இந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையம் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இங்கு ஹிந்தி மொழிக்கும் , ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் தான் முதலிடம். இதனால் தமிழக பயணிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பயணிகளை சோதனையிடும் காவலர்கள் அனைவரும் இந்தி மொழியினர். இவர்களுக்கு தமிழ் தெரியாது . இவர்களிடம் தமிழர்கள் தமிழில் பேசினால் இவர்கள் இந்தியில் தான் மறுமொழி கொடுப்பார்கள். அண்மையில் மலேசியாவில் இருந்து வந்த தமிழ் குடும்பத்திடம் இவர்கள் இந்தியில் திட்டி உள்ளனர். இதை புரிந்து கொண்ட மலேசியா தமிழ் குடும்பத்தினர் , இவர்களை திரும்ப திட்டி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்தியர்கள் , தமிழ் குடும்பத்தை விமானத்தில் ஏற முடியாதவாறு கைது செய்தனர். இப்படி பல வழிகளில் தமிழ் பேசும் மக்கள் மீது இந்தியர்கள் தங்கள் வன்மத்தை காட்டுகின்றனர்.
பயணிகளுக்கு இந்த நிலை என்றால் , விமான நிலைய ஊழியர்களிடம் கட்டாய இந்தி திணிப்பை செய்கின்றனர் இந்தி வெறியர்கள். படத்தில் காணப்படுவது போல , விமான நிலைய ஊழியர்கள் அலுவலகத்தில் இந்தியை பேசுங்கள், இந்தியில் சிந்தியுங்கள் , இந்தியில் எழுதுங்கள் என்று ஆங்காங்கே ஒட்டி உள்ளனர் இந்தி வெறியர்கள்.
இதை குறித்து அறிய விமான நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் ஆம் இங்கு ஒட்டியுள்ளது உண்மை தான் என்று ஒத்துக் கொண்டனர். ஏன் இவ்வாறு எழுதி உள்ளீர்கள் என்று கேட்டதற்கு , இங்கு உள்ள இந்தி வளர்ச்சித் துறை தான் ஒட்டி உள்ளது. இது நடுவண் அரசு கீழ் இயங்கும் அலுவலகம் , அதனால் இந்தியை ஊக்குவிக்கிறார்கள் என்று கூறினார் ஒரு அதிகாரி.
நான் கேட்டேன் , இது தமிழ்நாடு , தமிழில் பேசுங்கள் , எழுதுங்கள் , சிந்தியுங்கள் அப்படித் தானே இருக்க வேண்டும்? ஒரு மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களிடம் இன்னொரு மொழியை பேசுங்கள் எழுதுங்கள் சிந்தியுங்கள் என்று கட்டாயப் படுத்துவது நியாயமாகுமா ?
மேலும் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் தமிழில் பேசுவோம் , தமிழில் எழுதுவோம் என்று நாங்கள் எழுதி ஓட்டினால் அதை இந்தியர்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுப்பினேன் . அதற்கு அந்த அதிகாரியால் எந்த பதிலும் தர முடியவில்லை. நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானே பின்பு எதற்கு இப்படியான வெறிபிடித்த வாசகங்களை அனுமதிக்கிறீர் , கிழித்து எறியுங்கள் என்று கூறி , இந்த தகவலை விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் கொண்டு சேருங்கள் . எங்கள் கண்டனத்தை பதிவு செய்யுங்கள் என்று கூறினேன்.
தோழர்களே , விமான நிலையத்தை தமிழக அரசே கைப்பற்ற வேண்டும் . அது தனியாரின் கைகளுக்கு செல்லக் கூடாது . இந்திய அரசின் கைகளிலும் இருக்கக் கூடாது. தமிழக மக்களே தமிழக விமான நிலையத்தில் பணிபுரிய வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தி மொழியை திணிக்கும் கூடாரமாக இந்த விமான நிலையங்கள் விளங்கும் . இதற்கு நம் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் . இந்தி வெறியை தடுப்போம் . தமிழ் மொழியின் உரிமையை நிலைநாட்டுவோம்.
விமான நிலையத்திடம் பேச 044-22561515 / 22560551 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிலைய நிர்வாக (ஆப்பரேசன்ஸ்) பிரிவிடம் தொடர்பை இணைக்கவும். நேரடி எண் 044-22564395. அவர்களிடம் உங்கள் கண்டனத்தை பதிவு செய்யவும். இத்தகைய அறிவிப்பு பலகையை உடனே நீக்கச் சொல்லுங்கள். —
No comments:
Post a Comment