Monday, January 31, 2011

தஞ்சையில் எழுச்சியுடன் திறக்கப்பட்ட மாவீரன் முத்துக்குமார் சிலை
ஈழத்தமிழர் மீதான சிங்கள இந்திய கூட்டுப்படை நடத்திய இனவெறிப் போரைத் தடுத்து நிறுத்தக் கோரி தன் இன்னுயிரைத் தீக்கிரையாக்கிய தழல் ஈகி முத்துக்குமாருக்குஇ அவர் உயிர் துறந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 29.01.2011 அன்று தஞ்சையில் மார்பளவு சிலை எழுச்சியுடன் திறக்கப்பட்டது. இதில் திரளான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டனர்.

ஈகி முத்துக்குமாருக்கு முதன் முதலாக சிலை வைக்கும் பணியை, அவரது இறப்புக்குப் பின் உருவான இளந்தமிழர் இயக்கம் கடந்த 2010 ஏப்ரல் மாதத்தில் அறிவித்து அதற்காக, உலகெங்கும் வாழும் தமிழ் உணர்வாளர்களின் பங்களிப்போடு மாவீரன் முத்துக்குமாரின் மார்பளவு சிலையை உருவாக்கியது. அச்சிலையை, தஞ்சையில் தமிழ் உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர் அவர்கள்இ தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கு கொடையாக அளித்த நிலத்தில் அதனைத் திறக்கவும் த.தே.பொ.க. ஏற்பாடுகளை செய்திருந்தது. எனினும்இ 2011 மே 16 அன்று நடக்கவிருந்த, சிலை திறப்பு நிகழ்வில் சிலையை திறக்கக் கூடாது என தஞ்சை மாவட்டக் காவல்துறை தடை விதித்தது. தமிழ் உணர்வாளர்களுக்குக் கொந்தளிப்பை அளித்த அத்தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அப்போது அறிவித்தார்.

அவரது அறிவிப்பின்படி மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அத்தடையை நீக்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும்இ தமிழக அரசின் அதிகார அத்துமீறலையும் நீதிபதி தனது தீர்ப்பில் கண்டித்தார். இத்தீர்ப்பையடுத்து தான், திட்டமிட்டபடி மாவீரன் முத்துக்குமார் சிலை திறப்பு நிகழ்வு 29.01.2011 அன்று நடைபெற்றது.

சிலை திறப்பு நிகழ்வையொட்டி தழல் ஈகி முத்துக்குமார் நினைவேந்தல் சுடரோட்டம் பிற்பகல் 2 மணிக்கு திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தொடங்கி சாணூரப்பட்டி வரை நடந்தது. இச்சுடரோட்டத்தை தமிழக இளைஞர் முன்னணியின் புதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் ஆ.தேவதாசு தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணியின் தஞ்சை நகரச் செயலாளர் தோழர் க.செந்திறல்இ புதலூர் ஒன்றியப் பொருளாளர் தோழர் க.தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.இ.மு. தஞ்சை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் இரெ.சிவராசு சுடரோட்டத்தைத் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகினர்.

இதைத்தொடர்ந்து சாணூரப்பட்டி திருச்சி-தங்சை நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த மதவீரன் முத்துக்குமார் சிலையை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் திரு. பெ.மணியரசன் திறந்து வைத்தார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. குழ.பால்ராசு நிகழ்வுக்கு தலைமை ஏற்றார். “முத்துக்குமாருக்கு வீரவணக்கம்” என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. சிலை திறப்பிற்கு பின், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு. கி.வெங்கட்ராமன் உரையாற்றினார். “மாவீரன் முத்துக்குமார் சுட்டிக்காட்டியபடி இந்திய ஏகாதிபத்தியத்திடமிருந்து தமிழினத்தை மீட்போம் என்று இந்நதாளில் நாம் உறுதியேற்க வேண்டும்” என்று அவர் கூறினார். முத்துக்குமாரின் தந்தை திரு. குமரேசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

சிலை திறப்பைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்ட விழா மேடைக்கு, உணர்வாளர்கள் பேரணியாக சென்றனர். பேரணியில் திரு. இரா.ரெங்கராசன் அவர்களின் தஞ்சை வீரசோழக் கிராமியக் குழுவினரின் தப்பாட்டம் மற்றும் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலையில் தொடங்கிய பொதுக் கூட்டத்தின் தோழர் தேவேந்திரன் குழுவினர் நடத்திய “மாவீரன் முத்துக்குமார் மரண வாக்குமூலம்” நாடகம் நடந்தது. இதில் முத்துக்குமார் உயிர் விட்ட கடைசி தருணங்களை நாடகமாக நிகழ்த்திக் காட்டினர்.

இதன்பின், “எரிதழல் ஏந்தி வா!” என்ற தலைப்பில் நடந்த பாவீச்சில், கவிஞர்கள் கவிபாஸ்கர், கவித்துவன், ஓசூர் இரா.சு.நடவரசன் ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.

அதன்பின் தொடங்கிய, பொதுக்கூட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு தலைமை தாங்கினார். சிலையை நிறுவ நிலம் வழங்கிய புலவர் இரத்தினவேலவன், ஈகி முத்துக்குமாரின் தந்தை திரு. ச.குமரேசன், த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் ஆ.சண்முகம், கு.சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ.கருணாநிதி வரவேற்புரையாற்றpனார்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, இளங்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் ம.செந்தமிழன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா உள்ளிட்டோர் எழுச்சியுரையாற்றினர். நிறைவில் த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார். அவர் பேசுகையில்,

“அய்யா காசி ஆனந்தன் அவர்கள் பேசியது போல், முத்துக்குமார் இன விடுதலைப் போராளியே. அதனால், மாவீரன் முத்துக்குமாரின் நினைவு நாளை இனி இன விடுதலை நாள் என்று கொண்டாடினாலும் தகும்.

மாவீரன் முத்துக்குமாரும், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனும் காட்டியப் பாதை தேர்தல் பாதை அல்ல. அது புரட்சிப் பாதை. அதை நாம் உணர வேண்டும். அதை விடுத்து, தமிழீழ தேசியத் தலைவரின் படத்தையும், மாவீரன் முத்துக்குமார் படத்தையும் ஏந்திக் கொண்டு யாராவது வாக்குப் பிச்சைக் கேட்டு வந்தால் அவர்களை நம்பாதீர்கள். அவர்கள் தமிழினத்திற்கு துரோகம் செய்பவர்கள். அவர்களது படங்களைக் கொண்டு வாக்குப்பிச்சை கேட்டால் அது பிக்பாக்கெட் அடிப்பதற்கு சமம்.” என்றார்.

சிலை திறப்பு நிகழ்வுக்கு தமிழகமெங்குமிருந்து த.தே.பொ.க. தோழர்கள் பேருந்துகளிலும், மகிழுந்து வாகனங்களிலும் திரண்டு வந்திருந்தனர். இறுதியாக, த.தே.பொ.க. புதலூர் ஒன்றியச் செயலார் தோழர் கெ.செந்தில்குமார் நன்றியுரை நிகழ்த்தினார்.

http://meenakam.com/2011/01/31/20168.html

Saturday, January 29, 2011

மீனவர்களுக்காக குரல் கொடுப்போம்...!!!எல்லாருக்கும் வரும் ஒரு சந்தேகம். ஒரு வலைப்பதிவனால் என்ன செய்துவிட முடியுமென்று. ஒரு வலைப்பதிவனால் முடியாததாக இருக்கலாம். பத்து பதிவர்கள், நூறு பதிவர்கள், ஆயிரம் பதிவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால்... முடியாதது எதுவுமில்லை. டுவிட்டர், பேஸ்புக், ஆர்குட் என்று இணையவெளி எங்கும் குரல் கொடுத்தால்... கோட்டை கதவுகளும் திறக்கும்.

டுவிட்டரில் ஒரு உணர்வுத்தீ...
http://twitter.com/#TNfisherman
இந்த இணைப்பை கிளிக்கி தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

உங்கள் கருத்துகளுக்குப் பின்னால் #tnfisherman #indianfisherman #worldfisherman இவற்றை காப்பி பேஸ்ட் செய்து அனுப்புங்கள்.

உதாரணம்:
- மானாட மயிலாட . அங்கே உயிரோடு ஊசலாட. நேவிக்காரன் விளையாட.. கண்டும் நாடகமாட..STOP THE KILLING! #tnfisherman #indianfisherman #worldfisherman
- we are counting the death , and you can start counting the days in power.STOP THE KILLING! #tnfisherman #indianfisherman #worldfisherman

தமிழக மீனவர்களைக் காப்பாற்ற சில இணையதளங்கள்:
http://www.savetnfisherman.org/
http://www.savetnfishermen.org/

இது மட்டுமில்லாமல் இது சம்பந்தமான எழுதப்படும் தமிழ் இடுகைகள் http://savetnfisherman.blogspot.com என்ற வலைப்பூவில் தொகுக்கப்பட்டு வருகிறது.

பேஸ்புக் பயனாளர்களுக்கு:
பேஸ்புக் பயனாளர்கள் உங்களுடைய ஆதரவை தெரிவிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்:-
http://www.facebook.com/savetnfisherman
http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671

உங்கள் வலைப்பூவின் ஓரத்தில்:
டிவிட்டரில் தொடங்கிய அந்த தீயை உங்கள் வலைதளத்தில் இணைக்க விரும்பினால் [இந்த வலைப்பூவின் வலதுபுறம் போல] Dashboard --> design --> page template --> add a gadget --> HTML/Java script என்ற விட்ஜெட்டில் கோடிங்கை சேர்த்து சேமிக்கவும்.

கோடிங்குக்கு:
http://ethirneechal.blogspot.com/2011/01/blog-post.html
http://vandhemadharam.blogspot.com/2011/01/blog-post_5945.html
ஒரு விண்ணப்பம்:
இந்த துயரை இந்தியா அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இணைய படிவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை படித்து நீங்களும் கையெழுத்துயிடலாம். http://www.petitiononline.com/TNfisher/petition.html கூடுதலான கோரிக்கைவைக்க விரும்பினாலும் அங்கே கருத்துரையில் தெரிவிக்கலாம். முன்னுரிமை தரப்படும். தற்போதைய குறைந்த பட்ச இலக்கு 1000 கையெழுத்து. இந்த படிவத்தை முக்கிய செய்தி நிறுவனங்களுக்கும் அரசுக்கும் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. முந்துங்கள்!

மின்னஞ்சல் சங்கிலி:
பிடித்த விஷயங்கள், பிடித்த கருத்துகள் பிடித்த கேலி சித்திரங்கள் என கட்டி தவறவிட்ட இணையவாசிகளுக்கு வழங்கலாம். தவறான அணுகுமுறைகளை களைய அற்புதமான ஐடியாகளை சொல்லலாம். கீழுள்ள படிவத்தையும் மின்னஞ்சலில் சுற்றிவிடலாம்.

உணர்விருந்தும் என்னிடம் வலைப்பூவோ, டுவிட்டர் பேஸ்புக் கணக்குகளோ இல்லையே என்று வருந்துபவர்களுக்காக கீழே இரண்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:-
http://164.100.47.132/LssNew/members/membershomepage.aspx
மக்களவை உறுப்பினர்கள் விவரம்
http://164.100.47.5/Newmembers/memberlist.aspx
மாநிலங்களவை உறுப்பினர் விபரம்
அப்பெயர்களை சொடிக்கி ஒவ்வொருவரின் மின்னஞ்சல் முகவரிகளைப் பெறலாம். யாருக்கு எப்படி அனுப்பினால் மீனவர்கள் அப்படி பாதிக்கப்படமாட்டர்கள் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு முறைப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிடுங்கள்.
இதை வலைப்பூ, டுவிட்டர், பேஸ்புக் கணக்குகள் வைத்திருப்போரும் செய்யலாம்.

இதை எல்லாம் செய்ய நீங்கள் இந்தியராகவோ, அரசியல் வாதியாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இறந்தவர்களை சகோதர உணர்வுடன் பார்ப்பவர்களாக இருந்தாலே போதும்.


நன்றி:
நீச்சல்காரன்
வந்தே மாதரம்


நீங்கள் உண்மையிலேயே தமிழுணர்வு கொண்ட பதிவராக இருந்தால், உங்கள் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம் என்றால் தயவு செய்து தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக உங்கள் தளத்தில் ஒரு இடுகை எழுதுங்கள்.

எனக்கு சென்சிட்டிவான விஷயங்களைப் பற்றி எழுதத் தெரியாதே என்று நினைப்பவர்கள் குறைந்தபட்சம் மற்றவர்கள் பதிவில் இருக்கும் நல்ல கருத்துக்களை காப்பி பேஸ்ட் செய்து பதிவிடுங்கள்.

பட்டுக்கோட்டை அழகிரி நினைவு மண்டப கல்வெட்டு திறப்பு விழாசுயமரியாதை இயக்கத்தின் பேச்சாளராக பெரியாரின் தோழராக சுயமரியாதை மேடைகளில் பேசிய தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அழகிரிக்கு, அவரது வீடு அமைந்துள்ள பாளையம் பகுதியில் நினைவு மண்டப கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.


இதில் அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்துகொண்டு கல்வெட்டை திறந்து வைத்து பேசினார்.

Wednesday, January 26, 2011

குழந்தைகள் நெற்றியில் விபூதியாகும் பிரபாகரன் வீட்டு மண்

முள்ளிவாய்க்காலில் நடந்த இன படுகொலையோடு அனைத்தும் முடிந்துவிட்டது என மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சவால் விடும் வகையில் இரண்டு தமிழக தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்டு துயருற்றுக் கிடக்கும் ஈழத் தமிழ் மக்களை, அவர்களது வீடுகளுக்கே சென்று சந்தித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பியிருக்கிறார்கள்.

ஒருவர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி. ஈழ விடுதலைப் போரின் தலைவர்களான பிரபாகரனும், முகுந்தனும் மிக நெருக்கமாகப் பழகிய தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனாருடைய மகள் வயிற்றுப் பேத்தி. மற்றொருவர் திருமலை... இவர் சீமான் தலைமை தாங்கும் நாம் தமிழர் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர்.

இவர்கள் இருவரையும் கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதிவரை நான்கு நாட்கள் இலங்கையில் சித்ரவதைக் கொடுமை நடக்கும் தீவிரவாதத் தடுப்புப் புலனாய்வு அமைப்பு இயங்கும் கட்டிடத்தின் நான்காவது மாடியில் வைத்து விசாரித்துள்ளார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், தமிழ் ஈழ ஆதரவுத் தலைவர்கள், மத்திய, மாநில அரசுகள் தலையிட்டதனால் உயிர் பிழைத்த அவர்களிடம் "இந்தப் பயணம் ஏன்?' என கேட்டோம்.

""எனக்கு நினைவு தெரிந்து 95-ம் ஆண்டு தொடங்கி ஈழப் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். 2009-ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இன அழிப்புப் போரை பார்த்ததும், தமிழ்ப் பெண்ணான எனக்குள் ஒரு இயலாமை மேலோங்கிய குற்ற உணர்ச்சி குடிகொண்டுவிட்டது. தமிழகத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் அனைத்தையும் ஒரு வழக்கறிஞராக நின்று எதிர்த்துப் போராடும் எனக்கு போருக்குப் பிந்தைய ஈழத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் உண்டாகியது. அந்தப் போரினால் அனாதைகளான பல்லா யிரம் குழந்தைகளில் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்கிற எனது ஆசையை, எனது குடும்ப நண்பரான திருமலையிடம் தெரிவித்தேன். அவரும் மணந்தால் போரினால் நிர்க்கதியான தமிழ் ஈழ குடும்பத்துப் பெண்ணைத்தான் மணப்பேன் என கடந்த வருடமே பெண் தேடி ஈழப் பகுதிகளுக்குச் சென்று வந்தார். அவரிடம் அங்குள்ள பல ஈழத் தமிழ்க் குடும்பங்களின் முகவரிகளும் இருந்தன.

பொங்கல் திருநாளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க எங்களது ஊதியத்திலிருந்து ஒரு சொற்பத் தொகையை அம்மக்களுக்கு ஆறுதலாக கொடுக்கலாம் என நாங்கள் திட்டமிட்டோம். ஏற்கனவே திருமலைக்கு நன்கு அறிமுகமான இலங்கைத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உதவ முன் வந்தார். ஈழத்தின் இன்றைய சமூகவியல், எதிர்கால அரசியல், போராளிகளின் இன்றைய நிலை... என பல கேள்விகளுக்கும் விடை காணலாம் என 13-ந் தேதி ஜெட் ஏர்வேஸில் பயணமானோம்.

14-ந் தேதி முதல் எம்.பி.யின் சொந்தத் தொகுதி யான வவுனியா மற்றும் மட்டக்களப்பு, கிளி நொச்சி ஆகிய பகுதிகளை 16-ந் தேதி வரை சுற்றி வந்தோம். பிறகு ஓமந்தை ராணுவ செக்போஸ்ட் முதல் யாழ்ப்பாணம் வரை செல்ல ராணுவ அமைச்சகத்தின் அனுமதியை எம்.பி. அவர்கள் பெற்றுத் தந்தார்.

16-ந் தேதி நள்ளிரவு 12:45 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து 3 மணி நேர பேருந்து, ஆட்டோ பயணம் மூலம் யாழ்ப்பாணத்தை அடைய நாவாலி, நாவலூர் வழியாக பயணித்தோம்.

வல்வெட்டித்துறை போனதும் எங்கள் மனசு கொந்தளித்தது. தமிழீழ தலைவர் மேதகு பிரபாகரன் வீடு இடிந்து சின்னாபின்னமாகக் கிடந்தது. அந்த வீட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிலிருந்த மண்ணை நெற்றியில் விபூதிபோல் குழந்தைகளுக்குப் பூசிக் கொண்டிருந்தார்கள். நேராக தலைவரின் தாயார் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைக்குப் போனோம். அங்கிருந்த தமிழ் நர்ஸிடம் ""அம்மாவைப் பார்க்கணும்'' என்றோம். சத்தம் போடாமல் வாருங்கள் என அழைத்துச் சென்றார். பத்து படுக்கைகள் கொண்ட அந்த வார்டில் உள்ள ஒரு சிறிய படுக்கையில் ஒரு கொசுவலைக்கு அடியில் அம்மா படுத்திருந்தார்.

கை, கால்கள் இரண்டும் பக்கவாதத்தில் முடங்கிக் கிடந்திருந்தது. நெற்றியில் ஒரு ஆபரேஷன் செய்த பிளாஸ்திரி. மூக்கு மற்றும் தொண்டைப் பகுதியில் ட்யூப்கள் சொருகியிருந் தது. "தினமும் காலையில் ஒரு டம்ளர் கறுப்புத் தேயிலை. மாலையில் கொஞ்சம் சத்தான திரவ உணவு. அதையும் தலைவரின் அக்காள் மகள் ஒருவர் கொண்டு வந்து தருவார்' என சொன்னார் அந்த நர்ஸ்.

நான் அவரது பக்கத்தில் அமர்ந்து முகத்தை கைகளால் ஏந்தி "அம்மா நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கேன் அம்மா' என உரக்கக் கத்தினேன். அம்மா கண் விழித்துப் பார்த்தார். அவர்களது கண்களில் கண்ணீர். "ம்...ம்...ம்...' என மூன்று முறை இயலாமையை வெளிப்படுத்தும் ஒரு கேவலை வெளிப் படுத்தினார். மாபெரும் புரட்சி வீரனின் தாயாரது இயலாமை நிறைந்த கேவலை கேட்ட நான்... கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தேன். உடனே நர்ஸ்கள் எங்களை வெளியேறச் சொன்னார்கள்.

மனதை கல்லாக்கிக்கொண்டு 18-ந் தேதியன்று கொழும்பு நோக்கி திரும்பியபோது ஓமந்தை ராணுவ செக்போஸ்ட்டில் மதியம் 3 மணிக்கு "உங்களை நாங்கள் விசாரிக்க வேண்டும்' என ராணுவ உளவுப் பிரிவு போலீசார் அழைத்துக்கொண்டு போய் ஓமந்தை போலீஸ் நிலையத்தில் உட்கார வைத்தபோதுதான்... இலங்கை அரசின் மற்றொரு முகம் எங்களுக்குத் தெரிய வந்தது.

நாங்கள் சுற்றிப் பார்த்த பல பகுதிகளில் ராணுவ வீரர்கள் இல்லாத இடமே இல்லை எனச் சொல்லலாம். ஆனால் அகதிகள் முகாம்களில் தமிழர்கள் தண்ணீர், உணவு, மருந்துகள் இல்லாமல் அடைபட்டுக் கிடந்தார்கள். கல்வி என்பது இளைய தலைமுறைக்கு மறுக்கப்பட்டிருந்தது. மேற்கூரைகள் இல்லாத பல வீடுகளில் கை, கால்களை இழந்த பல தமிழ்க் குழந்தைகள் அடுத்தவேளை உணவுக்காக யாசித்துக்கொண்டிருந்தார்கள். இதுபோன்ற குடும்பங் களின் இளைஞர்களையோ, குடும்பத்தலைவனையோ பார்க்க முடியவில்லை. அவர்கள் எல்லாம் கொல்லப் பட்டிருந்தார்கள் அல்லது புலிகள் என்ற பெயரில் வேறுசில முகாம்களில் கொடுமைகளுக்குள்ளாகிக் கிடந்தார்கள்.

நாங்கள் கொழும்பு ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் எங்களது அனைத்து அசைவுகளையும் அவர்கள் கண்காணித்துப் பதிவு செய்து வைத்திருந்தார்கள்.

ஓமந்தையில் சிறிதுநேர விசாரணைக்குப் பிறகு 2 பேஜேரோ கார்களில் 6 மணி நேர பயணமாக பாது காப்புடன் எங்களை கொழும்பு நகரிலுள்ள தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் கட்டிடத்திற்குள் 19-ந் தேதி அழைத்துச் சென்றார்கள். இருவரையும் தனித்தனியாக 4-வது மாடியிலும் ஆறாவது மாடியிலும் வைத்து விசாரணை செய்தார்கள். தேசிய பாதுகாப்புப் பிரிவு, தீவிரவாதிகள் நடவடிக்கையை கண்காணிக்கும் உளவுப் பிரிவு, சாதாரண சி.ஐ.டி. பிரிவு மற்றும் ராணுவ போலீஸார் மற்றும் லோக்கல் போலீஸார் என மொத்தம் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த 50 பேர் மணிக்கணக்கில் விசாரித்தனர். நாங்கள் கொண்டு போயிருந்த கேமரா, மொபைல், எங்களது ஈ-மெயில்கள் அனைத்தும் பிரித்துப் பார்க்கப்பட்டது.

அங்கயற்கண்ணி என்ற பெயர் கொண்ட முதல் தற்கொலைப்படைப் பெண்புலி கடலில் தாக்குதல் நடத்திய படகு ஒன்று கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந் தது. அழியாமல் இருந்த அந்த நினைவுச் சின்னத்தின் முன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். "அது ஏன்?' எனக் கேட்டார்கள்.

விடுதலைப்புலியாக இருந்த பெண்ணுக்கு இயக்கத்தில் இருக்கும்போதே திருமணம் நடந்தது. அதற்கு அடையாளமாக ஒரு புதுவிதமான மாட்டுக் கொம்பு போன்ற ஒரு தாலியை விடுதலைப்புலிகள் பரிசளித்திருந்தார்கள். அதை புகைப்படம் எடுத்திருந்தேன். அது ஏன் என விளக்கச் சொன்னார்கள்.

திருமலை தனது ஈ-மெயிலில் மாவீரர் தின நாளுக்கான கொண்டாட்டங்களைத் தனது நண்பர் களோடு பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்ததும் டென்ஷனான அவர்கள் அவரைத் தாக்க முற்பட்டார்கள்.

தீவிரவாத புலனாய்வுப் பிரிவின் 4-வது மாடி அறைகளில் நாங்கள் மட்டும் இல்லை. வேறு சில விசாரணைக் கைதிகளும் இருந்தார்கள். அவர்களில் ஒருவர் 70 வயது முதியவர். பல மாதங்களாக அங்கேயே கிடக்கும் அவர் செய்த குற்றம்... வெளிநாட்டிலிருந்து அவரது செல்போனுக்கு யாரோ, பிரபாகரன் படத்தை அனுப்பியதுதான்.

"நீங்கள் யார்? என்ன திட்டத்தை நிறைவேற்ற இங்கு வந்தீர்கள்? ஏன் பிரபாகரனின் தாயாரை சந்தித்தீர்கள்?' என்கிற கேள்விகளோடு அரசிய லும் பேசினார்கள். "தமிழீழ அரசியலை ப் பற்றி பேசி வைகோ, ராமதாஸ் எல்லாம் என்ன கிழிச்சாங்க. சீமானால தமிழ்நாட்டுல ஒரு சீட்டாவது ஜெயிக்க முடியுமா? பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?' என 21-ந் தேதிவரை கேள்வி களால் மிரட்டிக்கொண்டேயிருந்தார்கள்.

நாங்கள் உயிருடன் தமிழகம் வருவோம் என்கிற நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. 21-ந் தேதி மதியம் இரண்டரை மணிக்கு எங்களை ஒரு கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அப்பொழுதுதான் எங்களை விடுதலை செய்ய ஒரு பெரிய போராட்டமே நடந்தது என தெரிந்துகொண்டோம்.

விமானத்தில் ஏறி அமர்ந்த பிறகுதான் ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது.

தமிழீழ போக்குவரத்துக் கழகம், தமிழீழ பாடசாலை, தமிழீழ குடிநீர் வாரியம் என ஈழப் பகுதிகளில் வாழ்ந்த ஈழ மக்களில் பலர் கடைசி முள்ளிவாய்க்கால் வரை தலைவர் பிரபாகரனுடன் வீரமுடன் பயணித்திருக் கிறார்கள்.

அந்தப் போரில் காயப்பட்டுக் கிடக்கும் அந்த மக்களுக்கு இன்றைய தேவை தமிழ் ஈழம் அல்ல. நல்ல சோறும், குடிநீரும்தான். அதைப் பெற்றுத் தர நாம் என்ன செய்யப் போகிறோம்? என்கிற கேள்வியே எனக்குள் எழுந்தது. இலங்கை ராணுவத்தினருக்கு போர் முடிந்த பிறகும் இருக்கும் புலிகள் மீதான பயமும், தமிழர்கள் மத்தியில் மீண்டும் ஈழம் மலரும் என்கிற நம்பிக்கையும் ஒரு பெரிய ஆச்சரியத்தை என் மனதில் ஏற்படுத்தியது.
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=47431

Tuesday, January 25, 2011

மத்திய,மாநில அரசு அறிவிப்பு -தமிழக மீனவர்களுக்கு இலவச இறுதிச் சடங்கு !

நாள் தோறும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்திகளுக்கு குறைவு இல்லை. வட இந்தியன் வம்பிலுத்துவிட்டு வெளிநாடுகளில் நைய புடைக்கப்பட்டால் இந்தியனை அடித்துவிட்டார்கள் என்று கண்டனம் தெரிவித்து அனைத்து மாநில மக்களிடம் இந்திய உணர்வு அரசியல் நடத்தும் இந்தியா, எதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் சிங்கு தலைப்பாகை வைக்கக் கூடாது என்றால் இந்தியர்களை அவமானப்படுத்துகிறார்கள் என்று பொங்கி எழும் பிரதமர், தான் எழுதிய பாடல் போலவே காகிதக் ஓடத்தை டெல்லிக்கு அனுப்பும் தமிழக முதல்வர், இவர்கள் கூட்டணி தமிழக சட்ட சபைத் தேர்தலை நெருங்கும் இந்த நேரத்தில் கொலை செய்யப்படும் மீனவர் உடல் நலம் கருதி 'இலவச இறுதிச் சடங்கு நடத்தவும், பதினாறாம் நாள் கருமாதிக்கு பண உதவி செய்யும் இலவச திட்டம்' அறிவித்து தேர்தலில் வென்றுவிட நினைத்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. ஈழத்தமிழர்கள் பிணங்களின் மீது ஏறி நின்று பாராளுமன்ற வெற்றியைச் சுவைத்தார்கள், சட்ட மன்ற வெற்றிச் சுவைக்கு தமிழக மீனவன் பிணங்கள் போலும்.

வங்காளவிரிகுடா சிங்களவெறிகுடாவாகி மீனவர்களின் இரத்தங்கள் கலந்து நிறமாறிக் கிடக்கிறது.

தமிழர்கள் இந்தியர்கள் இல்லை என்று இந்தியாவே ஒதுங்கி வேடிக்கைப் பார்பதன் மூலம் மறைமுகமாகக் குறிப்பிட்டு உணர்த்தும் போது தேசியவாதம் பேசும் தேசியவியாதிகளை எதால் அடிக்கலாம் ?

நம்மால் நேரிடையாக ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்றாலும், முடிந்த வழியில் இந்த அக்கரமங்களுக்கு செருப்படிக் கொடுத்தோம், எதிர்ப்பைக் காட்டினோம் என்று வரலாற்றில் எழுத்தின் வழியாகப் பதியவைக்கவில்லை என்றால் நாம் தமிழனுக்கு பொறந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

நன்றி
http://govikannan.blogspot.com/2011/01/blog-post_25.html

Tuesday, January 18, 2011

துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!இந்தியாவில் வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கிறது என்றால் மற்ற பொருட்களின் விலையை விளக்க வேண்டியதில்லை. உழைக்கும் மக்களில் பெரும்பான்மையோர் தற்போது ஓரிரு வேளை உணவை ரத்து செய்திருக்கின்றனர். ஆனாலும் இத்தகைய காந்திய வழி உண்ணாவிரதம் இன்னும் எத்தனை நாளைக்கு தொடர முடியும்?

ஏகாதிபத்தியங்களின் சுரண்டலால் உலக பொருளாதாரம் தோற்றுவித்த ‘நெருக்கடி’ அமெரிக்காவில் துவங்கி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று எந்த கண்டத்தையும் விட்டுவைக்கவில்லை. முதலாளித்துவத்தின் சூதாட்டத்தால் வந்த நட்டத்தை இப்போது ஏழை நாடுகளின் மேல், உலக மக்களின் மேல் ஏற்றி வருகிறார்கள். விளைவு எங்கும் வேலை இழப்பு, விலைவாசி உயர்வு, அரசு மானியம் ரத்து…. ஆயினும் இந்த அநீதிகளை மக்கள் தொடர்ந்து சகிக்க மாட்டார்கள் என்பதற்கு கிரீசீல் எழுந்த தெருப்போராட்டம் ஒரு துவக்கம் என்றால் அந்த போராட்டத்தையே புரட்சியாக சாதித்திருக்கிறது துனீசிய மக்களின் எழுச்சி. ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த மக்கள் புரட்சியை தோழர் கலையரசன் விளக்குகிறார்.

- வினவு

________________________________________________

26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பட்டப் படிப்பு முடித்தும் வேலை வாய்ப்பு இல்லை. ஜீவனத்திற்காக நடைபாதையோரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்தவன். போலிஸ் லைசன்ஸ் கேட்டு தொந்தரவு செய்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான். ஊர், பேர் தெரியாத இளைஞனின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

விரைவிலேயே அவர்களது சீற்றம் அதிகார வர்க்கம் மீது திரும்பியது. அரசு நிறுவனங்கள் தாக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்த பிரெஞ்சு தூதரகம் கூட சுற்றி வளைக்கப்பட்டது. வேலையற்ற இளைஞர்களின் கலகமாக ஆரம்பித்தாலும், வழக்கறிஞர்களும், தொழிற்சங்கமும் தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்தனர். உழைக்கும் வர்க்கமும், இழப்பதற்கு எதுவுமற்ற மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் புரட்சி நிச்சயம் என்பதை துனீசியா மக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

அரபுலகில் முதன் முதலாக இணையம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சியும் இதுவாகும். கொடுங்கோல் அரசின் இணையத் தடையை மீறி, டிவிட்டர், முகநூல் (Facebook) போன்ற சமூக வலையமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிவித்துக் கொண்டிருந்தன. போலிஸ் அடக்குமுறைகளை காட்டும் வீடியோக்களை, Youtube உடனுக்குடன் அழித்துக் கொண்டிருந்தது. ஆயினும் எல்லாவித தடைகளையும் மீறி, இறுதியில் புரட்சி வென்றது. “இணையத்தில் புரட்சி செய்கிறார்கள்!” என்று பரிகசிக்கும் கூட்டத்திற்கு இது சமர்ப்பணம்.

துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிகலகத்தை அடக்க அனுப்பப்பட்ட போலிஸ் படை, வழமையான துப்பாக்கிச் சூடு, கைதுகள், என்று மக்கள் எழுச்சியை அடக்கப் பார்த்தது. இறுதியில் துனிசியா சர்வாதிகாரி பென் அலியே முன் வந்து கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. திடீரென்று உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பென் அலி, வேலையற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக விடுத்த அறிவிப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதியில் நாட்டை விட்டு வெளியேறி, சவுதி அரேபியாவில் அகதித் தஞ்சம் கோர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

உல்லாசப் பயணிகளால் அதிக வருமானம் கிடைக்கும் கரையோர நகரங்கள் என்றும் போல அமைதியாகத்தான் இருந்தன. ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்நாட்டு நகரங்களில் தான் மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள். உணவுப் பொருட்களின் விலையேற்றம், ஏற்கனவே தொழில் வாய்ப்பற்ற பகுதிகளை மோசமாகத் தாக்கியது.

உலகம் முழுவதும் பொருளாதாரப் பிரச்சினைகளால் மக்கள் கிளர்ச்சிகள் வெடிப்பதைப் பற்றி நான் எழுதினால், பலருக்கு பிடிப்பதில்லை. “மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல, இன மான உணர்வே பெரிதென்று” வாதாடுகின்றார்கள். ஊடகங்களும் அரபு நாடுகளைப் பற்றியும் அப்படியான கருத்துகளைத்தான் பரப்பி வந்தன. “கலாச்சார மோதல்” தத்துவப் படி, அரேபியர்கள் முஸ்லிம்கள், வயிற்றை விட மதமே பெரிதென்று வாழ்பவர்கள் என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். “அரபு நாடுகளில் அல்கைதாவும் இல்லை, அரேபியர்கள் எல்லோரும் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளும் இல்லை,” என்று கடந்த பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். உண்மையான பிரச்சினை என்ன என்றும் தெளிவு படுத்தியிருந்தேன்.

மேற்கத்திய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் சர்வாதிகாரிகள், ஜனநாயக சுதந்திரத்தை மறுக்கும் அரசு அடக்குமுறை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, இவை சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சினைகள். விரக்தியுற்ற இளைஞர்கள் பட்டப் படிப்பு படித்தாலும் வேலையின்றி, வெளிநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியற்றவர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அமெரிக்காவும், உள்நாட்டு சர்வாதிகாரிகளும் அவர்களை அல்கைதா என்று முத்திரை குத்தி அடக்கினார்கள்.

துனிசியாவில் கலகம் செய்தவர்களையும், பென் அலி அப்படி சொல்லிப் பார்த்தார். யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. கடைசியாக அவரே முன் வந்து, நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பது முக்கியம் என்பதை ஒத்துக் கொண்டார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியுமா? மக்களின் கோபாவேசத்திற்கு முகம் கொடுக்க முடியாமல், நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.

துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிதுனிசியா கலவரத்தை சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கிரேக்க மக்கள் என்ன காரணத்திற்காக கிளர்ந்தெழுந்தார்கள்? வேலை, ஊதியம், உணவு பறிபோவதை எந்த மனிதன் தான் பொறுத்துக் கொண்டிருப்பான்? (இனமான உணர்வாளர்களுக்கு சுடலை ஞானம் பிறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது.) வளர்ச்சியடைந்த ஐரோப்பாவை சேர்ந்த கிரேக்கர்களாக இருந்தால் என்ன, வறிய நாடான மொசாம்பிக்கை சேர்ந்த மக்களாக இருந்தால் என்ன, எல்லோரும் வயிற்றுக்காக போராடக் கிளம்புகின்றனர். “முஸ்லிம் நாடுகளான” துனீசியா, அல்ஜீரியா, சூடான் போன்ற நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களை போராடத் தூண்டுகின்றது.

“சிங்களப் பேரினவாதிகளின்” சிறிலங்காவிலும், “தமிழ் இனப்பற்றாளர்களின்” ஈழத்திலும் மக்கள் பொருளாதார பின்னடைவுகளை எதிர்த்து போராடுகின்றனர். முதலாளித்துவ தமிழ் ஊடகங்கள் அத்தகைய செய்திகளை கூறாமல் இருட்டடிப்பு செய்கின்றன. எல்லா நாடுகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் அளிக்கின்றது. அரசு மானியத்தை விலக்கிக் கொண்டால் விலை ஏறும் என்பதும், அதனால் மக்கள் கலகம் செய்வார்கள் என்பதும், ஓரளவு பொருளாதாரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.

2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி துனிசியாவையும் பாதித்தது. பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்த உல்லாசப் பயணத் துறை, நஷ்டத்தை நோக்கி சென்றது. ஏற்றுமதி, அந்நிய முதலீடு அரைவாசியாக குறைந்தது. இதனால் வேலையற்றோர் தொகை அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்தில், துனிசியா அரசு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. இதனால் படித்த வாலிபர்கள் பெருகினார்கள். அரபு நாடுகளில் அதிகளவு படித்த மத்தியதர வர்க்கத்தை கொண்ட நாடுகளில் துனிசியா முன்னணியில் திகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஒரு சராசரி ஐரோப்பிய நாட்டில் உள்ளதைப் போல, பெண்கள் சம உரிமையுடன் அனைத்து துறைகளிலும் பிரகாசித்தனர். ஆனால் அத்தகைய அபிவிருத்திக்குப் பின்னால், சர்வாதிகார கொடும்கோன்மை மக்களை அடக்கி வைத்திருந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன.

எகிப்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போல, அன்றாட உணவுக்கே அல்லாடும் பரம ஏழைகள் துனிசியாவில் இல்லை. இருப்பினும்,Tunis, Sousse , Sfax, போன்ற நகரங்கள் சுற்றுலாத் துறை, சர்வதேச வணிகம் காரணமாக அதிக வளர்ச்சியடைந்திருந்தன. அப்படி எந்த அதிர்ஷ்டமும் வாய்க்கப் பெறாத பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, குறைந்த ஊதியத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். மொத்த தேசிய வருமானத்தில் 30 % செல்வத்தை, 10 % பணக்கார கும்பல் அனுபவிக்கின்றது. கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பொருளாதார பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திறந்த சந்தை, நவ தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்கள் எதுவும் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவில்லை. சாதாரண பணியாளர்களும், பாவனையாளர்களும் வரி செலுத்திக் கொண்டிருக்கையில், பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் வரிச் சலுகை பெற்று வந்தனர். நாட்டின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஜனாதிபதி பென் அலியின் குடும்ப சொத்தாக இருந்தன. பென் அலி குடும்பத்தின் பேராசையும், அகங்காரமும் ஊழலுக்கு காரணம் என்று துனீசியா பொது மக்கள் குறைப் பட்டுக் கொள்கின்றனர்.

துனிசியா மக்களின் புரட்சியை சர்வதேச சமூகம் இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இல்லை. மேற்குலக ஊடகங்கள் ஏதோ கடமைக்கு செய்தி வாசித்து விட்டுப் போகின்றன. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஏற்றுமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் துனிசியாவுக்கு அரசு முறை விஜயம் செய்த பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, “மனித உரிமைகள் நிலவரம் திருப்தியளிப்பதாக” நற்சான்றிதழ் அளித்தார். இன்று மக்கள் எழுச்சியை அடக்க, துனிசியா அரசு கேட்டுக் கொண்டால் படை அனுப்ப தயாராக இருப்பதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதும், பிரான்ஸ் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறிய நாடான துனிசியாவில் மக்கள் புரட்சி வென்று விட்டது. அடுத்தது இயற்கை வளம் நிறைந்த அல்ஜீரியா புரட்சிக்காக தயாராகி வருகிறது.

_________________________________________________________

- கலையரசன்
http://www.vinavu.com/2011/01/17/tunisia-revolution/

Wednesday, January 12, 2011

ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்! சென்னையில் மன்றாடிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்காஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்​னாண்டோ.

இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.

இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன். இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும்.

பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்​வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் படுகொலையில் முடிந்ததை நீங்கள் அறிவீர்கள். போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில், பெண்​களுக்கு ஏற்பட்டதைத்தான் மோசமான கதியாகக் கருதுகிறேன்.

எந்த இனத்தைச் சேர்ந்தவளாகவும் நான் இங்கு வரவில்லை. இலங்கைத் தீவில் இருந்து ஒரு பெண்ணாகவே நான் இங்கு நின்று பேசுகிறேன். அண்மையில் மாங்குளம், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று வந்தேன். அடுத்த கட்டம் என்ன? அடுத்த நேர உணவுக்கு வழி என்ன? யாரிடமும் போய்க் கேட்க வாய்ப்பு இல்லாமல்...

சிதிலமடைந்த வீடுகளைக் கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்களும் என்னிடம், 'எங்கே என் கணவர்? எங்கே என் பிள்ளைகள்?’ என்றே கேட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை...'' என்றவர், ''அங்கே, 'பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுப் போக முடியுமா?

அதிலும் முடமாக்கப்பட்ட பெண் பிள்ளை​களைத் தனியாகவிட்டு நான் வேலைக்குப் போக முடியுமா? ஆனால், குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சுவதற்கான ஊதியம் பெறுவதற்காவது நான் போக வேண்டுமே... எப்படி?’ என்று கதறுகிறார்கள் அந்தப் பெண்கள். மறுகுடியமர்த்தப் பணிகளுக்காகப் பல நாடுகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளன. ஆனால், என்ன நடந்தது? சில வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் இராணுவ நிலைகளை வலுவாக அமைத்து இருக்கிறார்கள். மக்கள் சுதந்திரமாகப் பேசிக்கொள்ளக்கூட முடியவில்லை. நான் என்னுடைய மக்களுடன் பேசினால், மூன்றாவது நபரால் கண்காணிக்கப்படுகிறேன். தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள மக்களும் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை..

இங்கே கூட்டம் போட்டுப் பேசுவது​போல இலங்கையின் வடக்கில், கிழக்கில் யாரும் பேசிவிட முடியாது. அரசியல்வாதிகள் பேசினால், கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டப்படுவார்கள், பின்னர் காணாமல் போவார்கள்.

போர், தமிழ் மக்களின் சுயமரியாதை,, தன்மானத்தின் நாடிநரம்புகளையும் சேர்த்தே நசுக்கி இருக்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பிச்சைக் காரர்களாக இதுவரை இருந்தது இல்லை. போரால் வாழ்வு இழந்த​வர்கள் எல்லோரும், மீனவர்களாகவும் விவசாயி​களாகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டும் இருந்தவர்கள்.

அரசனாகவோ அரசியாகவோ வாழா​விட்டாலும், உங்களைவிட என்னைவிட வசதியாக வாழ்ந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்று கையேந்தி நிற்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் நல்ல வளங்கள் இருந்தபோதும் மக்கள் வேலையின்றி, வறுமையில்தான் வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த கிராமங்களைவிட்டு வெளியேறுகிறார்கள்.

உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி, அங்கே இனப்பரம்பல் விகிதத்தை மாற்றிவிடுகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்​தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உரு​வாகிறது. அதுவும் சீனா போன்ற நாடுகளின் உதவியுடன் நடக்​கிறது.

தமிழ் மக்கள், சிங்கள ஊடகங்கள், பொதுஜன நியாயத்துக்கான குரலை இலங்கை அரசு கடுமையாக ஒடுக்கு​கிறது. நடந்ததை மறந்துவிடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. போரினால் அழிக்கப்பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.

இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலையில் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக, வெளிநாட்டில் இருந்து நாங்கள் ஆதரவைப் பெறப்போவதில்லை. தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்களின் கூட்டு முயற்சியுடன், ஆட்சிக் கட்டிலில் இருந்து மகிந்த ராஜபக்ஷ வெளியேறும் காலம் வரும்.

அந்த நாளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்று நிமல்கா முடித்தபோது, அரங்கம் அதிரக் கைதட்டல்கள். இனவெறி தலைக்கேறி, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் குடித்த சிங்களத்தில் பிறந்தாலும், நியாயத்துக்காக நிற்கும் நிமல்கா போன்றவர்கள்தான், நிஜமான 'தகத்தகாயக் கதிரவன்’கள்!

வன்முறை இல்லாமல்... போதைப் பொருட்கள் இல்லாமல்..

அமெரிக்கக் கண்டங்களில் வன்முறையும், போதைப் பொருட்களும் தலைவிரித்தாடுவது பற்றிய தனது நினைவலைகளில் கியூபாவின் சாதனையை அனுபவமாகக்கொண்டு அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளும் சொந்தக் கால்களில் நிற்கலாம் என்று கியூபப் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ கருத்து தெரிவித்துள்ளார். அவரது கட்டுரையின் பகுதிகள் வருமாறு :

“அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் கப்ரீயல் கிப்ஃபோர்ட்ஸ் மீதான தாக்குதலின் போது, 18 பேர் சுடப்பட் டனர். ஆறு பேர் பலியானார்கள். 12 பேர் காயமடைந்துள் ளனர். அதில் பலருக்குப் படுகாயம். படுகாயமடைந் தவர்களில் நாடாளுமன்ற உறுப்பி னரும் ஒருவர். அவரது தலையில் குண்டு பாய்ந்தது. அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகிறார் கள். இந்தத் தாக்குதலில் பலியான வர்களில் ஒன்பது வயது சிறுமியும் ஒருவர். இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட அதே நாளில் பிறந்தவர். அபாரமான மாணவி. அவரை இழந்த தாய், இத்தகைய வெறுப்புணர்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மிகவும் துயரமான ஒன்று எனது நினைவில் வருகிறது. பொய்களாலும், வெறுப்புணர்வாலும் தங்களை நிரப்பிக் கொள்ளாத நேர்மையான அமெரிக்க குடிமக்களை கவலையுறச் செய்யும் விஷயம் அது. உலகிலேயே மிகவும் மோசமான செல்வப்பகிர்வு உள்ள பகுதி லத்தீன் அமெரிக்காதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வளர்ச்சி இல்லாததாலும், வறுமையாலும் அமெரிக்காவிற்குள் ஏராளமான லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைகிறார்கள். அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பணமும், பொருட்களும் எல்லையைத் தாண்டலாம். ஆனால் மனிதர்கள் தாண்டக்கூடாது. போதைப் பொருட்களும், ஆயுதங்களும் தங்குதடையின்றி ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு இடம் மாறுகின்றன.

உலகிலேயே அதிகமான அளவில் போதைப் பொருட்கள் அமெரிக்காவில்தான் பயன்படுத்தப்படுகிறது.ஆயுத விநியோகத்திலும் அமெரிக்காவுக்குதான் முதலிடம்.

ஸ்பெயினைச் சேர்ந்த பத்திரிகையாளர் சேவியர் கானோ டமயோ இவ்வாறு எழுதுகிறார், “உலகில் வன்முறையால் நிகழும் கொலைகளில் 27 விழுக்காடு லத்தீன் அமெரிக்காவில் நடக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் 12 லட்சம் பேர் உயிரிழந்துள்ளார்கள். பல குடிசைப்பகுதிகள் ராணுவக்காவல்துறையினரின் ஆக்கிரமிப்பில் உள்ளன. மெக்சிகோவில் ஏராளமான கொலைகள் நடக்கின்றன. கொலம்பியாவில் ஆட்கள் காணாமல் போகிறார்கள். கொலைகள் பெருகியுள்ளன. கொலைகள் நிகழும் விகிதம் உலகிலேயே லத்தீன் அமெரிக்காவில்தான் அதிகமாக இருக்கிறது.”இதை எப்படி விளக்குவது? இதற்கான விடை லத்தீன் அமெரிக்க சமூக அறிவியல் மையத்தின் ஆய்வில் கிடைத்தது. நான்கு லத்தீன் அமெரிக்க இளைஞர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார் அல்லது படிக்கவில்லை. 35 விழுக்காடு லத்தீன் அமெரிக்க மக்கள் வறுமையால் அல்லது கொடிய வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கணக்கெல்லாம் உலக வங்கி தந்திருக்கும் ஒருநாளைக்கு 1.25 டாலர் ஊதியம் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. தனது கட்டுரையை முடிக்கும்போது சேவியர் கானோ, உங்கள் இதயத்தைத் தொட்டுச் சொல்லுங்கள், ஒருநாளைக்கு 1.25 டாலரோடு உங்களால் வாழ்க்கையை ஓட்ட முடியுமா? என்று கேட்கிறார்.

இன்றைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சுடப்பட்ட நிகழ்வு ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. சுடப்பட்டு 38 நிமிடங்களில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இணையதளங்களில் விபரங்கள் கிடைத்தன. அவர் முழுமையாகக் குணம் பெற பல மாதங்களாகலாம். இந்த மருத்துவக்குழு வெளியிடும் விபரங்களை நரம்பு சிகிச்சை நிபுணர்கள் மிகவும் கவனமாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக, மருத்துவ விஷயங்களை கியூபாவைச் சேர்ந்தவர்கள் மிகவும் நெருக்கமாக நின்று கவனிப்பார்கள். மருத்துவ விஷயங்களில் கரை தேர்ந்தவர்கள். இந்த மருத்துவர்களின் வெற்றியால் அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள்.

ஆனால் எல்லையின் மறுபுறத்தில், மெக்சிகோ மாநிலத்தில், கொடிய சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அங்கும் அற்புதமான மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவிடமிருந்து பெற்ற கொடிய ஆயுதங்களோடு சிகிச்சை அறைகளுக்குள்ளேயே நுழைந்து, தங்களுக்கு வேண்டாதவர்களைக் கொன்று குவிப்பது அங்கு வழக்கமான ஒன்றுதான். குழந்தைகள் இறப்பில் ஒவ்வொரு ஆயிரத்திற்கும் ஐந்து குழந்தைகளுக்குக் குறைவாகவே உயிரிழப்பு உள்ளது. வன்முறைக்கு பலியாவதிலும் ஒரு லட்சத்திற்கு ஐந்து பேருக்கும் குறைவானவர்களே பலியாகிறார்கள். எங்களுடைய அனுபவம் காட்டுவது என்னவென்றால், முற்றுகைகள், தடைகள் மற்றும் மிரட்டல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு, வன்முறையும், போதைப் பொருட்களும் இல்லாமல் லத்தீன் அமெரிக்க மக்களால் வாழ முடியும் என்பதுதான்.

கடந்த 50 ஆண்டுகளில் நடந்ததைப் பார்த்தால், அமெரிக்காவின் உறவு இல்லாமலேயே கூட லத்தீன் அமெரிக்க நாடுகளால் வாழ முடியும். இந்த விஷயத்தை நாங்கள் நடத்திக் காட்டவில்லை. அமெரிக்காவே செய்து காட்டியுள்ளது.

நன்றி.மாற்று

Saturday, January 8, 2011

இந்திய இளைஞர் லெனினின் பேச்சைக் கேட்டு கோபப்பட்ட நாமல் ராஜபக்ஷ

ஈழத்தில் மனச்சாட்சியே இல்லாமல் மனிதம் கொன்ற ராஜபக்ஷவையும், துணைபோன காங்கிரஸ் அரசையும் தென் ஆபிரிக்க மாநாட்டில் வெளுத்துத் துவைத்து இருக்கிறார்கள் இரண்டு தமிழக இளைஞர்கள்!

சர்வதேச அளவில் ஏகாதிபத்தியம் மற்றும் நசுக்கப்படும் மனித உரிமைகளுக்கு எதிராக, கடந்த 65 ஆண்டு காலமாக போராடி வருகிறது, 'உலக ஜனநாயக இளைஞர் அமைப்பு’ (W.F.D.Y). ஹிரோஷிமா, பாலஸ்தீனம், வியட்நாம் பிரச்னைகளில் மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்து, இந்த அமைப்பு எழுப்பிய கடுமையான கோபக் குரல் ஐ.நா-வையே ஆட்டம் காண வைத்திருக்கிறது.

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநாட்டில், உலக அளவில் பல்வேறு கட்சிகளின் இளைஞர் பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொள்வார்கள். அதன்படி, கடந்த டிசம்பர் 13 முதல் 21 வரை தென் ஆபிரிக்காவில் உள்ள பிரிட்டோரியா நகரில் நடந்தது 17-வது உலக மாநாடு.

இதில்தான், 'இலங்கை அரசு நடத்தியது போர் அல்ல... அது ஒரு இரத்த வேட்டை’ என முழங்கினர் தமிழக இளைஞர்களான லெனின், திருமலை.

தென்னாபிரிக்காவில் இருந்து திரும்பி இருக்கும் 'அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற’த்தின் முன்னாள் செயலாளர் லெனினிடம் மாநாட்டு அனுபவம் குறித்துப் பேசினோம்.

இந்த மாநாட்டில் 15 ஆயிரம் இளைஞர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற அமைப்புகளில் இருந்து மொத்தம் 25 பேர் சென்றிருந்தோம்.

நெல்சன் மண்டேலாவுக்கும், பிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்த மாநாடு அர்ப்பணம் செய்யப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் இந்த உலக ஜனநாயக இளைஞர் அமைப்பும் ஓர் அங்கம்தான். போர்த்துக்கல் நாட்டின் தியாகி வீரா என்ற தோழர்தான் அந்த அமைப்பின் இப்போதைய தலைவர்.

மாநாட்டின் ஐந்தாம் நாள் ஜனநாயக உரிமை, சுதந்திரம் மற்றும் மனித உரிமை பற்றிய கருத்தரங்கில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 'இலங்கையில் சிங்களவர்கள் தோன்றிய காலம்தொட்டே தமிழ் இனமும் வாழ்ந்து வருகிறது.

ஆட்சியைப் பிடிக்கும் சிங்கள அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் கல்வி, வேலை, அன்றாட வாழ்க்கை என சகல வழிகளிலும் எம் மக்களுக்கான உரிமைகளை மறுத்து வந்தனர்.

எம் மக்கள் போராட்டத்தில் இறங்கியபோது, உரிமைகளுக்கு உரிய பதில் சொல்லத் திராணியற்ற சிங்கள அரசு, ஆயுதங்கள் மூலம் பதில் சொல்ல ஆரம்பித்தது.

அதனால்தான், வேறு வழியில்லாமல் ஆயுதம் ஏந்தும் சூழலுக்கு ஈழத் தமிழனும் தள்ளப்பட்டான்.

கடந்த 25 ஆண்டு காலமாக தமிழ் இனத்தைப் பூண்டோடு அழிப்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள் அந்த இனவெறியர்கள் என்பதற்கு சமீபத்தில் நடந்துமுடிந்த போரே சாட்சி.

பெற்றோர்களை இழந்து லட்சக் கணக்கான குழந்தைகள் முகாம்களில் நடைப்பிணங்களாகத் திரிவதை இரக்கம் உள்ள எந்த மனிதனும் சகிக்க மாட்டான்.

'சனல் 4’ தொலைக் காட்சியாளர்களே திகைக்கும் அளவுக்கு, தமிழர்கள் கொடூரமாகக் கொன்று அழிக்கப்பட்டார்கள்.

இப்படி அப்பட்டமான போர் குற்றம் நிகழ்த்திய ராஜபக்ஷவுக்கு யார் தண்டனை கொடுப்பது? அமைதியை எதிர்பார்க்கும் ஒவ்வொருவரும் ராஜபக்ஷவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்’ என்று பேசினேன்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்த உண்மைகளைக் கேட்டு அதிர்ந்து போனார்கள். என்னுடைய மானசீக குருவான சேகுவேராவின் மகள் அலைடா குவேரா என்னைத் தேடி வந்து பாராட்டியதுடன், 'இலங்கையில் நடக்கும் இன்னல்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!’ என்று உறுதி கொடுத்தார்.

இதில் வேடிக்கை... ஈழத்தை இடுகாடாக்கிய ராஜபக்ஷ, மனித உரிமை குறித்த மாநாட்டுக்குத் தன் மகனை அனுப்பிவைத்து, தன்னை மனிதநேயக் காவலனாகக் காட்ட முயன்றதுதான்!

மூன்று நாட்கள் கழித்து அந்த மாநாட்டுக்கு வந்த நமல் ராஜபக்ஷவுடன், இலங்கையில் இருந்து திரளான சிங்களவர்களும், தமிழர்களும் வந்திருந்தனர்.

எனது பேச்சைக் கேள்விப்பட்டு நமல் ராஜபக்ஷே கோபப்பட்டாராம்.

ஆனால், முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்களவர்கள் எங்களை சந்தித்து, 'சக மனிதனின் துன்பத்தை வெளிப்படையாகக் கண்டிக்க முடியாத அளவுக்கு நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம்’ என்று வருந்தி என் பேச்சில் இருந்த உண்மையை ஏற்றுக் கொண்டனர்.

இந்த மாநாட்டில் இலங்கை மீது பெரிய குற்றச்சாட்டு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தனி விமானத்தில் தனது பிரதிநிதிகளை அனுப்பி வைத்தார் ராஜபக்ஷ.

ஆனால், இலங்கையில் நடந்த படுகொலைகளை உலகத்தின் கண்களில் இருந்து இனிமேலும் அவரால் மறைக்க முடியாது....'' என்று விவரித்தார் லெனின் உணர்ச்சி வசப்பட்டவராக!

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த திருமலை, ''போபால் விஷ வாயுக் கசிவால் நேர்ந்த மரணம் குறித்தும், அக்கொலைக்கு காரணமான ஆண்டர்சனை காங்கிரஸ் அரசு தப்பவிட்டது குறித்தும் நான் பேசினேன். உடனே அங்கு வந்திருந்த காங்கிரஸ்காரர்கள் கூச்சலிட்டனர். 'இது உங்கள் நாட்டு நாடாளுமன்றம் கிடையாது, யாருக்கும்... எந்தக் கருத்து சொல்லவும் இங்கே உரிமை உண்டு. அமைதியாக உட்காருங்கள்...’ என்று நிர்வாகிகள் எச்சரித்த பிறகே, அமைதி ஆனார்கள்!'' என்றார்.

இலங்கையில் ஈழத்தமிழர்களின் அவலம் குறித்து உலக அளவிலான மனித உரிமையாளர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். இனியாவது நம் மக்களுக்கு நிம்மதி கிடைக்கட்டும்!

நன்றி: விகடன்

Thursday, January 6, 2011

சோறு திருடினான் மகன்! தற்கொலை செய்தாள் தாய்!!தன்மகன் போரிலே புறமுதுகில் அம்பு தைத்து மாண்டு போனான் என்று கேள்விப்பட்டதும் ‘அந்த கோழைக்கு இந்த மார்புகளா பாலூட்டியது’ என்று சினம் கொண்டு தன் மார்புகளை அறுத்தெரிந்தாளாம் ஒரு புறநானூற்றுத் தாய். இலக்கியத்தில் பதிவான அந்த வீரத்தாயின் வரிசையில் உண்மையாகவே ஒரு தாய் இருக்கிறாள். நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி என்ற கிராமத்தில் கூலி வேலைச் செய்து பிழைப்பை ஓட்டும் ஒரு பாவப்பட்ட கூலி ஏழை சந்திராதான் அந்த தாய். 45 வயதான இந்த தாய்க்கு 16 வயதில் ஒரு மகன்.

‘தன் மகன் ஒரு திருடன்’ என்று கேள்விப்பட்டவுடன் தூக்கு மாட்டிக்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அந்த உத்தமி. அந்தத் தாய் செய்த தவறு ஒன்றே ஒன்று தான். கூலி வேலை செய்து சம்பாதித்த அற்பத் தொகையில் தன் மகனை 11ஆம் வகுப்பு வரை படிக்க வைக்கத்தான் முடிந்தது. வயிறார அவனுக்கு இரண்டு வேளை சோறு போட முடியவில்லை. வாழ வேண்டிய வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த அந்த அனாதைத் தாயால் உழைக்;க முடிந்தது அவ்வளவுதான்.

அவளது மகன் திருடியது வேறு எந்த அபூர்வமானப் பொருளையும் அல்ல. கேவலம் ஒத்த ரூபாய் புழுத்த அரிசி சோத்தைத்தான். சோத்தைத் திருடித் தின்ற இந்தக் கொடுமையை அமெரிக்கா நுழைந்து குதறிய சோமாலியாவில் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அவளுடைய 16 வயதுடைய மாணவன் இளவரசன், அடுத்த வீட்டில் சோத்தைத் திருடித் தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். என்னென்ன கற்பனைகளோடு அவனுடைய அப்பாவி பெற்றோர்கள் அவனுக்கு ‘இளவரசன்’ என்று பெயர் வைத்தார்களோ…. பாவம் சோத்துத் ‘தரித்திரம்’ அவனை விடாது விரட்டியது.

அவனுக்கு சொந்த பந்தங்கள் இருந்தும் அந்தப் பாலகனின் பசியால் வாடிய முகத்தைப் பார்த்தும் கூட ஒருவாய் சோறு போட யாரும் முன் வரவில்லை. அடுத்தவர் சாப்பிடும் போது தெரு நாய் பார்ப்பது போல வாயையும், கையையும் பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி, இறுதியாக முடிவெடுத்தான், திருடித்தின்றாவது பசியாற்றுவதென்று. ஒருநாள்…. இரண்டு நாள்… அடுத்த நாளென்று வெற்றியின் ஊடாக ‘திருட்டுத் தொழில்’ தொடர்ந்தது.

‘பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’- என்ற பழமொழி உண்மையாயிற்று. எச்சில் கையோடு கைது செய்தது சேந்தமங்கலம் போலீசு. சுற்றி வளைத்துப் பிடித்துத் தந்தது சோத்துக்கு சொந்தக்காரர் கூட அல்ல, அக்கம் பக்கத்து வீட்டு ‘அரிச்சந்திரர்கள்’ தான். வெறும் சோத்தைத் திருடினான் என்றால் வழக்கு போட முடியாது என்று கருதிக்கூட ‘நகையைத் திருடி விட்டான்’ என்று பிடித்துக் கொடுத்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது. தனது வயதையொத்த பணக்கார குலக் கொழுந்துகள் பள்ளிக்குச் செல்லும் சொகுசுக்காரைத்; திருட அவன் துணியவில்லை. விதவிதமான துணிமணிகளைக் கண்டு அதைத் திருடி மினுக்கிக்கொள்ளலாம் என்று அவன் எண்ணியதில்லை.

உணவுக்கு கையேந்த வேண்டுமா, வாளேந்த வேண்டுமா?

பல இளைஞர்கள் தமது காதல் ஜோடிகளுடன் கைகோர்த்துச் செல்வதைக்கண்டு தானும் அப்படி இருக்கலாமென்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை. உணவு விடுதிகளில் விதவிதமாக உண்பவர்களைப் பார்த்து வயிற்றொpச்சல் அடைந்ததில்லை. அதை ஈடுசெய்ய உமிழ்நீரைத்தான் விழுங்கிக் கொண்டான். இறுதியில் அவனால் சோத்தைத் தான் திருட முடிந்தது. எந்தப் பொருளைத் திருடுவது என்பதைத்கூட வர்க்கம் தானே தீர்மானிக்கிறது.

இந்தச் சமூக விரோத பெருங்குற்றத்திற்கு ‘யார் காரணம்?! அவனா… இல்லை அவனையும், அம்மாவையும் அனாதையாக விட்டு விட்டுச் செத்துப் போனாரே….அவனுடைய அப்பா, அவரா?! இல்லை, பச்சப்புள்ளையைப் பார்க்க வைத்துத் தின்றார்களே அவனுடைய சொந்த பந்தங்கள்.. அவர்களா?! இல்லை…’எப்படியாவது சாந்துச்சட்டி சுமந்து தன் மகனை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சா…. ஒரு நல்ல வேலை கெடச்சி, மகன் கஞ்சி குடிச்சி பொழச்சிக்குவான்’ என்று அந்தக் கனவிலேயே உடைந்து போன உடலோடும், வாழ்க்கையோடும் சித்தாள் வேலைக்குப் போய் 11-ஆம் வகுப்பு வரைப் படிக்க வைத்தாளே, அந்த மானமுள்ளத் தாயின் தவறா?!’ இப்படித்தானே நீங்களும் யோசிப்பீர்கள்?

நியாய விலைக் கடைகளில் கலைஞர் சிரிக்கிறார். “ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி”! மகிழ்ச்சி. அந்த ஒத்த ரூபாய் அரிசிகூட கிடைக்காமல் ஏன் அந்த ‘இளவரசன்’ சோத்தைத் திருடினான்? இதற்கு ‘நியாயமாக’ பதில் சொல்ல கலைஞரால் முடியுமா?! இல்லை… பூச்சியும், எலியும் தின்றால் கூட அந்த அரிசியை ஏழைகளுக்குத் தரமாட்டேனென்று அடம் பிடிக்கிறாரே… பிரதமர்… அவர் பதில் சொல்வாரா?! கலைஞர் வேண்டுமானால் ‘தம்பிக்கு கடிதம்’ எழுதி தப்பித்துக் கொள்ளலாம். இந்தக் கொடுமைக்கு அவரது குடும்பமே ஒன்று சேர்ந்தால் கூட பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை கடந்த நவம்பர் 17ஆம் தேதி தன் பேரன் துரை தயாநிதிக்கு நடந்த திருமணத்தில் ரேசன் அரிசி சோத்தை வேகவத்து விருந்து போட்டிருந்தால், இதற்கு பதில் சொல்லத் தகுதியிருந்திருக்கும் கலைஞருக்கு. ஆனால் ‘ஊருக்குத்தான் ஒத்த ரூபாய் அரிசி’!

சின்ன வயதிலேயே தகப்பனை எடுத்து விழுங்கிவிட்டு, வீட்டுக்காரர்கள் வந்து விடுவார்களோ என்ற பதற்றத்தில் கவளம், கவளமாக திருட்டுச் சோத்தை கண்ணில் நீர்வர விழுங்கி விட்டு, கடைசியில் ஒரே ஆதராவாக இருந்த தாயையும் எடுத்து விழுங்கி விட்டு, இப்போது சேலம் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான் இளவரசன்.

சட்டம் தன் கடமையைச் செய்கிறது. இருக்கட்டும், நல்லது.

சோறு திருடினான் என்பதைக்கூட அந்த தாயால் தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அழுத்த தன் உயிரை துறந்திருக்கிறாள். ஆனால் இந்த மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ? ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு ஒத்தை ரூபா அரிச போன்றது அல்ல. ஒன்னே முக்கால் இலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று கூட அந்த ஏழைகள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த பூஜியங்களை அறிந்தவர்களுக்கும், அபகரித்தவர்களுக்கும் மான உணர்ச்சி கிஞ்சித்தும் இல்லையா? கலைஞர் குடும்பம், டாட குடும்பம், மந்திரிகள், அதிகாரிகள், முதலாளிகள் எங்கும் யாராவது ஒருவர் கூட தற்கொலை செய்ய வில்லையே? சோறு திருடுவதுதான் மானக்குறைவா, இலட்சம் கோடிகளில் திருடினால் அது பெருமையா?

காமன்வெல்த் போட்டிக்கு ஏற்பாடு செய்ததில், கேவலம் மலம் துடைக்கும் பேப்பரில்கூட கமிஷன் வச்சிகாசு திருடினாரே காங்கிராஸ் கல்மாடி… அவருடைய வீட்டுப் பெண்கள் யாராவது ரோசத்தோடு தூக்கு மாட்டிக் கொண்டிருக்கலாமே…. ஏன் செய்யவில்லை? நம்ம நாட்டுல தேசபக்திக்கு மட்டும் குறைச்சலே இல்லை. நடிகர் அர்ஜுனையே விஞ்சிவிடுவார்கள். ‘வீரமரணம்’ அடைந்த கார்கில் வீரர்களின் விதவை மனைவிமார்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்ததில் தன்னுடைய மாமியார், மைத்துனி, மைத்துனர் ஆகியோருக்கும் ‘வீட்டு வசதி’ செய்து கொடுத்தாரே… மகாராஷ்டிரா முதல்வர் அசோக்சவான்… அவருடைய களவாணித்தனம் தெரிந்து அவருடைய வீட்டுப் பெண்களோ, ஆண்களோ இல்லை அவரோ ஏன் ஒருவர் கூட ஏன் தூக்கு மாட்டிக் கொள்ளத் துணிய வில்லை!!

இதற்கெல்லாம் மன்மோகனும், சிதம்பரமும் பதில் சொல்வார்களா? பதில் சொல்ல பிரதமருக்கு ஏது நேரம்! 10 ஆயிரம் கோடி செலவு செய்து அம்பானி கட்டியிருக்கிற ‘அன்டிலியா’ வீட்டுக்கு பால்காய்ச்சவே நேரம் போதவில்லை.

ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தன் பிள்ளைகளுக்கு நோகாமல் எடுத்துத் தந்தாரே மதவெறியன் கர்நாடகா முதல்வா; எடியூரப்பா… அவர் வீட்டில் யாராவது தேசப்பற்றோடு ஏன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை?!

தோல்வி மனப்பான்மையால் தற்கொலை செய்துக்கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை என்பது வேறு விசயம். ஆனால் அந்தத் தாயின் தன்மான உணர்ச்சி சுயமாpயாதையுள்ள அனைவரையும் தலைகுனிய வைக்கிறது. ஆனால் நாட்டையே திருடும், கூட்டிக் கொடுக்கும் திருடர்கள் தலை நிமிர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்களே… அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா?!

முதலாளிகள் போடும் எச்சில் காசில் வாழும் இந்த மானங்கெட்ட அரசும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் இனிமேலும் நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றுவார்கள் என்று உங்களால் நம்ப முடிகிறதா?! ஒன்றே ஒன்றுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். ஓன்று அவர்களாகவே தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும். அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால் எல்லாரும் சொரணை கெட்டவர்கள். நாம்தான் அவர்களை தூக்கிலேற்ற வேண்டும்

மானமுள்ள எம் உழைப்பாளி மக்களே உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள். வறுமைக்கும், தரித்திரத்திற்கும் காரணமானவர்களின் உயிரை எடுங்கள். இந்தத் தினவெடுத்த முதலாளித்துவத்திற்கு ஒரு உணவுக் கலகம் விடை சொல்லட்டும். அந்த உணவுக் கலகம் என்பது புரட்சிதான் என்பதற்கு முன்னோட்டமாக இருக்கட்டும்.

ம.மரியதாஸ்

Wednesday, January 5, 2011

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்…! எதிர்காலம் இதைச் சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டுகோள்!தமிழினத்தின் தன்மானத்திற்குச் சாவாலாகத் – தமிழ்த்திரைப்படத் துறையினரின் வேண்டுகோள் புறக்கணித்து,
ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்துக் கொடூரமான இனஅழிப்பினை முனைப்போடு செய்து முடித்த கொலைகாரன் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசத்தின் முன் நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மகிழ்வு கொண்டாடிய ஸ்ரீலங்கா இராணுவத்தினரைக் கு~pப்படுத்தவும், தமிழின அழிப்புக்கானசாட்சியங்களை மூடிமறைத்து…..

உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசின் அனைத்துக்குற்றங்களையும் மூடிமறைக்கவும், உலகின் பல நாடுகள் போட்டிபோட்டு தங்கள் நாடுகளில் நடாத்துமாறு வேண்டுகோள் விடுத்த இந்திய சினிமாநட்சத்திரங்களின் பரிசளிப்பு விழாவில் பங்குபற்றியதோடு ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் விசேட விருந்தினையும் ஏற்றுக்கொண்டு அவரின் மனைவி சிராந்தியுடன் சீரான குடும்பநட்பெனும் பாணியில் குதூகலமாகப் பவனிவந்து உலகநாடுகளின் கவனத்தைத் திசைதிருப்பி, ஸ்ரீலங்கா பாசிச கொலைகார அரசினை குற்றமற்றவர்களாக நிரூபிக்க முயன்ற நடிகை அசின், உலகத் தமிழினத்தின் இதயத்தில் ரணவலியை உண்டாக்கிய செயற்பாட்டை ஆண்டாண்டு காலத்திற்கும் மறக்க முடியுமா?

சிந்தியுங்கள் உலகத் தமிழினமே! செயற்படுங்கள்!
கொலைகாரன் ராஜபக்சேக்கு கொக்குப்பிடி நட்புக் கொண்டாடிய அசின் நடித்த காவலன் படத்தைப் புறக்கணிப்போம்!
உலகத்தமிழர்கள் உணவைத்தான் உட்கொள்ளுகின்றோம் வேறு எதையுமல்ல!
உணர்த்த வேண்டும் இதனை – நடிகை அசினுக்கு. உரிய காலமும், முறையும் இதுதான்!

முள்ளிவாய்க்கால் நிகழ்வானது, ஈழத்தமிழினத்தின் போராட்ட வரலாற்றின் ஒரு அத்தியாயம்தான். முடிவல்ல. எம் போராட்டம் என்னும் பெருவிருட்சம் பலகிளைகளையும், பல வேர்ககளையும் விழுதுகளையும் கொண்டது என்பதனை உலகிற்கும், எதிரிக்கும் புரிய வைக்கும் காலத்திற்கும், இடத்தினை நோக்கியும் நாம் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். இப்போதுதான் நாம் மிகவும் கவனமாகவும், நிதானமாகவும் செயற்படவேண்டியவர்களாகவும். நம் முன்னே நிறைந்து காணப்படும் வரலாற்றுக் கடமைகளை பாரபட்சமின்றிக் கையிலெடுத்துக்கொள்வோம். சிந்தாமல் சிதறாமல் நிதானமாகவும், பதட்டமில்லாமலும் செயற்படுத்துவோம்.

* உடலாலும், உள்ளத்;தாலும் காயமுற்று ரணவலியோடு துடித்துக்கொண்டிருக்கும் எம் தொப்புள்கொடி உறவுகளின் வலியைப்போக்க
* பிளவுபட்டுக்கிடக்கும் நம் உறவுகளிடையே ஏற்பட்டுள்ள உடன்பாடுகளுக் கிடையிலான முரண்பாடுகளைக் களைந்து ஒற்றுமை பேணும் பணியை முன்னெடுத்தல்
* திரிபடைந்து கிடக்கும் சர்வதேசச் சமூகத்தின் முன்னால் எமது உண்மையான சுதந்திர இறையாண்மையின் முக்கியத்துவத்தை புரியவைப்பதுடன், அவர்களின் நட்பையும் ஐக்கியத்தையும் பேணும் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்,
* எமது போராட்ட வடிவங்களின் பல்வேறு கோணங்களையும் துல்லியமாகச் சர்வதேசத் தமிழ் உறவுகளிடம் சென்றடைவதோடு அவர்களையும் அதனுடன் ஐக்கியமடையச் செய்யும்வகையில் எமது கலை, கலாச்சாரம், ஊடகவியல் உருவாக்கவியல் என்பவற்றைச் சிறப்பான முறையில் செயற்பட வைத்தல்.

மேற்கூறியவாறு பல்வேறு வழிவகைகளையும், உத்திகளையும் உள்ளடக்கியவாறு எமது போராட்ட வடிவங்களைச் சிறப்புறச் செயற்படுத்திய நிகழ்வுகளில் முன்னிலை வகிப்பவை பிரித்தானியாவில் எமது உறவுகள் கடந்தமாதம் ராஜபக்சேயின் வரவை எதிர்த்துக்குரல் கொடுத்து திருப்பி அனுப்பச் செய்தது, அதற்கடுத்தாற்போல், கடந்தவாரம் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இடதுசாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மாநாட்டில் சிறப்புப் பிரதிநிதிகள் என ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மற்றும் அவரன் சீமந்த புத்ததிரன் நாமல் சகிதமாய் அரசமட்;ட உயர்குழுவினருடன் தென்னாபிரிக்கா வந்திருந்த அமைச்சர் எஸ்.பி.திசநாயக்காவை விழாவில் உரையாற்றமுடியாயாது தடுக்கப்பட்ட நிகழ்வு.

இவை எல்லாம் வெறும் சம்பவங்கள் அல்ல. போராட்ட வரலாற்றின் சரித்திர வலாற்றுப் பதிவுகள். அதே போன்று தான் விடயம் சிறிதாக இருந்தாலும், விசனம் பெரிதாக வெளிப்பத்தப்பட்டதுதான் தமிழகத்து தமிழ்த் திரைப்படத்றையினனரின் வேண்டுகோளைப் புறக்கணித்து விட்டு ஸ்ரீலங்கா அரசிற்கு உலக அரங்கில் நல்லபெயர் வாங்கிக் கொடுக்க நடிகை அசின் முன்னின்று காட்டி வழிநடத்திய ஜஃபா சர்சதேச திரைப்பட விழா.

சிங்களத்திரையுலகின் முன்னணி நட்சத்திரமான மாலினி பொன்சேகா உட்பட இலங்கையின் பல முன்னணி நட்சத்திரங்கள்கூட புறக்கணித்த ஜஃபா சர்சதேச திரைப்பட விழாவில் இந்தியத் திரையுலகின் பல முன்னணி முன்னணி நட்சத்திரங்களால் புறக்கணிக்கப்பட்ட போதிலும், இந்திய முன்னணி நட்சத்திமாகத் தன்னைத்ததானே நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ளும் சில சாதாரண இந்தித் திரைப்பட நட்சத்திரங்களுடன் தமிழ்திரையுலகத்தினால் வளர்க்கப்பட்ட நடிகை அசினும் கலந்துகொண்டமை இந்தியத் திரைப்பட உலகத்திற்கே பெரும் அவமானமாக சர்வதேசத்தின் கணிப்பிற்குள்ளனதாக பதிவிற்குள்ளாகியிருப்பது காலங்கள் எத்தனை சென்றாலும் கழித்தெழுத முடியாத களங்கப்பட்ட பதிவிற்கு உள்ளகியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்

அத்தகைய நிலையில் அசின் பல லட்சங்களை ஊதியமாகப்பெற்று நடித்து வெளிவரவிருக்கும் படம்தான் காவலன். இந்தப் படமானது உலகத் தமிழினத்திற்கு தமிழ்மக்களிடையே திரையிடப்படுமானால் அது உலகத்தமிழினத்திற்கு ஒரு சவால் மட்டுமல்ல சாபக்கேடான விடயமுமாகும். எனவே அன்பான உலகத் தமிழ் உறவுகளே! தமிழ்த் திரைப்பட வெளியீட்டாளர்களே! நாமெல்லாம் ஒருதாய் மக்கள். இனமானம், தன்மானம் என்பது நம் எல்லலோரதும் பொதுச் சொத்து. அதைப் பாதுகாப்பது எம் தலையாய கடமை. பிரத்தானிய, தென்னாபிரிக்க நிகழ்வுகள் எமக்களித்த மாபெரும் வெற்றியைப் போன்று காவலன் திரைப்படத்தைப் புறக்கணிக்கும் செயற்பாட்டினையும் முன்னெடுக்கும் பணியில் நமது கரங்களை இறுகப்பற்றிக்கொள்ளுவோம் என்று தமிழன்னையின் பெயரால் அன்புடனும் பாசத்துடனும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

ஊடகவியலாளர்களே! தயவுசெய்து இந்தச் செய்தியை உங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு உதவுங்கள்.
வீழ்வது நாமாக இருந்தாலும்
வாழ்வது தமிழாகட்டும்.

Tuesday, January 4, 2011

மீனகம் தளம்

மீனகம் தளம்

பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே!

பங்குச் சந்தையின் புள்ளிகளைப் பதற்றத்துடன் அண்ணாந்து உற்று நோக்கும் பங்குதாரர்கள் போல, பங்குச்சதையின் திருப்பலியைக் கேட்க மண்டியிட்டு அண்ணாந்து பரிதாபமாக இறைஞ்சும் அப்பாவி ஏசுவின் குழந்தைகள்.

‘பங்குத்தந்தை’ – குழப்பம் வேண்டாம். ஊரை அடிச்சிப் பங்குப் போட்டுக் கொள்வது, அவ்வளவுதான். ஆடு, மாடு திருடு போயிட்டால் ஊர் நாட்டில் சொல்வார்கள்… ‘எவனோ பங்கு போட்டுத் தின்னுட்டான் பாவி’ என்று. பாவம், மந்தைகளைக் காப்பாற்ற மீண்டும் ஒருமுறை மீட்பர் உயிர்த்தெழுவாரா?!

பங்குகளை பிரித்துக்கொள்வதில் சாதிகளைப் போலவே படிநிலைகள் உண்டு. அதாவது பெரிய பங்கு, சிறிய பங்கு, மீடியம் பங்கு என்று. திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரையில் இது ஒரு பெரிய மறை மாவட்டம். எழுபது, எண்பது பங்குகள் இருப்பதாக கிருத்துவ வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன. இருக்கட்டும், பரவாயில்லை. இதற்கெல்லாம் பாஸ் யார்ர்ர்…ரான்னா ‘சேசு சபை’ என்கிற ‘அந்தப்புற’ குருக்கள் சபைதான். அந்த அந்தப்புறத்திலொரு மகராஜன்தான் நம்மூரு சாமி யாரு? ராஜரத்தினம்.

இவரை Father என்றும் அழைப்பார்கள். ‘சாமியாரா? Father ? ரெண்டுல எதாவது ஒண்ணு சொல்லுங்க’ என்று கேட்காதீர்கள். ரெண்டுமே ஒண்ணுதான் பிரதர்…! அதாவது Father ரா குடித்தனம் பண்ணி, பிறகு சாமியாரா ஆனவங்க பலபேர். ஆனா சாமியாரே Father ஆகி புதுக்குடித்தனம் நடத்துறது இப்பவெல்லாம் ஃபேஷன்.

ஸ்தோத்திரம் ஆண்டவரே!

இதை பிளாரன்ஸ் மேரியிடம் கேட்டால்… ‘பாஸ்டேட்’ என்கிறார் ஆத்திரத்துடன். சரி அத்த விடுங்க சார்… பங்குக்கு வருவோம். ரொம்ப கொழப்பம் வேண்டாம்…. சிறிய பங்கு எம்.எல்.ஏ மாதிரி, பெரிய பங்கு எம்.பி மாதிரி. ஏதோ தன்னால முடிஞ்ச அளவு கர்த்தரிடம் மன்றாடிப் பங்குப் பெறுபவர் சிறிய பங்குத்தந்தை. முழங்கை வரையிலும் கையை விட்டு, கர்த்தரிடம் முழங்காலிட்டு அள்ளிக் கொள்பவர்தான் பெரிய பங்குத் தந்தை; அவ்வளவுதான் மேட்டர்.

அதாவது ஏசு அப்பத்தைப் பங்கிட்ட மாதிரி இப்படித்தான் சிறுசும், பெருசும் சுமார் ‘ச்சேர்’ பண்ணிக்கிறாங்க. பங்குன்னா… ஏதோ நம்மூர் திருவிழாவுல ஊருக்கே ரெண்டு கெடா வெட்டி, வீட்டுக்கு பிடி கறிய எடுத்துக்கிட்டுப்போற சாதாரண விவகாரமில்ல இந்தப் பங்கு. உண்டியல் காசு, கண்ணுக்கெட்டாத தூரம் நெல்வயல், நூறு, இருநூறு ஏக்கர்ல தென்னந்தோப்பு, வாழத்தோப்பு, மாந்தோப்பு, அதன்பிறகு வரி வசூலிக்க கல்யாணம், கருமாதி, ஞானஸ்ஞானம், ஈஸ்டர், கிருஸ்துமஸ், இதுபோதாம ‘புது நன்மை’னின்று புடுங்கிறதெல்லாம் பங்குத் தந்தையின் நன்மைக்கே.

இப்படியாக குவிகிறது தந்தையின் பங்கு. இந்தப் பங்குச் சந்தையில் மட்டும் புள்ளிகள் எப்பவும் ஏறுமுகத்திலேதான் இருக்கும். இதுல இன்னொன்னு என்னான்னா… மகாஜன சங்கம், தேவர் பேரவை மாதிரி ‘பங்குப்பேரவை’யின்னு ஒன்று உண்டு. அதாவது ஃபாதர் சங்கம், மதர் சங்கம், பிரதர் சங்கமெல்லாம் போதாதாம். மாதர் சங்கம், இளைஞர் சங்கம், பாலர் சங்கம், சிறுவர் மன்றம், சிறுவர் பாராளுமன்றம்… இப்படியாக பட்டியல் நீள்கிறது. கிருத்துவ வட்டாரங்களை தன் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளவே இந்தச் சங்கங்கள். சொல்லப்போனால் வெள்ளைக்காரன் காலத்து ஏயத் வாரி, பகல் வாரி மாதிரிதான் இவைகள்.

இந்த கலைகளுக்கு ஒரே ஒரு கண்டிஷன். ஒரு கன்னத்தில் அடித்தால்… மறு கன்னத்தைக் காட்டாமல், எவனாவது ரோசப்பட்டு திருப்பி அடித்தவன் கன்னத்தில் அடித்தால், அவன் பேரவைகளில் அங்கம் வகிக்க முடியாது.

மேற்கண்ட நிர்வாக முறைகளைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்ல ஒரு தலைமை அலுவலகம் வேண்டுமல்லவா…? அதுதான் மாயத்தீவு தூய வளனார் கல்லூரி, திருச்சி – 02. அந்த சாம்ராஜ்ஜிய ராஜாதான் ஸாட்சாத் Father ராஜரத்தினம், நிற்க.

”தனக்கு சவக்குழியைத் தோண்ட தானே அதற்கு ஆட்களையும் தயார் செய்கிறது முதலாளித்துவம்” – என்று ஆசான் கார்ல் மார்க்ஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது. அது இந்த பாதிரிக்கு எப்படியோ கச்சிதமாக பொருந்துது பாருங்க…!

சில பல வருஷங்களாக கட்டாயப்படுத்தி ஒரு கன்னியாஸ்திரிய கெடுத்திருக்கிறாரு இந்த ராஜரத்தினம். பிளாரன்ஸ் மேரி கேட்காத போதே முன் வந்து பல பரிசு பொருட்களை காஸ்ட்லியாக வாங்கித் தந்திருக்காரு இந்த ராஜரத்தினம். ‘எதையோ வாங்கித் தந்து விட்டுப் போகட்டும் எழவ எடுக்க. அந்த செல்ஃபோன் எதுக்கு? நம்ம Father வாங்கித் தரணும்? இப்ப பாத்தீங்களா, குதிர குப்புற தள்ளினதுமில்லாம, குழியும் பறிக்குதில்ல’ என்று சக குருக்கள் கொழப்புறாங்க.

எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு. ‘கிணத்த சுத்தி விளையாடுகிற புள்ளைக்கு கிணத்துலதான் சாவு’ என்று. இப்போது பிளாரன்ஸ் மேரி கொடுத்த டைரிய நம்ம ஏட்டம்மாவே படிச்சிட்டு முகஞ்சுழிக்குது. ‘இது ராஜரத்தினத்திற்கு தேவைதானா? சரி! அத்த உடுங்க பிரதர், எதஎத பங்கு போடறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா?’ என்று சாதாரண ஏழைக் கிருத்துவன் கேட்பது நியாயம்தான். என்ன பண்றது?! பங்குத் தகராறுன்னா… கொஞ்சம் அப்பிடி, இப்பிடி இருக்கத்தான் செய்யும். தெரியாமலா ‘சர்ச்ல இதெல்லாம் சகஜமப்பா…ன்னு’ மதுரை சேசு சபை தலைவர் தேவதாசு சொன்னாரு. அவருக்கு இருக்கிற ‘வெத்தலப்பெட்டி’ அனுபவம் நமக்கெல்லாம் வருமா?

வேளைக்கு மூணு வகை கறிய வறுத்துப்போட்டு, சாம்பல் மாறாத சிம்லா ஆப்பிளையும், ஊட்டி ஆரஞ்சையும் வயிறுமுட்ட திங்க வச்சு, பூசைக்கு பூசை ஒயின்ன ஊத்திவுட்டு, கரந்த பாலுல துளி தண்ணி கலக்காம சுரண்ட காய்ச்சி எடுத்து, அதுல பிஸ்தா பருப்பைக் கொட்டி மெதக்கவுட்டு, அதை இதமான சூட்டுல கழுத்து வரைக்கும் முங்க வச்சு, மினிஸ்டர் காட்டன்ல அங்கி தச்சி போட்டுவுட்டு, அதுக்கு நாடாவையும் கோத்துக்குடுத்து, இலவம்பஞ்சு மெத்தையும் போட்டுவுட்டு, படுக்கப்போற நேரம் பாத்து… நீ தனியாகத்தான் படுக்கணுமின்னா… எந்த மழுமட்டையாவது கேக்குமா?! கொஞ்சமாவது இந்த சேசு சபைக்கு ‘புத்தி வேண்டாமா?! இல்ல… சேசு சபையில இருக்கிற முக்கால்வாசி குருக்கள் அப்படியா வளர்ந்தவங்க?

சினிமாவுல புது மாப்பிள்ளைய First Nightக்கு ‘ஏற்பாடு’ பண்ணி அனுப்புறத நாம பார்த்திருக்கிறோம். அதுவும் அஞ்சு நிமிசத்துல அந்த காட்சி முடிஞ்சிறும். ஆனால் வருசம் முச்சூடும் பல Fatherகள் மந்தைகளின் வரிப்பணத்தில் தங்களை இப்படித்தானே ‘தயார்’ செய்துக்கொள்கிறார்கள். அப்புறமென்ன… கன்னிமேரிக்கு தொண்டூழியம் செய்யப்போயி… கன்னித்தன்மை இழந்தது தானே மிச்சம் பிளாரன்ஸ் மேரிகளுக்கு.

தான் கற்பம் அடைந்ததைப் பற்றி ராஜரத்தினத்திடம் பிளாரன்ஸ் மேரி சொன்னபோது… ‘வெரி சிம்பிள் கருவ கலைச்சிடு’ என்று தமிழ் சினிமா வில்லன் மாதிரி சொல்லிவிட்டு புனித லூர்து அன்னை ஆலயத்தின் உச்சியில் இருக்கிற சிலுவை அதிர்ந்த மாதிரி எகத்தாளமாக சிரித்திருக்கிறார் Father Mr. ராஜரத்தினம். என்ன செய்வது Fatherரச் சொல்லி குத்தமில்ல. மந்தைகளைச் சொல்லணும். ‘Father ஸ்தோத்திரம்… Father ஸ்தோத்திரம்’னு நீயே ‘அப்பா’ ஸ்தானத்தைக் குடுத்துட்டு, அப்புறம் Motherஐ வச்சிக்கிறது தப்புன்னா… எந்த ரத்தினம் கேக்கும். இல்ல சேசு சபைதான் இதை காதிலே போட்டுக்குமா?! கேட்காது.

ஏனென்றால் அந்தப் புள்ளியில்தான் தூயவளனார் நிறுவன சாம்ராஜ்ஜியத்தின் ஒளிவட்டம் பாதுகாக்கப்படுகிறது.

ஓ… மந்தைகளே! அப்பத்தை ஏசுவின் சதையென்றும், ஒயினை ஏசுவின் ரத்தமென்னும் பாதிரிகள் உங்களுக்கு தந்துவிட்டு, ஆனால் அவர்களோ நீங்களெல்லாம் தாயாக மதிக்கின்ற கன்னியாஸ்திரிகள் சதையையும், ரத்தத்தையும், கற்பையுமல்லவா உறிஞ்சுகிறார்கள். ‘நம்ம சாமியார்’ என்று நீங்கள் இன்று மௌனம் சாதிக்கலாம். பிளாரன்ஸ் மேரி இடத்தில் நம்முடைய அக்கா, தங்கை இருந்திருந்தால்… என்ன செய்திருப்பீர்கள்?! மறு கன்னத்தைக் காட்டியிருப்பீர்களா?! சொல்லுங்கள்.

ஒரு துறவிக்கு மிதமிஞ்சி பூர்த்தி செய்யப்பட்ட மற்ற எல்லா சுகபோகங்களும் சேர்ந்துதான் பாலியல் என்கிற காமத்தைக் கோருகின்றன. துறவி என்று நம்பி சாந்தமாக நீங்கள் ஜெபிக்கும் போதெல்லாம் பாதிரியின் எண்ணம் விஸ்வாமித்திரன் ரூபத்தில் வந்து எள்ளி நகையாடுகிறது. துறவு என்கிற அந்த போலியான உண்ணாவிரத முறையிலேயே ‘பழச்சாரு’ என்கிற அந்த முடிவும் அடங்கியுள்ளதை நீங்கள் பார்க்க மறுப்பதன் விளைவுதான் ராஜரத்தினங்கள்.

குடும்பம் இருப்பவனுக்கு ஒரு சாப்பாடு. சத்திரத்தில் இருப்பவனுக்கு ‘பல’ சாப்பாடு. – இந்த இரண்டாவது வகையறாதானே பாதிரிகளும், சாமியார்களும். ஒரு மனிதனாக பிறந்தவனுக்கு பாலியல் தேவையென்பது ஒரு சாதாரண எதார்த்தத் தேவைதான். இதில் ஆச்சரியத்திற்கோ, அதிசயத்திற்கோ ஒன்றும் இடமில்லை. ஆனால் அதைமூடி மறைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றி, மடமையில் ஆழ்த்தி, நம்பவைத்து கருவறுக்கின்ற காரியத்திற்கு ‘துறவு’ என்று ஒளிவட்டத்திற்குள் சல்லாபம் புரியும் இந்த கேடுகெட்ட கிரிமினல் கும்பலை, கும்மாளம் போடவிட்டு இன்னும் எத்தனை காலம் வேடிக்கைப் பார்ப்பீர்?!

இல்லை. இதற்கெல்லாம் எந்த சேசு சபை வந்து பதில் சொல்லப்போகிறது. 16வது அல்ல 100வது பெனடிக்ட் வந்தாலும் உங்களுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை. மாறாக கர்த்தர்மேல் பாரத்தைப் போடச் சொன்னார்கள். இருந்தே இருக்கிறது தவறாமல் எல்லாருக்கும் மறுகன்னம்.

இப்படியே தான் நாட்டின் ஒரு பெருங்கூட்டத்தை பக்தி என்கிற ஒரு கஞ்சா போதையில் வைத்திருக்கின்றன மதங்கள். ‘மதம் என்பது அபினி போன்றது’ என்று இந்த அவலத்தைத்தான் கார்ல் மார்க்ஸ் விளக்கினார்.

இனி கன்னியாஸ்திரிகளை கற்பழிக்க எங்கோ வெளியிலிருந்து சோத்து மூட்டை கட்டிக்கொண்டு ஒரு காமுகன் வரத்தேவையில்லை. அத்தகைய காமுகர்கள் அங்கிக்குள்ளேயே உலாவுகிறார்கள். சங்கராச்சாரி, பிரேமானந்தா, நித்தியானந்த வரிசையில் மற்றவர்களை தள்ளிவிட்டு நிற்கிறார்கள் பாதிரிகள். காமத்திற்கேது மத பேதங்கள்.

”இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். தேவனே! இவர்களை மன்னியும்” என்று தன்னை சிலுவையில் அறைந்தவர்களை, தான் சாகும் தருவாயில் கூட, ஏசுவின் மன்னிக்கின்ற பெருந்தன்மையை குறிக்கின்ற புகழ்பெற்ற விவிலியத்தின் வசனம் இது. இதை அப்படியே ராஜரத்தினத்திற்குப் பொருந்தினால், அவர் ஒருமுறை அல்ல, நூறு முறை மன்னிக்கப்படுவார். இந்தப் பாவ மன்னிப்புத்தான் அடுத்தடுத்த பொறுக்கித்தனத்திற்கு அடியெடுத்துக் கொடுக்கிறது. எனவே பாவ மன்னிப்புகள் இருக்கும்வரை பாவத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் ‘கர்த்தர் ஆயிரம்முறை பாவமன்னிப்பு வழங்கினாலும், நான் விடப்போவதில்லை’ சொல்லுகிறார் பிளாரன்ஸ்மேரி. வாழ்த்துக்கள், அப்படியே செய்யக் கடவதாக…!

பாதிரிகளின் இந்த ஆபாசத்தையும், ஆணாதிக்கத்தையும் விரும்பாதவர்கள் ஒன்று தங்களின் கைகளில் கனக்கும் ‘புதிய, பழைய ஏற்பாடுகளை’ வீசியெறிய வேண்டும். அல்லது எல்லாம் கர்த்தருடைய கிருபை’ என்று சிலுவையைப் போட்டுக் கொண்டு மழுங்கிக் கிடக்க வேண்டும். ஒரு பாதிரியார் ‘ஒரு தேடப்படும் கிரிமினல் குற்றவாளி’ என்று ஆனப்பிறகும், ‘தினமும் போலீஸ் ஸ்டேசனில் காலையும், மாலையும் கையெழுத்திடவேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டபின்பும், நமக்கு ரோசம் வருவதில்லை. பதிலாக உடனிருந்த பெண்ணின்மீது பழி சுமத்த மட்டும் உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்க முடியும். ஆண்களாக பிறந்த ஒவ்வொருவரும் தலைகுனிய வேண்டிய விசயமில்லையா இது.

கருவை சுமந்த கன்னியாஸ்திரியின் சீருடையை உருவி எரியும் இந்த சேசு சபைக்கு, அதற்கு காரணமான ராஜரத்தினத்தின் அங்கியை கழட்ட, ஏன் துப்பில்லை? ஏனென்றால் அப்படி ஒன்று நடந்து விட்டால், அந்த சேசு சபையே அம்மணமாக நிற்க வேண்டி வரும் என்று அந்த சபைக்கே தெரியும். ‘இது மேல் சாதி சாமியார்களின் சதி’ என்று ராஜரத்தினம் சொல்வது உண்மையானால் அந்த சாமியார்களின் பெயர் பட்டியலை வெளியிட முடியுமா?! முடியாது. ஏனென்றால் எல்லா சாதி தில்லுமுல்லுகளும் சேர்ந்துதான் கூட்டாஞ்சோறு தின்னுகிறார்கள். மாட்டிக்கொண்ட பிறகு ‘நானில்லை, அவனில்லை’ என்று லாவணிப்பாடுகிறார்கள்.

திருடியதில் சமமான பங்கும், சரியான எடையும் இருக்கின்றவரை இவர்களுக்குள் பிரச்சனை வராது, என்பதுதான் திருடர்களின் பெருந்தன்மையின் எல்லை. எனவேதான் முறை தவறி திருடும் இவர்கள் முறையான பங்கை எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பில் மண்விழும்போதுதான் ஆளுக்காளு போட்டுக்கொடுப்பதும் அடியாள் சேர்ப்பதும் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட பிளாரன்ஸ் மேரி பக்கம் நிற்க ஒரே ஒரு சேசு சபை குருவுக்கும் ஆண்மை கிடையாது. மன்னிக்கவும்… யோக்கியதை கிடையாது.

முதலாளிகளால் ஓசோன் படலம் ஓட்டை

பாதிரிகளால் தூயவளனார் சாம்ராஜ்ஜிய குடையில்

சல்லடைகண் ஓட்டை

ஸ்தோத்திரம் ஆண்டவரே!

கர்த்தராகிய ஏசுகிருத்து ராஜரத்தினத்துடன்

இருப்பாராக…!

கா…ம…ன்

____________________________________________________________________

- சா.செல்வராசு, ம.க.இ.க மையக் கலைக்குழு

Sunday, January 2, 2011

2010ன் தகவல் புரட்சி – விக்கிலீக்ஸ்


2007ஆம் ஆண்டில் கருக்கொண்டு, 2008ஆம் ஆண்டில் புயலாக வெளிப்பட்ட வீட்டுக் கடன் சிக்கல் (Sub Prime Crisis) தங்கள் நாட்டின் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் முதல் பங்குச் சந்தை வரை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது கூட, அதனை தாங்கள் கடைபிடித்துவரும் சந்தை பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஒரு எதிர்பாராத அதிர்ச்சியாக எடுத்துக் கொண்ட அமெரிக்க அரசுக்கு, விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் உண்மைகள் அடி வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றால், அதற்குக் காரணம், உலகத்திற்கு அது காட்டிக்கொண்டிருக்கும் தூய்மை முகம், எந்தனை கொடூரமானது என்பதை விக்கிலீக்ஸ் வெளியிட்டுவரும் ஆவணங்கள் வெட்ட வெளிச்சமாக்குவதேயாகும்.

உலகின் மாபெரும் ஆட்சி பீடத்தின் மையமாகக் கருதப்படும் வெள்ளை மாளிகைக்கு அமெரிக்காவின் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அந்தந்த நாடுகளில் இருந்து ‘திரட்டி’ அனுப்பிய இரகசிய அறிக்கைகளை விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிட்டதன் விளைவாக அந்நாட்டின் உண்மையான நட்பு முகத்தின் யோக்கிதை மட்டுமின்றி, தான் பெற்ற இரகசிய விவரங்களின் மீது நேரிடையாக வினையாற்றாமல், அதனை மறைத்து, அந்தந்த நாடுகளின் அரசுகளை மிரட்ட அந்தத் தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை விக்கிலீக்ஸ் வெளியீடுகள் மூலம் அரசியல் உலகம் புரிந்துகொள்ள வைத்துவிட்டது. அதுதான் அமெரிக்காவிற்கு சங்கடம்.

அமெரிக்காவிற்கு எதிரான இரகசிய பரிமாற்ற அறிக்கைகளை மட்டுமே விக்கிலீக்ஸ் வெளியிட்டவில்லை. மாறாக, அது பல நாடுகள் தொடர்புடைய ஆவணங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. ஆயினும் அது பெரும் அளவில் பாதித்தது அமெரிக்காவையே.

இப்போது கூட, உலகமே நாளை பிறக்கப்போகும் 2011 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டுள்ள நிலையில், அமெரிக்க அரசும், பேங்க் ஆஃப் அமெரிக்காவும் விக்கிலீக்ஸ் புத்தாண்டில் வெளியிடப்போகும் ஆவணம் என்னவென்பதை நினைத்து அச்சத்தில் உழன்றுக்கொண்டிருக்கின்றன.

இதற்குக் காரணம், கடந்த திங்கட்கிழமை, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிணைய விடுதலையளித்த பிறகு, டைம்ஸ் ஆஃப் லண்டன் நாளிதழிற்கு பேட்டியளித்த விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ், ஒரு மிகப் பெரிய வங்கியின் நிர்வாகிகள் அனைவரும் விலக வேண்டிய அளவிற்கு முக்கிய தகவல்கள் அடங்கிய ஒரு ஆவணத்தை தான வெளியிடப்போவதாக கூறியதுதான்.

பேங்க் ஆஃப் அமெரிக்கா என்று பெயரை ஜூலியன் அசான்ஞ் கூறவில்லை. ஆனால், அந்த வங்கியின் நிர்வாகிகள் ஜூரத்தில் உறைந்துள்ளார்கள். எது தொடர்பான ஆவணம் அது? என்கிற யோசனையில் வாஷிங்டனில் ஆளுக்கு ஆள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிலை. அவர்கள் இந்த அளவிற்கு அச்சமுற மற்றொரு காரணமும் உள்ளது. அது, 2009ஆம் ஆண்டில் எழுதிய கட்டுரை ஒன்றில், பேங்க் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிர்வாகி ஒருவரின் கணினி அமைப்பின் ஹார்ட் டிரைவ் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அசான்ஞ் கூறியிருந்ததுதான்.

மெர்ரி லின்ஞ் நிதி நிறுவனத்தை கையகப்படுத்தியதில் உள்ள வில்லங்கத்தை விக்கிலீக்ஸ் வெளியிடுமோ என்று மற்றொரு கவலை. இது எல்லாவற்றி்ற்கும் மேலாக அப்படி ஏதேனும் வெளியிடப்பட்டால் அதனால் அமெரிக்காவின் பொருளாதார நிலை என்ன ஆகும் என்ற கவலையும் அமெரிக்க அரசிற்கு ஏற்பட்டுள்ளது.

இப்படி அமெரிக்காவும், அதன் நிறுவனங்களும் திரை மறைவில் நிகழ்த்திய திருவிளையாடல்களின் ஆதாரங்களை வெளியிட்டு, அந்நாட்டு அரசியலில் ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்துவதற்கு என்ன அவசியம் உள்ளது? விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ்-ன் நோக்கமென்ன? என்கிற வினாக்களும் எழுகிறதல்லவா?

அமெரிக்காவின் அழுத்தத்தால் சர்வதேச காவல் துறை தனக்கு எதிராக சிகப்பு அறிக்கை வெளியிட்ட நிலையில் மறைந்து வாழ்ந்துவந்த ஜூலியன் அசான்ஞ்ஞை, நியூ யார்க்கர் எனும் இதழின் செய்தியாளர் ராஃப்பி காட்சாடெளரியன் என்பவர் சந்தித்துப் பேசியுள்ளார். ஜூலியன் அசான்ஞ் உடன், அவர் பதுங்கியிருந்த சிறு அறையில் (பங்கர்) ராஃப்பியுன் இருந்துள்ளார். அப்போது அசான்ஞ் நோக்கம் குறித்து வினா எழுப்பியுள்ளார்.

அநீதிகளை வெளிப்படுத்தவதே தனது இணையத் தளத்தின் நோக்கம் என்று அசான்ஞ் அழுத்தமாக கூறியதாக தெரிவிக்கும் ராஃப்பி, “இன்றுள்ள நிலையில் மனிதனின் போராட்டங்கள் அனைத்தும் வலதுக்கு எதிரான இடது போராட்டமோ அல்லது நம்பிக்கைக்கு எதிரான பகுத்தறிவின் போராட்டோ அன்று, அது தனி மனிதனுக்கும் அவன் வாழ்வைப் பாதிக்கம் (அரசு) அமைப்புகளுக்கும் எதிரானதே” என்று அசான்ஞ் கூறியதாக தெரிவிக்கிறார்.

“ஆட்சியமைப்புகளின் போக்கை தற்போதுள்ள போக்கிற்கு மாறாக மாற்றியமைக்க வேண்டுமென்று நாம் நினைப்போமானால், அவைகள் மாற்றத்திற்கு தங்களை சற்றும் உட்படுத்திக்கொள்ள தாயாரக இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் துணிவாக செயலாற்ற வேண்டும்” என்றும் அசான்ஞ் கூறியதாக ராஃப்பி தெரிவிக்கிறார்.

இப்போது புரிகிறதா, விக்கிலீக்ஸ் வெளியீடுகளின் நோக்கம் என்னவென்பதை? அமெரிக்காவின் செனட்டரும், அவரை வழிமொழிந்த அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவரும், ஜூலியன் அசான்ஞ் ஒரு உயர்தொழில்நுட்ப பயங்கரவாதி என்று கூறியது சற்றும் பொருந்தாக விமரிசனம் என்பது?

அசான்ஞ் மொழியில் தெளிவாக கூறுதெனின், அமெரிக்காவோ அல்லது இன்றைய உலக நாடுகளின் அரசுகளோ இப்போது எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனவோ அந்த போக்கில் இருந்து சற்றும் மாறப்போவதில்லை. இவைகளின் செயல்பாட்டை தலைகீழாக மாற்ற வேண்டுமெனில், அவைகளின் தன்மையைப் புரிந்துகொண்டு துணிச்சலுடன் போராட வேண்டும் என்கிறார். அதற்கு தற்போதுள்ள அதன் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்ய வேண்டும். அதற்குத்தான் இப்படிப்பட்ட வெளியீடுகள். அவைகள் அதன் பிடிமானத்தை பலமிழக்கச் செய்கின்றன.

இந்த முடிவிற்கு ஜூலியன் அசான்ஞ் வரக் காரணமேதுமுண்டோ? தான் மாற்ற நினைக்கும் இன்றுள்ள அரசியலை ஆங்கல மொழிக் கவிஞர் ஜார்ஜ் ஆர்வெல்லின் பாடலை மேற்கோள் காட்டி புரிய வைக்கிறார் அசான்ஞ்.
“பொய்யை உண்மையைப் போல் ஒலிக்கவும், கொலையை மரியாதைக்குரியதாகக் காட்டவும், தூய காற்றிற்குக் கூட நிலைத்தன்மை உண்டு என்று நிரூபிக்கவுமே அரசியல் மொழி வடிவமைக்கப்பட்டுள்ளது” என்கிற ஜார்ஜ் ஆர்வெல்லின் மொழியை இன்றைய அரசியலின் போக்கை சித்தரிப்பதாக அப்பாச்சி வீடியோவிற்கு அளித்த பேட்டியில் அசான்ஞ் கூறியுள்ளார்.

எவ்வளவு ஆழமான உண்மை! விடுதலைப் போராளிகை ‘பயங்கரவாதிகள்’ என்பது, பழங்குடிகளுக்காக போராடுவோரை, அந்த மக்களின் போராட்டங்களை ஆதரிப்போரை, அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுப்போரை ‘உள்நாட்டு அச்சுறுத்தல்’ என்பது, தங்களின் அன்றாட வாழ்விற்காக கடலுக்குச் சென்று மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினரால் அத்துமீறி வந்து தாக்கப்படும் போது, அவர்கள் ‘சில பேராசை பிடித்த மீனவர்களால் பிரச்சனை ஏற்படுகிறது’ என்று பேசுவது என்று இவை யாவும் ஜார்ஜ் ஆர்வெல் சொல்லும் அந்த அரசியல் மொழிகள்தானே?

இதனை புரிந்துகொண்ட காரணத்தினால்தான் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்களை உலகின் தலைசிறந்த நாளிதழ்களான தி கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், லீ மாண்ட், எல் பாரிஸ், டெர் ஸ்பீகல் ஆகியன முன்னுரிமை கொடுத்து வெளியிடுகின்றன! இந்த ஏடுகளின் வரிசையில் ஒரு இந்திய நாளிதழ் கூட இடம்பெறவில்லையே என்பது வருத்தம்தான். ஆனால் இங்குதான், அரசின் குரல்களாக இருந்து பத்ம ஸ்ரீ முதல் சிறிலங்க ரத்னா வரை பட்டங்கள் பெற்ற முதன்மை இதழாளர்களை ஆசிரியர்களாக கொண்ட ஊடகங்களும் நாளிதழ்களும் அல்லவா கோலேச்சுகின்றன? அதனால் அந்தப் பட்டியலில் இந்தியா நாளிதழ் ஒன்று இடம்பெறாததில் ஆச்சரியமேது்மில்லை.

ஒரு தனி மனிதராய், உறுதியுடன் நிற்கும் சில தொழில் திறமை கொண்ட இளைஞர்களுடன் இணைந்து இன்றுள்ள அரசுகளுக்கு பாடம் கற்பிக்க புறப்பட்ட ஜூலியன் அசான்ஞ், உண்மையான ஜனநாயகத்திற்கு வழிகோலுகிறார். எனவே, எவ்வித ஐயமுமின்றி, அவரே இந்த ஆண்டின் மிகச் சிறந்த மனிதரே.

விக்கிலீக்ஸ் இணையத் தளம் செய்துவரும் தகவல் புரட்சி தொடரட்டும்... 2011இலும்
http://www.tamilnetwork.info/2011/01/wikileaks-information-revolution-hot.html