Saturday, December 17, 2011

மலையாளிகளுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் : கனடா வாழ் 3 லட்சம் தமிழர்கள்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக, கனடா வாழ் 3 லட்சம் தமிழர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கனடா வாழ் தமிழர்கள் சார்பாக கனடாவின் தமிழ் படைப்பாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் உலகத் தமிழினம் பொங்கி எழும்! ஏழு கோடி தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். அண்டை மாநிலங்களில் வாழும் தமிழர்களையும்புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களையும் கூட்டிப் பார்த்தால் உலகில் 8 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். தமிழனுக்கு ஒரு இறைமையுள்ள நாடு இல்லாத காரணத்தால்தான் தமிழன் உதைபடுகிறான், வதைபடுகிறான். தமிழன் என்றால் ஏதிலி என்று உலகம் நினைக்கிறது. இந்தியத் திருநாட்டில் தமிழன் கன்னடம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இருந்து அடித்து உதைத்து விரட்டப்படுகிறான். இப்போது தமிழர்களை உதைத்து வெளியேற்றுவதில் பக்கத்தில் உள்ள கேரளாவும் சேர்ந்து விட்டது. முல்லைப் பெரியாறு அணை பலமாக இல்லை என்றும் அது எந்த நேரத்திலும் உடையலாம் என்றும் அதனால் அதனை இடித்துவிட்டு வேறு அணை கட்டப்போவதாக கேரளாக்காரன் சொல்கிறான். முல்லைப்பெரியார் அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாகவும் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை முடித்த பின் 152 அடியாகவும் உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. அந்த ஆணையை இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்தத் தீர்ப்பை செல்லாக்காசு ஆக்கிவிட்டது! இன்றைய கேரளா பழைய சேர நாடாகும். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோ அடிகள் சேரநாட்டவர். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் வீரம், படைத்திறன், ஆட்சி முறை, கொடை, சமுதாயம், பண்பாடு, மன்னர்களின் பண்பு நலன்கள், அக்கால மக்களின் வாழ்க்கை முறையினை எடுத்துரைக்கிறது. இடைக் காலத்தில் வடநாட்டு நம்பூதிரிப் பார்ப்பனர்களின் குடியேற்றத்தால் மொழிக்கலப்பு ஏற்பட்டு சேரநாட்டுத் தமிழ் மலையாளம் எனத் திரிந்து புது மொழியாயிற்று. அந்த மொழிக்கு வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி இலக்கணம் எழுதப்பட்டது. முல்லைப்பெரியார் அணை உடைக்கப்பட்டால் தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மக்கள் வாழ முடியாத பாலைவனமாக மாறிவிடும். இதில் தலையிட்டு நீதி செய்ய வேண்டிய மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. இதனை நாம் பலமாகக் கண்டிக்கிறோம். கேரளாவுக்கு வேண்டிய உணவு தமிழ்நாட்டில் இருந்துதான் போகிறது. மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது முற்றிலும் தமிழர்கள் வாழும் பீர்மேடு, தேவிகுளம், இடுக்கி மாவட்டங்கள் கேராளாவோடு இணைக்கப்பட்டன. இந்திய தேசிய மாயையில் இருந்த காமராசர், மேடாவது குளமாவது எல்லாம் இந்தியாவில் இருக்கின்றன என்று வேதாந்தம் பேசியதால் தமிழர்கள் இந்த மாவட்டங்களை இழந்தார்கள். தமிழ்நாடு சட்ட சபையில் முல்லைப் பெரியாறை இடிக்கக் கூடாது, புதிய அணையை கேரளா கட்டக் கூடாது உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அணையின் உயரம் 136 இல் இருந்து 142 ஆக உயர்த்தப் பட வேண்டும் எனக் கேட்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியுள்ளது. இப்போது முல்லைப் பெரியார் அணையை அண்டியுள்ள மக்கள் அரசியல் கட்சிகளை முந்திக் கொண்டு போராட்டத்தில் குதித்துள்ளார்கள். ஆனால் கேரளாவைப் போலல்லாது தமிழக அரசின் காவல்துறை போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது. மலையாளிகளுக்குச் சொந்தமான கடைகளைத் தாக்கினார்கள் என்ற குற்ச்சாட்டில் நூற்றுக்கணக்கானவர்கள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். கேரளவில் உள்ள இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளை தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என மாநில அரசு மத்திய அசை வற்புறுத்த வேண்டும். தேவை ஏற்படின் ஒரு நேரடி வாக்கெடுப்பின் மூலம் மக்களது விருப்பத்தை அறிய வேண்டும். கேரளாவிலும் தமிழகத்திலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்ளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். உடைமைகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். தமிழக அரசு தமிழர்களின் நலனின் அக்கறை கொண்டு தமிழர் சார்பாகச் செயல் படவேண்டும். கேரளா அரசு மலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தமிழக அரசும் தமிழர்களுக்கு ஆதரவாக செயல் படவேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம். தமிழர்களுக்கு யார் இன்னல் விளைத்தாலும் அவர்களுக்கு பதிலடி கொடுக்க உலகத் தமிழினம் பொங்கி எழும் என்பதை இந்த நேரத்தில் கனடாவில் வாழ்கின்ற மூன்று இலச்சம் தமிழர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பு: மேற்கண்ட அறிக்கை படைப்பாளிகள் கழகத்தின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை தங்கவேலு அவர்களால் வெளியிடப்பட்டது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வே.பிரபாகரன், தந்தை செல்வா ஆகியோருடன் அரசியல் வேலை திட்டத்தில் இணைந்திருந்தவர். இவர் 55 ஆண்டுகால பதிரிகையாளரும் தமிழீழத்தின் புகழ்பூத்த பிரபல அரசியல் இலக்கிய விமர்சகருமாவார்.

Friday, December 16, 2011

முல்லைப் பெரியாறும் அய்யப்ப பக்தர்களும்!

1. தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தர மறுப்பதற்கு மறைமுகமான முயற்சியே, கேரள அரசின் . முல்லைப் பெரியாறு அணை உடையும் ஆபத்தில் உள்ளது என்ற ஆதாரமில்லாத பீதியைப் பரப்பும் கொடுமை. 2. உச்சநீதிமன்றத்தால் முன்பு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவே அணை பலமாக உள்ளது, தமிழ்நாடு அரசு அணையின் உயரத்தை உயர்த்தலாம் என்பதைக் கூறிவிட்ட பிறகு அதனைத் தடுத்து, தமிழக விவசாய நீர்ப் பாசனத்திற்கு ஏற்படக்கூடிய வாய்ப்புகளைத் தடுக்கவே மற்றொரு குறுக்கு வழி, புதிய அணை கட்டுவோம் என்பது கேரள அரசின் குறுக்குச் சால் ஓட்டும் முயற்சி. 3. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்*.ஆனந்த் தலைமையில் ஆய்வுக்குழு அதன் விசாரணையை நடத்தி முடிவை அறிவிக்கும் முன்பே இதனைத் திசை திருப்பும் நாடகங்கள் கேரள அரசாலும், மற்ற கட்சிகளாலும் அரங்கேற்றப்படுகின்றன. எல்லோரும் அங்கே ஒன்றுதான் - தமிழ்நாடு போல் அல்ல! 4. இடுக்கி மற்றும் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழர்கள் தாக்கப்பட்டதை விடக் கொடுமை வேறு என்ன? 5. சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு அடி, உதை செம்மையாக கிடைத்து வருகிறது. (புலியை அடக்கியதாகக் கூறப்படும் அய்யப்பன் கேரள அரசினைக் கண்டு கிலியில் மவுனமாகிவிட்டான் போலும்!) அய்யப்ப பக்தர்களே இன்னுமா உங்களுக்குப் புத்தி வரவில்லை? ஏன் தமிழ்நாட்டு சாமிகளுக்கு என்ன பவர்கட்டா? சக்தி இல்லையா? முதலில் கேரளாவிற்கு சரக்கு அனுப்புவதைத் தடுக்கும் முன், அய்யப்பன் கோவிலுக்கும், பத்மநாப சாமி கோவிலுக்கும், குருவாயூர் கிருஷ்ணன் கோவி லுக்கும் போகும் தமிழ்நாட்டு பக்தர்களைத் தடுத்து நிறுத்தி - எல்லையிலே நின்று - திருப்பி அனுப்பி நம்மூர் சாமி உண்டியலில் போட்டு, அந்த இருமுடி, தேங்காய் மூடி, அரிசி எல்லாம் நம் தமிழ்நாட்டு மக்களுக்கு (அவன் சு(ர)ண்டல் பேர்வழியானாலும்) பயன்படட்டுமே! அய்யப்பா, அய்யப்பா தமிழனுக்கு தண்ணீர் தரவிடாத அய்யப்பா, உன் மகர ஜோதி பித்தலாட்டம் காண எங்கள் ஆள்கள் பலியானது போதாதா? அடியும் உதையும் இப்போதும் தேவையா?

Thursday, December 15, 2011

கேரளத்திற்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்போம் : த.தே.பொ.க. சிறப்பு மாநாடு : தீர்மானங்கள்

கேரளத்திற்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்போம் : த.தே.பொ.க. சிறப்பு மாநாடு : தீர்மானங்கள் தமிழர் உயிருக்கு உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற முழக்கத்தை முன்வைத்து மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சிறப்பு மாநாடு நடத்தியது. தீர்மானம் 1 இரஷ்ய நாட்டுக் கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுமின் நிலையம் எல்லா வகையிலும் ஆபத்தானது. தமிழ் மக்கள் உயிருக்கு உலை வைக்கக் கூடியது. எனவே இந்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. அணு உலைகள் இயங்கும்போது இயல்பாக வெளிப்படும் கதிரியக்கத் தனிமங்கள் காற்றிலும் நீரிலும் தாவரங்களிலும் கலந்து தலைமுறை தலைமுறையாகக் கொடிய நோய்களை ஏற்படுத்தக் கூடியது. இரத்தப் புற்றுநோய், கருச்சிதைவு, பிறவி ஊனங்கள் உள்ளிட்ட கொடிய விளைவுகள் அணு உலை கதிரியக்கத்தால் விளையும் என்பதை மருத்துவ ஆய்வுகளும் செர்னோபில், ஹிரோசிமா, புகுசிமா அனுபவங்களும் எடுத்துக் காட்டுகின்றன. கூடங்குளத்தில் நிறுவப்படும் வி.வி.இ.ஆர்.1000 என்ற வகை அணு உலையானது அது இயங்கத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் அவ்வுலைகளில் 32 வகையான குறைபாடுகள் உள்ளன என்றும் இரஷ்ய அரசு நியமித்த ஆய்வுக் குழுவே 2011 சூன் மாதத்தில் அறிக்கை அளித்துள்ளது. கூடங்குளம் அணு உலை நிறுவப்பட்டுள்ள இடம் பல அகவை உள்ள பாறைப் படிவங்களின் சந்திப்பு இடம் என்றும், அப்பகுதியின் கீழ் எரிமலைப் பாறைகள் உள்ளன என்றும் நிலவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அடிக்கடி நெல்லை மாவட்டத்தில் குறிப்பாகக் கூடங்குளம் பகுதியில் தொடர்ந்து ஏற்படும் நில அதிர்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. நில அதிர்வு ஏற்பட்டு அணு உலையில் சிறு கீறல் விழுந்தாலும் அதன் வழியாக வெளிப்படும் கதிரியக்கம் பேரழிவை உண்டாக்கும். பெருமளவில் கடல்நீர் வேகமாக உறிஞ்சப்படுவதாலும் மிகை வெப்பநீர் கடலுக்குள் மீண்டும் விடப்படுவதாலும் பெருமளவு கடல் உயிரிகள் வளம் குறிப்பாக மீன் வளம் பெருமளவு பாதிக்கப்படும் பல இலட்சம் மீனவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும்புனல் மின்சாரம், அனல் மின்சாரம், கதிரவன் மின்சாரம் போன்றவற்றை விட அணு மின்சாரம் கூடுதல் செலவு பிடிக்கக் கூடியது. எனவே எப்படிப் பார்த்தாலும் கூடங்குளம் அணு உலையை ஏற்கவே முடியாது. கூடங்குளம் அணு உலையை அத்திட்டத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி எதிர்த்துப் போராடுகிறது. இன்று இடிந்த கரையில் மையம் கொண்டு மீனவர்களும் உழைப்பாளர்களும் பல்லாயிரக்கணக்கில் ஒன்று கூடி நடத்திவரும் தொடர் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்திய அரசின் நயவஞ்சக முயற்சிகள் அனைத்தையும் முறியடித்து மக்கள் நடத்தும் இத்தொடர் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உறுதியாக ஆதரிக்கிறது. போராடும் மக்களை வாழ்த்துகிறது. இந்திய அரசு கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடும் வரை உயிர் ஈகம் செய்தாவது உறுதியாகப் போராடி அந்த அணு உலையை மூடச் செய்வோம் என இம்மாநாடு உறுதியேற்கிறது. தீர்மானம் 2 தமிழக அரசே நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே கேட்டுப் பெறு நெய்வேலி மின்சார நிலையத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு வழங்கப்படுவதில்லை. தமிழ் மண்ணின் நிலக்கரியைப் பயன்படுத்தி நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் கர்நாடகாவுக்கு நாள்தோறும் 11 கோடி யூனிட் அனுப்பப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் துடிக்கும் கேரளாவிற்கு இங்கிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் செல்கிறது. ஆந்திராவுக்கு 6 கோடி யூனிட் மின்சாரம் போகிறது. இம்மின்சாரம் தமிழகத்திற்கே திருப்பப்பட்டால் தமிழ்நாட்டில் மின்சாரப் பற்றாக்குறையே வராது. தமிழகத்தின் மின் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட்தான். ஆனால் அண்டை மாநிலங்களுக்கு அன்றாடம் அனுப்பப்படுவதோ 26 கோடி யூனிட் மின்சாரம். தமிழ் மண்ணின் மின்சாரத்தைப் பறித்து அண்டை மாநிலங்களுக்குக் கொடுத்துவிட்டு இந்திய அரசு தமிழ்நாட்டில் செயற்கையாக மின் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டு 2 மணி நேரம் என்றாலும் நாள்தோறும் 5 மணி நேரம் வரை மின்சாரம் வெட்டப்படுகிறது. தமிழகத்தில் சிறு தொழில்கள், வேளாண்மை ஆகியவை முடக்கப்படுகின்றன. மறுபுறம் இம்மின்பற்றாக்குறையையே காரணமாகக் காட்டி கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தமிழகத்தில் திணிக்கிறது இந்திய அரசு. இந்திய அரசின் இச்சதித் திட்டத்தை விழிப்புடன் இருந்து தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழகத்திற்கு உரிமையான நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு வழங்குமாறு இந்திய அரசைத் தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். அம்மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே பெற வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது. தீர்மானம் 3 முல்லைப் பெரியாறு அணை உரிமையை மீட்கும் வரை கேரளத்திற்கு எதிரான பொருளாதாரத் தடை விதிப்போம் முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது என்றும் முதல் கட்டமாக அதில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் சிற்றணையில் செய்ய வெண்டிய சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்தபின் முழு கொள்ளளவான 152 அடி வரை தமிழகம் தண்ணீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் உச்சநீதிமன்றம் 2006 பிப்27 அன்று தீர்ப்பளித்தது. மண்ணியல் வல்லுநர்கள் நீரியல் வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட குழுக்கள் அமைத்து கள ஆய்வு செய்ய வைத்து அவற்றின் பரிந்துரை அடிப்படையிலேயே உச்சநீதி மன்றம் இத்தீர்ப்பை வழங்கியது. கேரள அரசு இத்தீர்ப்பு தன்னைக் கட்டுப்படுத்தாது என்று கூறி புதிய சட்டத்திருத்தம் கொண்டு வந்து மேற்படி தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் தமிழகத்தைத் தடுத்து வருகிறது. இதை எதிர்த்துத் தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் 27.03.2006 அன்று வழக்குத் தொடுத்தது. உச்சநீதிமன்றம் நீதிபதி ஆனந்த் தலைமையில் வல்லுனர் குழு அமைத்து கள ஆய்வு செய்ய ஆணையிட்டது. அக்குழு தனது பரிந்துரையை 2012 சனவரியில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தையோ இந்திய அரசமைப்புச் சட்டத்தையோ சட்டை செய்யாமல் கேரள அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க மலையாள மக்களுக்கு இனவெறியூட்டி தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகிறது. அங்குள்ள ஆளும் காங்கிரசு கட்சி, எதிர்க்கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய சனதாக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் முல்லைப்பெரியாறு அணைச் சிக்கலில் தமிழினத்திற்கு எதிரான மலையாள இனவெறிச் சிக்கலாக மாற்றியுள்ளனர். எதிரும் புதிருமான இக்கட்சிகள் அனைத்தும் தமிழகத்திற்கு எதிரான பகை உணர்ச்சி என்னும் ஒரு புள்ளியில் இணைந்து செயல்படுகின்றன. கேரளத்தில் வாழும் அப்பாவித் தமிழர்களைத் தாக்குவது அவர்கள் நடத்தும் கடைகளைச் சூறையாடுவது ஐயப்பன் கோயிலுக்குப் போகும் தமிழ்நாட்டு பக்தர்களைத் தாக்குவது தேனி மாவட்டத்திலிருந்து கூலி வேலைக்குச் செல்லும் நூற்றுக்கணக்காக தமிழ்ப் பெண்களைச் சிறைப்பிடித்து மானபங்கப்படுத்துவது தமிழக ஊர்திகளைத் தாக்குவது போன்ற அட்டூழியங்களை மலையாள இனவெறியர்கள் செய்துவருகிறார்கள். இந்த இன இழிவுகளையும் பேரவலங்களையும் சொல்லி நாம் சோகத்தைப் பகிர்ந்து கொள்வது மட்டும் போதாது. இந்த அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் மலையாளிகளுக்கு தமிழகத்தில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை உரிமையை ஏற்கும் வரை கேரளத்திற்கு எதிரான பொருளாதார தடையை எல்லாப் பாதைகளிலும் செயல்படுத்த வேண்டும். முற்றிலுமாக தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பொருள் போக்குவரத்தை நிறுத்த வேண்டும். முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்காக நயவஞ்சக நோக்கோடு புதிய அணை கட்டித் தருவதாக ஏமாற்று வாக்குறுதி தருகிறார்கள் மலையாள அரசியல்வாதிகள். அடுத்ததாக, முல்லைப் பெரியாறு அணை நீர் தேக்க உயரத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். நீதி மன்றத்திற்கு வெளியே முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று ஆசை வார்த்தை காட்டுகிறார்கள். தமிழ்நாட்டை ஏமாற்றுவதற்கு கேரள ஆட்சியாளர்கள் செய்யும் இந்த சாகசங்களுக்குப் பலியாகாமல் அவற்றை ஏற்க மறுத்துவரும் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. தமிழக அரசு இந்நிலைப்பாட்டைத் தொடர்வதுடன் கேரள சூழ்ச்சிகளை முறியடிக்க தமிழக மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டி ஒருமித்த திசையில் தமிழக மக்களைத் திரட்டிக் கொள்ள உரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும். கேரளத்திற்கு எதிரான தொடர் “பொருளாதார தடையை அணை உரிமையை மீட்கும் வரை மக்கள் செயல்படுத்த தமிழக அரசு உறுதுணை புரிய வேண்டும் என்றும், மக்களின் முயற்சிகளுக்க தடை போடக் கூடாது என்றும் இம்மாநாடு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. முல்லைப் பெரியாறு உரிமையை முழுமையாக மீட்கும் வரை தமிழக மக்கள் ஒருங்கிணைந்து உறுதியாகப் போராட வேண்டும் என்றும் ம லையாள இனவெறிக்கத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் தமிழக மக்களை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் 4 முல்லைப் பெரியாறு அணை உரிமைப் போராட்டத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு கேரளத்தில் தமிழ் மக்கள் மலையாள இனவெறியர்களால் தாக்கப்படுவது கண்டும் தமிழர் நிறுவனங்கள் சூறையாடுவதைக் கண்டும் ஐயப்பன் கோயில் பக்தர்களைத் தாக்குவது கண்டும் தமிழ்ப் பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்ட மானபங்கப் படுத்தப்படுவதை அறிந்தும் உணர்ச்சிக் கொந்தளிப்பு ஏற்பட்டு அதற்கு பதிலடியாக தமிழத்தில் உள்ள மலையாளிகளை வெளியேற வலியுறுத்தியும் மலையாள நிறுவனங்களை மூடக் கோரியும் த.தே.பொ.க. தோழர்களும் இன உணர்வாளர்களும் போராட்டங்கள் நடத்தினார்கள். அதற்காக அவர்கள் மீது பிணையில் வரமுடியாத கடும் பிரிவுகளில் சென்னை போன்ற இடங்களில் பொய் வழக்குப் பதிவு செய்து அவர்களைச் சிறையில் அடைத்துள்ளது தமிழகக் காவல்துறை. சிறையில் உள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இப்போராட்டம் தொடர்பாக போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டுமென்றும் இம்மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது. தீர்மானம்: 5 தேவாரத்தில் நியூட்ரினோ நிறுவனத்தைத் தொடங்காதே! தேவராத்தில் நியூட்ரினோ நிலையம் நிறுவ இந்திய அரசு முயன்று வருகிறது. அணு உலையைப் போலவே நியூட்ரினோ நிறுவனமும் உயிருக்கு ஆபத்தானது. கதிரியக்கத்தையும், நில அதிர்வுகளையும் நியூட்ரினோ ஆலை வெளிப்படுத்தும் மலை வளத்தையும், நீர் ஆதாரங்களையும் நாசப்படுத்தும். எனவே இந்திய அரசு நியூட்ரினோ திட்டத்தை உடனே கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. :

Saturday, December 10, 2011

தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் குவைத் தமிழர் கூட்டமைப்பின் வேண்டுகோள்: வணக்கம். குவைத்தில் வாழ்ந்துவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அமைப்புகளும் இணைந்து இக்கோரிக்கையினை முன்வைக்கின்றோம். தமிழகத்தில் மொழிக்கும் இனத்திற்கும் நிலத்திற்கும் எதிரான செயல்பாடுகள் எவ்வித அச்சுறுத்தலுமின்றிப் பரவித் தமிழர்களை அழுத்திவைப்பது நெடுங்காலமாக மிக எளிதாக நடைபெற்று வருகின்ற ஒன்றாகும். இது அண்மைக்காலங்களில் அதிகமாகவும் அழுத்தத்தோடும் நடைபெற்றுவருகிறது. காலங்கள் பல கடந்தும் எவ்விதமான பிரச்சனைகளும் நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்லாமல் உள்ளன. ஆக்கப்பூர்வமான வழிமுறை இல்லாமலும் ஒருமித்த கருத்தினடிப்படையில் அரசியல் இயக்கங்கள் இணைந்து போராடும் நிலை இல்லாமலும் இருந்து வருகிறது. தமிழகத்திற்கெதிரான அண்டை மாநிலங்களான கருநாடகா, கேரளா ஆந்திராவிற்கெதிரான எந்தவொரு நிலையான முடிவை எட்டாமலும், நிரந்தரத்தீர்வை வலியுறுத்தும்படியான செயல்பாடுகளைச் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ எடுப்பதற்கான முயற்சிகளும் இன்றி, இவற்றிக்கெதிராகப் போராடும் இயக்கங்களை ஒடுக்குவதிலும் ஒழிப்பதிலும் மட்டுமே ஆர்வங்கொண்டு இயங்குகின்றன தமிழகத்தை ஆளும் கட்சிகள். தமிழ் மொழியினைக் காப்பதற்கான நடவடிக்கைகளும், தமிழகத்தின் அனைத்து அரசு நடைமுறைகளிலும் ஆட்சி மொழியாக நிலைக்க வைக்கும் முயற்சிகளும், கல்வி மொழியாகவும், சட்ட மொழியாகவும் நிலைநிறுத்தவும் எவ்வித முயற்சியும் தமிழகத்தில் இல்லை. இதுகுறித்த கவலைதுளியும் இன்றி, கொள்கை அளவில் கூடப் பல கட்சிகளுக்குச் சரியான புரிதல் இல்லாத நிலையே காணப்படுகிறது. மொழி வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் அக்கறையற்ற அரசுகள்தாம் தமிழகத்தை ஆண்டுவருகின்றன. நிலவளம், ஆற்றுவளம், இயற்கைச் செல்வங்கள், பழங்காலச் சான்றுகள் யாவும் காக்கப்படவில்லை. பண்பாடு, கலை இலக்கியச் செல்வங்களைக் காப்பதிலும் எவ்வித அக்கறையுமற்ற அரசுகள்தாம் நம்மை ஆண்டுகொண்டு வருகின்றன. ஈழத்தில் இனப்படுகொலையானாலும் பரமக்குடியில் ஆதிக்குடிகள் கொல்லப்பட்டாலும் இணைந்து முடிவெடுக்கும் கட்சிகள் தமிழகத்தில் காணப்படவில்லை. கூடங்குளப் போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் தமிழினத்தையும் காப்பதற்கானதென்றாலும் யாருமே குரல்கொடுக்க முன்வருவதில்லை. முல்லைப் பெரியாறில் தண்ணீர் தரமறுக்கும் கேடுகெட்ட மாநிலமாகக் கேரளா இருந்தும்கூட போராட்டத்தை முன்னெடுக்க தேர்தல் நிலைப்பாடற்ற இயக்கங்கள்தாம் முன்வருகின்றன.வலிவான திராவிடக்கட்சிகள் செயல்படாமல் உள்ளன. கடந்த ஊராட்சிமன்றத் தேர்தலில் ஏறத்தாழ 5 இலட்சம் பேர் போட்டியிட்டனர். சட்ட மன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைக்கவும் இடம்பெறவும் ஆளாய்ப் பறக்கின்றன ஆளத்துடிக்கும் கட்சிகள். ஊழல், இலஞ்சம் தனிமனித ஒழுக்கமின்மைகளில் முன்னிற்கின்றனர் தமிழக மக்கள் பிரதிநிதிகள். தமிழினத்திற்கெதிரான முயற்சிகளை முறியடிக்கவும், அவற்றிற்கெதிரான போராட்டங்களை நடத்திடவும் இவர்கள் யாரும் முன்வருவதில்லை. தமிழகத்தைத் தானே ஆளப்போவதாக அறைகூவல் விடுக்கும் இப்போலிகள், போராட்டக்களங்களில் முகம்கொடுக்க மறுக்கின்றனர். இனியும் இத்தன்மைகளைக் கொண்டு இயங்குபவர்களைப் பொறுத்துக்கொள்ளத் தமிழகம் தயாராயிருக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கு வேண்டாம். தயங்காமல் போராடுபவர்களும் தமிழினத்திற்காக இயங்கும் உண்மையான தமிழர்களையுமே தலைவர்களாக ஏற்க தமிழினம் தயங்காது, தான் தோன்றித்தனமாய்த் தன்னலம் கொண்டலையும் தலைவர்கள் என்போரைத் தள்ளிவிடவும் தயங்கமாட்டோம். தமிழகத்தை ஆளவும், மக்கள் பிரதிநிதிகளைப் பெருமளவில் வைத்துக்கொள்ளவும் துடிக்கும் கட்சிகள், தமிழகத்திற்கும் மக்களுக்கும் உண்மையாகப் பணியாற்ற கடைசியான ஒரு வாய்ப்பாக முல்லைப்பெரியாறு பிரச்சனையினைக் கருத்தில்கொண்டு, இப்பிரச்சனையில் தமிழகத்திற்கு உறுதியான நிலையான முடிவினைக் காண வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளிலும் தமிழகத்திற்கும் தமிழினத்திற்கும் நியாயமான உண்மையான காரணங்கள் இருந்தும் எதிராளிகள் தமிழினத்தைக் கொன்றொழிக்கும் முயற்சிகளில் தொடந்து ஈடுபட்டு வருகின்றனர். இவற்றையெல்லாம் முறியடிக்காது வெற்றிகொள்ளாமல் அதனைச் சிதைப்பது போன்ற நிலைகளிலேயே தமிழகக் கட்சிகள் இயங்கிவருகின்றன. முல்லைப் பெரியாறு பிரச்சனையில், தமிழக கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும். கேரளத்திற்கெதிராகச் சட்டரீதியாகவும் நடுவண் அரசு மூலமாகவும் இறுதியான தீர்வினை எட்ட வேண்டும். கேரளத்திற்கெதிராகப் பொருளாதாரத் தடைவிதித்து, தமிழகத்திலிருந்து செல்லும் காய்கறிகள் பால் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், மணல், மின்சாரம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் ஆகிய அனைத்தையும் உடனே தடைசெய்ய வேண்டும். தமிழகத்தில்,புதுவையில் இயங்கும் மலையாளிகளின் நிறுவனங்களை உடனடியாகப் பூட்டவேண்டும். இவை இனி என்றுமே தமிழர்களிடம் வணிகம் செய்யும் வாய்ப்பினை இல்லாமல் செய்ய வேண்டும். தமிழர்களிடம் இத்தகு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்திலிருந்து கேரளாவிற்குக் கட்டுமானப் பணிகளுக்கும் பிற பணிகளுக்கும் பெருமளவில் கூலிகளாகச் சென்று பணிபுரிபவர்களை உடன் திரும்ப அழைத்து, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர்கள் பணிபுரியும் இடங்களில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தரவேண்டும். மலையாள பத்திரிக்கைகள் திரைப்படங்களைத் தமிழகத்தில் தடைசெய்யவேண்டும். மலையாள தொலைக்காட்சிகளை தமிழகத்தில் தடைசெய்யவேண்டும். அனைத்து கம்பிவட இணைப்பாளர்களையும் இதற்கென அணுகி, அவர்களை இணங்கச்செய்ய வேண்டும். தமிழ்த் திரைப்பட உலகில் பணிபுரியும் அனைத்து மலையாளிகளையும் வெளியேற்ற வேண்டும். மலையாளிகள் நடித்தப் படங்களையும் அவர்களால் தயாரிக்கப்பட்ட படங்கள், மலையாளக் கலைஞர்களின் பங்களிப்புடன் வெளிவரும் திரைப்படங்களையும் வெளியிடத் தடைவிதிப்பதோடு, இதற்கு இணங்கிச் செயல்பட அனைத்து தமிழ்த்திரைக் கலைஞர்களையும் வலியுறுத்தவேண்டும். கேரள மாணவர்களைத் தமிழகக் கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளத் தடைவிதித்து, அனைத்துக் கல்வி நிலையங்களையும் இதற்கு உடன்பட வைக்க வேண்டும். தமிழகத்தில் பல இடங்களில் ஆயிரக்கனக்கான ஏக்கர் நிலங்களை மலையாளிகள் வாங்கிக் குவித்துள்ளனர். இந்நிலங்களைக் கைப்பற்றித் தமிழகத்திற்குச் சொந்தமாக்க வேண்டும். தமிழகத்தில் விளையும் காய்கறிகள், உணவுப்பொருட்கள், மீன் ஆடு மாடு உள்ளிட்டவற்றையும் ஏனைய தயாரிப்புக்களையும் தமிழர்களே ஏற்றுமதி செய்ய வழிவகை காணவேண்டும். தமிழகத்தில் எல்லா வளமிருந்தும், கல்வியும் திறமையுமுள்ளவர்களாகத் தமிழர்கள் இருந்தும், அரசியல், அறிவியல், அறவியல் என்று அனைத்துத் துறைகளிலும் தமிழர்கள் முதன்மைப்பெற்றிருந்தாலும் எங்கும் அடிமைகளாகவும் முன்னின்று செயலாற்றும் வாய்ப்பினைப் பெறாமலும், எதிரிகளின் சூழ்ச்சிகளுக்கும் பகைமைகளுக்கும் ஆளாகி, தம்மில் பிரிந்து, வாழவழியற்ற நாதியற்ற ஓரினம்போல் இருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. பழம்பெருமைகளைப் பேசுவதும், வாய்ப்பு கிடைக்குமிடங்களில் உணர்ச்சியாகப் பேசி உரக்கக்கூவிப் பிரிவதும், தன்னலம் ஓங்கிக் காணப்படுவதும், ஊழல் இலஞ்சம் மிகுந்தும், ஆள்வோருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அடிமைப்பட்டுக்கிடப்பதுமான நிலைகள் மாற வேண்டும். தமிழினம் தழைத்தோங்க அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைந்து செயலாற்றக் கேட்டுக்கொள்கிறோம். தமிழக மக்களுக்கு அன்பான வேண்டுகோள்: அன்பிற்கினியத் தாய்த்தமிழ் உறவுகளே! மூன்று தமிழர்களின் தூக்கு, கூடங்குளப் பிரச்சனைகளில் தாங்கள் தன்னெழுச்சியாகப் போராடுவதைக் கண்டு பெருமிதம் கொண்டோம். தொடர்ந்து இதுபோன்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழர்கள் என்ற ஒரே குடையின் கீழ் இணைந்து செயல்பட வேண்டுகிறோம். தேர்தல் காலங்களில் மட்டும் தங்கள் கால்களில் விழுந்து, வெற்றி பெற்றப்பின் தங்களின் கருத்தினை, பிரச்சனைகளைக் கருதாமல் தன்னலம்கொண்டு இயங்கும் மக்கள் பிரதிநிதிகளைக் கீழ்பணியச் செய்து மக்கள்பணியாற்றிடும் கட்டாயத்தை உருவாக்குங்கள். மாறானவர்களை முற்றிலும் புறக்கணித்து அவர்களை இயங்கவிடாமல் செய்யுங்கள். பொருளாதார வகைகளிலும் அரசுப்பணிகள், தொழில் துறைகளிலும் முன்னேறி வளங்கொண்ட தமிழகத்தை உருவாக்குங்கள். நமக்கான நாட்டினை நாமே உருவாக்குவோம். முல்லைப் பெரியாற்றை வென்றெடுப்போம்! இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்! நன்றி. குவைத் தமிழர் கூட்டமைப்பு kuwaitthamizhar@gmail.com 00965-66852906

Friday, December 9, 2011

மலையாளிகள் - ஒரு பார்வை : ( சும்மா ஒரு மீள்பதிவு :) - நாஞ்சில் எக்ஸ்பிரஸ்™

ஒரு முறை பீகாரில் நடந்த ரயில் விபத்து பற்றி இந்து பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் வேடிக்கையாக ஒரு செய்தி வெளியிட்டிருந்ததாம் இந்த விபத்தில் மலையாளிகள் யாரும் இறக்க வில்லையென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு மலையாளிகள் இல்லாத இடமில்லை. சாதாரண தொழிலாளி முதல் பெரிய உயர்பதவிகள் வரை இவர்களை பார்க்கலாம். இவ்வளவு இருந்தும் இவர்களிடம் இருக்கும் குறுகிய மனப்பான்மை படிப்பறிவு அற்ற பீகாரிகளை விட கேவலமான ஒன்று. மற்ற மாநிலத்தவர்களை ஏளனமாக பார்ப்பது மலையாளிகளின் குணம். அதிலும் தமிழன் என்றால் இவர்களுக்கு கேலிப்பொருள். சமீபத்தில் நடிகர் ஜெயராம் தமிழ்பெண்களைப்பற்றி விமர்சனம் செய்தது ஒன்றும் மலையாளிகளை பொறுத்த வரை புதிய விசயமல்ல. தமிழர்களையும், தமிழ்நாட்டையும் கிண்டல் பண்ணுவது என்பது அவர்களுக்கு சாதாரணமான ஒன்று. தமிழனை பாண்டி என்றும் பெண்களை தமிழத்தி என்றும் என்றும் கிண்டலாக அழைப்பதுண்டு. காடுகளில் வாழ்ந்து கப்பை கிழங்கையும், மத்தி மீனையும் சுட்டுத்தின்று கட்டஞ்சாயா குடித்து வயிறு நிரப்பியவர்களுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்து, பேச மொழியையும் கற்றுக்கொடுத்தவன் தமிழன். மலையாள இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் கடைசி தலைமுறை. இவர்கள் தமிழர்களை கிண்டல் பண்ணுவது வேடிக்கைான ஒன்று. பத்து மலையாளிகளுக்கு நடுவில் ஒற்றைத்தமிழனாக வேலைசெய்து பார்த்தால் தெரியும் நீங்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று, அதுவே பத்து தமிழர்களுக்கு நடவில் ஒரு மலையாளி என்றால் அது மாதிரி நமக்கு யோசிக்கவே தோணாது. மலையாளக்கரையோரத்தில் பிறந்தவன் என்பதால் மலையாளிகளைக்குறித்து சற்று அதிகம் தெரிந்தவன் நான். நான் சும்மா சொல்கிறேன் என்று நம்ப மறுத்தால் நாஞ்சில் நாடன் எழுதிய தீதும் நன்றும் படித்துப்பாருங்கள். மலையாள கரையோர எழுத்தாளனின் அனுபவங்களில் இதைப்பற்றி அதிகம் எழுதியிருப்பார். அவர் சொல்லியிருக்கும் இதுபோன்ற பல உதாரணங்களில் ஒன்று: மலையாள நாடன் பாட்டு என்று சொல்லப்படும் நாட்டுப்புற பாட்டு ஒன்றில் "சுத்தம் இல்லாத தமிழனுக்கு சூலடி" என்று ஒரு வரிவரும், சூல் என்றால் துடைப்பைக்கட்டை. சுத்தம் இல்லாத தமிழனுக்கு துடைப்பக்கட்டையால் அடிகொடுக்கவேண்டும் என்பது அர்த்தம். சுத்தம் பற்றி பேசுபவர்களின் சுத்தம் எப்படி என்று தெரியவேண்டுமென்றால் திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்துநிலையம் சென்றால் அறியலாம். ஒரு மாநிலத்தில் தலைநகரின் முக்கிய பேருந்து நிலையம் எப்படி நாறிப்போய் கிடக்கிறதென்று பார்க்கலாம். வெயில் காலத்திலேயே கால் வைத்தால் தொற்றுநோய் வந்துவிடுமோ என்றநிலை. மழைவந்தால் சும்மா மணக்கும். இவர்கள் தமிழனின் சுத்தம் பற்றி பேசுகிறார்கள். சினிமாவிலும் தமிழர்களை கிண்டல் பண்ணுவதை கவனிக்கலாம். திருடர்கள், கூலிவேலைக்காரர்கள், வீட்டுவேலைக்காரர்கள், அடியாட்கள் இதுபோன்ற பாத்திரங்களில் தமிழர்களையே தமிழ்பேசி நடிக்க வைப்பார்கள் அல்லது மலையாளிகளை தமிழ்பேசவைத்து நடிக்க வைப்பார்கள். தமிழர்களின் ஒழுக்கத்தை குறை சொல்பவர்களின் ஓழுக்கம் பற்றி ஊருக்கே தெரியும். இந்தியாவில் அதிகம் மது அருந்துபவர்கள் இருக்கும் மாநிலம் கேரளா, அதிகம் கருச்சிதைவு நடக்கும் மாநிலம் கேரளா. மலையாளிகள் பங்கு இல்லாமல் வளைகுடாக்களில் கொலை, கொள்ளையில் நடப்பதில்லை. இந்த லட்சணத்தில் இவர்கள் தமிழனின் ஒழுக்த்தை குறைசொல்கிறார்கள். கோவை, குமரி மாவட்டத்தின் எல்லைகளில் செல்லும் வாகனங்களை இரண்டு நாட்கள் நிறுத்தினால் மொத்த கேரளாவும் அரிசி கிடைக்காமல் பட்டினி கிடக்கும், குழந்தைகள் பால் இல்லாமல் பசியில் அழும், கட்டிட வேலைகளுக்கு மண் இல்லாமல் வேலைகள் முடங்கும், நெய்வேலியிலிருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்தினால் மொத்த கேரளாவும் இருட்டில் மூழ்கும். மொத்தத்தில் தமிழ்நாட்டை அண்டிப்பிழைக்கும் இவர்களுக்கு இத்தனை நக்கல் அதிகம் தான். சொந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் ஆப்படிக்கும் நோக்கத்தில் கட்சி நடத்தும் சிவப்புக்கொடி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களை ஆட்சியில் அமர்த்துவதிலிருந்தே தெரிகிறது, மலையாளிகளின் புத்திசாலித்தனம். மலையாளிகள் தமிழர்களை கிண்டல் பண்ணுவதற்கும் சூரியனைப்பார்த்து நாய் குரைப்பதற்கும் பெரிதாக வித்தியாசயொன்றுமில்லை. நல்லாருங்கடே மக்கா...

Thursday, December 8, 2011

நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்ளும் : சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கயில், ’’முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அந்த இடத்தில் புதிதாக அணைக் கட்டி தமிழகத்தின் உரிமைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் கேரள அரசும், அம்மாநில அரசியல்வாதிகளும் செய்துவரும் மிரட்டல் அரசியலே தமிழினத்தவருக்கு எதிராக அம்மாநிலத்தில் நடந்துவரும் வன்முறை வெறியாட்டங்களாகும். 116 ஆண்டுகள் பழைமையாகிவிட்ட முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது, அது நிலநடுக்கத்திற்குத் தாங்காது உடைந்து விடலாம், அப்படி உடைந்தால் கேரளத்தின் நான்கு மாவட்டத்தின் பெருத்த உயிர் சேதம் ஏற்படும் என்றெல்லாம் கால் நூற்றாண்டாக, கேரள மாநில அரசும், அம்மாநில அரசியல் கட்சிகளும் பரப்புரை செய்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை உடைவது போல் படமெடுத்து, அதனை கேரள மாநில திரையரங்குகளில் போட்டுக்காட்டியும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக அம்மக்களை தூண்டி வந்தன. இப்போது கேரள அரசே நிதியுதவி செய்து ஒரு பெரிய படமொன்றையும் எடுத்து வெளியிட்டுள்ளது. ஆனால் இத்தனை ஆண்டுக்காலமும் எவ்வித பாதிப்பும் இன்றி மலைபோல் உறுதியாக முல்லைப் பெரியாறு அணை நின்றுக்கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணை உள்ள இடத்தில் நிலநடுக்கம் ஏற்பாட்டல் அது உடைந்துவிடும் என்ற கேரள அரசின் பரப்புரை எந்த அளவிற்குத் தவறானது என்பதை நிரூபிக்க, 1993ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரில் நடந்த நிலநடுக்கத்தை சுட்டிக்காட்டலாம். ரிக்டர் அளவுகோலில் 6.4 ரிக்டர் அளவுகோலுக்கு நடந்த அந்த நிலநடுக்கத்தில் 10,000 மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அங்கிருந்த கொய்னா அணைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதுவும் முல்லைப் பெரியாறு அணையைப் போல் பழைய முறையில் கட்டப்பட்ட (Masonry Dam) அணைதான். எனவே நிலநடுக்கப் பூச்சிகாட்டல் அடிப்படையற்றது என்பது கட்டடப் பொறியாளர்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, முல்லைப் பெரியாறு அணை பலவீனமான உள்ளது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத கேரள அரசு, அப்பிரச்னையை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவந்து சிக்கலாக்கவே இரு மாநில மக்களுக்கு இடையிலான மோதலை தூண்டி வருகிறது. நீதிமன்றத்தில் சட்ட ரீதியாக, தொழில் நுட்ப ரீதியாக சாதிக்க முடியாததை வன்முறையின் மூலம் சாதிக்கத் துணிந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த அராஜக விளையாட்டு எப்போது தொடங்கியுள்ளது என்று பார்த்தாலே, இதன் பின்னணியில் உள்ள சதி புரியும். கேரள முதல்வர் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசிய பிறகே தமிழக மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள தோட்டங்களில் பணியாற்றிவிட்டுத் திரும்பிய தமிழ்நாட்டுப் பெண்கள் சிலரின் சேலையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளனர். அம்மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சிறு கட்சிக்காரர்கள் அணையை உடைப்போம் என்று கூறிக்கொண்டு அணைப் பகுதிக்குள் செல்ல முயன்றுள்ளனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேரள மாநில காவல் துறையினர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிந்துள்ளனர். முல்லைப் பெரியாறு பிரச்னை தொடர்பாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க கேரள, தமிழக முதல்வர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பதன் நோக்கம், பிரச்னையை நீதிமன்றத்தின் விசாரணையில் இருந்து மீட்டு, பேச்சுவார்த்தை என்ற வலையில் தமிழகத்தை சிக்க வைத்து, அணையை உடைக்க கேரள அரசிற்கு சாதமான தீர்வைத் திணிக்கவே என்பதை தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த மாதம் 22ஆம் தேதி மத்திய நீர்வளத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சலை கேரள முதல்வர் உம்மன் சாண்டி சந்தித்துப் பேசினார். அப்போது புதிய அணை குறித்த திட்டத்தை அளிக்குமாறு உம்மன் சாண்டியிடம் பவன் குமார் பன்சல் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகு, 25ஆம் தேதி கேரள மாநிலத்தின் அனைத்துக் கட்சிக் குழு பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை கோரிக்கையை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்தே உம்மன் சாண்டி பிரதமரை சந்தித்துப் பேசியுள்ளார். ஆக, கேரள அரசும், அரசியல் கட்சிகளும் ஒன்று கூடியே இந்த பேச்சுவார்த்தை சதித் திட்டத்தை அரங்கேற்றி வருகின்றன. எனவே, பேச்சுவார்த்தை அழைப்பை தமிழக முதல்வர் நிராகரித்து இருப்பது சரியான நடவடிக்கையாகும். முல்லைப் பெரியாறு அணையின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநிறுத்த நீதிமன்ற வழியே சரியானது, அதனை விட்டு ஒருபோதும் தமிழக அரசு விலகக் கூடாது. 1979ஆம் ஆண்டு அணை பலவீனமான இருக்கிறது என்று கூறி நீர்தேக்கம் அளவை 152 அடியில் இருந்து 136 அடிக்கு குறைத்த கேரள அரசு, அதனை 120 அடிக்குக் குறைக்க வேண்டும் என்று நேற்று கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்று, அம்மாநில கட்சிகளின் இந்நோக்கத்தை புரிந்துகொள்ளத் தவறியது ஏன் என்று புரியவில்லை. எனவே, தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் வன்முறையானது முல்லைப் பெரியாறு அணையை உடைத்து தமிழினத்தின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக முடக்குவதே என்பதை புரிந்துகொண்டு, கேரள அரசியல்வாதிகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும். இந்த உண்மையை தென்தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வரும் 17, 18ஆம் தேதிகளில் நாம் தமிழர் கட்சி நடைபயணம் மேற்கொள்ளும். அப்பகுதியில் பொதுக் கூட்டங்களை நடத்தி கேரள அரசியல்வாதிகளின் சதித்திட்டத்தை தமிழர்களிடையே பகிரங்கப்படுத்துவோம். முல்லைப் பெரியாறு அணை தமிழினத்தின் சொத்து, அதனை விட்டுவிடாமல் கட்டிக்காத்து தமிழினத்தின் உரிமையை நிலைநிறுத்துவோம்’’என்று தெரிவித்துள்ளார். :

Wednesday, December 7, 2011

உடையப் போவது அணையா? தேசிய ஒருமைப்பாடா?

1886 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத் துக்கும் சென்னை மாகாணத்துக்கும் இடையே 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. 125 ஆண்டுகள் முற்றுப் பெறுவதற்கு முன்பாகவே இந்த ஒப்பந்தத்தை முறிக்கும் வகையில் கேரள மாநில அரசு நடந்துகொள்வது சரியானது தானா? இந்தப் பிரச்சினையில் தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்கிற முரட்டுத் தனத்தில் கேரளா ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. இப்பொழுது கேரள அரசின் பாதுகாப்போடு வன்முறை நிகழ்வுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்குச் சொந்தமான பேருந்துகள், லாரிகள் தாக்கப்படுகின்றன. சபரி மலைக்குச் செல் லும் தமிழ் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள்கூட தாக்கப் படும் அவலம். வேலைக்குச் செல்லும் தமிழர்கள் அடித்து விரட்டப்படுகின்றனர். கேரள இளைஞர் காங்கிரசினர் தமிழ்நாட்டின் எல்லைக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தி இருக் கின்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறையினர் தாக்கப்பட்டிருக்கின்றனர். தமிழ்நாட்டின் பகுதியில் காங்கிரஸ் கொடியை நட்டு வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். பி.ஜே.பி.யும் தன் பங்குக்குப் போராட்டம் நடத்துகிறது. இதன் பொருள் என்னவாக இருக்க முடியும்? கேரளாவில் காங்கிரஸ் ஆளும் கட்சியாக இருக்கிறது என்பதை நினைவூட்டவா? தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி என்று ஒன்று இருக்கிறதா? அது என்ன செய்து கொண்டிருக்கிறது? அதன் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் என்பது வெறும் மாநிலக் கட்சிதானா? அது தேசியக் கட்சி என்ற நிலையை இழந்துவிட்டதா? ஒருக்கால் தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசுக்கு மட்டும்தான் தேசிய உணர்வு உண்டு; மற்ற மாநிலங் களில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்த உணர்வு கிடையாது என்பதையாவது அறிவித்து விடட்டும். காங்கிரசின் இந்த நிலைப்பாடுதான் கேரளா மற்றும் கருநாடக மாநிலத்தில் உள்ள பி.ஜே.பி., இடது சாரிகள் நிலையும் கூட. என்னதான் தேசியம் பேசினாலும் உள்ளத்துக்குள் ஊற்று எடுத்துக் கொண்டு இருப்பது மாநில உணர்ச்சி தான்! அதையாவது அறிவு நாணயமாக ஒப்புக் கொள்ள வேண்டாமா? தங்கள் பக்கம் நியாயம் இல்லை - ஏற்கெனவே வந்த தீர்ப்புகள் மறுபடியும் வந்துகொண்டிருக்கும் என்பதை உணர்ந்த நிலையில், வன்முறையில் இறங் கும் ஒரு வேலையில் கேரளா இறங்கியுள்ளது. இதற் குக் கேரள மாநில அரசும் பின்னணியில் உள்ளது. இதன் மூலமாக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் அமைந்துள்ள குழுவையும் மிரட்டுகின்ற யுக்தியைக் கையாளுகின்றார்கள். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி மிகப் பெரிய அளவில் பெரும்பான்மை கொண்ட ஆட்சியாக இல்லை. நூலிழையில் நித்திய கண்டம் பூரண ஆயுள் என்ற பரிதாபத்தில்தான் உள்ளது. இதிலிருந்து மீளும் யுக்தியும் இதில் புதைந்து இருக்கிறது. காவிரிப் பிரச்சினையில் கருநாடக மாநிலமும் சரி, முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவும் சரி, ஒரு சார்பாக எல்லா வகையான நியாயங்கள், நேர்மை, நாணயம், நீதி, சட்டம், ஒப்பந்தம் முதலியவற்றை எல்லாம் மூர்க்கத்தனமாக தூக்கி எறிந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மத்திய அரசின் போக்கும் சந்தேகத் துக்கு அப்பாற்பட்டதாக இருக்கவில்லை. தேர்தல் நேரம் என்றபோது கண்டும் காணாமலும் இருந்தது. தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி நடத்தும் நிலையில், காங்கிரசுக்குச் சாதகமான மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. திட்டவட்ட மாக பிரதமர் வாயிலிருந்து சொற்கள் வருகின்றனவா? அணையை உடைக்கும் அளவுக்குக் கேரளா நடந்து கொள்ளும் நிலையில், மத்திய காவல் படையைப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையைக் கூட ஏற்காமல் அதிகாரிகளைக் கலந்து ஆலோசிப்பதாகக் கூறுவது எல்லாம் தட்டிக் கழிக்கும் ஒன்றாகவே கருதப்பட வேண்டியுள்ளது. அணையை மட்டும் உடைக்கவில்லை. தேசிய ஒருமைப்பாட்டையும் உடைத்திட தேசியவாதிகள் முண்டா தட்டி நிற்பது பரிதாபமே!

Tuesday, December 6, 2011

முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை வெளியேற்றுவோம்: ததே.பொ.க.

தமிழகத்திற்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணையை உடைக்கத் துடிக்கும் மலையாளிகளை தமிழகத்திலிருந்து வெளியெற்றுவொம் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். முல்லைப் பெரியாறு அணையைக் காப்போம் என வலியுறுத்தி (03.12.2011) மாலை, மதுரை காளவாசல் மாப்பிள்ளை விநாயகர் திரையரங்கு அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன், “கேரள அரசின் தலைமை வழக்கறிஞர் தண்டபாணி கேரள உயர்நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், பாதுகாப்பு குறைபாடுகள் ஏதும் இல்லையென்றும், ஒருவேளை அணை உடைந்தாலும் அத்தண்ணீர் முழுவதையும் முல்லை பெரியாறு அணைக்கு கீழ்ப்பகுதியில் உள்ள பெரிய அணையான இடுக்கி அணை உள்வாங்கிக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார். அணை பலவீனமடைந்திருப்பதாக அச்சம் ஏற்படுத்தும் பரைப்புரையை ஊடகங்கள் தான் செய்கின்றன என்றும் அவர் கூறினார். இது தான் உண்மை நிலை. ஊடகங்கள் மட்டுமின்றி, இதற்கு நேர் மாறாக காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தமிழனப்பகை வெறியைப் பரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணையை விட இடுக்கி அணையின் கொள்ளளவு 7 மடங்கு பெரியது. எனவே எந்த நிலையிலும் அங்கு அச்சப்படுவதற்கு அடிப்படையே இல்லை. வேண்டுமென்றே தமிழினப் பகைப் பரப்புரை கேரளத்தில் நடக்கிறது. கேரளத்தின் அடிப்படை உணவுத்தேவையை தமிழகமே நிறைவு செய்கிறது. நாள் தோறும் 700 டன் அரிசி தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்கிறது. கேரளத்தின் முழு இறைச்சித் தேவையையும், காய்கறி, முட்டை ஆகியவற்றின் தேவையையும் தமிழ்நாடு தான் நிறைவு செய்கிறது. நெய்வேலி இரண்டாம் அனல் மின்நிலையத்திலிருந்து நாள்தோறும் 9 கோடி யூனிட் மின்சாரம் தமிழகத்திலிருந்து கேரளா செல்கின்றது. தமிழ்நாட்டில் வாழும் 30 இலட்சம் மலையாளிகள் வணிக அரசர்களாகவும், உயர் பதவிகளிலும் கோலோச்சுகிறார்கள். ஆனால், இதற்கான நன்றியுணர்ச்சி சிறிதும் இல்லாமல் தமிழினப் பகையோடு மலையாளிகள், முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து தமிழ்நாட்டு மக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். குமுளியில் தமிழர்களின் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது. இது தொடருமேயானால், தமிழகத்திலிருந்து மலையாளிகள் அனைவரையும் வெளியெற்றும் போராட்டத்தை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் கேரளத்திற்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்து பொருள் போக்குவரத்தை முடக்க வேண்டும். நெய்வேலி மின்சாரம் கேரளாவிற்கு செல்வதைத் தடுக்க வேண்டும். தமிழர்களுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று பேசினார்.

Friday, December 2, 2011

ஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள்.

ஒரு மலையாள படத்தில் இந்திய அமைதி (அழிப்பு ) படையை நியாயபடுத்தும் வசனங்கள். தமிழ் படங்களில் நம் நியாயங்களை சொல்ல அனுமதிப்பார்களா இந்த இந்திய ஜனநாயக தேசத்திலே ஒரு மலையாள படத்தில் வரும் இந்த காட்சியை பாருங்கள்.. எப்படி வஞ்சகதொடு உருவாக்கி இருக்கிறார்கள் என்று... அவர்கள் கருத்தை பொய்யும் புனைவும் கலந்து படத்தில் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது நம் கருத்தை சொல்ல அனுமதி இருக்கிறதா? Why Was Indian Peace Keeping Force (IPKF) sent to Sri Lanka by Rajiv Gandhi In the military movie flick 'MISSION 90 DAYS', Megastar Mammootty explains to an LTTE cadet the exact truth behind the Rajiv Gandhi - LTTE issue which happened at Sri Lanka... http://www.youtube.com/watch?v=evlxfcPvxfc&feature=share

Thursday, December 1, 2011

முல்லைப் பெரியாரைக் காக்கப் போராட்டங்கள் வைகோ அறிவிப்பு

தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் நாம், எல்லை மீறிய பொறுமையை கடைபிடித்து வருகிறோம். குட்டக் குட்டக் குனியும் நிலைக்கு நாம் ஆளாகிவிடக்கூடாது. நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்தும், உண்மை நிலை குறித்தும் தமிழ்நாட்டின் பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் தயாரித்துள்ள குறுந்தட்டுகள் தமிழகம் முழுவதிலும் விநியோகிக்கப்பட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையைக் காக்கும் பிரச்சாரப் பயணத்தை நானும், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸ் அவர்களும் டிசம்பர் 7தேதி,மதுரையில் இருந்து கூடலூர் வரை மேற்க்கொள்கிறோம். டிசம்பர் 8 ஆம் தேதி அன்று முல்லைப் பெரியாரைக் காக்க கம்பம் நகரில் என்னுடைய தலைமையில், கம்பம் அப்பாஸ் அவர்கள் முன்னிலையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைப்பார். விவசாய சங்கத்தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் போராட்டத்தை ஆதரித்துப்பேசுவார்கள். அண்ணன் பழ.நெடுமாறன் அவர்கள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வார். கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்ற முற்றுகைப் போராட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடத்துவதாக திருச்சியில் அறிவித்து இருந்தோம். தற்போது அந்தப் போராட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகள், அமைப்புகள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், தமிழ் நாட்டின் உரிமையைக் காக்க இந்தப் போராட்டங்களுக்கு விவசாயிகளும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன். வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க ‘தாயகம்’ சென்னை - 8 01.12.2011