Monday, November 4, 2013
தமிழக தமிழின போராளிகளை பயங்கரவாதியா
தமிழக தமிழின போராளிகளை பயங்கரவாதியாக சித்தரிக்க முயலும் ஆரிய திராவிட அரசிற்கு உங்கள் கண்டனத்தை பதியுங்கள்!
தமிழக அரசு ஈழ மக்களுக்கு ஆதரவாக சட்ட மன்ற தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு அவர்களுக்காக போராடும் தமிழின போராளிகள் மீது முதன் முறை
யாக “தேசியப் பாதுகாப்பு சட்டம்” என்ற கடுமையான போக்கை கையாண்டு தனது இரட்டை நிலையை
வெளிப் படுத்தியுள்ளது.
''தமிழக அரசின் தீர்மானத்தை அவமதிக்கும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசே, தமிழர்களின் உணர்வை அவமதிக்காதே. சல்மான் குர்ஷித்தே, மன்மோகன்சிங்கே இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதே...சட்டமன்ற தீர்மானத்தை இழிவுப்படுத்திய இலங்கை தூதர் கரியவாசகமே, இந்தியாவை விட்டு வெளியேறு. மத்திய அரசே... தமிழர்களின் கோரிக்கையை அவமதித்து, இந்தியா உடைவதற்கு வழி வகுக்காதே''..
என்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டரிக்கைளை பரவ லாக கொடுத்து அதன் அடிப்படையில் மயிலாப்பூர் மற்றும் சேலம் அஞ்சல் நிலையத்தின் மீது “திராவிடர் விடுதலை கழகம்” தமிழர்கள் 4 பேர் தாக்குதல் நடத் தியதற்காக அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், மற்றும் அவர்களை தூண்டியதாக அண்ணன் கொளத் தூர் மணி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
இதற்கு முன் இதே தோழர்கள் அயோத்திய மண்டப தாக்குதல், காவிரி சிக்கலில் ஆளுநர் மாளிகை உணவக தாக்குல், 2009ல் ஈழ ஆதரவு சிடிக்களை பரப்பியது, புத்த மடாலய தாகுதல், தினமலர் தாக்குதல், எ.ஸ்.வீ. சேகர் இல்ல தாக்குதல், காஷ்மீர் சிக்கலுக்காக போராடி யதற்காகவும் காவல் துறையின் அடக்குமுறையினால் சிறை பட்டிருக்கிறார்கள். மேலும் தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன் அவர்களும் தேடப்படும் குற்றவாளியாக இதில் சேர்க்கப் பட்டுள்ளார்.
இன்று சிறைப்பட்டிருக்கும் தோழர்கள் நால்வரும் தங்களின் முகம் காட்டாமல் உழைத்த சாமானிய உழைப்பாளிகள். கூலித் தொழிலாளிகள், நாள்தோறும் தங்களின் உழைப்பால் ஈட்டும் கூலியால் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டியவர்கள், சொந்த வீடு இல்லாமல் சாலையோர வீடுகளில் வாழ்பவர்கள் . எதிர் வினையா ற்றினால் என்ன சேதாரங்களை சந்திப்போம் என்று உணர்ந்து செயலாற்றியவர்கள்.. அவர்களுக்கு துணை நிற்போம்.. பொருளாதார முறையிலான உதவிகளை செய்திட விழைவோம்.
திராவிட இயக்க எதிர்ப்பு என்பது நம்மிடையே பரவி இருந்தாலும் தமிழின சிந்தனை அடிப்படையில் இப் போராளிகளுக்கு உதவுவது ஒவ்வொரு தமிழ் தேசிய வாதிகளின் கடமையாக கருதுவோம்.
தமிழ்போராளிகளை ீவிரவாதிகளாக,பயங்கரவாதியாக காண்பிக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு உங்கள் கண்டனத்தை பதியுங்கள் .
முகநூல் தொகுப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment