Tuesday, December 10, 2013

கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனை

இரண்டு நிமிடம் மட்டும் ஒதுக்குங்க... பிறந்து 55 நாட்களில் கல்லீரல், தமனி, நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம்… இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே… இன்னும் சில நாட்களில் கோழிகறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120 இல் இருந்து 40 நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இவர்களின் திட்டத்தின்படி 160 என்று விலையை உயர்த்தி, பிறகு 120 என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர். மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது. அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல் வாதிகள் வியாபார நோக்கத்துடன் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர். உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய்கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்றபோர்வீரன் குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன. இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும், மூளை வளராது, சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டிலும் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி. அசைவம் சாப்பிட்டால் மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும் உலகை உலுக்கி மாற்றிய மைக்ரோசாஃப்ட் ஆப்பிள் முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய்கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம் தான் சத்து இருக்கிறது. ஆகையால் அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக் குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால் அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படி சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியமான ஒரு கேள்வி ஏனென்றால் போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது , காரில் போகும் சுகவாசிக்கும் அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டு மரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ஃபிஷ் ஃப்ரை ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்குண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால் அளவாக சாப்பிடுங்கள் ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ போதுமானது. அதையும் கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால் இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள், குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைபடுகிறது. அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால் கொள்ளும், இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள். கோழி நல்ல உணவு. ஆனால் அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக்கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக்கூடியது. உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச்சத்து அதிகம், வைட்டமின் பி12 சத்தும் அதிகம். பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக்காக அளிக்கப்படும் ரோக் ஸிர்சோன் என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படவாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Tuesday, November 26, 2013

மனதில் உறுதி வேண்டும் தலைவரின் வழி செல்வோம் மலரட்டும் தமிழீழம்

சில சந்தர்ப்பங்களில் குழப்பமான சூழலில் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு விதிக்கப் பட்டு விடுகின்றது. எம்மை மீறிய செயல்ப்பாடுகள்… எம்மால் சுமக்க முடியாத சுமைகள் எம் மீது சுமத்தப்படும் போது அவை எம்மை திக்குமுக்காடச் செய்து விடுகின்றுது. எதையும் சமாளிக்க முடியாது என்ற ஒரு சூழலில் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றோம். anna-thalaiஇங்குதான் முடிவுகள் எடுப்பதில் சிக்கல்கள் உருவாகின்றது. சில சமயங்களில் வாழ்வதை விட இறப்பது சிறப்பானது என்ற முடிவுக்கு வருபவர்களும் உண்டு. ஏன்டா இந்த இனத்தில் வந்து பிறந்தோம் என்று எண்ணவும் தோன்றும. நான் தமிழனாக பிறந்ததனால்தான் என் தலைவனை தலைவனாக பெறும் பாக்கியம் கிடைத்தது. வரலாற்று நாயகர்களுடன் பழகும் பெரும் பாக்கியம் கிட்டியது. தமிழின் தொன்மையான சிறப்பு ஒரு புறம். ஆழகிய மொழியை வளர்க்கப் பாடுபடும் வாய்ப்பும் கிடைத்தது என்ற மகிழ்ச்சி இன்னொருபுறம். பிற மொழிகளும் பல சோக வரலாற்றை கண்டுதான் வளர்ந்துள்ளது. எனவே தமிழானாக பிறந்து தமிழனாக வாழ்வதில் எனக்கு பெருமைதான். உழைப்பில் ஆசையுள்ளவன் தொழிலை வெறுக்கமாட்டான். தாய் மீது அன்பு கொண்டவன் தாய்மொழியை சிறுமையடைய விடமாட்டான். நோக்கம் தெளிவானதாக இருக்குமானால் முடிவுகள் சுலபமானதாக இருக்கும். பிரிவை வகுத்த பின்பு பயந்தென்ன இலாபம்.. என்ற கண்ணதாசன் வரிகள் நடைமுறைச் சிக்கல்கல்களை கண்டு பயப்படாது உங்கள் இலட்சிய பயணத்தை தொடருங்கள் என்று சொல்லுகின்றது.. இதுபோன்று எத்தனை பாடல் வரிகள் உள்ளன. நடைமுறைச் சிக்கல் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது. நாம் அதை சரியாக பகுத்து அறியாமல் விடை காண அவதிப்படுகின்றோம். உதாரணமாக சிறிய வயதில் சில பிரச்சனைகள் எங்களை பயமுறுத்தியுள்ளன. அவற்றை இலகுவாக வெல்லும் ஆற்றல் அப்பொழுது எம்மிடம் இருக்கவில்லை. அன்றைய சூழலில் எமது அறிவும் வசதியும் அச் சிக்கலைக் கையாள போதுமானதாக இருக்கவில்லை எனலாம். மிகவும் சுலபமாக கையாளக் கூடிய விடயங்கள் அன்று பூதாகாரமான தோற்றத்தை கொண்டு பயமுறுத்தியுள்ளது. இன்று அதை நினைக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையின் குறைகளை விளங்க இவ்வளவு ஆண்டுகள் சென்றுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது. காலம் பதில் சொல்லும் என்பதை நாம் புரிந்துகொள்ள இது நல்ல உதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன். ஒரு காலத்தில் முடியாத விடயம் இன்னொரு காலத்தில் இலகுவானதாகி விடுகிறது நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் இருந்துகொண்டு சிலவற்றை சிந்திக்கின்றேம். எங்கள் ஊருக்குள் மட்டும் நாங்கள் வாழ்ந்தபோது நாங்கள் பெற்ற அறிவும் வாய்ப்புக்களும் போதுமானதாக இருந்ததில்லை. இந்த உலக ஊரெல்லாம் திரிந்து நாம் பெற்ற அறிவும் வளமும் எவ்வளவு வேறுபாடானது என்பதை இன்று உணருகின்றோம். சிந்திக்கும் வளம் கற்றலினால் தோன்றுகின்றது. அனுபவக் கல்வியை மிஞ்சிய கல்வி ஏதும் இல்லை என்பார் கற்றவர்.. எமது அனுபவமின்மை எப்பொழுதும் சில முடிவுகளை எடுக்கத் தடையாக உள்ளது. சில சமயங்களில் மற்றவருடன் முரண்படவும் வழிவகுத்து விடுகின்றது. நோக்கம் ஒன்றாக இருப்பினும் அடைவதற்கான வழிகளில் வேறுபாடுகள் உருவாகின்றது. நோக்கம் ஒன்றாக இருப்பினும் பல மார்க்கங்களான சமயங்கள் தோன்றுவதற்கு வெவ்வேறு அனுபவங்கள்தான் காரணமாகின்றன. மற்றவருடைய அனுபவத்துக்கும் மதிப்புக் கொடுக்கும்போது இலகுவாக புரிந்துணர்வு ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியரின் கலாச்சாரம் பாலைவன சூழலில் உருவாகியது. கொடும் மணல் புயலிலிருந்து தம்மையும் குழந்தைகளையும் பாதுகாக்க பெண்கள் முழவதும் மூடிய ஆடைகளை அணியவேண்டிய அவசியம் தோன்றியது. ஆதுவே காலப் போக்கில் இஸ்லாமிய பண்படாக வலுவடைந்து விட்டது இறைவனை நம்புகின்றவருக்குள் எத்தனை பிரிவுகள் என்றாலும் நோக்கம் இறைபதம் அடைவதுதான். இந்த நடைமுறை வேறுபாடுகள் தோன்றக் காரணமான மொழி சமய பழக்கவழக்கங்கள் புவியியல் அமைப்பு பிராந்திய சமூக பொருளாதார அமைப்பு என்று பல்வேறுவிதமான சூழல் குழம்பு காரணிகளாக அமைந்துவிடுகின்றன. பன்னெடுங்காலம் சில பழக்க வழக்கங்களோடு வாழ்ந்தவரிடம் புதிய மாற்றங்களை இலகுவாக கண்டுவிட முடியாது. எனவேதான் உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி என்று யேசுபிதா சொன்னார். எமது தமிழ்ச் சமுதாயத்தின் சிக்கலான பழக்க வழக்கங்களை நாம் நன்றாக அறிந்திருந்தாலும் இச் சமுதாயத்தின் சிறப்பான குணங்கள் அதைவிட அதிகமானதாக காணப்படுகின்றது. தோல்லியைக் கண்டு துவண்டு விழும் தமிழன் ஒரு வெற்றிச் செய்தியை கேட்டதும் துணிந்து எழுந்துவிடுவான். சில சமயங்களில் வெற்றிகரமான பின்வாங்கல் எதிர்கால வெற்றியை வலுப்படுத்த அத்தியாவசியமாகின்றது. இச் செயல் எதிரிக்கு இன அழிப்பு செய்ய வழிவகுத்து விடுகின்றது. பாரதூரமன விளைவுகளை ஏற்படுத்தி அழிவுகளைச் செய்ய எதிரிக்கு வாய்ப்பாகி விடுகின்றது. விடுதலைப் போரை நசுக்குவதற்கு எதிரி போராடும் இனத்தை கொடுமையான சித்திரவதைக்குள் உட்படுத்துவான். இக் கொடுஞ் செயலுக்கு காரணம் போராடும் குணம் என்று அடிமைப் படுத்துவான். இங்குதான் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். பொறுமையாக விடயங்களை அலசிப்பார்க்க வேண்டும்.. நிதானமாக எமது இலக்கு நோக்கிய பயணத்தை வலுப்படுத்த தேவையான வழிவகைகளை ஆராய்ந்து செயல்படவேண்டும். என்று மாசேதுங் கூறியுள்ளார் தன் பலம் பிறர் பலம் அறிந்து செயல்பட வள்ளுவனார் போதித்த திருக்குறள் தமிழனை ஈராயிரம் ஆண்டுகளாக வழிமுறை செய்து வருகின்றது. சின்ன பாம்பை அடிப்பதானாலும் பெரிய தடியால் அடிக்கவேண்டும் என்றும் தேசிய தலைவர் கூறுவதும் நாம் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும். எமது தேசிய விடுதலை பல முட்டுக்கட்டைகளை கொண்டிருந்தமை 1977க்கு முன்னதாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்தியாவின் கொடும் பிடிக்குள் எமது தாயகம் இருப்பதை தேசியத் தலைவர் தெளிவாக புரிந்து வைத்திருந்தார். இலங்கை பேரினவாதிகளுடன் போரிட்டு வெல்வது மட்டுமன்றி இந்திய கூட்டு மாநில ஆட்சியாளரையும் வெல்ல வேண்டும் என்றும் அவர்களை வெல்வதுதான் சிரமமானது என்று தெளிவுபடுத்தியிருந்தார். இந்த அடிப்படையில்தான் இந்திய சதித்திட்டத்துககுள் அகப்படாமல் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும் வழிநடத்தி எமது போராட்டத்ததை உலக அரங்குவரை கொண்டு வந்துள்ளார் எமது தேசியத் தலைவர். ஓரு மிகப் பெரிய நாடு என தன்னைச் சொல்லிக் கொள்ளும் இந்தியாவின் கூட்டு மாநில ஆட்சி முறைக்கு அசாமின் காஸ்மீரின் விடுதலைப் போராட்டங்கள் எவ்வளவு அச்சுறுத்தலோ அவ்வளவு அச்சுறத்தலாக எமது போராட்டமும் அமைந்து விடும் என்ற கருத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மிக உறுதியாக கையிலெடுத்துளளார்கள். எந்த விலைகொடுத்தும் தமிழீழம் அமைவதைத் தடுப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கின்றது. ஈழ மக்கள் பாமரர் என்ற வகையில் இந்தியா தனது திட்டத்தை 1983க்கு முற்பட்ட காலங்களில் கையாண்டது. தேசிய தலைவர் தவிர்ந்த ஏனைய போராட்டக் குழு தலைவர்கள் இந்தியாவின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு தாம் இழைத்த பிழையை தேசிய தலைவர் மீது சுமத்தி தம்மை நியாயப்படுத்த முனைந்து தோல்வி கண்டனர். தமிழீழ மக்களின் விவேகத்தின் மிது நம்பிக்கை கொண்டு தேசியத் தலைவர் போராட்டத்தை விரைவுபடுத்த தொடங்கிய காலத்தில் 1987 ல் சிங்கள இராணுவம் மாபெரும் பின்னடைவை சந்திக்கும் போது தமிழீழம் விடுதலை அடையும் சூழலும் உருவாகிக் கொண்டிருந்தது. தமிழீழத்தின் பொது நிர்வாக அலகுகள் தமிழரின் கைக்கு வரத் தொடங்கியிருப்பதை கண்டு டெல்லி அரசு அதிர்ந்தது. நாம் வேண்டாத போது தனது படையை எம்மண்ணில் நேரடியாக இறக்கி. புல சூழ்ச்சிகளை செய்து எமது தேசிய விடுதலைப் போரை நசுக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொல்லணா கொடுமைகளை எம்மீது திணித்து பயனற்று இழப்புடன் நாடு மீண்டது. தனது திட்டம் சிறு பயனைக் கொடுத்தது என்ற நிறைவு இந்தியாவுக்கு இருந்தாலும் அது பூரணமான விளைவை ஏற்படுத்த வில்லை. அதி உயர் விலையை கொடுத்தாயினும் தமிழீழ விடுதைலப் புலிகளின் சர்வதேச செல்வாக்கை குலைத்துவிடும் திட்டங்கள் 1990ல் இந்தியாவினால் வகுக்கப்பட்டன. புலம் பெயர் நாடுகளில் பல கூலித்தமிழரும் இந்தியாவின் திட்டத்தை வழிநடத்த தயாராக இருந்தனர். இவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இலங்கை இ.ந்திய கூட்டுச் சதியாக போதைவஸ்து கடத்தும் நாடகம் அரங்கேறியது. பிடிபடும் அனைவரும் தம்மை விடுதலைப் புலிகள் என்று சொல்வதனூடாக அனுதாபத்தை பெற்று வெளிநாடடு சுங்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கும் அளவுக்கு விடுதலைப் புலிகள் மீதான அனுதாபமும் பிரமிப்பும் வெளிநாட்டவரிடையே பரவி இருந்தது. தொடர்ச்சியான இச்சதியால் விடுதலைப் புலிகளின் நற்பெயர் பாதிப்புக்குள்ளானது. தமது முயற்சியில் ஓரளவு வெற்றியை கண்ட இந்திய இலங்கை கூட்டுச் சதியாளர். துமது அடுத்த கட்ட நடவடிக்கையாக சிறர்களை படையில் இணைக்கும் விடையத்தை கையிலெடுத்தனர். தமது அதிகாரத்தையும் அரசியல் செல்வாக்கு நிதி வசதி என்பவற்றை பயன்படுத்தி பல செய்தி நிறுவனங்களை தம் வசமாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளை மிக இலகுவாக பரப்பினர். ராஜீவ் காந்தி முதல் கதிர்காமர் வரை பல கொலைகள் மிக இலகுவாக நடத்தப்பட்டன. இவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு நடத்தியதாக மின்னல் வேக பரப்புரைகள் நடந்தேறின. சிங்கள கிரமங்கள் மீதான பல தாக்குதல்களும் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்களும் கூட விடுதலைப் புலிகளின் பெயரில் நடத்தப்பட்டன. இவை உலக அரங்கில் மிக கொடுமையாக எடுத்துக் காட்டப்பட்ட போது பலரும் அதை நம்ப வேண்டிய சூழல் உருவாகியது. இதுவே விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலுக்குள் சில நாடுகள் சேர்த்துக் கொள்ள போதுமானதாக இருந்தது. தேசியத் தலைவரை நன்கு தெரிந்திருந்த இந்திய ஆட்சியாளா தலைவரின் தன்நலமற்ற சமூக நலத்திட்டங்களைக் கண்டு மிரண்டு போயினர். மகாத்மா காந்தியை நாவளவில் வைத்துக் கொண்டு மிக மோசமான ஆட்சியை நடத்துபவர் மத்தியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு ஒரு அழகான நாட்டை கட்டிய பெருமை தேசியத்தலைவருக்கு உரியது. தெற்காசியாவின் புரையோடிப் போன வறுமையும் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறையும் சாதிக் கொடுமையும் தமிழீழத்தில் துடைத்து ஒழிக்கப்பட்டது. இந்த பிராந்தியத்தின் ஆட்சியாளர்களிடையே தங்களை தங்கள் நாட்டு மக்கள் இழிவுபடுத்த தமிழீழம் வழி வகுத்துவிடும் என்ற பயமும் இருக்கின்றது. ஏறக் குறைய மூன்றில் ஒரு பங்கு தமிழீழ மக்கள் வெளிநாடுகளில் வசதியாக வாழ்வதால் தமிழீழம் மேற்குலகின் கொள்கையை தனது கொள்கை வகுப்புக்குள் செல்வாக்கானதாக ஆக்கிவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. சாக்கடைப் பெருச்சாளிகள் போன்று குப்பத்து மக்கள் இல்லாத வளமான நாடாக தமிழீழம் அமைந்து விடுவது இந்திய அரசியலில் பல குழப்பங்களளை உருவாக்கிவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. இதை விட சிங்கள தேசமும் தனது கையை விட்டு சென்றுவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. ஈழப் பிரச்சினை ஒன்றுதான் சிங்கள தேசத்தை இந்தியாவின் கைக்குள் வைத்திருக்க உதவுகின்றது. ஈழப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்த இந்தியா எப்பொழுதும் முயற்சி செய்யும். வுலுவுள்ள ஒரு நாடாக பாகிஸ்தான் போன்று சிங்கள தேசம் வளரும்போது வங்காளதேசம் அமைந்ததுபோல் ஈழம் அமையலாம். ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. தமிழ் நாடு பிரிந்து விடும் என்ற பயம் இந்தியாவுக்கு நிறையவே உண்டு. அதனால்தான் சிங்கள தேசத்துடனாக சீனாவின் பாகிஸ்தானின் சிநேகத்தையும் இந்தியா விரும்புவதில்லை. தமிழர்களாகிய எங்கள்மீது பல அவதூறான பொய்யான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. தெரிந்தோ தெரியாமலோ உங்கள் செயல்கள் எம் இனத்தின் நற்பெயரைக் கெடுக்காமல் பார்த்துக் கொண்டாலே அது நீங்கள் எம் இனத்துக்கு செய்யும் பெரும் நற்செயலாகும். அதை விட ஒரு படிமேலாக எங்கள் போராட்டம் பற்றிய விளக்கத்தையும் உண்மை நிலையையும் உலகத்தாருக்கு எடுத்துச் சொல்வதனூடாக நீங்களும் தேசிய உணர்வாளராக தேசிய தலைவரால் தமிழீழத்தில் மதிப்பளிக்கப்படுவீர்கள் அன்புத் தமிழ் மக்களே நாம் எத்தகைய சிக்கலில் உள்ளோம் என்பதை தலைவர் மிகத் தெளிவாக உங்களுக்கு பல கோணங்களில் தெளிவு படுத்தியுள்ளார். எம்மைச் சூழ பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டடாலும் போராடும் தன்மையை இழக்காமல் காய் நகர்த்தலை மேற் கொள்ள தலைவர் படும் துயரம் நெருப்புள் வாழ்வதை விடக் கொடியது. எங்கள் இனத்துக்காக முப்பதாயிரத்துக்கும் அதிகமான மாவீரரும் நூற்றைம்பது ஆயிரத்துக்கும் அதிகமான தன்மானத் தமிழரும் தற்கொடை ஆகியுள்ளனர். இவர்களின் தியாகம் எமது மன உறுதியை வளர்த்துள்ளது. உலக நாடுகளிடம் எங்கள் நியாயங்களை இடை விடாது எடுத்துச் சொல்வதனூடாக எங்கள் தாயகத்தை மீடகும் தார்மீக கடமை புலம் பெயர்ந்து வாழும் எம்மிடம் தேசியத் தலைவரால் ஓப்படைக்கப்பட்டுள்ளது.. யார் எதைச் சொன்னாலும் சொல்லிவிடடுப் போகட்டும்.. எவர் வேண்டுமானாலும் அறிக்கைளை விடட்டும். எமது தலைவரின் சிந்தனை எது என்று உங்களுக்கு தெரியும். தலைவர் வெளிப்படும்வரை பொறுமையாக நிதானமாக உறுதியோடு செயல்ப்படுங்கள். இந்திய வல்லாதிக்கம் இலங்கை இனவாதிகளின் சதி வலைக்குள் தானாக சிக்கித் தவிக்கின்றது. இலங்கை இனவாதமும் சீர்குலைந்து நாசவழியை தேடிக்கொண்டு தவிக்கிறது. நீங்கள் புத்திஜீவிகளாக வாழ்கின்றீர்கள். எதையும் பகுத்தறிந்து செயற்படக் கூடியவர்களாக இருக்கின்றீர்கள்;. இன்றும் உங்கள் இதயத்துள் ஆறாத வடுக்களாக பல துயரங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் எப்படி நடந்தேறின என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துள்ளீர்கள். நாங்கள் நீதியின் பக்கம் நின்று இவ் உலகிடம் நீதி கேட்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எமது பாதை எது என்பதும் தேசியத்தலைவரின் வழிநடத்தலும் எம்மிடம் நிலைத்திருக்கும். தமிழ் தேசத்தின் சிற்பம் செதுக்கப்பட்டு பாதி வேலை முடிந்த நிலையில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சகல சர்வதேச தடைகளையும் தகர்த்து எம் இனிவரும் சந்ததிக்கு நல்லதொரு வாழ்வைக் காட்ட இப்புலம் பெயர் நாட்டின் வாழ்க்கை வாய்ப்பபை பயன் படுத்துவோம். நாம் புலம் பெயர்ந்தது அகதியாக வாழ்ந்து மடிவதற்காக இல்லை நம் நாடு காணும் இறுதிப் பணி ஏற்று விடிவு காண்பதற்காக. காலம் இட்ட கட்டளை உன்னையும் என்னையும் புலம்பெயரச் செய்துள்ளது. தேசப் பணியாற்ற விரைந்து வா. மனதில் உறுதி வேண்டும் தலைவரின் வழி செல்வோம் மலரட்டும் தமிழீழம்

Saturday, November 23, 2013

தமிழீழ மாவீரர் வாரம் கார்த்திகை 21 - 27

தமிழீழ மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகிறது,எங்கள் மண்ணின் விடுதலைக்காய் விதையாகிப் போன இந்த எங்கள் விடுதலை வீரர்கள் கனவுகள் அரியவை, பெரியவை, போற்றத்தக்கவை. சிங்களதேசத்தில் தமிழர்கள் வகைதொகையின்றி அழிக்கப்பட்டனர். உடைமைகள், சொத்துகள் களவாடப்பட்டது. காணாமல் போதல் கைதுகள் என எண்ணற்ற கொடுமைகள் அரங்கேற்றப்பட்டது. இந்நிலைலேயே எம் தன்னிலை மாறாத் தலைவன் ஈழ விடுதலையை தீவிரமாக்கினார். பல்லாயிரம் சங்கர்களும், மாலதிகளும், மில்லர்களும் ஏன் அங்கயற்கண்ணிகளும் விடுதலை வேள்வியில் ஆகுதியாயினர். அழிக்கப்பட்டதாய் சொல்லப்படும் எம் போராட்டம் தமிழீழம் என்ற எம் மாவீரர் கனவுகளால் எட்டப்படும், அவர்கள் துக்கமின்றி உழைத்த கனவுகள் எப்படி வீண் போகலாம்? வெறும் மாவீரர் எழுர்சியை அனுட்டிப்பதில் பயனில்லை மாவீரர் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் திறனும் ஆற்றலும் புலம்பெயர் தமிழர்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எத்தனை துரோகங்களிலும், தடைகளிலும் அதை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டில் நாமிருக்கிறோம். தமிழீழ விடுதலை என்பது வெறும் கனவல்ல என்று உலகமும், சிங்களமும் ஒருநாளில் அறிந்து கொள்ளட்டும். தியாகங்களால் எம் மாவீரர்கள் விடுதலை பயணத்தை உச்சத்தில் வைத்தனர். எதையும் முடிக்கும் வல்லமை காட்டினர். தமிழரின் வீரம் பிறப்பிலென்று பறை சாற்றினர். காலங்காலமாய் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவுகளை எங்கள் மாவீரர்களே உடைத்து வெற்றி கொண்டனர். தியாகத்தின் எல்லையை தொட்டு நின்றனர். "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள்! உயர்ந்தவர்கள்! நானும் உண்மையானவனல்லன்." என தேசிய தலைவர் சொல்லுவார். சிறிதாய் சொல்லப்போனால் அந்தந்த வயதில் கிடைக்கவேண்டியதை விடுத்து, அந்த மாவீரர்கள் செய்ததெல்லாம் தமிழரின் விடுதலைக்காகவன்றி வேறெதற்காய்? அந்த வீரர்களின் தியாகத்துக்காய் இந்த வாரம் நாம் சிந்தும் கண்ணீரே நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சிறிய நன்றிக்கடன் என கொள்வீர். நம் கோவில்களான கல்லறைகளை உடைத்து விடுவதால் எங்கள் மனங்களின் தொழுகைகளை நிறுத்த முடியாது, ஏழு நாட்டகள் எமக்கு எந்த ஆடம்பர நிகழ்வுகளும் வேண்டாம், சொந்த குருதி வடியும்போது சந்தோசம் வருமா எங்கிருந்தாவது? தமிழராக முன்பு மனிதனாக வேண்டும். கார்த்திகையில் வானம் கூட அழுது தொழும் எம் செம்மனச்செல்வங்களை, கார்ர்த்திகைப் பூவும் பூத்து வணங்கிக்கொள்ளும், விதையானவர் தமிழீழம் மலரவென்பதால் இயற்கை வணக்கம் செய்யும். "சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதி எடுத்துக்கொள்வோமாக" என்ற தேசிய தலைவரின் கூற்றுக்கிணங்க, வரலாறு தந்த வீரர்களை நினைவுகொள்வோம், அவர் பாதையில் நடந்து இலட்சியம் வெல்வோம்.

Friday, November 8, 2013

தமிழ் இந்துவே! தமிழ் அழிப்பு வேலையை நிறுத்து! இல்லையேல் உன் இதழை நிறுத்து!

இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக்கழகம் ஒருங்கிணைப்பாளர், இலக்குவனார் இலக்கிய இணையம், அமைப்பாளர், தமிழ்க்கூட்டமைப்புகள் இந்து நிறுவனத்தார் தமிழ் முறைக்கு மாறான முறையில் பெயரைச் சூட்டிக் கொண்டு தமிழில் நாளிதழ் நடத்துகின்றனர். இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியல்ல; தமிழ்வாசகர்கள் மூலம் பணம் பெருக்குவதே! ஆனால், அதே நேரம் தமிழ் வாசகர்களுக்கு எதிரான பணியில் ஈடுபட்டுவருவதுதான் கண்டனத்திற்கு உரியதாக உள்ளது. ஆங்கிலப் பெயர் கொண்ட தமிழ் நாளிதழில் பல்துறைக் கட்டுரைகள் வெளிவந்தாலும், அவற்றின் நடை தமிழைச் சிதைப்பாகவே உள்ளன. இவ்வாறு தான் நடத்தும் ஆங்கில இதழில் ஆங்கில நடையைச் சிதைத்து எழுத முன்வருமா இவ்விதழ்? வராது! அங்கே, நல்ல ஆங்கிலத்தில் புதிய புதிய சொற்களைப் பயன்படுத்தி ஆங்கிலக் காவலராக விளங்குவதிலேயே பெருமை கொள்கிறது. இதே அளவுகோலைப் பயன்படுத்தித் தமிழ்க்காவலராகவும் விளங்கலாமே! ஏன், அவ்வாறு விளங்காமல் தமிழ் அழிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறது? மக்களால் விரட்டியடிக்கப்படும்வரை மோதிப்பார்ப்போம் என்கிறதா? இத்தகைய இதன் தமிழ் அழிப்புப் பணிகளில் ஒன்றுதான் தமிழறிவற்ற கதையாளர் ஒருவரைக் கொண்டு, “ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?” என வந்துள்ள கட்டுரை. கட்டுரைப் பிதற்றலில் உள்ள சில வரிகள் பற்றிப் பார்ப்போம்! “தாய்மொழியைத் தேர்வுகளில் எளிதாக வெல்வதற்கு மட்டுமே தட்டுத்தடுமாறி வாசிக்கவும் ஓரளவு எழுதவும் கற்கின்றனர். . . . கல்விக்கு உதவாமல் வெறுமே மொழியறிவுக்காக மட்டுமே கற்கப்படும் இரண்டாம் மொழியை விட்டுவிடுகிறார்கள்” என்கிறார் இவர். தாய்மொழி மட்டுமல்ல, எல்லாப் பாடங்களுமே தேர்வு நோக்கில் கற்கும் வகையில்தான் நம் கல்விமுறை உள்ளது. மாற்ற வேண்டியது கல்வி முறையைத்தான். தாய்மொழிக்கல்வியை அல்ல! தமிழ்வழியில் அனைத்துக் கல்வியும் அமைந்தால் தமிழ் நிலைக்கத்தானே செய்யும்! “மொழிக்கும் எழுத்துருவுக்குமான உறவு என்பது ஒரு மனப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். . . . . குழந்தைகள் மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன” என்பது மற்றோர் உளறல். இந்த மனப்பயிற்சி என்பது ஆங்கிலத்திற்கும் பொருந்தும் அல்லவா? அயல் மொழியில் மேற்கொள்ள வேண்டிய கடினமான பயிற்சியைவிடத் தாய்மொழியில் எளிதில் பயிற்சி மேற்கொண்டால் போதுமல்லவா? “மலாய் போன்ற பல மொழிகள் இன்று ஆங்கில எழுத்துருக்களிலேயே எழுதப்படுகின்றன. அந்த மக்கள் ஆங்கிலம் கற்பது எளிதாகிறது” எனக் கதை சொல்வது மிகவும் தவறான வாதம். மலாய் மக்களில் பொது இடங்களில் பணியாற்றுபவர்களுக்குக்கூடப் பேருந்து எண்கள், நேரங்கள், கட்டண விவரங்கள், உணவுப் பொருள்கள் விலைகள், பிற பொருள்களின் விலைகள், முதலான பயணத்திற்குத் தேவையான எவ்விவரத்தையும் ஆங்கிலத்தில் சொல்லத் தெரியவில்லை. (ஆங்கிலம் தெரிந்திருந்தால்தானே இவற்றைப் புரியவும் சொல்லவும் முடியும்.) எனவே, ஒரு வரிவடிவில் மற்றொரு மொழியைப் படிப்பதால் அம் மொழியையும் அறிந்தவர் ஆவோம் என்பது அறியாமையே! “இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துருக்களில் எழுதப்பட்டால் பெரும்பாலான மொழிகளை மிகச் சில நாட்களிலேயே வாசித்துப் புரிந்துகொள்ள முடியும்” எனச் சரடு விடுகிறார். வரிவடிம்தான் மொழியின் அடையாளம். அவ்வாறிருக்க ஆங்கில எழுத்துரு எனச் சொல்லப்படும் உரோமன் எழுத்தில் படிக்கும் பொழுது, எந்த மொழி என எவ்வாறு அறிய இயலும்? மேய்ச்சலைக்குறிக்கும் ‘மேய்’ என்பதை ஆங்கில எழுத்தில் எழுதினால், அதனை மே மாதம் என்றாவது ஆங்கிலத்தில் உள்ள துணை வினை என்றாவது அறிவார்களே தவிர, தமிழ்ச்சொல் என எங்ஙனம் உணர்வார்கள்? தமிழே தெரியாமல் தமிழ்ச் சொற்களை ஆங்கில எழுத்தில் படித்தால் எங்ஙனம் தமிழ் எனப் புரிந்து கொள்வார்கள்? தமிழ் எழுத்துகள் அறிவியல் முறையில் அமைந்தவை. தமிழ் உயிர்மெய்யெழுத்துகள் எளிதில் சொற்களைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் உதவுவன. ‘த’, ‘மி’, ‘ழ்’ என மூன்றெழுத்தைச் சேர்த்தால் தமிழ் என வாசித்து விடலாம். ஆனால், ஆங்கிலத்தில் எழுதினால், ‘டி’, ‘எச்’, ‘ஏ’ - த, ‘எம்’, ‘ஐ’ - மி, ‘இசட்’, ‘எச்’ - ழ் > தமிழ் என எழுத்துக் கூட்டிவரும் எழுத்துகளைச் சேர்த்து வாசிக்க வேண்டும். தேவையற்ற உழைப்பும் நேரமும் இதில் செலவாகாதா? “மொழிக்கு அடிப்படை ஒலியே என்றும் வரிவடிவம் மாறுவதால் மொழி அழியாது என்றும் சிலர் கூறி வரி வடிவத்தைச் சிதைப்பதற்கு ஆதரவு திரட்டுகின்றனர். எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும் எனப் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்தாகிய உடல் சிதைந்தமையால், மொழியாகிய உயிர் தங்குவதற்கு இடமின்றி அழிந்துள்ளதை வரலாறு காட்டுகின்றது. பரதகண்டம் முழுமையும் வழங்கி வந்த தமிழ் மொழி, புதிய புதிய வரி வடிவங்களுக்கு இடம் அளித்ததால்தான் பிறமொழிச் சொற்களும் உள்ளே புகுந்து இக் கண்டம் முழுவதும் புதுப்புது மொழிகள் தோன்றின. எனவே, இப்பொழுது மேற்கொள்ளும் எழுத்துச்சிதைவு முயற்சி எஞ்சியுள்ள தமிழ்நிலத்தையும் இல்லாதாக்குவதற்கான முயற்சியே அன்றி வேறு இல்லை.” (எழுத்தைக் காப்போம் ! இனத்தைக் காப்போம்!- பக்கம் 6) “எழுத்துருக்கள் மொழியின் மாறாத அடையாளங்கள் அல்ல” என்று வரிவடிவ அழிப்பிற்குச் சப்பைக்கட்டு கட்டுகின்றார். இதற்குப் பின் வரும் குறிப்புகளைக் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன். “கல்விக்கு அடிப்படையாய் அமைவன எண்ணும் எழுத்துமாய குறியீடுகள் என்பதை உணர்த்தவே எண்ணையும் எழுத்தையும் கண்களாகக் கூறுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இதனை நன்குணர்ந்த நம் முன்னோர் எண் எழுத்து உருக்களைப் பேணி வந்துள்ளனர். கல்வெட்டுகளில் உள்ள மாற்றங்களுக்கும் தமிழ் மொழி எழுத்து வளர்ச்சிக்கும் தொடர்பில்லை என்பதை உணர்ந்தால் தமிழ் எழுத்து மாறா வடிவுடன் நிலைத்து வருவதை உணரலாம். எனவேதான் “தொல்லை வடிவின எல்லா எழுத்தும்” என்கிறது நன்னூல். அதனை, அதற்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் வந்த இலக்கண விளக்கமும் வழி மொழிகின்றது. (நன்னூல்: எழுத்ததிகாரம்: 5.உருவம்: நூற்பா 98 - இலக்கண விளக்கம்: எழுத்தியல்: நூற்பா 23) அஃதாவது எல்லா எழுத்துமே மிகத் தொன்மையான காலத்தில் இருந்துமாறாமல் வருகின்றன என இலக்கண நூல்கள் கூறுகின்றன. காலந்தோறும் சிலர் எழுத்து வடிவங்களில் குறை கண்டு மாற்ற வேண்டும் என்று துடித்ததால்தான் “எண்ணெழுத்து இகழேல்” (ஆத்திச்சூடி 7) என்று ஔவையார் தெளிவாகவே கூறிச் சென்றுள்ளார். எண், எழுத்து வடிவங்களில் சிதைவு உண்டானால் அவை வெளிப்படுத்தும் அறிவு வளத்திலும் சிதைவு ஏற்படும் என்பதை உணர்ந்தே இவற்றை நம் முன்னோர் போற்றி உள்ளனர். மொழி வழித் தேசிய இனம் அழியாமல் இருக்க மொழி அழியாமல் காக்கப்படவேண்டும்; மொழி காக்கப்பட அதன் இலக்கியங்கள் பேணப்பட வேண்டும்; இலக்கியங்கள் போற்றப்பட மொழியின் எண்ணும் எழுத்தும் காப்பாற்றப்பட வேண்டும். இஃது எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். இந்திய அரசியல் யாப்பும் (Constitution of India: பிரிவு 29(1)) இதை உணர்ந்தே எழுத்து வடிவங்கள் காக்கப்பட வேண்டும் என விதி வகுத்துள்ளது. ஆனால், நடைமுறையில் தேவநாகரியையும் கிரந்தத்தையும் புகுத்திப் பிற தேசிய மொழிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. (எழுத்தைக் காப்போம் - இலக்குவனார் திருவள்ளுவன், நட்பு இதழ்) 1950 இல் உரோமன் எழுத்துகளில் தமிழை எழுத வேண்டும் என ஆங்கில நாளிதழ் ஒன்றின் வழிச் சிலர் முயன்றனர். பேராசிரியர் சி.இலக்குவனார் முதலானவர்கள் முயற்சியால் அதற்கு முடிவுரை கட்டப்பட்டது. இப்பொழுது மீண்டும் அம் முயற்சியில் 'இந்து' இதழ் இறங்கி மூக்குடைபடுவது தேவைதானா? எழுத்தைக் கொல்வது மொழியைக் கொல்வதே! மொழியைக் கொல்வது இலக்கியம் கொல்வதே! இலக்கியம் கொல்வதோ இனத்தைக் கொல்வதே! என்னும் பாவேந்தர் பாரதிதாசன் முழக்கங்களை ஏற்று நம் தமிழ் மொழியின் எண்ணையும் எழுத்தையும் காக்கப் பெரும்திரளாய்த் தமிழன்பர்கள் உள்ளனர். எனவே, தமிழ் இந்துவே, மொழிக் கொலையை நிறுத்திக்கொள்! தமிழ் அழிப்பு முயற்சிக்கான கட்டுரையை இணையப் பக்கத்தில் இருந்து எடுத்துவிடு! தமிழால் பெட்டியை நிரப்பும் இந்துவே! தமிழைக்காக்காவிட்டாலும் தமிழ் அழிப்பு முயற்சியில் ஈடுபடாதே! அல்லது உன் தமிழ்ப்பதிப்பை நிறுத்திவிடு! நிறுத்திவிடு! நிறுத்திவிடு! மக்களெல்லாம் தாய்மொழியைக் கற்பதற்கு மடத்தனமாய்க் கற்பிக்கும் முறையை மாற்றிச் சிக்கலின்றித் தெளிவாக உணருவதற்குச் செம்மைநிலை காணாத ஆங்கிலத்தால் தக்கஒரு தகுதியினைப் பெற்றாற் போன்று தமக்குள்தாம் பெரியார் என எண்ணிக்கொண்டு தக்கைகளாய்த் தலைநிமிர்ந்து ஆடல்வேண்டா (- பாவேந்தர் பாரதிதாசன்)

Monday, November 4, 2013

தமிழக தமிழின போராளிகளை பயங்கரவாதியா

தமிழக தமிழின போராளிகளை பயங்கரவாதியாக சித்தரிக்க முயலும் ஆரிய திராவிட அரசிற்கு உங்கள் கண்டனத்தை பதியுங்கள்! தமிழக அரசு ஈழ மக்களுக்கு ஆதரவாக சட்ட மன்ற தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு அவர்களுக்காக போராடும் தமிழின போராளிகள் மீது முதன் முறை யாக “தேசியப் பாதுகாப்பு சட்டம்” என்ற கடுமையான போக்கை கையாண்டு தனது இரட்டை நிலையை வெளிப் படுத்தியுள்ளது. ''தமிழக அரசின் தீர்மானத்தை அவமதிக்கும் இந்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்திய அரசே, தமிழர்களின் உணர்வை அவமதிக்காதே. சல்மான் குர்ஷித்தே, மன்மோகன்சிங்கே இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளாதே...சட்டமன்ற தீர்மானத்தை இழிவுப்படுத்திய இலங்கை தூதர் கரியவாசகமே, இந்தியாவை விட்டு வெளியேறு. மத்திய அரசே... தமிழர்களின் கோரிக்கையை அவமதித்து, இந்தியா உடைவதற்கு வழி வகுக்காதே''.. என்ற கோரிக்கைகள் அடங்கிய துண்டரிக்கைளை பரவ லாக கொடுத்து அதன் அடிப்படையில் மயிலாப்பூர் மற்றும் சேலம் அஞ்சல் நிலையத்தின் மீது “திராவிடர் விடுதலை கழகம்” தமிழர்கள் 4 பேர் தாக்குதல் நடத் தியதற்காக அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், மற்றும் அவர்களை தூண்டியதாக அண்ணன் கொளத் தூர் மணி அவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இதற்கு முன் இதே தோழர்கள் அயோத்திய மண்டப தாக்குதல், காவிரி சிக்கலில் ஆளுநர் மாளிகை உணவக தாக்குல், 2009ல் ஈழ ஆதரவு சிடிக்களை பரப்பியது, புத்த மடாலய தாகுதல், தினமலர் தாக்குதல், எ.ஸ்.வீ. சேகர் இல்ல தாக்குதல், காஷ்மீர் சிக்கலுக்காக போராடி யதற்காகவும் காவல் துறையின் அடக்குமுறையினால் சிறை பட்டிருக்கிறார்கள். மேலும் தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன் அவர்களும் தேடப்படும் குற்றவாளியாக இதில் சேர்க்கப் பட்டுள்ளார். இன்று சிறைப்பட்டிருக்கும் தோழர்கள் நால்வரும் தங்களின் முகம் காட்டாமல் உழைத்த சாமானிய உழைப்பாளிகள். கூலித் தொழிலாளிகள், நாள்தோறும் தங்களின் உழைப்பால் ஈட்டும் கூலியால் தங்களின் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டியவர்கள், சொந்த வீடு இல்லாமல் சாலையோர வீடுகளில் வாழ்பவர்கள் . எதிர் வினையா ற்றினால் என்ன சேதாரங்களை சந்திப்போம் என்று உணர்ந்து செயலாற்றியவர்கள்.. அவர்களுக்கு துணை நிற்போம்.. பொருளாதார முறையிலான உதவிகளை செய்திட விழைவோம். திராவிட இயக்க எதிர்ப்பு என்பது நம்மிடையே பரவி இருந்தாலும் தமிழின சிந்தனை அடிப்படையில் இப் போராளிகளுக்கு உதவுவது ஒவ்வொரு தமிழ் தேசிய வாதிகளின் கடமையாக கருதுவோம். தமிழ்போராளிகளை ீவிரவாதிகளாக,பயங்கரவாதியாக காண்பிக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு உங்கள் கண்டனத்தை பதியுங்கள் . முகநூல் தொகுப்பு

Wednesday, October 23, 2013

சுப. உதயகுமார் - அறியாத தகவல்கள்

அவன் ஒரு கைக்கூலி. வெளிநாட்டிலிருந்து பணம் வாங்கியவன். ஒரு ட்ரஸ்ட் அமைத்து வெளிநாட்டுப் பணத்தை அபகரித்தவன். மக்களை மிரட்டுபவன். பல கோடி ரூபாய் சொத்துக்களை வைத்துள்ளவன். அயோக்கியன். அமெரிக்க கைக்கூலி. இவ்வாறெல்லாம் மத்திய அரசு மந்திரிகளும், மாநில அரசின் காவல்துறையும் சொல்கின்றன. விஷயத்தை விசாரித்தால், அவை அத்தனையும் உண்மை என்றே தெரிய வருகிறது. நாகர்கோயில் அருகே, கோட்டாரில் உள்ள இசங்கன் விளையில் பிறந்தான் ஒருவன். அவன் தந்தை பெயர் பரமார்த்தலிங்கம். அவன் தந்தை திராவிடர் கழகத்திலும் பின்னர் திமுகவிலும் தீவிர ஈடுபாடு கொண்டவர். போராட்டம் என்பது அவனுக்கு புதிதல்ல. வளரும் பருவத்திலேயே அவன் தந்தை காங்கிரசின் கோட்டையாக இருந்த அந்த ஊரில் திராவிடர் கழக கொள்கைகளைப் பேசிக்கொண்டிருந்ததால், அவர் தாக்கப்பட்டதை பல முறை தன் தங்கைகளோடு நின்று தடுத்திருக்கிறான். அதனால் போராட்டங்கள் அவனுக்கு புதிதல்ல. அவன் அம்மா கல்லுப்பட்டியில் உள்ள காந்திய ஆசிரமத்தில் படித்தவர்கள் அவர்களின் சொந்த ஊர் நாகர்கோவில். அவர் அப்பா திமுக என்றால் அம்மாவோ தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். நேரெதிரான அரசியல் கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும், அவனின் தாய் தந்தையரின் சிறப்பான வாழ்வில் அரசியல் பிடிப்புகள் பிளவை ஏற்படுத்தவில்லை. இரண்டு அரசியல் சிந்தனைகளுக்கும் அந்த வீட்டில் இடம் இருந்தது. அவன் தந்தையின் விருப்பப்படி வீட்டில் பெரியார் அண்ணாவின் படங்கள் இருந்தன. அவன் தாய் விருப்பப்படி, காமராஜர் படமும் வீட்டில் இருந்தது. அவன் குடும்பம் இந்துக் குடும்பம். ஆனாலும் அவன் அம்மா சமூக நலத்துறையில் செய்து வந்த பணியின் காரணமாக பால்வாடி மற்றும் பல வீடுகளுக்கு சென்று வந்ததால் அந்த வீடுகளில் கிறித்துவ மதத்தினர் பிரார்த்தனை செய்வதைப் பார்த்து, தனது பிள்ளையையும் பிரார்த்தனை செய்யச் சொல்வார். அவனுக்கு கிறித்துவ மதத்தின் மீது மரியாதை உண்டு. அவன் அம்மா கிறித்துவ மதத்தினர் போல பிரார்த்தனை செய்தாலும் அவன் வீட்டின் அருகிலிருந்த சுடலைமாடன், இசக்கியம்மன் கோயிலுக்குச் செல்வதையும் தவிர்த்ததில்லை. திராவிடர் கழகக் கொள்கைகளை உடைய அவன் தந்தை இந்த வழிபாடுகளில் கலந்து கொள்வதில்லை. நாகர்கோயிலில் உள்ள டிவிடி மேல்நிலைப் பள்ளியில் படித்தான். அவன் படித்தது தமிழ் மீடியம் என்றாலும், ஆங்கில மொழி மீது இருந்த ஆர்வம் காரணமாக ஆங்கில மொழியை ஆர்வத்தோடு கற்றான். அவன் தந்தை அவனை இன்ஜினியர் ஆக்க விரும்பினாலும், அவன் தனக்கு விருப்பமான, சமூக அறிவியலைப் படித்தான். சமூக அறிவியலை படித்ததாலோ என்னவோ சமூகத்தின் மீது தீராத காதல் கொண்டவனாக மாறினான். கேரளாவில் ஆங்கில இலக்கியம் படித்தான். பின்னர் புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அவன் அறிவை விசாலமாக்கியது. மார்க்சியம் கற்று, மார்க்சியத்தின் மீது ஆர்வம் இருந்தாலும், மார்க்சியம் அமல்படுத்தப்பட்ட எத்தியோப்பியாவின் யதார்த்த நிலைமைகள் அவனை மார்க்சியம் மீது நம்பிக்கை இழக்கச் செய்தது. ஆசிரியர் வேலை கிடைத்து எத்தியோப்பியாவுக்கு பயணம் செய்த அவன், அப்போது எத்தியோப்பியாவை ஆட்சி செய்து கொண்டிருந்த மெங்கிஸ்டு ஹெல்மெரியம் என்பவர் கம்யூனிசம் என்ற பெயரில், சோவியத் ரஷ்யா துணையோடு தனி மனித சுதந்திரத்தை ஒடுக்கியதையும், பார்த்து மனம் வெறுத்தான். 1987 வரை எத்தியோப்பியாவில் பணியாற்றினான் அந்தக் கைக்கூலி. யுனெஸ்கோ துணையோடு, எத்தியோப்பியாவிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பணியாற்றினான். அவன் பணியை எதியோப்பிய அரசாங்கம் நட்பாக பார்க்கவில்லை. எத்தியோப்பிய அரசாங்கத்தின் உளவுப்படை அவனை கண்காணிப்புக்குள்ளாக்கியது. யுனெஸ்கோ அமைப்பின் மூலமாக, எத்தியோப்பிய அரசாங்கத்துக்கு எதிராக அவன் செயல்படுகிறான் என்று அந்த அரசாங்கம் சந்தேகித்தது. நிம்மதியாக பணியாற்ற முடியாத சூழல். அந்தச் சூழலில், அவன் மேலும் பணியாற்ற விருப்பம் தெரிவிக்காமல் திரும்பி வந்தான். எத்தியோப்பியாவில் பணிக்குச் செல்வதற்கு முன்பே, இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவற்றின் அணுசக்திக் கப்பல்கள் நிலை கொண்டிருப்பதை எதிர்த்து, இந்துமகா சமுத்திர அமைதிக் குழு என்ற ஒரு அமைப்பை தன்னுடைய 21வது வயதில் ஏற்படுத்தினான். வளர்ந்த நாடுகளுக்கிடையிலான பனிப்போர், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அந்தக் குழு பணியாற்றியது. அணு ஆயுதம் தாங்கியுள்ள அந்தக் கப்பல்கள் தங்கள் ஆயுதத்தைப் பயன்படுத்தினால், இந்தியாவுக்கு நேரும் பேரழிவைப் பற்றி பேசியது அந்தக் குழு. அந்த சமயத்தில்தான் அவனுக்கு அணு ஆயுதங்கள், அணு சக்தி தொடர்பான விழிப்புணர்வு பெருமளவில் ஏற்பட்டது. அணு சக்தியும், அணு ஆயுதங்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது அணு ஆயுதத் தயாரிப்புக்காகவே அணு சக்தி என்ற சிந்தனையே உருவானது என்பதை புரிந்து கொண்டான். எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் உள்ள நாட்டர்டாம் பல்கலைக்கழகத்தில் தன் மேற்படிப்பை தொடர்ந்தான். அங்கே மேற்படிப்பு முடிந்ததும், ஆஸ்திரேலியா சென்று உதவித்தொகையோடு படிப்பை தொடர்ந்தான். அங்கே ஒரு பேராசிரியரின் உதவியாளராக வேலை பார்த்துக் கொண்டே, முனைவர் படிப்பையும் அவன் முடித்தான். பின்னர் அமெரிக்காவில் உள்ள ஹவாயில் வேலை கிடைத்தது. அங்கும் பணியாற்றி விட்டு, 2001ல் முழு நேரமாக இந்தியாவுக்கு திரும்பினான். இந்தியாவில் பிஜேபி அரசு செய்த அணு ஆயுதச் சோதனையின் விளைவுகள் இதற்கு எதிராக பணியாற்ற வேண்டிய கடமையை அவனுக்கு உணர்த்தியது. வலதுசாரி தீவிரவாதிகளாக இருந்து அப்பாவி முகமூடி போட்டுக்கொண்டு வலம் வரும் ஆர்எஸ்எஸ், பிஜேபி, விஎச்பி ஆகிய அமைப்புகளைப் பற்றியே அவன் முனைவர் படிப்புக்கான ஆய்வு செய்திருந்ததால், இது பற்றி எழுதுவதும், விவாதிப்பதும் அவனுக்கு எளிதாக இருந்தது. பிஜேபி அரசாங்கம் இந்தியாவில் பதவியேற்றதும், இந்தியா சந்திக்கப்போகும், ஆபத்துக்கள் குறித்து அவன் தொடங்கிய பிஜேபி அரசு கண்காணிப்புக் குழுவில் இந்து ராம், கே.எம்.பணிக்கர், ரொமிலா தாப்பர், ஏ.ஜி.நூராணி, அஸ்கர் அலி இன்ஜினியர் ஆகியோர் அதில் இணைந்தார்கள். பாரதீய ஜனதா கட்சி பதவியிழக்கும் வரை அந்த அமைப்பு தொடர்ந்தது. அந்த அரசு வீழ்ந்ததும், இந்த அமைப்பை கவர்மென்ட் வாட்ச் என்ற அமைப்பாக மாற்றி தொடர்ந்து அதில் செயல்பட்டு வந்தான். 2001ல் பழவிளை என்ற இடத்தில் ஒரு நிலத்தை வாங்கி தன் மனைவியோடு சேர்ந்து, அங்கே ஒரு பள்ளியைத் தொடங்குகிறான். பழவிளை என்பது ஒரு கிராமம். அவனின் கல்வி பின்புலத்திற்கும், அறிவாற்றலுக்கும், திருநெல்விலியில் நல்ல கல்விக்கு இருந்த வற்றாத தேவைக்கும் ஏற்ப, அவன் நெல்லை நகரத்தில் இந்தப் பள்ளியைத் தொடங்கயிருந்தானென்றால், இன்று ஜேப்பியார் போலவோ, ஏ.சி.சண்முகம் போலவோ ஒரு கல்வித்தந்தை ஆகியிருப்பான். ஆனால் கிராமப்புற மக்களுக்குத்தான் கல்விக்கான தேவை இருக்கிறது என்பதற்காக அந்தக் கிராமத்திலேயே அந்தப் பள்ளியை தொடங்கினான். வழக்கமான பள்ளிக் கல்வித் திட்டத்தோடு, விவசாயம், இயற்கை விவசாயம், சுற்றுச் சூழல், போன்றவற்றையும் அவன் பள்ளியில் அந்தப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தான். பெற்றோர்களிடத்தில் பத்து ரூபாய் கூட நன்கொடை வாங்காமல் பள்ளியை நடத்தினான். அவன் தொடங்கிய பள்ளியின் பெயர் சாக்கர். (SOCCER) சவுத் ஆசியன் கம்யூனிட்டி சென்டர் ஃபார் இடிகேசன் ரிசர்ச் என்பதுதான் அதன் விரிவாக்கம். அவன் இருந்த பகுதியில், மத மோதல்களுக்குப் பஞ்சமே இல்லை. வலதுசாரி இந்து அமைப்புகள் எப்போது பிரச்சினையைக் கிளப்பலாம் என்று காத்துக் கொண்டிருக்கும். ஒருவன் நல்ல பள்ளியை நடத்தி, சுற்றுப்புற மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்கினால் மதவாதிகளுக்குப் பொறுக்குமா என்ன ? அந்தப் பள்ளிக்கான ஆதரவை குலைக்க வேண்டும் என்பதற்காக, சாக்கர் என்பது கிறித்துவ அமைப்பு. அந்தப் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற விஷப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டார்கள். ஆனால் இந்தப் பிரச்சாரங்கள் அந்தத் தரமான பள்ளியின் புகழை குலைப்பதில் வெற்றி பெறவில்லை. வழக்கமான பள்ளியாக இருந்தால் ஒரு வேளை புகழ் குறைந்திருக்கும். ஆனால் அந்தப் பள்ளியில் கல்வி வித்தியாசமாக அல்லவா வழங்கப்பட்டது ...!!! கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் எடுத்த ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் அந்தப்பள்ளிப் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்தார்கள். கல்லூரிகளில் நடத்துவது போன்ற செமினார்கள் பள்ளியில் நடத்தப்பட்டன. இயல்பாகவே சுற்றுச் சூழல் குறித்து இருந்த அவனது ஆர்வம், கூடங்குளம் அணு உலை நோக்கி அவனது கவனத்தை திருப்பியது. அணு உலையை எதிர்க்கும் அவனது பொதுநலத்தில் சுயநலமும் கலந்திருந்தது. அவனது தாத்தா பாட்டிகளில் நான்கு பேர் புற்றுநோயால் இறந்திருந்தனர். அவனது அப்பாவின் அம்மாவை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். பாட்டி என்றால் உயிர். அந்தப் பாட்டி, அவனுக்கு ராமாயணம், மகாபாரதம் என்று பல்வேறு கதைகளைச் சொல்லி அவன் அறிவை விரிவாக்கியிருந்தார். அந்தப் பாட்டி கதை சொல்லும் அழகும் திறமையுமே பின்னாளில் அவன் பேச்சுத்திறனுக்கு உந்துசக்தியாக அமைந்தது. அந்தப் பாட்டிக்கு புற்று நோய் வந்தது. அந்த நோயை, உரிய நேரத்தில் கண்டுபிடிக்காமல் விட்டதால் நோய் முற்றிய நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. புற்றுநோயால் பாட்டியின் கன்னத்தில் ஓட்டை விழுகிறது. எந்தப் பாட்டி தனக்கு கதை சொல்லி அவன் அறிவை விரிவாக்கினார்களோ, அந்தப் பாட்டிக்கு அன்போடு ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாத கொடுமையை அவன் அனுபவித்தான். அவன் சொந்த ஊரான இசங்கன்விளையில் பலர் புற்றுநோயால் அவதிப்பட்டதை பார்த்துப் பார்த்து, அணு உலை மற்றும் அணு சக்திக்கு எதிரான அவனது உணர்வுகள் பலப்பட்டன. அவன் சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்த சின்னவிளை, பெரியவிளை, மண்டைக்காடுப் புதூர், கொட்டில்பாடு போன்ற கடற்கரை கிராமங்களில் புற்றுநோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இது குறித்து அவன் ஆய்வில் இறங்கியபோது, அக்கடற்கரைப் பகுதியில் தோரியம் கிடைப்பதைக் கண்டறிந்தான். தோரியம் கதிரியக்கம் கொண்டது என்பதையும் கண்டு கொண்டான். அந்த மணலை தோண்டியெடுத்து ஏற்றுமதி செய்யும் ஆலைகள் அந்தக் கதிரியக்கத்தை அதிகப்படுத்துவதையும் கண்டுபிடித்தான். அந்தப் பகுதியில் வசிக்கும் ஆண்களுக்கு விரைப்பையில் புற்றுநோய் அதிகமாக வருவதற்கான காரணம், அந்த மணல் மீதே அமர்ந்து வலைப்பின்னுதல், சீட்டாடுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு புற்றுநோய் அதிகமாக வருகிறது என்பதைக் கண்டறிந்தான். உலகிலேயே நார்வே, துருக்கி மற்றும் இந்தியாவில் மட்டும்தான் தோரியம் கலந்த மணல் இருக்கிறது என்பதையும், அந்த மணலை ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும், இந்தியா ஏற்றுமதி செய்கிறது என்பதை கண்டுபிடித்தான். 2001ல் இந்தியா வந்தபிறகு, கூடங்குளம் அணு உலையைப் பற்றிய விரிவான ஆய்வை மேற்கொள்கிறான். 20 நவம்பர் 1988ல், இந்தியாவுக்கும், அப்போதைய சோவியத் ரஷ்யாவுக்கும் இடையே கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் நடந்த செர்னோபில் விபத்தைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் சோவியத் யூனியனோடு இந்த ஒப்பந்தத்தைப் போடுகிறது இந்தியா. சோவியத் யூனியன் உடைந்ததும் இந்த ஒப்பந்தம் காலாவதியாகிறது. 1997ல், அப்போதைய பிரதமர் தேவகௌடாவும், ரஷ்ய அதிபர் போரிஸ் எல்ட்ஸினும் மீண்டும் ஒரு கூடுதல் ஒப்பந்ததைப் போட்டு, அணு உலைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறார்கள். முதன் முதலில் 1988ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கூடங்குளம் அணு உலைக்கு ஆவதாக மதிப்பிடப்பட்ட செலவு 6000 கோடி. இதே தொகை 1997ல் 17,000க கூடுகிறது. முதலில் அணு உலைக் கழிவுகளை திருப்பி எடுத்துக் கொள்வதாக வாக்குறுதி கொடுத்திருந்த ரஷ்யா, பின்னாளில் திருப்பி எடுத்துக்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டது. கூடங்குளம் அணு உலைக்கான ஒப்பந்தம் 20 நவம்பர் 1988ல் கையெழுத்தான உடனேயே அடுத்த மாதமே, 19 டிசம்பர் 1988 அன்று சமத்துவ சமுதாய இயக்கம் ஒன்ற ஒரு இயக்கத்தை அணு உலைக்கு எதிராக தொடங்குகிறார் டேவிட் என்பவர். இந்த அமைப்பில் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சேருகின்றன. 1989ல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. தொடர்ந்து நடந்து வந்த இந்தப் போராட்டங்கள் 1989ல் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நின்று போகின்றன. அணு உலையின் எதிர்காலம் சோவியத் யூனியனின் வீழ்ச்சியோடு முடிந்துவிட்டது என்ற அடிப்படையிலேயே போராட்டங்கள் நிறுத்தப்படுகின்றன. 1998ல் ரஷ்யாவோடு மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்ட பிறகு, போராட்டங்கள் மீண்டும் தொடங்குகின்றன. மக்கள் கூட்டமைப்பு என்ற அமைப்பு கூடங்குளம் அணு உலையின் ஆபத்து குறித்து மாநாடு நடத்துகின்றது. பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் அணு உலைக்கு எடுக்கப்பட்டால், எப்படி அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது விரித்துரைக்கப்படுகிறது. இதற்கிடையே அணு உலைக்கான வேலைகள் தீவிரமாக மத்திய அரசால் தொடங்கப்படுகின்றன. 2001 நவம்பர் 10 அன்று அணு சக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு மதுரையில் உருவாக்கப்படுகிறது. அந்தக் கூட்டமைப்பு உருவானதில் முக்கியப் பங்கு வகிக்கிறான் அவன். 2002 ஜனவரி முதல் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கருத்தரங்குகள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், என்று பல்வேறு வடிவிலான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. அத்தனையும், இவன் ஒருவனின் முன் முயற்சியால் நடைபெறுகின்றன. கிராமம் கிராமமாகச் சென்று, அணு உலைக்கு எதிராக தெரு முனைக் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொள்கிறான். ஆனால், இவன் சொல்வதை யாருமே காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. அந்த அணு உலையால் கடுமையாக பாதிக்கப்படும் கூடங்குளம் மக்களே கூட இவன் சொல்வதை காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை. ஒரு கட்டத்தில், மத்திய உளவுத்துறையின் ஆதரவில், சில போக்கிலிகள் இவன் கூட்டம் நடத்தும் இடங்களுக்கு வந்து இவனையும், இவனோடு இருந்தவர்களையும் விரட்டி அடிக்கின்றனர். 2001 முதல் இவன் மேற்கொண்ட பிரச்சாரத்திற்கான பலன், 2007 முதல் லேசாகத் தெரியத் தொடங்குகிறது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக இவன் பிரச்சாரம் செய்தபோதெல்லாம், அம்மக்கள், சிங்கப்பூராக மாற இருக்கும் கூடங்குளத்தை கெடுப்பதற்காக வந்திருக்கிறான் என்றே நினைத்தார்கள். அணு உலை வந்தால், தேனாறும் பாலாறும் ஓடும், பேச்சிப்பாறை அணையிலிருந்து குடிநீர் வரும், தங்கும் விடுதிகளைக் கட்டி வாடகைக்கு விட்டால், இங்கே தங்க வருபவர்களின் மூலம் ஏராளமான வருமானம் வரும் என்றே நம்பினார்கள். இந்த நம்பிக்கையால் கூடங்குளம் ஊருக்குள்ளே அவன் அனுமதிக்கப்பட்டதேயில்லை. அந்தப் பகுதியில் பெரும்பாலாக இருந்த நாடார் இன மக்கள் இவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. நாம் சம்பாதித்து பெரிய ஆளாக ஆவதை தடுப்பதற்காக பிரச்சாரம் செய்கிறான் என்றே நினைத்தார்கள். 2007ல் தான் லேசான மாற்றம் ஏற்படத் தொடங்குகிறது. அணு உலை வேலைகள் தீவிரமாக நடைபெற்ற வருகிறது, இவர்கள் சொன்ன மாற்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லையே என்பதை அம்மக்கள் உணரத் தொடங்குகின்றனர். அதன் பிறகு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், எல்லா இடங்களுக்கும் பயமின்றி சென்று பிரச்சாரம் செய்ய முடிந்தது. இந்த புதிய உத்வேகத்தில், நண்பர்களின் உதவியோடு துண்டுப் பிரசுரங்கள் போடுவது, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்று தன் பணியை வேக வேகமாகச் செய்யத் தொடங்கினான். கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு செல்லுபடியாகும் ? கூடங்குளம் அணு உலை ஆபத்தில்லாதது, கூடங்குளத்தை சிங்கப்பூராக்கும் என்ற அவர்களின் பிரச்சாரத்துக்கு அவர்களே வேட்டு வைத்தார்கள். 2011ல் மார்ச் 11 அன்று ஜப்பானின் புக்குஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து இந்திய அணு சக்தியாளர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியது. என்னடா இது.. ஏற்கனவே இந்தப் பயல்கள் அணு உலை என்றால் ஆபத்து என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இந்த விபத்து வேறு நடந்திருக்கிறது. விட்டால் இதை வைத்தே இவர்கள் மக்களைத் திரட்டி விடுவார்கள். அவனுக்கு முன்னால் நாம் முந்திக் கொள்ளலாம் என்று மத்திய அணு விஞ்ஞானிகள் களம் இறங்கினார்கள். ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துப் போல விபத்து ஏற்பட்டால், அனைவரும் வீட்டுக்குள் புகுந்து கொள்ள வேண்டும். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு வெளியாகும். வேகமாக மூச்சு விடக் கூடாது. இந்த இடத்திலிருந்து உங்களை அப்புறப்படுத்த அரசு வாகனங்கள் வரும். 30 கிலோ மீட்டர் சுற்றுப்பரப்பில் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப் படுவார்கள். ஆறு மாதத்துக்கு ஊருக்குள் வரக்கூடாது. அரசு உத்தரவிட்ட பிறகே ஊருக்குள் வர வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். அத்தனை நாள் அரசு சொல்லும் அத்தனை விஷயங்களையும் கண் மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்த அப்பகுதி மக்களுக்கு அடடா, உதயக்குமாரும் அவரோடு இருக்கும் மற்றவர்களும் இத்தனை நாட்களாக சொல்லி வந்த விஷயத்தை தற்போது அரசு அதிகாரிகளே சொல்லுகிறார்களே என்பது உறைக்கத் தொடங்கியது. அதுவும் புக்குஷிமா விபத்து நடந்து அது தொடர்பான விவகாரங்களை மக்கள் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு மக்களிடம் விபத்துக்கான ஒத்திகையும் நடத்தியாயிற்று. இந்த நேரத்தில் அணு உலையைத் திறந்தால், மக்களிடம் எதிர்ப்பு வலுக்கும் என்பது புரிய வேண்டாமா… ? நாராயணசாமி போன்றவர்கள் பிரதமர் அலுவலக அமைச்சராக இருந்தால் அரசு எப்படி செயல்படும்… இப்படித்தான்.. புக்குஷிமா விபத்து நடந்து முடிந்து, ஒத்திகையும் நடத்தி முடித்த ஒரு சில வாரங்களில், கூடங்குளம் அணு உலை தொடங்கப்போகிறது என்று அறிவிப்பு வெளியிடுகிறார்கள். ஜுன் 1, 2011ல் கூடங்குளம் அணு உலையில் பரீட்சார்த்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கிறார்கள். அணு உலை புகைப்போக்கியிருந்து வெள்ளை நிறப்புகை வெளியேறுகிறது. அந்தப் பாமர மக்கள், அந்தப் புகையே நம்மைக் கொன்று விடும் என்று அஞ்சுகிறார்கள். ஏற்கனவே உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த மக்களுக்கு சொல்ல வேண்டுமா ? இத்தனை நாட்களாக இந்த அணு உலையின் ஆபத்துக்களை விளக்கிச் சொன்ன அவனைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். அய்யா, எங்களைக் காப்பாற்று, எங்கள் உயிரைப் பறிக்க வருகிறார்கள் அணு விஞ்ஞானிகள் என்று அவனிடம் தஞ்சம் புகுகிறார்கள். 2001 முதல் தொடர்ச்சியாக அணு உலைக்கு எதிராக பணியாற்றிக் கொண்டிருந்த அவனுக்கு மக்கள் திரளாக வந்து, எங்களுக்காக போராடு என்று கோரிக்கை வைத்தால் கசக்குமா என்ன..? ஒரு படைத் தளபதியைப் போல களத்தில் இறங்கினான். வாருங்கள் நான் இருக்கிறேன்… மோதிப் பார்த்து விடுவோம் என்று போர் முரசறைந்தான். ஊழல் செய்து சொத்து சேர்த்து, அதைக் காப்பாற்றுவதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளைப் போன்றவனா அவன் ? அவனிடம் இழப்பதற்கு என்ன இருக்கிறது…. அவன் உயிரினும் மேலாக நேசிக்கும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதை விட அவனுக்கு வேறு என்ன பேறு அமைய முடியும் ? இறங்கினான் களத்தில். அவன் ஒலித்த போர் முரசம் டெல்லியை நடுநடுங்க வைத்தது. மக்கள் அவன் பின்னால் திரண்டார்கள். ஆகஸ்ட் 16ம் தேதி இடிந்தகரையில் நடந்த உண்ணாவிரதத்தில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். நாளுக்கு நாள் போராட்டம் வலுத்தது. அத்தனை நாள் வரை அவனை எதிரியாகப் பார்த்தவர்கள், அவனோடு சேர்ந்து அணு உலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர். சிறு ஓடையாக இருந்த போராட்டம் நதிப்பிரவாகமாக பெருக்கெடுத்தது. அது வரை டெல்லியின் சந்து பொந்துகளில் அலைந்து திரிந்து இரை தின்றுக் கொண்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு நரி, அவனைப் பார்த்து ஊளையிட ஆரம்பித்தது. அந்த நரியின் கட்டுப்பாட்டில் இருந்த மத்திய உளவுத்துறை, சிபிஐ போன்றவற்றை அவன் மீது கட்டவிழ்த்து விட்டது. நேரடியாக அவனோடு பேரம் பேசியது அந்த நரி. குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகிவிடு. அதற்கு ஏற்பாடு செய்கிறோம் என்றார்கள். அவன் நான் இந்தியாவுக்கு விபச்சாரம் செய்ய வரவில்லை என்று திருப்பியடித்தான். அவனைக் கடத்தி வைத்து விட்டு, அவன் மக்களை நிர்கதியாக்கிவிட்டு ஓடி விட்டான் என்று பிரச்சாரம் செய்ய முயற்சித்தார்கள். அது பலிக்கவில்லை. அவனுக்கு வெளிநாட்டிலிருந்து நிதி வருகிறது என்று அந்த நரி, ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ஊளையிட்டது. அவன், அதற்கான ஆதாரத்தை கொடுத்தால், நான் பொதுவாழ்விலிருந்து விலகுகிறேன். கொடுக்கவில்லையென்றால், நரி விலகுமா என்று கேட்டான். அது குறித்து அந்த நரி வாயே திறக்கவில்லை. அவன்தான் பேரத்திற்கு படியவில்லை. அவனோடு இருப்பவர்களை விலைக்கு வாங்கலாம் என்று அந்த நரி முயற்சித்தது. அவர்களோடு இருப்பவர்கள், அவனை விடத் தீவிரமாக இருந்தனர். அந்த நரிதான் அப்படி ஊளையிடுகிறது என்றால், அந்த நரிக்கும் மற்ற நரிக்கூட்டத்திற்கும் தலைவனாக தலைப்பாகை அணிந்த ஓநாய் ஒன்று இருந்தது. அந்த ஓநாய் ஒரு நாள், அவன் வெளிநாட்டில் பணம் வாங்குகிறான் என்று வெளிநாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்தது. அவன் அந்த ஓநாய்க்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான். அன்று பம்மிய அந்த ஓநாய் இன்று வரை வாய்த் திறக்கவில்லை. அவன் வெளிநாடுகளில் சொத்து சேர்த்துள்ளான். கருப்புப் பணம் பதுக்கியுள்ளான் என்றது அந்த நரி. ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள், கண்ணப்ப நாயனார் சிவபெருமானை கல்லால் வழிபட்டது போல, மலர்களாக அவன் மீது விழுந்தன. அவன் போராட்டத்துக்கு எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு வந்தது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடியில் வந்து, கூடங்குளம் மக்களோடு நான் ஒருத்தி. உங்கள் கவலைகள் தீர்க்கப்படும். பயங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என்று அறிவித்தார். அவனும் அவனோடு சேர்ந்த மக்களும் மகிழ்ந்தனர். ஆர்ப்பரித்தனர். அந்த மக்கள் கருப்பாக இருக்கிறார்கள். ஜெயலலிதா சிகப்பாக இருக்கிறார். அவர் எப்படி அம்மக்களில் ஒருத்தியாக முடியும். உள்ளாட்சித் தேர்தல் முடிந்த மறுநாளே, காவல்துறையை இறக்கினார். காவல்துறையின் பெரும்படை நீண்ட நாட்களாக இரையின்றி கட்டி வைக்கப்பட்டிருந்த வேட்டை நாயாக காத்திருந்தது. அந்த “உங்களில் ஒருத்தி” பாண்டிச்சேரி நரியின் சதிக்குப் பலியானார். அந்த நரி என்ன நடக்கவேண்டுமென்று விரும்பியதோ, அதை முழு வீச்சோடு நடத்தினார். அவனை மிரட்ட அடுத்து என்ன செய்வதென்று, அவன் மீதும், அவனோடு இருந்த தோழர்கள் மீதும் தேசப்பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தார்கள் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. ஒரு வழக்கு இரு வழக்கு அல்ல. இருநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள். கலவரம் ஏற்படுத்தியது, வன்முறையைத் தூண்டியது. தேசத்திற்கு எதிராக போர்த் தொடுத்தது, என்று சரமாரியாக வழக்குகளை பதிவு செய்து கொண்டிருந்தனர். . அது மட்டுமா… ? அவன் தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதி நடத்திய பள்ளியை அடித்து நொறுக்கினர். சிபிஐ மற்றும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளை வைத்து, அவன் பள்ளி மற்றும் ட்ரஸ்டுகளில் சோதனை நடத்தினர். மடியில் கனம் இருந்தால்தானே அவன் பயப்படுதவற்கு… ? சோதனை நடத்துவதை பிரபலமாக விளம்பரப்படுத்திய அரசு நிர்வாகம், சோதனையில் எதுவும் கிடைக்காத விவகாரத்தை வெளிப்படுத்த மறுத்தது. அவன் நடத்திய போராட்டத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் வந்த கலந்து கொண்டார். அந்த ஜெர்மானியரை இரவோடு இரவாக நாடு கடத்தி, அவனை வெளிநாட்டு உளவாளி என்று சித்தரிக்க முயற்சி செய்தனர். அதுவும் வெற்றி பெறவில்லை. அடுத்ததாக மாவட்ட ஆட்சியரோடு பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது, சங் பரிவாரக் கும்பல்களால் அவனும் அவன் குழுவினரும் தாக்கப்பட்டனர். அவதூறான வார்த்தைககள் அவனை நோக்கி வீசப்பட்டன. ஆனால் அவன் கலங்கவில்லை. தான் எடுத்த போராட்டத்திலிருந் பின் வாங்குவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தான். ஆரம்ப காலத்திலிருந்து அவனோடு உடன் இருந்த பிரஜாபதி அடிகளார், போன்றவர்களை பாண்டிச்சேரி நரி சதி வேலையால் அவனுக்கு எதிராக திருப்பியது. பிரஜாபதி அடிகளார் அவனுக்கு எதிராக பேட்டியளித்தார் அவர். அவன் மன உறுதியை குலைக்க பல வேலைகளில் ஈடுபட்டனர் அவன் எதிரிகள். அவன் மீது தொடுக்கப்பட்ட பல்வேறு தாக்குதல்களை அவன் சமாளித்தான். ஆனால் வெளிநாட்டிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு போராட்டம் நடத்துகிறான் என்ற குற்றச்சாட்டை அவனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இந்தாருங்களடா… பார்த்துக் கொள்ளுங்கள். என்னிடம் இருக்கும் சொத்துக்கள் இவ்வளவுதான் என்று பகிரங்கமாக அறிவித்தான். அடுத்ததாக அவன் மீது தாக்குதல் தொடுக்க ஊடகத்தை கட்டவிழ்த்து விட்டனர். எழுத்து விபச்சாரம் செய்யும் ஒரு நாளிதழை வைத்து, அவனது உண்ணாவிரதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியது அந்த நாளிதழ். அவனும் அவன் கூட்டாளிகளும் திருட்டுத்தனமாக தின்று விட்டு உண்ணாவிரதம் என்று நடிக்கிறார்கள் என்று எழுதியது அந்த நாளிதழ். காலையில் இட்லியும் பூரியும் தின்கிறார்கள் என்று பச்சைப் பொய்யை கூசாமல் எழுதியது. அறிவில்லா அரசு என்ற மண் தொலைக்காட்சியின் நிருபர், காவல்துறை வீசிய எலும்புகளை பொறுக்கிய விசுவாசத்தில் அவனுக்கு எதிராக விஷத்தைக் கக்கினார். அதே தொலைக்காட்சியின் நாம செல்வராஜ் என்ற நிருபர், அவனுக்கு நக்சலைட்டோடு தொடர்பு உள்ளது என்று அவர் பங்குக்கு அவன் மீது அவதூறை அள்ளி வீசினார். ஆனால், மக்களுக்கான போராளி மீது இது போன்ற அவதூறுகள் வீசப்படத்தானே செய்யும். அவன் அந்த அவதூறுகளை புறந்தள்ளி விட்டு தனது போராட்டத்தைத் தொடர்ந்தான். தங்கள் முயற்சி இப்படிக் கேவலமாக தோல்வியிடைந்து விட்டதே என்று பாண்டிச்சேரி நரியும், டெல்லி ஓநாயும் மனம் வெதும்பின. ஆனாலும் விட்டு விடுவார்களா என்ன ? எங்கள் வேலை முடிந்து விட்டது, நீங்கள் உங்கள் வேலையைத் தொடங்குங்கள் என்று ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டனர். சிகப்பு ஜெயலலிதாவுக்கு உண்மையில் கொஞ்சமாவது அறிவோ அரசியல் ஞானமோ இருந்திருந்தால், நான் ஏன் அம்மக்களை விரட்ட வேண்டும்… நான் ஏன் அம்மக்களுக்கு விரோதியா வேண்டும்.. அது பாண்டிச்சேரி நரி செய்ய வேண்டிய வேலை என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் கருணாநிதி விரிக்கும் வலையில் எப்போதும் விழுந்து விழுந்து பழக்கப்பட்ட ஜெயலலிதா, நரி வலையிலும் விழுந்தார். கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப வேண்டும் என்று நரி சொன்னதும் சிகப்பு ஜெயலலிதா துடித்தார்… போராடும் மக்களை உடனே விரட்ட வேண்டுமே என்று பதறினார். காத்திருந்த காவல்துறையை ஏவினார். மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். தடியால் தாக்கப்பட்டனர். துப்பாக்கியால் சுடப்பட்டனர். வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அந்த வன்முறை அம்மக்களை அச்சப்படுத்தும், அவர்களை அவனிடமிருந்து அந்நியப்படுத்தும், அம்மக்கள் வன்முறையை கண்டு பயந்து, அவனை வெறுத்த ஒதுக்குவார்கள் என்று எதிரிகள் நம்பினர். ஆனால் அம்மக்களை அவன் ஆடு மாடுகளாக வைத்திருக்கவில்லை. அம்மக்கள் ஒவ்வொருவரையும் கற்றறிந்த போராளியாக மாற்றி வைத்திருந்தான். போராட்ட களத்தில் இருக்கும் போராளிக்கு வேண்டிய உத்வேகத்தோடு அவர்கள் அவன் பின்னால் திரண்டனர். அவனைக் கைது செய்யப் போகிறோம் என்று அரசாங்கம் மிரட்டியது. தம்மக்கள் உயிரைப் பாதுகாப்பதற்காக அவன் சரணடைய முன் வந்தான். ஆனால், அவனை உயிராக நேசிக்கும் மக்கள் அவனைச் சரணடைய விடவில்லை. நீ சரணடையாதே… எங்களுக்கு தலைமையேற்று போராட்டத்தை நடத்து… இறுதி வெற்றி நமதே என்று முழக்கமிட்டார்கள். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்… ? அவன் அம்மக்களின் அன்புக்கு கட்டுப்பட்டான். போராட்டத்தை தொடர்ந்து நடத்த இசைந்தான். அவனைத்தான் துரோகி என்கிறார்கள். அவனைத்தான் வெளிநாட்டின் கைக்கூலி என்கிறார்கள். அவன் வேறு யாருமல்ல தோழர்களே… கூடங்குளம் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தும் சுப.உதயக்குமார்தான் அந்தக் கைக்கூலி. நான் அந்தக் கைக்கூலியை என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன். இப்படி ஒரு கைக்கூலி வாழ்ந்த காலத்தில் வாழ்கிறோமே என்று பெருமைப்படுகிறேன். அந்தக் கைக்கூலியைப் பாராட்டி என் உயிர் இருக்கும் வரை எழுதுவேன், பேசுவேன். நீங்கள்... .. ? நன்றி சவுக்கு

Thursday, October 3, 2013

மறுமலர்ச்சி மக்கள் சந்திப்பு

வைகோவை பார்த்தால் பல நேரங்களில் ஆச்சரியமாகத்தான் உள்ளது. பத்தாயிரம் பேர் உள்ள பொது கூட்டத்திலும் பேசுகிறார் அடுத்த நாளே நூறு பேர் உள்ள தெருமுனை கூட்டத்திலும் பேசுகிறார் அதே உணர்வுடன் லக்ஷம் பேர் திரளும் மாநாட்டு கூட்டத்திலும் பேசுகிறார். ஏரலில் ஆரம்பித்த,மறுமலர்ச்சி மக்கள் சந்திப்பு என்று ஒவ்வொரு கிராமம் மற்றும் நகர வீதிகளில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சியை நான் இப்போதுள்ள ஊடக கருவிகளை சரியாக பயன்படுத்தாமல் இப்படி நேரடியாக செல்வது சரியில்லை என்று ஒரு நண்பரிடம் விமர்சனம் செய்து இருந்தேன். அதே போல பல இடங்களில் எந்தவித முன் திட்டமிடலும் இன்றியும் கூட்டங்கள் இருக்க கூடாது , அப்படி நடக்கும் கூட்டத்திற்கு முன்பு வந்தவர்களே வருவார்கள் புதிதாக, கட்சியை சாராத பொது மக்களை அரசியல் கூட்டத்திற்கு கொண்டு வருவது மிகவும் கடினம் என்றும் பேசி கொண்டு இருந்தோம். ஆனால் வைகோ எதைபற்றியும் கவலை கொண்டவராக தெரியவில்லை. அவரை பொறுத்தளவில் நூறு பேர், ஆயிரம் பேர், லக்ஷம் பேர் எல்லாவற்றிற்கும் எண்ணிக்கை வித்தியாசத்தை மனதில் கொண்டவராக தெரியவில்லை.

Tuesday, September 17, 2013

தமிழக விமான நிலையங்களில் இந்திய அரசின் இந்தி வெறியை கண்டிப்போம்!

இந்திய நடுவண் அரசின் கீழ் இயங்கும் சென்னை விமான நிலையம் ஹிந்தியர்களின் கூடாரமாக விளங்குகிறது. இங்கு ஹிந்தி மொழிக்கும் , ஹிந்தியை தாய் மொழியாக கொண்டவர்களுக்கும் தான் முதலிடம். இதனால் தமிழக பயணிகள் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள். பயணிகளை சோதனையிடும் காவலர்கள் அனைவரும் இந்தி மொழியினர். இவர்களுக்கு தமிழ் தெரியாது . இவர்களிடம் தமிழர்கள் தமிழில் பேசினால் இவர்கள் இந்தியில் தான் மறுமொழி கொடுப்பார்கள். அண்மையில் மலேசியாவில் இருந்து வந்த தமிழ் குடும்பத்திடம் இவர்கள் இந்தியில் திட்டி உள்ளனர். இதை புரிந்து கொண்ட மலேசியா தமிழ் குடும்பத்தினர் , இவர்களை திரும்ப திட்டி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இந்தியர்கள் , தமிழ் குடும்பத்தை விமானத்தில் ஏற முடியாதவாறு கைது செய்தனர். இப்படி பல வழிகளில் தமிழ் பேசும் மக்கள் மீது இந்தியர்கள் தங்கள் வன்மத்தை காட்டுகின்றனர். பயணிகளுக்கு இந்த நிலை என்றால் , விமான நிலைய ஊழியர்களிடம் கட்டாய இந்தி திணிப்பை செய்கின்றனர் இந்தி வெறியர்கள். படத்தில் காணப்படுவது போல , விமான நிலைய ஊழியர்கள் அலுவலகத்தில் இந்தியை பேசுங்கள், இந்தியில் சிந்தியுங்கள் , இந்தியில் எழுதுங்கள் என்று ஆங்காங்கே ஒட்டி உள்ளனர் இந்தி வெறியர்கள். இதை குறித்து அறிய விமான நிலையத்தை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களும் ஆம் இங்கு ஒட்டியுள்ளது உண்மை தான் என்று ஒத்துக் கொண்டனர். ஏன் இவ்வாறு எழுதி உள்ளீர்கள் என்று கேட்டதற்கு , இங்கு உள்ள இந்தி வளர்ச்சித் துறை தான் ஒட்டி உள்ளது. இது நடுவண் அரசு கீழ் இயங்கும் அலுவலகம் , அதனால் இந்தியை ஊக்குவிக்கிறார்கள் என்று கூறினார் ஒரு அதிகாரி. நான் கேட்டேன் , இது தமிழ்நாடு , தமிழில் பேசுங்கள் , எழுதுங்கள் , சிந்தியுங்கள் அப்படித் தானே இருக்க வேண்டும்? ஒரு மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களிடம் இன்னொரு மொழியை பேசுங்கள் எழுதுங்கள் சிந்தியுங்கள் என்று கட்டாயப் படுத்துவது நியாயமாகுமா ? மேலும் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் தமிழில் பேசுவோம் , தமிழில் எழுதுவோம் என்று நாங்கள் எழுதி ஓட்டினால் அதை இந்தியர்கள் ஏற்பார்களா என்ற கேள்வி எழுப்பினேன் . அதற்கு அந்த அதிகாரியால் எந்த பதிலும் தர முடியவில்லை. நீங்கள் எல்லாம் தமிழர்கள் தானே பின்பு எதற்கு இப்படியான வெறிபிடித்த வாசகங்களை அனுமதிக்கிறீர் , கிழித்து எறியுங்கள் என்று கூறி , இந்த தகவலை விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் கொண்டு சேருங்கள் . எங்கள் கண்டனத்தை பதிவு செய்யுங்கள் என்று கூறினேன். தோழர்களே , விமான நிலையத்தை தமிழக அரசே கைப்பற்ற வேண்டும் . அது தனியாரின் கைகளுக்கு செல்லக் கூடாது . இந்திய அரசின் கைகளிலும் இருக்கக் கூடாது. தமிழக மக்களே தமிழக விமான நிலையத்தில் பணிபுரிய வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்தி மொழியை திணிக்கும் கூடாரமாக இந்த விமான நிலையங்கள் விளங்கும் . இதற்கு நம் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் . இந்தி வெறியை தடுப்போம் . தமிழ் மொழியின் உரிமையை நிலைநாட்டுவோம். விமான நிலையத்திடம் பேச 044-22561515 / 22560551 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு நிலைய நிர்வாக (ஆப்பரேசன்ஸ்) பிரிவிடம் தொடர்பை இணைக்கவும். நேரடி எண் 044-22564395. அவர்களிடம் உங்கள் கண்டனத்தை பதிவு செய்யவும். இத்தகைய அறிவிப்பு பலகையை உடனே நீக்கச் சொல்லுங்கள். —

Saturday, May 25, 2013

மலையாளத்திற்கும் செம்மொழி - தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்

கருணாநிதி இழைத்த ஒரு தவற்றால் மலையாளம் உள்பட ஒவ்வொரு மொழிக்கும் செமமொழி அளிக்கும் தகுதி வந்து விட்டது என்று தமிழ்க்காப்புக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்துத் தமிழ்க்காப்புக் கழகத்தலைவர் இலக்குவனார் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது : - செம்மொழித்தகுதி மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மலையாள மொழிக்கும் செம்மொழித் தகுதி வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவித்துள்ளனர். மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் செம்மொழி வரையறைக்காக மத்திய அரசு அமைத்த குழுவிற்கு எதிராக வழக்குகள் தொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் செம்மொழிக்காலத்தை 1.500 ஆண்டு என வரையறுப்பதும் அதன் அடிப்படையில் பிற மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி ஏற்று அறிவிப்பதும் தவறு என்றாகிறது. ஆனால், மத்திய அரசு, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே 2008 இல் செம்மொழித் தகுதி வழங்கியது. பொதுவாக வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தீர்ப்பிற்கு உட்பட்டு ஆணை பிறப்பிப்பது வழக்கம் என்றாலும், அவ்வாறில்லாமல் வழக்கைத் திரும்பப் பெறச் செய்யப் போவதாகக் கூறியது. மத்தியக் கன்னடப்பல்கலைக்கழகம் அமைத்தல், செம்மொழிக் கன்னட நிறுவனம், செம்மொழித் தெலுங்கு நிறுவனம் நிறுவுதல் முதலான தொடர் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இனி,தொடர்ச்சியாக வங்காளம் முலான பிற மொழிகளுக்கும் வழங்க உள்ளது. தமிழின் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகள் செம்மொழித் தகுதி பெறுகின்றன என்றால் தமிழுக்குப் பெருமைதானே என எண்ணலாம். ஆனால், வீண் பெருமையால் பயனில்லை. செம்மொழித் தகுதிக்குரிய தொன்மை, முதன்மை, தாய்மை முதலான தகுதிகளற்ற மொழிகளுக்கு அவ்வாறு தகுதியை வழங்குவது முறையல்ல. முத்தான மணியான தமிழ்ப்பேராசிரியர்கள் சிலரே, சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்களை எல்லாம் பழமலையாளம் எனக்காட்டி உதவியுள்ளனர் என்பதுதான் வேதனையானஉண்மை. வரலாற்றுப் புகழ் தமிழ் தனக்குரிய செம்மொழித் தகுதிக்கான ஏற்பிசைவைப் பெறுவதற்காகப் பல போராட்டக் களங்களைச் சந்தித்துள்ளது. இதனால் பொறாமையுற்ற பிற மொழியினர் மத்திய அரசில் செல்வாக்கைச் செலுத்தி எளிதில் செம்மொழித் தகுதியைப் பெற்று வருகின்றனர். சமசுகிருதத்தைவிடவும் மூத்த மொழியாகவும் சிறந்த தனித்தியங்கும் மொழியாகவும் தமிழ் உள்ளது. ஆனால் சமசுகிருத்திற்கு இணையான உதவியைத் தமிழுக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவேதான் இந்திய மாநில மொழிகள் என்பது போன்று செம்மொழிப்பட்டியலை உருவாக்கி வருகின்றது. அவ்வரிசையில் இன்று மலையாளம் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறான வரலாற்றுப் பிழைகளுக்குக் காரணம் என்ன? இதற்கு வழி விட்டவர் யார்? இக்கேள்விக்கு வருத்தத்துடன் கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது. செம்மொழிக்கான கால வரைறையை 2000 ஆண்டு என வரையறுக்கப்பட இருந்ததை 1000 என மத்திய அரசு மாற்றியது. மூவாயிரம் ஆக்க வேண்டும், கி.மு. என அறிவிக்க வேண்டும் என்றெல்லாம் அறிஞர்கள் குரல் கொடுத்தனர். மலேசியாவில், செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு என முனைவர் ஆறு.நாகப்பன் தலைமையில் ஒரு குழு அமைத்து, அதன் சார்பில் மாநாடு நடத்தி, அங்கு அக்டோபர் 27, 2010 அன்று வந்த இந்தியத் தலைமை யமைச்சரிடம் மூவாயிரம் ஆண்டுக் கால வரையறை வேண்டி முறையீடும் அளித்துள்ளனர். முதல்வராக இருந்த பொழுது கலைஞர் அவர்கள், முதலில் ஆயிரம் ஆண்டு வரையறைக்கு ஒப்புக் கொண்டு வலுத்த எதிர்ப்பினால், 1500 ஆண்டு என மாற்றினார். ‘’உன் மொழிக்குத் தகுதி கிடைத்து விட்டது. அடுத்தமொழிக்குக் கிடைப்பதாக இருந்தால் உனக்கு என்ன’’ என்ற தொனியில் நேரில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் சொல்லி உள்ளார். முதல் வகுப்பு படிப்பவனையும் முனைவர் பட்டம் பெற்றவரையும் சமமாகக் கருத இயலுமா என அவர் எண்ணவில்லை. காலவரையறைக் குறைப்பிற்கு உடன்படாமல் ஒதுக்கி யிருந்தார் என்றால் இன்றைக்கு இந்த நிலை வந்திருக்காது.மத்திய அரசின் சதி என்பதை உணர்ந்து கால வரையறையை மாற்றாமல் இருக்க வகை செய்திருந்தார் எனில் இவ்வாறு அடுக்கடுக்காக ஒவ்வொரு மொழிக்காகச் செம்மொழித் தகுதி அளித்து உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாழ்வு படுத்தும் நிலை வந்திருக்காது. தமிழுக்குத் தலைமை சமசுகிருதத்திற்கும் இநதிக்கும் பிற மொழிகளுக்குச் செலவிடும் மொத்தத் தொகையையும் விடக் கூடுதலாகச் செலவிடும் மத்திய அரசு தமிழுக்கு நிதி ஒதுக்க மனமின்றியும் தமிழின் சிறப்பு வளர்ந்தோங்கக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது. இனி நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசே மூத்த வழக்குரைஞைர் காந்தி அவர்கள் தொடுத்த வழக்கை விரைந்து முடிக்க ஆவன செய்வதுடன் தானும் வழக்கு தொடுக்க வேண்டும். உயர்தனிச் செம்மொழி என்பது தமிழ் ஒன்றே என அறிவிக்கச் செய்து அதன் அடிப்படையில் உலகெங்கும் தமிழைப் பரப்புவம் தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமை கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். நன்றி : மாலை முரசு

Tuesday, May 21, 2013

யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்: நாம் தமிழர் கட்சி கேள்வி..

இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் தமிழினம் திட்டமிட்டு அழித்தொழித்து முடிக்கப்பட்ட நாளான மே 18ஐ இன எழுச்சி நாளாக கடலூர் நகரில் நாம் தமிழர் கட்சி நடத்திய உள் அரங்குக் கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் விடுதலை முன்னணியில் தலைவர் யாசின் மாலிக் கலந்துகொண்டதற்கு காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் அவர்கள், யாசின் மாலிக் கடலூருக்கு எப்படி வந்தார், அவரை அழைத்து வருவதற்கு உதவி செய்த சக்தி எது? அந்த நிகழ்ச்சி பின்புலமாக இருந்து செயல்பட்ட இயக்கங்கள் எவை என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன், இந்தியாவை துண்டாட நினைக்கும் பிரிவினைவாதியான யாசின் மாலிக்கை தமிழகத்தில் நுழைய அனுமதித்தது மிகவும் அபாயகரமானது என்று கூறியுள்ளார். இதற்கெல்லாம் பதிலும் விளக்கமும் அளிக்க வேண்டிய கடமை நாம் தமிழர் கட்சிக்கு உண்டு என்பது மட்டுமின்றி, இந்தத் தலைவர்களுக்கு சில கேள்விகளையும் நாம் தமிழர் கட்சி எழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது. காஷ்மீர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான யாசின் மாலிக்கின் ஜம்மு-காஷ்மீர் விடுதலை இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அது இன்றளவும் சுதந்திரமாக இயங்கி வருகிறது. யாசின் மாலிக்கும், அவரது இயக்கமும் காஷமீர் மக்களின் அரசியல் உரிமைக்காக போராடி வருகிறார்கள். அது காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த கட்சிக்கும், அதன் அரசியல் தலைமைக்கும் இந்திய நாட்டில் எங்கு சென்றும் கருத்துக்களை கூற உரிமை இருக்கிறது. அது இந்திய அரசியல் சட்டப்பூர்வமானது. காஷ்மீர் தலைவர் ஒருவரை தமிழகத்திற்கு ஏன் அழைத்து வரக்கூடாது? தமிழ்நாட்டை போல காஷ்மீரமும் இந்திய நாட்டின் ஒரு அங்கம்தானே? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒரே நாடு என்று நீங்கள்தானே முழங்கினீர்கள். அது உண்மையானால் எனது காஷ்மீர் சகோதரனை இங்கே அழைத்து வந்த பேச வைப்பதில் உங்களுக்கு என்ன சங்கடம்? அவர் பிரிவினைவாத தலைவர் என்கிறீர்கள். அப்படியானால், காஷ்மீர் சென்றபோது இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், அவரை காஷ்மீர் சட்டப்பேரவைக்கு வெளியே சந்தித்துப் பேசியது ஏன்? காஷ்மீர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண பிரதமராக இருந்த வாஜ்பாய் முதல் இன்றுள்ள பிரதமர் வரை, நீங்கள் கூறக்கூடிய அந்த பிரிவினைவாத தலைவர்களுடன் பேச அனுபவம் வாய்ந்த இந்திய அரசு அதிகாரியை நியமித்து பேசி வருவது ஏன்? நாங்கள் அழைத்து பேச வைத்தால் குற்றம், இந்திய மத்திய அரசு அவர்களோடு பேசினால் சரியா? இது என்ன தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காய்? ஈழத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளை போட்டு ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை கொன்று குவித்த இனப் படுகொலையாளன் மகிந்த ராஜபக்சேயை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறீர்களே, அது இந்த தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? தமிழினத்தை கொன்று குவித்த அந்நிய நாட்டுத் தலைவனை அழைத்து அரசு மரியாதை கொடுப்பதுதான் தேச பக்தியா? தேசப் பக்தியாளர் ஞானதேசிகன் பதில் சொல்லட்டமே. கடந்த 35 ஆண்டுகளாக கச்சத் தீவு கடற்பகுதியில் 544 மீனவர்களை கொன்று குவித்துள்ள சிங்கள கடற்படையின் தலைவரான ராஜபக்சவிற்கு ராஜ உபசாரம் செய்வது தமிழர்களை வெறுப்பேற்றாதா? பிரிவினைக்கு வித்திடாதா? ஞானதேசிகன் பதில் சொல்லட்டும். இந்த நாட்டின் செல்வத்தை அந்நிய பெரு நிறுவனங்களும், நாடுகளும் கொள்ளையடித்துக்கொண்டு போவதற்கு ஏற்ற வகையில் கொள்கை வகுத்துக்கொடுத்துக் கொடுப்பதுதான் காங்கிரஸ் கூறும் தேச பக்தி. காங்கிரஸ் அரசின் அனைத்து பொருளாதார சுரண்டல் கொள்கைக்கும் ஒத்துப்போகும் தேச பக்தியைத்தான் பாரதிய ஜனதா கடைபிடிக்கிறது. ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்கும் இந்தக் கட்சிகள்தான் தேசப்பற்றை பற்றி பேசுகின்றன. நாங்கள் தேசப்பற்றைப் பற்றி பேசவில்லை, இந்த தேச மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசுகிறோம். தமிழீழத்தில் எம் தமிழினம் எப்படி திட்டமிட்டு இன்றளவும் அழிக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல் காஷ்மீரிலும் நாங்கள் நசுக்கப்படுகிறோம் என்று யாசின் மாலிக் கூறினாரே, அதற்கு உங்கள் பதில் என்ன? இந்திய படைகள் தங்கள் மண்ணில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறி, அம்மக்கள் நடத்திய பெரும் போராட்டம் இந்த நாட்டிற்கே தெரியும். ஆனால் அந்த மக்களை இந்தியர்கள் என்றா பார்த்தது இந்திய மத்திய அரசு. துப்பாக்கியால் சுட்டு 104 பேரைக் கொன்றது. அரசமைப்புப் பிரிவு 370ன் கீழ் காஷ்மீருக்கு அதிகமான சிறப்பு சலுகைகளை கொடுத்து அம்மாநிலம் செழிப்புடன் உதவி வருவதாக பொன் இராதாகிருஷ்ணன் கூறுகிறார். அப்படியானால் அந்த மக்கள் இந்திய அரசுக்கு எதிராக போராடி வருவது ஏன்? அம்மாநிலத்தில் ஆயுத படைகள் சிறப்பு அதிகார சட்டம் எனும் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்திய இராணுவம் எந்த வீட்டில் வேண்டுமானாலும் நுழைந்து யாரை வேண்டுமானாலும் விசாரணைக்குத் தூக்கி செல்லலாம் என்கிற நிலையை இன்று வரை அனுமதிக்கிறீர்களே ஏன்? இராணுவத்தால் அம்மாநிலத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்கள் பத்தாயிரம் பேருக்கு மேல் இன்று வரை என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்று ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியதே அதற்கு இந்த தேச பகதர்களின் பதில் என்ன? காஷ்மீராகட்டும், பழங்குடியினரை வேட்டையாடும் தண்டகாரண்ய காடுகள் ஆகட்டும், இந்த நாட்டில் எங்கெல்லாம் மக்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குதலுக்கும் ஆளாக்கப்பட்டாலும் நாம் தமிழர் கட்சி அதை எதிர்க்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக அவர்களோடு நின்று உரிமைக் குரல் கொடுக்கும். நாம் தமிழர் இந்திய அரசமைப்பை ஏற்று ஜனநாயக பாதையில் இயங்கிவரும் கட்சி. இலங்கையில் எம்மினத்தின் விடுதலைக்காகவும், இந்தியாவில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் போராடும் அரசியல் கட்சி என்பதை தெட்டத் தெளிவாக, ஆவணப்பூர்வமாக விளக்கியிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் எங்கள் கட்சியை தங்கள் கட்சியாக நினைக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கும் தேசியக் கட்சிகள் எங்கள் மீது கூறும் குற்றச்சாற்றுகள் எந்த அடிப்படையும் அற்றது என்பது தமிழர்கள் அனைவருக்கும் தெரியும். நாங்கள் தமிழீழ விடுதலை பற்றி பேசும்போதெல்லாம் இவர்கள் இந்தியாவின் இறையாண்மை பற்றி பேசுகிறார்கள். இது வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கிறது. இறையாண்மை என்பதற்கு உண்மையான பொருள் என்ன என்பதை அறியாத, புரியாத தலைவர்களுக்கு நாங்கள் விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். நாம் தமிழர் கட்சிக்காக, செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர்

Monday, May 20, 2013

தமிழீழ சுதந்திர சாசன வரைபு எமது விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல்!

நியாயமான சம உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ நினைத்த எம்மினத்தின் மீது சிங்களப் பேரினவாத அரச இயந்திரத்தால் பலவந்தமாகத் திணிக்கப்பட்ட அடக்குமுறைகளில் இருந்து எம் மக்களையும், பூர்வீகமாக நாம் செறிந்து வாழும் தாயக நிலப்பரப்பையும், எதிர்கால சந்ததியையும் காப்பாற்றும் பொருட்டு...... ....எமது முன்னைய அரசியல் பிரதிநிதிகளால் கூட்டாக முன் வைக்கப்பட்டது தான் தனித் தமிழீழத்துக்கான கோரிக்கையும் அதற்கான மக்கள் அங்கீகாரமுமாகும். ஆரம்பத்தில் எமக்கான உரிமைகளை வேண்டி தமிழ் அரசியல் தலைவர்கள் அறவழியில் முன்னெடுத்த போராட்டங்களை சிங்கள அரச பயங்கரவாதம் ஆயுத வன்முறைகொண்டு அடக்க முனைந்தது, இதனால் தான் வேறு வழியின்றி எம் உரிமைகளை வென்றெடுப்பதற்காக தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். நீண்ட கால ஆயுதப் போராட்டமே எமக்கென்றொரு நிழல் அரசை நிறுவ துணை நின்றதுடன் தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை சர்வதேச அளவில் பேசுபொருள் ஆக்கியது. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுடன் விடுதலைக்கான போராட்டங்களும் சர்வதேச நாடுகளால் பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு தடைசெய்யப்பட்டன. இதனாலேயே தமிழீழ விடுதலைப் போராட்டமும். பல நாடுகளால் தடைசெய்யப்பட்டது. இத்தடையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தியே எமது விடுதலைப் போராட்டத்தை எதிரி பின்னடைவுக்கு இட்டுச் சென்றான். அதற்கு சர்வதேசத்தில் பல நாடுகள் துணையாக நின்றன. அவர்களால் முன்வைக்கப்பட்ட காரணம் எமது விடுதலைப் போராட்டம் ஜனநாயகமற்றதென்றும் ஆயுத வன்முறை ரீதியிலானதும் என்பதே. சர்வதேச நாடுகளுக்கு ஒவ்வாமையாக இருந்த எமது ஆயுதப் போராட்டம் 2009 ல் ஆயுத மெளனிப்புடன் இடைநிறுத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தாற் தான் தமிழ் மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைக் கொடுக்க முடியவில்லை என்று இத்தனை காலமும் சொல்லி வந்த சிங்கள அரசு ஆயுதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டு நான்காண்டுகள் ஆன நிலையிலும் இன்று வரை தமிழ் மக்களுக்கான குறைந்த பட்ச உரிமைகளைக் கூட வழங்க முன்வரவில்லை. மாறாக முன்னரை விட மோசமாக மக்களை அடிமைகள் போல நடாத்தி வருவதுடன், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போதல், கைதுகள் எம் பூர்வீக நிலங்களில் பலவந்தமான சிங்களக் குடியேற்றம், கலாசார சீரழிவு என திட்டமிட்ட முறையில் தமிழர் இனவழிப்பை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. எமது விடுதலைப் போராட்டத்திற்கு சர்வதேச நாடுகள் ஆதரவளிக்காமைக்காக சொன்ன காரணங்களை கவனத்திற் கொண்டே புலம்பெயர் தமிழ் மக்கள் சர்வதேச நாடுகளின் சட்டங்களுக்கு ஏற்பவும் ஜனநாயக விழுமியங்களை மதித்தும் அதற்கேற்ப தமிழ் மக்களின் அபிலாசை தமிழீழம் ஒன்றே என்பதை சர்வதேச சமூகத்துக்கு மீண்டும் வலியுறுத்தவே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை தமிழ் மக்கள் அமைத்துள்ளனர். இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொள்ளும் சுதந்திர சாசன வரைபு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேலும் ஒரு மைல்கல். தனித் தமிழீழத்துக்கான வரைபுகள் முன் வைக்கப்படுவது இது தான் முதல் தடவை அல்ல. 1976 ல் வட்டுக் கோட்டைத் தீர்மானமும், 1985 ல் தமீழீழ விடுதலைப் புலிகளால் தமிழீழ சோசலிசக் குடியரசு என்ற வரைபும் முன் வைக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளால் முன் வைக்கப்பட்ட தமிழீழ சோசலிசக் குடியரசு என்ற வரைபானது அனைத்துத் தமிழ் பேசும் மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய சகல அம்சங்களையும் உள்ளடக்கிய எந்தக் காலத்துக்கும் பொருத்தமான வரைபென்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் சர்வதேசத்தின் முன்நிலையில் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழீழ சுதந்திரசாசன வரைபு தொடர்பில் உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து தமிழ் அமைப்புகளினதும், மக்களினதும் கருத்தினையும் ஆலோசனையையும் அங்கீகாரத்தையும் வேண்டி நிற்கின்றது. தமிழ் மக்களின் விடுதலை வேட்கையின் எண்ணங்களில் இருந்து வரும் கருத்துக்களால் இச்சாசனம் மேலும் மெருகூட்டப்படவுள்ளதால் சர்வதேச நாடுகளால் மறுக்கப்பட முடியாத ஒரு சாசனமாக இது அமையும். எனவே அனைவரும் இதற்கு பூரணமான ஆதரவை வழங்க வேண்டும். அதேவேளையில் தனித் தமிழீழம் குறித்து ஏலவே முன்வைக்கப்பட்ட வரைபுகளுக் கும் முக்கியத்துவம் கொடுத்து அவற்றினையும் முழுமையாக உள்வாங்கி தமிழீழ சுதந்திர சாசனத்தை அனைத்துத் தமிழ்பேசும் மக்களும் ஏற்கக் கூடிய வகையில் நிறைவானதொரு சாசனமாக அமைக்க வேண்டும் என வேண்டிக் கொள்வதுடன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தமிழீழ சுதந்திர சாசன வரைபிற்கு எம்முடைய ஆதரவையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் __._,_.___

Saturday, May 18, 2013

தமிழ்ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே ! நல்லாற்றுப்படுத்துங்கள்!

(தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பு 30.03.2044/12.04.2013 அன்று வள்ளுவர் கோட்டம் அருகே பட்டினிப்போர் நிகழ்த்திய பொழுது வழங்கிய உரை.) தமிழ் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழீழம் மலரவும் இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்படவும் நடைபெறும் இப்பட்டினிப் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் பெருங்கவிக்கோ அவர்களுக்கும் பங்கேற்கும் அமைப்பினருக்கும் என் வணக்கங்கள். அழைப்பிதழில், தமிழீழம் மலரவும் போர்க்குற்றவாளி இராசபக்சேவை உலகமன்றில் நிறுத்தித் தண்டனை வழங்கவும் பட்டினிப் போராட்டம் எனக் குறிப்பிட்டு இனப்படுகொலையை மறைத்தது ஏன்? என வா.மு.சே.திருவள்ளுவரிடம் கேட்டேன். உடன் அதைத் திருத்தித் தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற உண்மையை இடம் பெயரச் செய்தமைக்காக அவருக்குப் பாராட்டுடன் கூடிய நன்றி. தமிழ் ஈழ மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற படைப்பாளர் பேரவை சார்பான கூட்டத்தில் நான் இனப்படுகொலை குறித்துக் கூறியது நினைவிற்கு வருகின்றது. விடுதலைப்புலிகளின் வீரம் யாருக்கும் சளைத்ததில்லை என்றாலும் நேரிடைப் போராக இல்லாமல் வஞ்சகச் செயலாக உள்ளமையால், போர் நீடிப்பது நல்லதில்லை. போர் நீடித்தாலும் அழிவு. சரண் அடைந்தாலும் அழிவுதான் என்ற நிலையே உள்ளது. எனவே, அவர்களின் வீரத்தைப் பற்றி மட்டும் பாராட்டிக் கொண்டிராமல் படுகொலைகளைத் தடுக்கும் வகையில் உலகெங்கும் உடனடிப் பரப்புரை மேற் கொண்டு வஞ்சகப் போரினை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன். எதிரிகளின் வஞ்சகச் செயல்களை நாம் முழுமையாகக் கணிக்கத் தவறியமையால், மாற்றான் வலியை அறிந்த நாம் அவனின் வஞ்சகத்தையும் மாற்றான் துணை வலியையும் உணராக் காரணத்தால், பன்னூறாயிர ஈழத் தமிழர்கள் படுகொலைகளுக்கு ஆளான அவலத்தைச சந்தித்துள்ளோம். படுகொலை வெவ்வேறு வடிவங்களில் ஈழத்தில் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. இதனை நிறுத்தித் தமிழ் ஈழத்தை மலரச் செய்யும் பொறுப்பு படைப்பாளிகளிடம்தான் உள்ளது. படைப்பாளிகள் தமிழக எல்லைக்குள் பரப்புரையை மேற்கொள்ளாமல் பார் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் உலக மக்கள் உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஏற்பர். தமிழ் ஈழம் மலரத் தமிழ்அறிஞர்களே! நல்லாற்றுப்படுத்துங்கள்! என்பதே தமிழ்க்காப்புக்கழகம் சார்பிலும் இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பிலும் இப்போராட்டக்களம் மூலம் நான் விடுக்கும் வேண்டுகோள். பழந்தமிழகத்தில் முடி மன்னர்களுக்குப் புலவர்கள் அறிவுரை கூறினர். அறங்கூறு அவையம் என இருப்பினும் நிறைமாண் புலவர்கள் வேண்டப்படும்பொழுது இடித்துரைக்கத் தவறவில்லை. எனவேதான் செவியறிவுறூஉ என ஓர் இலக்கியத் துறையே உள்ளது. அரசன் ஆற்ற வேண்டிய கடமைகளை அவனுக்கு, முறை தவறாமல் ஆற்றுமாறு அவன் செவியில் கேட்குமாறு அறிவுறுத்துவதே செவியறிவுறூஉ ஆகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் இடித்துரைப்போர் துணையாய் இருப்பின் அவ்வரசைக் கெடுக்க வல்லார் யாருமில்லை என்று, இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே கெடுக்குந் தகைமை யவர் (திருக்குறள் 447) என்னும் திருக்குறளில் விளக்குகிறார். அத்தகையோர் இல்லா அரசு தானாகவே அழியும் என்பதையும் இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும் (திருக்குறள் 448) என்னும் திருக்குறளில் விளக்குகிறார். சங்கக்காலத்தில் புலவர் பெருமக்கள் இத்தகைய அறிவுறுத்தும் நற்பணியைச் செய்து வந்தார்கள்; ‘எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’ எனக் கூறி, வயிற்றை நிரப்புவதைக் குறிக்கோளாகக் கொள்ளாமல், நயந்து பேசி நல்வளம் அடைவதையே இலக்காக எண்ணாமல், உறுதியுடன் அறிவுரை வழங்கினர். அத்தகைய ஆன்றோரும் சான்றோரும் இப்பொழுது ஏன் இல்லை? புலவர் பெருமக்கள் அல்லவா அரசிற்கு - ஆளும் தலைமைக்கு - அல்லன ஆற்றும் பொழுது நல்லன புரிய ஆற்றுப்படுத்தும் பணியைச் செய்ய வேண்டும். பதவி நலன்களுக்காக வாய்மூடி அமைதி காப்பதில் என்ன பயன்? தன்னலம் பேணாமல் பொதுநலம் பேண வேண்டிய தமிழறிஞர்கள் எங்கே சென்று விட்டார்கள்? தமிழ் தமிழ் எனப் பேசி ஆட்சிக்கு வந்தபின்பு தமிழ்ப்பகைவர்களுக்கு முதன்மை கொடுக்கும் பொழுது தட்டிக் கேட்கத் தயங்குவது ஏன்? தங்களின் அரும்பணிகளைப் புறக்கணித்து ஆட்சிக்கு ஏற்பத் தாளம் போடும் அரிதாரம் பூசிகளைச் சிறப்பிக்கும் பொழுது அதையும் தாங்கிக் கொள்வது ஏன்? தனக்குப் பதவி கேட்டால்தானே தனக்காக எதிர்ப்பதாகக் கூற நேரிடலாம். தமிழுக்கு முதன்மை அளித்துத் தமிழர்க்குத் தலைமை அளித்துத் தமிழ்ப்பகைவர்களை அகற்ற அவர்கள் ஆள்வோருக்கு அறிவுறுத்த வேண்டாவா? இத்தகைய பண்பைக் கைக்கொள்ளாததால்தான் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தும் இடித்துரைக்காமல் கையறுநிலை பாடுகிறார்கள். தமிழ் ஈழத்தில் இனப்படுகொலை நடைபெறுவதற்குக் காரணம் இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனங்களை அழித்து வரும் பேராயக்கட்சியாகிய காங்கிரசுதான் என்பதை அனைவரும் அறிவர். அக்கட்சியில் தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் சிலராவது இல்லையா? இருக்கின்ற பிறராவது கட்சி என்ன செய்தாலும் அதுதான் சரி என வாதுரை செய்யாமல் கட்சியின் தவறுகளையும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டலாம் அல்லவா? “தன் நாட்டு மக்களைக், குழந்தைகளைக் காக்கும் தாயைப் போலப் பாதுகாக்கவேண்டும்” என்று சேரமான் கருவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்கு, நரிவெரூஉத்தலையார் அறிவுரை கூறுகிறார். அப்பொழுது புலவர், அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி; அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே. (புறநானூறு 5: 5- 8) என்கிறார். “அருளையும் அன்பையும் விலக்கி வைத்து வாழுமிடத்தை நிரயமாக (நரகமாக) ஆக்கிக் கொள்பவர்களோடு சேராதே! தாய், தன் குழந்தையைக் காப்பதுபோல் நாட்டு மக்களைக் காப்பாற்றுவாயாக ! அதுவே செய்தக்க செயல்” என அவர் அறிவுறுத்துவது எக்காலத்திலும் ஆள்வோர் அனைவருக்கும் பொருந்தக்கூடியதல்லவா? இலங்கை மண்ணின் மக்கள் ஆகிய தமிழர்கள் மீது அருளும் இல்லாமல் அன்பும் இல்லாமல் அழித்தொழிக்கும் சிங்களக் கொடுங்கோல் அரசுடன் சேராதே என்றல்லவா அதற்குத் துணை நிற்கும் மத்திய ஆளும் கட்சியாகிய பேராயக் கட்சிக்கு அறிவுரை வழங்கி இருக்க வேண்டும். மாறாக “ முன்பு ஆயுதம் கொடுத்தோம்! பின்பு உணவு கொடுத்தோம்! இப்போது குடியிருப்பு கொடுக்கிறோம்” என்றெல்லாம் தலைமையின் குரலைச் சிந்தனையின்றிப் பரப்பலாமா? “ஆடுகளைப் பலியிடுகின்றாயே” என்று கேட்டால் “நேற்றுவரை அதற்கு வேண்டிய உணவு வகைகளை அளித்ததும் நான்தான்! குளிப்பாட்டி அழகுபடுத்தியதும் நான்தான்! மாலையிட்டுப் போற்றியதும் நான்தான்! என்னைப்போய்க் குற்றம் சொல்லலாமா?” என்பதுபோல் கூறலாமா? “உன் வயிற்றை நிரப்புவதற்காக ஆடுகளின் வயிற்றை நிரப்பி உள்ளாய். உன் நலனுக்காக அவற்றின் நலன்மீது கருத்து செலுத்தி உள்ளாய்! அடிப்படை நோக்கம் அவற்றை அழிப்பதுதானே! இதே போல் தானே ஈழத்தமிழரைக் அரசு காவு கொடுத்துள்ளாய்!” என இடித்துரைக்க வேண்டியவர்கள் கொன்றவனையும் கொல்லத் துணைநின்றவனையும் உத்தமன்போல் காட்டிப் பேசுவது முறைதானா? அறம்தானா? முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்பு வீடு கட்டிக் கொடுக்க உதவுகிறோம் என்றெல்லாம் சொல்வது வஞ்சகத்தனம் இல்லையா? இந்தியப் பொருளுதவி, தமிழர் நிலத்தில் சிங்களக் குடியேற்றம் அமைக்கவும், சிங்களப் படைஞர்கள் முகாம்கள் அமைக்கவும்தானே பெரும்பகுதி பயன்பெறுகிறது. சிறுபான்மை தமிழர்க்கு அளிக்கப்படும் வீடுகளும் மழையில் ஒழுகுவதாகவும் பாதுகாப்பற்றதாகவும்தானே உள்ளன. நிதியுதவி நிதியுதவி என்று சொல்லும் பேராயக்கட்சி அந்த உதவியில் சிங்களர் பெறும் பயன்பற்றி வாய் மூடுவதேன்? தமிழர்க்கு உதவி என்ற பெயரில் இன அழிப்பாளர்களுக்கு உதவும் பேராயக்கட்சியைத் திருத்த இயலாவிடில் துரத்த வேண்டாவா? துறக்க வேண்டாவா? பெரும்பாலோரைக் கொன்று விட்டு எஞ்சியவருக்குப் பிச்சை எடுக்கத் திருவோடு தருகிறோம் என்பதற்கும் காங்கிரசின் பிதற்றலுக்கும் வேறுபாடு உள்ளதா? உரிமை வாழ்வு வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு தராதிருந்தால்கூடப் பரவாயில்லை. அவர்களை அழித்தொழிக்க எல்லாவகையிலும் எதிராளிக்கு உதவி விட்டு இவர்களுக்கு உதவுவதாகப் பொய்யுரை கூறுவது குறித்துக் கண்டிக்க வேண்டாவா? பிற மாநிலத்தவர் தங்கள் மொழி, இனச் சிக்கல் என்றால் பேராயக்கட்சியைச் சேர்ந்திருந்தாலும் அதன் செயல்பாட்டிற்கு எதிராகக் கிளர்ந்தெழுகிறார்கள் அல்லவா? தமிழகப் பேராயக்கட்சியினர் அவ்வாறு இல்லாமல் மானம் இழந்து கொத்தடிமையாய் இருப்பது ஏன்? “உலக நாடுகளின் உரிமைகளுக்கெல்லாம் குரல் கொடுத்துவிட்டு, நம்முடன் உறவாடும் நற்றமிழர் வாழ்வைச் சிதைக்கலாமா” எனக் கேட்கும் துணிவுகூட இல்லாமல் இருப்பது ஏன்? அவலங்களைத் தட்டிக்கேட்பவனும் அதைத் துடைப்பதற்காகக் குரல் கொடுப்பவனும்தான் உண்மையான படைப்பாளியாக இருக்க முடியும். அவ்வாறு ஒருவர்கூட இக்கட்சியில் இல்லாததன் காரணம் என்ன? நாம் ஆயுதம் கொடுக்காவிட்டால் சீனா கொடுக்கும், பாக்கிசுதான் கொடுக்கும், நம் எதிரிகள் கொடுப்பார்கள் என்று சொல்லும் பொழுது “உன் குடும்பத்தினரைக் கொல்வதற்கு எதிரியின் துணையுடன் ஒருவன் வந்தால் எதிரியின் ஆயுதத்தால் கொல்லாதே! நான் ஆயுதங்கள் தருகிறேன்! அவற்றால் கொல்லு!” என்றா சொல்வாய் எனத் திருப்பிக் கேட்டிருக்க வேண்டாவா? வெளியுறவுக் கொள்கையை மத்திய அரசுதான் முடிவெடுக்கும் எனக் கூறும் பொழுது மாநிலங்கள் இணைந்ததுதான் மத்திய அரசு! வானிலிருந்து குதித்து வந்ததல்ல மத்திய அரசு! எங்கள் நலனுக்கு எதிராக வெறியுறவுக் கொள்கை அமைந்தால் அது வெளியுறவுக் கொள்கையன்று உட்பகைக்கொள்கை! மத்திய அரசை நம்பியுள்ள தமிழர்களை உட்பகையாக எண்ணிக் கழுத்தறுக்கும் கொள்கை! இதை ஒப்பமாட்டோம்! எனச் சீறி இருக்க வேண்டாவா? தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள நாடு நட்பு நாடு என்றால், தமிழக மீனவர்களின வாழ்வாதாரங்களை அழிக்கும் சிங்கள அரசு நட்பு அரசு என்றால், பகைவனின் நண்பனும் எங்களுக்குப் பகையே! என எச்சரித்திருக்க வேண்டாவா? இலங்கையில் இருந்தும் ஈழத்தில் இருந்தும் ஆதரவு நாடி வரும் தமிழர்களுக்கு ஓர் அளவுகோல்! உகாண்டா முதலான இடங்களில இருந்து வரும் வடவருக்கு ஓர் அளவுகோல்! சிங்களத்தால் தமிழக மீனவர்கள் கொல்லப்படும்பொழுது ஓர் அளவுகோல்! அதே சிங்களத்தால் கேரள மீனவர்கள் கொல்லப்படும் பொழுது ஓர் அளவுகோல்! இவ்வாறு பல்வேறு இரட்டை அளவுகோல்களைத் தமிழர்களிடத்திலும் பிறரிடத்திலும் பயன்படுத்தும் பேராயக்கட்சியை(காங்கிரசை)க் கண்டித்திருக்க வேண்டாவா? அக்கட்சித் தலைவர்களிடம், எங்கள் மண்ணின் நலத்திற்கும் உரிமைக்கும் எதிராகச் செயல்பட்டால் நீங்களும் பகைவரே எனக் கடிந்துரைத்திருக்க வேண்டாவா? அவ்வாறு இல்லாமல் கொலைகாரர்களையும் கொலைக்கூட்டாளிகளையும் பாதுகாவலர் போல் காட்ட முயலலாமா? மத்தியில் இருக்கும் பேராய(காங்.)அரசு தன் வெளியுறவுக் கொள்கை என்பது மனித நேய அடிப்படையிலானது எனச் செயல்பட்டிருந்தால், பன்னூறாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்பட்டிருப்பார்களே! வேறு யாரும் போராடத் தேவை இருந்திருக்காதே! சிறப்பாகச் செயல்பட்டு வந்த தமிழீழ அரசு உலக நாடுகளால் ஏற்கப்பட்டு அதன் கொடி பட்டொளி வீசி உலகநாடுகளில் பறந்திருக்குமே! தமிழக மீனவர்கள் தங்கள் உயிரையும் வாழ்வையும் தொலைத்து நிற்கும் அவலநிலை தடுக்கப்பட்டிருக்குமே! பிறரின் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தேவையற்றனவாய் அமைந்திருக்குமே! உலக நாடுகளிடையே இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்குமே! இந்தியாவின் நட்பு நாடாகத் தமிழ் ஈழம் திகழ்ந்து இந்தியாவின் ஆக்கப் பணிகளுக்கு உதவியாக இருந்திருக்குமே! ஆனால், அக்கட்சியில் உள்ளவர்கள் பிற கட்சியினர் போல் கொத்தடிமைகளாக உள்ளமையால் கட்சி என்ன செய்தாலும் அதுவே சரி என வாதிட்டு நமக்குக் கேடு விளைவிக்கின்றனரே! இனியேனும் திருந்துவார்களா! வெளிப்படையாகத் தம் கட்சியைக் கண்டிக்க மனம் இல்லாவிட்டாலும் கட்சி மட்டத்திலாவது எதிர்ப்புக் குரலை எழுப்புவார்களா? திருச்சியில் மாணாக்கர்கள் மீது உருட்டைக்கட்டைகளால் தாக்கிவிட்டு அது திட்டமிட்ட செயலல்ல என உங்கள் கட்சித் தலைவர் கூறுகிறாரே! திட்டமிடவில்லை என்றால் குண்டர்கள் ஒவ்வொருவர் கையிலும் குண்டாந்தடி இருந்தது எப்படி? 1965இல் மதுரையில் உங்கள் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்து அரிவாளால் மாணாக்கர்களை வெட்டியதன் விளைவு இன்றைக்குத் தமிழக மக்களால் ஓட ஓட விரட்டப்படுகிறீர்கள். இப்பொழுது இந்திய அரசியலில் இருந்தே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகின்றீர்கள். இவற்றை எல்லாம் தெரிந்திருந்தும் “தமிழுக்குப் பகையாக நடக்கும் பேராயத்தின்(காங்கிரசின்) செயற்பாடுகள் தொடர்ந்தால் நாங்களும் கட்சியைத் துறப்போம்” எனத் தலைமைக்கு எச்சரிக்கை கொடுத்திருக்க வேண்டாவா? நீங்கள் எல்லாம் தமிழரா? வடவரா? சிங்களவரா? தமிழர் எனில் உங்கள் எழுத்தாலும் பேச்சாலும் வற்புறுத்தலாலும் கொலைகாரப் பேராயக்கட்சியின் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இட வைத்திருக்க வேண்டாவா? அல்லல்பட்டு ஆற்றாது அழும் மக்களைப் பார்த்த பின்பும் நீங்கள் அமைதி காக்கிறீர்கள் என்றால் நீங்கள் படித்த அறநெறி இலக்கியங்களால் என்ன பயன்? நிரயம்(நரகம்) புகுவோனிடம் சேரும் நீங்களும் நிரயம்(நரகம்)தானே புகுவீர்கள்! படிப்பால் பண்பட்டுப் பிறரையும் பண்படுத்துவதுதானே முறை! இதனை உணர்ந்தும் கொலைகாரக் கட்சியை நல்வழிப்படுத்தாவிடிலோ அதற்குச் சாவுமணி அடிக்காவிட்டாலோ என்ன பயன்? பிறர் நலம் போற்றுபவர்களால்தான் இவ்வுலகம் இயங்குகின்றது என்பது தமிழ் நெறியன்றோ! நீங்களோ நம் இனத்தவர் நலன் சிதைக்கப்படும் பொழுது, பதவி நலன், வாழ்வு நலன் முதலியனவற்றிற்காக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளீர்களே! வேடிக்கை பார்ப்பதுடன் நில்லாது கொடுஞ்செயல்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவ்வாறு செய்பவர்களைப் பாராட்டுகின்றீர்களே! இனியேனும் மாறுவீர்களா? வரலாற்றில் உங்களுக்கு ஏற்படும் பழியிலிருந்து காத்துக் கொள்ள முன் வருவீர்களா? தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கும் தமிழ் ஈழ அரசு புத்துயிர் பெற்று உலகவரால் ஏற்கப்படவும் ஆவன செய்வீர்களா? உங்கள் நெஞ்சில் சிறிதேனும் ஈரம் இருந்தால், தன்மான உணர்வு கொஞ்சமாவது இருந்தால், தலைமைக்குத் துதி பாடும் கொத்தடிமைத் தனத்தை விட்டொழியுங்கள். உங்கள் கட்சியில் தமிழர்க்கான, ஈழத்தமிழர்க்கான உரிமைக்குரலை எழுப்பி ஆவன செய்யுங்கள்! செய்வீர்களா? மத்தியில் குறிப்பிடத்தக்க மற்றொரு கட்சி பாரத மக்கள் கட்சி(பாரதிய சனதா கட்சி). ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சமயம் எனக் கொடி தூக்கி நாட்டை அழித்து வரும் கட்சி. அக்கட்சியில் உள்ள சிலவாகிய தமிழறிஞர்கள், இமயம் முதல் குமரி வரை ஆண்ட மொழி தமிழ் என்பதை உணர்த்தியிருக்க வேண்டாவா? ஆரியமும் நமக்கு அயல்தான் என்பதை எடுத்துரைத்திருக்க வேண்டவா? வாசுபாய் போன்ற மிகச்சிலர் தனிப்பட்ட முறையில் ஈழத்தமிழர் நலன் காக்க, இந்தியப் படை உதவியைச் சிங்களத்திற்கு மறுத்திருக்கலாம். எனினும் பொதுவாக இக் கட்சியும் தமிழ்ப்பகைக்கட்சியாகத்தானே செயல்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வந்து மீனவர் நலனுக்காக உரத்துக் குரல் கொடுத்த கட்சித்தலைவி சுசுமா சுவராசு இந்தியா நாடாளுமன்றத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் வரவிடாமல் தடுத்தார் அல்லவா? இந்த நடிப்பு கண்டு கொதித்தெழுந்து, இந் நாடகம் தொடர்ந்தால் தமிழ்நாட்டை மறந்து விட வேண்டியதுதான் எனச் சொல்லி இருக்க வேண்டாவா? இன்றைக்கு யசுவந்து சின்கா தமிழ் ஈழமே தீர்வு எனப் பேசுவதால் பழையனவற்றை மறப்போம்.! இப்பொழுதேனும் அக் கட்சிக்கு எடுத்துரைக்க வேண்டியது என்ன? தமிழ் நாட்டில் ஒன்றும் வடக்கே ஒன்றுமாகப் பேசி ஏமாற்றும் வேலையில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்க வேண்டும். அடுத்ததாக, உண்மையை உணர்ந்து தமிழ் ஈழத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்த அக்கட்சி ஆளும் மாநிலங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தமிழக அரசைப் பின்பற்றி, தமிழீழப் பொதுவாக்கெடுப்பிற்கும் இனப் படுகொலையாளர்கள் தண்டிக்கப்படவும் தீர்மானம் இயற்றச் செய்ய வேண்டும். இக்கட்சி ஆளும் மாநிலங்களில் தமிழ் ஈழத்தை ஏற்பதாகவும் இந்திய நாடாளுமன்றமும் பிற உலக நாடுகளும் இவ்வாறு தீர்மானம் இயற்ற வேண்டும் எனவும் ஒரு தீர்மானம் இயற்ற வேண்டும். இல்லையேல் தேர்தலுக்கான நாடகம் என்றாகிவிடும். தமிழீழம் என்பது பாரத மக்கள் கட்சியின்(பா.ச.க.வின்) உண்மை முகமா அல்லது முகமூடியா என்பதை உணர்த்தச் செய்ய வேண்டும். கட்சியின் குரலுக்கேற்ப தாளம் போடாமல், இவ்வாறு துணிந்து அறிவுரை கூறும் பக்குவத்தை இக்கட்சியின் தமிழ்அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் பெற வேண்டும். கொத்தடிமைத்தனத்தில் இன்பம் காணும்வரை உண்மைக்காகக் குரல் கொடுக்க முடியாது என்பதை உணர வேண்டும்! இனியேனும் இவ்வாறு நல்லாற்றுப்படுத்துவார்களா? ஆதரவு காட்டுவதுபோல் பேசிக் கழுத்தறுக்கும் கட்சி பற்றி இங்கே கூற வேண்டும். மூளைச்சலவை செய்யப்பட்ட அதன் தொண்டர்கள் திசைமாறுகிறார்கள் என்பதால் அவர்களைப்பற்றியும் கூற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் உரிமைக்குக் குரல் கொடுக்கிறார்களாம்! நல்வாழ்விற்குக் கொடி பிடிப்பார்களாம்! ஆனால், அவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ வேண்டுமாம்! அவர்களின் உரிமைக்கும் தேவைக்கும் வாழ்வு நலன்களுக்கும் மாறாகக் குரல் கொடுக்க இவர்கள் யார்? உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று (திருக்குறள் 890) என்னும் குறள் மூலம் உடன்பாடு இல்லாதவருடன் சேர்ந்து வாழ்பவருக்குக் குடத்தில் பாம்புடன் வாழ்பவருக்கு ஏற்படுவதுபோல் அழிவு உறுதி என்கிறார் தெய்வப்புலவர். அதுமட்டுமல்ல! செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி (திருக்குறள் 887) என்று உட்பகை கொண்ட குடியுடன் கூடி வாழ முடியாது என்கின்றார் தெய்வப்புலவர். ஆனால், அயல்நாட்டு மூளையை இரவலாகப் பெற்றுச் சிந்திப்பவர்கள், சீனாவின் நண்பன் சிங்களம் என்பதால் ஒருமைப்பாடு பற்றிக் கூவுகிறார்கள். தமிழர் நலன் காக்கும் வகையில் நடந்து கொள்ளாவிட்டால் சீனாவிலும் சிங்களத்திலும் கட்சியை நடத்துங்கள்! தமிழ்நாட்டின் பக்கம் வராதீர்கள்! என இடித்துரைக்க வேண்டாவா? உலகில் எங்கே அடக்குமுறை நிகழ்ந்தாலும் செங்கொடி தூக்குபவர்கள், இங்கே ஈழத்தில் மட்டும் இனப்படுகொலை நடக்கும் பொழுது அதை மறைத்து வைப்பது ஏன்? பொதுவுடைமை நாடுகள் சிங்களத்தின் பக்கம் இருக்கின்றன என்றால் அந்நாடுகளை நல்வழிப்படுத்தாமல் தாமும் அவர்கள் பக்கம் சாய்வது ஏன்? சாய்வதைத்தான் வெளிப்படையாக அறிவித்தால் என்ன? தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாது என்ற அச்சம்தானே! ஈழத்தமிழர் நலன்களுக்குச் சார்பாகப் பேசுவதுபோல் அவர்களின் உரிமைக்கும் கருத்திற்கும் மாறாகப் பரப்புரை மேற்கொள்வது ஏன்? செஞ்சட்டைப் படைப்பாளர்கள் அவர்களை இடித்துரைத்திருக்க வேண்டாவா? தேசிய இன விடுதலை என்றெல்லாம் பேசுபவர்கள் கொத்தடிமையாக இருப்பது ஏன்? கொத்தடிமைத் தனத்திலிருந்து விடுபட்டால்தானே கட்சித்தலைமைக்கு உண்மையை மூடி மறைக்கும் செயலில் இருந்து விடுபட்டு ஈழ உரிமைக்குக் குரல் கொடுக்கச்செய்ய முடியும். உண்மையான பொதுவுடைமையாளர்களாக விளங்க வேண்டும் என்றால் தமிழ் ஈழம்பக்கம் துணை நிற்க வேண்டும் எனப் படைப்பாளர்களே ஆற்றுப்படுத்துங்கள்! தமிழ்நாட்டிலும் மத்தியிலும் பன்முறை ஆண்ட கட்சியாகவும் ஆட்சிக்கனவில் மிதக்கும் கட்சியாகவும் உள்ளது தி.மு.க.. பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் தமிழ் உணர்வாளர்கள் மிகுதியாக உள்ள கட்சி இதுதான். நேரடியாக இணைந்தும் சார்ந்தும் உள்ள தமிழ்ப்புலவர்கள், தமிழறிஞர்கள் மிகுதியாக இங்குதான் உள்ளனர். ஆனால் தமிழ்ப்புலவர்களுக்கு இருக்க வேண்டிய அஞ்சாமையும் துணிவும் எங்கே போயின? தலைமை தடுமாறும் பொழுது தட்டிக் கேட்காமல் தாலாட்டு பாடுவது ஏன்? முன்பு பெருங்காயம் இருந்த வெறும் குப்பியை எத்தனைக்காலத்திற்குத்தான் காட்டி ஏமாற்ற முடியும்? ‘‘நேற்று முன் நாள் நான் இப்படிச் செய்தேனே! நேற்று அப்படிச் செய்தேனே!’’ என்பதெல்லாம் மக்களுக்கு முதன்மை இல்லை. “இன்று என்ன செய்தாய்” என்பதுதான் அவர்களது கேள்வி. ஒரு வழக்குமொழி கூட உண்டு. "நாள்தோறும் போடாத சீதேவி இன்று அரிசி கொடுத்தாள்; என்றும் போடும் மூதேவிக்கு இன்று என்ன வந்தது? ஒன்றும் தரவில்லை" எனப் பிச்சை எடுப்பவர் கூறுவதாகக் கூறுவர். இதுதான் மக்கள் மனநிலை. எனவே, இன்றைக்குக் கொலைகாரக் கூட்டாளிக்குத் துணை நின்றுவிட்டுப் பழங்கதைப் பேசிப் பயனில்லை. நாம் தடம் மாறத் தடம் மாற மக்கள் வேறு திசையில் செல்கின்றார்கள் என்றெல்லாம் முது பெரும் தலைவருக்கு இடித்து உரைத்திருக்க வேண்டாவா? இதற்கு முன்பு உயிர்காக்கும் மருந்து கொடுத்ததும் உண்மை! அது பயனளித்ததும் உண்மை! ஆனால், அதே மருந்து காலக்கெடு முடிந்து நஞ்சான பின்பும் அதைத்தான் தருவேன் என்பதில் என்ன பயன்? அம் மருந்தைத் தூக்கி எறியாமல் பாதுகாத்து என்ன பயன்? அதைப்போல்தான் ஈழத்தமிழர் நலன் காக்க முன்பு குரல் கொடுத்ததை வைத்துக் கொண்டு, இப்போது மறைமுகமாகச் சிங்களக் கூட்டாளியாகச் செயல்படுவதை மறைப்பது. இதனை, வீட்டு மக்கள் நலனை முன்னிறுத்தி நாட்டு மக்கள் நலனை மறக்கும் பொழுது எடுத்துரைத்திருக்க வேண்டாவா? தமிழ் என்றால் வீரம் என்றும் பொருள் உண்டல்லவா? இவர்கள் தமிழ் படித்து என்ன பயன்? படித்த தமிழைத் தமிழர் நலனுக்காகப் பயன்படுத்தாத பொழுது, அத்தமிழால் பிழைப்பது கண்டு நாணுற வேண்டாவா? சென்னைக்கு வந்து சேர வேண்டிய தொடரியை ஓட்டுபவர், நான் செங்கல்பட்டு வரை ஓட்டி வந்து விட்டேன். அதன் பின்தானே தடம் புரளச் செய்தேன் என்றால் யாரேனும் பாராட்டுவார்களா? தடம் புரளச் செய்து பல்லாயிரவர் இறக்கக் காரணமானவர் என்பதால் தண்டிப்பார்களா? இலங்கைத் தமிழர் நலனுக்காகப் பாடுபட்டதெல்லாம் எப்பொழுது பாராட்டப்படும்? அதே நிலையில் இருந்து வெற்றியை ஈட்டினால் அல்லவா தட்டிக கொடுத்துப் பாராட்டு மாலை அணிவிப்பார்கள். இல்லாமல், பேரறிஞர் அண்ணாவாலும் தமிழக மக்களாலும் விரட்டியடிக்கப்பட்ட பேராய(காங்கிரசு)க் கட்சியுடன் இணைந்திருக்க வேண்டிய குடும்ப நலனுக்காக, இனப்படுகொலையைக் கண்டும் காணாமல் மறைமுக உடந்தையாக இருந்தமைக்காகத், தட்டிப்போட்டு ஓரங்கட்டுவார்களா? இதனை எடுத்தியம்பத் தமிழறிஞர்கள் தயங்கியது ஏன்? பெருங்கவிக்கோ அவர்களே! அரசியல் பேச வேண்டா என்கின்றீர்கள். அரசியல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. தொகுப்பாளரும் வேறு சிலரும் தி.மு.க.வைப் பாராட்டினார்களே! அந்த அரசியல் பேச்சை ஏன் நிறுத்தச் சொல்லவில்லை. அன்பு நண்பர் ஒருவர், தான் பேசும் பொழுது நெருக்கடிநிலையால் மிகுதியும் துன்பத்திற்கு ஆளானது தி.மு.க.வினர் என்றும் அவர்களை மறு முறை தேர்ந்தெடுக்காமல் தமிழ் மக்கள் கொடுமை இழைத்து விட்டதாகவும் கூறினாரே! மீண்டும் கலைஞரைத்தான் ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்றாரே! அது கட்சி அரசியல் இல்லையா? அவரைப் பேசவிட்ட நீங்கள் என் பேச்சைத் தடுக்கக்கூடாது. தி.மு.க.வினரைக் கொடுமை படுத்திய கட்சியுடன் அதன் தலைவரே உறவு கொண்டாடும் பொழுது அவர்கள் பட்ட இன்னல்களை மறந்து விட்டார் என்றுதானே பொருள்! அவ்வாறாயின் பிறர் ஏன் நினைவு கொள்ள வேண்டும். பேராயக்கட்சியுடனான உறவைத் தமிழர் நலனுக்குப் பயன்படுத்தாமல்போனது ஏன்? குசரால் அமைச்சரவையில் இருந்து தி.மு.க.வை விரட்ட வேண்டும் என்ற பேராயக்கட்சியின் தீர்மானத்தைச் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடுமையான சொற்களைக் கூறியவர் பிரணாப் முகர்சி. அவர்தான் முதுபெரும்தலைவரின் நெடுங்காலக் கெழுதகை நண்பராம்! அக் கெழுதகை நண்பர் அடிக்கடிச்சிங்கள அரசாளர்களைச் சந்தித்து வந்தாரே! எதற்கு? ஈழத்தமிழர் நலன்களைக் காக்கவா? அழிக்கவா? இனப்படுகொலைகளை விரைந்து நடத்தத்தானே அறிவுரை வழங்கினார் எனச் சொல்லப்படுகின்றது. தம் நட்புரிமையைப் பயன்படுத்தி அதை ஏன் தடுக்க வில்லை? “ஊழலைப்பற்றிச் சொல்லும் பொழுது பேராயக்கட்சியின் ஊழலுக்கு இணையாக யாரையும் கூறமுடியாது என்றோம்! தம் குடும்பத்தவரையே முதன்மைப் பதவிகளில் அமர்த்திய பொழுது எல்லா அரசியல் தலைவர்களும் அவ்வாறுதானே செய்கின்றார்கள் என்றோம்! கிழவர் அணியா? இளைஞர் அணியா