன்றுவதால் அதிக ஆபத்து தமிழ்நாட்டுக்குத்தான். இது ஐந்தாவது ஆபத்து, இந்திய தேசத்துக்கே பேராபத்து!"

"கடைசிக் கேள்வி என்னவாக இருக்கும் என்று உங்களுக்கே தெரியுமே?"

"ம்... தலைவர் இருக்கிறாரா என்பதுதானே? பிரபாகரனின் மரணச் சான்றிதழை இலங்கை அரசாங்கம் கொடுத்த பிறகும், ராஜீவ் வழக்கை இந்தியா ஏன் முடிக்கவில்லை? புலிகள் அமைப்பே இல்லாதபோது, இந்தியா ஏன் இன்னமும் தடையை நீட்டித்துக்கொண்டு இருக்கிறது? முள்ளி வாய்க்கால் முடிந்துபோன பிறகும் முன்னிலும் வேகமாக அடக்குமுறைகளை இலங்கை தொடர்வதற்கு என்ன காரணம்? காட்டுப் பகுதியே இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டி அழிப்பதன் பின்னணி என்ன? மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான்பேசு வதற்கு அனுமதித்த கனடா, இன்று தடுப் பதற்கு என்ன அர்த்தம்?

நமக்கெல்லாம் தெரியாத விடை அவர்களுக்குத் தெரியுமப்பா. தலைவன் இருக்கிறான் என்பதை நான் நிரூபிக்கத் தேவை இல்லை. உலக நாடுகளே நிரூபித்துக்கொண்டு இருக்கின்றன!"

Sunday, July 11, 2010

அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன் -சீமான்

சிங்கள இனவெறியன் ராஜபக்‌ஷேவின் விருப்பத்திற்கு ஏற்ப சோனியாவின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமானால் செயல்படலாம். உண்மைத் தமிழன் என்னால் செயல்பட முடியாது. ஆகவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்று சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது தமிழகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

தமிழக மீனவர் செல்லப்பன் அவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டது குறித்த சம்பவத்தில் நேற்று நான் பேசிய பேச்சினை வைத்து தமிழகக் காவல்துறை என் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளது.என்னைக்கைது செய்ய முனைப்பு காட்டி வருகின்றது.

600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.அவர்களின் விலைமதிப்பற்ற வலைகள்,படகுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.தமிழக மீனவர்கள் சிங்களனால், தினசரி கொல்லப்படும் பொழுதோ,அவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் பொழுதோ,அவமானப்படுத்தப்படும் பொழுதோ,மீனவனின் வலை அறுக்கப்படும் பொழுதோ மத்திய மாநில அரசுகள் துளியும் கவலைப்பட வில்லை.மென்மையான முறையில் கடிதம் எழுதினார்கள். குறைந்தபட்சம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை.ஆனால் மத்திய,மாநில ஆளும் அரசுகள், நேற்று நான் பேசிய பேச்சுக்கள் சிங்களனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவதாக கருதி என்னைக் கைது செய்ய தனிப்படை அமைத்து வலை வீசித் தேடுகின்றன.

600 தமிழ்மீனவர்களின் உயிருக்கு இல்லாத மதிப்பு நம் இனம் அழித்த சிங்களனுக்கு இருப்பதை நினைத்தால் நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா என்னும் எண்ணம் எழுகின்றது.

ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவன் தாக்கப்பட்டால் கொதிக்கும் இந்திய மனம் என்ணற்ற மீனவனின் உயிருக்கு சிறு அசைவைக்கூட தெரிவிக்க மறுக்கின்றதே?

பாகிஸ்தானி கசாப் மும்பையில் துப்பாக்கியில் சுட்டால் எல்லை கடந்த பயங்கரவாதம் என்று பாகிஸ்தானை எதிர்க்கும் இந்தியா, தினசரி மீனவனை கொலை செய்யும் இலங்கை அரசுடன் விருந்து வைத்து மகிழ்கின்றதே?ஏன்?

பிஜூ தீவில் குஜராத்தி தாக்கப்படும் பொழுது துடிக்கும் இந்தியா இங்கு சாகும் மீனவன் பற்றிக் கவலைப்படாமல் கிரிக்கெட் விளையாட வழியனுப்பி வைக்கின்றதே?ஏன்?

செத்தவன் தமிழன் என்பதால் தான் எல்லோரும் பாராமுகம் காட்டுகின்றார்களா?இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?

சென்ற வருடம் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்டு தமிழினம் ஒடுக்கப்பட்ட பொழுது அதற்கு பேருதவியும் பெரும் ஆதரவும் அளித்த மத்திய, மாநில அரசுகள் இன்று நம் எல்லையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவன் கொல்லப்படும் பொழுதும் இலங்கைக்கு உறுதுணையாய் இருப்பது தமிழர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றது.

எண்ணற்ற மீனவன் செத்துக் கொண்டிருக்கும் பொழுது உணர்வுள்ள தமிழர்கள் எங்களால் தமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் கடிதம் எழுதவோ, அல்லது பாராட்டு விழாவில் கூச்சமில்லாமல் நனையவோ அல்லது கண் துடைப்புக்காய் ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது. இன விடியலுக்கான பணியைச் செய்தே தீருவோம். அடக்குமுறைச் சட்டங்கள் காட்டி என்றும் எங்களை அச்சுறுத்த முடியாது. சிங்கள இனவெறியன் ராஜபக்‌ஷேவின் விருப்பத்திற்கு ஏற்ப சோனியாவின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமானால் செயல்படலாம்.உண்மைத் தமிழன் என்னால் செயல்பட முடியாது. ஆகவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்பதைத் தெரிவித்து கொள்கின்றேன்..

http://meenakam.com/?p=2183

Saturday, July 10, 2010

புலிகளைப் பார்த்து மகிழ்கின்ற நாம் அவர்களைப் போன்ற உறுதியைப் பெற வேண்டும் – கொளத்தூர் மணி

ஈழ நாட்டில் நீண்ட நெடிய போராட்டத்தை பார்த்த நாம், தமிழ்நாட்டில் நடந்த தலைகீழ் மாற்றத்தை மாற்றி மீண்டும், நாம் அவர்களைப் போல், முன்னேறிய பாதையில் செல்ல வேண்டும். புலிகளைப் பார்த்து மகிழ்கின்ற நாம், புலித் தலைவர்களை பார்த்து வியப்படையும் நாம், அவர்களைப் போன்ற உறுதியைப் பெற வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

4.4.2010 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு புதுவை மாநிலம் வீராம்பட்டிணத்தில், தி.மு.க. புதுச்சேரி மாமன்ற உறுப்பினர் பா. சக்திவேல் சகோதரரும், கழக ஆதரவாளருமான பா. உதயராஜ் – உ. சுயசந்திரா ஆகியோரது “ஈன்றோர் இல்லத்தையும்” பெரியார் படத்தையும் திறந்து வைத்து கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய உரையின் சுருக்கம்.

அருமை தோழர்களே! ஒரு காலத்தில் பண் பாட்டில், தலைநிமிர்ந்த சமுதாயமாக, சமத்துவம் பேணிய சமுதாயமாக அனைத்து தொழில் செய்கிறவர்களும், சாதி, பேதம் ஏதும் பாராமல், சமத்துவமாய் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்த தமிழ் சமுதாயத்தில் இடையில் வந்து புகுந்து கொண்ட சமத்துவமின்மை, பெண் அடிமைத் தனத்தை, சாதிய கொடுமைகளை, இவை அனைத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற அந்த ஆரிய கொடுமையிலிருந்து மீண்டு புத்தெழுச்சியை நம் தமிழ்ச் சமுதாயம் பெற வேண்டும். ஒரு பண்பாட்டுப் புரட்சியை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான். பெரியார் பண்பாட்டு புரட்சி இயக்கமாம் சுயமரியாதை இயக்கத்தை தொடங் கினார்.

தன்னோடு உறுப்பினர்களாக இணைத்து கொண்ட மக்கள் மட்டுமல்லாமல் அவருடைய கருத்தை, அடிப்படையாக கடவுள் மறுப்பை ஏற்றுக் கொள்ளாதவர்கள்கூட அவருடைய பெரும் பணியை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல் துணை நின்றார்கள். பழுத்த சைவ பழம் மறைமலை அடிகள் திரு.வி.க., குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் எல்லாம் துணை நின்றார்கள். ஒரு நாத்திகனோடு கடவுள் நம்பிக்கை உள்ள, கடவுள் நம்பிக்கையை பரப்புகின்ற ஆன்மீகவாதிகள் ஏன், அவரோடு இணைந்து பணியாற்றினர் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு நாட்டில் பண்பாட்டு படையெடுப்புதான், ஒரு போர்ப் படையெடுப்பைவிட கொடுமையானது, கொடூரமானது. அதுவே மக்களை நிரந்தர அடிமை களாக ஆக்கக் கூடியது. ஒரு ஆயுதம் தாங்கிய ஒரு போர்ப்படை பெறுகின்ற வெற்றியை ஒரு காலத்தில் மீண்டும் இழந்தவர்கள் பெற முடியும், ஆட்சியை நிறுவிக் கொள்ளவும் முடியும். ஆனால் பண்பாட்டு படையெடுப்பின் போது, ஏற்படுகின்ற கொடுமையி லிருந்து மீள்வது அவ்வளவு எளிதான தல்ல.

நம் நாட்டில் ஆரியர்கள் 3500 ஆண்டுகளுக்கு முன்பு வடநாட்டில் புகுந்தார்கள். ஆடு, மாடு மேய்த்து கொண்டு நுழைந்த ஆரியர்கள் ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழித்து கி.மு. 6 ஆம் நூற்றாண்டு வாக்கில் தான், தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் படையெடுத்து வரவில்லை. பண்பாட்டு படை யெடுத்து நுழைந்தார்கள். பண்பாட்டு படையெடுப்பு எவ்வளவு அழுத்தம் உள்ளது என்பதற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன்.

ஆப்பிரிக்க நாடு இனக் குழுக்களாக இருந்து இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்து வந்தபோது பல்வேறு காலக்கட்டங்களில் ஐரோப்பி யர்கள் மெல்ல, மெல்ல ஆக்கிரமித்து அடிமைப் படுத்தினர். அதில் முக்கியமாக கென்ய நாட்டில் விடுதலை போர் நடந்தபோது அந்த நாட்டின் விடுதலை வீரன், டாக்டர் கென்யாடா, அந்த நாடு எப்படி அடிமையானது என்பதை பற்றி சொன்னான். “எங்கள் நாட்டிற்கு ஐரோப்பாவிலிருந்து பாதிரி மார்கள் வந்தார்கள். அப்போது நாடு எங்கள் கையில் இருந்தது. வந்த பாதிரிமார்கள் கையில் பைபிள் மட்டும் இருந்தது. எங்களுக்கு ஜபிக்க கற்றுக் கொடுத்தார்கள். கண்களை மூடிக் கொண்டு ஜபம் செய்த நாங்கள் ஜபத்தை முடித்து கண்களை விழித்து பார்த்தோம். பைபிள் எங்கள் கையில் இருந்தது. நாடு அவர்கள் கையில் இருந்தது” என்று.

ஒரு பண்பாட்டு படையெடுப்பால் அவர்கள் மெல்ல, மெல்ல அந்த மக்களின் கருத்தை மாற்றி விடுகிறார்கள். அதைத் தான் இப்போது ஐயப்பன் பக்தியில் பார்க்கிறோம். ஒரு ஒற்றை மலையாளி ஒரு ஊரில் ஒரு 25 பேரின் ஆதரவு பெற்று மாலை போடும் குருசாமியாக மாறி அடுத்த ஆண்டு மீண்டும் ஒரு 25 பேரின் ஆதரவு பெற்று ஒரு 50 பேரின் ஆதரவு பெற்றவனாக மாறி விடுகிறான்.

இந்த பண்பாட்டு படையெடுப்பு எந்தவித ஓசையுமில்லால் எந்தவித சலசலப்பும், பரபரப்பும் இல்லாமல் மெல்ல, மெல்ல நுழைந்து கடைசியில் சொந்த நாட்டு பண்பாட்டை இழந்து வந்தவன் பண்பாட்டிற்கு அடிமையாகிற கொடுமை குறிப்பாக ஆரிய படையெடுப்பின்போது நடந்தது. அவர்கள் ஒவ்வொரு நிகழ்விலும் கொண்டு வந்து நுழைத்தவை நம் வீட்டு வாழ்வியல் நிகழ்வுகள். எல்லாவற்றிலும் அவர்கள் கொண்டு வந்து நுழைத்த கொடுமைகள் தான். அதிலிருந்து நாம் மீள்வதற்கு இன்னும் எத்தனை ஆண்டு காலம் ஆகும் என்று தெரியாது. இதனால்தான் மிகப் பெரும் சமுதாயம் இழிவில் அமுக்கப்பட்டது. இதிலிருந்து விடுபட தான் பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டிருந்தார்.

அதில் ஒரு கூறாகத்தான் வாழ்வியல் நிகழ்வுகளில் ஆரியர்களை ஒதுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத் தோடு தான் ஒவ்வொரு வாழ்வியல் நிகழ்ச்சியிலும் குழந்தைகளுக்கு பிறந்த நாள் எடுப்பதில் இருந்து, குழந்தைகளை பல பேர் பார்த்தால் கண்ணேறு பட்டுவிடும் என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் மாறி, குழந்தைக்கு பிறந்த நாள் விழா எடுத்து, அதை பல பேருக்கு காட்டி புகைப்படம் எடுத்து, அந்த மூட நம்பிக்கையை, அச்சத்தை மாற்றி காட்டுகிறோம். அடுத்து பெயர் சூட்டு விழாவை எடுத்துக் கொண்டால் இந்த நாளில் பிறந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட எழுத்துக்களில் தான் பெயர் வைக்க வேண்டும் என்று பெயர்களைத் தேடி, பொருளற்ற பெயர்களையும், கேவலமான பொருள் கொண்ட பெயர்களையும் வைத்துக் கொண்டனர். ஆரியர் களுடைய மேலாண்மையை நிறுவிக் கொள்வது மட்டுமல்ல, நம்மை அடிமையாகவும் வைத்திருக்கிற பண்பாட்டிலிருந்து மீள தரம் தாழ்ந்த பெயர்களை வைத்துக்கொள்ளாமல் பெயர் சூட்டு விழாவின் வழியாக சமுதாய புரட்சியாளர்களின் பெயர்களை யும் தமிழ்ப் பெயர்களையும் வைத்துக் கொள்கிறோம்.

எல்லாவற்றிலும் புகுந்து கொண்ட மூட நம்பிக்கை வீடுகட்டுவதில் இன்னும் கூடுதலாக இருக்கின்றது. வாஸ்து சாஸ்திரம் என்று ஒன்று வந்து இந்த மக்களை ஆட்டுகிறது. எல்லா ஊர்களிலும் ஒன்றிரண்டு வீடுகளையாவது இடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கட்டும்போது வாஸ்து பார்த்து வீடுகட்டி தொலைந்தால்கூட பரவாயில்லை என்று மன்னிக்கலாம். ஆனால், கட்டிய வீட்டை வாஸ்து சரியில்லை என்று இடிக்கிறார்கள். இந்த வாஸ்து என்பது ஆந்திராவில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டது. இதை அண்மைக் காலத்தில் மிக அதிகமாக எடுத்து கொள்கிறார்கள். பொதுவாக ஒரு நம்பிக்கை என்பது அறிவியல் சார்ந்ததாக இருக்குமேயானால், ஒரே விதமாக இருக்கும். ஆனால் வாஸ்து அவனவன் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆளுக்கொன்றாய் சொல் கின்றான். இந்த வாஸ்து சாஸ்திரத்தில் கழிவறை பற்றியெல்லாம் எழுதி வைத்திருக்கின்றான். ஆனால், ஒரு காலத்தில் வீட்டில் கழிவறை என்பதே கிடையாது. அரசர்களின் அரண்மனைகளில்கூட கழிவறைகள் கிடையாது. அதனால் தான் வெளிக்கு போதல் என்ற சொல்லாடலே உள்ளது. ஆனால், இப்பொழுது அதை தென்மேற்கு பக்கம் வைக்க வேண்டும் என்கிறன். வாஸ்து நிபுணர் பி.என். ரெட்டி தென்மேற்கில் வைக்கக்கூடாது என்கிறார். கவுரி திருப்பதி ரெட்டி, வீட்டுக்கு முன்னாடி மரம் அல்லது கம்பம் இருந்தால் பையன் இறந்து விடுவான் என்று எழுதி வைத்துள்ளான். ஆனால், பெரும்பாலான வீடுகளின் முன்னால் மின் கம்பம், தொலைபேசி கம்பம் இருக்கத்தான் செய்கிறது.

பி.என்.ரெட்டி என்பவர் ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமாராவுக்கு வாஸ்து சொன்னவர். அலுவலகத்திற்கு தெற்கே கதவிருப்பது ஆட்சிக்கு ஆபத்து, வடக்கே கதவு வைக்க வேண்டும் என்று கூறினார். வடதிசையில் குடியிருப்புகளாக இருந்தது. வாஸ்து மூடநம்பிக்கையால், அரசு பணம் பல கோடிகளை செலவு செய்து சாலை போட ஆரம்பித்தனர். சாலை போட்டு முடிப்பதற்குள் என்.டி.ராமராவ் ஆட்சி போய்விட்டது.

அடுத்து தேவகௌடா பிரதமராக வந்தபோது, 2 படிக்கட்டு இருப்பது சரியல்ல, மூன்று படிக்கட்டுகள் இருக்க வேண்டும் என்று வாஸ்து சொன்னான். அது பொதுப் பணித் துறைக்கு சென்று கட்டி முடிப்பற்குள் அவர் ஆட்சி போய்விட்டது. இதுதான் வாஸ்து சாஸ்திரம். இது மக்கள் மனதில் அவ்வளவு ஆழமாக புகுந்து, நேரத்தையும், பணத்தை யும், அறிவையும் இழக்கச் செய்கிறது.

வீட்டை கட்டி முடித்த பின்பு திறப்பதற்கு செய்யும் முயற்சி இருக்கிறது பாருங்கள். முதலில் பார்ப்பானை அழைப்பது. இப்பொழுது பார்ப் பானை தவிர்ப்பது என்பதே பெரும் புரட்சியாக ஆகிவிட்டது. பெரியவர்கள் சும்மாவா சொன் னார்கள் என்று பழமொழி சொல்வார்கள். ஒற்றை பார்ப்பான் எதிரில் வந்தால், ஆகவே ஆகாது என்பார்கள். ஆனால் ஒற்றை பார்ப்பானை அழைத்து வந்து வீடு திறப்பார்கள்.

மதியாதார் தலைவாசல் மிதியாதே என்றெல்லாம் சொல்வார்கள். பார்ப்பனர்கள், நம் அனைவரையும் கீழ் ஜாதி என்று மதிப்பதில்லை. அப்படி கொஞ்சம் கூட மதிக்காத பார்ப்பானை அழைத்து வந்து நம் வீட்டு நிகழ்ச்சியை ஏன் நடத்த வேண்டும்? அவனை விலக்கி வையுங்கள், இதுதான் முதல் வேண்டுகோள். மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று சொன்ன பெரியார், மக்களிடம் வைத்த முதல் வேண்டுகோள், மான உணர்வுக்கு எதிரான பார்ப்பானை, நம்மை மதிக்காத பார்ப்பானை அழைக்காதே.

அடுத்து, தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளை தமிழில் நடத்திக் கொள்வது, வடமொழியில் சொல்வதால் நமக்கு ஏதும் புரியாது. எனவே திருமணமாக இருந்தாலும் பெயர் சூட்டு விழாவாக இருந்தாலும் நமது நிகழ்ச்சிகள் அனைத்தையும், தமிழர்களைக் கொண்டு நடத்துங்கள். தமிழில் நடத்துங்கள் என்பதுதான் பெரியார் வைத்த கோரிக்கை. இப் பொழுது நாங்கள் பகுத்தறிவு பற்றியோ, விடுதலைப் புலிகள் ஆதரவு பற்றியோ பேசுகின்றபோது, அதில் உங்களுக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால், புரியாமல் இருக்காது. எனவே தமிழ் நாட்டில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில், தமிழர்கள் மத்தியில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில் தமிழில் நடத்தி னால்தான், அதில் இருக்கக்கூடிய தவறையாவது சுட்டிக்காட்ட முடியும்.

நம்முடைய மறுமலர்ச்சிக்கும், தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பதோடு, அரசியல் ரீதியான உரிமை பெறவும் பார்ப்பனர்கள் தடையாக இருக்கின்றார்கள். நம்முடைய உரிமைக்கு, உரிமை வாழ்வுக்கு தடையாக இருக்கும் பார்ப்பனர்களை புறக்கணிக்கவேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்து, நம் வீட்டு நிகழ்ச்சி களை அறிவார்ந்த முறையில் நடத்திக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைத்து.

அடுத்து, நம் உரிமை பெற்ற வாழ்வுக்காக, இழந்து போன வரலாற்றை மீண்டும் மீட்டெடுக்க, நாம் போராடியாக வேண்டும். அரசியலில் இந்தியாவிற்கு அடிமையாக இருக்கின்றோம். பொருளாதார சுரண் டலுக்கு நாம் வடவருக்கு அடிமையாய் இருக்கின் றோம். பண்பாட்டில், வடநாட்டான் ஆரியனின் ஆதிக்கத்திற்கு நாம் உட்பட்டிருக்கின்றோம். இதிலிருந்து விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கின்றபோது, ஒரு காலத்தில் 1938 இல் தமிழ்நாடு தமிழருக்கே என்ற முழக்கம் பிறந்தது. அதை ஆட்சியைப் பிடித்து நடைமுறைபடுத்து வோம் என்றவர்கள், அதன்பிறகு மாநில சுயாட்சி இப்போது இந்திய ஒருமைப்பாட்டைப் பற்றி பேசி வருகின்றார்கள்.

அரசியல் உரிமைகளை மீட்டு எடுப்பது, தமிழர் களுக்கான அரசியல், சமூக, பொருளாதார அரசியல் உரிமைகளை தமிழர்களே எடுத்துக் கொண்டால் தான், தமிழர்கள் விடுதலை பெற்ற மனிதர்களாக வாழ முடியும். விடுதலைப் பெற்ற நாடாக வாழ வேண்டும். அதைப் போராட்டமாக முன்வைக்கத் தயங்கினா லும், அதை நோக்கி குரலாவது எழுப்பவேண்டும்.

பக்கத்து ஈழ நாட்டில் ஒரு மானமுள்ள தமிழன் தொடங்கினான். அவன் பெரும் போரை நடத்தினான். அது மெல்ல மெல்ல வளர்ந்தது. முதலில் கூட்டாட்சி என்று தான் தந்தை செல்வா சொன்னார். அதன் பிறகுதான் தனிநாடு தீர்மானம். அறவழியில் போராட்டம், பிறகு ஆயுதம் தாங்கிய போராட்டம். இத்தகைய நீண்ட நெடிய போராட்டத்தை பார்த்த நாம், தமிழ்நாட்டில் நடந்த தலைகீழ் மாற்றத்தை மாற்றி மீண்டும், நாம் அவர்களைப் போல், முன்னேறிய பாதையில் செல்ல வேண்டும். புலிகளைப் பார்த்து மகிழ்கின்ற நாம், புலித் தலைவர்களை பார்த்து வியப்படையும் நாம், அவர்களைப் போன்ற உறுதியைப் பெற வேண்டும்.

பெரியார் சொன்னார் நம்முடைய கலை, பண்பாடு, இலக்கியம் எல்லாம் எப்போது இழந்தோம் என்றால், நம்மை இந்தியன் என்று கருதியபோதுதான், நமக்குள்ள தனித்துவத்தை எல்லாம் இழந்தோம். நம்மை இந்து என்று கருதத் தொடங்கிய போதுதான், நம் சமுத்துவ பண்பாட்டை இழந்தோம். சாதி மதத்திற்குள் புதைந்து போய் அடிமைத் தமிழர்களாய் ஆகிப்போனோம்.

இந்து, இந்தியன் என்ற இரண்டு கட்டுகளில் இருந்து விடுபடுவதுதான். விடுதலை பெற்ற தமிழர்களாய் மீள்வதற்கான வழி என்ற பெரியார் மொழியை, நினைவூட்டி, அனைவருக்கும் நன்றி கூறி, இந்த அழகிய வீட்டை கட்டியிருக்கும் தோழர் பா. உதயராஜ், உ. சுயசந்திரா எங்களது வாழ்த்துக்களை கூறி விடைபெறுகின்றேன்.

- செய்தி: அ.கோகுலகண்ணன்

நன்றி: பெரியார் முழக்கம்