கொலை கொள்ளை மிரட்டலும்
நல்ல மனிதர்கள் மாய்க்கப்படுவதும்
கற்பு சூறையாடுதலும்...
அன்பு காதல் கரைந்து போவதும்
வெள்ளப்பெருக்கும் வறுமையும்
உயர்பதவி ஆசையும்...
மனிதப் படுகொலைகள்
மகா சாதரணங்கள்
இனித்தப்ப முடியாது
இந்த யுக மானிடம்...
உலோகங்களின்
துளித்துளி வார்த்தைகளுக்கு
கட்டுப்படுகின்ற
மானிட வரலாறு இது...
கொலைகளுக்கு பரிசு வழங்கும்
புதிய நூற்றாண்டு இது...
விரல்களில் எமனை சுண்டும்
வீர விளையாட்டு
காலத்தை
கைகளுக்குள் பொத்திவைக்கும்
கடைசி கண்டு பிடிப்பு
இப்படி போகிறது
புதிய இந்தியா...?
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
எல்லை - சான்றோர் சிந்தனை - வானொலி உரை
4 days ago

1 comment:
mika arputhamaaka uruvaakki ulleerkal paarattukal validasan ramanathapuram
Post a Comment