Sunday, August 30, 2009

ஈழத்தில் என்னாதான் நடக்கிறது

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற கண்ணி வெடிகள் தடையாக இருக்கின்றன. அவற்றை அகற்றிய பின்னர்தான் மக்களை மீளக் குடியமர்த்த டியும் எனக் கூறும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்,
கிளிநொச்சியிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும், இராணுவத்திற்கும், பௌத்த கோவில்களை அமைப்பதற்குமான பாய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

ஓமந்தையில் இருந்து பளை வரை ஏ9 பாதையின் இருமருங்கிலும் 150 யாருக்கு மேற்பட்ட பிரதேசத்தில் இருந்த சகல கட்டிடங்களும் தரை மட்டமாக்கப்பட்டு அவை இருந்த இடமே தெரியாமல் செய்யப்பட்டு வருகின்றது.சைவத்தையும் தமிழையும் பாதுகாத்த தமிழ் மக்களின் கலாசார சின்னமான யாழ். குடாநாட்டின் முகப்பான ஆனையிறவில் பிரமாண்டமான புத்த விகாரை கட்டப்பட்டு வருகின்றது. இங்கு எந்தக் கால கட்டத்திலும் சிங்கள மக்கள் வாழ்ந்ததில்லை. புத்த கோவிலும் இருந்ததில்லை.

இராணுவ காம் மட்டுமே இருந்தது. இன்று பௌத்த, சிங்களத்தின் ஆக்கிரமிப்பின் வடிவமாக யாழ்ப்பாணத்து நுழைவாயிலில் புத்த கோவில் கட்டப்பட்டு வருகின்றது.கிளிநொச்சியில் மிகச் சிறிய ஒரு நிலப்பரப்புக்குள் இருந்த புத்த கோவில் தற்போது பாரியளவில் கட்டப்பட்டுள்ளதுடன், அக்கோவில் கட்டுவதற்காக சுற்றிவர இருந்த கடைகள், வீடுகள் யாவும் அழிக்கப்பட்டு அவையும் புத்த கோவிலுடன் இணைக்கப்பட்டுள்ளன.இவை ஒரு புறமிருக்க, தமிழ் மக்களின் கலை மரபுகளை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட கலாசார மண்டபம், இந்துப் பேரவைக் கட்டிடம், பனம் பொருள் கைப்பணி மண்டபம் போன்ற அனைத்தும் மண்ணோடு மண்ணாக அழிக்கப்பட்டு, அங்கிருந்த கலாசாரச் சின்னங்கள் யாவும் அகற்றப்பட்டும் அழிக்கப்பட்டுள் ளன. பல கோடி பெறுமதியான இம்மண்டபங்களும் கலாசாரச் சின்னங்களும், அழிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கருகில் 350 கடைத்தொகுதிகளைக் கொண்ட கிளிநொச்சி பொதுச்சந்தை, எண்ணெய் நிரப்பும் நிலையம், போக்குவரத்து டிப்போ போன்ற சகல இடங்களும் கையகப்படுத்தப்பட்டு அங்கு யுத்தத்தில் கொல்லப் பட்ட சிங்கள இராணுவத்தினருக்கான சமாதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதனையும் விடக் கொடுமையான நடவடிக்கை கிளி நொச்சி பிரதேச சபைக்கு சொந்தமான இயற்கை பூங்கா வில் இருந்த பெறுமதி வாய்ந்த பல மரங்கள் (அம்மண்ணுக்கே சொந்தமான பல மரங்கள் அங்கு வளர்க்கப்பட்டன. அவை வெட்டி எடுக்கப்பட்டுள்ளதுடன் அப்பூங் காவிற்கு நடுவில் இராணுவத்தினருக்கான நினைவு ஸ்தூபி ஒன்றும் கட்டப்பட்டு வருகின்றது. இவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுவரும் மதில்கள் தலதா மாளி கையைச் சுற்றியுள்ள மதில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டு வருகின்றது.இப்பூங்காவுக்கு பின்புறமாக கட்டப்பட்டு வந்த நூல் நிலையம் பாயளவில் சேதமாக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் கிளிநொச்சி நகரத்தின் மையப்பகுதிகள் யாவும் அகற்றப்பட்டு, தமிழன் கலாசார மண்டபங்களும் இடிக்கப்பட்டு அங்கு இராணுவ நினைவாலயம் பௌத்த கோவில்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பட்சத்தில் அங்கு சந் தையில்லை. பஸ் நிலையமில்லை. பொழுது போக்கு மண்டபம் இல்லை. பூங்கா இல்லை. நூல் நிலைய மில்லை. இவை யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. 1981இல் யாழ்ப்பாண நூல் நிலையம் ஏறத்தாழ ஒரு இலட்சம் புத்தகங்களுடன் சிங்கள இன வாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதுடன் சிங்கள இனவாதிகளால் ஓர் கலாசாரப் படுகொலைஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் அடுத்த கட்ட கலாசாரப்படு கொலைகள் கிளிநொச்சியில் அரங்கேறி வருகின்றன.இது தவிர கிளிநொச்சி பொன்னம்பலம் வைத்தியசாலையில் இருந்து கந்தசாமி கோவிலை உள்ளடக்கி கரடிப்போக்கு சந்திவரை பாய இராணுவத்தளத்துக்கான பகுதியெனவும் அதியுயர் பாதுகாப்பு வலயமெனவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு ஆக்கிரமிப்பு வேலைகளுக்கும் கண்ணிவெடிப் பிரச்சினை கிடையாது. மக்கள் குடியேற வேண்டுமாயின் கண்ணிவெடி என அரசாங்கத்தால் புரளி கிளப்பி விடப்படுகிறது.ஏ9 வீதியிலுள்ள அரச மரங்களுக்குக் கீழ் புதுப்புது புத்தர் கோவில்கள் உருவாகி வருவதுடன், பாய கண்காணிப்பு கோபுரங்களும் உருவாகி வருகின்றன.மக்கள் மீளக் குடியேறும் பொழுது அவர்களது வீடுகள் அவர்களுக்கு கிடைக்காது. அவர்களது பொதுக் கட்டிடங்கள், கோவில்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைக்காது. மக்கள் மீளக்குடியேற்றப்பட்டால் அவர்களது எதிர்ப்புக்கு மத்தியில் இவற்றைச் செய்ய முடியாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மக்கள் இன்னும் காம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.வன்னியை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்து ஒட்டு மொத்த வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த பூமியாக மாற்றுவதே அரசின் கொள்கை என்பதை வன்னி நிலமைகள் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன. அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு சிங்கள ஜனநாயக ற்போக்கு புத்தி ஜீவிகளும், சர்வதேச சகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டிய காலகட்டமிது.

Tuesday, August 25, 2009

தமிழீழ சரித்திரத்தில் எழுதப்பட்ட எங்கள் மாவீரர்கள்

சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக்காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆயுதம் ஏந்திய தமிழீழ விடுதலைப் போராட்டம் கசப்பான முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிட்ட போதும், ஈழத் தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்தியேயாக வேண்டிய நிர்ப்பந்தத்தையே சிங்கள அரசு திணித்து வருகின்றது.
சிங்கள நரி ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் தேசியத் தலைவர் அவர்கள் ஒரு நேர்காணலின் போது ‘ஜெயவர்த்தன உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியமே இருந்திருக்காது’ என்று கூறியிருந்தார். இந்த யதார்த்தம் இன்றுவரை அப்படியே தொடர்வதையே காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையின் ஆட்சியைப் பிடிக்கக்கூடிய எந்த சிங்கள அரசியல்வாதியும் இந்த யதார்த்தத்திற்கு வெளியே வந்தது கிடையாது. வரப்போவதும் கிடையாது. இதுவே ஈழத் தமிழர்கள் தமது தாயகத்தை வென்றெடுக்க வேண்டிய அவசியத்தையும் அவசரத்தையும் அவர்களுக்கு வழங்கி வருகின்றது. மாற்றமே இல்லாத சிங்கள மேலாதிக்க மனப்பான்மையே தமிழர்களை மீண்டும் ஒரு ஆயுத போராட்டத்தை நோக்கித் தள்ளும் என்பது மறுதலிக்க முடியாத யதார்த்தம்.
ஆயுதம் ஏந்திய ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகப் பட்டியலிட்டு, விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த அமெரிக்கா கூட தற்போது ஈழத் தமிழர்களின் அவலங்களுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. மேற்குலகின் பல நாடுகளும் ஈழத் தமிழர்களுக்கான நிர்ப்பந்தத்தைப் புரிந்து கொண்டுள்ளனர்.
விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கான போர் என உலக நாடுகளுக்கு அறிவித்த இலங்கை அரசு, இறுதி யுத்தத்தின்போது தப்பிச் சரணடைந்த தமிழ் மக்களை நடாத்தும் விதம் மனிதாபிமானமுள்ள எந்தச் சமூகத்தினாலும் அங்கீகரிக்க முடியாத கொடுமையாகவே பார்க்கப்படுகின்றது.
இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய நாசிப் படைகளும், ஜப்பானியப் படைகளும் தோற்றுப் போன பின்னர் அந்த மக்கள் வெற்றி கொண்டவர்களால் தண்டிக் கப்படவில்லை. மாறாக, அவர்களது மனங்களை வெல்லும் முகமான விரைந்த நிவாரணங்களும், அழிவுகளுக்கான பரிகாரங்களும் வெற்றி கொண்ட தரப்பினால் வழங்கப்பட்டு, அவர்களது அமைதி வாழ்வுக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது.
இலங்கையின் நிலவரமோ இதற்கு நேர் எதிராகவே உள்ளது. பல்லாயிரக் கணக்கான தமிழர்களை கொடிய ஆயுதங்கள் கொண்டு சிதைத்துக் கொன்றுவிட்டு, உயிரோடு புதைத்துவிட்டு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதை ஒட்டுக்குழுவினர்கள் கூட ரசித்து இருக்க மாட்டார்கள். ஒண்டுவதற்கும், புகலிடம் வழங்குவதற்கும் உறவுகள் இருக்கும் நிலையில், கண்ணி வெடிகளைக் காரணம் காட்டி, மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாம்களில் வைத்துக் கொடுமைப்படுத்துவதை சிங்களவரைத் தவிர எந்த மனித குலமும் ஏற்றுக் கொள்ளாது.
பிறந்த குழந்தை முதல், இறுதிக் காலத்தில் வாழும் பெரியவர்கள் வரை வவுனியா வதை முகாம்களின் முட்கம்பி வேலிகளுக்குள் வாழ்வைத் தொலைத்துவிட்டு ஏங்கித் தவிக்கின்றார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறையில் வாடும் ஆயிரக்கணக்கான யுவதிகளும், இளைஞர்களும் எதிர்காலம் தெரியாத இருட்டில் வாழ்கின்றனர்.
வவுனியா முகாம்களிலிருந்து நாளாந்தம் பலர் கடத்தப்பட்டுக் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் திரும்பி வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.இந்த அவல வாழ்க்கை தொடரும் நிலையில், இலங்கைத் தீவில் அமைதி என்பது எப்போதுமே சாத்தியம் இல்லை. சிறுபான்மைத் தமிழினத்தின் அவல வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து, அவர்கள் கெளரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழ வகை செய்யப்படாதவரை சிங்களத்தின் வெற்றி என்பது நீண்டு செல்லப் போவதில்லை.
சிங்களத்தின் இனவெறியும், மேலாதிக்க சிந்தனையும் இனிமேலும் மாற்றங் கொள்ளத் தவறினால், தமிழீழக் கருவில் உருவாகும் அத்தனை குழந்தைகளும் விடுதலைப் புலிகளாகவே பிறப்பார்கள் என்பதை சிங்கள தேசம் உணர்ந்து கொள்ள வேண்டும். இல்லை என்று சொல்வதால் மட்டும் நெருப்பு குளிர்ந்துவிடப் போவதில்லை. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று மார் தட்டுவதால் மட்டும் விடுதலைப் புலிகளை இல்லாமல் செய்து விட முடியாது.
‘விடுதலைப் புலிகள்’ என்பது எதிர்வினை. சிங்கள தேசத்துக் கொடூரங்களின் அறுவடை. சிங்கள அரச பயங்கரவாதத்தின் பிரசவம். தமிழீழ மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் மீண்டும் பலங்கொண்டு எழுவதற்குரிய அத்தனை காரணங்களையும் சிங்கள தேசம் அப்படியே பாதுகாக்கவே விரும்புகின்றது. ஈழத் தமிழர்களுக்கு எதையுமே வழங்காமல், போரின் வெற்றி மூலம் அவர்களை அச்சுறுத்துவதால் மட்டும் அமைதியை ஏற்படுத்திவிட முடியாது.
சிங்களத்தால் பயங்கரவாதி என்று சுட்டிக் காட்டப்படும் ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு தமிழ் யுவதியும் தமிழர்களால் புனிதர்களாகப் பூசிக்கப்படுகின்றார்கள். அவர்களை வீரப் புதல்வர்களாகக் கொண்டாடுகிறார்கள். தமிழீழ விடுதலையை வென்றெடுக்க அவதரித்த அக்கினிக் குஞ்சுகளாக அவர்களை நெஞ்சில் சுமக்கின்றார்கள்.
இவர்களது தியாகங்கள் எல்லாம் வீணாகிப் போக ஈழத் தமிழர்கள் யாரும் அனுமதிக்கமாட்டார்கள். முழத்திற்கு ஒரு இராணுவமும், வீதிக்கு ஒரு சோதனை முகாமும் எனப் படை விரிவாக்கம் மட்டுமே ஈழத் தமிழர்களைச் சிறை வைக்கப் போதுமானது அல்ல. இலங்கையில் வாழும் அத்தனை சிங்களவரும் தம் மனச் சிறைகளிலிருந்து வெளியே வரவேண்டும். தமிழர்களைச் சக மனிதர்களாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பக்குவம் வராதவரை இலங்கைத் தீவில் அமைதி என்பது வெறும் கனவாகவே முடியும்.
சிங்கள தேசத்தில் ஆயுதக் கிளர்ச்சியை அறிமுகப்படுத்திய ஜே.வி.பி.யினர் சிங்களவர்கள் என்பதால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டு, இன்று அரசியல் தலைவர்களாக வலம் வருகின்றார்கள். இந்த ஜே.வி.பி. கிளர்ச்சிக்கு ஆதரவானவர்கள் சிங்களவர்கள் என்பதால் மன்னிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டார்கள். காரணமற்ற ஆயுதக் கிளர்ச்சியை நடாத்தியவர்கள் சிங்களவர்கள் என்பதால் அவர்கள் என்றுமே வதை முகாமில் சிறை வைக்கப்படவில்லை. ஆனால், நியாயமான அத்தனை காரணங்களையும் கொண்டுள்ள தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டம் சிங்கள தேசத்திற்கு பயங்கரவாதமாகவும், தமிழர்கள் பயங்கரவாதிகளாகவும் தெரிகின்றார்கள். தமிழர்களின் அழிவும், இழப்பும் அவர்களுக்கு மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் அள்ளி வழங்குகின்றது.
சிங்கள தேசத்தின் வெற்றிக் கொண்டாட்டமும், தமிழர் மீதான வதை முகாம் கொடுமைகளும், அச்சுறுத்தல்களும், கடத்தல்களும், படு கொலைகளும், காணாமல் ஆக்குதல்களும் முன்னரை விடவும் பலமான எதிர்வினைகளை உருவாக்கியே தீரும். அந்த எதிர்வினை, ஈழத் தமிழர்களை மட்டுமல்ல, உலகில் வாழும் எல்லாத் தமிழர்களையும் ஒன்றிணைக்கும். அந்த மாபெரும் தமிழர் எழுச்சி ஈழத் தமிழர்களை வெகு விரைவில் விடுவிக்கும். அதுவே விடுதலைப் புலிகளின் தியாகத்திற்கு உலகத் தமிழினம் வழங்கும் கவுரவமாக அமையும்.

Thursday, August 20, 2009

அழுக்குருண்டை பிள்ளையார் ஆண்டவனா சொல்லுங்க???


அழுக்குருண்டை பிள்ளையார் ஆண்டவனா சொல்லுங்க???

களிமண்!களி மண்ணால் செய்யப்பட்ட, இரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்தவேண்டும் என்றும், இத்தகு பொம்மைகளையே நீர் நிலைகளில் கரைக்கவேண்டும் என்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.உண்மையிலே விநாயகர் பொம்மைக்குச் சக்தி இருந்தால் இதுபோன்ற நிபந்தனைகளை ஓர் அரசால் விதிக்க முடியுமா?
சிறிய வயதில் குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு, பெரியவர்களாக ஆன பிறகும்கூட அவர்களை விடுவதில்லை. அதில் ஒன்றுதான் இந்தப் பிள்ளையார் விளையாட்டு.இரசாயனக் கலவை பிள்ளையாரை நீர் நிலைகளில் கரைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று கூறுவது கூட ஒருவகை நாத்திகம்தான்.சுற்றுச்சூழலை மட்டுமா பாதிக்கிறது இந்தப் பிள்ளையார் உள்ளிட்ட கடவுள்களின் பட்டியல் மனிதனின் அறிவையும் அல்லவா பாழ்படுத்துகிறது.இந்தப் பிள்ளையாரிடம் தோப்புக் கரணம் போட்டால் எந்தவித விக்னமும் இல்லாமல் நினைத்த காரியம் நிறைவேறுமாம். அதனால்-தான் விக்னேஷ்வரர் என்று அதற்கு இன்னொரு பெயராம்.தேர்வுத் தாளில் பிள்ளையார் சுழி போட்டு எழுதும் மாணவர், மாணவிகள் எல்லாம் நூற்றுக்கு நூற மதிப்பெண்கள் வாங்குவது ஒருபுறம் இருக்கட்டும்; குறைந்தபட்சம் தேர்ச்சிக்குரிய மதிப்பெண்களையாவது வாங்குவர் என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா?கணக்குப் பாடத்தில் பிள்ளையார் சுழிபோட்டு எழுதினால், அது இரண்டு என்று நினைத்துக்கொண்டு தவறான விடை என்று விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் X - குறி போடவும் வாய்ப்புண்டு.பொதுவாகப் பிள்ளையார் பிறந்ததே பார்வதி தேவியாரின் அழுக்கில்தானே! இது எவ்வளவுப் பெரிய கேடு!அழுக்குக்குப் புனிதத்தைக் கற்பிக்கும் கேடுகெட்டதனம் இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எங்குண்டு?அழுக்கிலிருந்து தோன்றிய பிள்ளையார் தான் நமது முக்கிய கடவுள் என்று பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் பிள்ளைகள் மனதில் என்ன தோன்றும்? அழுக்கை விரும்புமா வெறுக்குமா? சோப்புப் போட்டுக் குளிப்பதுகூட குற்றம் என்ற எண்ணம்தானே வரும்?
பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் ஆகிய நான்கைக் கலந்து கொடுத்தால் பிள்ளையார் சங்கத் தமிழ் மூன்றையும் கொடுப்பார் என்று பிள்ளைகளைப் பாட வைத்தால் பிள்ளைகள் உருப்பட்ட மாதிரிதான். சங்கத் தமிழ் என்ன சுண்டலா, அள்ளி அள்ளிக் கொடுக்க?சின்ன வயதிலேயே பிள்ளைகளின் மூளையை இப்படிக் கிள்ளினால், அவர்களின் நிலை என்னவாகும்?விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் சொன்னால் போதாது! முதலில் இது மாதிரி அசிங்கமான அழுக்கைக் கடவுளாக்கும் புராணக் கசுமாலங்களை பிள்ளைகளின் மூளைகளைக் குப்பைத்தொட்டி என்று நினைத்துக் கொட்டுவதைத் தடுக்கவேண்டாமா?அழுக்குருண்டை பிள்ளையாரு ஆண்டவனா சொல்லுங்க! மண்ணுருண்டை பிள்ளையாரு மகேசனா சொல்லுங்க!

Tuesday, August 18, 2009

வீட்டுக்கு ஒருவராய் விடுதலைக்கு பாடுபடுங்கள், உயிர்க்கும் தமிழீழம்

முள்ளிவாய்க்காலில் மூண்டதீயிலே உயிர்கொடுத்த ஆயிரமாயிரம் உறவுகளின் உதிரத்தில் கருத்தரிக்கும் புலம் பெயர் தமிழர்களே உயிர்த்தெழுந்திடுங்கள். இன்னும் நம் உரிமைகள் கிடைக்கவில்லை. நீங்கள் வீதியில் இறங்கி போராடிய அந்த போராட்டத்தின் இலக்கை நாம் இன்னும் அடையவில்லை. பாரம் என்று நீங்கள் சலித்து விட்டால் மீண்டும் மீண்டும் நாங்கள் அடக்கப்பட்டுக்கொண்டிருப்போம்.

நம் இனத்தில் குரல்கள் அடக்கப்பட்டுள்ளது. அதன் நியாயபூர்வமான கோரிக்கைகள் மறுக்கப்படுகின்றது. அது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த போதும் அது பற்றிய அக்கறையை காட்ட நீங்கள் யாரும் தயாராய் இல்லை என்பது வேதனையான விடயமாகும்.
ஆயுதப்போராட்டத்தில் முடிவு நம் ஈழப்போரின் முடிவு அல்ல. நாம் தொடர்ந்து நகரவேண்டும், எம் கனவுகள், எம் தேச மக்களின் சோகங்கள் எல்லாம் களைந்து எமக்கான தேசத்தை அடைய வேண்டும் என்பதில் ஒவ்வொரு தமிழனும் தெளிவாயும் அதே நேரம் அதற்காய் அந்த இலக்கை அடைய தம்மை அர்ப்பணித்து பணியாற்ற தயராய் இருக்க வேண்டும்.
வீதிகளில் கொடிகளை கொண்டு விரைந்து வந்து நின்ற போது தமிழனின் ஒற்றுமை பற்றி பேசிய இந்த ஊடகங்கள், இன்று எம்மை பற்றி குறைந்த பட்ச செய்திகளை கூட கொண்டுவருவதில்லை. நாம் களத்தில் போராடாது போயிருந்தால் தமிழன் என்பவனின் அடையாளம் அழிக்கப்பட்டிருக்கும் ஆனால் இன்று அந்த விடுதலைப்போர் பின்னடைவைச் சந்தித்துள்ள இந்த வேளை நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும். கடந்த மூன்று தசாப்தங்களாக தம்மை அர்பணித்து மூன்று ஒரு சந்ததி போராடி அதன் இலக்கை அடையாது பின்னடைவைச் சந்தித்திருக்கின்றது.

முப்பதாயிரத்துக்கு அதிகமான இளைஞர்கள், பெண்கள் தங்கள் உயிர்களை எம் மண்ணின் விடுதலைக்காய் அர்ப்பணித்துச் சென்றுள்ளனர். இன்னும் லட்சக்கணக்கான மக்கள் இந்த போரின் போது தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதுமட்டுமன்றி, கோடிக்கணக்கான சொத்துக்களை நாம் இழந்துள்ளோம்.
ஊரிழந்து, சொந்த நாடிழந்து சிங்களத்தின் திட்டமிட்ட சதியினால் நாங்கள் அகதியாக அடுத்தவன் நாடுகளின் வாழ்கின்றோம். இந்த வாழ்வு எமக்கு இனிக்கின்றது. ஆனால் சொந்த மண்ணில் அகதியாய் சிங்களவன் காவலுக்குள் எந்த நேரம் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உறைந்து கிடக்கும் லட்சக்கணக்கான மக்களை பற்றி கவலை இன்றி எம்மால் வாழமுடியுமா?
அவர்கள் எம் உறவுகள் என்றில்லை என்று சொல்லி ஒதுக்கிட முடியுமா? புலத்தில் அமிழ்த்தப்பட்ட போராட்டங்கள் மீண்டும் எழுச்சி பெறவேண்டும்.
உறங்கு நிலையில் இருக்கும் இளையோர் அமைப்புக்கள் புலம் எங்கும் சிலருக்கும், சில அமைப்புக்களுக்கும் பின்னால் அணிதிரள்வதை விடுத்து எமது மக்களுக்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இளையோர் அமைப்பு முள்ளிவாய்க்காலின் அடுத்த நாளே செயல் இழந்து கிடப்பது வேதனை!
தலைவர் இளையோரை நம்பி ஒப்படைந்த போராட்டம் சிலரின் தவறான வழி நடத்தலால் வாடி வதங்கி கிடக்கிறது செல்நெறி தவறா சிந்தனையோடு செயல் முடிக்கும் அந்த இளைஞர்களின் உணர்வுகள் முடக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இளையோரை நீங்கள் அடுத்த கட்ட தலைவர்கள், உங்களுக்குள் நிச்சயமாக பதவிச் சண்டைகள் இல்லை. சிலரின் இந்த சண்டைக்குள் நீங்கள் பலிக்கடாவாக்கப்படுகின்றீர்கள்!
எமது இனத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும் என்பதற்காகவே தலைவரின் சிந்தனையில் உதித்தது இளையோர் அமைப்பு!
அந்த அமைப்பு இன்று சிலரின் தலையாட்டு பொம்மையாக செயற்ப்படுவது வருந்தத்தக்கது. இந்நிலை மாற்றம் பெற்று இளையோர் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், இன்னும் இதர இளையோர் சம்பந்தமான கழகங்கள் மக்களை அணிதிரட்டி போராட்டங்களை முன்னேடுக்க வேண்டும்.
அகதி முகாம்களுக்குள் முடங்கி கிடக்கும் உறவுகளை மனதில் வையுங்கள்! இன்னும் இன உணர்வுகளை கொச்சைப்படுத்தி சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்குள் உங்கள் உன்னத அமைப்பை அடகு வைக்காதீர்கள். பிணங்களாய் இருக்கும் அவர்களையும் உயிர்ப்பியுங்கள். நீங்களும் உயிர்த்தெழுங்கள்.
மரணித்து போன எம் ஆயுத வழி போராட்டங்களோடு நீங்களும் பிணங்களாவதை விடுத்து அடுத்த கட்டம் நோக்கிய நகர்வை இளையோர் நீங்கள் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்
முள்ளிவாய்க்காலில் மூண்ட தீ அக்கினிக்குஞ்சுகளாய் அகிலத்தை எரிக்கட்டும்……

Monday, August 10, 2009

ஐ.நாவும் சர்வதேச நீதிமுறைகளும் எதற்காக?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேசப் பொறுப்பாளரும், தலைமைச் செயலருமான செல்வராசா பத்மநாதன் மலேசிய, சிறிலங்க அரசுகளின் உளவுப் பிரிவுகளின் ‘கூட்டு நடவடிக்கை’யில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து, அதனை அழிப்பதாகக் கூறி இரண்டரை ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்தொழித்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரச பயங்கரவாத நடவடிக்கைக்கு தெற்காசிய நாடுகள் வழங்கிவரும் கண்மூடித்தனமான ஆதரவின் மற்றுமொறு வெளிப்பாடே இந்த ஆள் கடத்தல் நடவடிக்கையாகும்.
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராகத் தான் மேற்கொண்ட இனப் படுகொலையை வெளிப்படுத்திய பத்திரிக்கையாளர்களையே வெள்ளை வேன்களில் கடத்திப் படுகொலை செய்த மகிந்த ராஜபக்சவின் ‘ஜனநாயக அரசு’, தனது கடத்தல் ஆற்றலை முதல் முறையாக இலங்கைக்கு வெளியே நடத்தியுள்ளது என்பதைத் தவிர அதன் சட்டத்திற்குப் புறம்பான இந்த நடவடிக்கையில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ஆனால் இதற்கு மலேசிய அரசும், செல்வராசா பத்மநாதன் கடத்தப்பட்டதற்கு ஒத்துழைத்ததாகக் கூறி சிறிலங்க அயலுறவு அமைச்சர் கேகலிய ரம்புக்வெலா பெயர் குறிப்பிடாமல் நன்றி தெரிவித்த மற்ற தெற்காசிய நாடுகளின் ‘ஒத்துழைப்பு’தான் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
ஒரு நாட்டிலோ அல்லது ஒன்றிற்கும் மேற்பட்ட நாடுகளிலோ சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டிருக்கும் ஒருவரைக் கைது செய்ய பல்வேறு ஒப்புக் கொள்ளப்பட்ட சர்வதேச சட்ட நடைமுறைகள் உள்ளன. அதன்படி, சர்வதேச காவல் துறையின் (இண்டர்போல்) வாயிலாக எச்சரிக்கை அறிவிக்கை (Red corner notice) விடுக்கப்பட்டு அதன் மூலம் உலக நாடுகளின் ஒத்துழைப்பை பெற்று அப்படிப்பட்ட நபரை கைது செய்யும் சட்ட நடைமுறை உள்ளது.
அவ்வாறு இண்டர்போல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட குற்றவாளிகள் மீதான தங்கள் முடிவை அரசுகள் மாற்றிக் கொண்டதும் நடந்துள்ளது (உதாரணத்திற்கு போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கியக் குற்றிவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி மீது இந்திய அரசின் வற்புறுத்தலால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை அறிவிக்கை பிறகு இந்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது).
இண்டர்போல் அறிவிக்கையின்படி கைது செய்யப்படும் நபரை நாடு கடத்துவதற்கும், உலக நாடுகளுக்கு இடையிலான குற்றவாளிகள் பரிமாற்ற (Extradition Treaty) உடன்படிக்கை செய்துகொள்ளும் வழமையும் உள்ளது.
அப்படிப்பட்ட குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாத நிலையில் அந்த நாட்டின் நீதிமன்றத்தில், கைது செய்யப்பட்ட நபரை தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்லக் கோரி சம்பந்தப்பட்ட நாட்டின் சார்பாக வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற ஒப்புதலோடு நாடு கடத்தப்பட்டதும் நடந்துள்ளது.
செல்வராசா பத்மநாதனை கடத்த உதவிய மலேசிய நாட்டில்தான் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளி ஒட்டோவியோ குட்ரோக்கி பதுங்கியிருந்தபோது, அவரை இந்தியாவிற்கு கொண்டுவர மலேசிய நீதிமன்றத்தில் இந்தியாவின் மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) மனு செய்து வாதிட்டது. ஆனால், அவருக்கு எதிராக குற்றச்சாற்றிற்கு பலமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த மறுத்தது மலேசிய நீதிமன்றம். மேல் முறையீட்டிலும் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பு கிட்டவில்லை.
மற்றொரு உதாரணம்: 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக வழக்குத் தொடரப்பட்ட அபு சலீம். அபு சலீமிற்கு எதிராக சர்வதேச காவல் துறையின் மூலம் எச்சரிக்கை அறிவிக்கை செய்தது மத்திய புலனாய்வுக் கழகம். தனது காதலியான நடிகை மோனிகா பேடியுடன் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்தபோது சர்வதேசக் காவல் துறையால் அபு சலீமும், மோனிகா பேடியும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரையும் உடனடியாக விமானத்தில் ஏற்றி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கவில்லை போர்ச்சுகல் அரசு. சர்வதேசக் காவல் துறையும் அப்படிப்பட்ட ‘ரகசிய வேலைகளில்’ ஈடுபடுவதும் இல்லை. இருவரையும் லிஸ்பன் நீதிம்ன்றத்தில் நிறுத்தி நீதிமன்றக் காவலில் வைத்தது போர்ச்சுகல் அரசு.அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து சட்ட ரீதியாக கடும் முயற்சிக்குப் பின்னரே இந்தியாவிற்கு கொண்டு வந்தது ம.பு.க. மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சலீமிற்குத் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்களை ‘மிகச் சிரமப்பட்டு’க் கொண்டுவந்து தாக்கல் செய்த பின்னரே சில நிபந்தனைகளுடன் சலீமை நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
சலீம் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் அவருக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்றும், விசாரணை நடத்தும் போது சித்ரவதைக்கு ஆட்படுத்தக் கூடாது என்றும் இந்தியா சார்பில் ஒப்புதல் வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்ட பின்னரே சலீமை நாடு கடத்த லிஸ்பன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இப்படி சர்வதேச சட்டங்களும், உடன்படிக்கைகளும் அது சார்ந்த நடைமுறைகளும் உள்ள இன்றைய உலகில், 257 பேர் கொல்லப்பட்ட மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட ஒரு தாதாவை நாடு கடத்தவே ஒப்புதல் வாக்குமூலங்களை தாக்கல் செய்து சர்வதேச அளவிலான சட்டப் பூர்வமான வழிமுறைகளை கடைபிடிக்கும் இன்றைய உலகில், ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தின் பொறுப்பாளரை இரண்டு அரசுகள் - மற்ற தெற்காசிய அரசுகளின் உதவியோடு - கடத்தி‌ச் செல்கின்றன என்றால் சர்வதேச நீதிமுறைகள் எதற்காக?
செல்வராசா பத்மநாதனுக்கு எதிராக சர்வதேசக் காவல் துறையின் எச்சரிக்கை அறிவிக்க இருக்கின்றதென்றால், அவரை மலேசிய நீதிமன்றத்தில் நிறுத்தி, சட்ட ரீதியாக இலங்கைக்கு கொண்டு வந்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை. ஏனென்றால் அவர் மீது கூறப்படும் குற்றச் சாற்றுகளை நிரூபிக்கக் கூடிய எந்த ஆதாரமும் இல்லை. அதனால் கொள்ளைக் கும்பல்களும், கடத்தல் பேர்வழிகளும் செய்வதைப் போல, சற்றும் வெட்கமின்றி இரு அரசுகளின் அயல் புலனாய்வு அமைப்புகளும் இணைந்து (இது மலேசிய காவல் துறைக்குக் கூட தெரிவிக்காமல் நடத்தப்பட்டதாகத் தகவல்) ஆள் கடத்தல் செய்துள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் அந்த இயக்கத்தின் சர்வதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பல்வேறு நாடுகளுடன் அரசு ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டே செல்வராசா பத்மநாதன் செயல்பட்டு வந்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் தலைமறைவாக இருந்து செயல்படாமல், வெளிப்படையாகவே செயல்பட்டு வந்துள்ளார்.
பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இறுதிக் கட்டப் போரின்போது, தங்கள் மக்களைக் காக்க சரணடைய விடுதலைப் புலிகள் முடிவு செய்தபோது, அதற்கான நடைமுறைகளில் மனித உரிமை அமைப்புகளோடும், அரசுகளோடும் தொடர்பு கொண்டு வெளிப்படையாக பத்மநாதன் செயல்பட்டார்.
அப்போதெல்லாம் சர்வதேசக் காவற்படைக்குத் தெரிவித்து கைது செய்திருக்கலாமே? சட்டத்திற்குப் புறம்பாக கடத்திக் கொண்டுவந்தப் பிறகும், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணைக்கு எடுக்காமல் மறைவிடத்திற்குக் கொண்டு சென்று விசாரிப்பதேன்.
விடுதலை போராட்டத்தை அழிப்பதே நோக்கம்
ஏனென்றால், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட வேண்டும் என்பதே! அதைத்தான் ஒளிவு மறைவு ஏதுமின்றி “இனி விடுதலைப் புலிகள் இயக்கம் தலையெடுக்கவே முடியாது” என்று பத்மநாதன் கைது குறித்துப் பேசியுள்ள கோத்தபய ராஜபக்ச கூறியுள்ளார்.
“பிரபாகரனையும், அவருடைய தளபதிகளையும் பூண்டோடு அழித்த பிறகும், அயல் நாடுகளில் இருந்து செயல்படும் அரசை அறிவிக்க பத்மநாதன் தயங்கவில்லை. அவர் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் துளிர்விடும் வாய்ப்பு இருந்தது. இப்போது அதுவும் பொசுக்கப்பட்டுவிட்டது” என்று சண்டே அப்சர்வருக்கு அளித்த பேட்டியில் சிங்கள பெளத்த மேலாதிக்க வெறியுடன் கூறியுள்ளார் கோத்தபய ராஜபக்ச.
சம உரிமை கோரி ஈழத் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கூறி கொச்சைபடுத்தி, அதனை ஒழித்துக் கட்டுவதாகக் கூறி, நிராயுதபாணியாக நின்ற ஐம்பதினாயிரம் தமிழர்களை கொன்று குவித்து ஒரு மாபெரும் இனப் படுகொலை நடத்தி முடித்த அரச பயங்கரவாத சிங்கள பெளத்த மேலாதிக்க அரசின் நடவடிக்கைகளை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கும் தெற்காசிய அரசுகள், சர்வதேச சட்டங்களையும், மனித உரிமைகளையும் புறந்தள்ளிவிட்டு மேற்கொண்டுள்ள இந்தக் கடத்தல் நடவடிக்கையை ஐ.நா.வும், சர்வதேச பொது மன்னிப்புச் சபையும் கண்டிக்க வேண்டும்.
தமிழர்களும் எங்கள் நாட்டு மக்கள்தான் என்று பேட்டியளித்துக் கொண்டு, முகாம்களில் முள் வேலிகளில் அடைத்து வைத்து 3 இலட்சம் தமிழர்களை மெல்ல மெல்ல கொல்லும் ஒரு பயங்கரவாத அரசின் கோர முகம் இந்த கடத்தல் நடவடிக்கை.
செல்வராசா பத்மநாதன் என்ற ஒரு தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும், உயிருக்கும் எந்த ஆபத்து ஏற்பட்டாலும் அது உலகளாவிய அளவில் தமிழனின் சுய மரியாதைக்கும், கண்ணியத்திற்கும் விடப்பட்ட சவாலாகவும் அதன் எதிர்வினை சட்டத்தின் மீதும், மானுட மாண்புகளின் மீதும் தமிழருக்கு உள்ள நம்பிக்கையையும், ஐ.நா. போன்ற பன்னாட்டு அமைப்புகளின் மீதான நம்பிக்கையையும் குறைத்துவிடும் என்பதை உலக நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
செல்வராசா பத்மநாதனை ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய ஒரு அரசியல் தலைவராகவே கருதி சட்டத்திற்கு உட்பட்டு நடத்துவதை உலக நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
சர்வதேச சட்டங்களை புறந்தள்ளிவிட்டு சிறிலங்காவும், மலேசியாவும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு ஐ.நா. விளக்கம் கோர வேண்டும். இன்று தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சிறிலங்கா, மலேசியா போன்ற தமிழர் விரோத அரசுகள் செய்யும் நடவடிக்கை அதற்குரிய எதிர்வினையை உண்டாக்கும் என்பதை புரிந்து கொண்டு உலக நாடுகளும், ஐ.நா.வும் செயல்பட வேண்டும்.