Monday, August 29, 2011

தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடி – கண்ணீர் கலந்த வீர வணக்கம்




செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய்
செங்கொடியே தற்கொலை ஏன் ? புரிந்தாய்
முத்துக்குமார் உயிர் மாய்த்தப் போது
கடிதத்தில் எழுதியதைக் கடைபிடித்து இருந்தால்
ஈழத்தில் லட்சம் தமிழர்களை இழந்திருக்க மாட்டோம்
மூன்று உயிர்களைக் காக்க ஒப்பற்ற
உன் உயிரை ஈந்தாய் ஏன் ? தாய்
கல் நெஞ்சக்கரர்களுக்கு உன் உயிர்
பெரிதாகத் தெரியாது உயிரின் வலி புரியாது
செவிடர் காதில் ஊதிய சங்காகவே அமையும்
தீர்ப்பை தீர்ப்பால் வெல்வது உறுதி
தமிழர்களைக் காக்காமல் வராது எமக்கு இறுதி
தவிக்கும் உயிர்களைக் காப்பதும் உறுதி

சட்டம் படித்த நீயே ஏன்? தேடினாய் இறுதி
சங்கடப் படுத்திவிட்டாய் நீ எங்களை
வாழ்க்கையில் போராட்டம் உண்டு பலருக்கு
வாழ்க்கையே போராட்டம் நம் தமிழருக்கு
மன சாட்சி இருக்குமானால் உன் மரணம் பார்த்தே
மரண தண்டனையை நிறுத்தி இருக்க வேண்டும்
பலி வாங்கத் துடிக்கும் பாதகர்களிடம்
மனிதாபிமானம் எதிர்பார்ப்பது மடமை
நீதி மன்றங்களில் நீதி முழுவதும் சாக வில்லை
நீதி அரசர்களில் கிருஷ்ணய்யர் போல சிலர் உண்டு
நிச்சயம் தூக்குத் தண்டனை நிறுத்தப் படும்
நம்மவர் உயிர்கள் காக்கப் படும்
செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய்
செங்கொடிகளும் வாய் திறந்து விட்டனர்

இன உணர்வு அலை அடிக்கின்றது இனி ஒருவனும்
இனத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது
பாவேந்தரின் வைர வரிகள் இன்று
நாட்டில் நடைமுறையாகி வருகின்றது

இங்குள்ள தமிழர் ஒன்றாவது கண்டு
ஓடி ஒளிகின்றனர் இனப் பகைவர்கள்

நன்றி - கவிஞர் இரா .இரவி

Tuesday, August 23, 2011

ராஜீவ் கொலையின்போது உங்கள் தலைவர்கள் எங்கே போனார்கள்! இளைஞர் காங். யுவராஜுக்கு சீமான் கேள்வி!



பெரியார் திராவிட கழகமும், நாம் தமிழர் இயக்கமும் இணைந்து மரண தண்டனையை ஒழிப்போம், மனிதநேயம் காப்போம் என கடந்த 16.08.2011 அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில்,

பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.


இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னை (சீமான்) கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியில் இருந்து எங்கள் கட்சிக்கு பாடுபட வேண்டாம். பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடுங்கள்.


நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.


திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.


பெருமைக்குரிய பெருமகள் இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று. எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் ஒன்றும் இல்லையே. எங்கே போனீங்க நீங்க. எங்கே போனீங்க நீங்க.


யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன் இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா.


என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா.


யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால்நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும். இவ்வாறு சீமான் பேசினார்.

Friday, August 19, 2011

நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?




தூக்குத் தண்டனையை எந்த நேரத்திலும் எதிர் நோக்கியிருக்கும் பேரறிவாளன், சிறைக் கொட்டடியிலிருந்து குடும்பத்தினருக்கு எழுதியுள்ள கடிதத்தை தமிழினத்தின் முன் வைக்கிறோம்.


பேரன்புமிக்க அம்மா / அப்பா / சகோதர / சகோதரிகளே,

வணக்கம். நான், அ.ஞா.பேரறிவாளன், இராசீவ் காந்தி கொலை வழக்கில் 19 வயதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு அதன் விளைவாய் தூக்கு தண்டனை பெற்றவனாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் இருந்து வருபவன். எள் முனையளவும் தொடர்பே இல்லாத வழக்கில் அரசியல் காழ்ப் புணர்ச்சியாலும், கேட்க நாதியற்றவன் என்பதாலும், அநீதியான தீர்ப்பை சுமந்து நிற்பவன்.


தந்தை பெரியாரின் கொள்கையால் நிரம்பிய குடும்ப வழி வந்தவன் என்பதால் மனிதநேயத்தின் அடிப்படையிலும், தொப்புள் கொடி உறவு என்பதால், இன உணர்வின் அடிப்படையிலும் சிங்கள இனவாதத்திற்கு எதிரான ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து அதற்காக தமிழக மண்ணில் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்தவன் என்ற காரணத்தால் என் மீது தவறான குற்றச்சாட்டு புனையப்பட்டது என்பதை தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன்.


19 வயது இளைஞனாய் கைது செய்யப்பட்டு, வாழ்வின் வசந்த காலங்களையெல்லாம் சிறையில் செய்யாத குற்றத்திற்காகத் தொலைத்து, இன்று 40 வயதுடன் பக்குவப்பட்ட குடிமகனாய் உங்கள் முன் இக்கடிதத்தின் மூலம் பேசுகிறேன்.

1. திரு. இராசீவ் அவர்களின் கொலையை நியாயப்படுத்துவதல்ல இக்கடிதத்தின்நோக்கம். மாறாக இக்குற்றத்திற்கு எவ்வித தொடர்பு மில்லாத நானும், என்னைப் போன்றவர்களும் மரண தண்டனைக்கு உரியவர்கள் அல்லர் என்று எடுத்துரைப்பது மட்டுமே.


2. திரு. இராசீவ் கொலை விஷயமாக விசாரிக்க வேண்டும் என்று சொல்லி 11.06.1991 அன்று விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நான் இன்று வரை நீதி மறுக்கப்பட்டு தூக்கு மரத்தின் நிழலிலேயே வாழ்ந்து வருகிறேன்.


3. அக்கொலைக்கு பயன்பட்ட ‘பெல்ட் பாம்’ செய்வதற்கு நான் உதவினேன் என்பதே என் தண்டனைக்கு வழி வகுத்தக் குற்றச்சாட்டு. இதற்கு ஏதுவாக ஊடகங்களில் பொய் செய்தி பரப்பப்பட்டது. ‘இந்தியா டுடே’ நாளிதழும் நான் எப்படி வெடிகுண்டு செய்தேன் என்று பொய்யாக ஒரு செய்முறை விளக்கம் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், “சி.பி.ஐ.யால் இறுதி வரை கண்டுப்பிடிக்க முடியாத கேள்விகளுள் ஒன்று, அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தவர் யார் என்பதே” என்று.


இந்த வழக்கை விசாரித்த தலைமை புலனாய்வு அதிகாரி இரகோத்தமன் தான் ஓய்வு பெற்றவுடன் எழுதிய நூலிலும், பல்வேறு பேட்டிகளிலும் கூறியுள்ளார். ஆக விடைத் தெரியா கேள்விக்கு விடையாக நான் பலியிடப் படவேண்டுமா?


4. அந்த ‘பெல்ட் பாமிற்கு’ 9வி பேட்டரி வாங்கித் தந்தேன் என்பதின் மூலமே நான் அந்த ‘பெல்ட் பாம்’ஐ செய்தேன் என வழக்குரைத்தனர் அரசு தரப்பு வழக்கறிஞர்கள். அதற்கு வசதியாக என்னுடைய மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியலில் பட்டய படிப்பும் இவர்களின் கதைக்கு கருவானது. ஆனால் வழக்கின் எந்தவொரு இடத்திலும் நான் வாங்கித் தந்த 9வி பேட்டரிதான் பெல்ட் பாம் வெடிக்கப் பயன்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை.


5. உண்மை என்னவெனில் நான் 9வி பேட்டரியை வாங்கவுமில்லை, அதனை யாருக்கும் தரவு மில்லை. ஆனால் நான் 9வி பேட்டரி வாங்கினேன் என்பதற்கு வழக்கிலுள்ள ஒரே ஆதாரம், ஒரு பெட்டிக் கடைக்காரரின் சாட்சி தான். இந்த சாட்சியை ஏற்க முடியாது என்று தடா நீதிமன்றத்தில் கூறிய நீதிபதி, பிறகு என்ன காரணத்தினாலோ இந்த சாட்சியை ஏற்றுக் கொண்டு விட்டார். நான் வாங்காத பேட்டரியை வாங்கினேன் என்று ஒருவர் மூலம் சொல்ல வைப்பது நம் காவல்துறைக்கு எத்தனை சுலபம் என்று சற்றே சிந்தியுங்கள்.


6. தடா சட்டத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதே தவறு என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்தது. காரணம் இந்தக் கொலைக் குற்றவாளிகளுக்கு கொலை செய்யப்பட்டவர்களைத் தவிர யாதொருவரையும் அச்சுறுத்தவோ, கொல்வதோ நோக்கமாக இருந்திருக்கவில்லை என்று எடுத்துரைத்தது. அப்படி இருக்கும் வேளையில், எங்களை தடா சட்டத்தின் கீழ் கைது செய்து, உரிமைகள் மறுக்கப்பட்டு, தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு, பெறப்பட்ட வாக்கு மூலம் மட்டும் எப்படி செல்லுபடியாகும்?


மேலும் நம் நாட்டில் வாக்கு மூலங்கள் எப்படிப் பெறப்படுகின்றன என்பதும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். கடுமையான சித்திரவதை, மிரட்டல், அடி உதைக்கு பயந்துதான் பல வாக்குமூலங்கள் ரத்தத்தால் கையெழுத்தா கின்றன. பொதுவாக அப்படிப் பெறப்படும் வாக்கு மூலங்களை மட்டுமே வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பினை தருவது கிடையாது. ஆனால் என் வழக்கில் மட்டும் நீதிமன்றம் அவ்வாக்குமூலத்தை மட்டுமே அடிப் படையாகக் கொண்டு, வேறு எந்த ஆதாரமும் இல்லாமல் எனக்குத் தூக்குத் தண்டனை வழங்கியுள்ளது.


7. ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த திரு. தியாகராஜன் என்ற அதிகாரி கேரள மாநிலத்தில் 1993 இல் நடைபெற்ற அருட்சகோதரி அபயா கொலை வழக்கை ‘தற்கொலை’ என முடிக்க அழுத்தம் கொடுத்தவர் என்பதும், அவரது முறைகேட்டை எதிர்த்ததால், அவருக்கு கீழ் பணிபுரிந்த துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தாமஸ்வர்கீஸ் என்பவர் தனது பதவியை துறந்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். பிறகு இந்த வழக்கு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை என்று திரும்பியது. எர்ணாகுளம் தலைமை நீதிமன்ற நடுவர் 23.06.2000 அன்று அளித்த தீர்ப்பில் கடுமையான கண்டனங்களை வாங்கியவர் இந்த தியாகராஜன். இவர் என்னிடம் வாங்கிய வாக்குமூலங்கள் ஏன் உண்மையாக இருக்க வேண்டும்? யாருக்காகவோ வழக்கை எப்படியும் வளைப்பவர்கள்தானே இவர்கள்....


8. தடா சட்டத்தில், சிறப்பு தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டதால், பெரும் பான்மையான உரிமைகள் எனக்கு மறுக்கப் பட்டன. அதுவே என் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூற இயலாமற் செய்துவிட்டது. பொதுவாக ஒரு மாவட்ட நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கு, உயர்நீதிமன்றம், பிறகு உச்சநீதிமன்றம் என்று இருமுறை மேல் முறையீடு செய்யும் வாய்ப்புள்ளது.

இந்த செயலபாடு ஒரு இடத்தில் இல்லாவிட்டாலும் மறு இடத்தில் நீதி சரியாக கிடைக்க உதவியது. ஆனால் எங்கள் விஷயத்தில் தடா கொடுங்கோல் வழக்கு என்பதால், உயர்நீதிமன்றம் செல்லும் வாய்ப்பு மறுக்கப் பட்டு, இரண்டில் ஒரு மன்றத்தின் கதவு அடைக்கப்பட்டுப் போனது. இப்பொழுது தடா சட்டம் தவறு என்று அந்த சட்டமே நம் நாட்டில் வாபஸ்பெறப்பட்டாலும், அதனால் பாதிக்கப்பட்ட என் போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? எப்பொழுது கிடைக்கும்?


9. தடா நீதிமன்றத்தின் கீழ் விசாரிக்கப்படுபவர்கள் 20 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என தடா சட்ட வரம்பு சொல்கிறது.


10. அவர் அதற்கு முன்னால் குற்றம் ஏதும் புரிந்தவரா என்பதை கவனிக்க வேண்டும்.


11. குற்றப் பின்னணி உள்ள குடும்பத்தைச் சார்ந்தவரா என்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிறது தடா சட்டம்.


12. எனக்கு மட்டும் இந்த எந்த வரைமுறைகளையும் கடைபிடிக்காமல் தடாவின் கீழ் கைது செய்து விசாரித்து, தண்டனையும் அறிவித்தார்கள்.


13. சிறப்பு நீதிமன்றத்தில் 26 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றம் அதில் 22 பேர் தூக்குத் தண்டனையை ரத்து செய்கிறதென்றால், இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எத்தன்மையுடன் ஒருதலைப்பட்சமாக, முன் முடிவுகளுடன் விசாரிக்கப்பட்டதென்பதை புரிந்து கெள்ள முடியும்.


சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்று இருந்தாலும், இந்த வழக்கைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர் இராசீவ் என்பதாலும், அவருக்கு இருந்த செல்வாக்கு மற்றும் ஊடக அனுகூலங்களாலும், ஒரு தலைபட்சமாகவே பார்க்கப்பட்டது. இன்னொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்று, நடுநிலையுடன் விசாரிக்கப்பட்டால் எங்களது தூக்குக் கயிறும் கண்டிப்பாக அறுபடும் என்று என்னால் உறுதியாக கூற முடியும்.


அந்த வசதி இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் உள்ளது. ஆனால் இனி வழக்கை விசாரிக்கும் வழியில்லை என்கிறது இந்திய குற்றவியல் சட்டம்... ஆகையால் கருணை மனுவின் மீதான முடிவே இறுதி முடிவு என்று விடப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் ஆகிப்போனோம் நாங்கள். நான் நிரபராதி, நான் நிரபராதி என்று கத்திக் கொண்டிருக்கும் பொழுதே என் குரல் வளை தூக்குக் கயிற்றால் நசுக்கப்படுமோ?


14. திருமதி சோனியா காந்தி, இவ்வழக்கில் தூக்குத் தண்டனைப் பெற்றவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கோ என் குழந்தைகளுக்கோ (இராகுல் காந்தி, பிரியங்கா காந்தி) சற்றும் விருப்பமில்லை என ஏற்கனவே கூறியுள்ளார்.


15. ஆயினும் எங்களை 20 ஆண்டுகளாக இப்படி சிறையில் அடைத்து வைத்திருக்கும் மர்மம் எங்களுக்கு விளங்கவில்லை. நிரபராதிகளான எங்களை இப்படி தூக்குக் கொட்டடியிலேயே வைத்திருக்கும் காரணம் புரியவில்லை.


16. 1980களின் இறுதியில் வாழ்ந்த எல்லா இளைஞர்களைப் போலவே நானும் ஈழ விடுதலையிலும், விடுதலைப் போராளிகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தேன். அன்று கல்லூரிகளிலும், பணி இடங்களிலும் எல்லோரும் தான் விடுதலைப் போராட்டத்திற்காக உதவி வந்தார்கள்.

ஒரு நாள் ஊதியத்தையும் கொடுத்தார்கள். பள்ளிகளில் நன்கொடை வசூலித்தார்கள். ஏன் நம் மத்திய மாநில அரசுகள் கூடத்தான் அவர்களுக்கு உதவிகள் புரிந்தன? ஒரு துர்ச் சம்பவம் நிகழும்பொழுது நான் மட்டும் எப்படி எதிரி ஆகிப் போனேன்?? ஏன் தனிமைப்படுத்தப்பட்டேன்?? உங்களில் ஒருவன் தானே நானும்??


தூக்குத் தண்டனை என்பது சட்டத்தின் பெயரால் செய்யப்படும் திட்டமிட்ட படுகொலை என்கிறார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.


செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்கு தண்டனையையே திட்டமிட்டப் படுகொலையெனில், செய்யாத குற்றத்திற்கு வழங்கப்படும் தூக்குத் தண்டனையை என்னவென்று சொல்வது?


- முடிவுறா விசாரணையில், முடிவினை நோக்கித் தள்ளப்பட்டுள்ள அப்பாவி

Thursday, August 18, 2011

துரோகம் தொடர்ந்தால் வரைபடம் மாறும் : வைகோ பேச்சு



""மத்திய அரசின் துரோகம் தொடர்ந்தால், இந்தியாவின் வரைபடத்தில் சில பகுதிகள் மறைய வாய்ப்புள்ளது,'' என மதுரையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார். பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை கண்டித்தும், துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் மதுரையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது.

உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேவை, ஊழல்வாதிகள் நிறைந்த திகார் சிறையில் அடைத்துள்ளனர். ராஜிவ் கொலையில் மரண தண்டனை விதித்தவர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும். தமிழர்களை வஞ்சிக்க, காங்., கம்யூ.,கள் கேரளாவில் இணைகின்றன. இங்கும் அது நடக்க வேண்டும். மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, ஒட்டுமொத்த தமிழகத்தை பாதிக்கும். கேரளா உதவ மறுத்தால், அவர்களுக்கு பொருள் செல்லும் கம்பம் மெட்டு, போடி மெட்டு, களியக்காவிளை ரோடுகள் பெயர்க்கப்படும். தமிழகத்திற்கு மத்தியஅரசின் துரோகம் தொடர்ந்தால், நூற்றாண்டு சுதந்திரம் காணும் போது, இந்தியாவின் வரைபடத்தில் சில பகுதிகள் விடுபட நேரிடும், என்றார்.
பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அப்பாஸ், பெரியார் திராவிடக்கழக தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க., அவைத்தலைவர் துரைச்சாமி, பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், நகர் செயலாளர்
பூமிநாதன், புறநகர் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், நான்காம் பகுதி செயலாளர் ரஞ்சித்குமார், ஐந்தாம் பகுதி செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத்தை நிறைவு
செய்தார்.

அய்யோ... பாவம் தி.மு.க.,! : கேரளா விவகாரத்தில் தி.மு.க., விளைத்த துரோகம் அதிகம். நொந்து, வெந்து போய்; அய்யோ... பாவம் என்ற கதியில் நிராயுதபாணியாக நிற்பவர்களை நாம் விமர்ச்சிக்க வேண்டாம். என் போராட்ட பின்னணியில் ஓட்டு வேட்கை இல்லை. தமிழக உரிமையை மீட்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு ம.தி.மு.க., துணை நிற்கும். இதை கூட்டணிக்கு தூதாக யாரும் நினைக்க வேண்டாம். பலன் எதிர்பாராமல் தமிழகத்தை
நேசிக்கிறோம், ஆதரவு கொடுங்கள், என வைகோ உருக்கமாக பேசினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=296294

Tuesday, August 16, 2011

தூக்குத் தண்டனையை தூக்கிலிட வேண்டும்

வால்மீகி ஒரு கொள்ளைக்காரராக இருந்தார். ஏழ்மை நிலையில் உள்ள பல உயிர்களைக் காப்பதற்காக அவர் கொள்ளையடித்தார். அந்த வால்மீகிதான் பிற்காலத்தில் உலகின் தலைசிறந்த இராமாயணம் என்ற இதிகாசத்தைப் படைத்த வால்மீகியாக, இலக்கியப் படைப்பாளியாக மாறினார். இதேநிலை யாருக்கும் வரலாம்.

- நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்

உலக நாடுகள் எங்கும் தூக்குக் கயிறு வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் 21ஆம் நூற்றாண்டிலாவது இதற்கு தீர்வு கிடைக்குமா? என்ற ஏக்கம் மனித உரிமை ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் அப்துல் கலாம் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார். அச்சமயம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி.லகோதி, மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் போன்றோர் மரண தண்டணை தொடர வேண்டும் என்ற கருத்தைத் தனித்தனியாகத் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் மரண தண்டனை வழக்கில் அமைச்சரவையின் ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தியச் சிறைகளில் 50 மரண தண்டனைக் கைதிகள் உள்ளனர்.

1945லேயே அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. மக்களவையில் 25.11.1956இல் மரண தண்டனை ஒழிப்பு தனி நபர் மசோதா விவாதத்திற்கு வந்தபொழுது அன்றைய அமைச்சர் பொறுப்பிலிருந்த எச்.வி. படாஸ்கர் இதனை ஒழிக்க காலம் இன்னும் கனியவில்லை என்றார். 1957இல் முதன் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசு கேரள அரசாகும். இந்த அரசில் ஈ.எம்.எஸ். முதல்வராகவும், நீதிபதி கிருஷ்ணய்யர் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். அந்நாளில், சி.ஏ.பாலனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. சி.ஏ.பாலன் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தார். கடைசியாக கேரள உள்துறை அமைச்சராக இருந்த நீதிபதி கிருஷ்ணய்யரிடம் மனு ஒன்றை அளித்தார். நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு நீதிபதி கிருஷ்ணய்யர் அவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தார். ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரால் பாலனின் மனு நிராகரிக்கப்பட்ட போதும், கிருஷ்ணய்யர் போராடி பாலனை தண்டனையிலிருந்து காப்பாற்றினார். இதேபோன்று எடிகா அன்னம்மா என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனையிலிருந்தும் விடுவித்தார். அப்போது அவர், ‘கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை எந்த அரசுக்கும் கிடையாது’ என்று மகாத்மா காந்தி சொன்ன கருத்தை சொல்லி வாதாடியுள்ளார்.

1962-67களில் அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் மரண தண்டனை தேவையில்லை என்று தெரிவித்தார். டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களில் பல குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அதன் மீதான மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டு குடியரசுத் தலைவருக்கு ஏராளமான கருணை மனுக்கள் பரிசீலனைக்கு வந்தன. அவற்றைத் திருப்ப அனுப்பாததால் தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நின்றன. அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் இதுகுறித்து பிரதமர் நேருவிடம் முறையிட்டார். ஜவஹர்லால் நேருவும் ஒரு சிறப்புத் தூதரை குடியரசுத் தலைவரிடம் அனுப்பிக் கருணை மனுக்களை நிராகரித்துத் திருப்பி அனுப்பும்படி வேண்டிக் கொண்டார். ஆனால், குடியரசுத் தலைவர் நேருவின் கோரிக்கையை ஏற்கவில்லை. அதனால் டாக்டர் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்த காலம் வரை குற்றவாளிகள் மீதான மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

1967இல் சட்டக் கமிஷன் அறிக்கை தூக்குத் தண்டனை கெடுபிடிகளை குறைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 1953லிருந்து 1963 வரை இந்தியாவில் மட்டும் 1422 பேர் தூக்கிலிடப்பட்டனர். இதன் காரணமாக, ஒரு வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அவ்வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கிறார் என்றால், அதற்கான அத்தியாவசியமான காரணத்தை குறிப்பிட்டாக வேண்டும் என்று 1973இல் மத்திய அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு போன்ற தியாகத் தீபங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1947இல் விடுதலைப் போராட்டத்தில் வெள்ளைக்கார சார்ஜண்டை கொலை செய்ததற்காக குலசேகரப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜகோபாலன், காசிராஜன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இந்திய விடுதலைக்குப் பின் 1947ஆம் ஆண்டு அவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். நேதாஜி இயக்கத்தில் இருந்த கேப்டன் நவாஸ்கான், கேப்டன் தில்லான் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தெலுங்கானா போராட்டத்தில் 11 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மலேசிய கணபதி தூக்கிலிடப்படும்போது பண்டித நேரு அதைத் தடுக்கக் குரல் கொடுத்தார். 1946இல் கோவை சின்னியம்பாளையத்தில் ஆறு கம்யூனிஸ்டு தோழர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும், நக்சலைட் தலைவர் நாகபூஷண் பட்நாயக், தமிழகத்தில் கலியபெருமாள், தியாகு ஆகியோருக்கு தூக்குத் தண்டனை வழங்கியபோது தமிழகத்தில் தூக்குத் தண்டனைக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது.

பண்டைய இந்தியாவில் மரண தண்டனையை பற்றி எவரும் அறியவில்லை. அய்ந்தாம் நூற்றாண்டில் சீனத்திலிருந்து வந்த பாகியான் என்ற பௌத்த அறிஞர், மரண தண்டனை இந்தியாவில் நடைமுறையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். எட்டாம் நூற்றாண்டில் கொரிய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஹொய்சோ என்ற அறிஞர் இதே கருத்தை கூறியுள்ளார். ஆனால் ஆதி காலத்தில் உலகில் மரண தண்டனை நடைமுறையில் இருந்தது என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

இந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி மூன்று முறை தூக்குக் கயிறு முனை வரை சென்று வைகோவின் முயற்சியால் இக்கட்டுரையாளர் மூலம் காப்பாற்றப்பட்டார். இச்சம்பவம் கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்றது. 1984 செப்டம்பர் 27 சென்னை உயர்நீதிமன்ற மண்டபங்களில் புதிர் இறுகிக் கொண்டே போகிறது. ஏழாண்டுகளாக நடந்து வரும் ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பு அன்று கூறப்பட்டது.

தீர்ப்பு மனுதாரருக்கு எதிராகப் போகுமானால், இந்திய விடுதலைப் போரின் முதல் வீரர், நமது செவிகளில் பெயரும் புகழும் எதிரொலித்துக் கொண்டிருக்கிற விடுதலைப் போராட்ட முன்னோடி வீரபாண்டிய கட்டபொம்மனின் சட்டப்பூர்வ வாரிசை, இந்தியா இழக்கும்! தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக அமையுமேயானால் தண்டனைக்குரிய குற்றத்திற்குத் தூக்குத் தண்டனை வழங்குவது நமது நாட்டில் அரிதானதில்லை. எனினும், தீர்ப்பு மனுதாரருக்கு ஆதரவாக வருமானால் மனுதாரர் குருசாமியின் வழக்கு நமது நாட்டின் சட்ட வரலாற்றில் தனித்தத் தன்மை கொண்டதாக ஈடு இணையற்றதாக அமையும்.

1977இல் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் வைகோ அவர்கள் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டப்படி (மிசாவின் கீழ்) பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதுதான் அதே சிறையிலிருந்த கைதி குருசாமியை அவர் அறிய நேர்ந்தது. குருசாமி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படுவதற்காகக் காத்திருந்தார். குருசாமியின் சிலம்பம் செய்யும் முறை, தேவராட்டம், ஜக்கம்மா குறித்து பாடிய பாடல்கள், குருசாமியின் அப்பாவித்தனம் ஆகியவை வைகோ அவர்களை ஈர்த்தது. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்று வைகோ மனதிற்குள் உறுதி செய்தார். அவரது மரணத் தண்டனை ஏற்கனவே மும்முறை (1977 ஜூன் 15, 1981 செப்டம்பர் 15, 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில்) உறுதி செய்யப்பட்டிருந்தது. குருசாமி போட்ட கருணை மனு இந்திய அரசால் மும்முறை தள்ளப்பட்டுவிட்டது.

அவர் தமிழ்நாட்டு திருநெல்வேலி அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். சென்னை உயர்நீதி மன்றமும் தண்டனையை உறுதி செய்தது. அவரது வழக்கு எண். எஸ்.சி.87/1976. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் தந்த சிறப்புரிமை முறையீட்டை 1977இல் இந்தியத் தலைமை நீதிமன்றம் தள்ளிவிட்டது. சிறையில் வைகோ அவர்களும், குருசாமியும் அவ்வப்போது பேசிக் கொண்டதில், குடும்பச் சொத்து காரணமாக குருசாமியின் மாமனாருடன் கடும் சண்டை ஏற்பட்டு, அப்போது குருசாமியின் மாமனார் ஆயுதமேந்தி குருசாமியைத் தாக்க வந்தார். குருசாமி தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கினார். அதனால் அவரது மாமனார் இறந்தார்.

வைகோ மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி ஏற்றவுடன் குருசாமியைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு சஞ்சீவ ரெட்டி அவர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்ட முறையீடு ஒன்றுடன் வைகோ சந்தித்தார். சஞ்சீவ ரெட்டி அவர்கள், குருசாமியின் புகழ்பெற்ற மூதாதையரான வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றி நன்கு அறிந்தவர். அவர், 1969இல் நெல்லை மாவட்டத்தில் கயத்தாற்றில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அமைத்த கட்டபொம்மன் சிலையைத் திறந்து வைத்தார் என்ற சம்பவங்களை எல்லாம் வைகோ விவரிக்க, குருசாமி கதை கேட்டு குடியரசுத் தலைவர் மனம் இரங்கி இடைக்காலத் தடையும் வழங்கினார்.

துரதிர்ஷ்டவசமாக, மேல் குறிப்பிட்ட கருணை மனு தள்ளுபடி ஆகிவிட்டது. (ஏற்கனவே ஒரு முறையும் கருணை முறையீடு தள்ளப்பட்டுள்ளது) தூக்கிலிடப்பட வேண்டிய நாள் 1981 செப்டம்பர் 15 என்றும் குறிக்கப்பட்டுவிட்டது. வைகோ மீண்டும் ஒரு கருணை முறையீட்டை நாடாளுமன்ற உறுப்பினர் அய்ம்பது பேர் கையெழுத்திட்டு 1981 செப்டம்பர் 8 அன்று (குடியரசுத் தலைவரிடம்) தந்தார். அதை (அப்போதைய) உள்துறை இணை அமைச்சர் வெங்க சுப்பையாவிடம் தருமாறு வைகோ கேட்டுக் கொள்ளப்பட்டார்.

இந்தத் தண்டனையை நிறுத்த இந்திய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, அப்போதைய மத்திய உள்துறைச் செயலாளர் உள்துறை அமைச்சரிடம் எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்துத் திரும்பவும் தூக்குத் தண்டனைக்கு ஐந்தே நாள்களில் இடைக்காலத் தடை மட்டும் வழங்கி தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், தண்டனை தள்ளுபடி செய்யப்படவில்லை. அப்பொழுது நாள் செப்டம்பர் 9 ஆகிவிட்டது. குருசாமிக்குச் சாவு மணி அடிக்க இன்னும் அய்ந்தே நாள்தான் உள்ளது. வைகோவின் வேகமான முயற்சியால் தூக்குத் தண்டனை நிறுத்தப்பட்டது. ஆனால் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இதற்கிடையே குருசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் வழிவந்தவர்தானா கட்டபொம்மன் பரம்பரை தானா என்ற உண்மையைக் கண்டறியும்படி மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசைப் பணித்தது. உண்மையைச் சரி பார்க்கும் பணி முடிய ஓராண்டானது. அதுவரை அவரது தூக்குத் தண்டனை தள்ளிப் போடப்பட்டது. பின்னர், அவரது வழக்கு தண்டனைக் குறைப்புக்குப் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அந்த நிம்மதி ஓராண்டுதான் நீடித்தது. சஞ்சீவ ரெட்டிக்குப் பின் குடியரசுத் தலைவரான ஜெயில் சிங்கின் செயலகம், கருணை மனுவைத் தள்ளுபடி செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர் ஒருவரின் நேரடி வாரிசு என்பதற்காகக் குற்றவாளி எவருக்கும் (கிரிமினல் எவருக்கும்) தண்டனையைக் குறைக்க முடியாது என்று காரணம் காட்டிவிட்டது.

இந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி சின்னப்பரெட்டி, தூக்குத் தண்டனைக் கொட்டடியில் குற்றவாளி நீண்டகாலம் அடைக்கப்பட்டு கிடப்பதைக் கருதி, அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கலாம் என ஒரு தீர்ப்பில் கூறினார். ஏற்கனவே, தந்த முறையீட்டுக்கு மாற்றாக நீதிபதி சின்னப்பரெட்டி அவர்களது தீர்ப்பினை அடிப்படையாக வைத்து இந்தியக் குடியரசுத் தலைவருக்கு மேலும் ஒரு முறையீடு தரப்பட்டது. அதில், குருசாமி ஏற்கனவே சிறையில் அய்ந்தாண்டாக வாடியுள்ளார் என்று கூறப்பட்டது.

1984 ஜூன் 14 அன்று குருசாமிக்கு ஜூன் 21 காலையில் தூக்கு நாளாக தேதியும், அதிகாலையில் நேரமும் குறிக்கப்பட்டுவிட்டது. சென்னையிலிருந்த வைகோ அவர்களுக்கு நெல்லையில் இருந்து நண்பர் குட்டி என்ற சண்முகசிதம்பரம் குருசாமிக்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கப்பட்டு தூக்கு உறுதியாகிவிட்டது என்ற துயர செய்தியை தெரிவித்தார். உடனே வைகோ அவர்கள் மறைந்த சீனியர் வழக்கறிஞர் என்.டி.வானமாமலையை இரவென்று பாராமல் அவரை எழுப்பி இப்பிரச்சினையில் என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். அந்த ஆலோசனையின்படி டெல்லியில் உச்சநீதிமன்றத்துக்கும் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கும் பாளையங்ககோட்டை சிறையில் இருக்கும் குருசாமி தன்னைக் காப்பாற்ற தந்திகளை தனித்தனியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் தந்திகள் குருசாமியிடமிருந்து முறையாக வந்து சேர்ந்தன. அந்த தந்திகளையே மனுக்களாக்கி விசாரிக்க அனுமதி கோர வேண்டும்.

இருப்பதோ இரண்டு, மூன்று நாட்கள். அதற்குள் அந்த தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் என்று அனைத்து மட்டங்களிலும் நிராகரிக்கப்பட்டு, இனி வேறு வழி இல்லை என்ற நிலை இருந்தது. என்ன செய்வது? முயற்சி செய்து பார்ப்போம் என்று நான், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நீதிபதி சந்தூர்கர் அப்போதுதான் பொறுப்பேற்று, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் விடுதியில் தங்கி இருந்தார். மாலைப் பொழுதாகி விட்டது. இருப்பினும் எப்படியாவது இந்த வழக்கை விசாரிக்க அனுமதி வாங்கியாக வேண்டும் என்ற கடினமான சூழ்நிலை. அவரை சந்தித்த இக்கட்டுரையாளர், ‘நீதிபதி அவர்களே குருசாமி நாயக்கரின் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். அவர் சென்னை உயர்நீதி மன்ற பதிவாளருக்கு பாளையங்ககோட்டை சிறையிலிருந்து தந்தி அனுப்பி உள்ளார். அந்த மனுவை ஏற்று வழக்கு எண் கொடுத்து உரிய நீதிமன்றத்தில் விசாரிக்க அனுமதி தர வேண்டும்’ என கேட்க சென்றபொழுது, நம்பிக்கை என்பது இக்கட்டுரையாளருக்கு துளியளவும் இல்லை. இருந்தாலும் முயற்சி செய்வோம் என்ற நிலையில் தான் தலைமை நீதிபதியை சந்தித்து முறையிட்டார். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் நீதிபதி, இக்கட்டுரையாளர் கூறிய முழுமையான விவரங்களை கேட்டறிந்தார். மனிதாபிமானத்துடன் சட்டத்தில் வழி இருக்கிறதா என்று பார்த்து, இருந்தால் அதன் பலன் உரியவருக்கு கிடைக்க வேண்டும் என்ற அனுமதியை நீதிபதி அளித்த போது எனக்கு ஆறுதலையும் நிம்மதியையும் தந்தது.

அதன் பின் பதிவாளருடைய அனுமதியின் பேரில் வழக்கு எண்ணாகி, நீதிபதி இராமசாமி, டேவிட் அன்னுசாமி ஆகியோரிடம் காலை 10.30 மணிக்கு அவர்கள் அமரும்பொழுது விவரத்தை சொல்லி அனுமதி பெற்றாகி விட்டது. மதியம் 2.30 மணிக்கு இடைவேளைக்கு பிறகு வழக்கு வருகின்றது. வழக்கில் வழக்கறிஞர் என்.டி.வானமாமலை ஆஜரானார். இவ்வழக்கில் எவ்வித வழக்குக் கட்டணமும் வாங்காமல் என்.டி.வானமாமலை ஆஜரானார். என்.டி.வானமாமலை நீதிபதிகளிடம் தந்தியை ரிட் மனுவாகப் பாவித்து குருசாமிக்கு தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்க இடைக்காலத் தடை வேண்டும் என்று வாதாடினார். அவரோடு வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் உடன் ஆஜரானார். அப்போது பப்ளிக் பிராசிக்யூட்டராக இருந்த, பின் நீதிபதியான பத்மினி ஜேசுதுரை அழைக்கப்பட்டார். விசாரணை முடிந்து இறுதியில் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை வழங்கப்பட்டது. அப்போதெல்லாம் செல்பேசி, தொலைநகல் (பேக்ஸ்) போன்ற தொலைதொடர்பு சாதனங்கள் கிடையாது. நீதிபதிகள் பப்ளிக் பிராசிக்யூட்டரிடம் தமிழக அரசு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் (அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம்), பாளையங்கோட்டை சிறை நிர்வாகத்திடமும் உடனே இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்ததை தெரிவித்து, மரண தண்டனையை நிறுத்த வேண்டும் என்ற ஆணையை தெரிவித்தனர். அன்று மாலை 4.30 மணிக்கு அரசிடம் தெரிவித்த கருத்துகளை, நீதிமன்றத்தில் பப்ளிக் பிராசிக்யூட்டர் தெரிவித்தவுடன், அந்த கருத்துகள் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் என்ற விவரமான ஆணையை பிறப்பித்தனர். அன்றைக்கு 24 மணி நேரத்தில் தூக்குக் கயிறை தூக்கிலிட்டது பெரும் செயலாக எனக்கு பட்டது. இந்த பிரச்சினையை எப்படி தீர்த்தோம்? எப்படி சாதித்தோம்? என்பதை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு முன்னால் சாதித்த இந்த அனுபவம், முயற்சி இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்ற படிப்பினையை தந்தது.

இவ்வழக்கு தூக்குத் தண்டனை வழக்கானதால், அப்போது பல நண்பர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் என பலர் விசாரித்தனர். குறிப்பாக பழ.நெடுமாறன், இரா.செழியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி தலைவரான ஏ. நல்லசிவம் எம்.பி., இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ப.மாணிக்கம், சொ.அழகிரிசாமி, இலங்கைத் தலைவர்கள் அ.அமிர்தலிங்கம் தம்பதியினர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன், பாரிஸ்டர் கரிகாலன், படைப்பாளர்கள் கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி போன்றோர் மட்டுமல்லாமல்; விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், பாலசிங்கம், பேபி சுப்பிரமணியன் (பேபி இளங்குமரன்), பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் போன்ற எனக்கு நெருக்கமான பலர் இதுகுறித்து அக்கறையுடன் ஆர்வம் காட்டினர்.

அதைப்போன்றே உச்சநீதிமன்றத்தில் பிரசித்திப் பெற்ற வழக்கறிஞர் கார்க் ஆஜராகி அங்கும் இடைக்காலத் தடையும் வழங்கப்பட்டு பின்னால் அந்த மனு திரும்பப் பெறப்பட்டது. இந்தப் பிரச்சினையில் ஒவ்வொரு நடவடிக்கையும் எதிர்பார்ப்பு என்ன நடக்கப் போகிறதோ என்ற பரபரப்போடு கடமைகள் செய்யப்பட்டன. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பு வந்ததை தொடர்ந்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் வெகுவாக வைகோ அவர்களை பாராட்டினர். இந்து பத்திரிகை இதுகுறித்து எழுதியது. இது நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது என பிரபல வழக்கறிஞர் கோவிந்த சுவாமிநாதன் என்.டி.வியிடம் குறிப்பிட்டார்.

இக்கட்டுரையாளர் அன்று சென்னையில் உயர்நீதிமன்றத்தில் பொதுநல முறையீடு தாக்கல் செய்யும் பொறுப்பை நிறைவேற்றினார். அதில் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலம் நான்கு நிலைகளில்தான் தூக்குத் தண்டனை விதிப்பது நியாயமாகும் என்று கூறியது. அவையாவன:

1. வேறு மாற்றுக் கருத்து, எந்தக் கேள்வியுமின்றி இடம் இல்லாத நிலையில் ‘அரிதினும் அரிதான வழக்கு’களில்தான் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

2. முதிர்ச்சி வாய்ந்த ஒரு சமுதாயத்தில் கண்ணியம் என்று மதிப்பிடப்படும் மதிப்பீடுகளின்படியும் கூட கொலையே தொழிலாகக் கொண்டோர் இரக்கத்திற்கு உரியோரில்லை.

3. கொலையுண்டவனுக்கு ஆதரவாக நிற்க யாருமில்லை என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

4. ஆயுள் தண்டனை என்பது போதவே போதாது என்ற வழக்குகளில் தூக்குத் தண்டனை விதிக்கலாம்.

இவ்வாறு பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டிருந்தது. இதனுடன் (குருசாமியின்) நன்னடத்தை குறித்து பாளையங்கோட்டை மத்திய சிறைக் கூடக் கைதிகள் 150 பேரும் ஜெயிலர்களும் தந்த சான்றிதழ்களும் இணைக்கப் பட்டிருந்தன. இத்தனை பரபரப்புகளுக்கு இடையேயும் நடப்பது நடக்கட்டும் என்று பொறுமையோடும், வேதனையோடும் காத்திருந்த ஒரே மனிதன் குருசாமிதான். அப்படியே தான் தூக்கிலிடப்பட்டு விட்டாலும் தனது உடல் வைகோவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. தீர்ப்பு நாள் வந்தது. நீதிபதிகள் வி.இராமசாமியும் டேவிட் அன்னுசாமியும் தீர்ப்பைப் படித்தனர்.

“தொழில் முறைக் கொலைகாரர்களே தூக்குத் தண்டனையிலிருந்து மன்னிக்கப் படுகிறார்களென்றால், விடுதலைப் போராட்ட வீரர் ஒருவரின் வாரிசும் தூக்கு மேடை ஏறுவதிலிருந்து காக்கப்படுவதும் நியாயமே. மரண தண்டனையைத் தள்ளுபடி செய்கிறேன். அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது!” என்றது அந்தத் தீர்ப்பு!

நீதிபதிகள் தம் தீர்ப்பில் விஷ ஊசி வழக்கில் டி.வி.வைத்தீஸ்வரனுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பைச் சுட்டிக்காட்டி இருந்தனர். (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.361) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இரண்டாண்டு காலத்திற்கு மேல் தாமதம் ஆகுமானால், அரசியல் சட்ட 21ஆவது பிரிவை எடுத்துக்காட்டி, தூக்குத் தண்டனையைத் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்க அதுவே (அந்தத் தாமதமே) மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதனுக்குப் போதுமானது என்று அந்த வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

செர்சிங்குக்கும் பஞ்சாப் அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் (உயர்நீதிமன்றத் தீர்ப்பில்) எடுத்துக்காட்டப் பட்டது. (ஏ.அய்.ஆர்.1983, எஸ்.சி.465) அந்தத் தீர்ப்பில் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டிருந்தால் அத்தண்டனையை நிறைவேற்றுவதா இல்லையா என்று தீர்மானிப்பதில் அந்த தாமதமும் முக்கியமான பரிசீலனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டாண்டுக் காலத்திற்கு மேலான தாமதமே தூக்குத் தண்டனையைக் குறைக்க போதுமானதாகிவிட்டது என்றும், மரண தண்டனை அரிதினும் அரிதாகத்தான் தரப்பட வேண்டும் என்றும் பச்சன் சிங்குக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. (ஏ.அய்.ஆர்.1980, எஸ்.சி.898).

மேற்குறிப்பிட்ட வரையறைகளுக்குள் குருசாமியின் வழக்கு அடங்காது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகக் கருத்துத் தெரிவித்தனர். தனிமைக் கொட்டடியில் வாடிய மரண தண்டனைக் கைதியின் உயிரைக் காக்க ஏழாண்டுகள் நடந்த போர் வீணாகவில்லை. குருசாமி தனது ஆயுள் தண்டனையை ‘கன்விக் வார்டர்’ ஆகக் கழித்து பத்தாண்டுகளுக்கு முன்பு விடுதலை ஆகி தன் குடும்பத்தோடு ஒட்டப்பிடாரத்திற்கு அருகே வாழ்ந்து, மறைந்தார்.

குருசாமி தூக்கிலிடப்பட்டிருந்தால், அவரும் தம் மூதாதையரைத் தேடிக் கல்லறைக்குத்தான் போயிருப்பார். அவரது வழக்கில் தரப்பட்ட முன் எடுத்துக்காட்டு இல்லா தீர்ப்பு இந்திய நீதியின் போக்கில் இடம்பெறும். ஏனெனில், இந்தியாவின் சட்ட நீதி வரலாற்றில் ஒரு முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் இல்லை; இல்லை மூன்று முறை தூக்குத் தண்டனை விதிக்கப்பட் ஒருவர் உயிர் காப்பாற்றப்பட்டது இதுவே முதன் முறை!

குருசாமி வழக்கு மூலம் திரு.பி.எச்.பாண்டியன் ஆஜரான வழக்கில் மாகாளி நாடார் போன்ற பல தூக்குத் தண்டனை கைதிகள் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு இன்றைக்கு இந்தியாவில் உள்ள பல உயர்நீதிமன்றங்களில் முன் உதாரணத் தீர்ப்புகளாக வழக்கறிஞர்கள் எடுத்து வைக்கின்றனர்.

உலகத்தின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. இதுவரை 135 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன், பூட்டோ போன்றோர் தூக்கிலிடும்பொழுது உலக அளவில் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தன. தூக்குத் தண்டனை பிரச்சினையில் சீனா, ஈரான், ஈராக், பாக்கிஸ்தான், சூடான், அமெரிக்கா போன்ற நாடுகள் சற்றும் மனம் இரங்காமல் கடுமையாக நடந்து கொள்கின்றன. ஆனால், அமெரிக்காவில் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டு, அங்கு பல மாநிலங்களில் கடுமையான முறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஆசிய, ஆப்ரிக்க கண்டங்களை சேர்ந்த நாடுகளே தூக்குத் தண்டனையை அமல்படுத்துவதில் முனைப்பாக உள்ளன. சிங்கப்பூர் இதில் முதல் இடம் வகிக்கிறது.

சிங்கப்பூரில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்டவர்கள், எந்தவித அறிவிப்புமின்றி ஏதாவதொரு வெள்ளிக் கிழமையன்று தூக்கிலிடப்படுவர். பின்னர் தான் வெளி உலகுக்கே தெரிய வரும். நைஜிரியாவை சேர்ந்த 21 வயதே ஆன கால்பந்தாட்ட வீரர் டோச்சி, துபாய் அணியில் விளையாடுவதற்கு ஆசைப்பட்டபோது, பலர் அவருக்கு பாகிஸ்தான் சென்று விட்டால் உனது கனவு நனவாகும் என்றனர். இதனை நம்பி இஸ்லமாபாத் சென்றார். அங்கும் அவரது ஆசை நிறைவேறாமல், கையில் பணமில்லாமல் ஒரு சர்ச்சில் தங்கினார். அங்கு ஸ்மித் என்ற ஒரு நபர் டோச்சியை சந்தித்து பேசி, சிங்கப்பூர் மார்க்கமாக டோச்சியின் சொந்த நாடான நைஜீரியாவுக்கு விமான டிக்கெட் எடுத்து கொடுத்து வழியனுப்பினார். அப்போது அவர் சில மாத்திரைகளை டோச்சியிடம் கொடுத்து இதனை சிங்கப்பூரில் மாலச்சி என்ற என் நண்பர் பெற்று கொள்வார் என்று சொல்லியுள்ளார். டோச்சி இந்த மாத்திரைகளுடன் சிங்கப்பூர் விமான நிலையத்தில் காத்திருந்தபொழுது, அவரை சந்தேகப்பட்டு கைது செய்தனர். இரண்டு ஆண்டு காலமாக வழக்கு விசாரணைக்குப் பின் அப்பாவியான டோச்சி தூக்கிலிடப்பட்டார்.

இங்கிலாந்து நாட்டில் டங்கன் பிரபு, பிரபுக்கள் அவையின் தலைவராக இருந்தபோது முதன் முதலாக தூக்குத் தண்டனை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்தார். மவுண்ட்பேட்டன் பிரபுவை கொலை செய்தவர்களுக்குகூட இங்கிலாந்து அரசு தூக்குத் தண்டனை வழங்கவில்லை. தென் ஆப்பிரிக்காவில் 1995இல் மரண தண்டணை ஒழிக்கப்பட்டது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஐ.நா. பொது மன்றம் தூக்குத் தண்டனை ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றியது. இதனை அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் எதிர்த்தன. இத்தீர்மானத்தை 99 நாடுகள் ஆதரித்தன. 52 நாடுகள் எதிர்த்தன. 18 நாடுகளில் மரண தண்டனை போர்க்கால குற்றங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டும், 27 நாடுகளில் பயங்கரவாதிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கப்படுகின்றன. 1976ஆம் ஆண்டு கனடா நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. கனடாவில் இதற்கு முன்பு கொலை குற்றங்கள் 3.09 சதவீதம் என்ற அளவில் அதிகமாக இருந்தது. மரண தண்டனை ஒழிக்கப்பட்ட காலத்திலிருந்து கொலைக் குற்றங்கள் குறைந்து விட்டன. 1983ஆம் ஆண்டுகளில் அங்கு 2.74 என்ற அளவில் கொலைக் குற்றங்கள் நடந்தேறின.

1985ஆம் ஆண்டு பன்னாட்டு அளவில் லஞ்சம் வாங்கியதாக சோவியத் நாட்டிலும், சீனாவில் அரசுக்கு விரோதமாக உளவுத் தொழிலில் ஈடுபட்டதற்கும், விபசாரத்திற்கும், சீனா, கயானாவிலும், பொருளாதாரக் குற்றத்திற்காக ஈராக் நாட்டிலும், கற்பழிப்புக் குற்றத்திற்காக சீனா, எகிப்து, சவுதி அரேபியா, சிரியா, தாய்லாந்து, டுனீசியா ஆகிய நாடுகளிலும், களவு மற்றும் பயங்கர ஆயுதங்களை கையாண்டதற்காக சீனா, நைஜீரியா, சவுதி அரேபியா, சிரியா, உகாண்டா போன்ற நாடுகளிலும், போதைப் பொருள் குற்றத்திற்காக ஈரான், மலேசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளிலும், சீனாவிலும் மரண தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்ற வாதமும் உள்ளது. 1949ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற பன்னாட்டு சட்ட மாநாட்டில் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது சுமார் 75 நாடுகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. அய்க்கிய அமெரிக்க நாட்டில் நடந்த மாநாட்டில் 70 வயது கடந்த முதியவர்களுக்கு மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் நிறைவேறியது. இருந்தபோதிலும், 76 வயதான மகமத் முகமது தகா என்ற சூடான் நாட்டுத் தலைவரும், 78 வயதான பையோடர் ஃபெடரன்கோ என்பவரும் அமெரிக்காவிலிருந்து சோவியத் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டு அரசியல் காரணமாக தூக்கிலிடப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கும் மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் உலகளவில் நடைமுறையில் உள்ளது.

தூக்கிலிடுதல், துப்பாக்கியால் சுடுதல் ஆகிய இரண்டு நடைமுறைகள் இந்தியாவில் உள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின்படி கொலை, கொலை செய்ய முயற்சி, கூட்டமாகச் சென்று கொள்ளையடித்தல் மற்றும் தாக்குதல், அரசாங்கத்திற்கு எதிராகப் போர் ஆயத்த வேலைகளை செய்தல், எதிரிக்கு மரண தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் பொய் சாட்சியம் அளித்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது.

இந்திய இராணுவச் சட்டம் 1950இன் படியும், விமானப் படைச் சட்டம் 1950இன் படியும் கடற்படைச் சட்டம் 1956இன் படியும் படைவீரர்கள் தவறு செய்தால் மரண தண்டனை விதிக்க இடமுண்டு. பயங்கரவாதிகளுக்கு 1987ஆம் ஆண்டின் சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்க வழியுள்ளது. 1967ஆம் ஆண்டு சட்ட வரையியல் குழு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 18 வயதுக்குக் குறைவாக உள்ளவர்களுக்கு மரண தண்டனை அளிக்கக் கூடாது என்ற பரிந்துரையை அளித்தது. இந்தியாவில் மாவட்டத் தலைமை நீதிமன்றங்கள், உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் மற்றும் தனி நீதிமன்றம் ஆகியவை மரண தண்டனைகளை விதிக்கின்றன. ஆனால், குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் மரண தண்டனைக் குற்றவாளிகள் மீது கருணைக் காட்ட அதிகாரமும் இருக்கிறது.

perarivalan_228இந்தியாவை பொறுத்தவரை அப்சல் குரு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேர் இன்றைக்கும் தூக்குக் கயிற்றின் பிடியில் இருக்கின்றனர். அப்சலுக்கு அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து அன்றைய காஷ்மீர் முதல்வர் குலாம் நபி ஆசாத் ‘இந்த தீர்ப்பு காஷ்மீர் மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது’ என்று குறிப்பிட்டார். இந்த தீர்ப்பு நிறைவேற்றப்பட்டால் காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி முயற்சிகள் தோல்வியடையும் என்ற கருத்தும் நிலவுகிறது. இந்த கருத்தை ஒட்டியே எழுத்தாளர் அருந்ததி ராயும் வெளிப்படுத்தியுள்ளார். இத்தீர்ப்பை எதிர்த்து, அப்சலின் மனைவி கருணை மனு ஒன்றை உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த 2006ஆம் ஆண்டில் அனுப்பி இருந்தார்.

மரண தண்டனை குறித்து எதிர் சிந்தனைகளை விட்டு ஆக்கபூர்வமாக நாம் சிந்திக்க வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைந்துவிடும் என்று சொல்வதற்கில்லை. அவ்வகையில் காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவை தூக்கிலிட்ட இந்தியாவில் இந்திராவும், ராஜிவும் படுகொலை செய்யப்பட்டனர். கொலை மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை எல்லாம் தூக்கிலிட்டு விட்டால் குற்றங்கள் குறையும் என்பது எள்ளளவும் உண்மையல்ல. கீதா சோப்ரா, சஞ்சய் சோப்ரா ஆகிய இருவரை கொன்றதற்காக 1980ஆம் ஆண்டில் பில்லா, ரங்கா ஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். 1984இல் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக மக்பூல் பட் என்பவர் தூக்கிலிடப்பட்டார். இதனால் எல்லாம் குற்றங்கள் குறைந்தனவா என்றால், இல்லை என்பதே பதிலாக உள்ளது. இந்த தண்டனைகளுக்கு பிறகுதான் ஆட்டோ சங்கர், தற்போது அப்சல் குரு போன்றவர்கள் உருவாகினர்.

தற்போது உலகளவில் 1,252 பேர் தூக்குத் தண்டனை நிழலில் தவிக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை 389 பேர் தூக்குத் தண்டனை கைதிகளாவர். ஐ.நா. பொது மன்றத்தின் தீர்மானத்தின்படி 2007இல் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா பிரச்சாரத்தின் அடிப்படையில் நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பினர். அக்கடிதத்தில் நீதிபதிகள் ராஜேந்திர சச்சார், சேத்தி, அட்மிரல் எல்.ராமதாஸ், மோகினி கிரி, உபேந்திரா பக்ஷி, ஆஸ்கார் அலி இன்ஜினியர், அருணா ராய், ஆஷிஸ் நந்தி, ஆனந்த பட்டவர்த்தன் என எண்ணற்றோர் கையொப்பமிட்டிருந்தனர். உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகளுக்கு பின் தான் கருணை மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளது. அவ்வாறு கருணை மனுவை அனுப்பினாலும் அதற்கான மேல் நடவடிக்கைகள் இல்லாததால் உடனடியாக நீதி கிடைப்பது தாமதமாகின்றது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இன்னொரு விசித்திரமும் நடைபெற்றது. ஒரு கொலை வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மூவரும் தனித்தனியாக வெவ்வேறு நீதிமன்றங்களில் முறையிடுகின்றனர். அதில் ஒருவரது மனு நிராகரிக்கப்பட்டு அவருக்கு தூக்குத் தண்டனை உறுதி செய்யப்படுகிறது. மற்றொருவருக்கு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது. வேறொருவர் குடியரசுத் தலைவரின் கருணையால் உயிர் தப்புகிறார். இவ்வாறு நீதிபதிகளின் தீர்ப்புகள் மாறுபடுகின்றன.

1980ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் ‘சாட்சிகளை ஆழ்ந்து விசாரித்து தீர்ப்பு அளிப்பதோடு மட்டுமல்லாது அதன் பின் விளைவுகளையும் பார்க்க வேண்டும். அரிதினும் அரிதாக மரண தண்டனைகள் விதிக்கப்படலாம்’ என்று கூறியுள்ளது. திருச்சி சிறையில் வாடிய பெரிய கருப்பன், கோவை சிறையில் இருந்த அவிநாசி ஆகிய இருவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

இராஜஸ்தான் மாநிலத்தில் சதி குற்றத்திற்காக பலருடைய பார்வையில் படும்படி மரண தண்டனையை பலருக்கு விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து இந்திய அட்டர்னி ஜெனரல் உச்சநீதிமன்றத்தில் 1985ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கின் அடிப்படையில் இந்தத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில் ‘ஒரு மனிதத் தன்மையற்ற குற்றத்தை மனித தன்மையற்ற தண்டனையின் மூலம் சந்திக்கக் கூடாது’ என்று கூறியது.

1985ஆம் ஆண்டு மார்ச்சில் இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனையைப் பற்றி விவாதம் நடந்தது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தனிப்பட்ட முறையில் மரண தண்டனையை நீக்க விருப்பம் உள்ளவராக இருந்தார். ஆனால், அன்றைய உள்துறை அமைச்சர், ‘தற்சமயம் மரண தண்டனையை ரத்து செய்ய இந்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை’ என்று தெரிவித்தார். 28.4.1989 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் மரண தண்டனை போன்ற பயங்கத் தண்டனைகளை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 1977ஆம் ஆண்டு டில்லியில் மரண தண்டனை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயபிரகாஷ் மரண தண்டனையை எதிர்த்தார்.

உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில், ‘அரசியலமைப்புச் சட்டம் 72, 161 பிரிவுகள் தவறான வழியில் அல்லது பொறுப்பற்ற தன்மையில் பயன்படுத்தப்படுகின்ற போது அதனை திருத்தும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு; ஒருவருக்கு மன்னிப்போ அல்லது கருணையோ காட்டும்பொழுது சமுதாயத்தில் ஏற்படக் கூடிய விளைவுகளையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப நிலைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டத்தை சார்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. இந்தியாவில் குற்றவியல் சட்டம் 302ஆவது விதிப்படி மரண தண்டனை அளிக்கப்படுகிறது. இந்த சட்டம் ஆங்கிலேயர்கள் இயற்றியது. இதே போன்ற சட்டம் இங்கிலாந்தில் இன்று ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் மக்களாட்சி நடைபெறும் இந்தியாவில் இன்றும் நடைமுறையில் வைத்துக் கொண்டு மனித உயிர்களை பறிப்பது எந்த வகையில் நியாயம்?

இன்றைக்கு தூக்கு மர நிழலில் தவிக்கும் பலருக்கு வாழ்க்கை இருண்டு கிடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் குருசாமி நாயக்கர் போன்று விடா முயற்சிகளை மேற்கொண்டால், அதற்கான பலன்களை அவர்கள் எட்டலாம். தூக்கின் மூலம் மானிட உயிர்களை பறிப்பதால் எந்தவித ஆக்கப்பூர்வமான பலன்களும் வரப் போவதில்லை. நாகரீகத்தை நோக்கிச் செல்கின்ற மானிடமும், மனிதாபிமானமும் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும். ராஜிவ் காந்தி படுகொலையில் சிக்கித் தவிக்கும் மூன்று பேரும், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களும் இந்த தண்டனையின் கீழ் தான் உள்ளனர். இந்தியாவில் உள்ள மரண தண்டனை கைதிகள் அனைவரும் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் வாழ்க்கையில் பயணிக்கவே விரும்புகின்றனர். நீர்க் குமிழியின் ஆயுள் சில நிமிடங்களே; மானிடத்தின் ஆயுள் வருடங்களில். இந்த போக்கில் பழி வாங்கல், அழித்தல் என்பது பழங்கால பிரிட்டானிய வரலாற்றில், ஆங்கிலேய சாக்ஸன் ஆட்சி காலத்தில் இருந்த கொதிக்கும் எண்ணெயில் போடுவது, தீயில் போடுவது, காலை வெட்டுவது போன்ற கொடூரமான தண்டனைகள் போன்றதாகவே இதுவும் உள்ளது. எனவே, இதில் மன மாற்றங்கள் வேண்டும். அந்த அடிப்படையில் தான் ஐ.நா. பெருமன்றமும் தூக்குத் தண்டனையை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தியுள்ளது.

பொது மன்னிப்பு என்ற வார்த்தை நடைமுறையில் இருப்பது பயனற்று விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. பல வழக்குகளில் சம்பந்தமில்லாத பலர் பலியாகியிருக்கின்றனர். எல்லாவற்றும் சூழலும், நடைமுறைகளுமே காரணமாகின்றன. எது ஒன்றும் மாற்றத்திற்குரியதுதான். மாற்றங்கள் சில நொடிகளில் ஏற்படும். இன்றைக்கு சரி எனப்படுவது நாளையே தவறாகி விடும். அப்போது வருந்தி என்ன பயன்? குரங்கிலிருந்து மனிதன் வந்தான். அதன்பிறகு பல அறிவியல் அற்புதங்களை அவன் படைத்தான். அந்த அற்புதங்கள் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்றால் மரண தண்டனையில் மாற்றங்கள் அவசியம் வரவேண்டும். அதுவே நாகரீக பாதைக்கு அழைத்துச் செல்லும் அணுகுமுறையாகும்.

மரண தண்டனை குறித்து பிரச்சாரங்களை அதற்கான ஆர்வலர்கள் தொடர்ந்து எடுத்துச் செல்கின்றனர். இந்த இயக்கத்திற்கு உலக அளவில் ஆதரவு பெருக வேண்டும். அந்த ஆதரவில் தான் இந்த நோக்கம் வெற்றி பெறும். குழந்தைகள் பிறக்கும் பொழுது தவறு செய்ய வேண்டும் என்பதற்காக பிறக்கவில்லை. வளர்ந்த பின் வளருகின்ற சூழலை ஒட்டியே தவறு செய்ய முற்படுகிறார்கள். மானிடவியலும், சமூகவியலும், அரசியலும் இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்தால் மரண தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற ஆதங்கம் உறுதியாக ஏற்படும்.

ஆதிகாலத்தில் ஒரு சட்டம் நிலவி வந்தது. குற்றவாளி குற்றம் செய்தால் அவன் என்ன குற்றம் செய்தானோ அதற்கு தகுந்தமாதிரியே தண்டனை அமையும். அதாவது பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்பது போன்ற தண்டனை. அதேபோன்று இப்பொழுதும் ஒரு உயிரை எடுத்தவனின் உயிரையும் எடுக்க வேண்டும் என்ற வாதம் சரியானதல்ல. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காகவே குற்றவாளிகளை சிறைக்கு அனுப்புகிறோம். அந்த தனிமையில் அவர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு திருந்த வேண்டும். மரண தண்டனைகள் விதிப்பதால் குற்றங்கள் குறைய வாய்ப்பில்லை. தூக்குத் தண்டனையை ஒழித்துவிட்ட நாடுகளில் நடைபெறுகின்ற குற்றங்களைவிட, தூக்குத் தண்டனை நடைமுறையில் உள்ள நாடுகளில்தான் குற்றங்கள் அதிகமாக உள்ளன. நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியது போல, குற்றவாளிகள் திருந்த வாய்ப்பு கொடுக்க வேண்டுமேயன்றி அவர்களின் உயிரை பறித்தல் தகாத செயலாகும்.

நன்றி-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Saturday, August 13, 2011

முற்றுப்பெறாத தமிழீழ விடுதலைப் போராட்டமும், நியூட்டனின் மூன்றாவது விதியும்!



நியூட்டனின் மூன்றாவது விதி சிங்கள அரசை நன்றாகவே ஆட்டிப் படைக்கின்றது. ஒரு பக்கம் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை சர்வதேச நாடுகளின் சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை அதிகரிக்க, மறு பக்கம் சனல் - 4 இன் 'சிறிலங்காவின் கொலைக்களம்' ஆவணக் காட்சிப்பதிவு சிங்கள தேசத்தின் ஒட்டுமொத்த விம்பத்தையும் அடித்து நொருக்கி அம்மணமாக்கியுள்ளது.

எந்த விலை கொடுத்தாவது சிங்கள அரசைக் காப்பாற்ற முயன்ற இந்திய நடுவண் அரசுக்கும் சனல் - 4 வெளியிட்ட காட்சிப் பதிவு சிக்கலை உருவாக்கியுள்ளது. முள்ளிவாய்க்காலில் வைத்து ஈழத் தமிழர்கள் ஈவிரக்கமின்றிப் பல்லாயிரக் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட பின்ரும் தமிழர்களுக்கான நீதி சிங்களத்தால் தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வருகின்றது. முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்வுகளை சிங்களத்தின் வெற்றியாகக் கொண்டாடிவரும் சிங்கள தேசியவாதத்திற்கு எதிராகத் தமிழீழம் மீண்டும் போர்க்கோலம் பூணுவது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழீழ மக்கள் அதை நோக்கியே தமது கருத்தினைப் பதிவு செய்துள்ளார்கள். எத்தனை இழப்புக்களை ஏற்படுத்தினாலும், எத்தனை விலிகளைத் தந்தாலும் எங்கள் தமிழீழ தாகம் தணியாது என இடித்துரைத்த ஈழத் தமிழர்கள் தலை நிமிர்ந்தே நிற்கிறார்கள். தமிழீழ மக்களது அடுத்த கட்ட நகர்வுக்கான நேரத்தை சிங்கள தேசியவாதமே வெகு விரைவில் உருவாக்கிக் கொடுக்கப் போகின்றது.

தமிழீழ மக்கள் எதையும் சிங்களத்திடம் யாசித்து மட்டுமே பெறமுடியும் என்ற சூத்திரத்திலிருந்து சிங்கள அரசு விலகுவதாக இல்லாத நிலையில், மீளெழுந்துவரும் தமிழகத்தின் தமிழீழ மக்கள் குறித்த எழுச்சி இந்திய ஆட்சியாளர்களுக்கு நிரந்தர தலைவலியாக உருவெடுத்து வருகின்றது. சிறிய கட்சித் தலைவர்களிடமும், சிறிய தொகையான தமிழ்த் தேசியவாதிகளிடமும் தேங்கிப்போயிருந்த தமிழீழ ஆதரவுத் தளம், தமிழகத்தின் ஆட்சிபீடம் வரை உயர் விரிவாக்கம் பெற்றுள்ளது. அமரர் எம்.ஜி.ஆர். அவர்களது காலத்தை நினைவூட்டுவது போன்ற அக்கறையை ஈழத் தமிழர்கள்மீது இன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் காட்டி வருகின்றார்.

இன்னொரு பக்கமாக, தமிழகத்தில் எழுச்சி கொள்ளும் தமிழீழ ஆதரவுப் பேரலையை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வட மாநிலங்கள் வரை நகர்த்தி வருகின்றார். கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் வைகோ அவர்கள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் கலந்து கொண்டு தமிழீழத்திற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்கள். முதன் முறையாக, இந்தியத் தேசியக் கட்சியொன்றின் தலைவர் ஒருவர் வெளிப்படையாகத் தமிழீழத்தை ஆதரித்துப் பேசியது மிகவும் முக்கியமான மாற்றமாகக் கருதப்படுகின்றது.

பிரித்தானிய தொலைக் காட்சியான 'சனல் 4' வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' என்ற காட்சி ஆவணம் பல நாடுகளிலும் மீள் ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருகின்றது. இது வெளிப்படுத்திவரும் அதிர்வலைகளினால் சிங்கள அரசு அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கடந்த வாரத்தில் இந்தியாவின் 'ஹெட்லைன் ரூடே' தொலைக்காட்சிக்கு சிங்கள அரசின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் பேட்டியில் இதனை அவதானிக்க முடிந்தது. சிங்கள ஆட்சியாளர்கள் நிதானம் இழந்து வருகின்றார்கள் என்பதை கோத்தபாயவின் வார்த்தைப் பிரயோகங்கள் நிரூபித்தன.

விடுதலைப் புலிகளை மட்டுமே மையப்படுத்தியிருந்த தமிழீழ விடுதலைப் போராட்டம், சிங்கள தேசம் தமிழ் மக்கள்மீது நடாத்தி முடித்த கொடூரங்கள் காரணமாக சர்வதேசப் பரப்பெங்கும் வியாபித்து வருகின்றது. அதனைத் தோற்கடிக்க சிங்கள தேசம் அத்தனை பிரயத்தனங்களையும் மேற்கொண்டு வருகின்றது. சிங்கள தேசத்திற்கு இதுவரை நேசக் கரமாக விழங்கிய இந்திய நடுவண் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தமிழகத்தின் மீள் எழுச்சியினால் கலங்கிப்போயுள்ளனர். இந்தச் சாதகமான சூழ்நிலையைச் சரியான வகையில் பயன்படுத்துவதன் மூலமாக மட்டுமே ஈழத் தமிழர்கள் தமக்கான நியாயத்தினை வென்றெடுக்க முடியும். அதற்கான பெரும் தார்மீகப் பொறுப்புக்கள் புலம்பெயர் தமிழர்களுக்கே உள்ளது என்பதை நாம் அவசியம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சந்தி சிரிக்கும் இந்திய மானம்!



ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய வறுமை யும் அறியாமையும் சூழ்ந்த நாடு காங்கோ. கனிம வள அரசியலின் பின்னணியில், 1998-ல் தொடங்கி அங்கு நடந்துவரும் போர், நவீன உலகம் சந்தித்த போர்களி லேயே மிக மோசமானது. 8 ஆப்பிரிக்கநாடு கள், 25 ஆயுதக் குழுக்கள் இந்தப் போரின் பின்னணியில் மனித வேட்டையாடின. இதுவரை 54 லட்சம் பேரின் உயிர்களை காங்கோ போர் பறித்துள்ளது!

பாலியல் வன்முறை - ஓர் ஆயுதம்

காங்கோ போர்ப் பாதிப்புகளில் மிக முக்கியமானது, பெண்கள் மீதான வன்முறை. உலகிலேயே பாலியல் வன்முறைகள் மலிந்த நாடு காங்கோ. பலாத்காரம் என்பது அங்கு ஓர் ஆயுதம். ஒரு பெண்ணைப் பலர் சேர்ந்து சிதைப்பது அல்லது ஆயுதக் குழுக்களை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைக் கொண்டு சிதைப்பது... இதன் மூலம் எதிரி சமூகத்தை நோயாளிகளாக்கி முடக்குவது என்பது காங்கோ போரின் முக்கியமான வியூகங்களில் ஒன்று. இந்தப் போர்க் காலகட்டத்தில் மட்டும், குறைந்தது 2 லட்சம் பெண்கள் காங்கோவில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றன ஐ.நா. சார் அமைப்புகள்.

காங்கோவில் இந்திய ராணுவம்

ரத்த ஆறு கட்டுமீறி ஓடிய நிலையில், கடந்த 2003-ல் சர்வதேசத் தலையீடுகள் காரணமாக காங்கோவில் போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, ஓர் இடைக் கால அரசு அமைக்கப்பட்டது. போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கவும் தொடரும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தவும் ஐ.நா. சபையின் அமைதி காக்கும் படை காங்கோ வுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 22,000 பேரைக் கொண்ட அந்தப் பன்னாட்டுப் படையில் 3,896 பேர் இந்திய வீரர்கள். காங்கோவில் இந்திய ராணுவம் இப்படித்தான் கால் பதித்தது. ஆனால், யாரைப் பாதுகாக்கச் சென்றார்களோ, அவர்களையே பதம் பார்த்து வந்து இருக்கிறார் கள் இந்திய வீரர்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த விவகாரம் மெள்ளக் கசிந்தது. ஆனால், அப்போது அமைதி காக்கும் படையும் இந்திய ராணுவமும் விஷயத்தை மூடி மறைத்தன. அமைதி காக்கும் படைக்கு வீரர்களைப் பங்களிப்பதில் மூன்றாவது பெரிய நாடு இந்தியா. இந்தப் பின்னணியில் இந்தியாவைச் சங்கடத்துக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்தது அமைதி காக்கும் படை. ஆனால், இந்திய வீரர்கள் மீது அடுத்தடுத்துப் புகார்கள் வந்த நிலையில், முதல்கட்ட விசாரணைக்கு அது உத்தரவிட்டது. இந்திய வீரர்கள் மீதான குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை இந்த விசாரணை உறுதி செய்தது. இதுகுறித்து தன்னுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய ஐ.நா. சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், இந்தியா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்ப தாகத் தெரிவித்தார். இவ்வளவுக்குப் பிறகும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ''இந்தக் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை'' என்று கூறிவந்த இந்திய ராணுவம், ஐ.நா. சபையின் தொடர் நெருக்குதல்களால் கடந்த மே 24-ம் தேதி இது தொடர்பாக விசாரிப்பதாக அறிவித்தது. இத்தகைய சூழலில், இந்திய வீரர்களால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் இந்திய ஜாடையில் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளைப்பற்றியும் செய்திகள் வெளியானதால், கையும் களவுமாகப் பிடிபட்டு இருக்கிறது இந்திய ராணுவம்!

இந்திய ராணுவத்தின் பாலியல் அத்தியாயம்

பாலியல் குற்றச்சாட்டுகள் இந்திய ராணுவத்துக்குப் புதிது அல்ல. சொல்லப்போனால், அவை நம்முடைய ராணுவத்தின் வரலாற்றில் பிரிக்க முடியாத - அதிகம் படிக்கப்படாத - ஓர் அத்தியாயம். காஷ்மீரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் கேடயமாக வைத்து, காலங்காலமாக அத்துமீறல்களை நடத்தி வருகின்றன இந்தியப் படைகள்.

மணிப்பூரில் மனோரமா என்ற இளம் பெண் ஆயுதப் படையினரால் பாலியல் வன்முறைக்கு ஆளானதையும் அதன் தொடர்ச்சியாக மணிப்பூர் பெண்கள் 'இந்திய ராணுவமே எங்களையும் பலாத்காரப்படுத்து’ என்கிற பதாகையோடு நடத்திய நிர்வாண ஆர்ப்பாட்டத்தையும் மறந்துவிட முடியுமா என்ன? கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக துளி நீரைப் பருகாமல் தொடர் உண்ணாவிரதத்தில் இருக்கும் இரோம் ஷர்மிளாவின் போராட்டத்தின் அடித்தளம்... மனோரமா கொலைதான்!

காஷ்மீரில் நம்முடைய ஆயுதப் படைகளின் அத்துமீறல்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்திவரும் 'காஷ்மீர் மீடியா சர்வீஸ்’, காஷ்மீரில் மட்டும் 1989 ஜனவரியில் தொடங்கி, கடந்த ஜூன் வரை 9,999 பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இந்த ஜூன் மாதத்தில்கூட இரு பெண்கள் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.

ஈழத்தில் இந்திய அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இன்றைக்கும் சொல்லி அழுகிறார்கள் தமிழ்ப் பெண்கள்.

ஆனால், இந்திய ராணுவம் இத்தகைய குற்றச்சாட்டுகளை மூடி மறைப்பதையே வழக்கமாகக்கொண்டு இருக்கிறது. இங்கே ராணுவத்தினர் அத்துமீறல்களில் ஈடுபட்டால், அது வழக்காகப் பதிவுசெய்யப்படுவது, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ பெரும் பரபரப்பை ஏற்படுத் தும்போது மட்டும்தான். ராணுவத்தினரின் அத்துமீறல்களில் குறைந்தது ஒரு சதவிகிதக் குற்றங்கள்கூட பதிவுசெய்யப்படுவது இல்லை என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். ஆனால், அப்படிப் பதிவு செய்யப்படும் வழக்குகள் மீதும்கூட சர்ச்சைக்குரிய விசாரணைகளையே நடத்தி இருக்கிறது இந்திய ராணுவம்.

உதாரணமாக, காஷ்மீரில் 1994-ல் தொடங்கி 2010 வரை ராணுவத்தினரின் அத்துமீறல்கள் தொடர்பாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக விசாரணை நடத்திய வழக்குகள் 988. ''இந்தப் புகார்களில் 95 சதவிகிதப் புகார் கள் (940 வழக்குகள்) போலியானவை'' என்று கடந்த ஆண்டு கூறினார் இந்தியத் தரைப் படைத் தளபதி வி.கே.சிங்.

பொதுவாக, ராணுவத்தினர் மீதான எந்தக் குற்றச்சாட்டுக்கும், இந்திய ராணுவம் முன்வைக்கும் உடனடிப் பதில் இதுதான்: ''இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது. இந்திய ராணுவத்தின் நன்மதிப்பைக் குலைக்கச் செய்யும் உள்நோக்கம்கொண்டது!''

இந்திய அரசு, ராணுவத்தின் விவகாரங்களில் தலையிடுவது இல்லை. இந்திய அரசுக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் உண்டு - ஒருவருடைய தவறில் மற்றவர் தலையிடு வது இல்லை என்று. நம்முடைய எதிர்க் கட்சிகளும் அப்படியே!

என்ன செய்வது? இந்த தேசத்தில் ஆயுதப் படைகளின் எல்லாத் தவறுகளையும் மூடி மறைக்க, 'தேசபக்தி’ என்ற ஒரு சொல் போதுமானதாக இருக்கிறது!

- ஆனந்த விகடன்

Tuesday, August 9, 2011

என் கண் மணியே




உன் இமைகள் துடிக்கும் காலம் மட்டும்
என் இதயம் இங்கே துடிக்கிறது...

உன்னுடன் பேசும்போது
உன் கண்களை நான்
பார்க்க மறுக்கிறேன்
ஏன் என்றால்
நீ உன் இதழால்
பேசுவதை விட
உன் கண்கள் தான்
அதிகம் பேசுகின்றன...!

மின்னலை பார்த்தால்
கண் பார்வை போகுமாம்
உன் கண்களை பார்த்து
இங்கு மின்னலே
காணாமல் போனது..!

என் தோள்கள் உனது தலை சாய்க்க,
தவமாய் தவிமிருந்து தவிக்கிறதே
இனி செத்துப் போக சொன்னாள் கூட..
உன் கண் பார்த்துக்கொண்டே மடிவேன் கண்மணியே..!!!




Monday, August 8, 2011

வைகோ தலைமையில் டெல்லியில் அறப்போர் ஆர்ப்பாட்டம்



மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,

’’இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தையும், போலீசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும்.


எனவே அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் முன்னெடுப்பதற்குமான கோரிக்கைகளை வலியுறுத்தவும்;

இதற்கு இந்தியாவில் கட்சி, மாநில எல்லைகளைக் கடந்த ஆதரவைத் திரட்டவும், ஆகஸ்ட் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில், நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜந்தர் மந்தரில், என்னுடைய தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை மதிமுக நடத்த இருக்கின்றது.


ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பங்கு ஏற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சோனியாவின் அடிவயிற்றில் புற்றுநோய்: தமிழர்களின் சாபமா ?

தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகங்கள் பலருக்கு இருக்கும், சரி விடையத்துக்கு வருவோம். டெல்லியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனி விமானம் ஒன்று இரகசியமாகப் புறப்பட்டு அமெரிக்கா நோக்கிப் பறந்துள்ளது. இவ்விமானத்தில் வேறு யாரும் இருக்கவில்லை. சோனியா அம்மையார், அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பவைத்தியர் சகிதம் இந்த விமானம் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற நியூயார்க் ஸ்லோவான் கேட்டரிங் புற்று நோய் மருத்துவமனை நோக்கிச் சென்றுள்ளது. பரம ரகசியமாக இவ்விடையம் கையாளப்பட்டுள்ளது. சோனியாகாந்தியின் நெருங்கிய குடும்ப நண்பர்களுக்குக் கூட இந்தத் தகவல் மறைக்கப்பட்டிருக்கிறது என்றால் பாருங்களேன். ஆனால் அமெரிக்காவில் உள்ள செய்திச் சேவைகள் சும்மா இருக்குமா செய்திகளை அவிழ்த்துவிட்டனர். இதனால் டெல்லி தற்போது ஆட்டங்கண்டுள்ளது !

இதற்கு எல்லாம் காரணம் அவர் அடி வயிற்றில் ஏற்பட்ட பாரிய புற்றுநோய். இதனை முதலில் இந்திய மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளபோதும் அமெரிக்காவில் அதற்கான சிகிச்சைபெற இவர்கள் அறிவுரை கூறியுள்ளனர். இதற்கு அமைவாக அம்மையார் ரகசியமாக அமெரிக்கா புறப்பட்டுள்ளார். அவருக்கு நேற்றைய தினம் (வியாழன்) பாரிய சத்திரசிகிச்சை ஒன்று நடைபெற்றதாக அமெரிக்கா செய்திச்சேவைகள் ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவலாக செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழர்களின் வயிற்றில் அடித்த சோனியாவுக்கு அதே இடத்தில் புற்றுநோய் ! புற்றுநோய் என்பது குணப்படுத்தக்கூடிய வருத்தம் என்றாலும், அது இலகுவில் மாறாது. திரும்பத் திரும்ப அது தோன்றும் அபாயம் உள்ளது. 100% இதனைக் குணப்படுத்த முடியாது என்பது யாவரும் அறிந்த விடையம். அது மட்டுமல்லாது புற்றுநோய்க்கு செய்யப்படும் சிகிச்சை மற்றும் கொடுக்கப்படும் மருந்துகள் உடல் முழுவதும் ஒரு எரிச்சலை உண்டாக்கும். குறிப்பாகச் சொல்லப்போனால் உடல் முழுவதும் அசிட்(திராவகம்) தடவினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். அதுமட்டுமல்லாது அதன் பக்க விளைவுகளாக தலைமுடி உதிர்தல் தற்காலிகமாக தலை மொட்டையாதல் என்பவும் இதில் அடங்கும். இவைகளை அனுபவிக்கும் காலம் சோனியாவுக்கு நெருங்கியுள்ளது என்று தான் சொல்லவேண்டும்.

அமெரிக்காவில் அறுவை சிகிச்சை முடிக்கப்பட்ட நிலையில் அவர் எப்போது நாடு திரும்புவார் என்று தெரியவில்லை. சோனியாவின் இந் நிலை டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசின் அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை தான் மூழாத குறை. அதுவும் வெகுவிரைவில் ஆரம்பமாகிவிடும். அடுத்து நடப்பது என்ன என்பதனை தமிழர்கள் பொறுமையோடு இருந்து பார்க்கலாம். கெடுவான் கேடு நினைப்பான் என்பார்கள் ! பழமொழிகள் பொய்யுரைப்பது இல்லையே !

DAILY TELEGRAPH REPORT

Tuesday, August 2, 2011

தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரனை ‘தீர்த்துக்கட்ட’ சோனியா பிறப்பித்த ரகசிய உத்தரவு?



ஈழத் தமிழர் பிரச்சினையில் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை சீர்குலைத்து, ராணுவ மோதலுக்கு ஊக்கப்படுத்தியது இந்தியாவும் – சோனியாவும் தான் என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டைச் சார்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழு, ராஜபக்சேவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் சோனியாவும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுபற்றி பேச்சுவார்த்தை முயற்சிகளில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் மற்றும் ‘ஸ்டேட்ஸ்மென்’ ஆங்கில நாளேட்டின் மூத்த செய்தியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம் ராஜப்பா ஆகியோர் தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் – இணையதளங்களில் இடம் பெற்றுள்ளன.

குழுவில் இடம் பெற்றிருந்தவரும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியுமான எம்.ஜி.தேவசகாயம் எழுதிய கட்டுரை:

அண்மையில் உலக நாடுகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது ‘சேனல் 4’ தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகள். ஈழத் தமிழர்களை நிர்வாணமாக்கி, கண்களைக் கட்டி, சிங்கள ராணுவம் சுட்டுக் கொல்வதும், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குவதும் இதில் இடம் பெற்றுள்ளது. அண்மையில் இலங்கை சென்று திரும்பிய பிரிட்டிஷ் முன்னாள் வெளியுறவு அமைச்சர் டேவிட் மில்லி பாண்ட், பிரான்சு முன்னாள் வெளியுறவு அமைச்சர் பெர்னார்டு கவுச்னார் ஆகியோர், “யுத்தம் முடிந்த பிறகு, தமிழர்கள் நான்காம் தர, அய்ந்தாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகிறார்கள். வெளிநாட்டுக் கொள்கை என்று ஏதேனும் ஒன்று இருக்குமானால், உடனடியாக இந்த மோசமான மனித விரோத நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும்” என்று எழுதியிருந்தனர்.

இந்த கொடூரமான மனித அவலங்களுக்குப் பின்னால், இந்தியாவின் பங்கு உண்டு என்பது வெளிவராத உண்மை.
2005 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்தியாவின் விருப்பத்துக்கு மாறாக ரணில் விக்ரமசிங்கே தோற்று, ராஜபக்சே வெற்றிப் பெற்றார். ராஜபக்சேவின் வெற்றியை விரும்பாத புதுடில்லி, அவரை அங்கீகரிக்காமல், ஓரம் கட்டி, ராஜபக்சேவை ஒதுக்கி வைத்துவிட்டது. இந்த நிலையில் தந்திரக்காரரான ராஜபக்சே, தன்னை நேர்மையாகக் காட்டிக் கொள்ளவும், இந்தியாவின் ஆதரவைப் பெறவும் விரும்பினார். அதற்காக ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ள முயன்றார். தமிழ்நாட்டைச் சார்ந்த தமிழின உணர்வு கொண்ட மூத்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு ஈழத் தமிழர் அரசியல் தீர்வுக்காக இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே உறவுப் பாலமாக செயல்படுமாறு கேட்டுக் கொண்டார்.

கொழும்பிலிருந்து வந்த இந்த வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் நானும் (எம்.ஜி. தேவசகாயம்) இடம் பெற்றிருந்தேன். குழுவின் முதல் கூட்டம் 2007 மே மாதம் 10 ஆம் தேதி சென்னையில் நடந்தது. ராஜபக்சேவின் மூத்த ஆலோசகர் கலந்து கொண்டார். இருதரப்பினரும் ஏற்கக்கூடிய அரசியல் தீர்வுக்கான திட்டம் ஒன்றை தயாரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழக அதிகாரிகள் குழு கொழும்பு சென்று 2007 ஜூலை 17 அன்று ராஜபக்சேயையும் கொழும்பு உயர் மட்ட அதிகாரிகள் குழுவையும் சந்தித்தது. ராஜபக்சே விரிவாக பேசினார். அவரது பேச்சு மிகவும் ஈடுபாட்டுடனும், ஆக்கபூர்வமாகவும் இருந்தது. தமிழக குழுவின் கருத்துகளை ராஜபக்சே முழுமையாக ஒப்புக் கொண்டார்.

பிரச்னைகளுக்கான தீர்வு முதலில் அந்த நாட்டு மக்களிடமிருந்தே உருவாக வேண்டும் என்றும், அந்தத் தீர்வுத் திட்டங்கள் சர்வதேச கருத்துகளோடு, குறிப்பாக, இந்தியாவின் கருத்தைப் பெற்று திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கூறினோம். ராஜபக்சேயும் ஏற்றுக் கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு, தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்குப் பகுதிகளை ஒன்றாக இணைத்து, சுயாட்சி வழங்கும் திட்டத்தை ராஜபக்சே அறிக்கையாகவே வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தமிழகக் குழு, ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்ற அமைச்சர்களையும், உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து பலமுறை சந்தித்து, தமிழர் பிரச்சினைகளைத் தீர்க்க பல முயற்சிகளை மேற்கொண்டது. கடைசியாக, இலங்கை சட்ட அமைச்சர், ஆட்சி மொழி ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசிய பிறகு ராஜபக்சேவுடன் முக்கியமான சந்திப்பு 2008 மார்ச் 25 இல் நடந்தது. அப்போது அரசியல் தீர்வு திட்டம் ஒன்று இறுதியாக்கப்பட்டது.

உடனே, கொழும்பிலிருந்த இந்திய தூதரகம் இதை அறிந்து ஆத்திரமடைந்தது. அதன் துணை ஆணையர் ஏ. மாணிக்கம், என்னை சந்திக்க நேரம் கேட்டார். நான் தங்கியிருந்த ஓட்டலுக்கு மாலை 5 மணிக்கு வரச் சொன்னேன். ஆனால், அந்த அதிகாரி வரவில்லை. அதற்கு பதிலாக எங்களுடன் பேசிக் கொண்டிருந்த கொழும்பு அதிகாரிகள் குழுவிடம், அங்கீகாரம் இல்லாத நபர்களிடம் எப்படி பேசலாம் என்று இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்தது.

பிறகு நான், நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளை விளக்கி, பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.எ. நாயருக்கு 2008 ஏப்ரல் முதல் தேதி விரிவான கடிதம் எழுதினேன். அவர், என்னுடன் பணியாற்றிய அதிகாரி நீண்ட காலப் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வு உருவாகியுள்ள இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் கேட்டிருந்தேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை” என்று அய்.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி மேலும் பல விவரங்களை ‘ஸ்டேட்ஸ்மென்’ ஏட்டின் ஓய்வு பெற்ற மூத்த செய்தியாளர் சாம் ராஜப்பா, தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழக குழுவினர் அரசியல் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதில் வெற்றிப் பெற்ற நிலையில், இந்தியா தனது போக்கை மாற்றிக் கொண்டு, விடுதலைப் புலிகளுக்கு எதிராக முழு ராணுவத் தாக்குதலைத் தொடங்குமாறு, ராஜபக்சேவுக்கு பச்சைக் கொடி காட்டியது. பிரபாகரன், உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மன் ஆகியோரின் தலையை வெட்ட வேண்டும் என்றும், இதற்காக எந்த ராணுவ உதவியையும் இந்தியா வழங்கும் என்றும் சோனியா கூறினார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்தன.

பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு செயலாளர் சிவசங்கரமேனன், பிரதமர் அலுவலகத்தில் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழு ஒன்றாக இணைந்து, நாட்டின் நலனைவிட சோனியாவின் விருப்பமே முக்கியம் என்று செயல்பட்டன. அதன் பிறகு, கொடூரமான இனப் படுகொலைகளை ராணுவம் நடத்தியது. அதுதான் ‘சேனல் 4’ வெளியிட்ட படுகொலை காட்சிகள். இலங்கையே இந்தப் புதைகுழியை வெட்டிக் கொண்டுவிட்டது.

‘சேனல் 4’ ஆவணங்களைப் பார்த்து உலக நாடுகள் எல்லாம் கண்டிக்கும்போது, இந்தியா மட்டும் எதுவுமே தெரியாதது போல் கள்ள மவுனம் சாதிப்பதற்கு காரணம் இதுதான்.
ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ராஜபக்சேவும் அவரது பரிவாரங்களும் போர்க்குற்றவாளியாக நிறுத்தப்படும்போது, புதுடில்லியும், இந்தக் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததிலிருந்து தப்பிவிட முடியாது. அதற்கான மணி ஒலிக்கத் தொடங்கி விட்டது” – என்று சாம் ராஜப்பா எழுதியுள்ளார்.

விடுதலை இராசேந்திரன்