Wednesday, November 30, 2011

ஏன் இந்த கொலைவெறி: தமிழக மாணவர்கள் பதிலடி போராட்டம்

கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் கோவா மாநிலம் பனாஜியில் 42-ஆவது பன்னாட்டுத் திரைப்பட விழா நடைபெற்றுவருகிறது. பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திரைப்படத் துறையினரும், மாணவர்களுமாக மொத்தம் 8ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று (நவம்பர் 29) மதியம் உணவு இடைவேளைக்குப் பிறகு திரைப்பட விழா நடக்கும் வளாகத்தில் கூடிய கேரளாவைச் சேர்ந்த நடிகர் ’ஒரு தலை ராகம்’ ரவீந்தர், சில பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 30 பேர் ‘முல்லைப் பெரியாறு அணை இடிந்துவிடும்’ என்றும், ’புதிய அணையைக் கட்ட வேண்டும்’ என்றும் குரல் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, வளாகத்திற்குள்ளேயே ஊர்வலம் போலவும் நடத்தினர். இதனைக் கண்டு வெகுண்டெழுந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், திரைப்படத் துறையினர் 50-க்கும் மேற்பட்டோர் உடனடியாக ஒன்றுகூடி, ”8000 ஏக்கர் விளைநிலம், 3 கோடி மக்கள் வறட்சியில் சாகும் அவலத்தைத் தடுக்க வேண்டும்”, “முல்லைப் பெரியாறு அணையைக் காக்க வேண்டும்”, “அணையைச் சிதைப்பது, இந்திய ஒற்றுமையைச் சிதைத்துவிடும்”, “அன்பிற்குரிய கேரள மக்கள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்கவேண்டும்” “அன்பிற்குரிய கேரள மக்களே! ஏன் இந்த கொலைவெறி” என்றும் தொடர்ந்து உரக்க முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றனர். உடனடியான இந்த பதில் நடவடிக்கையைக் கண்டவர்கள் வியப்படைந்தனர். இரண்டு குழுவினரும் முழக்கம் எழுப்பி ஊர்வலம் சென்றதால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் நிலவியது. செய்தியாளர்களிடையே பேசிய மாணவர்கள், “கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து உடனடியாக தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு தமிழக மக்களின் வாழ்வாதாரம். அதனை ஒருபோதும் விட்டுத் தர முடியாது. இதற்காக தமிழக மாணவர்கள் போராடுவார்கள்” என்று தெரிவித்தனர். இந்திய, பன்னாட்டு பத்திரிகையாளர்கள், பார்வையாளர்களிடம் அவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை தொடர்பான உண்மை நிலைமையினை விளக்கினர். பிறகு அங்கு வந்த காவல்துறையினர் தமிழ் மாணவர்களைக் கலைந்து செல்லுமாறு வேண்டினர். ”கேரளப் போராட்டக் குழுவினர் கலைந்து சென்றால் தான் நாங்களும் கலைந்து செல்வோம். அவர்கள் ஒரு வேளை போராட்டம் செய்தால் தொடர்ந்து பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்து, பின்னர் கேரள போராட்டக் குழுவினர் கலைந்து சென்றதும் தமிழ்மாணவர்களும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

Tuesday, November 29, 2011

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பொருட்களை தடுப்போம்- சீமான்

நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கை. கேரள மக்கள் அனைவரும் முழுமூச்சில் மீண்டும் தமிழர்களுக்கு எதிராய் அவதூறையும் விஷமப் பிரச்சாரத்தையும் தொடங்கி விட்டார்கள்.முல்லை பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என்று இன்று இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தியிருக்கிறார்கள்.கேரள முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமரைச் சந்தித்து அணை குறித்து முறையிட்டிருக்கிறார்கள்.பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கேரள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.மேலும் காந்தி சிலை முன்பு தர்ணாவில் இறங்கியுள்ளார்கள்.டெல்லியில் டேம் 999 என்னும் விஷமப் படத்தை பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருக்கும் திரையிட்டுக் காட்டியிருக்கிறார்கள். இதன் மூலம் கேரள அரசும் அங்குள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராய் மறைமுகப் போரில் இறங்கியுள்ளனர் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. எண்ணற்ற முறை,பல மட்டங்களில்,கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தமிழர்களுக்கு உரிய,நியாயமான தீர்வு கிட்டவில்லை என்ற நிலையில் வேறு வழியின்றித் தான், தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றம் சென்று முறையிடப்பட்டது.உச்சநீதிமன்றமும் ஏழு பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அமைத்து அவர்களது அறிக்கையின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம் என்று தீர்ப்பளித்து விட்டது.ஆனால் தீர்ப்பளித்து காலங்கள் பல கடந்தும் அதனை அமல்படுத்துவதற்கு எதிராய் இதுவரை பல முட்டுக்கட்டைகளைப் போட்டு,அதற்கு எதிராய் செயல்பட்ட கேரள அரசு இப்பொழுது நில நடுக்கத்தால் அணை உடையும் அபாயம் இருப்பதாகவும் அதனால் எண்ணற்ற மக்கள் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகவும் பல வழிகளில் புதிய விஷமப் பிரச்சாரத்தினை ஆரம்பித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் முல்லை பெரியாறு அணைக்கு எந்தச் சேதமும் இல்லை என அணையை ஆராய்ந்த பின்பு மத்திய புவியியல் ஆராய்ச்சித்துறை இயக்குனர் ஜான் மேத்யூ தெரிவித்துள்ளார்.கடல் மட்டத்தில் இருந்து முல்லை பெரியாறு அணை 2 ஆயிரத்து 889 அடியில் இருக்கிறது.ஆனால் அணை உடைந்தால் அழிந்து போகும் என கேரளத்த்தினர் கூறும் குமுளிப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 100 அடியிலும்,வண்டிப்பெரியாறு 3 ஆயிரத்து 350 அடியிலும்,பாம்பனாறு 3 ஆயிரத்து 750 அடியிலும் இருக்கிறது.இது ஒன்றே போதும் மலையாளிகள் தண்ணீரில் வடிகட்டிய பொய்யை எவ்வாறு கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பதனை நிரூபிப்பதற்கு. தென்மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் நலனில் எங்கோ இருந்து வந்த ஆங்கிலேயன் பென்னிக்குக்கிற்கு இருந்த அக்கறையில் துளியளவு கூட கூப்பிடு தூரத்தில் உள்ள கேரள மக்களுக்கும் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்கும் இல்லை.மாறாக வெறுப்பும் குரோதமும் மண்டிக் கிடக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து மின்சாரம்,மீன்,கறி,அரிசி,உப்பு,புளி,மணல் என தொடர்ந்து சுரண்டிக் கொழுக்கின்றனர்.அங்கிருந்து கொழுத்தது போதாது என்று இங்கு வந்தும் சுரண்டுகின்றனர்.ஆனால் பதிலுக்கு தமிழக விவசாயிகளின் வாழ்விற்குத் தேவையான தண்ணீரைத் தர மறுக்கின்றனர்.தண்ணீரைத் தர மறுப்பவர்கள் தான் இங்குள்ள விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களினால் உயிர் வாழ்கின்றனர். சர்வ தேசியம் பேசும் கம்யூனிஸ்டுகள்ஆட்சி செய்தாலும் சரி,இந்திய தேசியம் பேசும் காங்கிரசுக்காரன் ஆட்சி செய்தாலும் சரி,இது தான் நிலை.கேரள மக்கள் தன்னை திராவிடன் என்றோ இந்தியன் என்றோ கருதுவதில்லை. மலையாளிகளாகக் கருதுகின்றனர். இதே நிலை நீடித்தால் அவர்களது கொட்டத்தை அடக்க இங்கிருந்து கேரளாவிற்குச் செல்லும் அனைத்துப் பொருட்களையும் தடுத்து நிறுத்தவும்,அணை இருக்கும் பகுதிகளை மீண்டும் தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தையும் அதிவிரைவில் நடத்த நாம் தமிழர் கட்சி தயங்காது என எச்சரிக்கிறோம்.
ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ல் மாவீரர் நாளை கொண்டாடிவரும் கொளத்தூர் பகுதியில் உள்ள ஈழவிடுதலை ஆதரவாளர்கள், நேற்று பெய்த கடும் மழையிலும் மாலை 5.00 மணி முதலே, புலியூர் பிரிவில் கூடத் தொடங்கி விட்டனர். விடாமல் பெய்து கொண்டிருந்த மழை மாலை சரியாக 6.00 மணிக்கு நின்றுவிட்டது. மாலை 06.05 மணிக்கு மாவீரர்களின் நினைவாகவும், அவர்களின் வீரத்தையும், புகழையும் போற்றி பாடப்படும் பாடல்கள் ஒலிக்க வந்திருந்த பொதுமக்கள் மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள். அதற்கு பின்னர், சமர்ப்பா குமரன் குழுவினரின் புலிகளின் வீரம் பற்றி பாடிய இசை நிகழ்ச்சியும், பாவலர் அறிவுமதி அவர்கள் எப்படியிருந்தது ஈழம் என்ற தலைப்பில் விடுதலைப்புலிகளின் ஆட்சி ஈழத்தில் எப்படி நடைபெற்றது என்பதைப்பற்றி விளக்கி பேசினார். கொளத்தூரில் இருந்த பயிற்சி முகாமில் பயிற்சி எடுத்த ஒரு புலிவீரன், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றுள்ளான். அப்போது அந்த வீட்டில் இருந்த பெரியம்மா விருந்தினராய் வந்த அந்த வீரனுக்கு இரண்டு பிஸ்கட் துண்டுகளை கொடுத்து உபசரித்துள்ளார். அந்த வீரன் முகாமுக்கு சென்று பெரியம்மா கொடுத்த இரண்டு பிஸ்கட் துண்டு பற்றி பொன்னம்மானிடம் சொன்னபோது, உனக்கு மட்டும் இரண்டு துண்டு பிஸ்கட் கிடைத்தால் போதுமா..? அதே பிஸ்கட்டை மற்றவர்களுக்கும் நீ கொண்டுவந்து கொடுத்திருக்க வேண்டாமா..? அவர்களுக்கும் அந்த பிஸ்கட் மீது ஆசை இருக்காதா...? என்று கேட்டுள்ளார். தவறை உணர்ந்த அந்த புலிவீரன் தான் பிஸ்கட் உண்டதுக்காக மன்னிப்பு கேட்டுள்ளான். புலிகளின் இயக்கத்தில் மன்னிப்பு என்பதே கிடையாது என்பதால், முகாமில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் அதே அளவுக்கு பிஸ்கட் வாங்கிவரும்படி சொல்லி அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார் பொன்னம்மான். அந்த வீரன், வாகனத்தில் சென்று பிஸ்கட் வாங்கிவர தயாராகியுள்ளார், இந்த வாகனம் இயக்கத்துக்கு சொந்தமானது அதை இப்போது நீ உன்னுடைய சொந்த வேலைக்கு பயன்படுத்த கூடாது என்று வாகனத்தில் செல்ல அனுமதிக்க மறுத்துவிட்டார் பொன்னம்மான். பின்னர் அந்த வீரன் நடந்தே சென்று அனைத்து வீரர்களுக்கும் தேவையான பிஸ்கட்டுகளை வாங்கிக் மூட்டையில் கட்டி தூக்கிக்கொண்டு வந்துள்ளார். தனது பிள்ளைகளிடம் பொன்னம்மான் எப்படி நடந்து கொண்டார் என்பதற்காக நான் இதை சொல்லுகிறேன், பொன்னம்மான் அப்படி நடப்பதற்கு காரணம்... என்ன...? அவருக்கு வழிகாட்டியான தலைவர் அப்படிப்பட்டவர். வீரம் அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு இராணுவ அமைப்பிலும், காவல்துறையிலும் இல்லாத மனித நேயங்களை நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் மட்டும் பார்க்க முடியும். திருமணமான சில மாதங்களில் போருக்கு வந்த ஒரு சிங்கள வீரன், விடுதலைப்புலிகளிடம் சிறைபட்டுவிட்டான். கைது செய்யப்பட்ட அந்த வீரன் புலிகளின் சிறையில் சிலவருடங்கள் இருந்தபோது அவன் தன்னுடைய இளம் மனைவியை சந்திக்க வேண்டும் என்று இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கு கடிதம் எழுதினான், அந்த கடிதம் தலைவரிடம் சென்றது... தலைவரிடம் அதற்கு அனுமதியும் கிடைத்தது. குறிப்பிட்ட ஒருநாளில், சிங்கள் வீரனின் மனைவி அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு வந்தார். தந்து கணவனை சந்தித்து பேசினாள், மாலை வரை இருவரும் குடும்ப விடயங்களை பேசினார்கள். மாலையில் அனுராதபுரத்துக்கு செல்லும் தொடர்வண்டிக்கு அந்த பெண்ணை புலிகள் அழைத்து சென்றனர். ஏதோ காரணத்தால் அன்று அந்த தொடர்வண்டி வரவில்லை... என்ன செய்வது ஒரு பெண்ணை அதுவும் சிங்கள இனத்தை சேர்ந்த ஒரு இராணுவ வீரரின் மனைவியை எங்கு தங்க வைப்பது என்று பொறுப்பாளர்கள் தடுமாறினார்கள். தகவல் தலைமைக்கு சென்றது, அந்த பெண் தனக்கு எந்த இடம் பாதுகாப்பானது என்று கருதுகிறாளோ அந்த இடத்தில் தங்க வையுங்கள் என்று தலைவர் சொல்லிவிட்டார். அந்த பெண் தன் கணவனுடன் தங்க விரும்பினாள்.... அவளின் விருப்பப்படியே கணவனும் மனைவியும் தங்கினார்கள். இரவு முழுவதும் கணவனுடன் தங்கிய அந்த பெண், மறுநாள் மகிழ்ச்சியுடன் தன்னுடைய உறவினர்கள் உள்ள பகுதிக்கு சென்றுவிட்டாள். ஆனால், மூன்று மாதத்திற்கு பிறகு புலிகளின் தலைமைக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், தான் கணவனை சந்திக்க வந்தபோது மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டமைக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தாள் அந்த பெண், கூடவே தான் கருவுற்று இருப்பதாகவும், ஆனால் இந்த கரு எப்படி உருவானது என்று உறவினர்கள் கேட்டால் நான் என்ன செய்யட்டும், நானும்... எனது கணவனும் சேர்ந்து இருந்ததால் தான் இந்த கரு உருவானது என்று சொன்னால் இந்த உலகம் நம்புமா...? இதனால் என் நடத்தையின் மீது கெட்டபெயர் உருவாகுமோ...? என்று தான் பயப்படுவதாக சொல்லி கடிதம் வந்தது. அந்த பெண்ணின் கடிதம் தலைவரின் பார்வைக்கு போனது, ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கல் சாதாரணமானதல்ல.... இதை தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்த தலைவர் மீண்டும், அந்த பெண்ணுக்கு கடிதம் எழுதினார். நீ, உனது மாமியார் மற்றும் உங்கள் ஊரின் பௌத்த மதகுரு மூவரும் குறிப்பிட்ட இந்த நாளில் கிளிநொச்சிக்கு வாருங்கள் என்று அந்த கடித்தத்தில் எழுதப்பட்டிருந்தது. அதன்படி கிளிநொச்சிக்கு வந்த அந்த மூவரையும் அழைத்து சென்று அந்த சிங்கள் வீரனிடம் விட்டார்கள், தாங்கள் இருவரும் ஒருநாள் இரவு சேர்ந்திருந்தது உண்மை என்றும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் கரு என்னுடையதுதான் என்றும் தான் தாயிடமும், மதகுருவிடமும் சொன்னான் அந்த சிங்கள இராணுவ வீரன். என் கணவன், மாமியார், மதகுரு மூவரும் உட்கார்ந்து பேசி விட்டாதால் எனக்கு குடும்பத்தில் ஏற்ப்பட்ட களங்கம் தீர்ந்துவிடும். ஆனால், ஊரில் உள்ளவர்கள் எப்படியும் என்னுடைய நடத்தையை தவறான கண்நாட்டத்தில் தான் பார்ப்பார்கள், பேசுவார்கள் நான் என செய்யட்டும் என்று அந்த சிங்கள பெண் கண்ணீரோடு நின்றாள். அந்த சிங்கள பெண்ணின் கற்புக்கு களங்கம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார் தலைவர். உலகின் எந்த நாட்டு இராணுவத்திலும் செய்யாத ஒரு காரியத்தை செய்தார். ஆமாம், அந்த இராணுவ வீரனை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்தார். பெண்ணின் கண்ணீருக்கும் கற்புக்கும், நெரிக்கும், மதிப்பளிக்கும் வழக்கம் தமிழில் உள்ள புறநானூற்று பாடல்களில் மட்டுமே நான் கண்டுள்ளேன், ஆனால் பிரபாகரன் என்ற தலைவரிடம் அதை நேரில் கண்டுள்ளேன் என்று பாவலர் அறிமதி அவர்கள் பேசினார்.

Monday, November 28, 2011

தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள், குவைத்

குவைத் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் தமிழ்த்தேசிய நினைவெழுச்சி நாள், 25.11.2011 அன்று தோழர்.செங்கொடி நினைவரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வரவேற்புரை நல்கி கவிஞர். விருதைபாரி அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றிவைத்திட தோழர்.தமிழ்நாடனை அழைத்தார். தோழர்.தமிழ்நாடன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி தொடக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து முனு.சிவசங்கரன் அவர்கள் மாவீரர்நாள் உறுதிமொழி செய்துவைத்தார்கள். தொடர்ந்து, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர். தியாகு அவர்களின் மாவீரர்நாள் அறிக்கையினை தொழிலதிபர் சாமி வெளியிட பொறியாளர் இராமன் அவர்கள் பெற்றுக்கொண்டர்கள். தோழர். சிவமணி, தோழர்.பகலவன் ஆகியோரின் எழுச்சிமிகு மாவீரர்நாள் கவிதையினைத் தொடந்து, தோழர்.முனு.சிவசங்கரன் அவர்களும் தோழர்.பின்னலூர் மணிகண்டன் அவர்களும் உரையாற்றினார்கள். தொடர்ந்து உரையாற்றிய பொறியாளர் முத்து அவர்கள், இலங்கை விமானத்தில் பயணிப்பதை புறக்கணிக்கவும், எதிரிகளின் பொருட்கள் தயாரிப்புக்களை புறக்கணிக்கவும் கோரிக்கையினை முன்வைத்து எழுச்சியான உரைநிகழ்த்தினார்கள். இதைத்தொடர்ந்து, தமிழகத்திலிருந்து இணையம் வழி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர்.தியாகு அவர்கள் மாவீரர்நாள் உரை நிகழ்த்தினார்கள். அடுத்து பொறியாளர் இராமன் அவர்கள் தமிழர்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்ற கருத்தை முன்வைத்து உரையாற்றினார்கள். தொடர்ந்து, நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமர் திரு. உருத்திராபதி சேகர் அவர்கள் இணையம் வழி மாவீரர்நாள் உரையாற்றினார்கள். தொடர்ந்து தோழர்கள் இரகுநாதன், தோழர். பட்டுக்கோட்டை சத்யா அவர்கள் எழுச்சிமிக்க கவிதையோடும் தோழர் செந்தில்குமார், தோழர்.மாதவன், கவிஞர் தோழர் வித்யாசாகர் அவர்கள் உணர்வுமிக்க கவிதையோடும் பொறியாளர் சேகர் அவர்களும் உரையாற்றினர். அடுத்து, தினமலரைப் புறக்கணிப்போம் என்றக் கோரிக்கையோடு உறுதிமொழி ஏற்றிவைக்க, தோழர் செல்லம்மா வித்யாசாகர் அவர்கள் முதல் ஒப்பம் இட்டு தொடங்கிவைக்க பங்கேற்ற அனைவரும் ஒப்பம் இட்டார்கள். இறுதியாக, தோழர் வின்சென்ட் அவர்கள் உரையாற்றினார்கள். காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பில் உருவாக்கப்படும் தோழர்.செங்கொடி நினைவுமண்டப பணிகளுக்கு கொடைஅளிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை தோழர். தமிழ்நாடன் முன்வைக்க பலரும் முன்வந்து கொடைநல்கினர். தனது குடும்பத்தார் படித்துவந்த தினமலர் நாளிகையினை நிறுத்தச்செய்த தோழர் குமரேசன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அவையில் நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது. மிகுந்த எழுச்சியோடும் உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்ற இந்நிகழ்வில் தொழிலதிபர்கள் இராசேந்திரன், செந்தில் ஆகியோரும் தோழர்.செயபாலன், தோழர். பிரான்சிசு சீசர், தோழர். சிவராமகிருட்டிணன், தோழர். நடராசன், தோழர் கருப்பசாமி, கவிஞர் தமிழ்க்காதலன், ஓவியர் கொண்டல்ராசு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் புகைப்படங்களைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: https://picasaweb.google.com/112864862706759070212/MaaveerarNaal2011 த.தே.வி.இ. பொதுச் செயலாளர் தோழர் தியாகு, நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப்பிரதமர் திரு.உருத்திராபதி சேகர் ஆகியோரின் காணொளி இணைப்பை இங்கு காணலாம்: http://www.youtube.com/user/thamizhnadan?feature=mhsn குவைத் தமிழர் கூட்டமைப்பு

Thursday, November 24, 2011

"பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?

வால் தெருவைக் கைப்பற்றுவோம்'' என்னும் போர் முழக்கம் அண்மைக்கால உலகில் ஓர் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வால் தெரு அமெரிக்க முதலாளித்துவத்தின் புகலிடம்! ""பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?'' என்னும் வெளிப்படையான கேள்வி அமெரிக்காவை மூச்சுத் திணறச் செய்துவிட்டது. உலகின் பாதி சிவப்பாகிவிட்ட காலகட்டத்தில்கூட, இப்படி ஒரு போராட்டம் அமெரிக்காவில் வேர் பிடிக்க முடியவில்லை. உலகெங்குமுள்ள நாடுகள் சுரண்டப்படுவதால், குவிந்து வழிகின்ற செல்வத்தில் அடிமட்ட மக்களுக்குப் பங்கில்லை என்றாலும், வழிவதைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வாய்ப்பாவது அவர்களுக்கு இருந்தது. அதோடு அவர்கள் அமைதியடைந்தனர். இன்று "உயிரைக் கையில் பிடித்துக் கொண்டாவது வாழலாம்' என்னும் நிலைக்கும் மோசம் வந்துவிட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒருபுறம்; கிடைக்கும் வேலைக்கும் போதிய ஊதியம் இல்லை என்பது இன்னொருபுறம். ஒபாமாவுக்கு முந்திய காலத்திலேயே இந்தச் சிக்கல் தோன்றிவிட்டது. ஆயினும், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் சிறந்த தீர்வைத் தன்னால் வழங்க முடியும் என்று ஒபாமா தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்! ""இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்த அந்த மக்கள் நாம்தாம்!'' ஒபாமாவின் இந்த முழக்கம் அமெரிக்கர்களுக்குக் கிளர்ச்சி ஊட்டியது. அந்தத் தருணம் வந்துவிட்டதாக மக்கள் நம்பினார்கள். மூடி இறுகிப் போயிருந்த கதவுகளை ஒபாமா திறந்துவிடப் போகிறார்; வாழ்க்கைச் சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரப்போகின்றன என்று எதிர்பார்த்திருந்தார்கள். பொருளாதார முறை மாறாமல் பீடத்தில் அமர்கின்ற மனிதர்கள் மாறுவதால் என்ன மாற்றம் வந்துவிட முடியும்? ஒபாமா இன்று புறந்தள்ளப்பட்ட மனிதராகிவிட்டார்! 1989-ல் சோவியத் நாடு சீர்குலைந்து சிதறிச் சின்னாபின்னப்பட்ட பிறகு, தம்பட்டம் அடித்துக்கொண்டு உயர்ந்தெழுந்த தாராளமயமாக்கல் கொள்கை உலகை ஒரு கிராமமாகச் சுருக்கி பன்னாட்டு முதலாளிகளை வெடித்துப் போகுமளவுக்குப் பெருக்கச் செய்தது. அந்தக் கொள்கை உலகெங்கும் எண்ணற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தது. மன்மோகன் சிங்கும், அலுவாலியாவும், ப. சிதம்பரமும் இந்தியாவில் அந்தக் கொள்கை ஈன்றெடுத்த மக்கள்தாம்! நாளொன்றுக்கு 32 ரூபாய் வருவாய் உள்ளவனும், ஒரு கணவனும், மனைவியும் இரு மக்களும் வசிப்பதற்கு 77 மாடிகள் கொண்ட வீட்டை 7,000 கோடி ரூபாய்க்குக் கட்டிக் கொண்டுள்ள அம்பானியும் வறுமைக் கோட்டுக்கு மேலானவர்கள் என்று ஒரே தட்டில் வைத்துச் சமப்படுத்த நினைக்கும் மன்மோகன் அரசின் கொள்கைகள் தாராளமயமாக்கல் கொள்கையிலிருந்து இரவலாகப் பெறப்பட்டவைதாம். ஒரு தனிமனிதன் தன்னுடைய சிறு தொழில் முறிந்து திவாலாகிப் போகின்றபோது கண்டுகொள்ளாத ஓர் அரசு, விஜய் மல்லைய்யாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் கடனில் மூழ்குகின்றபோது கவலை கொள்கிறது. அரசு கை கொடுக்க வேண்டும் என்பதை ஒரு கடமையாக்குகிறது அந்த நிறுவனம்; அப்படிச் செய்வது இன்றியமையாதது என்று மத்திய அமைச்சர் வயலார் ரவியும் பரிந்துரைக்க முந்துகிறார். இதேபோல் அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் வங்கிகள் முறிவுற்றபோதும், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நலிவுற்றபோதும், அவற்றுக்கு முட்டுக்கொடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் முனைந்து நின்ற நிலையில் மக்களிடம் ஏற்பட்ட கொதிப்புத்தான் இந்த "வால் தெருவைக் கைப்பற்றுவோம்' என்ற போராட்டம். மக்களின் வரிப்பணம் பெருமுதலாளிகளை முட்டுக்கொடுக்க ஏன் செலவு செய்யப்பட வேண்டும்? அவர்களின் நிறுவனங்களைக் காக்க அரசு ஏன் முன்னுரிமை அளிக்க வேண்டும்? வளம் கொழிக்கச் செய்யும் பொருளாதாரக் கொள்கை என்றீர்களே! தொண்ணூறு பேரை உறிஞ்சிப் பத்துப் பேர் வாழ்வது என்ன கொள்கை? வசதியுள்ள சிலருக்கும் வசதியற்ற பலருக்கும் உலகம் இதுவரை அறிந்திராத வகையில் இடைவெளி அகன்று போயிருப்பதுதானே இந்தக் கொள்கையால் ஏற்பட்ட பயன்? பெருமுதலாளிகளோடு கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சி நடத்துவதன் விளைவுதானே இந்த அராஜகப் போக்கு! கூழுக்குப் போட உப்பில்லை என்பானுக்கும், பாலுக்குப் போடச் சீனி இல்லை என்பானுக்கும் கவலை ஒன்றுதான்! ஆனால், தேவை ஒன்றுதானா? எவனுடைய தேவை முன்னுரிமை உடையது? "கடையனுக்கும் கடைத்தேற்றம்' என்னும் நூலில் சான்ரசுகின் சொல்வார்: ""ஒருவனிடம் பத்து ரூபாய் இருப்பதால் அவன் மகிழ்ச்சியடைவதில்லை; பக்கத்திலிருக்கும் இன்னொருவனிடம் அந்தப் பத்து ரூபாய் இல்லாதபோதுதான் அவன் மகிழ்ச்சி அடைகிறான். அப்போதுதான் அடுத்தவனுக்கு ஒரு விலை குறிக்க முடியும்?'' தாராளமயமாக்கல் கொள்கை மேட்டுக்குடியினர்க்கும், அடிமட்ட நிலையினர்க்கும் இருக்கும் இடைவெளியை மென்மேலும் பெருக்குவதில்தான் உயிர்த்திருக்கிறது. 2008-ல் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கும் பொருளாதாரச் சீர்குலைவின் விளைவுதான் பெருமுதலாளிகளுக்கு எதிராக ஆங்காங்கே வெடித்துக் கிளம்பும் இந்தப் போராட்டம்! கிரீசு நொறுங்கிவிட்டது; இத்தாலி தவியாய்த் தவிக்கிறது. அயர்லாந்து நன்றாக இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில் எந்த நாட்டு மக்கள்தான் நிறைவாக வாழ்கிறார்கள்? அமெரிக்காவின் நியூயார்க், இங்கிலாந்தின் லண்டன், இத்தாலியின் ரோம், ஜெர்மனியின் பிராங்பர்ட், ஸ்பெயினின் மாட்ரிட், போர்ச்சுகலின் லிஸ்பன், செர்பியா, மெக்ஸிகோ, பெரு, சிலி என 82 நாடுகளில் 951 நகரங்களில் "வால் தெருவைக் கைப்பற்றுங்கள்' என்னும் போர்த் தீ கொழுந்து விட்டு எரிகிறது. இந்தப் போராட்டத்தின் சிறப்பு அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் இதன் களங்களாக உள்ளன என்பதுதான். இன்னொரு சிறப்பு, குறிப்பான எந்தத் தலைவனாலும் இது வழிநடத்தப்படவில்லை என்பது. தானாக வெடித்துக் கிளம்பிய ஒன்று இது! பிறிதொரு பெருஞ்சிறப்பு, இந்தப் போராட்டம் எந்தக் குறிப்பிட்ட தனியொரு ஆட்சியாளனுக்கும் எதிரானதில்லை. கோபம் ஒபாமா மீதன்று, கடைப்பிடிக்கப்படும் பொருளாதார முறையின் மீதானது. ஒபாமாவானாலும், புஷ் ஆனாலும், மன்மோகன் ஆனாலும், அத்வானி ஆனாலும், எவரானாலும் போர்டு நிறுவனத்துக்கும், அம்பானிகளுக்கும் சேவை செய்ய வந்தவர்களே! 2008-ல் பல மேலைநாடுகளைத் தாக்கிய பொருளாதார மந்தம் என்னும் நிலை இந்தியாவைத் தாக்கவில்லை என்று மன்மோகன் ஒரு முறை மகிழ்ந்தார். ஆனால், அதற்கு முன்னரே இந்தியாவின் நிலை கவலைக்கிடம். அங்கே 82 நாடுகளில் போராட்டம் என்றால் இந்தியாவில் ஒரிசா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், பிகார், மகாராஷ்டிரம், ஆந்திரம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் போன்ற ஒன்பது மாநிலங்களில் 60 மாவட்டங்களில் நம்முடைய ஆட்சியும் இல்லை; அரசியல் சாசனமும் இல்லை. அவை மாவோயியவாதிகளின் பிடியில் இருக்கின்றன. ஆந்திரம் தொடங்கி நேபாளம் வரை அந்த இயக்கம் வேர் பி டித்து நிலைபெற்றிருக்கிறது. இந்தியாவின் உள்துறை அமைச்சராகத் திகழும் ப. சிதம்பரம், ""மாவோயியம் என்பது பயங்கரவாதத்தை விடக் கொடுமையானது'' என்று சொல்கிறார். அவரால் பயங்கரவாதத்தையும் ஒழிக்க முடியவில்லை; மாவோயியத்தையும் ஒழிக்க முடியவில்லை. அலைக்கற்றை ஊழலில் இவர் பெயரும் சேர்ந்து அடிபடத் தொடங்கிய உடனே, இவர் சனியின் பீடிப்புத்தான் இதற்குக் காரணம் என்று ஒரு நவக்கிரகக் கோயிலுக்குத் தன் மனைவி, மகன், மருமகளுடன் சென்று காக்கை மண்பொம்மையைத் தலையில் சுமந்துகொண்டு குடும்பத்துடன் மூன்று முறை பிராகாரம் வந்திருக்கிறார். மாவோயியத்தையும், பயங்கரவாதத்தையும் ஒழிப்பதற்குக்கூட ஏதாவது ஒரு தீர்த்த யாத்திரைக்குச் சிதம்பரம் திட்டமிட்டு வைத்திருக்கக் கூடும்! 60 மாவட்டங்களில் மாவோயியவாதிகள் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் என்ன? இந்தியா முழுவதும் வனச் செல்வம், மலைச் செல்வம், சுரங்கச் செல்வம் ஆகியவை கடந்த சில காலங்களாகக் கொள்ளையடிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. ஆட்சியாளர்களும் தொழில் நிறுவனங்களும் கூட்டாளிகள்! மதுரைக்குப் பக்கத்தில் கீழவளவில் இருந்த ஒரு மலையே காணாமல்போய், மலை இருந்த இடம் சமதளம் ஆகிவிட்டது. அழகிரி ஆசீர்வாதம் மலைக்குக் கிட்டாமல், சில மனிதர்களுக்குக் கிட்டியமையால் மலை தன் ஆவியைத் துறந்துவிட்டது என்கிறார்கள் சுற்றுப்புறத்தில் வாழும் பொதுமக்கள். கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் கைங்கர்யத்தால் ஒரு சுரங்கமே சீனாவுக்கு ஏற்றுமதியானது; எல்லாம் நம் அரசின் துணையோடுதான். அதில் அடித்த கொள்ளையைக் கொண்டு ரெட்டி சகோதரர்களால் எடியூரப்பாவின் அரசை உருவாக்கவும் முடிந்தது; அவரைக் கண்ணீர் விட வைத்துக் கீழிறக்கவும் முடிந்தது. மாவோயிய முறைகள் நியாயமானவை என்பதல்ல; சுரண்டல்காரர்களோடு கூட்டணி சேரும் ஆட்சியாளர்கள்தாமே மாவோயியவாதிகளின் பிறப்புக்குக் காரணம். பெருமுதலாளிகளின் கருவறையில் அவர்களுக்கு எதிரானவர்கள் வளர்கிறார்கள் என்பதுதானே மார்க்சீய அறிவு வாதம். மாவோயியவாதிகளோடு மன்மோகன் சிங்குக்குள்ள கோபமே கனி வளங்களைச் சந்தைப்படுத்த முடியவில்லை என்பதுதானே. தாராளமயமாக்கல் என்பதன் தாரக மந்திரம் சந்தை. தன்னுடைய பேரழகு மனைவியின் மேகம் போன்ற பெருங்கூந்தல் கூட ஒரு தொழில்முனைவோனுக்குச் சந்தைப் பொருள்தான்! "வால் தெருவைக் கைப்பற்றுவது' என்பதன் பொருள் சுரண்டலை ஒழிப்பது என்பதுதான். பத்துப் பேர் வாழத் தொண்ணூறு பேர் சாவதா?

Tuesday, November 22, 2011

'டேம் 999' படத்தை தடை செய்ய வைகோ வலியுறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் சதிதிட்டத்தின் ஒருபகுதியாக, 'டேம் 999' என்ற ஆங்கிலத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மதிமுக பொதுச் செயலர் வைகோ, இப்படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுமானால், அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த, மதிமுக அறப்போரில் ஈடுபடும் என்று அவர் எச்சரித்துள்ளார். கேரளத்தின் சதிகார சக்திகள், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்கு, இவ்வளவு காலமும் ரகசியமாக வைத்திருந்து, படத்தைத் தயாரித்து, வருகின்ற 25 ஆம் தேதி, இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வெளியிட இருக்கின்றனர். படத்தின் பெயர், டேம் 999. இந்தத் தலைப்பே விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை, உடைந்து நொறுங்குவது போலவும், பிரளயமாய் வெள்ளம் பாய்வது போலவும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட, பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர். , நவ.22: டேம் 999 திரைப்படம் தமிழக திரையரங்குகளில் திரையிடப்படுமானால் அதை தடுத்து நிறுத்த மதிமுக அறப்போரில் ஈடுபடும் என அக்கட்சியின் பொதுச்செயலர் வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தென்தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே படுநாசம் செய்யக்கூடிய விதத்தில், ஐந்து மாவட்டங்களுக்குப் பாசனத்துக்கு நீரும், குடிநீரும் வழங்கி வருகின்ற, பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையை எப்படியும் உடைத்தே விடுவது என்று கேரள அரசு முடிவு எடுத்து விட்டது. 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ல், இந்தப் பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி உச்சநீதிமன்றம் அளித்த தீர்பபைக் காலில் போட்டு மிதித்து விட்டு, அணையை உடைப்பதற்கும் அதிகாரம் உண்டு என்று கேரளம், சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தையே நிறைவேற்றியது. தற்போது, அணையை உடைப்பதற்கு, 40 கோடி ரூபாய்களை ஒதுக்கி விட்டது. எந்த நேரத்திலும், தென்பாண்டி மண்டலத்துக்கு அந்த அபாயம் நேரிடலாம். கேரளம் கட்டுவதற்குத் திட்டமிட்டு உள்ள புதிய அணையில் இருந்து, தமிழ்நாட்டுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரும் தர வாய்ப்பு இல்லை. ஏனெனில், புதிய அணை, பள்ளத்தில் அமையும். கேரள அரசின் அக்கிரமப் போக்கை, மத்திய அரசு கண்டுகொள்ளாததுடன், ஊக்குவிக்கும் வகையில், கேரளத்தினர் தயாரித்துக் கொடுத்த ஒரு அணை மசோதாவை நிறைவேற்றுவதற்கும் திட்டமிட்டு விட்டது. திரைப்படம் மூலம் விஷமத்தனம்.. கேரளத்தின் சதிகார சக்திகள், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிடுவதற்கு, இவ்வளவு காலமும் ரகசியமாக வைத்திருந்து, படத்தைத் தயாரித்து, வருகின்ற 25 ஆம் தேதி, இந்தியாவிலும், ஐக்கிய அரபு நாடுகளிலும் வெளியிட இருக்கின்றனர். படத்தின் பெயர், டேம் 999. இந்தத் தலைப்பே விஷமத்தனமானது. முல்லைப்பெரியாறு அணையில் 999 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டுக்குச் சட்டப்படியான உரிமை இருப்பதைக் காட்டுவதற்காகத்தான், இந்தத் தலைப்பை வைத்து உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணை, உடைந்து நொறுங்குவது போலவும், பிரளயமாய் வெள்ளம் பாய்வது போலவும், லட்சக்கணக்கான மக்கள், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட, பரிதாபமாகப் பலியாகி மடிவது போலவும் படத்தின் உச்சகட்டக் காட்சியை அமைத்து உள்ளனர். கடந்த 1975-ல், சீனாவில், பாங்கியாவோ எனும் அணை உடைந்ததைப் பின்னணி அமைத்து உள்ளனர். இந்திய, ஹாலிவுட் நடிகர்களைக் கொண்டு, மலையாளிகள் முதலீடு செய்து, இப்படத்தைத் தயாரித்து உள்ளனர். அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது, முல்லைப்பெரியாறு அணை உடைவது போலவும், இலட்சக்கணக்கான மக்கள் சாவது போலவும் கிராஃபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்து, ஐந்து இலட்சம் குறுந்தகடுகளை, கேரளம் முழுமையும் வழங்கினர். முதல்வரின் இணையதளத்திலேயே இந்தப் போலிக் காட்சிகளைக் காண்பித்தனர். அதைத்தான் இப்போது, பிரமாண்டமான திரைப்படக் காட்சியாக அமைத்து வெளியிடுகின்றனர். அரிசி, பால், காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட அனைத்து உணவுப் பண்டங்களும் கேரளத்துக்கு அனுப்பி, அவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவியாக இருந்து வருகின்ற நம் தமிழ்நாட்டின் தலையில் கல்லைப் போட, என்ன நெஞ்சழுத்தம் அவர்களுக்கு இருக்க வேண்டும்? முல்லைப் பெரியாறு அணையை உடைக்க சதி.. முல்லைப் பெரியாறு அணை, எத்தகைய நில நடுக்கத்துக்கும் ஈடு கொடுக்கக்கூடிய வலிமையோடு உள்ளது என்பதைத் தமிழகத்துப் பொறியாளர்கள், ஆணித்தரமான ஆதாரங்களோடு குறுந்தட்டாக ஆக்கி உள்ளனர். ஆயினும், நமக்கு உரிமை உள்ள அணையை உடைக்க, நம் வாழ்வில் மண்ணைப் போட, கேரளம் முடிவு செய்து விட்டது. நம்மைச் சீண்டிப் பார்க்கிறார்கள். நம் முகத்திலேயே மிதிக்கவும் துணிந்து விட்டார்கள். கேரள மக்களை நாம் எதிரிகளாகக் கருதியது இல்லை. ஆனால், இப்பிரச்னையில் தொடக்கத்தில் இருந்தே அங்கு உள்ள அரசியல் கட்சிகளும், சில அக்கறை உள்ள சக்திகளும், ஒன்றிரண்டு பத்திரிகை நிறுவனங்களும், எப்படியும் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என முடிவு செய்து, அந்தச் சதித்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கின்றார்கள். இந்தப் படத்தில், புராண காலத்துச் சம்பவங்களையும், மனிதர்களின் உணர்ச்சிப் போராட்டங்களையும் இணைத்து, நம் முல்லைப் பெரியாறு அணை உடைவதால் பெருந்துயர் விளைந்தது என்று சித்தரித்து உள்ளனர். இதனைப் புத்தகமாகவும் வெளியிட்டு உள்ளனர். தமிழ்நாட்டிலும் இந்தப் படம் திரையிடப்படும் என்று விளம்பரம் செய்து உள்ளனர். தமிழ்நாட்டுக்குப் பெருங்கேடு செய்யயும் கேரளத்தின் திட்டத்தை, எக்காளத்தோடு வெளிப்படுத்தும் இத்திரைப்படத்தை, தமிழ்நாட்டில் திரையிட, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. இந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க, கடுகு அளவு அக்கறையேனும் இந்திய அரசுக்கு இருக்குமானால், இந்தியாவில் எங்கும் திரையிட, மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. 'இந்தத் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிட அனுமதிக்காதீர்கள்' என்று, தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கு, இருகரம் கூப்பி வேண்டுகோள் விடுக்கின்றேன். அவர்களுக்குக் கடிதமும் அனுப்பி உள்ளேன். அனைத்தையும் மீறி, தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படுமானால், அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்த, மறுமலர்ச்சி தி.மு.க. அறப்போரில் ஈடுபடும் என எச்சரிக்கின்றேன்," என்று வைகோ கூறியுள்ளார். ராமதாஸ் கோரிக்கை... இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கேரளத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவற்றின் நிதி உதவியுடன் 'டேம் 999' என்ற பெயரில் ஆங்கில திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. முல்லைப் பெரியாற்று அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போன்ற காட்சிகள் நிறைந்த இப்படம் வெளியானால் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களிலும் பொது அமைதி பாதிக்கப்படும். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று பல்வேறு வல்லுநர் குழுக்கள் ஏற்கனவே அறிக்கை அளித்துள்ள நிலையில் எப்படியாவது அந்த அணையை உடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 'டேம் 999' திரைப்படத்தை கேரள அரசு நிதி உதவி செய்து தயாரித்திருக்கிறது. எனவே, இந்தத் திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட தடை விதிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக முதல்வர் ஜெயலலிதா கடுமையாக வலியுறுத்த வேண்டும்," என்று ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். http://news.vikatan.com/index.php?nid=5099

Friday, November 18, 2011

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி! - வினவு

ராஜீவ் கொலை வழக்கும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம். தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி! 13.11.2011 தினமலரில் அதன் சிறப்பு நிருபர் பெயரில் எழுதப்பட்ட “செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?” என்றொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நீங்களே ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள், விரும்பாதவர்களுக்கு அதன் சுருக்கம் இங்கே: அதில் 23 வயது சவுமியா எனும் அழகான கேரளப் பெண்ணை ஓடும் ரயிலில் வன்புணர்ச்சி செய்து கீழே தள்ளிக் கொன்ற கோவிந்தசாமி என்ற குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் விவரத்தை தருகிறார்கள். பின்னர் அந்த கோவிந்தசாமி விருத்தாசலத்தைச் சேர்ந்த பச்சைத் தமிழன், மாற்றுத்திறனாளி, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீதான மரண தண்டனையை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டுமல்லவா என்பதை போற்றுவது போல இழிவுபடுத்தும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் எழுதியிருக்கிறார்கள். தினமலரின் நோக்கம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான தூக்கை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை இங்கே பொதுப்புத்தியில் ஒரு சென்டிமெண்டான விசயத்தை வைத்து இழிவுபடுத்துவதுதான். மரணதண்டனை வேண்டாமென்று கோருபவர்கள் இத்தகைய கொடூரமான காமப் பொறுக்கியை காப்பாற்ற குரல் கொடுப்பார்களா என்று கேட்பதன் மூலம் அந்த அழகான கேரளப் பெண்ணின் அனுதாபத்தை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் மூவரை வில்லனாக்குவதுதான் தினமலரின் நோக்கம். அதே நேரம் கூடுதலாக தமிழன், மாற்றுத் திறனாளி, தலித் என்ற விவரங்களின் மூலம் தினமலரின் பார்ப்பன விழுமியங்களை நிலைநிறுத்துவது ஒரு போனஸ் நோக்கம். அதிலும் அந்த கோவிந்தசாமி தாழ்த்தப்பட்டவர் என்பதால் வயிற்றுப்பிழைப்புக்காக சிறு திருட்டுகள் செய்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறை செய்து விட்டார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று நயவஞ்சமாக எழுதுகிறார்கள். அதே போல இந்துத்வ இந்திய உணர்வுக்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழுணவர்வை குறி வைத்து தாக்குகிறார்கள். என்ன எழுதி என்ன பயன்? தினமலர் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கான வாசகர் வட்டம் இந்த வஞ்சப் புகழ்ச்சி இகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தினமலர் இப்படி எழுதலாமா என்று கோபப்படுகிறது. அவர்களெல்லாம் கோவை என்கவுண்டர் மேனியாவில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அல்லவா, அதனால் இளம் பெண் கற்பழிப்பைத் தாண்டி மற்ற விவரங்களின் மறை பொருளை புரிந்து கொள்ள முடியாத துரதிர்ஷடசாலிகள். இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தினமலர் கட்டுரைக்கு அருஞ்சொற்பொருளை எழுதி வாசகர் கடிதத்தில் புலம்பும் அப்பாவித் தமிழர்களுக்கு தேறுதல் சொல்லி வருவதோடு தினமலருக்கு வாழ்த்தையும் தெரிவிக்கிறார்கள். மூவர் தூக்கை வெறும் மனிதாபிமான நோக்கில் பேசிய பலரும், அதன் அரசியல் முக்கியத்துவத்தை பேசினால் பிரச்சினை என்று வெறும் சென்டிமெண்டாக மட்டும் மக்களிடம் கொண்டு போனவர்களும், தினமலரின் இந்த சாணக்கிய நரித்தந்திரத்தை எதிர் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எனினும் அவர்களின் தவறு தினமலரின் வக்கிரத்தோடு ஒப்பிட முடியாத ஒன்று. முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை. இதுவும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம். தினமலர் வாரமலரில் எழுதிப் புகழ்பெற்றவர் அந்துமணி எனும் இரமேஷ். இவர் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளரும் கூட. ராமசுப்பையரின் வழியில் வந்த பார்ப்பன உத்தமர். இவருக்கு இருக்கும் அதிகார செல்வாக்கை வைத்துப் பார்த்தால் இவர் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு சில பெண்களோடு மட்டும் கொஞ்சம் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு பெண், தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை பாலியல் வக்கிரம் என்று மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள். அந்துமணிக்கு சினிமா, மேன்மக்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று பரந்துபட்ட தொடர்பு, வாய்ப்புகள் இருந்தும் அவர் எப்போதும் எல்லை மீறியவரில்லை. ஏதோ போதாத காலம், கீழ் பணியாற்றும் பெண்ணிடம் கொஞ்சம் ‘லைட்டாக’ வரம்பு மீறிவிட்டார். பின்னர் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மனநோயாளியாக ஆக்கி அலுவலகத்தை விட்டு துரத்தி, போலீசு உலகை கொஞ்சம் கவனித்து அந்த புகாரை குப்பைக் கூடைக்கு வீசி எறிந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை கூலிக்கு ஆள் அமர்த்தி கொலையே செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏன் என்பதில்தான் அவரது ஜீனின் மாட்சிமை அடங்கியிருக்கிறது. பார்பனர்கள் எப்போதும் யாரையும் நேரடியாக கொலை செய்து பழக்கமில்லை. அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் காட்டு மிராண்டிகளான ‘கீழ்சாதி’ பயல்கள் செய்வது. அந்துமணி இரமேஷ் அய்யரை அப்படி எடை போட்டு விடாதீர்கள். இதற்கு மேல் அந்துமணியை கைது செய்து அந்த பாலியல் வன்புணர்ச்சிக்கான வழக்கில் விசாரித்து அவருக்கு தூக்குதண்டனை வாங்கித்தரவேண்டும் என்று யாராவது கிளம்பினால் அது தருமத்தின்படியும், மனு தர்மத்தின்படியும், பார்ப்பன நெறிப்படியும் அநீதியானதாகும். மேலும் உலகை ஆளும் ஒரு பார்ப்பனனை அப்படி தூக்கில் போட்டால் இந்தியாவே இயற்கை சீற்றத்தால் அழியுமென்பது உறுதி. ஆகவே யாரும் அந்த புண்ணியவானுக்கு தீங்கிழைக்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம். தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!ஏற்கனவே காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதிக்கு அப்படி ஒரு அபகீர்த்தி நிகழ்ந்ததனால்தான் சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். பெரியவாள் துறவறத்தோடு, பார்ப்பன தர்மத்தையும், இந்து மதத்தையும் அல்லும் பகலும் பாடுபட்டு காப்பாற்றும் திருப்பணியை செய்து வந்தவர். தொடர்ச்சியாக அந்த வேலைகளில் ஏற்பட்ட களைப்பு காரணமாக சில பல பார்ப்பன மாமிகளின் மேல் கை வைத்து விட்டார். அதுவும் கூட வன்புணர்ச்சி என்று முடிவு செய்துவிடக்கூடாது. அதெல்லாம் பெரியவாளுக்காக சில பக்தர்கள் ஒப்புதலுடன் மேற்கொண்ட பரிகாரங்கள். அனுராதா ரமணன் மட்டும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பெரியவாளின் செய்கையில் குற்றம் கண்டுபிடித்து பொதுவெளியிலும் அம்பலப்படுத்தினார். அவர் புராணக்கதைகள் எதையும் படித்ததில்லை போலும். ஆனானப்பட்ட இந்திரனும், விசுவாமித்திரனும் கூட இப்படி சில தருணங்களில் சஞ்சலப்பட்டவர்கள்தான். அதையெல்லாம் பரப்பிரம்மத்தின் ஆகிருதி விளையாட்டு என்று கொள்வதை விடுத்து இகலோக மனிதப்பதர்களின் நோக்கில் ஆய்வு செய்வது தவறு. இதையெல்லாம் புரிந்து கொள்ளாத குசும்புப் பார்ப்பான் சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது. இது பொறுக்காத சில ஜென்மங்கள் பெரியவாளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது அக்கிரமம். ஆனாலும் பெரியவாள் சஞ்சலப்படாமல் தொடர்ந்து போராடி எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கி, பிறகு நீதிபதிக்கே ரேட் பேசி வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டார். இதெல்லாம் நீதிமன்றங்களில் சகஜம் என்பது ஒரு போண்டா வக்கீலுக்கு கூட தெரியும். தற்போது இந்த வழக்கை மறு விசராணை செய்து குற்றத்தை நீருபித்து பெரியவாளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சிலர் பேசுவது சரியா? பூலோக இந்துக்களின் சர்வலோக குருவை இப்படி ஒரு கொசுக்கடி அழிப்பிற்காக தூக்கில் தொங்க விடுவது சரியா? நேர்மையுள்ள இந்துக்கள் சிந்திக்கட்டும். ஒரு வேளை சில தமிழ் – திராவிட – கம்யூனிஸ்ட் வெறியர்கள் அப்படி பெரியவாளை தூக்கில் போடுவதற்கு காரணமாக இருந்தால் இந்தியா அழிவது உறுதி. விருத்தாசலம் கோவிந்தசாமி வயிற்றுப்பாட்டுக்காக திருடியதும், நம்மவா முதல்வர் புரட்சித் தலைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் ஒன்றா? சில அம்மாஞ்சிகள் அப்படிக் கேட்கிறார்கள். கோவிந்தசாமி திருடி, கற்பழித்ததற்கு தூக்கா, முழு தமிழகத்தையும் மொட்டையடித்த ஜெயாவுக்கு வாய்தாவா என்று கேட்பது மாபெரும் அநீதி. புரட்சித் தலைவி தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே துணிவாக அறிவித்த வீராங்கனை. இது வரை தமிழகம் கண்டமுதல்வர்களில் ஒரே ஒரு இந்து முதல்வர் இவர்தான் என்று வீரத்துறவி இந்து முன்னணி இராம கோபாலனால் பாராட்டப்பட்ட தாய். அவருக்கென்று குடும்பமோ, குட்டியோ எதுவும் கிடையாது. அவர் சொத்து சேர்ப்பது யாருக்காக? தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்கள்களிலும் பூஜை, புனஸ்காரங்கள், யாகங்கள், குடமுழுக்கு செய்து இந்து தருமத்தை காப்பாற்றுவதற்காகவே அப்படி சொத்து சேர்க்கிறார். அதுவும் பெரிய பெரிய முதலாளிகள் தமிழகத்தில் தொழில் துவங்கி கைமாத்தாக வைக்கும் தட்சிணையைப் போய் அப்படி சொத்து சேர்ப்பு, திருட்டு, ஊழல் என்று சொல்வது யாருக்கு அடுக்கும்? மல்லையாவின் மெக்டோவல் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுவதனால்தானே சூத்திர, பஞ்சம, சண்டாளப் பயல்களுக்கு இலவச லாப்டாப்பெல்லாம் கொடுக்க முடிகிறது? அதற்கு காணிக்கையாக மல்லையா புண்ணியவான் சில போல கோடிகளை அம்மாவுக்கு கொடுத்தால் என்ன தப்பு? பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கிற்காக அம்மா எத்தனை நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது? இல்லையென்றால் அந்த கோவிந்தராசனை சட்டுப்புட்டென்று தூக்கில் போட தீர்ப்பளித்த மாதிரி ஓரிரு வருடங்களில் வழக்கை முடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்? ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம். வந்தே மாதரம்! பாரத் மாதாகி ஜெய்!! இந்து தர்மம் ஓங்குக!!!