Thursday, October 3, 2013
மறுமலர்ச்சி மக்கள் சந்திப்பு
வைகோவை பார்த்தால் பல நேரங்களில் ஆச்சரியமாகத்தான் உள்ளது.
பத்தாயிரம் பேர் உள்ள பொது கூட்டத்திலும் பேசுகிறார் அடுத்த நாளே நூறு பேர் உள்ள தெருமுனை கூட்டத்திலும் பேசுகிறார் அதே உணர்வுடன் லக்ஷம் பேர் திரளும் மாநாட்டு கூட்டத்திலும் பேசுகிறார்.
ஏரலில் ஆரம்பித்த,மறுமலர்ச்சி மக்கள் சந்திப்பு என்று ஒவ்வொரு கிராமம் மற்றும் நகர வீதிகளில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நான் இப்போதுள்ள ஊடக கருவிகளை சரியாக பயன்படுத்தாமல் இப்படி நேரடியாக செல்வது சரியில்லை என்று ஒரு நண்பரிடம் விமர்சனம் செய்து இருந்தேன்.
அதே போல பல இடங்களில் எந்தவித முன் திட்டமிடலும் இன்றியும் கூட்டங்கள் இருக்க கூடாது , அப்படி நடக்கும் கூட்டத்திற்கு முன்பு வந்தவர்களே வருவார்கள் புதிதாக, கட்சியை சாராத பொது மக்களை அரசியல் கூட்டத்திற்கு கொண்டு வருவது மிகவும் கடினம் என்றும் பேசி கொண்டு இருந்தோம்.
ஆனால் வைகோ எதைபற்றியும் கவலை கொண்டவராக தெரியவில்லை.
அவரை பொறுத்தளவில் நூறு பேர், ஆயிரம் பேர், லக்ஷம் பேர் எல்லாவற்றிற்கும் எண்ணிக்கை வித்தியாசத்தை மனதில் கொண்டவராக தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment