Wednesday, December 30, 2009

இழப்பு - 2009

உறவினை இழக்கையில்
உள்ளம் உறங்கிப் போகும்
உணர்வுகளின் கொந்தளிப்பில்
உதடுகள் கூட ஊமையாகிவிடும்...

நெஞ்சுக் குழிக்குள்ளே
நிஜங்களைத் தொலைத்துவிட்ட
நினைவுப் போராட்டம்
நிழலாய் தொடரும்...

கனவுகளும் கூட
கற்பனைகள் இல்லாமல்
கலங்கிப்போய்
கண் மூடி கிடக்கும்
கண்களில் கண்ணீரும்
காய்ந்து போய் விடும்...

இரவுகளுக்கும் பகல்களுக்கும்
இடைவெளியே இல்லை
இரவிலும் உறக்கமில்லை
இருளே பகலிலுமாய்
மனம் விரும்பாவிட்டாலும்
மௌனம் நம்மை
தனதாக்கி கொள்ளும்...

மண்டியிட்டு மௌனம்
மனதுக்குள் உட்கார்ந்து
மங்காத நிகழ்வுகளை
மலைபோல காட்டும்...
பரிச்சயமற்ற மௌனத்தால்
பாறாங்கல்லாய்
பாரம் ஏறும்
உடலிலும் உணர்விலும்...

விழுதலிலும் இருந்து
எழுவதற்காய்
மௌனத்தை கேட்கவேண்டும்
ஏ...மௌனமே பேசிவிடு...


திருவள்ளுவராண்டு 2041 (ஆங்கிலம் 2010) தமிழ் நாள்காட்டிஇன்னும் சில நாட்களில் 2010 புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது ஆங்கிலப் புத்தாண்டு; உலகமே பின்பற்றும் பொதுவான ஆண்டு என்பது எல்லாரும் அறிந்தது. 2010 சனவரித் திங்கள் 14ஆம் நாளில் தமிழர்களின் புத்தாண்டு பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2041 ஆகும்.

ஆங்கிலத்தையும் ஆங்கிலப் புத்தாண்டையும் முன்படுத்தி நாள்காட்டிகள் வெளியிடப்படுகின்ற மரபைப் போல, தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியா திருநாட்டில் நான்காவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிக்கொடிகட்டி வெளிவருகின்றது.

ஏற்கனவே, 2007, 2008, 2009 ஆகிய மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளை மட்டுமின்றி, மக்கள் தொலைக்காட்சியின் வாழ்த்தையும் பெற்ற இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது. மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார்.

தமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்த நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணிந்து குறிப்பிடலாம்.


நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியிலும் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில் ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கும் முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

தமிழர்கள் கண்ட தமிழ் எண்கள் அழகாக வடிவமைக்கப்பட்டு இந்த நாள்காட்டியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்களுக்கு நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாள்காட்டியின் உள்ளடக்கங்கள்:-

1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன.

2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்களின் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

6)தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்தி காட்டியுள்ளது.

7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.


உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக மு‎ன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.


இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீளக்கட்டிடும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக் கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, திங்கள், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.


தொடர்புக்கும் மேல் விளக்கத்திற்கும்:-
தமிழியல் ஆய்வுக் களம் – Persatuan Pengajian Kesusasteraan Tamil
No.17, Lorong Merbah 2, Taman Merbah,
14300 Nibong Tebal, SPS, Pulau Pinang. Malaysia

கைப்பேசி:- ம.தமிழ்ச்செல்வன் (6013-4392016)


மீண்டும் தலைவன் மீட்கும் ஈழம்கொட்டடி கிடத்தி குண்டடி நிகழ்த்தி
கம்பிவேலிக்குள் கயமை உடன்பாடு
கண்டொழிக்க நினைத்தானே கயவன்
மாண்டொழியா எம் மானம்...
மறத்தமிழர் தன்மானம்...


மண்மிசைஅயலாட்சி அடியோடொழிக்கவே
போலித்தலைமை புறங்கடை விரட்டவே
ஆளப் பெரும்படையணி திரண்டதுவே!
புலத்தினில் புரட்சியேந்தி புதுப்படை திரண்டதுவே!

எம் தலைமையிங்கே வுதிக்கும்!
வன்னித் தலைமை வானுயரும்!
கடற்புலியும் கரும்புலியும்- ஆற்றல்
களப்புலியும் பூவையரும் புரட்சியேந்த
பிறந்த புலிப்படை மீளும்!

களத்தில் மடியும் இனமறவர்
கல்லறை சென்றும் எழுகின்றார்!
உணர்வை யூட்டும் உயர்(நடு)கல்லாய்...
உலகை உலுக்கும் உணர்வுகளாய்...

இன்னே நெருப்பில் எழுகிற ஈழம்
எம் நினைவில் வளருது நாளும்!
தாகந் தணிக்கும் எந்தலைவா
ஈகந் தருவோம் இன்னுயிரை!

எத்தனை தாய்களின் மைந்தன் நீ
உற்ற உறவு மடிவெய்த- வாழ்வு
செழித்த கழனியெலாம் எதிரி (கைக்)கொள
ஏதிலிகளான இலக்கம் தாய்க்கும்
இலக்கிய தனையன் நீ!

ஈழத்து நிலவே! நீயெம் உள்ளத்தரசாய்...
இவ்வுளத்து அரசை நிலத்தி(னி)ல் எழுப்புக!
மனத் துயருடைத்து ஆலையும் நற்றமிழ்ச்சாலையும்
அலைபடர் கடலினும் பெருக்குக!

எண்ணிலா பெருமைகள் இன்னும் படைத்து
விண்ணுயர் நெடும்புகழீட்டி நெடிது வாழ்கவே!

தோழர் சிவாMonday, December 28, 2009

கிருஷ்ணகிரி அடித்த எச்சரிக்கை மணி: எங்கே போனார்கள் தமிழினத் தலைவர்கள்

அலெக்ஸ்-பாண்டியன்


ஆறாவது விரல்


டச்-அப் பாய்


சீனியர் பதில்கள்


எழுதப்படாத சரித்திரம்


மனசே கொலாப்ஸ் ப்ளீஸ்..!


ஏட்டு ஏகாம்பரம்

எண்ணத்தைச் சொல்லுகிறேன்

கிருஷ்ணகிரி அடித்த எச்சரிக்கை மணி:
எங்கே போனார்கள் தமிழினத் தலைவர்கள்

தெலுங்கானா கோரிக்கையின் பின் விளைவுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்
புதிய மாநிலக் கோரிக்கைகளும், மறு சீரமைப்புக் கருத்துக்களும் பெருகி
வருவது தொடர் நிகழ்வாக மாறிவிட்டது. மறு சீரமைப்புக் கோரிக்கை வைக்க
மற்ற எல்லோரையும்விட தமிழ்நாட்டுக்குத்தான் அதிக கட்டாயம் உள்ளது;
ஏனெனில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அதிகம் இழந்தது
தமிழ்நாடுதான் என்பதை நாம் முன்னரே கூறியிருக்கிறோம்.

உண்மையில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழகத்துக்குச்
சொந்தமான நிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டுடன் இருந்திருந்தால், தமிழ்நாடு
மாநிலம் என்பது இன்றைய ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தைவிடப் பெரிதாக
இருந்திருக்கும். கே.எம்.பணிக்கர் என்பவர் அன்று நேருவுடன் தனக்கு இருந்த
‘ரகசிய’ செல்வாக்கைப் பயன்படுத்தி பல தமிழ்ப்பகுதிகளை கேரளாவுடன்
இணைத்தார். தமிழ் நிலப்பகுதியான ராயலசீமா முழுக்கத் தெலுங்கு மக்களை
குடியேற்றி, அந்தப் பகுதிகளை ஆந்திராவுடன் இணைத்தனர் தெலுங்கு
வாலாக்கள்.

கர்நாடக விஷயத்தில் தமிழனின் கதை புழுவுக்கு ஆசைப்பட்டு மீனை இழந்த
கதையானது. பெங்களூர், கொள்ளேகால் (கொள்ளிடம் என்று பொருள்), குடகுப்
பகுதிளை இழந்து வறண்ட பூமியான ஓசூரை நமக்குத் துப்பினார்கள். சுயபுத்தி
இல்லாவிட்டாலும் சொல் புத்தியாவது வேண்டும் என்பார்கள். இன்று மற்ற
மாநிலத்தவர் பேசுவதைப் பார்த்தாவது, தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு ரோஷம்
வருமா என்று பார்த்தால், அது மேலும் மழுங்கிப் போய்க்கொண்டிருக்கிறது
என்பதற்கு அடையாளமாக ஒரு காரியம் நடந்துள்ளது.

“இளைத்தவன் வீட்டில் இருப்பதைப் பிடுங்கு; எல்லாம் முடிந்தால் எலும்பை
உருவு” என்ற கதையாக, இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஆந்திராவுடன்
சேர்க்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு
தெலுங்கர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். உடனே உப்புப் போட்டு சோறு
தின்கிற சில பல தமிழர்கள் சேர்ந்து அந்த அநியாயக் கோரிக்கையை எதிர்த்து
தடுத்து விரட்டியுள்ளனர். சந்தோஷமான செய்தி.

ஆனால் இதில் மிகப்பெரிய வருத்தம் என்ன வென்றால், இந்தப் போராட்டத்திற்கு
தமிழக அரசு அனுமதி கொடுத்ததுதான். நம் போலீஸ் அனுமதியோடு நடந்த
போராட்டம் இது. திட்டமிட்டு எல்லா விதத்திலும் தன் இனம் மொழி
அழிக்கப்படுவது கண்டு உயிரின் விளிம்பில் நின்று ஈழ மக்கள் தனி நாடு
கேட்டபோது, இங்கிருந்து இலங்கையின் இறையாண்மைக்காகக் கவலைப்பட்டவர்கள்,
தமிழகத்தில் இருந்து கிருஷ்ணகிரியை பிரிக்க போராட்டம் நடந்தபோது என்ன
செய்தார்கள்?

எப்படி வந்தது இந்த தைரியம்? போராட்டத்திற்கு அரசு அனுமதி கொடுத்த
அதிகாரிகள் யார்? எங்கே போச்சு நம் சொந்த இறையாண்மை?

தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்பவர் ஆட்சியில், த மிழகத்தில்
இருந்து ஒரு மாவட்டத்தைப் பிரிக்க நடந்த போராட்டத்திற்கு போலீஸ் அனுமதி
தந்துள்ளது என்றால்,

அடச்சீ...

எத்தனை அவமானம்-?

இது ஏதோ ஒருநாள் சம்பவம் அல்ல.

ஓர் இடத்து சம்பவமும் அல்ல.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து
உயிர்த் துறந்த பொட்டி ஸ்ரீராமுலுவின் இன்னொரு கோரிக்கை மிகக்
கேவலமானது. சென்னை ஆந்திராவுக்கு வேண்டும் என்ற அநியாயமான கோரிக்கை அது.

இப்போதும் சென்னையில் பொட்டி ஸ்ரீராமுலுவின் சமாதி முன்பு, அவர் இறந்த
தினத்தன்று கூடும் சில தெலுங்கு சமூக விரோதிகள் “அரவாடு சாவாலா, மதராஸ்
காவாலா” என்று கோஷம் போடுகின்றனர். இதன் பொருள் “தமிழன் எல்லோரும்
சாகவேண்டும், ஆந்திராவுக்கு சென்னை வேண்டும்”

சென்னையிலேயே மலையாளிகள் நடத்தும் ராஜ்யோத்சவ விழாக்களில் “காசர்கோடு
முதல் கன்னியாகுமரிவரை ஐக்கிய கேரளம் அமைப்போம்” என்று வருடாவருடம்
சபதம் எடுக்கின்றனர். கர்நாடக மாநிலம் உருவான நாளை வருடா வருடம்
சென்னையில் கொண்டாடும் கன்னடர்கள், “நீலகிரி மாவட்டத்தை கர்நாடகாவுடன்
இணைக்கும் நாள் விரைவில் வரும்” என்று சூளுரைக்கின்றனர்.

சென்னை நகரத்தை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று அன்று ஆந்திரர்கள்
சென்னையில் கலகம் செய்தபோது, “இந்த அநியாயமான கோரிக்கைக்குத் துணை
போகின்றவர்கள் வீட்டு குடிநீர் இணைப்பைத் துண்டிப்பேன்” என்று மிரட்டி
அவர்களை அடக்கினார் அன்றைய சென்னையின் தகுதியான நகரத் தந்தை (மேயர்)
செங்கல்வராயர்.

இன்று சென்னைக்கு ஆந்திரா கிருஷ்ணா நீர் தருவதன் பின்னணியில் மீண்டும்
தண்ணீர் விஷயத்தில் மிரட்டி சென்னையை ஆந்திராவோடு சேர்க்கவேண்டும் என்ற
வஞ்சகத் திட்டம் இருந்தது. ஆனால், விஷயமே தெரியாமல் வீராணம் திட்டம்
மூலம் அதற்குப் பாதி சாவு மணியடித்துவிட்டார்கள்.

இப்படி தமிழனிடம் இருந்து பிடுங்கியது போதாது என்று, மேலும் பிடுங்க
அண்டை மாநிலத்தினர் திட்டம் போடுகின்றனர். அதன் அடுத்த வெளிப்பாடுதான்
கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஆந்திராவோடு சேர்க்கவேண்டும் என்று தெலுங்கர்கள்
தைரியமாகப் போராடி இருப்பது. ஆனால், எதிர்த்துப் போராடி அடித்து
விரட்டிய தமிழர்கள் புதிய சரித்திரத்தைத் தொடங்கி உள்ளனர். அவர்களின்
பாத கமலங்களுக்குப் பணிவான வணக்கங்கள். சுயநலப் பேயான தமிழக
அரசியல்வாதிகளை நம்பிப் பயனில்லை. மக்கள் களமிறங்கியிருப்பது பெருமையாக
உள்ளது. ஓர் அநியாயமான போராட்டத்துக்கு அனுமதியும் கொடுத்துவிட்டு,
வேடிக்கை பார்த்த நிலையில், தமிழகத் தலைவர்கள்(?), தமிழினத் தலைவர்கள்
இங்கு உண்டா என்று தேட வேண்டியுள்ளது.

இதே வேறு மாநிலமாக இருந்திருந்தால், அந்த மாநில முதல்வர்கள் என்ன
நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். புரியும்.

தமிழன் அவ்வளவு இளிச்சவாயனா

http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=731&rid=40

Sunday, December 27, 2009

இலங்கையில் தீவிரவாதத்தை அழிக்கிறேன் எனக்கூறிக் கொண்டு சிங்களர்களின் பயங்கரவாதத்திற்கு உதவி செய்து கொண்டிருக்கும் இந்தியரசு வாழ்க! வாழ்க!

இந்திராவின் மறைவிற்கு பின்னர் கடந்த பல ஆண்டுகளாக ராஜீவ் எடுத்த முயற்சியும், அதன் பின் வந்த அனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டு உலகிலேயே திறமைவாய்ந்த அனைத்து படைகளையும் (தரைப்படை, கப்பற்படை, விமானப்படை) வைத்திருந்து திறமையான நிர்வாகம் நடத்திக்கொண்டிருந்த LTTE யை ராஜபட்சேவின் துணையோடு இந்தியரசு கொன்றழித்தது. அந்தப்போரில் பல்லாயிரக்கனக்கான அப்பாவிபொதுமக்கள் கொல்லப்பட்ட அனைவரும் தமிழர்களே, குறிப்பாக சிங்களப் பொதுகுடிமக்கள் ஒருவர் கூட இந்தப்போரில் சாகடிக்கப்படவில்லை. தமிழர்கள் வாழ்ந்த பகுதி தமிழர்களின் தாயாகப் பகுதி என்பதனை நடந்து முடிந்த ஈழம் நான்காம் போர் இந்த உலகத்திற்கே நிருப்பித்துள்ளது. இலங்கையரசு அந்நாட்டுப்பூர்விககுடிகளான தமிழர்களை இரண்டாம் தர மக்களாகத்தான் நடத்திக் கொண்டிருக்கிறதென்பது அந்த நாட்டின் அரசியல் சட்டமே சான்று.

முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை அவர்களுடைய சொந்த மண்ணுக்கு அனுப்பாமல், முகாம்களில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து சாகடிக்கும் போக்கு ராஜபட்சே வின் இனவெறி ஆளுமையை உலகுக்கு பறைச்சாற்றி கொண்டிருக்கிறது. ஒரு சிங்கள குடும்பம் கூட இந்தவதை முகாம்களில் இருத்ததாக யாரும் கேள்விப்பட்டதில்லை, தமிழர்களின் நிலைமை இப்படியிருக்கும் நேரத்தில் இலங்கையரசாங்கம் சிங்களர்களை வேக வேகமாக தமிழர் பகுதிகளில் குடியேற்றம் செய்து கொண்டிருக்கிறது, அதுவும் இராணுவக்குடியமைப்புகளை தமிழர்கள் வாழ்ந்தபகுதிகளில் திட்டமிட்டு குடியேற்றம் செய்து கொண்டுவருதின் நோக்கத்தை நாம் சற்று உன்னிப்பாக கவனிக்கவேண்டியுள்ளது.
LTTE யை வீழ்த்துவதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பது அனைத்து சர்வதேச நாடுகளும் அறிந்த ஒன்றாகும். LTTE யை வீழ்துவதில் இந்தியாவின் பங்கு பெரியதென்றாலும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் என்று சொல்லிகொள்பவர்களின் பங்கு மிகப்பெரியது. ஏதோ ராஜிவின் படுகொலைதான் இத்தாலி நாட்டுக்காரர் ஆன சோனியாவை கோபமுட்டியது என்பது தவறான பார்வை.

உண்மையில் ராஜிவை கொன்றது யார்??? நாம் LTTE என்று சொல்வதுதான் முலமாக மிக எளிதாக நாம் இந்த கொலைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடாலாமென்று கருதுகின்றேன். ஏனெனில் உண்மையை கண்டுபிடிப்பதின் உண்மையாகவே யாருக்கும் அக்கறை இல்லை என்பதனை நாம் பல படுகொலைச்சம்பவத்தை உதாரணமாக கொல்லலாம். ( ஜாலியன் வாலாபாக் படுகொலை, சீக்கியர்கள் படுகொலை, கென்னடி படுகொலை, இந்திரா படுகொலை, காந்தி படுகொலை, கோத்ரா படுகொலை…) ராஜிவ் கொல்லப்பட்ட காலகட்டம் அவருக்கு அரசியலில் செல்வாக்கு மிகவும் குறைந்திருந்தது பல காரணங்களால் ( போபர்ஸ், இட ஒதுக்கீடு, ஈழப்பிரச்சனை, உள்கட்சி மோதல், அமெரிக்க எதிர்ப்பு…) முக்கியமாக அவர் அமெரிக்காவுக்கு முதல் எதிரியாக இருந்தார். ராஜிவ் ஆட்சி புரிந்த காலத்தில் coke, PEPSI போன்ற எந்த சிறு அமெரிக்க பொருட்களும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதியில்லை. மேலும் அவர் தனது காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்துக் கொண்டிருந்த தன் தாயாருக்கு விசுவாசியான முத்தகாங்கிரஸ் உறுப்பினர்களை முற்றிலும் ஒரங்கட்டி வைத்திருந்தார். அவர்களை சரியாக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா. ராஜிவை கொன்ற தானு கட்டியிருந்த வெடிகுண்டு கூட அமெரிக்க தயாரிப்பு என்பது நிருபணமாகியுள்ளது. மேலும் ராஜிவால் ஒதுக்கப்பட்ட அந்த மூத்த காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சோனியாவால் முன்னுரிமை கொடுக்கப்பட்டதன் பொருள் என்ன என்பதனை நாம் இந்த இடத்தில் சிந்திக்க தோன்றுகிறது. ஆக ராஜிவ் படுகொலையால் சோனியாவுக்கு சாதகமானதே தவிர பாதகம் இல்லை என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.

இந்திய அரசால் டில்லியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட பிரபாகரன் வரும் எதிர்காலத்தில் இந்தியரசுக்கு எதிராக நாங்கள ஆயுதம் ஏந்த வேண்டிய சூழல் உருவாகும் என தெளிவாக எடுத்துரைத்தார். பின்பு இலங்கை திரும்பிய பிரபாகரன் யாழ்ப்பாணம் சுடுமலையில் பொதுமக்கள் முன்பு உறையாற்றும் பொழுது இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம் என்ற அறைகூவல் விடுத்துதான் தங்களுடைய ஆயுதங்களை அமைதிப்படையிடம் ஒப்படைத்தனர். 1986 களில் அப்படி துல்லியமாக சிந்திக்க தெரிந்த பிரபாகரன் நிச்சயம் ராஜிவ் படுகொலையை செய்திருக்க முடியாது என்பது திண்ணம். அப்படி சதாரனமாக சிந்திக்க கூடியவர் இல்லை பிரபாகரன் என இந்திய அமைதிப்படையே ஒப்புகொண்டுள்ளது. அப்படி ராஜிவ் படுகொலையை நிகழ்த்தியிருந்தால் அதனால் வரும் எதிர்விளைவுகளை பிரபாகரன் அறியாதவர் அல்ல. இன்னும் சொல்லப்போனால் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட பொழுது LTTE யினர் அவர்களுது கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு 3 நாட்கள் துக்கம் அனுசரித்தார்கள். ராஜிவ்படுகொலையை அவர்கள் செய்யதிருந்தால் நியாப்படி அவர்கள் நிறையபழிவாங்கும் படலத்தை தொடர்ந்திருக்கமுடியும் ( வரதராஜபெருமாள், சந்திரஹாசன், டக்ளஸ்தேவனாந்தா…) அப்படிசெய்யக்கூடிய எந்தமுயற்சியிலும் LTTE யினர் ஈடுபட்டதாக தெரியவில்லை.

தற்பொழுதுள்ள சூழ்நிலையில் கூட கருணா,ராஜபட்சே, கோத்தபாயே, பொன்சேகா, கருணாநிதி, ஜெயலலிதா, திருமா, சுபவி, வீரமணி, ஜெகத்கஸ்பர், கனிமொழி, சிதம்பரம், சிவசங்கரமேனன், எம்.கே.நாராயணன், பிரணாப்முகர்ஜி, விஜய்நம்பியார், பாங்கிமுன், சோனியா, மன்மோகன் மற்றும் சிலர் கொல்லப்பட்டால், அந்த பழி LTTE யின் மீது விழுமென்பது அனைவரும் அறிந்த உண்மை. LTTE யை வேரொடு அழித்துவிட்டோம் என்று கொக்கறித்து கொண்டிருக்கும் சர்வதேச நாடுகளும் LTTE யினர் தான் படுகொலைக்கு காரணமென்று வரிந்து கட்டி கொண்டு வரிசையில் நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை, எப்படி சிதம்பரம் LTTE யினர்தான் மாவோஸ்டுகளுக்கு ஆயுதம் வழங்கினார்கள் என்று எந்தவித ஆதரமும் இல்லாமல் குற்றம்சாற்றுகிறாரோ, அதே வேலையைதான் பாகிஸ்தானும் இலங்கை கிரிக்கட் வீரர்களை தாக்கியது LTTE யினர் தான் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது, இன்னும் வரும் நாட்களில் பாகிஸ்தானில் நடந்து கொண்டிருக்கும் குண்டுவெடிப்புகளை நடத்துவது LTTE யினர்தான் என்று சொன்னாலும் ஆச்சிரியபடுவதற்கில்லை.

இலங்கையில் LTTE யை அழிக்க இந்தியரசு ஏன் மாபெரும் முயற்சியினை செய்துகொண்டிருக்க வேண்டும் என்ற கேள்விக்கு நாம் விடை தெரியாமல் இருக்கின்றோம். இந்தியாவின் கடைகொடியில் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுகொண்டிருக்கும் இந்தியரசு வடக்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் எத்தகைய நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதனை நாம் சிந்திக்க வேண்டும். பூகோளப்படி பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு நெருங்கிய உறவும் உரிமையும் இருக்கிறது. ஆனால் இந்தியரசும் சரி, இந்தியர்களும் சரி பாகிஸ்தானை மிகப்பெரிய எதிரியாகவே கருதி பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகள் இந்தியரசு மேற்கொண்டுவருகிறது. உலகில் எங்கெல்லாம் உள் நாட்டு பிரச்சனைகள் எழுகிறதோ அங்கெல்லாம் இந்தியரசு நேரிடையாக தலையிடும் என்பதனை நாம் பல இடங்களில் பார்த்துள்ளோம். (பங்களாதேஷ், இலங்கை, காஷ்மீர், திபெத், காங்கோ). இங்கெல்லாம் அமைதியை நிலைநாட்டசென்ற இந்திய ராணுவம் செய்த அட்டுழியங்களையும் நாம் நன் கு அறிவோம். அத்தகைய செயலுக்கு இந்தியா ஒரு பொழுதும் வருத்தம் தெரிவித்ததில்லை. ஏன் ஈழத்தில் இந்திய அமைதிப்படை செய்த தவறுகளுக்கு கூட ராஜிவ் நியாம் கற்பித்தார், இராணுவம் அப்படி நடந்து கொள்வது இயல்பானது என பதிவுசெய்துள்ளார்.

ஏன் பர்மாவில் நிண்ட நாட்களாக வீட்டுகாவலில் வைக்கப்பட்டுள்ள சன் சாங் சுகி அவர்களை விடுதலை செய்யக் கோரி இந்தியரசு இதுவரை எந்த வலுவான நடவடிக்கையும் எடுக்கவில்லையே? ஆனால் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கங்கோவிற்கு அமைதிப்படையை அனுப்பி அங்குள்ள பழங்குடியினர் மீது இந்திய ராணுவத்தினர் நடத்திய கற்பழிப்புகளை உலக நாடுகள் துணையோடு இந்திய அரசு முடி மறைத்துவிட்டது.
பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற நாடு வெள்ளையனை வெளியேற்ற இருவரும் இணைந்தே போரட்டம் நடத்தி இருக்கின்றோம். இந்திராவின் கணவர் கூட பார்ஸி முஸ்ஸிம் தான், இன்றும் பாகிஸ்தானியர்களுக்கு டில்லியில் மற்றும் இந்தியாவின் வட பகுதிகளில் அவர்களின் மூலாதாரங்கள் உள்ளன. அதே போல இந்தியர்களுக்கும் பாகிஸ்தானில் தங்களுடைய வாழ்வின் அடையாளங்கள் உள்ளன. இன்றும் பல விதங்களில் பாகிஸ்தானியர்கள் நமக்கு மிகவும் நெருக்கமானவர்கள் உணவு, உடை, இசை இப்படி பல காரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

பூகோளபபடியும் பாகிஸ்தானையும், இந்தியாவையும் எந்த கடலும் பிரிக்கவில்லையே! ஆனால் இன்றோ இந்தியர்கள் பாகிஸ்தானியர்களிடம் பகைமை வளர்த்துக்கொண்டுள்ளோம். தினம் தினம் அங்கு செத்து கொண்டிருப்பது நம் சகோதர இனம் தான் என்ற உணர்வு ஏன் ஒவ்வொரு இந்தியனுக்கும் வரவில்லை. ஆனால் ஈழத்தில் சிங்கள இனத்திற்கு ஏதாவது நடந்தால் மட்டும் இந்தியா இலங்கை அழைக்காமலே உதவி செய்கிறது ஏதானால்?
இராமாயண மகாபாரததில் கூட ஆரியர்களின் எதிரியாகவே திராவிடர்களை(தமிழர்களை) சித்தரித்துள்ளனர். எந்த ஒரு இடத்திலும் இஸ்லாமியர்களை எதிரியாக சித்தரித்தது இல்லையே ! ஆனால் இன்று பாகிஸ்தானியர்கள் இந்து மதத்தின் எதிரிகள், தமிழர்கள் இந்தியாவின் எதிரிகள் என்று குறிப்பாக கிரிக்கட் என்னும் விளையாட்டின் மூலமாக சிறு வயது முதலே கற்பிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ராமாயனமும், மகாபாரதமும் திராவிடர் இனத்துக்கு எதிராகவே படைக்கப்பட்டுள்ளது என்பதனை நாம் நன் கு உணரவேண்டும்.

இங்கு தான் நமக்கு பெரிய கேள்வி எழுகிறது, திராவிடர்கள்(தமிழர்கள்) தான் ஆரியத்தின் முதல் எதிரிகள் அப்படி இருக்க இந்தியா ஏன் பாகிஸ்தானுக்கு எதிராகவும் இஸ்லாமியார்களுக்கு எதிராகவும் செயல் பட்டுகொண்டிருக்கிறது. ஏனென்றால் திராவிடர்களுக்கு(தமிழர்களுக்கு) எப்படி தனி பண்பாடு கலாச்சாரம் இருக்கிறதோ அதே போல் இஸ்லாமியர்களுக்கும் இருக்கிறது. ஆனால் ஆரியர்களுக்கு அப்படி ஒரு செம்மையான பண்பாடோ கலாச்சாரமோ கிடையாது. ஆகையாலே இந்தியாவில் சிறுபான்மையாக இருக்க கூடிய ஆரிய இனம் இன்று மற்ற பெரும்பான்மை இனங்களை அழித்தோழிக்கும் முயற்சியில் செயல் பட்டுகொண்டுவருகிறது.

உலகத்திலே சிறுபான்மை இனமான சிங்களவர்களுக்கு இந்தியா பெருதவியை செய்து கொண்டிருக்கும் காரணம் என்ன என்பதனை நாம் ஆராய வேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இனமே ஆரிய இனமே இன்று சிங்களவர்கள் என்று வேறு வடிவம் பெற்றுள்ளது. சிங்கள இனமான ஆரியத்தின் கிளையை காப்பற்றவே இந்தியரசு திராவிடர்கள்(தமிழர்கள்) நடத்திகொண்டிருக்கும் விடுதலை போராட்டத்தை நசுக்கி கொண்டிருக்கிறது. சோனியாவின் கைக்கூளி மன்மோகன் அவர்கள் ஈழ்ப்பிரச்சனைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதனை நாடளுமன்றத்தில் பதிவுசெய்திருப்பது நகைச்சுவைக்கானதாக இருக்கிறது.

இலங்கையில் தமிழர்களை ஒடுக்க இந்தியா மட்டும் காரணம் அல்ல தமிழக அரசின் முழு ஒத்துழைப்பு இந்தியாவுக்கு பெருதவியாக இருந்தது. ஈழத்தில் சிறப்பாக ஆட்சி நடத்திகாட்டிய LTTE யினர்களுக்கு தமிழர்கள் மத்தியில் நல்ல புகழ் கிடைத்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் இனதிற்கே பிராபாகரன் தான் தலைவர் என்பது உலகதமிழர்கள் அனைவாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதை கருணாநிதியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. குள்ளநரிக்குதான் ராஜதந்திரத்துடன் செயல்படும் என்பார்கள், அதே குள்ளநரித்தனத்துடன் செயல்பட்டு சிறந்த இந்தியதேசியவாதியாக மாறியுள்ளார் கருணாநிதி. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலகளில் கருணாநிதியால் நடந்த பட்டுகொண்டிருக்கும் தொழில்களை அவர் இழக்க விரும்பவில்லை. ஆகையால் தான் இந்து ராமின் மாப்பிள்ளையான கலாநிதிமாறானால் இந்தியாவிலே அதிக சம்பளம் பெரும் நபராக உருவாக முடிந்தது.

இந்தியரசு இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் விடுதலை போரட்டத்தை நசுக்க கருணாநிதி எப்படி பெரிய கருவியாக செயல் பட்டுக்கொண்டிருக்கிறரோ, அதே போல காஷ்மிரில் நடந்து கொண்டிருக்கும் விடுதலை போராட்டத்தை கருணாநிதியை கொண்டு ஒடுக்க சில ஆலோசனைகள் மற்றும் வினாக்களை தங்கள் பார்வைக்கு விட்டுள்ளேன்.

1. கருணாநிதியை காஷ்மிரின் முதல்வராக்குவது.
2. காஷ்மிரில் சொத்து வாங்கும் உரிமையை உடனே அவருக்கு வழங்கவேண்டும்.
3. காஷ்மிரில் அவரின் குடும்ப தொழிலை உடனே தொடங்க உரிமை வழங்கவேண்டும்.இப்படி சில உரிமைகள் அவருக்கு வழங்கினால் கருணாநிதி மெல்ல மெல்ல காஷ்மிர் மக்களின் சிந்தனையை அவர் நிச்சயம் சீர்குலைத்துவிடுவார், அதன் பின்பு அவர்களுக்கு போராவேண்டும் என்ற எண்ணமே தோன்றாது.
4.அப்படி இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் விடுதலைப் போராட்டங்களை கருணாநிதி ஒடுக்கினால் இந்தியாவிற்கு கருணா தேசம் என்ற பெயர் சூட்ட வேண்டும். (தமிழ்நாட்டில் 50% இடம் கருணாநிதியிடம் தான் உள்ளது)
5.LTTE யினர் பயங்கரவாதிகள் என்றால் பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ், சேகுவேரா, ஃபிடல் காஸ்ட்ரோ, அலெக்சாண்டர்…. இவர்களையும் இந்தியரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கவேண்டும்.

இந்திய அரசின் எதிரிகள் யார் ? பாகிஸ்தானியர்களா, சீனர்களா, திராவிடத்தமிழர்களா என்பதனை உங்களின் பார்வைக்கு விட்டுவிடுகிறேன். சீனாவுக்கு இந்தியா மீது என்றுமே போர்தொடுக்கும் எண்ணம் துள்ளியும் இருந்ததில்லை இனி இருக்கபோவதுமில்லை. நேரு காலத்தில் நடந்த இந்தியா சீனா போர் கூட நேருவால் தொடுக்கப்பட்டதே தவிர சீனாவால் அல்ல, அப்படி நேருவால் ஆரம்பிக்கப்பட்ட போரை சீனாதான் முதலில் நிறுத்தியது. சீனா இந்தியாவை ஒரு அடிமை நாடாக தான் பார்த்து கொண்டிருக்கிறது. இந்தியாவால் சீன பன்றியின் மயிரை கூட புடுங்கமுடியாது என்பதுதான் நிதர்சன உண்மை. ஆகையால் தான் சீனா வேக வேகமாக இமாலாய எல்லைபகுதியில் 27 போர்விமானத்தலங்களை நிறுவியிருக்கிறது. இந்தியர்கள் குறிப்பாக திராவிடர்கள்(தமிழர்கள்) காலம்காலமாக அடிமையாகத்தான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் மன்னர்களுக்கும் அதன் பின் வெள்ளைக்காரர்களுக்கும், தற்பொழுது காங்கிரஸ் என்னும் பார்ப்பன பனியாக்களுக்கு அடிமையாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்து மதத்தின் பேராதரவு கட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கும் பி.ஜே.பி, இந்து மதத்தின் பிரதிநிதிபோல தோற்றத்தை உருவாக்கி கொண்டு பாகிஸ்தானையும், இஸ்லாமியர்களையும் கடுமையாக எதிர்த்துக்கொண்டு சீனாவுக்கு பேராதரவு கொண்டுவருகிறது.

இதே நிலைப்பாட்டைத்தான் சிவப்புசட்டைப் பார்ப்பனர்களும்(இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகள்) கொண்டுள்ளார்கள். அப்படியானால் யார் தான் நம்முடைய உண்மையான விடுதலைக்கும் உரிமைக்கும் போராடக்கூடியவர்கள்.

உலகில் அநியாயம்
நடக்கும் ஒவ்வொரு
தருணமும்
அடக்க முடியாத
ஆத்திரத்தினால்
உங்களால்
குமுறி கொந்தளிக்க முடிந்தால்
நாம் தோழர்களே – சேகுவேரா

நம் கண் முன் நம் இனம், மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை அழிவதைப்பார்த்துக் கொண்டிருப்பவன், வரும் காலத்தில் அவனுடைய தாயியை வேறோருவன் அவன் கண்ணெதிரே கற்பழித்தாலும் நிச்சயம் அவன் வேடிக்கைப்பார்த்துக்கொண்டுதான் இருப்பான்.

தோழர்களே பயங்கரவாதத்திற்கு எதிராக செயல்பட்டுகொண்டிருப்பதுபோல் நடமாடிக்கொண்டு தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் ஈழத்தில் நாசவேலைகளில் ஈடுபட்டுகொண்டிருக்கும் இந்தியாவின் கொரமுகங்களை வெளிக்கொண்டுவர முயற்ச்சிப்போம்.


என் ஹீரோ பிரபாகரன்: பிரகாஷ் ராஜ்


'என் தேசத்து மண்ணே!
உனக்கு என் ரத்தத்தை தருவேன்.
இந்தக் கலவலரங்களுக்குப் பின் மிச்சமிருந்தால்...'அலி சர்தாரியின் கவிதையை ஞாபகப்படுத்தினார் வேலுப்பிள்ளை பிரபாகரன். இறந்தாரா இல்லையானு மர்மம் ஈழத்தமிழர்களைத் தூங்க விடாம பண்ணிட்டிருக்கிற நேரத்தில் பிரபாகரன் எனக்கு எப்படி தொடுவானம் ஆனாருன்னு யோசிச்சேன். நாம தொடணும் நினைக்கிற, ஆனால் தொடமுடியாத வானமா இருக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை. சரி, தவறு முடிவுகளைத் தாண்டி பிரபாரகனின் வாழ்வுக்கும் அர்த்தம் இருக்கு. மரணத்துக்கும் பெருமை இருக்கு.

கன்னடாதான் எனக்கு தாய்மொழி. இந்தியாதான் என் தாய்நாடு. இலங்கையில் தமிழனா பொறந்திருந்தா, எனக்கும் பிரபாகரன்தான் ஹீரோவாகி இருக்க முடியும். அடக்கு முறை உங்களை எந்தத் திசையில் செலுத்தும்னு யாருக்கும் தெரியாது. எல்லா வசதிகளோடும், வாய்ப்புகளோடும் வாழுற நமக்கு நம்பிக்கையான நாலுபேரை சேர்க்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு. ஆனா, பிரபாகரன் பின்னால் உயிரை துச்சமா மதிக்கும் பெரிய இளைஞர் கூட்டம் சேர்ந்ததுக்கு முக்கியமான காரணம், அவர்கிட்டே இருந்த அர்ப்பணிப்பு உணர்வுதான். ஒரு பேட்டியில் முதன்முதலா நான் அவரை கவனிக்க ஆரம்பிச்சேன்.

''புல்லைக்கூட மிதிக்கக்கூடாது நினைக்கிற அப்பாவுக்கு மகனா பிறந்து நீங்க, வன்முறையைக் கையில் எடுக்கலாமா?''னு கேள்வி கேட்கிறார் நிருபர். 'புல்லும் துன்பப்படக்கூடாது'னு நினைக்கிறவருக்கு ஒரு பையன் எப்படி இருக்கணுமோ அப்படித்தான் நான் இருக்கிறேன்' என்பது பிரபாகரனின் பதில். சக மனிதர்கள் துன்பப்படும்போது அதைப் பொறுத்துக்கொள்ளாத இயல்புதான் அவரின் மாபெரும் கௌரவம். அதை சிந்தனையா மட்டும் வெச்சுக்காம உயிரைப் பணையம் வைத்து மக்களின் துன்பத்தை நீக்க போராடியது அவரின் பெருமிதம்.

குழந்தை இயேசுவை பிரதிபலித்த ஒரு முகம், முப்பது வருஷத்துக்குப் பிறகு, இயேசுவை சிலுவையில் அறைந்தவனின் கொடூர முகத்தை பிரதிபலித்ததுனு ஒரு கதை கேட்டிருக்கோம். துப்பாக்கி தூக்கி ஒரு வாழ்க்கை நடத்தணும்னு பிரபாகரனுக்கோ, ஆயுதம் தூக்கிய புலிகளுக்கோ பிறக்கும்போதே இலட்சியம் இருந்திருக்க முடியாது.

என் அம்மா தீவிரமான கிறிஸ்டியன். இப்பவும் இயேசுவைத் தவிர அவளுக்கு வேற உலகம் தெரியாது. தலைவலி வந்தாலும் இயேசு கிறிஸ்துதான் முதல் டாக்டர். வாரம் தவறாம சர்ச்க்குப் போறதும், நாள் தவறாம பிரார்த்தனைப் பண்றதும் எனக்கு பழக்கமான விஷயம். நியாயமா நானும் தீவிரமான கிறிஸ்டியனா மாறி இப்ப வாரம் தவறாம சர்ச்சுக்கு போகவேண்டியவன். ஆனா, சின்ன வயசுல ஏற்பட்ட அனுபவங்களால், சர்ச் எனக்கு அலர்ஜியாகிடுச்சு. நான் படிச்ச கிறித்துவ பள்ளியில் எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த சிஸ்டரை எப்பவும் பெரிய மூங்கில் குச்சியோடுதான் பார்த்திருக்கேன். என்னுடைய சின்ன சின்ன தவறுகளுக்கு அவங்களுடைய முரட்டு அடி, என் பாதங்களில் பட்டி உயிர்ப்போகிற வலி தெறிக்கும். அடிச்சவங்ளே, 'அன்பான இயேசுவும் தூரமாகிட்டார். ஜெபமும் தூரமாகிடுச்சு.

எனக்கு ஏற்பட்ட சின்ன சின்ன கசப்பான அனுபவங்களே என் கடவுள் நம்பிக்கை தீர்மானித்து, இப்ப வரைக்கும் சர்ச் மேல அலர்ஜி இருக்கு.

நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ எல்லாத்துக்குமே நாம சின்ன வயசில் கேட்டு வளர்கிற விஷயங்களுக்கு, நம்ம குணத்தைத் தீர்மானிக்கிற சக்தி உண்டு. காந்தி அதற்கு சிறந்த உதாரணம். துப்பாக்கி வெச்சிருந்த வெள்ளைக்காரங்களை காந்தி அகிம்சையால எதிர்க்கலையான்னு நிறையபேர் கேட்கிறாங்க. சின்ன வயசுல அரிச்சந்திரன் கதையைக் கேட்டு, 'உண்மையை மட்டும் பேசுவது' என்று முடிவெடுத்தார் காந்தினு படிக்கிறோம். ஒவ்வொருத்தரோட பால்ய வயதில் எந்த விஷயம் பாதிக்குமோ அதுவாகவே மாறிப்போகிறதுதான் இயற்கை. உலகம் முழுக்க லட்சக்கணக்கான உதாரணம் இருக்கு. மனிதர்களை மாடுமாதிரி வேலிப்போட்டு அடைத்து கதற கதற அடித்து கொன்ற ஜாலியன் வாலாபாக் கொடுமையை நேரடியா பார்த்து வளர்ந்த ஒரு சின்னப் பையன் பகத்சிங்கா மாறத்தான் செய்வான். உலகத்துக்கு அது நியாயமா இல்லையானு விவாதிக்கலாமே தவிர, பகத்சிங் உருவாவதை யாரும் தடுக்க முடியாது.

கேட்டு வளர்ந்த கதையே காந்தியைப் பாதிக்கும்போது, பிரபாகரன் பார்த்து வளர்ந்த துயரம் அவரைப் பாதிக்காதா? கண்ணுக்கு முன்னால ஒரு தவறும் செய்யாத கோயில் குருக்களை உயிரோடு எரித்ததைப் பார்த்த சின்னப் பையன் மனதில் வன்முறை விதைக்கப்படுவதை தடுக்க வேண்டியது யாருடைய பொறுப்பு? சாதாரண ஒரு ஃபுட்பால் மேட்சில் பிரான்ஸ் கால்பந்து வீரர் ஜிடேன், சக விளையாட்டு வீரரை தலையால் வன்மத்தோடு முட்டியதை நிறைய சின்னக் குழந்தைகள் பார்த்திருப்பாங்கன்னு அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டார். அந்த நிகழ்வால் பிள்ளைகள் மனதில் வன்முறை விதை விழும்னு உலகமே பதறுச்சு. 'அக்கா, அக்கா'னு பேசிக்கிட்டிருந்த ஒருத்தியை சீரழித்து கொலை செய்கிற காட்சியை ஒரு சிறுவன் பார்த்தா என்னா ஆகுமோ, அதுதான் பிரபாகரன். ஒரு பிரபாகரனை ஜெயிக்கிறதுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவிச்சிருக்கு இலங்கை அரசு. உலகமே வேடிக்கைப் பார்க்க, விலங்குகளைவிட மோசமாக வேட்டையாடப்பட்டார்கள் ஈழத்தமிழர்கள். அதை பல சின்னக் குழந்தைகள் நேர்ல பார்த்திருக்காங்களே நினைக்கும்போது ஈரக்குலை அதிருது. இன்னும் நூறு பிரபாகரன்கள் உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுகிற அரசாங்கத்தின் அதிகார அறியாமையை என்ன சொல்றது?

'ரொம்ப கொடூரமான சர்வாதிகாரி பிரபாகரன்'னு சொல்றாங்க. இனவெறியில் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லர் இல்லை அவர். இன மக்கள் துன்பப்படும்போது அவர்களுக்காக கடைசிவரை களத்தில் நிற்க நினைக்கிற போராளி. தாக்குதல் அல்ல பிரபாகரனின் நோக்கம். தற்காப்பு மட்டுமே. பாம்பின் விஷம்கூட தற்காப்புக்கான ஆயுதமா மாறும். விஷம் கொடுமையானது என்பதில் கருத்து வேறுபாடு யாருக்கும் இல்லை. சம உரிமையை இலங்கை தமிழர்களுக்கு உறுதி செய்திருந்தால் எதற்காக இந்த வன்முறை?

தனிப்பட்ட மனிதனின் கோபத்தில் நியாயம் இல்லாமல் இருக்க எல்லா வாய்ப்பும் இருக்கு. ஆனால், ஒரு சமூகத்தின் மொத்த கோபமும் ஒண்ணு சேருதுன்னா, அதில் நூறு சதவீதம் நியாயம் இருந்தே தீரணும். அதை ஆதாரங்கள் தேடி நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் அடிமட்ட வேலைகள் செய்து சேர்க்கும் காசுல, பெரிய பங்கை தன்னுடைய போராட்டத்துக்கு அனுப்பறாங்கன்னா அதில் எப்படி நியாயம் இல்லாம இருக்கும்?

ஆயுதம் தாங்கிய இயக்கம் எப்படி ராணுவம் மாதிரி எதிர்தாக்குதல் நடத்தலாம்னு கேட்கிறாங்க. அடிக்கிறதுதான் அராஜகம். திரும்பி அடிக்கிறது தற்காப்புதான். உலகம் முழுவதும் தன்னுடைய ராஜாங்கத்தை பரப்பி அதில் மன்னனா முடிசூடணும்னு நினைக்கிற வல்லரசு தோரணை பிரபாகரன்கிட்டயோ, அந்த போராட்டத்திலோ இல்லை. தன்னுடைய வேரை, அடையாளத்தைப் பாதுகாப்பதுதான் முதன்மை நோக்கம். அதில் வெறும் லட்சியவாதியாக மட்டும் இல்லாமல், தேர்ந்த செயல்வீரனாவும் இருந்தார் பிரபாகரன். சொந்த மண்ணில் வேரைக் காக்கும் போராட்டத்தில் இறந்து போறவங்களும் வேராகிடுறாங்க.

கொள்கைக்காக, லட்சியத்துக்காக சாகவும் தயாரா கழுத்தில் எப்பவும் சயனைடு குப்பியோடு இருந்த பிரபாகரன் இப்பவும் எப்பவும் இளைஞர்களுக்கு ரோல்மாடல்தான். என்னுடைய மகன் உயிரோடு இருந்தால், பிரபாகரன் கதை சொல்லி, 'உன்னுடைய ரோல்மாடலா அவ'னு சொல்ற அளவு நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்திருக்காரு. லட்சியத்துக்காக உயிரைத் துச்சமாக மதித்த சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுகதேவ் எல்லாமே நாம கேட்டு வளர்ந்த ஹீரோக்கள், பிரபாகரன் நாம பார்த்து வளர்ந்த ஹீரோ, ஒரு வேளை அவர் இறந்திருந்தால், அவரைபோன்றவர்கள் நம் கண் முன் இறந்துபோக சம்மதிச்சோம் என்பது நம்முடைய அவமானமே தவிர அவருக்கு அது வீர மரணம்தான்.

முப்பது வருஷத்துக்கு மேல் ஒரு இயக்கத்தை, அதுவும் உலகமே தடைவிதித்த ஒரு இயக்கத்தை கட்டிக் காத்ததும், வெற்றி பெற்றதும் சாதாரண காரியம் இல்லை. பிரபாகரனைப் போன்ற அர்ப்பணிப்பு உள்ள தலைவர்கள் பெற்றெடுக்கிற ஈரம், ஈழத்தமிழ் மண்ணுக்கு இருக்கிறதே பெருமையான விஷயம்.

''வன்னியில் நடந்த குண்டுப்வெடிப்பில்
ஐந்துபேர் பலியானார்கள்.
ஐம்பதுபேர் புலியானார்கள்''னு


ஒரு கவிதை படிச்சேன். அதில் இருக்கிற வார்த்தை நயங்களைவிட, கருத்து உண்மைகளுக்கு காந்தம் அதிகம். உண்மை கசப்பா இருந்தாலும் ஒத்துக்கிட்டுதான் ஆகணும். விரும்பி சுமந்த சிலுவை இயேசுநாதரை உருவாக்கலாம். திணிக்கப்பட்ட சிலுவைகள் பிரபாகரன்களைதான் உருவாக்கும். சும்மா, 'உச்' கொட்டிக்கிட்டே இல்லாம..!


Friday, December 25, 2009

இப்பொழுது சொல் நீ இந்தியனா,திராவிடனா,தமிழனா


வணக்கம் இந்திய திராவிட தமிழர்களே,

இந்த கட்டுரையின் நோக்கம் நாம் எவ்வாறாக இந்திய தேசியத்தால் ஏமாற்றப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்பதே.என்னிடம் வாதிடும் பல தோழர்கள் இந்திய தேசியத்தை முன்னிறுத்தியே வாதிடுகிறார்கள்.உங்கள் தேசிய பற்று நல்லாத்தான் இருக்கு .உங்கள் இந்திய பற்றுக்கு நான் கடைசி வரியில் பதில் அளித்து உள்ளேன்.யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.சிந்திக்க வேண்டுகிறேன்.

நாம் பல வகையில் இந்திய தேசியத்தால் ஏமாற்ற பட்டாலும் முல்லை பெரியாறு விசயத்தில் எவ்வாறாக ஏமாற்றபடுகிறோம் என்பதை இங்கே காணலாம்,


யார் இந்த முல்லை பெரியாறு ?

மஹாராஷ்ட்ரா
மற்றும் குஜராத்திற்கு இடையே தொடங்கி இந்தியாவின் தென் எல்லையான கன்னியாகுமரி வரை நீண்டுள்ளது மேற்கு தொடர்ச்சி மலை.மேற்கிலிருந்து வரும் அரபிக்கடலின் குளிர் காற்றை தடுத்து, அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்களில் மழை பொழியச்செய்து பல ஆறுகளை ரிப்பன் வெட்டாமல் தொடங்கி வைக்கும் பெருமை மேற்கு தொடர்ச்சி மலையையே சாரும். தனக்கு மேற்கே இருக்கும் பகுதிகளை தண்ணீர்பற்றாக்குறை இன்றி செழிப்பாக்கியும், கிழக்கே இருக்கும் பகுதிகளை தக்காண பீட பூமியாக்கி வறட்சியில் வைத்திருப்பதும் இம்மலைத்தொடரே என்றும் சொல்லலாம். மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கும் பெரியாறு,அதாவது தமிழக எல்லையில் உருவாகி கேரளாவுக்குள் நுழைந்து மறுபடியும் தமிழகத்தின் வழியாக அரபிக்கடலில் கலக்கும் ஆறு தான் இந்த பெரியாறு.

கேரளாவின் ஜிவ நதி,

 • கேரளாவில் 244 கீ.மீ நீளமுள்ள மிகப்பெரிய வற்றாத ஆறாகவும்,
 • கேரள மின் தேவையை அதிக பட்சம் பூர்த்தி செய்வதாகவும்,
 • கேரளத்தின் பெரிய நகரங்களுக்கான பாசன மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாகவும்,
 • கேரளத்தின் மிகப்பெரிய இடுக்கி அணை கட்டப்பட்டுள்ளதும் பெரியாற்றின் குறுக்கேயே.
 • இதனாலேயே பெரியாறு கேரளத்தின் ஜீவநதி என்று சொல்லப்படுகிறது.

பெரியாற்று உற்பத்தியாகும் இடத்திற்கும் இடுக்கி அணைக்கும் இடையே தேக்கடியில் முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தின் உயிர் நாடி,

 • வைகை அணையின் ஒரே நீர் ஆதாரம்
 • மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவாசய நிலம் இதை நம்பி
 • 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையம் இதை நம்பியே. .
 • தென் தமிழகத்தின் குடிநீர் தேவையும் இதை நம்பியே குறிப்பாக தேனி,மதுரை,இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள்.


வற்றாத உயிர் ஆறான பெரியாற்றின் தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலப்பதை தடுக்க இடையில் ஒரு அணை கட்டவேண்டும் என்று திருவாங்கூர் மன்னரிடம் 1862 ல் பிரிட்டிஷ் பிரதிநிதியான மதராஸ் ஆளுனர் கோரிக்கையை முன்வைக்கிறார். ஆங்கிலேயரின் கோரிக்கையை மறுக்க முடியாமல் காலந்தாழ்த்தி வந்த திருவாங்கூர் மன்னருக்கு ஆங்கிலேயரால் நெருக்கடி தரப்படவே 1886 அக்டோபர் 21 ல் அணை கட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். ஒப்பந்தத்தின் சாரம்,


ஒப்பந்த தேதியில் இருந்து 999 ஆண்டுகள் வரை ஒப்பந்தம் செல்லுபடியாகும். அணையில் தேக்கப்படும் நீரில் 104 அடிக்கு மேலுள்ள நீர் சுரங்க வழியின் மூலம் மதராஸ் கொண்டு வர வேண்டும். அணை கட்டப்படுவதால் மூழ்கடிக்கப்படும் 8000 ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஏக்கருக்கு 5 வீதம் 40,000 ரூபாய் வருட வாடகையாக சென்னை அரசாங்கம், திருவாங்கூர் மன்னருக்கு கொடுக்கவேண்டும். அதாவது அணை அமைந்திருப்பது கேரளாவில் என்றாலும் (999 வருட வாடகை ஒப்பந்த அடிப்படையில்) தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.

60 ஆண்டுகள் இதே ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கையில் தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சரி செய்ய, பெரியாறு தமிழகத்தில் நுழையும் இடத்தில் ஒரு மின உற்பத்தி நிலையம் கட்டுவதற்காக 1970 ல் பழைய ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அணை கட்டப்பட்டதால் அந்தப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட நிலத்திற்கு ஏக்கருக்கு ரூபாய் 30 வீதம் 8000 ஏக்கருக்கு 2,40,000 ரூபாய் வருட வாடகையாக தமிழக அரசு, கேரள அரசிற்கு கொடுக்க வேண்டும். மட்டுமின்றி அந்தப்பகுதி மீன் படி உரிமையும் கேரள அரசிடம் செல்கிறது.

இந்நிலையில் 1979 ல் மலையாள மனோரமா என்ற கேரள இதழ், 'முல்லைப் பெரியாறு அணை உடையும் அபாயத்தில்' இருப்பதாக பரபரப்பு செய்தியை வெளியிடுகிறது. அதைத்தொடர்ந்து கேரள அரசு மற்றும் மத்திய நீர் வளத்துறையின் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு அணையை மேலும் வலுப்படுத்த முன்வருகிறது. அதுவரை தேக்கப்பட்டுக்கொண்டிருந்த நீர் 154 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்படுகிறது. அணையில் மராமத்து வேலைகள் செய்யப்பட்டு வலுப்படுத்தப்பட்ட பிறகு நீர் மட்டத்தை உயர்த்த கேரள அரசு மறுத்துவிட்டது, இன்று வரை மறுத்து வருகிறது.

என்ன தான் பிரச்சனை?

அணையில் இருந்து வரும் நீர் முல்லை ஆறு வழியாக தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்களுக்கு பாசன மற்றும் குடிநீர் தேவைகளை நிறைவு செய்து வைகை ஆற்றில் கலக்கிறது. அதுவே வைகை அணையின் நீர் ஆதாரமாகவும் இருக்கிறது. அதனாலேயே மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பாசன மற்றும் மதுரை மாநகராட்சியின் குடிநீர் தேவையும் நிறைவடைகிறது. இவற்றிக்கு தமிழ்நாட்டிற்கு குறைந்தபட்ச தேவை 84 மில்லியன் கனமீட்டர் தண்ணீர். இந்த குறைந்தபட்ச தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டுமாயின், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் 136 அடியில் போதுமான தண்ணீர் கிடைக்காமல் மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் பல ஏக்கர் நிலம் தரிசாகிக் கிடக்கிறது. பல விவசாயக் குடும்பங்களின் தற்கொலைக்கும் பட்டினிச் சாவுக்கும் தண்ணீர்
பற்றாக்குறையே காரணம்.

அணையின் நீர் மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாக குறைக்கப்பட்டதால், நீரின் கொள்ளளவு 10.4 ல் இருந்து 6.4 டி.எம்.சி யாக குறைந்துள்ளது. அதனால் 140 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பெரியாறு மின் உற்பத்தி நிலையத்தில் கணிசமான அளவு மின் உற்பத்தி குறைந்துள்ளதும் தமிழக அரசிற்கு நஷ்டமே. அது மட்டுமின்றி, அணையிலிருந்து வழிந்தோடும் தண்ணீர் மூலம் அடுத்த அணையான இடுக்கியில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்திற்கே விற்கப்படுவது கொடுமை. நமக்கு தரவேண்டிய தண்ணீரைக் கொண்டு மின்சாரம் தயாரித்து அதை நமக்கே மீண்டும் விற்பனை செய்கிறார்கள்.

152 அடியாக இருந்த போது மூழ்கியதாக சொல்லப்பட்ட 8000 ஏக்கர் நிலம், தற்போது 136 அடியாக நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் மூழ்கிய நிலத்தில் பகுதி மீட்கப்பட்டுவிட்டது. மீதி நிலத்தை கேரள அரசும் கேரள மக்களும் பயன்படுத்திவருகின்றனர். ஆனாலும் தமிழக அரசு 8000 ஏக்கர் நலத்திற்கான வாடகையை செலுத்திவருகிறது. அணையின் நீர் மட்டம் உயர்த்தப்பட்டால் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை காலிசெய்ய வேண்டிவரும் என்ற அச்சமும் உள் அரசியலும் இப்பிரச்சனையில் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.இந்த செய்திகளை நான் நக்கீரன் இணையதில் இருந்து சேகரித்தது .

உச்சநீதி மன்ற தீர்ப்பையே மதிக்காத கேரள அரசு,

152 அடிக்கு நீர் தேக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்திலும், 136 மேல் உயர்த்தக்கூடாது என்று கேரள அரசு கேரள உயர் நீதி மன்றத்திலும் வழக்குத்தொடங்கியது. அவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு 2006 பிப்ரவரியில் இருமாநிலத்திற்கும் பொதுவாக 142 அடியாக நீர்மட்டத்தை வைத்துக்கொள்ள ஆணை பிறப்பிக்கப்படுகிறது. உச்சநீதி மன்றத்தின் ஆணையை சற்றும் மதிக்காத கேரள அரசு 136 அடியிலிருந்து நீர் மட்டத்தை உயர்த்தாததோடு மட்டுமின்றி, அணை அபாயகட்டத்தில் இருப்பதாகச்சொல்லி புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. பெரியாற்றில் புதிய அணை கட்டப்பட்டுவிட்டால் மேலே குறிப்பிட்டுள்ள தமிழக மாவட்டங்கள் குடிக்கவும் தண்ணீர் இன்றி பஞ்சத்தால் பாலைவனமாகிவிடும்.

கேரளாவின் நாடகமும் மத்திய அரசின் சூழ்ச்சியும்,

கடந்தவாரம் கேரள அரசு வெளியிட்ட ஒரு அறிக்கை, ‘முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் 40 லட்சம் பிணங்களை அரபிக் கடலில் தேடவேண்டியிருக்கும்’ என்று சொல்கிறது. முல்லை பெரியாறு அணையின் தண்ணீர் முழுவதையும் இடுக்கி அணையாலும் தாங்க முடியாது என்கிறது கேரள அரசு. இதற்கிடையே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள மத்தியஅரசின் ஒப்புதலும் கேரள அரசிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலையாளிக்கு நம்மளால ஆப்பு வைக்க முடியாத என்ன?

 • பெரியாறு அணையின் கடைசி தண்ணீர் குடிக்கப்படும் இராமநாதபுரம் கடலோர பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் டன் கணக்கில் கேளராவுக்கு சென்று ஏற்றுமதியாகிறது.
 • ஒட்டஞ்சத்திரத்தில் இருந்து காய்கனிகள் கேரளாவிற்கு செல்கிறது. (இவ்வளவு நீர் வளம் இருந்தும் கேரளாவில் விவசாயம் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதை நினைவில் கொள்க)
 • வீடு கட்ட மணலும் கூலித்தொழிலாளர்களும் தமிழ்நாட்டிலிருந்தே செல்வதும் கவனத்தில் ஏற்கவேண்டும்.
 • தமிழகத்தில் இருந்துதான் கேரளாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்கின்றனர்.
 • கேரளாவுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தில் இருந்துதான் செல்கிறது. (பால்,அரிசி,பழங்கள்,மீன்கள்,காய்கறிகள் முதலியன்)
 • அட இவ்வளவு ஏன்.. நல்ல கல்விக்கு கேரளமக்கள் தமிழ்நாட்டையே நம்பி இருக்கிறார்கள்.

நாம் நக்கி பிழைக்கும் நாய்களே அன்றி மனிதர்கள் அல்ல,

20 மந்திரிகளை வைத்து கேரளவால் சாதிக்க முடியும் பொழுது 39 மந்திரிகளை வைத்து இதுவரை நாம் தமிழகத்துக்கு ஒன்றையும் புடுங்க முடியவில்லையே ஏன்? காவிரியையும், பாலரையும் இழந்ததால் தான் 55 % விவசாயத்தை இழந்து
நிற்கிறோம்.நமது பாதி விவசாயம் வானம பார்த்த பூமியாக மாறி போய் உள்ளது, முல்லை பெரியாறும் கையை விட்டு போனால் நாம் நாளைய சந்ததிக்கு எதை கொடுக்க போகிறோம், அரசியல்வா(வி)யாதிகளின் சித்து விளையாட்டில் இதுவும் ஒரு அங்கம். தமிழர்கள் நம்மிடம் ஒற்றுமை இல்லை. அண்டை மாநிலங்களில், பொதுப் பிரச்சனைக்கு ஒன்று சேருவது மாதிரி, தமிழ் நாட்டில் சேருவதில்லை. அப்புறம் எங்க இருந்து உருப்புடுவது.சுயநல திராவிட கட்சிகள் மட்டுமின்றி பொதுவுடைமை பேசும் கம்யூனிஸ்டுகளும் இந்த விஷயத்தில் நமக்கு ஆதரவாக இல்லை. பொலீட் பீரோவில் கேரளாவிற்கு ஆதரவாகத்தான் பேசியிருக்கிறார்கள்.
இன்னும் எத்தனை காலத்துக்கு இந்திய தேசியத்தையே நாம பேசி ஏமாற போகிறோம்,

இப்பொழுது சொல் நீ இந்தியனா,திராவிடனா,தமிழனா !

நான் இந்தியன் என்றால் அந்த இந்தியனே என் இனத்தையே அழிக்கிறான் இந்தியன் ,

நான் திராவிடன் என்றால் அண்டை மாநில திராவிடனே எனக்கு தண்ணிர் தர மறுக்கிறான்? (நம் ஈழ தமிழர் அழிய திராவிட மலையாளிகள் தூது போனது).

அப்படி என்றால் நான் யார்? தமிழா ! திராவிட அரசியலையும் ஆரிய பார்ப்பானையும் நம்பி இன்னும் எத்தனை காலம் நாயினும் கீழாக சாக போகிறோம்,தமிழனாக ஒன்றுபட்டால் எல்லாமே கிடைக்கும்,புரிந்து கொள்ளாத வரை நாம் நக்கி பிழைக்கும் நாய்களே அன்றி மனிதர்கள் அல்ல.
....பகலவன்....

Thursday, December 24, 2009

பெரியார் பேசுகிறார்

பெரியார் ஒரு சுய சிந்தனையாளர். சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம் என்று பிரகடனம் செய் தவர். அவரைப்போலவே அவரது பேச்சும், எழுத்தும் எளி மையானவை, வலிமையானவை. தனது இறுதிக்காலம் வரை மானுட மேம்பாட்டை மட்டுமே மையப்படுத்தி இயங்கியவர். அவரது நினைவு நாளான இன்று பெரியார் என்ற பெருங்கடலிலிருந்து சில துளிகள்:“நான் ஒரு சுதந்திர மனிதன்; சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப் பிக்கிறேன். நீங்கள் என்னைப்போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள் ளக்கூடியவைகளை தள்ளிவிடுங்கள் என் கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதை யும் தெரிவிக்கின்றேன்”. (புரட்சி 17-12-1933).

“நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்! நான் சொல்லுவது கடவுள் வாக்கு; நம்பாவிட் டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடு வீர்கள் என்ற வேதம், சாஸ்திரம், புராணம் போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்வது உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைக ளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒத்துவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள்.” (குடியரசு 11.9.1927)

“சிலரின் அருவருப்புக்கோ, கோபத் திற்கோ பயந்து நான் திட்டத்தை மாற்றிக் கொள்ளும் சுபாவம் உடையவன் அல்ல; அவ் விதம் செய்வது பயத்தாலும், சுயநலத்தாலுமே யாகும்... .... ... ஒவ்வொரு இடங்களிலும் சுய மரியாதை உணர்ச்சி உண்டாக பாடுபடுங்கள்; உங்களை பல ஆயிரக்கணக்கான வருடங் கள் மிதித்து அடிமைப்படுத்தி வாழும் பழக்கத் தை- உங்கள் மயிர்க்காம்புகளிலெல்லாம் கூடி தடுப்பேறிய மானமற்ற வாழ்க்கை நிரம் பிய உணர்ச்சியை - உடனே உதறித்தள்ளுங் கள்.” (வைக்கம் வீரர் சொற்பொழிவு 1923).

உங்களிடம் தப்பிதம் கண்டுபிடித்து, உங் கள் உடம்பில் துர்வாடை அடிக்கிறது; நீங்கள் ஸ்நானம் செய்வதில்லை; துணி துவைப் பதில்லை; மாட்டு மாமிசம் சாப்பிடுகிறீர்கள்; மது அருந்துகிறீர்கள்; இதை விட்டுவிடுங்கள் என்று ஞானோபதேசம் செய்கிறார்கள். நீங்கள் வேட்டி துவைக்காமலும், குளிக்காமலும் இருப்பதற்கு யார் ஜவாப்தாரி என்பதை அவர் கள் உணர்வதில்லை. உங்களுக்கு குடிக் கவே தண்ணீர் இல்லை என்றால், குளிப்பது எப்படி? அழுக்கும் நாற்றமும் உங்கள் கூடப் பிறந்தவையா என்று கேட்கிறேன். குளிக்க வும், வேட்டி துவைக்கவும், பல் துலக்கவும் தண்ணீர் கொடுக்காமல், மகந்துகள் என் போரையும், சங்கராச்சாரிகள் என்போரையும் கொண்டு வந்து வீட்டில் அடைத்துவைத்து விட்டால், அவர்கள் துணி அழுக்கில்லாமல் இருக்குமா? அவர்கள் உடம்பும், வாயும் நாற்ற மடிக்காமல் இருக்குமா? என்று யோசித்துப் பாருங்கள்! நாமே ஒருவனை பட்டினிப் போட்டுவைத்து, அவர் இறந்துபோன பிறகு பட்டினியால் இறந்துபோய்விட்டான், பாவி என்று சொன்னால் யார் பாவி என்று நினைத் துப்பாருங்கள். (குடியரசு 25-4-1926)

உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணு லகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம் பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையே சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாகும். (குடியரசு 22.8.1926).

பொதுமக்களில் பெண்கள், தீண்டாதார் கள் என்பவர்கள் மிக மோசமாக அழுத்தப்பட் டிருக்கிறார்கள். புலிக்கு ஆடு கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பதுபோலவும், பூனைக்கு எலி கடவுளால் ஏற்படுத்தப்பட்ட உணவு என்பது போலவும் ஆணுக்கு பெண் கடவுளால் ஏற்படுத்தப்பட்ட அடிமை என்ப தாகக் கருதி நடத்தப்பட்டு வருகின்றார்கள். உண்மையிலேயே இப்படி ஒரு கடவுள் ஏற்படுத்தியிருப்பாரேயானால் முதலில் அந்த கடவுளை ஒழித்துவிட்டுத்தான் வேறு காரியம் பார்க்க வேண்டும்.

பெண்கள் அடிமை நீங்க வேண்டுமா னால் முதலாவதாக அவர்களை கற்பு என்ற சங்கிலியில் கட்டிப்போட்டிருக்கும் கட்டை உடைத்தெறியவேண்டும்! கட்டுப்பாட்டிற் காகவும், நிர்ப்பந்தத்திற்காகவும் கற்பு ஒரு காலும் கூடாது. கூடவே கூடாது! வாழ்க்கை ஒப்பந்தத்திற்காகவும், காதல் அன்பிற்காக வும் இருவர்களையும் கற்பு எனும் சங்கிலி எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கிக்கட் டப்படட்டும். அதைப்பற்றி நமக்குக் கவலை யில்லை. ஒருபிறவிக்கு ஒரு நீதி என்கிற கற்பு அடிமைப்படுத்துவதில் ஆசைகொண்ட மூர்க்கத்தனமே அல்லாமல் அதில் கடுகளவு யோக்கியமும் பொறுப்பும் இல்லை. (26.11.1928 தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டு தலைமையுரையில்).

“அனாதிகாலம் தொட்டு இருப்பது வேதம், அது கடவுள் சொன்னது என்று சொல்லி ஏய்த்துவிடுவதாய் இருந்தால் அது பொருத்தமாய் இருக்க வேண்டாமா? அனாதி யாயும், கடவுள் சொன்னதுமாயிருந்தால், கட வுளால் உண்டாக்கப்பட்ட எல்லா தேசங் களுக்கும், எல்லா கண்டங்களுக்கும் இதுவே வேதமும், மதமுமாய் அல்லவா இருக்க வேண்டும்? பல்வேறு மதங்கள் இருப்பா னேன்? இந்து மதஸ்தர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்குள்ளாகவே சிலர் இவ் வேதத்தை படித்தால் கண்ணைக் குத்த வேண்டியதும், சிலர் காதினால் கேட்டால் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டியதும் எதற்காக? (குடியரசு 9.1.1927)

“வர்ணாசிரம தர்மத்தின் மூலமாகத்தான் நமது நாட்டில் தீண்டாமைக்கொள்கை அம லில் இருந்து வருகிறதேயொழிய,. வர்ணாசிர மம் இல்லாவிட்டால் தீண்டாமைக்கொள்கை பரவ மார்க்கமே கிடையாது. வர்ணாசிரம தர்மம் என்கிற ஒரு உடல் இல்லாவிட்டால் தீண்டாமை என்கிற உயிருக்கு ஆட்டம் இல்லை. யோசித்துப்பார்த்தால் இந்தக் கொள்கை தத்துவம் எவருக்கும் விளங்காமல் போகாது.” (குடியரசு 7.8.1927)

“ஜாதியின் கொடுமையால் நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப்படு கிறான்.. இது உண்மை; வாய்ப்பேச்சுக்காக நான் சொல்லவே இல்லை. எப்படி என்றால் மல உபாதைக்கு சென்றவன், அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரை கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலில் மிதித்துவிட்டால் அந்த காலை மட்டும் தண் ணீரை விட்டு கழுவிவிட்டால் அந்த குற்றம் போய்விடுவதாக கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட் டால் அவனை தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர நனைத்துக் குளித் தால் ஒழிய போவதில்லை என்கிறார்கள். ஆகவே மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள்... ஆகவே ஜாதி வித்தியாசத் தையே அழித்தாக வேண்டும். ஜாதி வித்தி யாசத்தை போக்குவதற்கு எல்லாவிதமான தியாகத்தையும் செய்வதற்கு முன்வரவேண் டும். (திராவிடன் 5.10.1929)

“இன்றைய ஜாதி வித்தியாசத்திற்கு ஆதாரமாயுள்ள ரோடு, கிணறு, பள்ளிக்கூடம், சாவடி முதலியவைகள் எல்லாம் ஒருவித மாக மாற்றப்பட்டு வந்துகொண்டிருப்பதாலும் இந்த கோயில்கள்தாம் சிறிதும் மாற்றுவதற்கு இடம்தராமல் ஜாதி வித்தியாசத்தை நிலை நிறுத்த உபயோகப்பட்டு வருகின்றது. அத னால்தான் நாம் தீண்டாத மக்கள் என்போர் கண்டிப்பாய் கோயிலுக்குள் போய்த்தீரவேண் டும் என்று கூறுகின்றேனேயொழிய, பக்திக் காகவோ, மோட்சத்திற்காகவோ, பாவமன் னிப்புக்காகவோ அல்லவே அல்ல. கோயி லில் சமத்துவமடைந்துவிட்டால் மற்ற காரி யங்களில் வித்தியாசம் இருக்க முடியவே முடியாது. கோவிலில் பிரவேசித்து நாம் செய் யும் ஒவ்வொரு முயற்சியும் ஜாதி வித்தியா சத்தை ஒழிக்கச்செய்யும் முயற்சியே ஒழிய வேறில்லை. இன்றையதினம் எல்லோரும் கோயிலுக்குள் ஜாதி வித்தியாசமின்றி விடப் பட்டுவிட்டார்கள் என்று ஏற்பட்டுவிட்டால் நாளையதினமே, நான், அங்கு எதற்காகப் போகின்றீர்கள்? அங்கு என்ன இருக்கின் றது? அங்கு போனதால் உங்களுக்கு என்ன பலன் ஏற்படுகின்றது? ஏன் உங்கள் பணத் தையும் நேரத்தையும், ஊக்கத்தையும், அறி வையும் பாழாக்குகிறீர்கள் என்று சொல்லி தடுக்கவே முயற்சிப்பேன். (குடியரசு 27.10.1929)

1933ம் வருடம் மே மாதம் 21ம் தேதி ஞாயிற் றுக்கிழமை சுயமரியா தையாரால் மே தினம் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும். உல கெங்கும் கடந்த 50 வருடமாக மேதினத்தை ஒரு பெருநாளாகத் தொழிலாளர்கள், கிருஷி கள் முதலியோர் கவனித்து வருகின்றார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர் களுக்கும், ஏமாற்றப்பட்டவர்களுக்கும் இந் நாள் ஒன்றே உகந்ததினமாகும்.(குடியரசு 14.5.1933))

கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமை திக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதன மாகும் என்ற அறிவு-அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்துவிட்டெரிய ஆரம்பித் திருக்கிறது. அந்த சுவாலை இன்றில்லையா னாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத்தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெ ரிக்காவின் அணுகுண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்துகொண்டி ருக்க முடியாது. (22.2.1950)

முக்கிய நண்பர்களில் பலர் உடல்நிலை யை கவனிக்கும்படிக்கும், ஓய்வெடுத்துக் கொள்ளும்படிக்கும் எழுதிவருகிறார்கள். ஓய்வெடுத்துக்கொள்ள வேண்டிய சமயம் நமக்குத் தெரியும். அதாவது, நமது தொண்டு நாட்டுக்கு உதவாது என்றாவது, நமது தொண் டை நாட்டார் ஏற்பதில்லை என்றாவது நமக்குத் தெரிந்தால் யாரிடமும் சொல்லாம லும் நாமே ஓய்வெடுத்துக்கொள்வோம். அது வரை எடுத்துக்கொள்ளும் ஓய்வு. உண்மை யான ஓய்வாகாது (17-7-1927)

Tuesday, December 22, 2009

இலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும் அரசாகத் தமிழ்நாடு சட்டமன்றம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.

இலங்கை அரசை ஈழத் தமிழர் இனப்படுகொலையில் ஈடுபட்டுவரும் அரசாகத் தமிழ்நாடு சட்டமன்றம் உடனடியாக அறிவிக்க வேண்டும்.முத்துக்குமார் நண்பர்கள் தமிழ்நாடு.

2010ஜனவரி 6 ஆம் தேதியன்று தமிழக சட்டமன்றம் கூடுகிறது. ஈழத்தில் நடந்து முடிந்த பேரழிவிற்குப் பிறகு கூடும் இரணடாவது சட்டமன்றக் கூட்டத்தொடர் இது.

இதற்கு முந்தைய கூட்டத் தொடரானது ஜூன் - ஜூலை மாதங்களில் 26 நாட்கள் நடைபெற்றது.

இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையை உடனடியாக நிறுத்த இந்திய அரசு வழி செய்ய வேண்டும் என்பதை “"அய்யகோ, இலங்கையில் தமிழ் இனமே அழிகிறது - இந்தியப் பேரரசுக்கு இறுதி வேண்டுகோள்'' என்ற தலைப்பில் 2009 ஜனவரி 23 ஆம் தேதியன்று முதல்வர் தலைமையில் தீர்மானம் இயற்றி சரியாக ஒரு ஆண்டு கழிந்து விட்ட நிலையில் கூடும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இது.

இலங்கையில் நடந்துவரும் தமிழ் இனப் படுகொலையில் முக்கியப் பங்காற்றியுள்ள ராஜபக்சாவும், சரத் பொன்சேகாவும் அந்த நாட்டில் ஜனவரி 26 ஆம் தேதியன்று நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். அந்தத் தேர்தலுக்கு முன்பாகத் தமிழ் நாட்டில் கூடும் சட்டமன்றத் தொடர் இது என்பதால் இது வரலாற்று முக்கியத்துவத்தைப் பெறும் ஒரு தொடராக அமைகின்றது.

மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழ மக்கள் மத்தியில் - இலங்கையா? ஈழமா? எது அவர்களுக்கான தீர்வு - என்பதை அறியும் வெளிப்படையான வாக்கெடுப்பு நடந்து முடியவுள்ள நாட்களில் கூடும் சட்டமன்றத் தொடர் இது. அவர்களின் முடிவுக்கு உதவுவதற்கான தக்க நடவடிக்க்கை ஒன்றைத் தமிழ்நாட்டு மக்களும், அவர்தம் அரசியல் பிரதிநிதிகளும் எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இந்த சட்டமன்றத் தொடர் கூடுகிறது.

இந்தசட்டமன்றத் தொடரில் ஈழத் தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைக்காவிட்டால் அவர்களின் எதிர்காலம் நிரந்தரமானதொரு இருளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை உணர வேண்டிய அவசியமான நேரம் இதுவே.

ஈழத் தமிழ் மக்களை சிங்கள அரசின் இனப்படுகொலையில் இருந்து காப்பாற்ற கடந்த ஓராண்டு காலமாகத் தமிழக சட்ட மன்றமும், அதில் உள்ள அரசியல் கட்சிகளும் தவறிவிட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. இந்தக் கடைசி நேரத்திலாவது ஈழத்தில் வாழும் தமிழ் மக்களைக் காப்பாற்ற அவை என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திப்பதற்கான நேரம் இதுதான்.

அடுத்து வரும் நாட்களில் ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் முன்பாகக் கடந்த ஓராண்டு காலத்தில் தமிழக அரசியல் கட்சிகளும், சட்டமன்றமும் இந்தப் பிரச்சினையில் எவ்வளவு தூரம் தன்னலம் மிகுந்தும், அசிரத்தையாகவும், பாராமுகமாவும் இருந்து வந்துள்ளார்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில்,அடுத்துவரும் நாட்களிலாவது இந்தக் கடந்த காலத் தவறை மீண்டுமொருமுறை செய்துவிடக்கூடாதல்லவா?

-----------------------

ஈழத் தமிழர் இனப்படுகொலையும் தமிழக சட்டமன்ற அரசியல் கட்சிகளும்

மே 22 ஆம் தேதியன்று காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்தது.

மே 23 ஆம் தேதியன்று ஐ.நா.சபையின் தலைவர் பான் கி மூன் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட வன்னித் தமிழ் மக்களை சந்தித்தார். ”உலகம் முழுதும் உள்ள பல அகதிகள் முகாம்களுக்கு நான் சென்று வந்திருக்கிறேன். ஆனால் இங்கு உள்ளதைப்போல கொடூரமான சூழலில் அமைந்துள்ள முகாமை நான் கண்டதில்லை” என்று அவர் கூறினார்.

மே 27 ஆம் தேதியன்று ஐ.நா.சபையின் மனித உரிமை ஆணையத்தில் இலங்கையில் நடந்த படுகொலைகளை விசாரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்தது. ஆனால் அந்தத் தீர்மானத்தை இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட முடிவெடுத்த இந்திய, சீன, ரஷ்ய அரசுகளின் தலைமையிலான கூட்டணி அரசுகள் முறியடித்தன. காங்கிரஸ் கூட்டணி அரசின் தமிழ் இன எதிர்ப்புப் போக்கினை ஜூன் மாதம் கூடிய தமிழக சட்டமன்றம் கண்டிக்கவில்லை.

இருப்பினும் ஜூன் 6 ஆம் தேதியன்று இலங்கை அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று மீண்டும் ஒரு முறை பான் கி மூன் தெரிவித்தார்.

ஈழப்போரின் கடைசி சில நாட்களில் மட்டும் 20 ஆயரத்துக்கும் மேலான அப்பாவித் தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்தது என்பதற்கான மறுக்க முடியாத ஆதாரங்களை இங்கிலாந்து நாட்டின் “டைம்ஸ் ஆன்லைன்” பத்திரிகை மே 29 ஆம் தேதியன்று வெளியிட்டது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில், இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலை மீதான வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜூன் மாதம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இலங்கை அரசுக்கு ஐ.நா.சபையிலேயே துணை போகத் துணிந்த இந்திய அரசு, அந்தக் கோரிக்கையை இன்று வரை கண்டுகொள்ளவில்லை. கேள்வியை முன்வைத்தத் தமிழக உறுப்பினர்களும் தங்களின் வேண்டுகோளை ஏன் அரசு ஏற்கவில்லை என்ற கேள்வியைத் தொடுத்து உரிமைக்காகப் போராடவுமில்லை.

ஆகஸ்டு 25 ஆம் தேதியன்று தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவத்தினர் சுட்டுக் கொல்லும் கொடூரமான வீடியோ ஆவணம் ஒன்றை இலங்கையில் நடந்துவரும் தமிழ் இனப்படுகொலைக்கு ஆதாரமாக இங்கிலாந்து நாட்டின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது. தமிழக சட்டமன்றக் கட்சிகள் இதையும் அசிரத்தையாகவே கைகொண்டனர்.

சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வன்னி நிலத்தில் இலங்கை அரசு மேற்கொள்ளவிருக்கும் வேளாண் பணிகளுக்கு உதவுவதற்காக செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஆறு பேர் அட்டங்கியா நிபுணர் குழு ஒன்றினை இந்திய அரசு அனுப்பி வைத்தது. அதில் நான்கு பேர் தமிழர்கள். அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை இந்திய அரசின் பிரதிநிதிகள் என்றும் பாராது, முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க சிங்கள அரசு அனுமதி மறுத்து அவமதித்தது. இதன் பின்னரும் கூட, இந்திய அரசு இலங்கை அரசின் போக்கைக் கண்டிக்க முன்வரவில்லை. இலங்கை அரசின் இந்த அவமதிப்பு நடவடிக்கையைத் தமிழக சட்டசபையில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை.

இருப்பினும், இவற்றை எல்லாம் பிற நாடுகளின் அரசுகள் கவனிக்கத் தவறவில்லை. இலங்கையில் தமிழ் இனப்படுகொலை தொடர்பாக இதுவரை வெளியிவந்த பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் அக்டோபர் 19 ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியமும், அக்டோபர் 22 ஆம் தேதியன்று அமரிக்க அரசும் இலங்கை அரசை இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாக சுட்டிக்காட்டும் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டன.

சிங்கள இனவெறி அரசால் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட தமிழ் மக்களையும், இனவெறி ஜனாதிபதி மகிந்த ராசபக்சாவையும் தி.மு.க. கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் மாத இடைப்பகுதியில் சந்தித்து விட்டுத் திரும்பிய நாட்களில் அந்த இரு அறிக்கைகளும் வெளியாயிருந்தன.

”எங்கள் அறிக்கையைக் காட்டிலும் உங்களது அறிக்கையானது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் தமிழ் இனப்படுகொலையை உலக அரசுகளுக்கும், மக்களுக்கும் தெரிவிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும்” என்பதைப் போருக்குப் பிறகு இலங்கைக்கு முதல் முதலாகச் சென்ற இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிப்பதற்காகத்தான் அந்த இரு அறிக்கைகளும் அவர்களது இலங்கைப் பயணம் நிறைவடைந்த ஒருவார காலகட்டத்துக்குள் வெளியாயிருந்தன.

இருப்பினும் ஐரோப்பிய ஒன்றியத்தின், அமெரிக்க அரசின் குறிப்புகளை பாராளுமன்றக் குழுவினர் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் இன்றுவரை தங்களது அறிக்கையை வெளியிடவில்லை.

இருப்பினும், முள்வேலி முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் சந்தித்துவரும் சித்திரவதையை சிங்களவர்களில் உள்ள சில மனிதாபிமானம் மிக்கவர்கள் வெளிப்படையாகப் பேசத் தவறவில்லை.

மே 14 ஆம் தேதியன்று வவுனியாவில் உள்ள முள்வேலி முகாம்களில் இருந்த தமிழ் மக்களைப் பார்த்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா “ இவர்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கை இழைத்துக் கொண்டிருக்கிறோம். இலங்கையின் நீதிஅமைப்பில் இவர்களுக்கு நீதி கிடைக்கப் போவதே இல்லை. இதைக் கூறுவதற்காக நான் தண்டிக்கப்படலாம்” என்று ஜூன் 4 ஆம் தேதி வெளிப்படையாக அறிவித்தார். (http://transcurrents.com/tc/2009/06/idps_in_vavunia_we_are_doing_a.html ).

சிங்கள அறிவுஜீவிகளால் நடத்தப்பட்டுவரும் Groundviews என்ற ஆங்கிலப் பத்திரிகையானது ஜூலை 2 ஆம் தேதியன்று முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலையை நேரடியாகக் கண்டறிந்த ஒருவரின் அனுபவத்தை வெளியிட்டது. ( http://www.groundviews.org/2009/07/02/an-eye-witness-account-of-idp-camp-conditions-in-sri-lanka/) சிங்களத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்ட அந்தக் கட்டுரை தமிழ் மக்களை அடைத்து வைத்துள்ள முள்வேலி முகாம்கள் ஹிட்லரின் சித்திரவதைக் கொட்டடிகள்தாம் என்பதை உலகுக்கு உணர்த்தின.

ஐக்கிய நாடுகள் சபையில் செப்டம்பர் 30 ஆம் தேதியன்று பேசிய அமெரிக்க அரசின் செயலாளரான ஹிலாரி கிளிண்டன் “ இலங்கை அரசானது கற்பழிப்பை ஆயுதமாகப் பயன்படுத்திவருகிறது “ என்று கூறினார். (http://www.egovmonitor.com/node/29093 ).

அவரைத் தொடர்ந்து, இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு செயலாள்ரான ரால்ப் மிலிபேணட் அக்டோபர் 14 ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் “ முகாம்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலை தொடருமானால் வரும் காலங்களில் இங்கிலாந்து அரசு அனைத்து நிதி உதவிகளையும் நிறுத்திக் கொள்ளும்” என்று எச்சரித்தார். ( http://www.irinnews.org/Report.aspx?ReportId=86712 ) .

அவரது வார்த்தைகள் வெற்று வார்த்தைகளாக இருக்கவில்லை. இலங்கையில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதியாகும் பின்னலாடைகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டுவந்த வரிச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் டிசம்பர் 17 ஆம் தேதியன்று தற்காலிகமாக விலக்கிக் கொண்டது. (http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=71064 )

சமாதான வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் படுகொலை செய்யச் சொல்லி இலங்கை ராணுவத்தின் 58 ஆவது டிவிஷனின் தலைவரான பிரிகேடியர் சவேந்திர சில்வாவிற்கு உத்தரவிட்டது இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும், இராணுவ அமைச்சகத்தின் தலைவருமான கோத்தபாயா ராஜபக்சாதான் என்று இலங்கை ராணுவத்தின் தலைவராக இருந்த ஜெனரல் சரத் பொன்சேகா டிசம்பர் 12 ஆம் தேதியன்று இலங்கையின் சண்டே லீடர் பத்திரிகையில் வெளிப்படையாகவே பேசினார்.

முகாமில் அடைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து நாட்டின் தமிழ் பிரஜையான வாணி குமார் டிசம்பர் 20 ஆம் தேதியன்று இங்கிலாந்து நாட்டின் அப்சர்வர் பத்திரிகைக்குக் கொடுத்த நேர்காணலில், முகாமில் உள்ள ஒவ்வொரு தமிழச்சியும் எவ்வாறு கற்பழிப்பு சித்திரவதைக்கு சிங்கள அதிகாரிகளாலும், ராணுவத்தினராலும் உள்ளாக்கப் பட்டனர் என்பதை விவரித்து உள்ளார். அவரது கூற்றை உண்மைதான் என்று இலங்கை அரசின் மனித உரிமை அமைச்சகத்தின் செயலாளரான ராஜீவ் விஜய சேகர ஒத்துக் கொள்ளவும் செய்திருக்கிறார்.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் டிசம்பர் 21 ஆம் தேதியன்று ஐ.நா.சபை மீண்டும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறது. முதல் கட்டமாக, ”வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகள் இயக்கத்தின் மூன்று தலைவர்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் நீங்கள் என்ன செய்தீர்கள்?” என்ற கேள்வியை அது இலங்கை அரசுக்கு விடுத்திருக்கிறது.

இவை எவற்றையும் தமிழக அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை.

ராஜ்ய சபையில் டிசம்பர் 5 ஆம் தேதி சி.பி.ஐ. தலைவர் டி.ராஜா இலங்கையில் நடந்துவரும் இனப்படுகொலை குறித்து பேசியபோது “இனப்படுகொலை” என்ற வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ராஜ்ய சபை அவைத் தலைவரின் தமிழ் இன எதிர்ப்பு நடவடிக்கையை எதிர்த்துத் தமிழக அரசியல் கட்சி ஒன்றுகூடக் குரல் கொடுக்க முன்வரவில்லை.

--------------------------------

ஈழத் தமிழர் இன சுத்திகரிப்புக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகளும் தமிழக சட்டசபை அரசியல் கட்சிகளும்

போர் 2009 மே மாதம் 18 ஆம் தேதியன்று முடிவடைந்தது. இந்தப் போரில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வன்னித் தமிழ் மக்கள் காணாமல் போயினர். சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் இலங்கை அரசால முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

இவ்வாறு அடைக்கப்பட்ட / அடைக்கப்படவிருந்த மக்களின் மறுவாழ்வுக்காகவென்று ”வடக்கின் வசந்தம்” என்ற திட்டத்தை இலங்கை அரசு ஏப்ரல் 2009 இல் முன் வைத்தது. வன்னி மக்களின் மறுவாழ்வு என்ற சாக்கில் - போரின் மூலம் தான் கைப்பற்றப்போகும் வன்னிப் பெருநிலத்தையும், ஏற்கனவே தன் அதிகாரத்தின் கீழ் உள்ள யாழ் குடா பகுதியையும் தனக்கு சாதகமான நிலப்பகுதியாக எவ்வாறு மாற்றி அமைப்பது என்பதே அந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்குழுவினை 2009 மே 7 ஆம் தேதியன்று இலங்கை அரசு ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் தம்பியும், ஆலோசகரமுமான பசில் ராஜபக்சாவின் தலைமையிலான 19 பேரைக் கொண்ட அந்தக் குழுவில் ஒருவர் கூடத் தமிழர் இல்லை என்பதே அந்தத் திட்டத்தின் உண்மை நோக்கத்தைப் புரிய வைப்பதாக அமைந்தது.

இந்த செயற்குழுவானது மூன்று நோக்கங்களுக்காக அமைக்கப்பட்டது:

  l வட ஈழத்தில் இராணுவ முகாம்களை நிறுவுவதும், சிங்களர்களைக் கொண்ட சிவில் நிர்வாகத்தை நிறுவுவதும், கன்னி வெடிகளை அகற்றுவதும் இந்தத் திட்டத்தின் முதல் நோக்கம்.

  l முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் வன்னி மக்களை மீண்டும் வன்னி நிலத்தில் குடியேற்றுவதும், அதற்குத் தேவையான அடிப்படைக் கட்டுமானங்களை நிறுவுவதும் இரண்டாம் நோக்கம்.

  l வவுனியா மற்றும் யாழ்ப்பாண நகராட்சித் தேர்தலை ந்டத்துவதும், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவதும் மூன்றாம் நோக்கமாகும்.

வடக்கின் வசந்தம் என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்ட மறு நாளே இந்திய அரசு இந்தத் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் நிதி உதவியை அறிவித்தது. மே 23 ஆம் தேதியன்று இந்தத் தொகை 500 கோடி ரூபாயாகக் கூட்டப்பட்டது. ஜூன் 25 ஆம் தேதி இலங்கை ஜனாதிபதியின் தம்பியும், அந்த நாட்டின் நிழல் ஜனாதிபதியாக செயல்பட்டுவரும் பசில் ராஜபக்சா புதுதில்லி வந்திருந்த போது இந்தத் தொகையை 1000 கோடி ரூபாயாக உயர்த்தவும் மன்மோகன் அரசு முன்வந்திருப்பதாக செய்திகள் வெளியாயின.

தமிழ் மக்களை உள்ளடக்காத “வடக்கின் வசந்தம்” திட்டத்தின் நிர்வாகக் குழுவை எதிர்த்து தமிழக சட்டசபையோ, அதன் அரசியல் கட்சிகளோ வாய் திறக்கவில்லை. மாறாக, சிங்களர்களின் தலைமையில் அமைந்த நிர்வாகக் குழுவிற்கு இந்திய அரசு அளித்த அங்கீகாரத்தை தமிழக ஆளும் கட்சி எவ்விதக் கேள்வியும் இன்றி ஆமோதித்தது. இந்த அடிப்படைத் தவறே அதனை மேலும் பல தவறுகளை இழைக்கத் தூண்டுவதாக அமைந்து விட்டது.

ஜூன் - ஜூலையில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த வேளையில் இலங்கைத் தூதுவரான ரோமேஷ் ஜெயசிங்கேவின் தலைமையில் ஒரு ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடந்தது ஜூலை 8 ஆம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில் இந்து ராம், துக்ளக் சோ போன்றவர்கள் கலந்து கொண்டனர். இவர்களைத் தவிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியும், இராணுவ ஆய்வாளருமான லெப்டினண்ட் ஜெனரல் V.R.ராகவன் கலந்து கொண்டு பேசினார். சிங்கள ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட வன்னி நிலப்பகுதியில் அடுத்து வரும் சில மாதங்களிலேயே சிங்கள ராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்த சுமார் 2 லடசத்து 50 ஆயிரம் பேர் குடியமர்த்தப்படலாம் என்ற தகவலை வெளியிட்டார். அவரது கருத்தை அந்த ஆய்வரங்கத்தில் இருந்த இலங்கைத் தூதர் மறுக்கவில்லை. ஜூலை 15 ஆம் தேதியன்று இதே கருத்தை சரத் பொன்சேகாவும் வெளியிட்டார். ( http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=11946&cat=1 )

தமிழர்களுக்குச் சொந்தமான பகுதியில் சிங்களக் குடியேற்றத்தையும், ராணுவமயமாக்கலையும் உறுதிப்படுத்தும் இந்தக் கருத்துக்களை அப்போது நடந்து கொண்டிருந்த தமிழக சட்டமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, ஈழ மக்களின் வாழ்வாதாரமான நிலத்தைப் பறிக்கும் சிங்கள இனவெறி அரசின் திட்டத்தை எதிர்த்து எவ்விதத் தீர்மானத்தையும் அவையில் கொண்டுவர இயலவில்லை.

வடக்கின் வசந்தம் என்ற நயவஞ்சகத் திட்டத்தினைப் புரிந்து கொள்ளாத காரணத்தினாலேயே அக்டோபர் 6 ஆம் தேதியன்று சீனாவுக்கு ராஜபக்சா அரசினால் அவசர அவசரமாகக் கொடுக்கப்பட்ட சாலை மற்றும் ரயில் பாதை ஒப்பந்தங்களை தமிழக அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை. பளைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் உள்ள ரயில் பாதையை அமைப்பதற்கும், வட ஈழத்தின் அனைத்து சாலைகளையும் செப்பனிடுவதற்குமான ஒப்பந்தத்தை சீன அரசு நிறுவனங்களுக்குத் தமிழ் மக்கள் எவரையும் கேட்காமலேயே ராஜபக்சா அரசு அளித்தது. இந்தப்பணிகளை செயல்படுத்த சீனர்கள் பெருமளவில் வட ஈழ நிலத்திற்கு வந்துள்ளனர். அவர்களது செயல்பாடுகள் சாலைப் பணிகளோடு நின்றுவிடுமா அல்லது தமிழ் மக்களை எதிர்காலத்தில் முற்றிலுமாக ஒடுக்குவதற்கான திட்டமிடலில் சிங்கள அரசுடன் அவர்களது செயல்பாடுகள் கைகோர்க்குமா என்பதுதான் இன்று கேள்விக்குறியாக உள்ளது. ( http://www.tamilnewsnetwork.com/tamilnewsnetwork.com/post/2009/12/07/Chinese-projects-proving-costly-for-Lanka.aspx )

ஜூன் மாதம் தொட்டு முகாம்களில் இருந்து தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்ற கோஷமே தமிழகத்தில் ஓங்கி ஒலித்தது. ஆனால், முகாமில் இருந்து புலிகள் என்று முத்திரை குத்தப்பட்டு காணாமல் போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் குறித்து தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதக் கவலையையும் கொள்ளவில்லை. சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகளை சர்வதேச போரியல் சட்டங்களின் அடிப்படையில் போர்க் கைதிகளாகத்தான் பாவிக்கவேண்டும் என்ற கருத்தை சர்வதேச அளவில் மனித உரிமை இயக்கங்கள் வலியுறுத்தின. சிங்கள அரசின் சித்திரவதைக் கொட்டடிகளில் வீழ்ந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைக் காக்கும் அந்த அதி முக்கியக் கருத்தையும் தமிழக சட்டசபைக் கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருந்து விட்டன.

முள்வேலி முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் எவ்வாறு நடத்தப்படும் என்ற முக்கியக் கேள்வியைக் கேட்கவும் அவை மறந்து போயின.

அக்டோபர் 11 ஆம் தேதியன்று இலங்கைக்கு சென்ற தமிழக எம்.பி.க்கள் குழு தமிழகம் திரும்பிய ஐந்தாவது நாளில் முகாம்களில் அடைக்கப்பட்ட பாதிபேர் அவரவர் இடங்களில் குடியமர்த்தப் படுவார்கள் என்பதை தமிழக ஆளும் கட்சியின் கூட்டணியானது தனது வெற்றியாக சித்தரித்தது. இருப்பினும், விடுவிக்கப்பட்ட மக்கள் அவர்தம் இடங்களுக்குச் செல்லும்போது எப்பேற்பட்ட அவலத்தை சந்திக்கவேண்டிவரும் என்பது குறித்து அது பேச மறந்து போனது.

சிங்கள ராணுவத்தால் கைகாட்டப்பட்ட இடத்தில் மட்டுமே - தத்தம் குடும்பத்து இளைஞர்களையும், அனைத்து வாழ்வாதாரத்தையும் இழந்த - தமிழ்த் தாய்மார்ர்களும், வயோதிகர்களும், சிறார்களும் குடியேறவேண்டிய உச்சபட்ச அவல நிலை... இப்படிப்பட்ட ஒரு அவல நிலையை விடுதலை என்று கூறும் தமிழக சட்டமன்ற அரசியல்வாதிகளின் சிந்தனையை என்னென்று கூறுவது? [முகாம்களில் இருந்து “விடுதலை” செய்யப்பட்ட அவர்களின் தற்போதைய கொடூரமான சூழ்நிலையை ஐ.நா.சபையின் மனித உரிமை செயலகத்தின் செய்திப் பிரிவு வெளியிட்ட செய்தி ஒன்று மிகத் தெளிவாகத் தெரிவிக்கிறது. ( http://transcurrents.com/tc/2009/12/report_from_jaffna_long_road_t.html#more ) ]

--------------------

ஈழத் தமிழர் மீதான இலங்கை அரசின் இனப்படுகொலைக் குற்றம்

உலக சமூகத்தின் போர் நியதிகளை சிங்கள அரசு மீறத் துணிந்ததால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் ஒன்றரை லட்சம் தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். சர்வதேச நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அரசுகளும், மனித உரிமை அமைப்புகளும், ஐ.நா.சபையும் இலங்கை அரசின் இந்த நடவடிக்கையையே ஈழத் தமிழ் மக்களின் மீது அது இழைத்த போர்க்குறற்மாக அறிவித்து வருகின்றன.

ஈழத் தமிழ் மக்களின் நிலத்தை ராணுவமயமாக்கி, அவர்களது பல்லாயிரமாண்டுப் பாரம்பரிய நிலத்தையும், பிற வாழ்வாதாரங்களையும் அபகரித்து, அவர்களின் இளைஞர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து கொன்றொழிப்பதையும் ஐ.நா.சபையும், மனித உரிமை இயக்கங்களும் இன்று கேள்விக்குள்ளாக்கத் தொடங்கியுள்ளன.

ஆங்கிலேயர்கள் இலஙகையை விட்டு வெளியேறிய காலம் தொட்டே சமத்துவம் என்பதை இலங்கை அரசு கடைப்பிடிக்கத் தவறியது யார் குற்றம்? சமத்துவம் கேட்டுப் போராடிய மக்களைக் காலம் காலமாக அடித்துத் துன்புறுத்த மட்டுமே பழகிப் போன ஒரு கூட்டத்துடன் எவ்வாறு வாழ முடியும்? சமத்துவம் கேட்டது தமிழர்களின் தவறா?

இல்லை என்கின்றன மேற்குலக நாடுகளின் அரசுகள். ஆனால் அவற்றால் சிங்கள அரசுடன் இணைந்து செயல்படும் இந்திய அரசினை மீறி செயல்பட இயலவில்லை என்பதுதான் உண்மை நிலை.

--------------------------

தமிழக சட்டமன்றம் இலங்கை அரசைத் தமிழ் இனப்படுகொலைக்கான அரசாக அறிவிப்பதற்குத் தயங்க வேண்டிய அவசியம் இல்லை . உலகின் பல நாடுகளின் மாநில அரசுகள் இதுபோன்ற தீர்மானங்களை பல்வேறு இனப்படுகொலைகளையொட்டி எடுத்துள்ளன. வேற்று நாடுகளின் அரசோ அல்லது இந்தியாவில் உள்ள வேறொரு மாநில அரசோ இந்தத் தீர்மானத்தை எடுக்கும் முன்பு தமிழக சட்ட மன்றம் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைத்துத் தமிழ் மக்களின் வேண்டுகோளாகும்.

இலங்கையில் நடந்து வருவது இனப் படுகொலையே என்பதை அறிவிக்கும் முயற்சியில் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், பத்திரிகைகளும், நாட்டரசுகளும், நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இந்த முயற்சிகள் யாவும் கைகூடுவதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். ஏனெனில், பல பத்தாண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற ஆர்மேனிய, யூத இனப்படுகொலைகளைக் கூட இன்றளவும் பல்வேறு நிறுவனங்களும், அரசுகளும் மெதுவாகவே ஏற்றுக்கொண்டு வருகின்றன என்பதுதான் உண்மை நிலை.

இது இனப்படுகொலைதான் என்பதை எந்த ஒரு நிறுவனமாவதோ அல்லது அரசோ முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாக வேண்டும். இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அந்த அமைப்பத் தவிர, இங்கிலாந்து நாட்டின் டைம்ஸ் ஆன்லைன் பத்திரிகை இந்த அறிவிப்பை மே 29 ஆம் தேதியன்று முன்வைத்துள்ளது. அதன் பின்னரே இந்த அறிவிப்பைப் பரிசீலிக்கும் செயல்பாடுகளைப் பல்வேறு நாட்டரசுகள் தொடங்கியுள்ளன.

1915 – 1916 ஆண்டுகளில் ஆர்மேனியர்கள் ஓட்டோமன் பேரரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டதை சுமார் 19 நாட்டரசுகள் இனப்படுகொலைதான் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 42 மாநிலங்கள் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன. கனடா நாட்டின் அரசானது இதற்கான தீர்மானத்தை நிறவேற்றவில்லை என்றாலும் கூட அந்த நாட்டின் ஒண்டாரியோ மற்றும் க்யுபெக் மாநில அரசுகள் இந்தத் தீர்மானத்தை 2002 ஆம் ஆண்டில் இயற்றின. இந்தத் தீர்மானத்தைப் பின்பற்றி 2004 ஆம் ஆண்டில் கனடா அரசே இதற்கான தீர்மானத்தை இயற்றியது. இது போன்ற நடவடிக்கையையே ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் 2007 ஆம் ஆண்டிலும், தெற்கு ஆஸ்திரேலியா மாகாணம் 2009 மார்ச்சிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

இதுபோன்ற நிகழ்வையே யூதர்களின் இனப்படுகொலை நிகழ்விலும் நாம் காண்கிறோம். ஜெர்மனி நாட்டின் நாஜி அரசால் யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற கருத்தை பல்வேறு நாட்டரசுகள் சட்டமாக இயற்றியுள்ளன. ஆஸ்திரியா, பாஸ்னியா, பிரான்சு, ஜெர்மனி போன்ற நாடுகளில் “யூதர்கள் நாஜிக்களால் இனப் அ படுகொலை செய்யப்படவில்லை” என்று கூறுவது சட்டப்படி குற்றமாகும்.

-----------------------

தமிழக சட்டமன்றம் இலங்கை அரசை இனப்படுகொலைக்கான அரசாக அறிவித்தால் இலங்கை அரசு ஈழத் தமிழர்களை மேலதிகமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி விட்டால் என்ன செய்வது? எனவேதான் அந்த அரசோடு நீக்குப் போக்காக இருக்க வேண்டும் என்ற கருத்தும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் இது ஒரு பத்தாம்பசலிக் கருத்தேயொழிய வேறில்லை.

சிங்கள அரசின் செயல்பாடுகளின் மீது சர்வதேச அரசுகள் மற்றும் நிறுவனங்களின் கண்காணிப்புப் பார்வை குவியத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழ்நிலையில் தமிழக சட்டமன்றத்தின் நடவடிக்கையால் ஈழத் தமிழர்கள் மேலதிகாமான சித்திரவதைக்கு உள்ளாக வேண்டிவரும் என்பது நகைப்புக்கு உரிய கருத்தாகவே இருக்கும்.

மாறாக, தமிழக சட்டமன்றத்தால் இயற்றப்படும் அப்படிப்பட்டதொரு தீர்மானம் சிங்கள இன வெறி அரசுக்கு எதிரான நாட்டளவிலும், சர்வதேச அளவிலும் நடத்தப்படும் ஒரு வெற்றிகரமான பர்ரப்புரையாகவே இருக்கும். ஈழத் தமிழர்களைக் காக்கும் கவசமாக அது அமையும்.

மத்திய அரசின் தீர்ப்பு மகேசன் தீர்ப்பல்ல.

இந்தியை எதிர்க்கத் துணிந்த மாநிலமே தமிழகம்

இன்றைக்கு சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்னர் - அதாவது 1968 ஜனவரி 23 ஆம் நாளன்று - நடந்த நான்காவது தமிழக சட்டமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வை இன்றளவும் தமிழ் இனம் மறக்க முடியுமா? இந்தியைத் தமிழ்நாடு ஏற்காது என்ற தீரம் மிக்க தீர்மானத்தை இயற்றிய நாளல்லவா அது? இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு வித்திட்ட ராஜாஜியின் 1937 ஆகஸ்டு 11 ஆம் தேதி அரசாணைக்கு 30 ஆண்டு காலப் போருக்குப் பின் திட்டவட்டமாக முடிவு கட்டிய நாளல்லவா அது? ஸ்டாலின் ஜெகதீசன், பொன்னுசாமி, குமாரசாமி, மூவலூர் ராமாமிர்தம் அம்மாள், நடராஜன், தாளமுத்து போன்ற மொழிப்போர் வீரர்களால் ஊட்டப்பட்ட நெஞ்சுரமானது ”இந்தியை அறியாதவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுக” என்ற துலேகரின் வார்த்தைகளைக் கொன்றொழித்த நாளல்லவா அது? சியாம பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், குல்சாரி லால் நந்தா ஆகியோரையெல்லாம் தமிழக சட்ட மன்றம் வெற்றிகண்ட நாளல்லவா அது? 30 ஆண்டுகளாகத் தமிழ் இனம் பட்ட ஏளனத்தை இல்லாதாக்கிய நாளல்லவா அது?

1968 ஜனவரி சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு இணையான கூட்டத்தொடர் இன்னும் சில தினங்களில் மலரவுள்ளது. 2010 ஜனவரி 6 ஆம் நாள் மலரவுள்ள அந்தக் கூட்டத் தொடரில் கடந்த 50 ஆண்டுகளாக இலங்கையில் சிங்கள இன வாதிகளாலும், அவர்தம் அரசாலும், அவர்களுக்குக்குத் துணை நின்ற இந்திய அரசாலும் ஏளனப்படுத்தப்பட்டும், கொடுந்துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வந்த ஈழ மக்களின் விடியலுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டாக வேண்டும்.

முத்துக்குமார், ஜெனீவா முருகதாசன், சீர்காழி ரவிச்சந்திரன், சென்னை அமரேசன், மலேசியா ராஜா, பள்ளபட்டி ரவி, கடலூர் தமிழ்வேந்தன், சென்னை சிவப்பிரகாசம், ஜெயங்கொண்டம் ராஜசேகர், சென்னை சதாசிவம் ஸ்ரீதர், புதுக்கோட்டை பாலசுந்தரம், விருதுநகர் கோகுலகிருஷ்ணன், வாணியம்பாடி சீனிவாசன், கடலூர் நாகலிங்கம் ஆனந்த் ஆகியோரின் ஈகைக்கு நாம் செய்யக்கூடிய ஒரே கைமாறு இதுதான்.

அந்த வீரர்களின் நினைவினை தமிழக சட்டமன்றமானது தன் மனதில் ஏந்தி, இலங்கை அரசு ஈழத் தமிழர்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கிவரும் அரசு என்ற தீர்மானத்தினை இந்த உலகமயமாதல் யுகத்தில் இயற்றிட வேண்டும்.

இந்த செயல்பாடே ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழ் இனம் முழுமைக்குமேயான விடியலாக அமையும்.