Friday, April 30, 2010

தொழிலாளர் தினம்??


வருடத்தில்
ஒரு நாள்
தொழிலாளர் தினம்
வருடம் முழுக்க
முதலாளிகள் தினம்...

Thursday, April 29, 2010

மாவீரன் முத்துக்குமாருக்கு தஞ்சையில் சிலை - இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு


ஈழத் தமிழர்களுக்காக சென்னையில் தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு தஞ்சாவூரில் சிலை திறக்கப்படவுள்ளதாக இளந்தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி வெளியிட்டுள்ள அறிக்கை...

தமிழீழ மக்கள் மீது, சிங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்திய தமிழின அழிப்புப் போர் முடிவுற்று ஓராண்டாகிறது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என தமிழர்கள் கூட்டம் கூட்டமாக இரக்கமின்றி குண்டுகள் வீசப்பட்டுக் கொன்றொழிக்கப்பட்ட அந்த இறுதி நாட்களைப் போல் கொடூரமான நாட்களை, உலகில் எந்தவொரு இனமும், எந்தவொரு விடுதலைப் போராட்டமும் சந்தித்ததில்லை.

இனவெறியின் கோரப் பசிக்கு பலியான எம் தமிழ் உறவுகளுக்கும், தமிழீழத் தாயக விடுதலைக்காக போர்க்களத்தில் நின்றுப் போராடி உயிர் ஈகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளுக்கும் இளந்தமிழர் இயக்கம் தனது வீரவணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை துக்க தினமாக நினைவு கூர்வதுடன், அந்நாளை இன விடுதலைப் போராட்டத்திற்கு சூளுரை மேற்கொள்ளும் நாளாக கடைபிடிக்குமாறு இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகூறும் விதமாகவும், தேர்தல் அரசியலை சாராத மாற்று அரசியல் எழுச்சியே தமிழினத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று வலியுறுத்தும் வகையிலும், மாற்று அரசியலை முன்னிறுத்தி, தன் இன்னுயிரை தீக்கிரையாக்கிய ஈகி முத்துக்குமாருக்கு இளந்தமிழர் இயக்கம் சார்பில், முதன் முறையாக மார்பளவு சிலை தஞ்சையில் நிறுவப்படவுள்ளது.

இச்சிலை தமிழ்நாட்டுத் தமிழர்களின் எழுச்சிக்கு குறியீடாகவும், மாற்று அரசியல் வெளிக்கான தொடக்கப் புள்ளியாகவும் அமையட்டும்.

முள்ளிவாய்க்கால் பேரழிவுப் போர் தொடங்கப்பட்ட நாளான மே 16 (16.05.2010) அன்று மாலை தஞ்சாவூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள, சாணுரப்பட்டி (செங்கப்பட்டி) பகுதியில் அமைந்துள்ள தனியார் இடம் ஒன்றில், இச்சிலை நிறுவப்படுகின்றது.

சிலை திறப்பு நிகழ்வுக்கு மாவீரன் முத்துக்குமாரின் தந்தையார் ச.குமரேசன் கலந்து கொள்ள இசைவு தந்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் சிலையைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் சார்பில் வடிவமைக்கப்பட்ட முத்துக்குமார் சிலையை அன்பளிப்பாக வழங்கி, இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் ம.செந்தமிழன் சிறப்புரையாற்றுகிறார்.

சிலை திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிற்பகல் 2 மணிளவில் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து மாணவர்கள் - இளைஞர்கள் சுடரேந்தி வரும் வகையில், சுடரோட்டம நிகழ்வு நடைபெறுகின்றது. பூதலூர், ஆவாராம்பட்டி, நந்தவனப்பட்டி வழியாக சாணுரப்பட்டிக்கு இச்சுடரோட்டம் வந்தடைகிறது.

மாலையில், ‘முள்ளிவாய்க்கால் வீரவணக்கம்’ என்ற தலைப்பில் மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநர் ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல, புதியதொரு தொடக்கம் என்பதை இவ்வுலகிற்கு நாம் அறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை தமிழகத் தமிழர்கள் மறந்து விடக்கூடாது. தாய்த் தமிழகத்தில் எழுகின்ற எழுச்சியே தமிழீழ மக்களின் நலன் காக்கும் என்பதை உறுதியாக நம்பிக் களம் இறங்க வேண்டிய சூழல் இது என்பதை முன்வைத்தும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் தமிழகமெங்கும் உள்ள இன உணர்வாளர்கள், கட்சி வேலிகளைக் கடந்து ஒன்று கூட வேண்டும் எனவும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை இன விடுதலைக்கான சூளுரை தினமாக நெஞ்சிலேந்தி, விடுதலைப் பாதையில் அணிதிரள வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கிறது. தமிழ் உணர்வாளர்கள் இந்நிகழ்வில் பெருந்திரளாக பங்கெடுக்க வேண்டும் என்றும் இளந்தமிழர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

சிலை திறப்பு மற்றும் வீரவணக்கப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், இளந்தமிழர் இயக்கமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. சிலை திறப்பு நிகழ்வில், பங்களிப்பு செலுத்த விரும்பும் உணர்வாளர்கள், elanthamizhar@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரி அல்லது +91-9841949462 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Tuesday, April 27, 2010

தேசிய இனங்களின் விடுதலைப் போரட்டங்கள்



தேசிய இனங்களின் விடுதலைப் போரட்டங்கள் - மோதல்களும் தீர்வுகளும் - வி.ரி.தமிழ்மாறன்,வி.தமிழ்க்குமரன் எழுதிய புத்தகம் பாரதிதாசன் பதிப்பகத்தால் "மே" மாதம் வெளிவர உள்ளது

Monday, April 26, 2010

ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் ஒரு கடிதம் எழுதத் தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி அவர்கள்

ஈழத் தமிழர்களுக்காகத் தனது டெல்லி எஜமானர்களுக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுத்த் தயாராகிவிட்டார் தமிழக முதல்வர் முத்துவேலு கருணாநிதி அவர்கள். ஈழத் தமிழர்களுக்காக அவர் எழுதும் எத்தனையாவது கடிதம் இது என்பது அவருக்கேதான் வெளிச்சம்.

ஈழத்தின் இறுதி யுத்த காலத்தில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் எழுதிய கடிதங்கள் நெஞ்சுக்கு நீதியாக வெளிவரும்போதுதான் அவரது கண்ணீர்த் துளிகளின் எடையை அறிந்து கொள்ள முடியும். அவர் டெல்லிக்குக் கடிதங்கள் அனுப்பியிருக்காவிட்டால், ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அழிக்கப்பட்டாலும், எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் அடைத்துக் காப்பாற்றியிருக்க முடியாது என்றே உலகம் இப்போதும் நம்புகின்றது. அவர், பாலு தலைமையில் கனிமொழி குழுவினரை இலங்கைக்கு அனுப்பியிருக்காவிட்டால், அந்த முள்வேலி முகாமிலிருந்து இரண்டு இலட்சம் மக்களையாவது காப்பாற்றி வேறு இடங்களுக்கு அகற்றியிருக்க முடியாது என்று ஐ.நா. கூட நம்புகின்றது.

இப்போதும் கூட, தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் கடிதங்கள் எழுதுவதால்தான் தமிழீழ மக்கள் நிம்மதியாக வாழ வைக்கப்பட்டுள்ளார்கள். சிங்கள ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷ தமிழில் பேசும் நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. இத்தனை சாதனைகள் புரிந்த தமிழக முதல்வர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட தமிழர்கள் சிலர் புழுதி வாரித் தூற்றுவதைச் சகிக்க முடியாமல், பல காங்கிரஸ் பிரமுகர்கள் தீக்குளிக்கும் முயற்சியில் கூட இறங்கியுள்ளார்கள்.

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களுக்குத் தனது குடும்பப் பிரச்சினையையே தீர்க்க நேரம் போதாமல் இருக்கும் நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு யார் வருகிறார்கள்? விமான நிலையத்திலிருந்து யார் போகிறார்கள்? அங்கிருந்து யார் திருப்பி அனுப்பப்படுகின்றார்கள் என்பதையா பார்த்துக் கொண்டிருக்க முடியும்? ஒரு பக்கம் அழகிரி – ஸ்டாலின் பிரச்சினை விசுவரூபம் கொள்கிறது. மற்றொரு பக்கம் மனைவியும் துணைவியும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். யார் தலைமாட்டில்? யார் கால் மாட்டில்? என்ற பிரச்சனை இன்றுவரை சோனியாவாலும் தீர்க்க முடியாததாகவே நீடிக்கின்றது. அதற்காக ஒரு அரை நாள் உண்ணாவிரதம் இருக்கலாம் என்றால், அங்கேயும் தலைமாடு, கால்மாடு பிரச்சினை உருவாகிவிடுகின்றது.

அரசியல் வாழ்வில், தேவைக்கும் அதிகமாகப் பணத்தைச் சம்பாதித்து, இந்தியாவின் பணக்கார முதல்வர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டாலும், தேவைக்கு அளவிற்காவது நிம்மதியைச் சம்பாதிக்க முடியாத துக்கம் கருணாநிதியின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது. வாலிப காலத்தில் அதிகமாக ஆசைப்பட்டதால் வாரிசுகள் தொகை அளவுக்கு மீறிஇ இப்போது அவரைத் தொல்லைப்படுத்தி வருகின்றது. மூத்த மகன் முத்து முதல், கடைக்குட்டி கனிமொழி வரை சொத்துக்கு மட்டும் சண்டை போட்டால் பரவாயில்லை, அவர்கள் பதவிகளுக்கும் போட்டி போடுவதால் சங்கடம் அவரது தலைக்குமேல் குந்தியே உள்ளது. தமிழகத்தை ஸ்டாலினுக்கும், டெல்லியை அழகிரிக்குமாகப் பகிர்ந்தாலும் பிரச்சினை தீர்வதாக இல்லை. ஆங்கிலம் புரியாத அழகிரி, தனக்குத் தோதான இடமாகத் தமிழகத்தையே தேர்வு செய்கிறார். கனிமொழியும் தனக்கு எதுவும் இல்லையா? என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார். மூத்த மகன் முத்து குடும்பத்துடன் ஐக்கியப்பட்டு விட்டாலும், தான் தலைவரால் ஒதுக்கப்படுவதாகப் புலம்பிக்கொண்டுதான் உள்ளார்.

செல்வம் மட்டுமல்ல, ஊடகத் துறையும், சினிமாத் துறையும் கூட இப்போது கருணாநிதியிடம் அடைக்கலமாகியுள்ள நிலையில், அசக்க முடியாத சக்தியாக உருவாகிவரும் தனது குடும்பத்தில் சகோதர யுத்தம் உருவாகிவிடக் கூடாது என்பதனாலேயே பாட்டி வடை சுட்ட கதை போல், அடிக்கடி தமிழீழ விடுதலைப் போர் இன்றைய நிலையை அடைந்ததற்கு சகோதர யுத்தமே காரணம் என்று தமது வாரிசுகளுக்கு கதை சொல்லி வருகின்றார்.

இத்தனை குடும்பக் குழப்பங்களுக்கு மத்தியில் அன்றாடம் அல்லாடும் மு. கருணாநிதி அவர்கள் ஈழத் தமிழருக்காக எதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? மன்னிக்க வேண்டும்இ சோனியாவின் அன்புக் கட்டளைக்குப் பின்னர் எம்மை எல்லாம் ஈழத் தமிழர் என்று அழைப்பதைத் தவிர்த்து, இலங்கைத் தமிழர் என்றே விழித்து வருகின்றார். மயிலிடம் இறகு கோருவது போல், ராஜபக்ஷவிடம் தமிழர்களுக்கான உரிமைகளைக் கேரலாம் என்பதே தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்களின் சோனியா சிந்தனை. அதை மீறி, மகிந்தருக்கு கோபம் வரும் வகையில் நடந்து மகிந்த சிந்தனை ஊடாக, இலங்கைத் தமிழருக்காக அவர் பெற்றுக் கொடுக்க விரும்பும் உரிமைகளை விட்டுக் கொடுக்க முடியுமா? தேசியத் தலைவர் அவர்களது தாயார் பார்வதி அம்மாளைத் தமிழகத்தில் தரை இறங்க விடுவது தனது இலட்சியப் பயணத்திற்கு இடைஞ்சலாக அமையும் என்பதை மு. கருணாநிதி அவர்கள் புரிந்து கொண்டதில் என்ன தப்பைக் காண முடியும்?

தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் சோனியா சிந்தனையும், மகிந்த சிந்தனையும் சந்திக்கும் இடத்தில் இலங்கைத் தமிழருக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பும் இடத்தில்இ பார்ர்வதி அம்மாளின் தமிழகப் பயணம் இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அவரைத் திருப்பி மலேசியாவுக்குப் பத்திரமாக அனுப்பியதுடன், சோனியா சிந்தனையில் மாற்றங்களை உருவாக்க டெல்லிக்குக் கடிதம் எழுதும் தனது தீர்மானத்தை வெளியிட்டுள்ளார். விடுதலைப் பலிகளையும், அவர்களோடிருந்த மக்களையும் அழித்துவிட்டதனால், சோனியாவிற்கு இருந்த பயங்கரவாத அச்சத்தைத் தீர்க்க முன்நின்று செயற்பட்ட மு. கருணாநிதி அவர்களது தியாகத்தை சோனியா காந்தி உணராமல் விட்டுவிடுவாரா?

ஈழத் தமிழர்கள்மீது சிங்கள தேசம் இன அழிப்பு புரிந்தபோது, அரை நாள் உண்ணாவிரதம் இருந்து சோனியாவின் மனத்தை மாற்றிய கருணாநிதி அவர்கள், செல்வி ஜெயலலிதாவின் முன்னைய தீர்மானத்தின் காரணமாக நாடு கடத்தப்பட்ட பார்வதி அம்மாள் மீண்டும் தமிழகம் வந்து வைத்தியம் செய்துகொள்ள மீண்டும் ஒரு அரை நாளை உண்ணாவிரதத்திற்காக ஒதுக்கமாட்டாரா? மு. கருணாநிதி அவர்களைக் கைது செய்து சிறைப்படுத்திய முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சதி செய்தே, தற்போதைய முதல்வர் மு. கருணாநிதிக்குத் தெரியாமல் திருமதி பார்வதி அம்மாள் அவர்களைத் தமிழகத்தில் தரையிறங்க விடாமல் திருப்பி அனுப்பிவிட்டார் என ஆத்திரப்படும், அவ்வப்போது ஆட்சியில் அமர்பவர்களுக்கு ஜால்ரா போட்டுத் தன்னை நிரப்பிக்கொள்ளும் கி. வீரமணி சொல்வதை நம்பாமல் இருக்க முடியுமா?

பாவம், முத்துக்குமாரன்… தமிழக மக்களை இவர்களிடமிருந்து மீட்க முயன்று தோற்றே போய்விட்டான்.



திரு.பாலச்சந்திரன்

Saturday, April 24, 2010

சுயமரியாதை சுடர் பட்டுக்கோட்டை அழகிரி




சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்காய், ஜாதி, மத, மூட நம்பிக்கைகளை தன் புரட்சி பேச்சால் புரட்டி எடுத்த புரட்சியாளன் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி. தந்தை பெரியாரின் சுயமரியாதை பயணத்தில் தளபதியாக பயணித்தவர்.

ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைக்கு தன் மேடைப் பேச்சால் அறை கொடுத்தவர் அழகிரி. தன் பேச்சால் பல்வேறு வழிகளில் பயணித்தவர்களையும். பயணிக்க நினைத்தவர்களையும் சுயமரியாதை இயக்கம் நோக்கி இழுத்து வந்தவர். அப்படி வந்தவர்களில் முதல்வர் கலைஞரும் உண்டு. எதிரிகளின் கல்லடி, சொல்லடி, செருப்படி என்று எதைக் கண்டும் அஞ்சாமல் கடைசிவரை சுயமரியாதைக்காக, சுயமரியாதையாக வாழ்ந்தவர்.

இன்றைய புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், வாலடை மருதூர் கிராமத்தில் வளர்ந்தார். பத்தாம் வகுப்போடு பள்ளி படிப்பை முடித்துக் கொண்டவர் முதலாம் உலகப் போர் காலத்தில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆறு ஆண்டுகள் ராணுவ பணி செய்தார். ராணுவப் பணியின் போது மெசபடோமியாவில் இவர் உள்ளிட்ட இந்திய ராணுவ வீரர்களை கடும்; பனிகாரணமாக இங்கிலாந்து படை விட்டு விட்டு திரும்பிவிட்டது. கவலைப்படாமல் கடல்வழியாக கொல்கத்தா வந்து சேர்ந்து அத்துடன் ராணுவ பணிக்கு முழுக்கு போட்டார். ஊர் திரும்பியவருக்கு பட்டுக்கோட்டை சுயமரியாதை பயணவழிகள் செய்து கொடுத்துது.

கூட்டுறவு சங்கமொன்றில் எழுத்தராக சேர்ந்தார். அந்த சமயம் சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் நடத்திய குருகுலத்தில் பிராமண மாணவர்கள், பிராமணர் அல்லாத மாணவர்களுக்கு தனித்தனி குடிதண்ணீர் பானைகள் வைக்கப்பட்டிருந்தது.

பிராமணரல்லாத மாணவர் பிராமணர்களுக்கான பானைத் தண்ணீரை குடித்து விட அந்த மாணவரை அடித்து தண்டித்தது குருகுலம். அப்படிப்பட்ட குருகுலத்துக்கு அன்றைய காங்கிரஸ் ரூ.ஒரு லட்சம் நிதி கொடுத்தது. குருகுலத்தின் தீண்டாமை போக்கை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை என்று பெரியாரும், சீர்த்திருத்த கருத்து கொண்ட காங்கிரஸில்; பலரும் கொதித்தெழுந்தனர். ஆனால் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த வரதராஜுலு நாயுடு தமிழ்நாடு நாளிதழில் காரசாரமாக எழுதி பிராமணர்களின் போக்கை கண்டித்தார்.

ரிவோல்ட் என்னும் பத்திரிக்கையின் ஆசிரியர்களாக இருந்த பெரியார், ராமநாதன், குத்தூசி குருசாமி ஆகியோர்களில் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு தரக்குறைவாக எழுதியது. இதனால் கோபமடைந்த அழகிரி அந்த நாளேட்டின் அலுவலகம் சென்று அந்த ஆசிரியரை அடித்துவிட்டு திரும்பினார்.

அந்த வழக்கு நீதிமன்றம் போனது. ஆதில் அழகிரிக்காக வழக்கறிஞராக ம.சிங்காரவேலர் ஆஜரானார்.

ஆழகிரிதான் முதன் முதலில் பட்டுக்கோட்டையில் சுயமரியாதை சங்கம் தொடங்கி உறுப்பினர் சேர்த்து சுயமரியாதை பிரச்சாரம் செய்தார். அதன் பிறகே தந்தை பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது.


இரண்டாம் உலகப் போர் தொடங்கிய காலக்கட்டத்தில் மீண்டும் அழகிரிக்கு ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் ரீஜினல் லெக்சரர் பதவி கிடைத்தது. பசுமலையில் தங்கி போர் ஆதரவு பிரச்சாரக் கூட்டங்களில் போர் பற்றி பேசாமல் சுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் செய்தார்.

ஏதிரானவர்கள் சென்னை கவர்னருக்கு புகார் அனுப்பினார்கள். கவர்னர் விசாரனை வந்தது. ராணுவத்துக்கு ஆள் சேர்க்காமல் சுயமரியாதை பிரச்சாரம் செய்வதாக புகார் வருகிறதே ? என்று கேட்க. என் பிரச்சாரத்தால் பட்டாளத்துக்கு ஆள் சேருகிறார்களா என்று மட்டும் பாருங்கள். பேச்சை பார்க்காதீர்கள் என்றார் அழகிரி. உங்களை எச்சரித்து அனுப்புகிறேன் என்றார் கவர்னர். நான் தவறு செய்யவில்லை உங்கள் மன்னிப்போ. எச்சரிக்கையோ வேண்டாம். இந்த வேலையும் வேண்டாம் என்று ராஜினாமா கடிதம் கொடுத்து வெளியேறிவிட்டார்.

சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தானில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு போனபோது மாப்பிள்ளை ஊர்வலத்தில் ராஜரெத்தினம் பிள்ளையின் நாதஸ்வர நிகழ்ச்சி வந்தது. கூடியிருந்த கூட்டம் ராஜரெத்தினம் பிள்ளையின் தோல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு வாசிக்கச் சொன்னது. தனியாக வந்த கனீர் குரலொன்று ராஜரெத்தினம் பிள்ளை தோல் துண்டை எடுக்காதீர்கள் என்று கேட்டது. ஓட்டுமொத்த கூட்டமும் அந்த திசை நோக்கியது அந்த குரல் அழகிரியிடமிருந்து வந்து கொண்டிருந்தது. யாரும் சுயமரியாதை இழக்க கூடாது என்பதில் அக்கரையுடன் செயல்பட்டார்.

தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்பட்ட போது ராமாமிர்தம் அம்மையாருடன் சேர்ந்து தஞ்சை முதல் சென்னைவரை நடைபயண இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் செய்தார். சென்னையில் பெரியார் வரவேற்று விழா நடத்தினார்.

அவர் எத்தனை சமூகப் பணி புரட்சி செய்தாலும் அவரை காசநோய் பிடித்துக் கொண்டது. திருவாரூரில் சுயமரியாதை கூட்டத்தில் கனல் பேச்சுக்களை பேசிக்கொண்டிருந்த போது காசநோயின் தாக்கம் மயங்கி கீழே விழுந்தார். பேச்சை கேட்ட கூட்டம் ஓடி போய் தூக்கியது தூக்கிய கூட்டத்தில் ஒரு சிறுவனும் உண்டு. அந்த சிறுவன் காசநோயாளியான நீங்க ஆவேசமாக பேசலாமா என்று கேட்க. என்னை விட இந்த நாடு நோயாளியாக உள்ளது முதலில் அதை சரிப்படுத்தத்தான் பேசுகிறேன் என்று அந்த சிறுவனிடம் பதில் சொன்னார். அன்று முதல் அழகிரியின் பேச்சுக்களை விடாமல் கேட்கத்தொடங்கினார் அந்த சிறுவன். அந்த சிறுவன்தான் இன்றைய முதல்வர் கலைஞர்.

தந்தை பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவும் பிரிந்து விட்ட காலம் அழகிரிக்கு காசநோய் அதிகமானது. சென்னையில் டாக்டர் சந்தோசம் சிகிச்சை அளித்தார். அண்ணாவுக்கு தெரிந்து மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு அழகிரி இல்லை ஊருக்கு கிளம்பி விட்டதாக தகவல் தெரிந்தது. ரயிலில் ஏறியிருந்த அழகிரியை சந்தித்து ரூ.400 பணம் கொடுத்தார். நெகிழ்ந்து போன அழகிரி அண்ணாவின் கைகளை பற்றிக்கொண்டார். அதன் பிறகு அண்ணாவை எந்த கூட்டத்திற்கு அழைத்தாலும் அழகிரிபெயரில் ரூ.100 மணியார்டர் செய்து அதன் ரசீது அனுப்பினால் தான் கூட்டத்துக்கு வருவேன் என்று அறிக்கை கொடுத்துவிட்டார். அதன்படி பலரும் பணம் அனுப்பினார்கள்.

இப்படி எத்தனையோ சம்பவங்களைச் சந்தித்;த புரட்சியாளர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி காசநோயின் கொடிய தாக்கத்தால் 28.03.1949 அன்று மரணமடைந்து விட்டார். மரணமடைந்தாலும் அவரது பெயரும், புரட்சி புகழும் என்றும் மங்காமல் இன்றுவரை நீடித்து நிற்கிறது. இவரது கடன்களை கலைவாணர் என்.எஸ்.கே அடைத்தார்.

அஞ்சாநெஞ்சன் அழகிரியின்பால் தான் கொண்ட அன்பால் ஈர்க்கப்பட்ட பேச்சால் தான் வளர்ந்து நிற்கிறேன் என்ற கலைஞர் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார். மேலும் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்ற காலத்தில் தான் முதல்வாரன போது தன் சொந்த செலவில் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையில் அழகிரியின் சிலையை பட்டுக்கோட்டையில் நிறுவினார். அதன் பிறகு கடந்த 2007ம் ஆண்டு பட்டுக்கோட்டையில் அவர் வாழ்ந்த இடத்தில் நினைவு மணிமண்டபம் கட்ட நிதியும் ஒதுக்கி உள்ளார்.

எம்.ஜி.ஆர் முதல்வராக வந்த போது அவரும் அழகிரிக்கு மரியாதை செய்யும் விதமாக ’பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்து கழகம்’ தொடங்கினார்.

ஆழகிரி இறந்தபோது தந்தை பெரியார் வெளியிட்ட விடுதலை அறிக்கையில் நண்பர் அழகிரிசாமி முடிவு எய்தியது பற்றி நான் மிகவும் துக்கப்படுகிறேன். 30 ஆண்டு கால நண்பரும் மனப்ப+ர்வமாக நிபந்தனை இன்றி பின்பற்றிவருகிற ஒரு கூட்டுபணியாளருமாவார். 30 ஆண்டுகளில் என் கொள்கை, திட்டத்தில், ஆலோசனையில் தயக்கம் கொள்ளாமல் நம்பிக்கை வைத்து தொண்டாற்றியவர்.

அவரது முழு வாழ்க்கையிலும் இயக்க தொண்டு தவிர வேறு எதிலும் ஈடுபட்டதில்லை. போதிய பணம் இல்லை. விளையாட்டுக்கு கூட கொள்கையை விலைபேசி இருக்கமாட்டார் என்று கூறி இருந்தார்.


-இரா.பகத்சிங்

Friday, April 23, 2010

பேராசிரியர் சுப.வீரபாண்டியனுக்கு ஒரு சிறு கடிதம்

அன்புள்ள சுபவீ வணக்கம். கடந்த காலத்தில் புலிகளுக்காகவும் ஈழ மக்களுக்காகவும் பேசி பல முறை சிறைசென்றவர் என்கிற வகையிலும் சமூக நீதிக்கான தமிழகப் போராட்டங்களில் முன்னணியில் நின்றவர் என்ற வகையிலும் உங்கள் மீது மரியாதை உண்டு. இப்போதும் அந்த மரியாதை இருக்கும் உரிமையிலேயே உங்களுக்கு இக்கடிதத்தை எழுத நேர்கிறது. வரவிருக்கும் மே மாதத்தில் 17,18,19 ஆகிய நாட்களை உங்களால் மறக்க முடியாது என நினைக்கிறேன். பாதுகாப்பு வலையம் என்று அறிவிக்கப்பட்ட சிறிய பிரேதசத்திற்குள் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்த நாட்கள். அந்நாட்களை இப்போது உங்களுக்கு நினைவுறுத்துவதால் நீங்கள் அசூயை அடையலாம். ஆனால் இன்னமும் அந்த மனிதப் பேரழிவில் இருந்து எங்களால் மீண்டு எழ முடியவில்லை என்ற வேதனையை உங்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

இப்போது பார்வதியம்மாள் தொடர்பாக கருணாநிதியின் முரசொலி இதழில் நீங்கள் எழுதியிருக்கும் கட்டுரையில் ஒரு பகுதி உண்மை. ஆனால் நீங்கள் பல நேரங்களில் பேசப்பட வேண்டிய உண்மைகளை பேசாமல் விட்டு விட்டு உங்களுக்குப் பாதகமில்லாத விஷயங்களை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். ஈழ மக்கள் என்ற வகையில் நீங்கள் எங்களிடம் பேசியாக வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தே இக்கடிதம்.

அதிமுக தலைவர் ஜெயலலிதா தொடர்ந்து ஈழ மக்கள் மீது வன்மம் காட்டியவர் என்பதை யாரும் இங்கே மறுக்கவில்லை. ஈழ மக்களுக்கு மட்டுமல்ல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமைகளுக்கும் ஜெயலலிதா எதிரானவர் என்பதை நாங்கள் கருணாநிதியிடமிருந்தோ அல்லது ஏனைய ஜெயலலிதா எதிர்ப்பாளர்களிடமிருந்தோ அல்லது அவரது ஆதரவாளர்களிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டியதில்லை. பார்வதியம்மாள் சென்னை விமான நிலையம் வந்தபோது ரகசியமாக வரவேற்கப் போன நெடுமாறனையும், வைகோவையும் தள்ளி விட்டு விட்டு பார்வதியம்மாளை திருப்பி அனுப்பிய சென்னை விமானநிலைய மத்திய அரசு ஊழியர்கள் (பாருங்கள் ஒரு செய்தியை எப்படி எல்லாம் எழுத வேண்டியிருக்கிறது. மாநில அதிகாரிகளுக்கு தொடர்பில்லையாம்) விவகாரம் தொடர்பாக கருணாநிதியின் கட்சி இதழான முரசொலிக்கு நீங்கள் ஒரு அறிக்கை எழுதிக் கொடுத்து அவர்கள் இன்று அதை வெளியிட்டிருகிறார்கள். கருணாநிதிக்காக நீங்கள் அடியாள் வேலை பார்ப்பது சரிதான். அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நீங்கள் எழுதியதில் உறுத்தலாக சில விஷயங்கள் இருக்கிறது.

"இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா?' என்று கேட்டார். அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே என்றேன்." எவ்வளவு ஆழமான வரிகள் சுபவீ... அதாவது சித்த நேரம் முன்னாடி பேசியிருந்தேன்னா அவா கிட்டே சொல்லியிருப்பேனே என்பது போல இருக்கிறது. ஏன் இரண்டு மணி நேரம் முன்னாடி சொல்லியிருந்தால் மட்டும் உங்கள் தலைவர் கருணாநிதி பார்வதியம்மாளை அனுமதித்திருப்பாரா என்ன?

சரி கருணாநிதிக்கும் எண்பது வயதாகி விட்டது அயர்ந்து தூங்கியிருப்பார். ஏன் மறு நாளே 'இப்படியாகி விட்டது நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை திருப்பி அனுப்பி விட்டார்கள். நாம் உடனே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி 2003-ல் ஜெயலலிதா போட்ட உத்தரவை நீக்கச் சொல்லுவோம். அம்மாவை நாமே அழைப்பதன் மூலம் செம்மொழி மாநாட்டை சிறப்பிக்கலாம். முடிந்தால் தேர்தல் வரை நீடிக்கலாம்' என்று கலைஞரிடம் சொல்லியிருக்கலாமே? நீங்கள் சொன்னால் செய்யாமலா போய் விடுவார்? நீங்கள் சொல்லி அவர் எவ்வளவு செய்திருக்கிறார், இல்லையா சுப.வீ.?

இப்படியான உதவிகள் இதற்கு முன்னரும் மே மாதத்திலும் உங்களிடம் கேட்கப்பட்டிருக்கலாம். என்ன செய்வது கையாலாகாத ஓர் இனமாக ஈழத் தமிழினம் இன்று போய் விட்டது. அப்படி சில கோரிக்கைகள் உங்களிடம் கேட்கப்பட்டு நீங்கள் கருணாநிதியைச் சென்று பார்த்திருக்கலாம். அது பற்றி கருணாநிதி உங்களிடம் சொன்ன பதில் பற்றியும் நீங்கள் எழுதினால் நன்றாக இருக்கும். கடந்த மே மாதத்தில் போரின் முடிவின் போது போர் நிறுத்தம் கோரி நீங்களும், இருட்தந்தை ஜெகத்கஸ்பர் ராஜும் சேர்ந்து கனிமொழி மூலமாக இறுதிக் கட்ட வேலையில் ஈடுபட்டீர்கள். அந்த முயற்சியில்தான் புலிகளின் தலைவர்கள் நடேசனும், புலித்தேவன் உள்ளிட்ட பல நூறு போராளிகள் கொல்லப்பட்டார்கள் என்று ஜெகத்கஸ்பரே எழுதினார். உண்மையில் இது வேறு யாரும் சொன்ன குற்றச்சாட்டு இல்லை, ஜெகத்தே எழுதியதுதான். அதை வைத்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இன்று வரை ஜெகத் பதில் சொல்லவில்லை. நீங்களாவது டில்லியில் இருந்து உங்களின் மூலம் உத்தரவிட்ட அந்த காங்கிரஸ் பெரியவர் யார் என்று சொல்வீர்களா?

நீங்கள் முரசொலியில் எழுதியிருக்கும் கட்டுரையில் ஜெயலலிதா ஆதரவாளர்களான வைகோ, நெடுமாறன் மீது பல கேள்விகளை வீசியிருக்கிறீர்கள். அது உண்மைதான் ஆனால் இரண்டு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு ஈழத்தில் போரை நிறுத்தி விட்டார்கள் என்று எழுந்து போன கருணாநிதியின் நிழலில் நின்று கொண்டு போயஸ் கார்டன் வாசலில் நிற்பவர்கள் மீது இக்குற்றச்சாட்டை வீச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? போயஸ்கார்டனை விட அறிவாலயம் மேல் என்கிற வீரவசனங்கள் இனி வேண்டாம். நாற்பதாண்டுகாலமாக நாங்கள் ஏமாந்து விட்டோம். இனியும் வீர வசன நடை வேண்டாம்.

பார்வதியம்மாள் திருப்பி அனுப்பபட்ட விவகாரத்தில் தொடர்பே இல்லாத கருணாநிதி மீது வைகோ குற்றம் சுமத்துவதாக பொங்குகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்துகிறீர்கள். பார்வதியம்மாளை வைத்து வைகோ வருகிற தேர்தலில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருக்கலாம் அல்லது காங்கிரஸ் எம்.எல்.ஏ. சுதர்சனம், கருணாநிதி முன்னிலையில் சட்டமன்றத்தில் சொன்னது போல செம்மொழி மாநாட்டிற்கு எதிராக பார்வதியம்மளை சிறப்புப் பேச்சாளராகக் கொண்டு வைகோ தமிழின எழுச்சி மாநாட்டு நடத்த திட்டமிட்டிருக்கலாம். அது உங்களுக்கும் கருணாநிதிக்கும் உங்களின் நண்பர்களான காங்கிரஸ்காரர்களுக்குமே தெரிந்த உளவுத் தகவல்; அது எமக்குத் தெரியாது.

ஆனால் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட விவாகரத்தில் கருணாநிதிக்கு தொடர்பே கிடையாதா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், சுபவீ. தொடர்பே இல்லை என்றால் ஏன் பல மணி நேரம் முன்பே விமான நிலையம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது? இரவோடு இரவாக நெடுமாறனும், வைகோவும் போனதால்தான் பார்வதியம்மாளை அதிகாரிகள் விடவில்லை. இவர்கள் போகவில்லை என்றால் விட்டிருப்பார்கள் என்று போலீசே செய்தி பரப்பியதே இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில்?

நன்னடத்தை விதிகளின் படி தன்னை விடுவிக்கக் கோரினார் நளினி..... ஆமாம் நீண்டகால சிறை வதைகளில் இருந்து மீண்டும் தன்னை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மீண்டும் மனு செய்தார் நளினி. இதோ நளினியின் அறையில் இருந்து செல்போனைக் கண்டுபிடித்து விட்டார்கள் காவல்துறையினர். மேலதிகமாக மூன்று வழக்குகள் நளினி மீது போடப்பட்டுள்ளன.

நளினி போனை கழிப்பறையில் வீசியதாக சட்டமன்றத்தில் சொல்கிறார் திமுக‌ தலைவர்களில் ஒருவரும் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கியவருமான துரைமுருகன். உடனே காங்கிரஸ்காரன் எழுந்து நளினி யாரிடமெல்லாம் பேசினார் என்று பட்டியல் சொல்கிறான். ஆமாம் நளின்யின் சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதும் கருணாநிதிக்குத் தெரியாது. இதையும் நம்புகிறோம். நள்ளிரவு 12 மணிக்குத் தகவல் தெரிந்து விமான நிலையத்தில் விசாரித்தபோது அவரை திருப்பி அனுப்பி விட்டதாக சொன்னார்கள் என்று முதலில் சொல்லி விட்டு, பின்னர் காலையில் பேப்பரைப் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கருணாநிதி சொன்னதையும் நம்புகிறோம். அந்த உத்தமருக்கு எதுவுமே தெரியாது; உங்களுக்கு நெடுமாறனும், வைகோவும் பார்வதியம்மாளை வைத்து என்ன செய்யத் திட்டமிட்டிருந்தார்கள் என்பது தெரியும் என்பதையும் நம்புகிறோம்.

ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல உள்ளூர்த் தமிழர்களில் பலரும் கூட பல நேரங்களில் மான ரோஷம் பார்க்காமல் உங்களிடம் உதவி கேட்டு இப்படி வகையாக சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில்தான் நீங்கள் வகையாக அந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். “இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவு வந்ததா?” என்று. சபாஷ் சரியான கேள்வி. உங்கள் அரசியல் ஆசானிடம் இருந்து ஆரம்பப்பாடத்தை நீங்கள் நன்றாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். இந்த சொரணை கெட்ட ஈழத் தமிழர்களும் தமிழகத் தமிழர்களும் இன்னும் உங்களிடம் ஏதாவது உதவி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களும் வகையாக‌ இப்படி நாக்கைப் பிடுங்குகிற மாதிரி கேளுங்கள். அப்போதாவது இவன்களுக்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம்.

சந்திப்போம் நீங்களும் செம்மொழி மாநாடு, கலைஞர் டிவி, திமுக குடும்ப விழாக்கள், பட்டிமன்றம், கருணாநிதியை ஈழ விவகாரத்தில் பாதுகாப்பது என்று பிஸியாக இருப்பீர்கள். உங்களை தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.

இப்படிக்கு,

கையாலாகாத ஒரு தமிழன்

வெல்க‌ தமிழ்! வீழ்க தமிழன்!

திமுகவின் முரசொலி நாளிதழில் சுப.வீ. எழுதியுள்ள கட்டுரை:

சென்னை: சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட காரணமாக இருந்தவர் போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் வைகோவும் நெடுமாறனும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த வேண்டும் என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரான‌ சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே மிகுந்த பரபரப்புடன் பேசப்பட்டுவரும் ஒரு செய்தியில், அடிப்படையான சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுட்டுள்ளன என்பதை இப்போது அறிய முடிகிறது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் தாயார், தமிழக மண்ணில் கால் வைக்கவும் அனுமதிக்காமல், மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட மனிதநேயமற்ற செயலை அனைவரும் கண்டிக்கிறோம்.

மக்களவையிலேயே திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இதுகுறித்து கவன ஈர்ப்புச் செய்துள்ளார். இந்நிலையில் உண்மைகளை மூடிமறைத்து முதல்வர் கருணாநிதி மீது பழிபோட்டு, உண்ணாவிரதம், கண்டனம் என்று ஒரு மலிவான அரசியல் இங்கே அரங்கேற்றப்படுகிறது.

விமான நிலையம் பரபரப்பாக இருந்த அந்த நள்ளிரவில் தோழர் தியாகு, என்னைத் தொலைபேசியில் அழைத்து அந்தச் செய்தியைக் கூறினார். பத்திரிகையாளர்கள் மூலமாகக் கவிஞர் தாமரைக்கு செய்தி கிடைத்ததாக‌க் கூறிய அவர், உங்களால் ஏதும் உதவ முடியுமா? என்று கேட்டார். முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள வழி உள்ளதா என்றும் வினவினார்.

இந்த நேரத்தில் முதல்வரை நான் எப்படித் தொல்லை செய்ய முடியும் என்றேன். அதில் உள்ள நியாயத்தை அவரும் புரிந்து கொண்டார். பிறகு தமிழின உணர்வாளர்கள், பத்திரிகையாளர்கள் சிலர் அடுத்தடுத்துத் தொலைபேசியில் பேசினர்.

இரவு 2 மணி அளவில் லண்டனிலிருந்து ஒரு நண்பர் அழைத்து, 'உதவிட இயலுமா?' என்று கேட்டார்.

அப்போதுதான் நான் கொஞ்சம் வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன், 'முதல்வர் கருணாநிதியையும் அவரை ஆதரிக்கும் என் போன்றவர்களையும், இப்போதுதான் உங்களுக்கு நினைவு வருகிறதா? கொஞ்சம் முன்கூட்டியே பேசியிருக்கக் கூடாதா? மாலையில் தகவல் தெரிவித்திருந்தால் கூட, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு போயிருக்க முடியுமே' என்றேன்.'இல்லையில்லை விசா கிடைத்துவிட்டதால், பரபரப்பாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் யாருக்குமே சொல்லவில்லை' என்று அவர் கூறினார்.

அப்படியானால் வைகோவிற்கும், நெடுமாறன் அய்யாவிற்கும் மட்டும் எப்படி தெரிந்தது என்ற என் கேள்விக்கு அவருக்கும் விடை தெரியவில்லை.

வயதான தாயை அழைத்து வந்து, அவருக்குச் சிகிச்சை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை விட, அவரை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கமே இங்கு அரசியல் தலைவர்கள் சிலரிடம் விஞ்சியிருப்பதை இப்போது நம்மால் அறிய முடிகிறது.

விமான நிலையத்தில், தொடர்பே இல்லாமல் முதல்வர் கருணாநிதியைக் குற்றஞ்சாட்டி வைகோ (வழக்கம் போல்) ஆவேசமாய்ப் பேசுவதை ஜெயா தொலைக்காட்சி மறுநாள் தொடர்ந்து காண்பித்தது. "அடடா, பார்வதி அம்மாள் மீது ஜெயலலிதாவிற்குத்தான் எத்தனை அன்பு" என்று என்று விவரம் அறியாதவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

கருணாநிதியைத் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது என்று அறிக்கை விட்டார் நெடுமாறன்.

எத்தனை பெரிய மோசடிகள் இவை. 2003ம் ஆண்டு, பிரபாகரனின் பெற்றோரை இந்தியாவிற்குள் நுழையவே அனுமதிக்கக்கூடாது, அவர்களைக் கறுப்புப் பட்டியலில் வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதிய அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காதவர்கள், அவரால்தான் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என்ற உண்மையைத் திசைதிருப்ப ஆடும் நாடகத்தைத்தான் தமிழ்ச் சமூகம் மன்னிக்காது.

பார்வதி அம்மாள் விரும்பினால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, அவர்களை அழைப்பதற்கு ஆவன செய்வேன் என்று கூறும் முதல்வர் கருணாநிதியை தமிழ்ச் சமூகம் போற்றும்.

வயது முதிர்ந்து, நோயினாலும், பல்வேறு சூழல்களாலும் பாதிக்கப்பட்டுள்ள அந்தத் தாய் மன அமைதியுடன் வாழ நாம் அனைவரும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அடிப்படை மனிதநேயம் கொண்ட அனைவரின் விருப்பமாகவும் இருக்க முடியும். நாம் அதற்கு நம்மால் இயன்றதைச் செய்வோம்.

அதே நேரத்தில் திருப்பி அனுப்பிய 'பாவிகளை' எதிர்த்து உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.

நீங்கள் தேடும் 'அந்தப் பாவி' போயஸ் தோட்டத்தில்தான் உள்ளார். அவர் வீட்டுக்கு முன்னால் போய் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துங்கள்.

இவ்வாறு சுப. வீரபாண்டியன் கூறியுள்ளார்.

நன்றி-கீற்று

Thursday, April 22, 2010

பார்வதியம்மாள், நளினி – அறிக்கை நாயகர்களின் IPL !!

‘‘ஆத்திரந்தான் தாங்க முல்ல(முடியல)….. ஆனா அறிக்கைக்கு மேல் தாண்ட முல்ல,”’’ மக்கள் கலை இலக்கியக் கழகம் பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் கடந்த கால அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக வெளியிட்ட பாடல் ஒலிப்பேழையின் ஒரு பாடலில் இப்படியான வரிகள் வரும். இன்றைய கருணாநிதியின் ஆட்சியிலும் தமிழ் தேசியவாதிகளின் நிலை இதுதான். இனி எவரேனும் ஈழம் தொடர்பாக ஆவேச அறிக்கைகளோ, ஆர்ப்பாட்டங்களோ செய்தால் ஆயுட்காலம் வரை சிறையில் தள்ளுவோம் என்று மத்திய, மாநில அரசுகள் சட்டம் கொண்டு வரும் என்றால் இவர்கள் அறிக்கை விடுவதையும் நிறுத்தி விடுவார்கள். இதுதான் இன்றைய திராவிட, தமிழ் தேசிய. ஈழ ஆதரவாளர்களின் நிலை.
ஆறு மாத கால மருத்துவ விசா பெற்று சென்னை வந்த பிராபகரனின் தாயார் பார்வதியம்மாளை, தமிழக போலீசின் துணையோடு திருப்பி அனுப்பியிருக்கிறார்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகள். அனுப்பியவர்கள் மத்திய அரசு ஊழியர்கள் என்று கருணாநிதி ஆதரவாளர்களும், “இல்லை இல்லை கருணாநிதிக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது” என்று ஈழ ஆதரவாளர்களும் மாறி மாறி அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கடைசியில் எண்பது வயது முதிய தாய் இப்போது தற்காலிக விசாவில் மலேசியாவிற்கு விரட்டப்பட்டிருக்கிறார். விரைவில் அவருக்கான விசா காலம் முடியும் போது, அவர் விண்ணப்பித்திருக்கும் கனடா நாட்டிற்கான விசாவும் மறுக்கப்படும் நிலையில் மீண்டும் அவர் கொழும்புவுக்கே திரும்பக் கூடும். அப்படித் திரும்பினால் சிங்கள பாசிச பேரினவாத இலங்கை அரசு அவரை மீண்டும் முகாம்களுக்குள் முடக்கக் கூடும். அல்லது முகாம்களிலிருக்கும் மக்களின் அவலம் பற்றிய பேச்சு புதிதாக எழாமல் இருக்க அவர் கனடாவுக்கு அனுப்புவதும் நடக்கலாம். இல்லை அவரை வைத்து புலம் பெயர்ந்த மக்களிடம், புலிகள் மீண்டு வரும் பேச்சுக்கள் எழலாம் என்றால் இலங்கையிலேயே முடக்கலாம்.
____________________________________________________
பார்வதியம்மாளை வைத்து நடத்தப்பட்ட ஐ.பி. எல் மேட்ச்:
பார்வதியம்மாளை வைத்து மேலாதிக்க இந்திய அரசும், கருணாநிதி தலைமையிலான பிழைப்புவாத மாநில அரசும், நெடுமாறன், வைகோ முதலான அட்டைக் கத்தி வீரர்களும் நடத்திக் கொண்டிருக்கும் விளையாட்டின் தொடக்கப்புள்ளி பிரபாகரனது தந்தை வேலுப்பிள்ளையின் சவ அடக்கத்தில் இருந்து துவங்குகிறது. ரகசிய தடுப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வேலுப்பிள்ளை இறந்த போது நெடுமாறன், வைகோ, திருமா என எல்லா தமிழின ஆர்வலர்களும் அறிக்கை விட்டனர். ஆனால் போரின் போது ஜெயலலிதா, கருணாநிதி என்று பிரிந்து நின்ற ஈழ ஆதரவாளர்களிடையே யார் ஸ்கோர் செய்வது என்ற போட்டி இருந்தது.
திருமா அறிக்கை விடுவதை விட அதிக பட்சமாக தனது தி.மு.க ஆதரவு எம்.பி பதவியைப் பயன்படுத்தி வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளச் சென்றார். அங்கே பார்வதியம்மாளோடு அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். பார்வதியம்மாளை தன்னிடம் அனுப்ப வேண்டும் என்று அவரது நண்பர்களான இலங்கை ஆட்சியாளர்களிடம் கோரிக்கையும் வைத்தார். இங்கே வந்து பார்வதியம்மாளை சந்தித்த அனுபவம் பற்றி பக்கம் பக்கமாக ஜுனியர் விகடனில் உருகி எழுதினார். அதில் “கனடாவில் வந்து பிரபாகரன் தன்னைச் சந்திப்பாரென” பார்வதியம்மாள் சொன்னதாக எழுதினார். திடமான சிந்தனையோடு அவர் இருப்பதாகக் கதைத்தார். பின்னர் அதே தொடரில் அவரிடம் தடுமாற்றம் இருந்ததாகவும் எழுதினார். ஆனால் ராஜபக்ஷேவுக்கு பொன்னாடை போர்த்தும் போது திருமா தடுமாறவில்லை என்பது முக்கியம்.
திருமா போய் பார்வதியம்மாளை சந்தித்து ஸ்கோர் செய்வதை பொறுக்க முடியாத கலிங்கப்பட்டி சிங்கமோ, “பார்வதியம்மாளை அழைத்து வந்து என் தாய் போல பார்த்துக் கொள்ளப் போவதாக” முழங்கினார். சாதாரண போராளிகளைப் பெற்ற மக்களெல்லாம் முகாமில் என்ன ஏதுமென்றே தெரியாமல் சாகும் போது கூட சிங்கம் தனது கர்ஜனையை விடவில்லை. கடைசியில் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கத்தின் முயற்ச்சியில் பார்வதியம்மாள் இலங்கையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். மலேசியா சென்றார்கள். கனடாவுக்குச் செல்ல விசா கேட்டு விண்ணப்பித்த போது கனடா பார்வதியம்மாவுக்கு விசா மறுத்தது.
பின்னர் இந்தியாவுக்கு விசா கேட்டு முயற்ச்சித்த போது ஆறு மாத மருத்துவ விசா வழங்கியது மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம். இது யாரோ ஒரு குமஸ்தாவின் தவறினால் கூட கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். தகவல் நெடுமாறனுக்கும், வைகோவுக்கும் தெரிவிக்கப்பட, அவர்கள் பார்வதியம்மாளை வரவேற்க இரவு பத்து மணிக்கு மேல் இரகசியாமாக சென்னை விமானநிலையத்திற்குச் சென்றார்கள். ஆனால் இவர்கள் செல்வதற்கு முன்பே விமான நிலையத்தின் வெளிப்பகுதியையும், பார்வையாளர் பகுதியையும், வரவேற்ப்புப் பகுதியையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை புறநகர் போலீசா கொண்டு வந்திருந்தனர்.
தலைவர்கள் எவரும் பார்வதியம்மாளை நெருங்க விடாமல் தடுத்த போலிசார், பார்வதியம்மாளையும் இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். நெடுமாறனும், வைகோவும் அழைக்கச் சென்றது பிரபாகரனின் தாயாரை. இவர்கள் ஏன் இதை பகிரங்கமாக அறிவிக்கவில்லை? “பார்வதியம்மாள் வருகிறார், வரவேற்க வாருங்கள்” என்றிருந்தால் கூட சில ஆயிரம் பேர் திரண்டிருப்பார்களே! தனியாகச் சென்று இவர்களால் சாதிக்க முடிந்தது என்ன? முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தில் தொடங்கி தமிழக மக்களின் அரசியல் எழுச்சியை எத்தனை முறை காயடித்த இவர்கள் பார்வதியம்மாளுக்கு செய்தது இறுதிக்கால உதவியா? அல்லது கையாலாகாதத்தனமா?
இந்தியாவில் சில அதிகாரிகள் மற்றும் டெல்லித்தலைவர்களை வைத்து ஈழத்தை நைசாக தள்ளுபடி விலையில் வாங்கலாம் என்று கணக்குப் போட்டவர்களல்லவா! அத்தகைய லாபி வேலைகள் காயடிக்கப்பட்டாலும் அதை ஒத்துக்கொள்ளாத வீரர்கள் எந்தக் காலத்திலும் தமிழக மக்களைச் சார்ந்து போராடியதில்லை. இங்கு கூட பார்வதியம்மாளின் வருகையை வைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க வாய்ப்பு இருந்தும், அப்படிச்செய்தால் இந்திய அரசு அந்த அம்மாளை திரும்ப அனுப்பிவிடும் என்றே இவர்கள் யோசித்திருக்கிறார்கள். ஆளும் வர்க்கங்களை மன்றாடி, தாஜா செய்து காரியத்தை சாதித்து விடலாம் என்பதுதானே முள்ளிவாய்க்கால் படுகொலையில் முடிந்தது?
___________________________________________________
சொல்லப்பட்ட காரணங்களும் சொல்லப்படாத உண்மைகளும்….
காரணம் – 1
2003இல் தமிழகத்தை விட்டு பிரபாகரனின் பெற்றோர் சென்ற போது அவர்கள் திரும்பினால் அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய புலனாய்வுத்துறைக்கு ஜெயலலிதா எச்சரிக்கைக் கடிதம் எழுதியவுடன் பார்வதியம்மாளின் பெயரையும் எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்து விட்டது இந்திய அரசு. அதனால்தான் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்பது கருணாநிதியின் வாதம்.
காரணம் – 2
செம்மொழி மாநாடு நடந்து முடிந்த கையோடு சூட்டோடு சூடாக மாநில சட்டமன்றத் தேர்தலை நடத்தி முடித்து விட வேண்டும் என்பது கருணாநிதியின் எண்ணம். அதற்காக விரைவில் அன்னை சோனியாவை சந்திக்கப் போகிறார் அய்யா. இந்த நேரத்தில் அதுவும் நெடுமாறன், வைகோ மூலமாக வரும் பார்வதியம்மாளை இங்கே அனுமதித்து ஏதாவது ஒன்று ஆகிப்போனால் தேர்தல் நேரத்தில் தேவையில்லாத இன்னொரு தலைவலியை சந்திக்க நேரிடும், என்று கருணாநிதியே தமிழகத்தில் சிகிச்சை அளிக்க எதிர்ப்புத் தெரிவித்தார். இது ஈழ ஆதவரளார்களிடையே சொல்லப்படும் காரணம்.
இந்த இரண்டு காரணங்களுமே உண்மையானவைகளாக இருக்கும் எல்லா சாத்தியங்களோடுதான் தமிழகத்தின் இரு பெரும் அரசியல் தலைமைகளும் இயங்குகின்றன. இந்த இரண்டு துரோக, வஞ்சக தலைவர்களின் அடிவருடிகளாக மாறிப் போன ஈழ ஆதரவாளர்களின் நிலையைப் பாருங்கள். முத்துக்குமாரின் மரணத்தின் போது ஜெ-வின் மனம் புணபடக்கூடாது என்று நினைத்த வைகோ இந்த விஷயத்திலும் கருணாநிதியைத் திட்டுவதோடு நிறுத்திக் கொள்கிறார். இன்னொரு ஈழ நடிகரான திருமாவோ கருணாநிதிக்கு இதில் தொடர்பில்லை எல்லாம் மத்திய அரசின் விளையாட்டு என்று பதறிப்போய் அறிக்கை விடுகிறார். அதையே கி.வீரமணியும் கருணாநிதியின் ஆதரவாளர்களும் செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திடீர் ஈழத் தயாக மாறிய ஜெ இப்போது கொடநாட்டில் செட்டிலாகிவிட்டார். கடிதம் எழுதாமல் கூட இவர்களை ஏமாற்றலாம் என்பதை தெரிந்து கொண்ட கருணாநிதியோ பார்வதியம்மாள் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டால் அதை பரிசீலித்து மத்திய அரசுக்கு வழக்கம் போல் கடிதம் எழுதத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்.
போருக்குப் பின்னர் இராணுவத்திடம் சரணடைந்த மக்களின் முதியவர்களின் கதை பரிதாபகரமானது. பலரும் நந்திக்கடலில் தங்கள் குடும்பத்தின் முதியவர்களை விட்டு விட்டு வந்த பரிதாபக் கதைகளும் உண்டு. பேரினவாத இலங்கை அரசு தமிழ் மக்களுக்காக அமைத்த வதை முகாம்களில், முதல் மூன்று மாதங்களின் சராசரியாக வாரம் ஒன்றுக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் இறந்து போயிருக்கிறார்கள். பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்று தெரியாத பல முதியவர்கள் இப்போது நல்லூர் கந்தசாமிக் கோவில் வாசலிலிலும், யாழ்பாணத்திலும் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
டூரிஸ்டுகளாக வரும் சிங்களர்களிடம் கையேந்தி நிற்கும் ஈழத் தமிழ் முதியவர்கள் குறித்தோ, போரில் கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் மக்கள் குறித்தோ பேசாத தமிழ் தேசியவாதிகள், பார்வதியம்மாளுக்காக பேசுவது அவர் பிரபாகரனின் தயார் என்பதால்தான். அதனால்தான் பார்வதியம்மாளை அபகரித்து தாங்கள் பேணுவதன் மூலம் தங்கள் மீது விழுந்துள்ள கறைகளைக் கழுவ நினைக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வீழ்ச்சிக்கு தாங்களும் ஒரு காரணமென்று அதாவது புலிகளுக்கு தமிழகத் தேர்தலை வைத்து நம்பிக்கையூட்டியவர்கள், பா.ஜ.கவும், ஜெயாவும் வந்தால் கூட அதே முடிவுதான் என்பதைக்கூட ஏற்காத புத்திசாலிகள் இப்போது பிரபாகரனது அம்மாவை வைத்து தங்களது தோல்வியை மறைக்க முயற்சிக்கிறார்கள்.
_____________________________________
அரசியல் நேர்மையின்மை
பிரபாகரன் இருக்கிறார், ஐந்தாவது ஈழப் போர் விரைவில் வெடிக்கும் என்று அவ்வப்போது அறிக்கை விடுவதுதான் நெடுமாறனின் அரசியல் அஜெண்டா. “கடைசி வரைப் போராடி களத்தில் நின்று போராளிகளும் பிரபாகரனும் மடிந்தார்கள்” என்று எழுதினால்கூட துரோகி என்கிற இவர்களிடம், “பிரபாகரன் எங்கே இருக்கிறார், எப்போது வருவார்” என்று கேட்டால், “அதற்குத்தான் நாங்களும் காத்திருக்கிறோம்” என்று துவக்கத்தில் சொன்னவர்கள், இப்போது “பிரபாகரன் தமிழ் மக்களின் இதயங்களில் வாழ்கிறார், அவர் நேதாஜியை நேசித்தார், நேதாஜி போலதான் அவரும்” என்று அடுத்த ஏமாற்று தந்திர அஸ்திரத்தை ஏவுகிறார்கள்.
ஈழ மக்களின் நிராதரவான வாழ்வு பற்றிய மவுனம், பிரபாகரன் வருவார் என்று அவருக்கும் போராளிகளுக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையைக்கூட வழங்காமை என்று புலிகள் ஆதரவுக் கண்ணோட்டத்தின்படியே கூட ஒட்டு மொத்த அரசியல் வீழ்ச்சிக்கே இவர்கள்தான் காரணம். பத்தாம் பசலித்தனமான இவர்களின் நடவடிக்கையைப் புரிந்து கொண்ட இந்திய அரசோ, இவர்களை டீல் செய்வது ஈஸி என்று ஏகத்துக்கும் ஆட்டம் காட்டுகிறது. பாவம் அறிக்கையைத் தாண்டி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே தங்கி நிற்கிறார்கள் அறிக்கை நாயகர்கள்.
இந்திய ஆளும் வர்க்கங்களை நம்பித்தான் ஈழத்தின் தலைவிதி இப்படியான துயர நிலைக்கு வந்திருக்கிறது என்றால் அதில் பாதி பங்கு புலிகளுக்கும், மீதி பங்கு அவர்களின் குத்தகை ஆதரவாளர்களான இந்த அறிக்கை நாயகர்களுக்கும்தான் சேரும். தமிழக மக்களை அரசியல் எழுச்சி மூலம் அணிதிரட்டி டெல்லியைப் பணியவைக்கலாம் என்ற நம்பிக்கை அற்ற புரோக்கர் அரசியல்வாதிகள் பார்வதியம்மாள் என்ற மூதாட்டிக்கு மட்டும் எப்படி சிகிச்சை வழங்க முடியும்? முதலில் எல்லாவகை நோய்களையும் கொண்டு அரசியல் நடத்தும் இந்த அறிக்கை நாயர்களை தமிழக மக்களும், ஈழ மக்களும் கண்டு கொள்ளவேண்டும்.
__________________________________________
டோண்டு ராகவனின் திமிர் பற்றி…….
பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய செயலை பதிவுலகில் அனைவரும் கண்டிக்கும் போது அக்மார்க் பார்ப்பனரான டோண்டு மட்டும் அதை ஆதரித்து சோவின் குரலைப் பிரதிபலிக்கிறார். இங்கே டோண்டு ராகவனை பதிவுலகில் பலரும் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர்களது கண்டிப்பில் கூட அரசியலுக்குப் பதில் ஒரு முதிய மூதாட்டியைக் கூட மனிதாபிமானம் இல்லாமல் டோண்டு வெறுப்பதாக பேசுகிறார்கள். ஆனால் டோண்டுவுக்கு மனிதாபிமான ரீதியான வெறுப்பு இப்போதா புதிதாக வந்திருக்கிறது?
அவர் பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இசுரேலைப் புகழ்கிறார். குஜராத்தில் இந்துமத வெறியர்கள் மோடி தலைமையில் முசுலீம் இன மக்களைப் படுகொலை செய்த போது மோடியை ஆதரிக்கிறார். டாக்டர் ருத்ரன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறார் என்பதால் அவரை மனநலமற்ற மருத்துவர் என்று இழிவாகப் பேசுகிறார். ஓட்டல் தொழிலாளிகள் சலிப்பாக வேலை செய்தால் பாய்ந்து பிடுங்குகிறார். நித்தியானந்தா விவகாரம் சந்தி சிரிக்கும் போது பெரியார் மணியம்மை திருமணம் பற்றி நரித்தனத்துடன் எழுதுகிறார். இப்படி எல்லா சமூகப் பிரச்சினைகளிலும் மக்கள் விரோத சிந்தனையைக் கொண்டிருக்கும் டோண்டு, பார்வதி அம்மாளின் பிரச்சினையில் அவர் பார்வை படி சரியாகத்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த பார்வையின் அரசியல் உள்ளடக்கத்தைப் பார்க்காமல் வெறும் மனிதாபிமான முறையில் அவரைக் கண்டிப்பதனால் டோண்டுகளின் கொழுப்பு குறையப் போவதில்லை.
__________________________________________
நளினி & பார்வதியம்மாள் விடுதலைக்கு – கருணை கோராதே, அரசியலாக்கு…….!!
மிகப் பெரிய மனிதப் படுகொலையை துணை நின்று நடத்தி முடித்து விட்டன, இந்திய இலங்கை அரசுகள். இனிமேலாவாது இந்தியா தமிழ் மக்கள் மீது கருணை காட்ட வேண்டும், காட்டும் என்பதுதான் இவர்களின் கோரிக்கை. அதனால்தான் இவர்கள் தொடர்ந்து ஈழம் அமைவது இந்தியாவின் நலனுக்கு உகந்தது என்றும். அமெரிக்காவுக்கு இஸ்ரேல் எப்படியோ அப்படி இந்தியாவுக்கு ஈழம் என்றும், ஈழத்தை ஒரு அடியாள் தேசமாக கற்பனை செய்கிறார்கள். இதற்கெல்லாம் இந்தியா மசியுமா, என்ன?
இந்தியாவின் அடியாளாக ஈழம் இருப்பதை விட, இந்திய முதலாளிகளின் சந்தைக்காக ஒன்றுபட்ட இலங்கைதான் தேவை என்பது என்றோ முடிவாகிவிட்ட விசயம். மற்றபடி பேரினவாதத்தின் பிடியில் சிக்கித் திணறும் ஈழ மக்களின் கண்ணீரெல்லாம் இந்தியாவிடம் செல்லுபடியாகாது. அப்படியான கருணை எதையும் மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் மீது இந்தியா காட்டாத போது அவர்களின் நிலங்களை குறிவைத்து போரையும் நடத்தி வருகிறது. இப்படியிருக்க நாட்டின் இன்னொரு எல்லையோரச் சமூகமான ஈழத் தமிழ் மக்களிடம் மட்டும் எப்படி இந்தியா கருணை காட்டும் என்று இவர்கள் நினைக்கவில்லை. இம்மாதிரி சிந்தனைப் போக்கில் இருந்துதான் நளினி மீது சோனியா கருணை காட்ட வேண்டும் என்ற எண்ணமும் பிறக்கிறது.
நளினியின் விடுதலை மறுக்கப்படும் ஒவ்வொரு வேளையும் ராஜீவ் கொலையை பற்றி நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஈழத்தில் நரவேட்டையாடிய பாசிச ராஜீவின் கொலை என்பது அதன் எதிர்வினையே என்பதை முகத்திலறைந்து சொல்ல வேண்டும். ராஜிவ் காந்தியை யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கு பசப்பத் தேவையில்லை. ஆம். புலிகள்தான் கொன்றார்கள். ஆனால் அதன் மூலத்தை விசாரிக்க வேண்டும் என்று நாம் கோரினால் இறுதியில் ஈழத்திற்கு படை அனுப்பிய ராஜீவும், இந்திய அமைதிப் படை இராணுவத்தின் அதிகாரிகளும்தான் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்படவேண்டியவர்கள் ஆவார்கள்.
இதை அரசியல் ரீதியாக எழுப்பி, அதற்கு ஆதரவாக தமிழக மக்களை அணிதிரட்டி போராடும் போதே நளினியை மட்டுமல்ல, அநியாயமாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் மற்ற போராளிகளையும் விடுவிக்க முடியும். மாறாக நளினி இருபது வருடம் சிறையில் இருந்துவிட்டார், ஏதோ கொஞ்சம் பாத்து விடுதலை செய்யுங்கள் என்று மனிதாபிமான முறையில் பேசுவதால் எந்தப்பயனும் இல்லை. இதைத்தான் கலிங்கப்பட்டி சிங்கம் வைகோ முதல் அரசியலே தெரியாமல் பிதற்றும் உண்மைத்தமிழன் வரை பலரும் பேசுகிறார்கள். இந்த மனிதாபிமான முகமூடிக்குள் ஒளிந்திருப்பது இந்திய அடிமைத்தனம். இந்த அடிமைகளை நம்பி ஈழம் மட்டுமல்ல, நளினியும் விடுதலை அடைய முடியாது.
நளினியை விடுதலை செய்யக் கோரும் குரல்கள் இனி எழக்கூடாது என்பதற்காகத்தான் சிறையில் செல்பேசி சிக்கியதாக ஒரு புதுக்கதையை கிளப்பியிருக்கிறார்கள். இதன்படி நளினிமேல் புதிய பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு அவரது நிரந்தர சிறை உறுதி செய்யப்படும். மனிதாபிமான முறையில் குரல் எழுப்பியவர்கள் கூட இந்த சட்டப்படியான தண்டனை நீட்டிப்பை எதிர்க்க முடியாதல்லவா! அரசியலற்ற குரல்களை அரசியல் சட்டப்படியே முடக்கிவிட்டார்கள்.
எனவே நளினி பிரச்சினையில்அரசியல் நேர்மையோடு அணுகாமல் சோனியாவிடமும், கருணாநிதியிடமும், மனுக் கொடுப்பதால் ஆகப் போவது எதுவும் இல்லை. நளினியிடமோ, பார்வதியம்மாளிடமோ இவர்கள் கருணை காட்டப் போவதும் இல்லை. அரசு பயங்கரவாதம் உங்களை மென்மையாக அதட்டிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்றால் அறிக்கைதான் பதிலாக வருகிறது. ஆமாம் அறிக்கைகள்…… அறிக்கைகள்….. அறிக்கைகள்……….ஆமாம் இவர்கள் அறிக்கைகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நாம் அவற்றினைப் புறந்தள்ளி அரசியலைப் பேசுவோம். அநியாயத்தினை வெல்வோம்.

நன்றி- வினவு இராவணன்

Tuesday, April 20, 2010

மானாட மயிலாட அளவிற்கேனும் செம்மொழி மாநாடு தாக்கத்தை ஏற்படுத்துமா ?





இதில் வெட்கப்பட எதுவுமில்லை.வண்ணத்தொலைக்காட்சி என்றால் வரிசையில் நிற்கிறோம்,வாக்குக்கு பணம் என்றாலும் கொஞ்சமும் கூச்சமில்லாமல் கூடுதலாய்க் கொடுக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கிறோம்


தாய்த்தமிழ்நாட்டில் மானமும் அறிவும் இப்படித்தான் மலினப்பட்டுக்கிடக்கிறது.இன உணர்வும், மொழி உணர்வும் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் குறைந்து வருகிறது.ஆனால் உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களால் இனப்பற்றும், மொழிப்பற்றும் விஞ்சி நிற்கும் இனமாக தமிழினம் அடையாளம் காணப்படுகிறது.இலக்கிய வளம், தனித்து இயங்கும் ஆற்றல், வேர்ச்சொற்கள், சொல்வளம் ஆகியன தமிழ் மொழியின் சிறப்பியல்புகளாக அடையாளப்படுத்தப்படுகின்றன.இத்தகைய மொழியும், அதனைப் பேசுகின்ற இனமும் பாரம்பரியம் மிக்க வரலாற்றைத் தன்னகத்தே கொண்டதென்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.


நம் தமிழ்மொழி விழா எடுத்துக் கொண்டாடப்பட வேண்டிய மொழி, பெருமைப்படுத்தப்பட வேண்டிய மொழி என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.ஆகவே உலக செம்மொழி மாநாடு நடைபெறுவதில் நமக்கு எவ்வித எதிர்ப்புமில்லை.ஆயிரம் வெளிநாட்டு தமிழ் அறிஞர்கள், ஆயிரம் கவிஞர்கள், ஆயிரக்கணக்கில் ஆய்வுக் கட்டுரைகள்,ஐநூறுப்பக்கங்களில் சிறப்பு மலர், தமிழ்ப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நடனங்கள், இலட்சக்கணக்கில் பார்வையாளர்கள் என உலக செம்மொழி மாநாடு களைகட்டத் தொடங்கி விட்டது.

முத்தமிழுக்கு நான்காம் தமிழான கணினித் தமிழும் அணி செய்கிறது.இந்தத் திருவிழாவுக்கு இடையில் தமிழ்மொழியை நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியமாகிறது.தமிழ்த் தாயின் நேரடி வாரிசுகளாய்ப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்கள் அரியணையில் அமர்ந்து நாற்பத்து மூன்று ஆண்டுகள் மறைந்தோடி விட்டன.எழுத்தில், பேச்சில், வசனத்தில், கவிதையில் எங்கும் தமிழ்வாசம் மணக்க மணக்க காட்சிகள் அரங்கேறின.‘கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி’ எனும் வசனம் காலங்காலமாய் எதிரொலித்துக் கொண்டே வருகிறது.

இத்தகைய வரலாற்றை உள்ளடக்கிய நம் தமிழ்மொழி எங்கெல்லாம் இருக்கிறதெனக் கேள்வி எழுப்பிப் பார்த்தால் எஞ்சி நிற்பது வேதனை மட்டுமே தான்!

நீதி மன்றத்தில் வழக்கு மொழியாகத் தமிழ் இல்லை?

கடவுளின் சன்னதியில் பூசிக்கும் மொழியாகத் தமிழ் இல்லை?

கடைப்பலகைகளில் தமிழ் இல்லை?

பாட சாலைகளில் பயிற்று மொழியாகத் தமிழ் இல்லை?

கணிப்பொறியில் தனித்தியங்கும் ஆற்றல் கொண்ட மொழியாகத் தமிழ் இல்லை?

இந்தியாவின் ஆட்சி மொழியாகத் தமிழ் இல்லை?

இப்படி இருக்க வேண்டிய இடங்களிலெல்லாம் தமிழ் இல்லை.ஆனால் மேடைகளில் புகழ் மாலைகளில் தமிழ் தாராளமாய்க் கொஞ்சி விளையாடுகிறது.ஆங்கில ஆட்சியாளர்களிடமிருந்து நூல்கள் பதிப்பிக்கும் உரிமை நம் கைக்கு வந்து சுமார் எழுபது ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன.ஆனால் நம்மிடம் கால வரிசைபடி தமிழ்நூல்களின் பதிப்பு வரலாறு இல்லை.தொல்காப்பியம் உள்ளிட்ட நமது பழம் இலக்கியங்களின் ஆய்வியல் நோக்கிலான வரலாறு நம்மிடம் இல்லை.நமது இலக்கியங்கள் உருவான காலம் குறித்த பரந்து பட்ட ஆய்வுகள் இல்லை.தமிழ்மொழியை உலக மொழிகளோடு ஒப்பாய்வு செய்யும் ஆய்வு மையங்கள் இல்லை.அதற்கான முயற்சிகள் கூட இல்லை.

இதையெல்லாம் செய்து முடித்து விட்டு தான் விழா எடுக்க வேண்டுமா? என்ற கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.ஆனால் இதைக்கூட செய்ய முடியாத நாம் விழா எடுத்து என்ன செய்து விடப்போகிறோம் என்பது தான் நம் கேள்வி.

இப்படி தமிழின் உரிமைகள் நிலைநாட்டப்படாத சூழல் மட்டுமல்ல, தமிழரின் உரிமைகளும் கேள்விக்குள்ளாகிக் கொண்டிருப்பது குறித்தும் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழரின் ஆற்று நீர் உரிமை காவிரியில் தொடங்கி, முல்லைப்பெரியாற்றில் வேகம் பிடித்து கிருட்டிணாவில் வந்து நிற்கிறது.நல்லவேளை கடலில் மட்டும் சிக்கலில்லை என நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை.அங்கோ இலட்சோப இலட்சம் மீனவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குள்ளாகியுள்ளது.

தமிழுக்கான உரிமைகளும் நிலை நாட்டப்பட வில்லை, தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளும் நிலை நாட்டப்பட வில்லை.ஆனால் இது பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் வெட்கப்படாமல் விழா எடுக்க முனைந்துள்ளோம்.தமிழுக்கு விழா எடுக்கும் உரிமை நமக்கு மட்டும் சொந்தமானதா? என்பதனை எண்ணிப்பார்க்க வேண்டும்.இந்த பூமிப்பந்திலுள்ள எல்லா நாடுகளிலும் தமிழர் இருக்கின்றனர்.

இணையத்தில் தமிழ்மொழி வனப்புடன் உலா வருவதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தான் காரணம் என்பதனை மறுக்க இயலுமா?

மொழி மேம்பாட்டிற்கு அவர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை மறைக்க இயலுமா?

தமிழ்மொழியை உலக மக்கள் அறிந்திட ஏதுவாக தமிழ்மொழியின் சிறப்பை இணையத்தில் ஆங்கிலத்தில் தொகுத்து வருவதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தானே?

தமிழ் என்பது தமிழ்நாட்டுத் தமிழரின் தனிச்சொத்து அல்ல.நாம் மட்டும் முடிவு செய்து கொண்டாடுவதற்கு நமது குடும்ப விழாவும் அல்ல.உலகெங்கும் பரவி வாழும் தமிழ் மக்களின் நலனை மையப்படுத்தியே கொண்டாட்டங்கள் அமைய வேண்டும்.ஈழத்தமிழர்கள் மீளாத்துயரிலிருந்து இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுக் கொண்டிருக்கிறார்கள்.நமது உறவுகள் துயரத்தில் தவிக்கையில் விழா எடுப்பது கல் நெஞ்சம் கொண்டோரையும் பதைபதைக்க வைக்கும் நிகழ்வல்லவா?

காலங்காலமாக பழம் பெருமை பேசுவதிலேயே சுகம் கண்டு போன சமூகமாகத் தமிழ்ச்சமூகம் மாறிவிட்டது.இந்த இனம் இப்படியே இருக்க வேண்டுமென இனப்பகைவர்கள் மட்டுமல்ல நம்மை ஆள்வோரும் நினைக்கின்றனர்.

தமிழர் கேளிக்கைகளில் மூழ்கடிக்கப்படுகின்றனர்.போரைக்கூட வேடிக்கைப்பார்கின்ற நிலைக்குத் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.

செம்மொழி மாநாடு மானாட மயிலாட நிகழ்ச்சியின் அளவுக்கானத் தாக்கத்தையாவது உருவாக்குமா என்பது சந்தேகமே.

அண்மையில் இலட்சக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் குருதி காயும் முன்பு இப்படி ஒரு மாநாடு தேவையா என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது.திருவிழா ஆரவாரத்தில் இந்தக்கேள்வி ஆள்வோர் காதுகளில் விழாது தான்.ஈழக்கொலைகள் தொடர்பாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறலை இன்னமும் விடாமல் எழுப்பிக்கொண்டே உள்ளன.

வதை முகாமிலிருந்து இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் மீளவே இல்லை, காணமல் போனோர் தொடர்பில் தகவலே இல்லை.ஆனால் நாம் மொழிக்கு மாநாடு கூட்டுகிறோம். அதில் உலகெங்குமிருந்து கவிதைகளோடும், ஆய்வுக்கட்டுரைகளோடும் புறப்பட்டு விட்டான் மறத்தமிழன்.

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையைப் பன்னாட்டு நீதிமான்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.ஆனால் நாம் தமிழுக்கு விழா எடுப்பதில் ஆர்வமாக உள்ளோம்.இதனையெல்லாம் வருங்கால தலைமுறை மன்னிக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல, நிகழ்காலம் நிச்சயம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.

தமிழ்மொழி பேசும் தமிழ்நாட்டு தமிழனின் வாழ்விலும் மகிழ்ச்சியில்லை,புலம் பெயர்ந்து வாழும் தமிழ்மக்களின் வாழ்நிலையிலும் ஏற்றமில்லை.ஆனால் மொழி பேசும் நா பற்றி கவலைபடாமல் மொழியைப் பாதுகாக்க போர் மறவர்கள் களம் கண்டுள்ளனர்.

இத்தகைய அறிவார்ந்த மொழி வளர்ச்சியை உலகில் வேறெந்த இனமும் முன்னெடுத்திருக்குமா? என்பது சந்தேகம் தான்.நவீன நீரோமன்னர்கள் புகழ் மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்கள்.புலவர் படை பரிசில் பெற வசனங்களோடும், கவிதைகளோடும் செம்மொழி மாநாட்டில் அணி திரள இருக்கிறார்கள்.இதில் வெட்கப்பட எதுவுமில்லை.

நன்றி- தமிழ் ஆராய்ச்சி

Monday, April 19, 2010

நாம் ஆடுகள் அல்ல, புலிகள் -கண்மணி



எல்லோரும் வந்து தங்கிவிட்டுப்போக இந்தியா தர்ம சத்திரம் அல்ல என வாய்துடுக்கு சுப்பிரமணியசுவாமி சொல்லியிருக்கிறார். இந்த கோமாளி எப்போதெல்லாம் வாய் திறக்கிறாரோ அப்போதெல்லாம் ஏதோ ஒரு இடத்தில் கலவரம் வெடிக்கிறது. எமது தாய் மண்ணுக்கு, எமது தாய் வருவதற்கு இந்த சுப்பிரமணிய சுவாமிக்கு எங்கு வலிக்கிறது என்று புரியவில்லை. நாங்கள் இந்தியாவை நம்பி, எமது தாய் இங்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைக்கவில்லை. எங்கள் தமிழ்நாட்டை நம்பித்தான் இந்த சிகிச்சைக்காய் அவரும் இங்கு வந்தார். ஆனால் எங்கள் தாயைப் பார்த்து, எல்லோரும் தங்கிவிட்டுப்போக இந்த மண் தர்ம சத்திரம் அல்ல என்று சொன்னால், நாங்கள் சொல்கிறோம், நீ எங்கள் மண்ணில் வருவதற்கு எங்கள் தமிழ் மண் ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.

வந்தாரை வாழ வைத்த எமது தமிழினம் வக்கற்றுப் போனதால் சுப்பிரமணிய சுவாமி போன்றோருக்கு வாய்துடுக்கு வான்வரை நீள்கிறது. தமிழனுக்கு சுரணை இருக்காது என்கின்ற தைரியம் இப்படியெல்லாம் பேச வைக்கிறது. ஆனாலும்கூட, அதையும் கேட்டுக் கொண்டு எமது இனம் அமைதி காக்கிறது என்றால், எமது இனத்தில் இருந்த மானம் எங்கே போனது? கவரிமான் போன்று மானத்தோடு வாழ்ந்த மாவீரர்கள் அல்லவா நாம். தமிழர்களின் முகவரியை உலகிற்கு சொன்ன ஆற்றல் வாய்ந்த தமிழ் குல முதல்வன் எமதுதேசிய தலைவன் இந்த மண்ணிற்கு வர காரணமான அந்த மகத்துவம் மிக்க தாயை, கண்டவர்கள் எல்லாம் என்று சொல்வதற்கு சுவாமிக்கு எங்கிருந்து தைரியம் புறப்பட்டு வந்தது. இதற்கு, நமக்குள் இருக்கும் ஒரே காரணம், நாம் இந்தியர் என்கின்ற தேசிய அடையாளத்தை சிலுவையை சுமப்பதுபோல் சுமந்து கொண்டிருப்பதுதான்.

தேசிய இனம், தமிழினம் என்கின்ற அடையாளத்தை நாம் பெற்றுக் கொள்ளும்போது, நாம் தமிழர்களுக்கு விரோதமாக எதைப் பேசினாலும் தமிழர்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்கின்ற இயல்பான அச்ச உணர்வு சுவாமி போன்றவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கும். நாம் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதால்தான், கண்ட நாய்கள் எல்லாம் நமது இனத்தை இவ்வளவு தவறாக விமர்சிப்பதற்கு உள்ளாக்கப்படுகிறோம். ராஜீவ்காந்தி என்று இறந்தாரோ, அன்றிலிருந்து உடை மாற்றாமல், உணவு உண்ணாமல், குளிக்காமல், மூலையில் உட்கார்ந்து முனங்கிக் கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரியவராக சுப்பிரமணியசுவாமி இருக்கிறார்.

அதனால் ஈனசுவரத்தில் அடிக்கடி முனகுகிறார், ராஜீவ்காந்தி கொல்லப்பட்டது தேசிய பயங்கரவாதம் என. இதன் அடுத்தக்கட்ட நிகழ்வுதான் கண்டவர்கள் எல்லாம் இந்த மண்ணில் கால் மிதிக்கக்கூடாது என்கின்ற சொற்கள். தமிழ் தேசியத்திற்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்துவதாக உணர்கிறோம். இது ஆரம்ப நிலைதான். ஒருவேளை இப்படிப்பட்ட சொற்கள் தொடருமேயானால், அவையே ஒருகாலத்தில் நம்மை அடிமைகளாக ஒடுக்குவதற்கு அடித்தளமாக அமையலாம். இந்த நிலையிலிருந்து நம்மை மீண்டெழுவதற்கு தயாராக ஒவ்வொரு அசைவும் அமைய வேண்டும். அதற்கு முதலில் நாம், நமக்குள் நமது இன அடையாளத்தை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்கள் என்கின்ற அடிப்படை கட்டமைப்பை உளரீதியாக உணரவேண்டும். நமக்குள் இருக்கும் சாதிய அடையாளங்களை தகர்த்தெறிய வேண்டும்.

அப்படி சாதிய அடையாளங்கள் நம்மேல் சுமையாக இல்லாதபோது, நாம் தமிழர் என்கின்ற உணர்வு நமது எண்ணங்களில் மேலோங்க தொடங்கிவிடும். நமக்குள் சாதிய சீரழிவு சிந்தனை ஒழிக்கப்படும்போது, நாம் தமிழர் என்ற ஓர்மை பண்புக்குள் நிலைநிறுத்தப்படுவோம். இந்த நிலையைத்தான் தமிழீழத்திலே நமது தேசிய தலைவர் மேற்கொண்டார். சாதியத்தை வேரறுப்பதிலே தான் நமது தமிழர் இனப்பண்பு ஓங்கி வளரும் என்பதை அவர் தெள்ளத்தெளிவாக உணர்ந்த காரணத்தினால், தமிழீழ மண்ணில் சாதியம் எரித்தழிக்கப்பட்டது. அங்கே தமிழர் பண்பு நலன் போற்றி பாதுகாக்கப்பட்டது. சாதியம் இல்லாத தமிழர் நலன் தமிழ் தேசிய அடையாளத்தை உலகிற்கே பெரும் கதிராய் பறைசாற்றியது.

ஆகவே தான் தமிழ்நாட்டில் நமக்குள் இருக்கும் சாதிய அடையாளத்தை தகர்த்து, தமிழர்கள் என்கின்ற ஒரே குடையின்கீழ் வரும்போது, இங்கே நமக்கெதிரான ஆணவ சக்திகள் அடியோடு அடித்து நொறுக்கப்படும். அடக்குமுறை ஆற்றல்கள் கொடும் தீயில் எரிக்கப்படும். நாம் பிரிந்திருப்பதுதான் மற்றவர்களுக்கு பெரும் துணை புரிகிறது. எந்த நிலையிலும் தமிழன் ஒன்றிணைய மாட்டான் என்கின்ற தைரியம் மற்ற இனத்தவர்களுக்கு இருக்கின்ற காரணத்தால், வந்தேறிகள் நம்மைப் பார்த்து வரக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு துணிவு வந்திருக்கிறது. இந்த நிலையை மாற்றி அமைக்கப்போவது நீ, நான் என சுட்டிக்காட்டாமல் நாம் இணைந்து பணியாற்றுவோம்.

தமிழர்களுக்கான ஒரு நாடு இருந்திருக்குமேயானால், இப்படி ஒரு தமிழ் தாய், மருத்துவத்திற்குக்கூட வரமுடியாத அளவிற்கு மறுதலிக்க முடியுமா? எப்படி இது சாத்தியம். இதற்கு ஒரே காரணம், நாம் இந்தியாவின் அடிமைகளாக இருப்பதுதான். நமக்கான உரிமையை நாம் கையேந்தி யாசிப்பதால்தான். நான் தமிழன் என்ற மனப்போக்கு நமக்குள் உயர்ந்தோங்கட்டும். நாம் தமிழர்கள் என்கின்ற பக்குவம் நமக்குள் செழித்தோங்கட்டும். நமக்கான ஒரு நாடு என்கின்ற உறுதி நமக்குள் எப்போதும் நிலைத்திருக்கட்டும். உலகில் எங்கோ ஒரு மூலையில் வாழ்ந்தாலும், அவன் நம் இனத்தை சார்ந்தவன் என்கின்ற உணர்வு நமக்குள் அடிப்படையாய் இருக்கும்போது, எங்கே யாருக்கு என்ன தீங்கு என்றாலும், அங்கே நமது கரம் நீளும்.

நமது மொழி பேசும் அடையாளத்தை நாம் புரிந்து கொள்வோம். நமது மொழிக்கு சாதி இல்லை என்று துணிந்து சொல்வோம். காரணம் சாதி என்ற சனியன்தான் நம்மை தடுமாற வைக்கிறான். சாதியத்திற்கெதிரான சமர் தமிழர்களின் முதல் சமராக இருக்கட்டும். இதைத்தான் நமது தேசிய தலைவர் நமக்கு கற்றுக் கொடுத்தார். அவர் கற்றுக் கொடுத்தார் என்று சொல்வதைவிட, தமிழீழ மண்ணில் அவர் செய்து முடித்தார். தமிழர்கள் ஒன்றுபடுவதற்கு சாதியமே குறுக்கே இருப்பதால், சாதியத்தை உடைத்தெறிய வேண்டும் என்கின்ற உறுதி தேசிய தலைவரின் மனங்களிலே ஆழமாக இருந்த காரணத்தால், அங்கே அசைக்க முடியாத பேராற்றலை, உலகையே அசைத்துப் பார்க்கும் பேரோசையை அவரால் எழுப்ப முடிந்தது.

அந்த நிலை தமிழ் மண்ணிற்கு வராதா? என்றால் வரவைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ், தமிழர் என்கின்ற உணர்வு கொண்ட இளைஞர்களின் கரங்களிலே அது ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. விமான நிலையத்திலே அன்னையர் தடுக்கப்பட்டதை அந்த நிமிடமே நாம் உறுதியோடு எதிர்த்து, உலகிற்கே சொல்லி இருப்பதற்கான வாய்ப்பை உருவாக்கி இருக்கலாம். அடுத்த நிமிடமே உலக ஊடகங்களில் அதை தெளிவுப்படுத்தி இருக்கலாம். ஆனால் ஊடகங்கள் அடுத்தவன் மனைவியை அபகரித்த செய்தியைத்தான் எட்டுக் காலங்களில் போட்டு மகிழ்கிறது. நடிகைக்கு நடந்த திருமணத்தை வண்ணத்தில் அச்சிட்டு, வாசல்தோறும் வீசுகிறது.

கள்ளக்காதலை கடைகளில் தோரணமாய் தொங்கப்போட்டு விற்கிறது. அடித்துக் கொலை செய்வதை அடுக்கடுக்காய் வர்ணித்து எழுதுகிறது. சாமியார்களின் லீலைகளை பலநாட்கள் பிடித்துக் கொண்டு தொங்குகிறது. எங்கெல்லாம் சாமியார்களின் இருட்டறை இருக்கிறதோ, அங்கெல்லாம் தம் கரங்களை பாய விடுகிறது. தம் கண்களை மேய விடுகிறது. இதுதான் ஊடகம். பார்வதி அம்மையார் தடுக்கப்பட்டார் என்கின்ற செய்தியை, ஒருவேளை தமிழ் ஊடகங்கள் நினைத்திருந்தால், தமிழகத்திலே ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உறுதுணை புரிந்திருக்கலாம். ஆனால், அது ஐபிஎல் விளையாட்டை பார்த்து, அங்கலாய்த்து, மகிழ்ந்து களிகூர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இங்கே ஒரு மனிதநேயம் செத்துக் கொண்டிருப்பதை, செத்துக் கொண்டிருப்பது என்ற வார்த்தைக்கூட சரியானதல்ல, மாந்தநேயம் கொல்லப்பட்டதை குறித்து அக்கரை செலுத்தாத ஊடக தர்மம் இங்கே ஊஞ்சலாடுகிறது. தமிழனுக்கென்று ஊடகம் இல்லை. தமிழனுக்கான ஊடகம் இல்லை. ஆகவேதான் ஊடகங்களும் அவை வர்த்தகத்திற்கு துணைபோய் கொண்டிருக்கின்றன. தமிழர்களின் எழுச்சியை அடக்கச் செய்ய, தமிழர்களின் மனசாட்சியை உலுக்கி எழுப்புவதை தவிர்க்க செய்ய, அவை நடிகைகளின் அறைகுறை ஆடைகள் புகைப்படங்களை அட்டவணைப்போட்டு தருகிறது. சாமியார்களின் லீலைகளை வரலாறு என வாசித்துக் காட்டுகிறது. இதெல்லாம் நாம் பிரிந்திருப்பதால் மட்டும்தான் தொடர்ந்து நிகழ்கிறது.

இப்படிப்பட்ட தமிழர் விரோத போக்குகளை துடைத்தெறிய, அழித்தொழிக்க நமக்குள் எழ வேண்டிய ஒரே நிகழ்வு, நாம் தமிழர்களாக ஒன்றிணைவதுதான். தமிழர்களாக ஒன்றிணைவதிலேதான் நமது நலன் காக்கப்படும். ஒருவேளை நாம் இப்போது இணைவது நமக்கு பயன்தராமல் போகலாம். ஆனால் நம்முடைய சந்ததி பெரும் சிறப்புடன் வாழ அது பேருதவி புரியும் என்பதை புரிந்து கொள்வதற்கான காலங்களைத்தான் வரலாறு நமக்கு சொல்லித்தருகிறது. தொடர்ந்து போராட வேண்டிய தருணம் பக்கத்தில் வந்திருக்கிறது. எப்படிப் போராட வேண்டும் என்பதை சொல்லித்தரும் அற்புதம் தமிழ் மண்ணிலே நிகழ்ந்திருக்கிறது. நாம் தொடர்ந்து அடக்கப்படுவதற்கு ஆடு மாடுகள் அல்ல. பாபாசாகேப் அம்பேத்கர் சொல்வதைப் போன்று, அவர்கள் சிங்கங்களை பலிகொடுக்க மாட்டார்கள், ஆடுகளை தான் பலிகொடுப்பார்கள்.

நாம் ஆடுகள் அல்ல. புலிகள் என்பதை நமது எதிரிகள் புரிந்து கொள்ள வேண்டும். நம்மை புலிகள் என அழைக்க நமக்குள் துணிவு வர வேண்டும். அது நமது இனத்தை, நமது மொழியை, நமக்கான உரிமையை, நமது அடையாளத்தை, நமது மகிழ்வை, நமது வாழ்வை உறுதி செய்யும். அந்த உறுதி நிறைந்த செயலுக்காக உழைக்கும் களத்திற்கு நாம் வந்திருக்கின்றோம். அதை செய்வதற்கு தவறக்கூடாது. இப்போது ஒருவேளை நாம் தவறிழைத்தால், எப்போதுமே நம்முடைய எதிர்கால வாழ்வு இருளாகக்கூடிய வாய்ப்பு வந்துவிடும். நமது துணிவு, நமக்குள் புதைந்துள்ள பேராற்றல், இந்த சமூகத்திமீது நம் தமிழ் இனத்தின்மீது நமக்குள் உள்ள அக்கரை, நமக்குள் உள்ள அன்பு வெளிப்படுவதற்கான நிகழ்வுகளாகத்தான் காலம் நமக்கு சில நிகழ்வுகளை நடத்திக் காட்டுகிறது. இதன்மூலம் பாடம் கற்போம். நாம் தமிழர்கள் என்பதை உயர்த்திப் பிடிப்போம்.

Sunday, April 18, 2010

அன்னை பூபதி நினைவு நாள்...

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி. அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 – ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர்.

கிழக்கு மாவட்டத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு என மாவட்டங்கள் இருந்த நிலையில், சிங்களக் குடியேற்றத்தினால் மேலும் ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டு, சிங்களப் பெயர் வைத்து, “திகாடுமல்லை’ என்ற நாடாளுமன்றத் தொகுதியாக உருப்பெற்றது. இந்த மட்டக்களப்பு மாவட்டம் தமிழீழப் பகுதியின் நெற்களஞ்சியமாகும்.

இம்மாவட்டத்தில் அமைதிப்படை 1988 ஜனவரி 2-இல் பெரியதொரு அளவில் தனது தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. இந்தத் தேடுதல் வேட்டையில் புலிகள் என்று கூறி 2500 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துப் போகப்பட்டார்கள். இவர்களில் 800 பேர் காங்கேயன்துறை முகாமில் அடைக்கப்பட்ட நிலையில் மீதமுள்ளோர் விவரம் அறியக் கிடைக்கவில்லை.

இவர்களில் விடுதலையானவர்கள் வெகு சிலரே. பெரும்பாலோர் துப்பாக்கிக் குண்டுக்கு இரையானார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தேடுதல் வேட்டையில் இளைஞர்களுக்கு அடுத்தபடியாக, பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் வயது வித்தியாசமே இல்லையென்பது வேதனை தரும் விஷயமாகும்.

இதன் ஆரம்பம், “மட்டக்களப்பு நகரின் வெள்ளைப்பாலத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த இரு இளம்பெண்களை விரட்டிப் பிடித்து, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டதுதான். இதுவே முதல் சம்பவம்’ என்று பழ.நெடுமாறன் தனது நூலில் கூறியுள்ளார்.

இந்தப் பாலியல் பலாத்காரத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று “முறிந்தபனை’ நூல் விரிவாக விளக்கியிருக்கிறது. அதாவது பக்.365-லிருந்து 370 வரையும், 377-லிருந்து 412 வரையும் எழுதப்பட்டுள்ள பக்கங்களில் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என வயதுக்கு வராத மற்றும் பேரிளம் பெண்கள் பேட்டியளித்திருக்கிறார்கள். ரத்தமும், நிணமும், கண்ணீரும், கம்பலையும், கதறலும், பைத்தியமும் பிடித்த நிலையுமான சம்பவங்களின் பதிவுகள் இப்பக்கங்களில் பதியப்பட்டுள்ளன.

பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்களின் நிலை என்ன?

“நமது சமூகத்தில் தன்னுடைய சுய விருப்பத்துக்கு எதிராக ஓர் இளம்பெண்ணின் கன்னித்தன்மை அழிக்கப்பட்டு விடுமானால், அவள் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. அப்பெண் திருமணமானவளாக இருந்தால், அவள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன. ஆகையால், பாலியல் வன்முறைக்குள்ளானவர்கள் தங்கள் துன்பங்களையும், மனக்காயங்களையும் மெற்னமாகத் தமக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு, குறித்த சம்பவங்களைப் பற்றிப் புகார் செய்ய முன் வருவதில்லை.

“பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் சமூகக் களங்கத்தையும் ராணுவ அச்சுறுத்தலையும் மீறி, புகார் செய்தபோது அவர்கள் போராளிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக இருந்ததால்தான் இவ்வாறு புகார் செய்வதற்கு தைரியம் வந்திருக்கிறது.. என்று கூறி அவர்கள் மேலும் காவலுக்குட்படுத்தப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள்” – என்று “முறிந்தபனை’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கும் மேலாக, கடுமையான வார்த்தைகள் சி.புஷ்பராஜாவின், “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலில் காணப்படுகின்றன. (நாம் மென்மையான விமர்சனத்தை மட்டும் எடுத்துக்கொண்டுள்ளோம்.) பெண்கள் வன்கொடுமைக்கு ஆளாவது பெண் புலிகள் என்று சொல்லப்பட்டும், ஆயுதம் தேடுகிறோம் என்று பெண்களைத் தீண்டுகிற செயலும் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது (பக்.459 – 460).

இச்செயல்கள் மட்டக்களப்பில் அதிகரித்த நிலையில், தாய்மார்கள் கொதித்து எழுந்தனர். இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் வருமாறு:

“திலீபன் வழியைப் பின்பற்றி அன்னையர் முன்னணி உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதற்கு முன்னதாக “உடனடியாகப் போர் நிறுத்தம் மற்றும் புலிகளுடன் பேச்சு வார்த்தை’ மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இக் கோரிக்கை பயனளிக்காது போகவே, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோயில் எதிரே அன்னையர் முன்னணி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பெண்களும் மாணவிகளும் இதில் பெருமளவில் பங்கேற்றனர்’.

அந்தக் கூட்டம் அதிகரிக்கவே, சிங்களக் காவல்படை, சந்தையில் திரண்டிருந்த பெண்களைச் சுற்றிவளைத்துத் தாக்கத் தொடங்கியது. பெண்களும் குழந்தைகளும் பலத்த காயத்துக்கு ஆளானார்கள். கலைந்தோடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடும் நடத்தப்பட்டது. அமைதிப் படையினர் இந்த அடக்குமுறையை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய கட்டுப்படுத்தவில்லை.

இதன் எதிரொலியாக, அன்னையர் முன்னணி – அடையாள உண்ணாவிரதத்தைத் தொடர் உண்ணாவிரதமாக்கியது. இதன் எழுச்சி கண்டதும், பிரதமர் ராஜீவ் காந்தி “அமைதிப்படை தமிழ் மக்களுக்கு எதிராகப் போராடவில்லை; புலிகளுக்கு எதிராகவே பேராடுகிறது’ என்றார்.

அன்னையர் முன்னணியினரைப் பேச்சு வார்த்தைக்கு அமைதிப்படை அழைத்தது. பிரிகேடியர் சந்தேஷ் கலந்துகொண்டு, “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் – அதன்பின்னரே பேச்சுவார்த்தை’ என்றார்.

அன்னையர் முன்னணியினரோ, “”எங்கள் நகைகளைக் கொடுத்து, எங்களைக் காக்க, எமது பிள்ளைகள் வாங்கிய ஆயுதங்களைக் கேட்பதற்கு நீங்கள் யார்” என்று கேட்டனர்.

பேச்சுவார்த்தை முறிந்தது; பலனில்லை. பிப்ரவரி 10-ஆம் தேதியன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜே.என்.தீட்சித் நேரடியாகப் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, “புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்’ என்று மீண்டும் வலியுறுத்தினர். பேச்சுவார்த்தை வெற்றிபெறவில்லை.

மாறாக, அந்தப் பகுதியை ராணுவம் சுற்றிவளைத்தது. ராணுவ முகாம் ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டது. பிப்ரவரி 12,13,14 நாள்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பெண்கள் பயப்படவில்லை. எழுந்தும் செல்லவில்லை. மேலும் மேலும் கூடினர்.’

அன்னையர் முன்னணியின் ஆலோசகர் கிங்ஸ்லி இராசநாயகம் கடுமையான தாக்குதலுக்கு ஆளானார். முகாமுக்கும் கொண்டு செல்லப்பட்டார்.

இந்தச் சம்பவத்தையொட்டி, அன்னையர் முன்னணி முன்னிலும் கடுமையான முடிவுகளை எடுத்தது. சாகும்வரை உண்ணாவிரதம் என்கிற முடிவுக்கு வந்தது. யார் முதலில் உண்ணாவிரதம் இருப்பது என்பது குறித்து கடும்போட்டி நிலவியது. இரு பிள்ளைகளை சிங்கள அடக்குமுறைக் கொடுமைக்கு பறிகொடுத்த அன்னை பூபதி முன்னுரிமை கோரினார். அன்னம்மா டேவிட்டும் உரிமை கோரினார். சீட்டுக்குலுக்கிப்போட்டதில், அன்னமா டேவிட் தேர்வானார்.

1988-ஆம் ஆண்டு பிப்ரவரி 19-ஆம் நாள் அன்னம்மா மாமாங்கப் பிள்ளையார் கோயில் முன்பாக சாகும்வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அன்னம்மா டேவிட் இறந்தால், அமைப்பாளர்கள் மீது வழக்குப் போடப்படும் என அமைதிப்படை மிரட்டியது. ஆனாலும் உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், அவரின் மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் அரசியல் ஆதாயம் தேட, பலவந்தமாகத் தங்களது தாயாரை உண்ணாவிரதத்தில் ஈடுபடுத்தி உள்ளார்கள் என்று எழுதி வாங்கப்பட்டது. இந்தக் கடிதத்தை ஆதாரமாகக் காட்டி அன்னம்மா டேவிட் தூக்கிச் செல்லப்பட்டார்.

இதன் பின்னர், அன்னை பூபதி களத்தில் குதித்தார். அவர் உண்ணாவிரதம் இருக்கும் முன்பாக, தனது சுயவிருப்பம் காரணமாக உண்ணாவிரதம் இருப்பதாகவும், கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சுயநினைவு இழந்தால் என் குடும்பத்தார் என்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், முக்கியமாகத் தூக்கிச் செல்லக்கூடாது என்றும் மரணசாசனம் எழுதிக்கொடுத்தார்.

13-10-1988 அன்று உண்ணாவிரதம் தொடங்கினார். மாமாங்கத் திடல் மக்கள் கூட்டத்தால் நிறைந்தது. அமைதிப்படையைக் குறித்து எங்கும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மற்ற இயக்கங்கள் துணைகொண்டு பூபதி அம்மாளைத் தூக்கிச்செல்லும் முயற்சியும், துப்பாக்கியால் சுட்டும், பதற்றம் ஏற்படுத்தும் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன.

மட்டக்களப்பை நோக்கி உலகப் பத்திரிகையாளர்கள் குவிந்தனர். பூபதி அம்மாளின் உண்ணாவிரதத்துக்குக் காரணமானவர்கள் என்று கூறப்பட்டு, இலங்கைத் தமிழாசிரியர் வணசிங்கா, கிறிஸ்தவ பாதிரியார் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ ஆகியோருடன் ஏற்கெனவே கைதாதி விடுதலைபெற்ற கிங்ஸ்லி இராசநாயகாவும் கைது செய்யப்பட்டனர்.

அன்னை பூபதியின் கணவர் கணபதிப் பிள்ளையை அழைத்து மிரட்டிப் பார்த்தார்கள். அவர் பணியவில்லை. லட்சியம் ஒன்றுக்காக அவர் விருப்பப்பட்டு இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார் என்று பதிலளித்தார். பூபதி அம்மாள் 13-10-1988 அன்று, உண்ணாவிரதத்தின் 31-ஆம் நாளில் மரணமுற்றார்.

அவரது இறுதி ஊர்வலம் தடைசெய்யப்பட்டது. அவரது உடலை எடுத்துச்செல்ல அமைதிப்படை, சிங்களக் காவல்படை இரண்டும் முயன்றன. பூபதி அம்மாளின் உடல், அன்னையர் முன்னணியால் மறைத்து வைக்கப்பட்டு, திடீரென ஊர்வலம் தொடங்கியது. நாவலடி கடற்கரை எங்கும் மனிதத் தலைகளாகவே காட்சியளித்தது. ஒரு பக்கம் கடல்; மறுபக்கம் மக்கள் கடல்!

“தமிழீழப் பெண்டிரின் எழுச்சியின் வடிவமாக பூபதி அம்மாள் என்றும் திகழ்வார்’ என்று பழ.நெடுமாறன் அந்தக் கட்டுரையை முடித்துள்ளார்.

– பாவை சந்திரன்

தமிழீழப் போராட்டத்தில் நெருப்பாய் எரிந்து பகைவனை அழித்த போராளிகள் உண்டு. அதேபோல எரி குண்டின் நெருப்பில் எரிந்துபோன அப்பாவிகளும் உண்டு. இந்த இரண்டுக்கும் அப்பால் நெருப்பையே எரித்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் இருவர் இருக்கிறார்கள் ஒருவர் தியாகி திலீபன் மற்றவர் அன்னை பூபதி.

திலீபன் போராளி ! அன்னை பூபதி ஒரு தாய் ! போராளிக்கும் தாய்க்கும் இடையில் வேறுபாடுகள் உண்டு. மாறாக போராளியும் தாயும் ஒன்றுபடுவதற்கும் ஓரிடம் இருக்கிறது.

தன் மக்களை அழிவிலிருந்து காக்க போராளி போர்க்கோலம் பூணுகிறான் ! அதேபோல தன் குஞ்சுகளுக்கு உயிராபத்தென்றால் தாய்க்கோழிகூட போர்க்கோலம் பூணும் ! எனவேதான் போர்க்கோலம் பூணுமிடத்தில் போராளியும்இ தாயும் பேதமின்றி ஒற்றுமைப் படுகிறார்கள்.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி என்ற பெயரைக் கேட்டவுடன் நிறையப்பேர் ஒரு தாயின் வடிவத்தில் அவரைக் கண்டு அன்னையாக வழிபடுகிறார்கள்.

ஆனால் அன்னை பூபதி என்பவர் வெறுமனே பிள்ளைகளுக்கு அன்னையானவர் அல்ல. போர்க் குணத்திற்கும்இ தமிழீழப் போராட்டத்திற்கும் அன்னையானவர் என்ற கோணத்தில் நோக்கப்பட வேண்டியவர். அவ்வாறு நோக்குவோரே அவரின் போராட்டத்தில் இருந்து தெறித்த அக்கினிப் பொறிகளை எளிதாக அடையாளம் காண முடியும்.

ஓர் சாதாரண அன்னையென்றால் தன் பிள்ளைகளுக்கே இறுதிவரை பாசமுள்ள அன்னையாக இருக்க ஆசை கொள்வாள். ஆனால் அன்னை பூபதி அப்படிப்பட்டவரல்ல ! அன்னைப் பாத்திரத்தின் கட்டுக்களை அறுத்து அநீதிக்கெதிராக போர்க்கோலம் பூண்டு வெளிவந்தவர். ஆகவேதான் அவரை போர்க்கோலம் பூண்ட அன்னை என்று நோக்குவதே சாலப் பொருத்தமானதாகத் தெரிகிறது.

நமக்கு போரில் வெற்றி வேண்டுமானால் வெற்றிக்கு வாய்ப்பான இடத்தில் நம்மை நிறுத்திக் கொண்டு போரைத் தொடங்க வேண்டும் என்பார் வள்ளுவர். யானையை முதலை வெல்ல வேண்டுமானால் அது நீருக்கு வரும்வரை முதலை காத்திருக்க வேண்டும். அதுபோல முதலையை யானை வெல்ல வேண்டுமானால் முதலை தரைக்கு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்பது குறள் தரும் விளக்கம்.

இப்படி தன் பலத்தையும்இ மாற்றான் பலத்தையும் சீர் து}க்கி இறுதியாக இந்திய இராணுவத்திற்கு எதிராக சத்தியப் போரொன்றைப் புரிவதே சாலச் சிறந்தது என்னும் முடிவுக்கு வருகிறார் அன்னை பூபதி.

சத்தியம் நெருப்புப் போன்றது. அது உள்ளத்தில் மட்டும் இருப்பது ! நிராயுதபாணியாக நின்று நடாத்தப்படும் ஒரு போர். சத்தியத்தை ஓர் ஒப்பனைக்கான போர்வையாகப் போர்த்தியிருப்போர் நிஜமான சத்தியத்துடன் மோதினால் போலியான சத்தியப் போர்வை எளிதாகத் தீப்பற்றிக் கொள்ளும்.

இந்த உண்மையை நன்கு கண்டு கொண்டு 1988ம் ஆண்டு மார்ச் மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்குகிறார் மட்டக்களப்பைச் சேர்ந்த பூபதி கணபதிப்பிள்ளை என்ற இந்த வீரத்தாய் ! அவருடைய உண்ணாவிரதப் போராட்டம் இரண்டு முக்கிய கோரிக்கைகளை மையமாகக் கொண்டிருந்தது. ஒன்று யுத்தத்தை நிறுத்த வேண்டும்இ இரண்டு இந்திய சிறிலங்கா அரசுகள் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் ! இதற்காகவே அவர் உயிர் கொடுத்துப் போராட முன்வந்தார்.

இந்திய சிறிலங்கா அரசுகள் அவருடைய கோரிக்கைகளுக்கு செவி கொடுக்க முன்வரவில்லை ! அன்னை பூபதியோ ஒன்றுக்குமே இணங்கி வராதவர்களுக்கு எதிராகப் போராடி தனது உயிரையே கொடுத்தார். அவரது போராட்டம் பல பல கட்டங்களாக தடைகளைச் சந்தித்தது ! ஆயினும் அவர் இறுதிவரை மனம் தளரவில்லை.

அவரது மரணம் பொறி தட்டி சமூக எழுச்சியாக மாறிவிடக் கூடாது என்பதில் இந்திய இராணுவ அதிகாரிகள் கவனமாக இருந்தார்கள். அன்னையின் இறுதி யாத்திரை நேரத்தில் கூட ஊரடங்குச் சட்டமிட்டனர். ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து அவருடைய இறுதி ஊர்வலத்தில் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டதை நினைத்தால் இன்றும் ஆச்சரியமே ஏற்படுகிறது !

அன்று நடந்த அன்னை பூபதியின் இறுதி ஊர்வலம் அந்த மண்ணில் நின்ற இந்திய அரசுக்கு சில செய்திகளைக் கூறியது ! ஆன்மாPதியான போராட்டத்தின் அதிர்வலைகள் கண்ணுக்குத் தெரியாமல் பரவிச் செல்பவை ! அவற்றின் சக்தி எந்தப் பலமுள்ள அரசையும் வேரோடு பிடுங்கி வீசிவிடும் சக்தி வாய்ந்தது. ரஸ்யர்களின் பட்டினி நெருப்பு உலகத்தை வெல்லத் துடித்த ஜேர்மனிய நாசிகளையே து}க்கி வீசியது ! காந்தியத்தின் பட்டினி நெருப்பு பிரித்தானிய அரசை இந்திய மண்ணிலிருந்து அகற்றியது ! இவைகள் ரஸ்யாவிலும்இ இந்தியாவிலும் மட்டுமே நடக்கும் அது தமிழீழத்திற்குப் பொருந்தாது என்று நினைத்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.

பஞ்ச பூதங்களில் அழுக்கில்லாதது நெருப்பென்று கூறுவார்கள். ஆனால் அந்த நெருப்பிடமும் ஒரு குறை இருக்கிறது. மற்றவைகளை எரிப்பதன் மூலம் தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டது நெருப்பு. எரிந்து போகும் அப்பாவிகள் இல்லாத இடத்தில் நெருப்புக்கும் இடமில்லை.

இந்த நெருப்புப் போலத்தான் இன்று உலகில் உள்ள அரசுகளின் இயல்பும். தம்மிடம் அழுக்கில்லை என்று புனிதம் பேசுவதில் அவற்றிற்கு இணையான புனித நெருப்புக்கள் இந்த உலகிலேயே கிடையாது. ஆனால் மற்றவர்களை எரித்து தாம் மட்டும் வாழ்வதில் அவை கொண்டுள்ள சுயநலம் இருக்கிறதே அதுவும் இந்த நெருப்பைப் போன்றதுதான்.

ஈழத் தமிழினத்தை ஏமாற்றி அவர்களை எரிந்து போகும் விறகுகளாக்கி அதில் தான் நிலைபெற ஆசை கொண்ட சிறிலங்காவின் சுயநலம் நெருப்பு போன்றதுதான். அந்த நெருப்பு அணைந்து போகாமலிருக்க அடிக்கடி காற்றாக வீசி உதவிக் கொண்டிருக்கிறது இந்திய இராஜதந்திரமும் அதே வகையான நெருப்புத்தான்.

இந்த இரு நெருப்புக்களுடனும் தனியாக நின்று போராடியதுதான் அன்னை பூபதி என்னும் சத்திய நெருப்பு ! இந்த நெருப்பு மற்றவர்களை எரித்து தான் மட்டும் வாழும் சுயநலம் கொண்டதல்ல ! அது தன்னைத்தானே அழித்து மற்றவர்களுக்கு ஆத்ம ஒளி கொடுப்பது. மற்றவர்களை அழிக்க வந்திருக்கும் ஆதிக்க நெருப்பை அடையாளம் போட்டுக் காட்டும் வல்லமை கொண்டது. அந்த வல்லமைதான் இந்திய இராணுவமே கட்டம் கட்டமாக தழிழீழ மண்ணிலிருந்து வெளியேற நேர்ந்தது.

எப்போதுமே தேசங்கள் இரண்டு வகையாக இருக்கும் ஒன்று கண்ணுக்குத் தெரியும் தேசம்! மற்றது கண்ணுக்குத் தெரியாத தேசம்! கண்ணுக்குத் தெரியும் தேசத்தை பகைவர்கள் ஆக்கிரமிக்கலாம் ஆனால் கண்ணுக்குத் தெரியாத தேசத்தை எந்தப் பகைவரும் ஆக்கிரமிக்க முடியாது. இந்தக் கண்ணுக்குத் தெரியாத தேசம் மக்களின் இதயங்களில் உருவாவது ! உலகில் உள்ள தேசங்கள் எல்லாமே முதலில் உருவானது மக்கள் இதயங்களில்தான். அதன்பின்புதான் அவை கண்ணுக்குத் தெரியும் தேசங்களாக உருவெடுத்தன.

அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும்இ அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் து}க்கிப் போட்டது.

அன்னை பூபதி கண்களை மூடஇ தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.

சுதந்திர தமழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !

நன்றி-மீனகம்

Saturday, April 17, 2010

இத்தாலியர் தொடங்கி வந்தேறிகள் அனைவரும் உல்லாச வாழ்வு வாழ்கையில் எம் அன்னையின் சிகிச்சைக்கு இங்கு அனுமதி மறுப்பதா?




தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தாய் பார்வதி அம்மாள் தனது உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி விசா பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஈவிரக்கமின்றி மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளது.உரிய அனுமதி பெற்று வந்த ஒருவரை தடுத்த இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல சட்ட விரோத செயலுமாகும்.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இந்தியா உதவியது என்று புகைப்படம் எடுத்து உலகுக்கு தங்கள் மனிதாபிமானத்தை வெளிச்சமிட்டுக்காட்டுபவர்கள் இதில் இரட்டை வேடம் இடுவது ஏன்?

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கெல்லாம் பாடிச்சென்ற எம் பாட்டன் வாழ்ந்த மண்னில் இன்று இந்த மண்ணிற்குத் தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மார்வாடி குஜராத்தி,மலையாளி,தெலுங்கர்கள் வரை அனைவரும் உல்லாச வாழ்வு வாழ்கையிலும் அதிகாரத்தில் இருக்கையிலும் எங்கள் அன்னையின் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற இந்த மண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான ஒன்று?

உலகெமெல்லாம் வாழும் தமிழரின் ஒப்பற்ற தலைவனாம் எங்கள் அண்ணன் பிரபாகரனின் தாயாரை மனிதாபிமானமற்று திருப்பி அனுப்பியதன் மூலம் மத்திய மாநில அரசுகள் தமிழருக்கு எதிரான தங்கள் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது

மகளிருக்கொரு மகுடம் வைத்த இரண்டாம் லெப்டினென்ட் மாலதி



பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்தை ஆழமாக கொண்டே மனித சமூக அமைப்பு வேரூன்றிவிட்டது.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டுள்ளனர்.

வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.

மனிதகுல வரலாற்றில் கிறிஸ்துவுக்கு 6000 (ஆறாயிரம்) ஆண்டுகளுக்கு முன் தாய் வழிச் சமூகமே இவ்வுலகில் ஆட்சி புரிந்தது. காடுகளில் குழந்தைகள் குழுக்களாக வாழ்ந்த காலத்தில் தாயின் இராச்சியமே நடைபெற்றது. குழுவிற்கு தாய்தான் தலைமை தாங்கினாள். பெண்ணே பெரிதாக மதிக்கப்பட்டாள். தாய் என்ற சொல்லே மருவி தலைவி என்றாகிவிட்டது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். தன்னுடைய இனத்தைக் காக்கும் சக்தியாக பெண் விளங்கினாள். அவளின் சக்திக்கு கட்டுப்பட்டு பின்னால் செல்ல அவளது சமூகம் தயாராகவிருந்தது அன்று. தனது இனத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு உணவு கொடுக்கவும், தேவையானவற்றை தேடிக் கொடுக்கவும், தாயானவள் தன்னைப் பலி கொடுக்கவும் தயாராகவிருந்தாள் என்பது உயர்ந்த தியாகமாகும். அது அன்றே இருந்தது.

எதிரிகளிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தனது இனத்தை காக்க தானே தலைமை தாங்கி வழி நடத்தினாள். பஞ்சாயத்து சபையை நிறுவி நிர்வாகம் செய்தாள்.

அன்றைய பெண்ணும் போர் முனைகளைச் சந்தித்தவள்தான். எதிரிக் குழுக்களை தாக்க, வேட்டையாட தானே ஆயுதங்களைக் கொண்டு முன்னே சென்று தாக்குவாள். அந்த தாய்க்குப் பின்னால் தான் அவளது குழுவைச் சேர்ந்த பெண்களும், ஆண்களும் வருவார்கள். சண்டை செய்வார்கள். சாவைச் சந்திப்பார்கள். வெற்றி பெறுவார்கள்.

மலைகளின் மீது மான்களைப் போன்று ஏறி எதிரியை விரட்டவும், தேனை எடுக்கவும் அந்தப் பெண்களால் முடிந்தது. தேன் குடிக்க கரடி ஏற முடியாத இடத்தில் கூட ஏறி நின்று தேன் குடிப்பாள் வீரமங்கை. கல்லினால் கூரிய ஆயுதம் செய்யவும், தோலினால் கருவி செய்யவும், பாத்திரம் செய்யவும், அழகிய குடிசை கட்டவும், நடனமாடவும் அந்தப் பெண்களால் முடியும்.

எலும்பாலும், கல்லாலும், மரத்தாலும், கொம்பாலும் செய்யப்பட்ட விதம் விதமான கூரிய ஆயுதங்களால் பெண்கள் சண்டை போட்டார்கள். தமக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய எதிரிகளை தேடி, தேடி தாக்கி அழித்தார்கள். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் பெண்கள் சாம்ராஜ்யமாகவே இருந்தது. அக்காலத்தில்தான் சமூகம் முழுவதும் ஒரே குடும்பமாகவிருந்தது என ஆய்வாளர்கள் எடுத்துக் கூறுகின்றனர். இதனை மெய்ப்பிப்பது போல அகழ்வாராய்வின்போது மிகப் பழமையான காலத்து வரலாற்று ஆவணங்களில் சக்தி வழிபாட்டு முறை இருந்து வந்துள்ளதை சுட்டுகின்றனர்.

உலகில் சரிபாதியினர் பெண்கள், எமது சமூகத்திலே சரிபாதியினர் பெண்கள். இந்தச் சரிபாதித் தொகையினரான பெண்கள் போராட்டத்தில் பங்கு பெறாது எமது தேசத்தின் விடுதலை சாத்தியப்படாது. சரிபாதியினரான பெண்களுக்கு விடுதலையின்றி எமது தேசவிடுதலையும் முழுமை பெறாது என்பது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் கருத்தாகும். அடக்கு முறையின் வடிவமாக பெண்ணை ஆளாக்கியுள்ள நமது சமூகம் அந்தத் தளையை அறுக்க முன்வரவில்லை. பெண் ஒடுக்குமுறைக் கருத்துகள் இன்னமும் பலமான நிலையில் பேசப்படுகின்றன. அவ்வாறான சமூக கட்டமைப்பு எழுதப்படாத வாக்கியமாக நிலைத்து நிற்கிறது.

சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள் புரையோடிப் போயிருந்த சூழ்நிலையில் பெண்கள் அதிலே புதையுண்டு போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

தமிழரது வாழ்வில் அடிமைத்தனம் என்பது பல ஆண்டுகளாக நீடித்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளால் தமிழரது கலாசாரம் பண்பாடு என்பன சிதையுண்டு போயுள்ளன.

தமிழர் வாழ்வில் பெண் மதிக்கப்பட்டு அவளுக்குரிய கௌரவம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் ஆரியப்படைகளுக்கு தமிழன் அஞ்சியோடவில்லை. ஆனால் வஞ்சகமாக ஆன்மீக தத்துவங்களை புகுத்தி ஆரிய சக்கரவர்த்திகள் தமிழ் நாடுகளை அடிபணிய வைத்தார்கள். அதுதான் தமிழ்மக்களின் தமிழ்ப் பெண்களின் வாழ்வுக்கு அஸ்தமனமாகவிருந்தது. அவர்கள் போட்ட விதைதான் பெண்ணடிமை, சீதனம், சாதிமுறை, குலதொழில் என்பன. இன்றுகூட இந்தியாவில் பெண்கள்படும் இழிவுநிலை ஏராளம். இந்திய ஆதிக்கம் ஈழத்திலும் நிலை கொண்டதனால் ஈழப்பெண்களும் இதுபோன்ற அடக்கு முறைக்கு ஆளாகினர்.

அன்று எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.

எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம்.

இவ்வாறுதான் எமது போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று இன்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நிற்கிறார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள். சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்கிறார்கள் என பெண் போராளிகள் பற்றி தலைவர் பிரபாகரன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

உலகில் பெண்கள் மோசமான அடக்கு முறைக்கு ஆளாகி வந்துள்ளனர். இற்றைக்கு சுமார் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தாய்வழிச் சமூக அமைப்பு சிறப்புற்று விளங்கியது. அதன்பின், கால வெள்ளத்தில் தாய் வழி சமூக அமைப்பு முறைகள் பல்வேறு காரணிகளால் சிதைந்துபோய் ஆணாதிக்க முறைமைகள் தோற்றம் பெற்றன. இன்றும் உலகில் பெண்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள். மேற்காசியா, ஆபிரிக்கா மற்றும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளை தீவிரமாக பின்பற்றும் நாடுகளில் பெண்களின் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் ஆரியர்களின் மனுதர்ம சாஸ்திரம் பெண்களுக்கு எதிராக சமூக நீதிகளை அதிகரிக்க செய்திருக்கின்றன. சாதியம், அடிமைத்தனம் போன்றவற்றை ஆழப்பதித்திருக்கின்றன. வரதட்சனை, இரத்த உறவு திருமணம், கொடுமை, சித்திரவதை, உயிர் நீப்பு என பெண்களுக்கிழைக்கப்படும் கொடுமைகள் ஏராளம்.

எகிப்து நாட்டை தாலமி அயோலேட்டஸ் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுடைய மகள் கிளியோபாட்ரா! தாலமி இறப்பதற்கு முன் அவள் தம்பி ஏழாவது தாலமி, சகோதரி கிளியோபாட்ராவை திருமணம் செய்து கொண்டு நாட்டை ஆளவேண்டுமென அறிவித்தார். அதன்படி இருவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது கிளியோபாட்ராவுக்கு வயது 16. தாலமிக்கு வயது 10. இது ஒரு செய்தியல்ல. 20 நூற்றாண்டுகளுக்கு முன்னரும் இப்படி பெண்ணியல் பற்றி பெண்ணுரிமை பற்றி, யாரும் வாய் திறக்கவில்லை. அப்போதும் பெண் அடிமைதான். இப்போதும் பெண் அடிமைதான் எகிப்து நாட்டில்.

அக்டோபர் 10 தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் 2 ஆம் லெப்டினன் மாலதியின் நினைவு நாளும் ஆகும். அடக்கி ஒடுக்கப்பட்டிருந்த தமிழீழப் பெண்கள் இன்று தலை நிமிர்ந்து நிற்கிறனர். தீரத்தினாலும், தியாகத்தினாலும், விவேகத்தினாலும் உலகப் பெண்களுக்கு வழிகாட்டியாக உயர்ந்து நிற்கின்றனர் என்பதை அனைவரும் ஏற்றுள்ளனர்.

ஐம்பது வருட கால ஆக்கிரமிப்புக்கும் முப்பது வருடகால கொடிய போருக்கும் தமிழீழப் பெண்கள் முகம் கொடுத்து தமது நுண்ணிய ஆற்றலினால் அனைத்து தடைகளையும் அறுத்தெறிந்து வருகிறார்கள்.

தலைவர் பிரபாகரனின் காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தம்மை வளர்த்தது மட்டுமன்றி தமிழ்த்தேசத்தின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்தும் வருகிறார்கள்.
தமிழ்த்தேசிய உணர்வுகளை கட்டியெழுப்பி புதிய பெண்ணெழுச்சிக்கு வித்திட்டுள்ளார்கள்.

அதிகாரப் போக்கினாலும், ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத வெறியினாலும், தமிழர்களின் ஜனநாயக உரிமை நசுங்கியது. ஆனால் இளைய பெண் தலைமுறை சுதந்திர வேட்கை கொண்டு விடுதலைக்காக ஆயுதக் கருவிகளை கையிலேந்தி தீர்த்த தீரமான வேட்டுக்களாலே இன்று ஜனநாயகம் மலர்ந்தது மட்டுமல்ல, பெண்ணினத்தின் விடுதலையும் முழுமை பெற்றது. ஆண் பெண் சமநிலை புத்துயிர் பெற்றுள்ளது.

2ஆம் லெப். மாலதி 17 ஆண்டுகளுக்கு முன் அந்த இலட்சியக் கனவோடுதான் வீரச்சாவை தழுவிக் கொண்டாள். அந்த நடுராத்திரியில் வல்லாதிக்க இந்திய இராணுவத்தை எதிர்கொள்ள கோப்பாய் கிறேசர் வீதியில் காத்திருந்தாள். இந்திய இராணுவம் தமிழ் பெண்களுக்கு இழைத்த அநீதி இன்னமும் தமிழர் மனங்களில் ஆறாத காயமாகவுள்ளது. 1987 அக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 1 மணியளவில் இந்திய வல்லாதிக்க இராணுவம் மீது அவளது எம்16 ரக துப்பாக்கியில் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. அந்த தாக்குதல் 2 ஆம் லெப் மாலதியின் இறுதி தாக்குதல். புலிகள் போராட்ட வரலாற்றில் முதல் பெண் போராளி 2 ஆம் லெப் மாலதி வித்தாகி வீழ்ந்தாள். அதுவே தமிழீழப் பெண்களின் எழுச்சிக்கு வித்தாக அமைந்தது.

Thursday, April 15, 2010

வேலுப்பிள்ளை மனோகரனின் பேட்டி




தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் சகோதரர் மனோகரனுடன் ஒரு சந்திப்பு…

தமிழீழத் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரன் டென்மார்க்கில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். அவர் வழங்கிய நீண்ட அனுபவங்கள் கேள்வி பதிலாக அமைந்துள்ளன.

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் திரு. வேலுப்பிள்ளை மனோகரனை அலைகள் காரியாலயத்தில் சந்தித்துப் பேசினோம். அவர் தந்திருக்கும் நீண்ட அனுபவங்களை அலைகள் வாசகர்களுக்கு சுவைபட தருவதில் பெருமையடைகிறோம்.

புதுமாத்தளன் போருக்குப் பிறகு பிரபாகரன் குடும்பத்தில் இருந்து ஒருவர் மேடைக்கு வருகிறார். அந்த விழா அலைகளின் பத்தாண்டு வெற்றி விழாவாகவும், இளம்புயல் 100 வது நாள் விழாவாகவும் அமைகிறது. அதன் பொருட்டு இந்த சிறப்பு சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது..

கேள்வி: நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?

மனோகரன்: நானும் மனைவியும், இரண்டு பிள்ளைகளும் டென்மார்க்கில் வாழ்ந்து வருகிறோம். வேலையும் வாழ்வுமாக நாட்கள் நகருகின்றன.. மற்றப்படி சொல்வதற்கு எதுவும் இல்லை. எல்லோரையும் போலவே எனது வாழ்வு நகர்கிறது.
கேள்வி: நீங்கள் பிரபாகரனின் சொந்த அண்ணன். உங்களுக்கு ஓர் உரிமை இருக்கிறது. அதிகாரத்தில் சகோதரன் இருந்தால் அண்ணனுக்கு இயல்பாகவே அதிகாரம் வந்துவிடும். அதோ பாருங்கள் சிங்கள ஆட்சியை… கோத்தபாய ராஜபக்ஷ, பசில்ராஜபக்ஷ போன்றவர்களுக்கு எங்கிருந்து அதிகாரம் வந்தது.. அதுபோல நீங்களும் ஏன் அதிகாரத்தை பெற முயற்சிக்கவில்லை..?

மனோகரன்: எனது தம்பி பிரபாகரன் போராட்டத்தை தமிழ் மக்களின் தேசிய சொத்தாக கருதினார். அங்கு குடும்பம், தாய், தந்தை, அண்ணன் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்தவித அதிகார துஷ்பிரயோகங்களும் செய்யாமலே என் தந்தை போலவே தம்பியும் நேர்மையின் வடிவாக வாழ்ந்து காட்டியுள்ளார். அவருக்கு அண்ணனாக வாழ்வது மிகவும் கடுமையான ஒரு யாகம் என்றே கூறுவேன். தம்பியின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாத ஓர் அண்ணனாக வாழ்வதுதான் சிறந்த வாழ்வென்று கருதி வாழ்ந்தேன். தம்பி என்பதற்காக தேசத்திற்கு சொந்தமான வாகனத்தில் நாம் ஏறி பயணிக்க முடியாது. தம்பியின் அதிகாரத்தை பயன்படுத்தாது நாம் நமது சொந்தக் கால்களிலேயே நடந்தோம். தம்பி போராட்டத்தில் இருந்த ஆரம்ப காலங்களில் எங்களோடு உறவு கொள்ளவே அயலவர்கள் பயந்தார்கள். எனது தாயும் தந்தையும் பொலிகண்டி கந்தவன ஆலய மடத்தில் படுத்து வாழ்ந்த காலங்கள் உண்டு. தங்கள் வீட்டைத் தாண்டிப் போனால் ஆமியால் ஆபத்தென்று கூறி போகக் கூடாது என்று கூறியவர் பலர் உண்டு. ஆனால் தம்பியின் ஆட்சி வந்தபோது அவர்கள் வரவேற்றனர். அப்போதும் நாங்கள் பழையதை மறவாது வாழ்ந்தோம். பிரபாகரனின் ஒழுக்கத்திற்கு உரிய தியாக வாழ்வை என் தந்தையும் தாயும் வாழ்ந்தார்கள். நானும் அவ்வழிதான் நடந்தேன், என் தம்பி குடும்பம் என்று தனியாக எங்களை கவனித்ததே கிடையாது.

கேள்வி: குடும்பம் – போராட்டம் இரண்டும் வேறுவேறான சங்கதிகள் இவைகளுக்குள் பிரபாகரனின் பணி எப்படி நகர்ந்தது என்பதைக் கூற முடியுமா ?

மனோகரன்: ஓர் சிறிய உதாரணத்தைக் கூறுகிறேன். ஒரு தடவை என் தம்பியின் மகன் சாள்ஸ் தனக்கு ஒரு விளையாட்டு பொருள் வேண்டும் என்று கேட்டார். அதற்கு பதில் கொடுத்த பிரபாகரன், நிதிப் பொறுப்பாளர் தமிழேந்தி தனக்கு இதுவரை வாழ்க்கைக்கு ஆதாரமான மாதச் சம்பளத்தை வழங்கவில்லை, அதனால் விளையாட்டு பொருளை வேண்ட முடியவில்லை என்று பிள்ளையை சமாதானம் செய்தார். தனது பிள்ளைக்கு ஒரு விளையாட்டுச் சாமானை வாங்கக் கூட அவர் போராட்டத்தில் தனக்கிருந்த அதிகாரத்தையோ பாவித்தது கிடையாது, என் தம்பியும் தந்தை போலவே எளிமையான வாழ்வையே வாழ்ந்தார்.
கேள்வி: அவர் அவ்வளவு நேர்மையாக இருந்தாலும், வெளிநாடுகளில் அவர் பெயரில் இங்குள்ளோர் நடாத்திய நிர்வாகங்கள் பற்றி எல்லோருக்கும் தெரியும் இவை குறித்து உங்கள் தம்பிக்கு ஏன் அறிவிக்கவில்லை?

மனோகரன்: உண்மைதான், நான் வாழ்ந்த டென்மார்க்கில் நடந்த சம்பவங்கள் பலதை ஆதாரத்துடன் எழுதி வன்னியில் வாழ்ந்த என் தந்தையிடம் அனுப்பி, தம்பியிடம் கொடுக்கும்படி கூறினேன். நான் அனுப்பிய கடிதம் கிடைத்ததும் என் தந்தை வேலுப்பிள்ளை ஒரு வேலை செய்தார். அந்த முறைப்பாட்டுக் கடிதத்தை திறந்து பார்க்காமலே எனக்கு திருப்பி அனுப்பினார். உடைக்கப்படாத அக்கடிதத்தின் மேல் உறையில் ஒரு குறிப்புரை எழுதி இருந்தார். நான் அவருடைய தந்தை, நீ அவருடைய அண்ணன். நாம் இருவரும் குடும்பத்தவர், தியாகமே வடிவான ஒரு போராட்டத்தில் உறவு முறை என்ற காரணத்தை பயன்படுத்தி யாதொரு தாக்கத்தையும் செய்தல் கூடாது என்று சுட்டிக் காட்டியிருந்தார். அதே கடிதம் என் தந்தையாரிடம் இருந்து பிரபாகரனுக்கு போயிருந்தால் அவர் அதைவிட நீண்ட குறிப்புரையுடன் உடைத்துப் பார்க்காமலே எனக்கு திருப்பி அனுப்பியிருப்பார். இதுதான் அண்ணன் – தம்பி – தந்தை என்ற எங்கள் முக்கோண உறவுப் போராட்டத்தின் பரிமாணம். இந்த நேர்மையும், ஒழுக்கமும் என் தந்தையின் பாரம்பரியத்தால் வந்தது.

கேள்வி: சமீபத்தில் உங்கள் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை மரணமடைந்தார். அவருடைய மரணத்தைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மனோகரன்: எனது தந்தையார் மரணம் மர்மமாக உள்ளது. புதுமாத்தளனில் இறுதி நேரம் நடந்தது என்னவென்ற உண்மைகள் பல அவருக்கு தெரிந்திருக்கும். தான் அறிந்த உண்மைகளை யாருக்கும் மறைக்கும் பழக்கம் உடையவர் அல்ல அவர். எத்தனையோ உண்மைகளை எடுத்துச் சொல்லக்கூடிய போரின் சாட்சியமாக அந்த மண்ணிலேயே வாழ்ந்தவர். அவருடைய குரல் உலகின் முன் வெளிவர முடியாதபடி அமுக்கப்பட்டுவிட்டது. அவர் இறந்த காரணத்தால்தான் அவர் எங்கே வைக்கப்பட்டிருந்தார் என்ற உண்மை தெரியவந்தது. இல்லாவிட்டால் அவர் இறக்கும்வரை எங்கிருக்கிறார் என்பது பற்றிய மர்மம் மேலும் பல காலம் நீடித்திருக்கும். மேலும் அவர் எங்கு சென்றாலும் தனது முக்கிய ஆவணங்களையும், குறிப்புக்களையும் சிறிய பையில் வைத்து கையோடு கொண்டு செல்வார். புதுமாத்தளனில் கூட அவர் அதை எடுத்தபடியே வந்திருக்கிறார் ஆனால் இன்றுவரை அவருடைய முக்கியமான ஆவணங்களைக் கூட நாம் பெற முடியவில்லை.

கேள்வி: இங்கிருந்து உங்கள் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அனுபவங்கள் உண்டா?

மனோகரன்: வன்னியில் இருந்து அடிக்கடி என்னுடன் பேசுவார். கடந்த ஆண்டு தை மாதம் நிலமை மோசமடைந்தது. அதற்கு முன்னர் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்பு கொண்டார். அப்போது நிலமை மிகவும் மோசமடைந்துவிட்டதாக தெரிவித்தார். ஓரளவு நிலமை சீருக்கு வர தொடர்பு கொள்வதாகக் கூறியிருந்தார். பின்னர் அவருடைய மரணச் செய்திதான் இணையத்தில் வெளியாகியிருக்கக் கண்டோம். அவர் உயிருடன் இருந்திருந்தால் உலகத்தின் எத்தனையோ பதிலற்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் கிடைத்திருக்கும்.

கேள்வி: உங்கள் தந்தையார் தன் கருத்துக்களை சுதந்திரமாக சொல்லும் ஒருவராகவே இருந்தார். பிரபாகரன் வன்னியில் நடாத்திய ஆட்சி பற்றிய அவருடைய கருத்து என்னவாக இருந்தது?

மனோகரன்: அதை அறிவதற்கு சிறிது காலம் முன்னர் செல்வது அவசியமாகும். எனது தந்தை டி.எல்.ஓ ( மாவட்டக் காணி அதிகாரி ) வாக பணி புரிந்த காலத்தில் முத்தையன்கட்டு குடியேற்றத் திட்டம், வன்னி படித்த வாலிபர் குடியேற்றத் திட்டம் போன்றவற்றை ஆரம்பித்தவரில் அவரும் ஒருவராக இருந்தார். அப்போது காணிகளை வழங்குவது அவர்தான். படித்த தமிழ் வாலிபர்களை அங்கு குடியேற்றுவதற்கு அவர் இரவு பகலாக போராடினார். அங்கு தமிழ் வாலிபர்கள் குடியேறாவிட்டால் அந்த இதய பூமியை சிங்களக் குடியேற்றமாக மாற்ற விரும்புவதாக அரசு அவரிடம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து எனது தந்தை பழைய வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான வவுனியா செல்லத்தம்பு, உடுப்பிட்டி இராஜலிங்கம் போன்றோருக்கு விடயத்தை விளங்கப்படுத்தி படித்த தமிழ் வாலிபர் குடியேற்றங்களை வன்னி நோக்கி நகர்த்தும்படி வலியுறுத்தினார். ஈழத்தை மீட்பதென்பது ஈழ மண்ணில் தமிழன் பரந்து வாழ்வதால்தான் தீர்மானமாகும் என்றும் கருதினார். ஆனால் அன்று அவர் நினைத்தது போல பெருந்தொகையாக வன்னியின் வெற்றிடங்களை நோக்கி மக்களை நகர்த்த முடியாது போன கவலை அவருக்கு இருந்தது. பின் என் தம்பி பிரபாகரன் அதை ஒரு குறுங்காலத்தில் செய்து, வன்னியில் ஒரு அழகான தமிழீழ அரசையே சகல படைபலங்களோடும் உருவாக்கியபோது என் தந்தை பெரு மகிழ்ச்சி கொண்டார். வன்னியில் நடைபெற்ற நிர்வாகம் அவருக்கு பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது. கிளிநொச்சியின் சிறப்பைக் கண்டு அவர் பெருமகிழ்வடைந்தார். அன்று தான் பார்த்த கிளிநொச்சிக்கும், பிரபாகரன் காலத்து கிளிநொச்சிக்கும் பெரிய வேறுபாடு இருந்ததாக போற்றினார். தன்னால் முடியாத விடயத்தை பிரபாகரன் சிறப்பாக செய்ததாக போற்றினார்.

கேள்வி: அனுராதபுரத்தில் உங்கள் தந்தை வாழ்ந்த காலம், எல்லாளன் சமாதி , உங்கள் தம்பியின் பிறப்பு இவைகள் பற்றி ஒரு தை உள்ளது. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?

மனோகரன்: அனுராதபுரத்தில் எல்லாளன் சமாதி இருந்த இடம், பாழடைந்த கோயில் இவற்றுக்கு அருகால் போகும் வீதியில்தான் எங்கள் வீடு இருந்தது. அந்த இடம் அன்று முற்றிலும் அமைதி நிறைந்த பகுதியாக இருந்தது. இனம்புரியாத ஓர் அமைதி அங்கு நிலவும். சுமார் இரண்டாயிரம் வருடங்களாக சிங்கள மக்கள் எல்லாளன் சமாதிக்கு விளக்கேற்றி வருகிறார்கள். அந்த விளக்கு ஈட்டி போல எரியும். அதைப் பார்க்கும்போது மாமன்னன் மறத்தமிழன் எல்லாளனே அங்கு அருவமாக வாழ்வது போன்ற பிரமையும், மதிப்பும் ஏற்படும். அத்தகைய உணர்வுகளை என் தந்தையும், தாயும் மனதில் தாங்கி வாழ்ந்த காலத்தில் அதே எல்லாளன் சமாதி இருந்த இடத்தில் கருவுற்றார் பிரபாகரன். என் தம்பியின் வாழ்வைச் சீர்தூக்கிப் பாருங்கள், எல்லாளன் போலவே அவர் தமிழ் மீது காதல் கொண்ட ஒருவராக வாழ்ந்த வாழ்வு புரியும்.

கேள்வி: இந்த விடயம் சிங்கள ஆட்சியாளருக்கு தெரியுமா?

மனோகரன்: எமக்கு முன்னரே இதை சரியாக மோப்பம் பிடித்தவர்கள் சிங்கள ஆட்சியாளர்தான். தம்பி போராடப் புறப்பட்ட காரணத்தால் இராணுவத்தால் அடிக்கடி கைது செய்யப்படுபவர்கள் நானும் என் தந்தையும்தான். எண்ணற்ற தடவைகள் கைது செய்யப்பட்டு யாழ். கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்ட அனுபவம் எனக்கு இருக்கிறது. அதுபோல ஒரு தடவை எனது தந்தையை பிடித்து குருநகர் இராணுவ முகாமிற்கு கொண்டு சென்றார்கள். ஓர் இராணுவச்சிப்பாய் அவரை கொதிக்கும் வெயிலில் நிறுத்தி வைத்திருந்தான். அந்த நேரம் அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் அவரை உள்ளே அழைத்துச் சென்று உரையாடினார். அப்போதுதான் பிரபாகரன் சாதாரணமான பிறப்பல்ல என்று தாம் நினைப்பதாக சொன்னார். ஏதோ ஒரு தாக்கம் இல்லாமல் பிரபாகரன் இவ்வளவு உறுதி கொண்ட ஒருவராக, தமிழீழப் பற்றுக் கொண்டவராக இருக்க முடியாது என்றும் கருதுவதாகக் கூறினார். அப்போதுதான் எனது தம்பி அனுராதபுரத்தில் கருவுற்ற ஒரு தமிழன் என்பதை சிங்களம் அறிந்து அதிர்ச்சியடைந்தது.

கேள்வி: எல்லாளன் என்று சொன்னீர்கள்… அலைகள் விழாவில் எல்லாளன் அரங்கிற்கு நீங்கள் தலைமை தாங்குவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

மனோகரன்: முதலில் அலைகள் இணையப்பத்திரிகை ஆற்றிவரும் சேவையை நான் பெரிதும் பாராட்டுகிறேன். அலைகள் ஆரம்பிக்கப்பட்டது எனக்கு தெரியும் ஆனால் பத்து வருடங்கள் இவ்வளவு விரைவாக ஓடிவிட்டதைத்தான் நம்ப முடியவில்லை. அலைகளை ஆதரிப்பதும் கலைகளை ஆதரிப்பதும் வேறு வேறல்ல, ஆகவே அனைவரும் அலைகள் பத்தாண்டு விழாவை ஆதரிப்பது நல்லது. எந்தவித இலாப நோக்கும் இல்லாமல் அலைகள் இந்த சமுதாய பெரு வெள்ளத்தில் அயராது பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னர் ஊடகங்கள் இல்லாத காரணத்தால் செய்திகளை உடனுக்குடன் அறிவது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது இணையம் வந்த காரணத்தால் உடனுக்குடன் செய்திகளை அறிய முடிகிறது.. புதுமாத்தளனில் நடைபெற்ற நிகழ்வுகளை இணையம் உடனுக்குடன் தந்தது. மக்களின் அழிவுகளை உயிரைக் கொடுத்து எத்தனையோ ஊடகவியலாளர் பதிவுகளாக்கி இணைய வழி அனுப்பினார்கள். ஆனால் ஒரு கேள்வி இவ்வளவு தூரம் இணையம் வளர்ந்தும், உண்மைகளை உண்மையான ஒளிப்படங்களாக வழங்கியும் உலக நாடுகள் அந்த வளர்ச்சியை மதித்து நடந்தனவா என்று கேட்க வேண்டும். இணையத்தோடு உண்மையின் வெற்றியும் இணைந்து நடக்க வேண்டும். ஊடகத்தின் உன்னதம் உண்மையின் வெற்றியாக அமைய வேண்டும். சகல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஒளிப்படம் உலகத்திற்கு சொன்னதென்ன.. இணையத்தை மட்டும் ஒளியில் பார்த்துக் கொண்டு, உண்மையை இருளில் வைத்திருப்பது சரியல்ல.. இதை உலக வல்லரசுகள் புரிய வேண்டும். அதேவேளை புலம் பெயர் தமிழ் மக்கள் நல் வாழ்விற்காகவும் சிந்தனை மேம்பாட்டிற்காகவும் தளராத மனதுடன், தள்ளாடாத செயலுடன் பத்தாண்டுகளை இணையத்தால் எழுதிக் கடப்பது மிகப்பெரிய சாதனை அதை அலைகள் செய்தது, செய்கிறது அதை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

கேள்வி: தங்கள் தாயார் எங்கே?

மனோகரன்: அவர் தற்போது மலேசியாவில் இருக்கிறார். அவரை கனடா அழைத்துச் செல்ல எனது சகோதரியார் முயற்சி செய்கிறார்.

கேள்வி : உங்கள் தம்பி வே.பிரபாகரனை எங்கே தேடுவது ?

மனோகரன் : பிரபாகரனை இரண்டு வழிகளில் தேடுகிறார்கள். ஒரு சிலர் அவரை விண்ணில் தேடுகிறார்கள், இன்னும் சிலர் மண்ணில் தேடுகிறார்கள். ஆனால் பிரபாகரன் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உடல்களில் வீசும் விடுதலைப் பேரொளியாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. அந்தக் தேடலுக்கான பதிலை தருவதற்கு தகுதியுள்ள ஒருவரை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அவர் இதுவரை அடையாளம் காட்டவில்லை என்பதை இனியாவது மக்கள் அறிவால் கண்டு பிடிக்க வேண்டும்.

கேள்வி : விடுதலைப்புலிகள் அமைப்பின் வெளிநாட்டு தொடர்புகளுக்கான பணிகளை தானே செய்வதாகக் கூறிய கே.பத்மநாதன் அத்தருணம் உங்களிடம் என்ன கூறினார் ?

மனோகரன் : கே.பி ஊடகங்களில் தோன்றி ஒரு தடவை இறந்துவிட்டதாகவும், இன்னொரு தடவை உயிருடன் இருப்பதாகவும் கூறினார். அவர் மற்றவரில் இருந்து சற்று வித்தியாசமாக விண்ணிலும் மண்ணிலுமாக இரண்டு இடங்களிலும் தேடியிருந்தார்.. இப்படி இரண்டுங்கெட்டான் பதிலை பிரபாகரன் தனது வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது. கே.பியின் கடமை என்ன.. பிரபாகரனின் உடன் பிறந்த அண்ணன் நான் இருக்கிறேன்.. என்னிடம் ஒரு தடவை கூட அவர் இது குறித்து பேசியது கிடையாது.

கேள்வி : வேறு யாராவது தொடர்பு கொண்டார்களா ?

மனோகரன் : தமிழகத்தில் இருந்து பழ.நெடுமாறன் ஒருவர் மட்டும் தொடர்பு கொண்டு பிரபாகரன் இருக்கிறார் என்ற செய்தியை அறிவிப்பதாகக் கூறினார். மற்றப்படி யாருமே இது குறித்து என்னுடன் இன்றுவரை பேசியது கிடையாது. ஒருவரிடமும் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை.

கேள்வி : அப்படியானால் இந்தக் கேள்விக்கான பதிலை எங்கிருந்து தேடுவது ?

மனோகரன் : பிரபாகரன் வாழ்வில் இருந்துதான் தேடிக் கொள்ள வேண்டும். நான் உங்களிடம் முன்னரே குறிப்பிட்டிருந்தேன் என் தம்பி எல்லாள மன்னன் சமாதி இருந்த இடத்தில் கருவுற்றவர் என்று. அதுபோலவே மானமுள்ள தமிழுக்காகவும், உயர் தமிழ் வீர ஒழுக்கத்திற்காகவும் அவர் வாழ்ந்தார். சங்ககால பாடல்களில் கண்ட உயர்ந்த அப்பழுக்கில்லாத வீரத்தை எல்லாள மன்னன் போற்றினான். தள்ளாத வயதிலும் உயிரச்சமின்றி தனிச்சமருக்குப் போன வீரன் எல்லாளன். அதுபோல பிரபாகரன் உருவாக்கிய விடுதலை வீரர்கள் அனைவருமே இருபதாம் இருபத்தியோராம் நூற்றாண்டுகளில் சங்ககால வீர வாழ்வை வாழ்ந்தார்கள். புறநானூற்றில் கண்ட வீரத்தை நிஜ வாழ்வியல் ஓவியங்களாக மாவீரர்களை வைத்தே வரைந்தும் காட்டினார். இயற்கையாகவே பிரபாகரன் ஓர் ஓவியர் என்பதும் உங்களுக்குத் தெரியும். எனவேதான் அவர் வாழ்வும் புறநானூற்று தமிழ் வீர வாழ்வும் ஒன்றுதான் என்பதைப் புரிய வேண்டும்.

கேள்வி : இது அவர் வாழ்வின் முற்பகுதிவரை நகர்ந்து போகும் நிகழ்வு. எதிரிகளின் நீரைக் குடித்து உயிர் வாழாத சேரன் செங்குட்டுவனின் வீரம் திலீபனிடம், திருமணமான அன்றே போருக்கு போன புறநானூற்று வீரம் குமரப்பாவிடம் என்று சுத்தமான தமிழ் வீரத்தை அவர் படைத்தார். கரிகாலன் என்ற பெயருடன் அவர் வாழ்ந்த வாழ்வு எங்களுக்கும் தெரியும், இருப்பினும் அவருடைய வாழ்வின் பிற்பகுதி புறநானூற்றின் இறுதிப்புள்ளியின் தாக்கம் தெரிகிறதே..

மனோகரன் : கடைசியில் நடைபெற்ற புதுமாத்தளன் போர்க்களமும் மாங்குடி மருதனார் பாடிய சங்க காலப் போர்க்களமும் வேறு வேறல்ல. வெட்டி எடுக்கப்பட்ட முடித்தலைகள் அடுப்பாக.. பிளக்கப்பட்ட கபாலங்கள் பாத்திரமாக.. அதற்குள் இரத்தமும் சதையும் நிணமும் இட்டு, வெட்டிய கைகளை அகப்பையாக.. துளாவி ஒரு போர் யாகம் நடந்தினான் பாண்டிய மன்னன் என்று பாடியுள்ளார்கள். அதைத்தான் புதுமாத்தளனில் கண் முன் கண்டு துடிதுடித்தோம். உண்மையில் அது புறநானூற்றுப் போர்க்களம்தான்.

கேள்வி : இருக்கலாம் இருந்தாலும் இப்போது உருவாகியுள்ள நிலை புறநானுற்றில் இருந்து சிறிது வேறுபடுகிறதே.. ? வெற்றிடத்தால் ஒரு போர் என்ற புதிய கோட்பாடு தெரிகிறது… உங்களுக்கு அது தெரிகிறதா ?

மனோகரன் : உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது.. வெற்றிடத்தால் ஒரு போர்… அதற்கான பதில் அவர் படித்த நூலில் இருக்கிறது. ஒரு மனிதனின் நல்ல நண்பன் அவன் படிக்கும் நல்ல நூல்தான் என்று கூறுவார்கள். பைபிள் படித்தவர்கள் பைபிள் போலவே வாழ முயற்சிப்பதும், மார்க்சியம் படித்தோர் மார்க்சிய வாதிகளாக வாழ்வதும் ஏன்.. அவர்கள் படித்த நூலின்படி வாழ முயற்சிக்கிறார்கள் என்பதே அதன் பொருளாகும். அதுபோலத்தான் பிரபாகரனும் வாழ்வின் வேதமாக நேதாஜி சுபாஸ்சந்திரபோஸின் வாழ்க்கையை கடைப்பிடித்தார். நேதாஜியின் கடமை உணர்வு மிக்க, ஒழுக்கம் குறையாத ஓர் இராணுவத் தொண்டர்களை அவர் வடிவமைத்தார். நேதாஜியின் இறுதிக்காலத்தில் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லமல் போனது.. இப்போது பிரபாகரன் விரும்பிப் படித்த நேதாஜியின் வாழ்வியல் தத்துவம் அவரை வழி நடாத்தியிருப்பது தெரிகிறது.. இது புறநானூற்றில் இருந்து வேறுபட்ட இடமாகும்… நேதாஜி கதை படித்து, அவர் வாழ்வின் பிற்பகுதி போன்ற தோற்றத்தை கடந்த ஓராண்டு காலமாக வைத்திருக்கிறார்…பிரபாகரன். அதிலும் ஒரு போராட்டம் மறைந்திருக்கிறது.. அதுதான் புதிய புறநானூற்றின் அதிசயமான பக்கம் அதற்குப் பிறகு வருகிறேன்.. தாயின் மணிவயிற்றில் கருவாக இருக்கும்போது பாரதக்கதை கேட்டு போர் வீரனானான் அபிமன்யு, அதுபோல எல்லாளன் கதையை தாயின் வயிற்றில் இருக்கும்போதே கேட்டு அவர்போல தமிழ் வீரரானார் பிரபாகரன். என்று முன்னர் கூறியிருந்தேன். பின்னர் மறுபகுதியை கூறுகிறேன்..



கேள்வி : சரி நம்மை விடுங்கள்.. மத நம்பிக்கை உள்ளவர்கள் நம்மில் பலர் உள்ளார்கள்.. அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் ஏதாவது சாஸ்திரங்கள் கேட்டுள்ளீர்களா..அதுவும் வாழ்வில் ஒரு கடமையல்லவா ?

மனோகரன் : சாஸ்த்திரங்கள் என்பவை தனிப்பட்டவரின் நம்பிக்கைகளால் எல்லைப் படுத்தப்படுவது. ஆனால் போராட்டம் ஆரம்பித்த காலத்திலேயே தமிழகத்தின் பிரபல ஜோதிடர் ஒருவர் பிரபாகரனின் பிற்கால வாழ்வு மர்மம் நிறைந்தாக இருக்கும், யாரும் அவரைக் காண இயலாது என்றும்.. அவர் எங்கே என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருக்கும் என்றும் தெரிவித்தார். நாம் அப்போது அதை பெரிதாக கருதவில்லை, ஆனால் இப்போது அதையும் எண்ணிப்பார்க்கிறேன்.. அதற்குமேல் பிரவேசிக்கவில்லை.

கேள்வி : போரின் பின் பிரபாகரன் உடலம் போன்ற ஒன்று காண்பிக்கப்பட்டது, அதை ஏன் நீங்கள் பொறுப்பெடுக்கவில்லை.. ?

மனோகரன் : அது உண்மையாகவே பிரபாகரன் உடலம் என்று எரிக் சோல்கெயம் ஆவது உறுதி செய்தாரா இல்லையே.. சரி அதைவிடுங்கள் அது பிரபாகரனன் உடலம்தான் என்றால் அதை ஏன் சில நாட்களாவது பாதுகாத்து வைத்திருக்கவில்லை. ஏன் உடனடியாக எரியூட்டினார்கள்; ? இப்படியான குழப்பகரமான நிலையில் நாம் மட்டும் ஓடிச் சென்று பொறுப்பேற்றால் என்ன நடக்கும் ? தவறான ஓர் உடலத்தைக் காட்டி நாமே அதை உறுதி செய்துவிட்டதாக அரசு பிரச்சாரம் செய்யும்.. அத்தகைய பொறிக்குள் சிக்குண்டால் அது பெரிய முட்டாள்தனமான செயலாக அல்லவா முடியும் ? அதைத்தான் விடுங்கள்… எனது தந்தை இருக்குமிடத்தை அவர் இறக்கும்வரை ஏன் சிறீலங்கா அரசு இரகசியமாக வைத்திருந்தது.. இப்படிப்பட்ட சிறீலங்கா அரசு நம்பிக்கைக்குரியது என்று கருதுகிறீர்களா ? சிறீலங்காவின் கதை கேட்டு, இந்தியாவிலேயே ப.சிதம்பரம் ஒருவிதமாகவும் சி.பி.ஐ இன்னொரு விதமாகவும் அறிக்கை விட்டதை நீங்களும் அவதானித்திருப்பீர்கள்.. இதை எல்லாம் தொகுத்துப் பார்த்தால் அன்று நாம் ஏன் உரிமைகோரத் தயங்கினோம் என்ற கேள்விக்கான நீதியுடைய பதில் உங்கள் உள்ளத்தில் உருவாகும்.

கேள்வி : சரி அதற்குப் பிறகு வருகிறோம்… உங்கள் சகோதரன் பிரபாகரன் உங்களுடன் தொடர்பு கொள்வதுண்டா.. ?

மனோகரன் : ஆம் அவர் போர் இறுக்கமடைவதற்கு முன்னர்வரை என்னுடன் தொடர்பில் இருந்தார். குறித்துக்கொள்ளுங்கள்… குடும்ப விவகாரங்களை மட்டும் என்னுடன் பேசிக் கொள்வார். சாள்ஸ் சிறந்த முறையில் படித்து எட்டுப்பாடங்களிலும் அதிவிசேட சித்திபெற்று, கட்டுப்பெத்தை தொழில் நுட்பக்கல்லூரிக்கும் தேர்வானபோது அந்த மகிழ்வை சொல்ல எடுத்தார். இப்படி குடும்பத்தின் ஒவ்வொரு நல்ல நிகழ்வையும் அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.. வாழ்வு – தாழ்வு – இன்பம் துன்பம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டார்..



கேள்வி : புதுமாத்தளன் சம்பவங்கள் நடைபெற்றபோது அவர் உங்களுடன் தொடர்பு கொள்ளவில்லையா..

மனோகரன் : தொடர்பு கொள்ளவில்லை.. குடும்பத்தின் நன்மை தீமைகளை பேசியவர்.. சாள்ஸ் இறந்தாக காண்பிக்கப்பட்டபோது மட்டும் ஏன் என்னுடன் தொடர்பு கொள்ளவில்லை. அதுவும் குடும்ப நன்மை தீமைகளுக்குள் வரும்தானே.. மேலும் அப்போது நடேசன் பலருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.. அவர் மூலமாகவேனும்; அந்தச் செய்தியை ஏன் என்னிடம் கூறவில்லை. ஆம்.. அப்படியான நிகழ்வுகள் நடந்திருந்தால் குறைந்தபட்சம் நடேசன் மூலமாவது எனக்கு சொல்லியிருப்பார். மேலும் அப்போது எனது தந்தை அங்கே இருந்தார்.. அவராவது அந்தச் செய்தியை கண்டிப்பாக எனக்குச் சொல்லியிருப்பார். யாருமே என்னிடம் எதுவும் கூறவில்லை, எல்லோரின் கைகளிலும் தொலைபேசி இருந்தது, அது செயற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. பிரபாகரனின் மனைவி எம்முடன் தொடர்பில் இருந்தவர்.. அவர் கூட போன் செய்யவில்லை… ஏன் .. நன்றாக யோசித்துப் பாருங்கள்.. எல்லாவற்றையும் யோசித்தால் எங்கோ ஓர் இனம்புரியாத இருள் விளக்கமின்றி இருப்பது தெரிகிறதல்லவா?

கேள்வி : உண்மைதன்… சரி .. உங்கள் தம்பி பிரபாகரன் ஆடம்பர வாழ்வு வாழ்கிறார்.. நீச்சல் தொட்டியில் குளிக்கிறார் என்று படங்கள் வெளியாகின அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்.. ?

மனோகரன் : உங்களிடம் முன்னரே சொல்லியிருக்கிறேன்.. அவர் தமிழழேந்தியிடமிருந்து மாதச் சம்பளம் வரவில்லை என்பதால் மகனுக்கு சிறிய விளையாட்டு சாமானையே வாங்கிக் கொடுக்க முடியாது யோசித்தவர். எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். பொதுமக்களின் சொத்தை சுய தேவைக்காக பாவிக்கும் பழக்கம் தெரியாதவர். இரத்தம் சிந்திய மாவீரருக்காக தேடிய பணத்தை தொடுமளவிற்கு இதயமற்றவர்கள் உலகில் இருப்பார்கள் என்று கருதும் தகவல் அவர் மூளையில் இல்லவே இல்லை. எனவே பொதுப்பணத்தில் ஆடம்பர வாழ்வு என்ற பேச்சுக்கே அவர் வாழ்வில் இடமில்லை. ஆனால் பேச்சு வார்த்தை நடைபெற்ற காலத்தில் அவரைப் பார்க்க குடும்பத்தினர் இங்கிருந்து சென்றார்கள். அவர்கள் டென்மார்க்கில் பிளாஸ்டிக் பையில் செய்யப்பட்ட மிகமிக விலை குறைந்த 100 குறோணர் விலையுள்ள ஒரு தண்ணீர் தொட்டியை கொண்டு சென்று கொடுத்தார்கள். அதுதான் சிறீலங்கா அரசு பிரச்சாரம் செய்த ஆடம்பர வாழ்வு. அதைத் தான் நம் தமிழ் உறவுகளும் இணையங்களில் போட்டு பிரச்சாரம் செய்தார்கள். ஒரு தூய போராளியின் வாழ்விற்கும் தனது வாழ்விற்கும் இடையில் யாதொரு வேறுபாட்டையும் அவர் வைக்கவில்லை. அந்தப் பிரச்சாரங்களை எல்லாம் இன்று பிரபாகரன் முறியடித்துவிட்டார்.

கேள்வி : சரி.. பிரபாகரன் இருக்கிறார்.. அவர் தற்போது வெளிப்படவில்லை.. என்று வைத்துக் கொள்வோம்.. இந்த நிலையில் யார் பேச்சைக் கேட்பது இப்போது எண்ணற்ற தலைவர்கள் தேன்றிவிட்டார்களே ?

மனோகரன் : பிரபாகரன் தனக்குப் பின் யாரென ஒருவரை தெரிவு செய்திருந்தால் இப்படி பெருந்தொகையானவர்கள் தோன்றியிருக்க மாட்டார்கள். அவர்கள் தாமே பிரபாகரனின் குரல் என்றும் கூறியிருக்க மாட்டார்கள். இப்போது பிரபாகரன் எடுத்த பணிகளை நாமே தொடர்கிறோம் என்று கூறும் யாரிடமும் அவர் எங்கே என்ற கேள்விக்கு பதில் இல்லை.. ஆகவே இவர்கள் அனைவரும் பிரபாகரனின் தேர்வில் இல்லாதவர்களே என்பது தெளிவு. பிரபாகரனின் உண்மையான உறுதியான குரல் இன்னமும் வரவில்லை.

கேள்வி : வட்டுக்கோட்டைத் தீர்மானம் வாக்கெடுப்பில் உள்ளதே..

மனோகரன் : வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது அன்றைய தமிழர் கூட்டணியினரால் எழுதப்பட்ட ஒரு காகிதத் தீர்மானம். அதனடிப்படையில் தாயகத்தில் ஒரு தேர்தலும் நடைபெற்று முடிந்துவிட்டது. ஆனால் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் இருந்ததைவிட சிறந்த தமிழீழ அரசை பிரபாகரன் உருவாக்கி முடித்திருந்தார். கடற்படை, ஆகாயப்படை, போலீஸ்பிரிவு, வங்கித்துறை, தரைப்படை, தமிழீழ நிர்வாகம் என்று சட்டம் – நீதி- நிர்வாகம் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய சட்டவாட்சியை வள்ளுவர் காட்டிய நெறியோடு வரையறை செய்து வழங்கிவிட்டார். உலகிற்கே ஒரு முன்மாதிரியான தேசத்தை உருவாக்கி சாதனையும் படைத்துவிட்டார். அதைத்தான் நீங்கள் எல்லோரும் வன்னியில் கண்கூடாக பார்த்துவிட்டீர்கள். தென்னை மரத்தில் ஏறி வட்டுவரை சென்றுவிட்ட ஒருவன் அதிலிருந்து கீழே இறங்கி என்னால் தென்னையின் வட்டுக்கொள்ள முடியுமா என்று கேட்டு வாக்கெடுப்பு வைத்தால் எப்படியிருக்கும் ? இப்படியொரு கேள்விக்கு பதில் ஒன்று தேவையா? இதற்கு பதில் கூறத்தேவையில்லை. சில கேள்விகளுக்கு மேல் வைக்கப்படும் கேள்விகளே அதற்குரிய பதில்களாக அமையும் இதுவும் அந்தவகை சார்ந்ததே.

கேள்வி : அப்படியானால் இப்போது நாடுகடந்த தமழீழஅரசு என்ற இன்னொன்று வருகிறது.. அதுபற்றி என்ன கூறுகிறீர்கள் ?

மனோகரன் : நமது நாட்டில் இப்போது உங்கள் வீட்டை நீங்களே போய் பார்க்க வேண்டுமானால் உங்கள் வீட்டுக்கான உறுதியைக் கொண்டு போக வேண்டும். ஆளில்லாமல் கிடக்கும் உங்கள் வீட்டை நீங்களே பார்க்க உறுதி வேண்டும்.. மறந்துவிடாதீர்கள் வாழ்வதற்கல்ல ஒரு தடவை பார்ப்பதற்கு.. உறுதி இல்லாவிட்டால் உங்களை உங்கள் வீட்டிற்கே இராணுவம் அனுமதிக்க முடியாத நிலை இருக்கிறது. பிரபாகரன் வாழ்ந்த வீட்டை சிங்கள மக்கள் பார்ப்பதால் அது இடிக்கப்படுகிறது.. அதற்கும் உறுதி வேண்டுமோ என்னவோ.. ( சிரிப்பு ) நமக்கு உரிமை எங்கே இருக்க வேண்டும் எம் தாயகத்தில்.. வெளிநாடுகளில் வாழ்வோருக்கு சட்டரீதியான வாழ்வியல் உரிமை இருக்கிறது.. ஆனால் நமது தாயகத்தில் சொந்த வீட்டுக்கே போக உரிமையற்று மக்கள் முகாமில் இருக்கிறார்கள். இப்படியான யதார்த்த நிலை இருக்கிறது.. இந்நிலையில் நாடுகடந்த அரசால் சொந்த வீடு கடந்து போவதற்காவது ஓர் உரிமையை பெற்றுத்தர முடியுமா? பிரபாகரன் வெளிநாட்டில் ஓர் அரசை அமைக்கவா போராடினார்.. நாடுகடந்த அரசுபற்றிய கேள்விக்கும் பதிலாக கேள்விகளையே வைக்க முடியும் என்பதை நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள்.. இவைகள் இரண்டும் பிரபாகரன் சொன்ன பாதைகளா என்பதை பிரபாகரன் நேசித்த மக்கள் தீர்மானிப்பார்கள். நாம் பதில் கூற வேண்டிய தேவை இல்லை.

கேள்வி : அப்படியானால் இன்றைய நிலையில் என்னதான் செய்வது ?

மனோகரன் : எனது தம்பி பிரபாகரன் தமிழர் சமுதாயம் பிளவுபடக்கூடாது என்பதற்கே முன்னுரிமை கொடுத்தார். புதுமாத்தளனுக்குப் பின்னர் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் ஒவ்வொரு செயலும் தமிழினத்தை பிளவுபடுத்துவதாகவே இருக்கிறது. இத்தகைய முன்னெடுப்புகள் பற்றி கருத்துக் கூறுவதைவிட அவற்றின் விளைவுகளை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். வடக்குக் கிழக்கில் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளின் எண்ணிக்கை, வெளிநாடுகளில் ஆளுக்காள் உருவாக்கியுள்ள தமீழழம் தொடர்பான பணிகள். இவை அனைத்தும் தமிழினத்தை ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றனவா இல்லை கூறுபோட்டுள்ளனவா என்பதை அவதானிக்க வேண்டும். ஒரு செயல் தமிழினத்தை கூறுபோடுமாயின் அது பிரபாகரனின் விருப்பமாக அமைய மாட்டாது. பிரபாகரன் யாரையும், எந்தத் தளபதியையும் முக்கியமாக முன்னிலைப்படுத்தியது கிடையாது. காரணம் அவருடைய முதன்மைத் தளபதிகள் தமிழீழ மக்களே.. மக்களுக்கு தெரியும் பிரபாகரன் யார் என்பது.. பிரபாகரன் உருவாக்கிய மக்கள் சக்தி மாவீரர்களின் மகத்தான கனவுகளுக்கே சொந்தம், மற்றவருக்கல்ல.. இத்தனை காலம் போராடி, ஒவ்வொரு நொடியும் மரணத்தோடு விளையாடி, வாழ்வுக்காலத்தின் பெரும்பகுதியை தலைமறைவு வாழ்விலேயே கழித்த பிரபாகரன் தனக்காக எதையுமே கேட்கவில்லை. எத்தனையோ பதவிகள் வந்தன, எதையுமே ஏற்கவில்லை.. இன்று மாபெரும் துறவறம் போன்ற வாழ்வை எழுதியுள்ளார்.. அப்படிப்பட்டவர் இப்படியான காரியங்களை செய்யுங்கள் என்று யாரிடமும் கூறியிருக்க மாட்டார்..

கேள்வி : சரி இப்படியான குழப்ப நிலை வருமென்று கருதி பிரபாகரன் தனது பிள்ளைகளில் ஒருவரையாவது உங்களுடன் அனுப்பியிருக்கலாமே ?

மனோகரன் : நான்தன் சொல்லிவிட்டேனே.. அவர் பற்றற்ற வாழ்வு வாழ்ந்தவரென்று.. மற்றவர்களின் பிள்ளைகள் போராடும்போது தன் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார் பிரபாகரன் என்று திட்டினார்கள். பிரபாகரனிடம் நான் இதுபற்றி பேசியுள்ளேன். என் வாழ்வு இருக்கும்வரை, நான் நேசித்த ஈழ மண் இருக்கும்வரை என் பிள்ளைகள் வாழ்வு என்னுடன்தான் என்றார்.. தன் வாழ்வு முடிந்தால் தன் பிள்ளைகளின் வாழ்வும் அதுவாகவே முடியும்.. ஒவ்வொரு போராளியும் பிரபாகரனின் பிள்ளைகள்தான், ஒவ்வொரு தமிழீழ குடிமகனும் அவருடைய உறவுதான். தன் பிள்ளை மாற்றார் பிள்ளை என்ற பேதம் பார்த்து வாழும் ஒருவரா பிரபாகரன் இல்லையே.. தன் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பி பேதம் காட்டுமளவிற்கு அவர் உள்ளம் ஒளி குன்றியதல்ல. இதுதான் எனது உள்ளம் என்று எந்தத் தளபதியை வைத்தாவது உங்களுக்கு அவர் சொன்னாரா அல்லது அன்ரன் பாலசிங்கத்தை வைத்தாவது சொன்னாரா இல்லையே.. அவர் தனது கொள்கையை சொற்களால் சொல்லாது வாழ்ந்து காட்டிய செயல் வீரர்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகளையும், போராளிகளையும் பிரித்து பேசியோர் வாயடைத்துக் கிடக்கிறார்கள்.. இப்போது பிரபாகரனின் பிள்ளைகள் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் இவர்களில் யாரை அவர் வெளிநாடு அனுப்புவது சொல்லுங்கள் பார்க்கலாம்..

கேள்வி : புரிகிறது.. இந்த உண்மையை இதுவரை யாருமே சுட்டிக்காட்டவில்லை.. இவைகளைக் கேட்கும்போது இந்த இனத்திற்கு மறுபடியும் பிரபாகரன்தான் வர வேண்டும் என்ற எண்ணமே உருவாகிறது.. அவர் வருவாரா ?

மனோகரன் : புதுமாத்தளனுக்குப் பின் போராட்டத்தின் அடுத்த கட்டம் என்ன ? எம்மை நம்பிய தமிழீழ மக்களுக்கு நாம் சொல்ல வேண்டிய பதில் என்ன ? ஆகிய கேள்விகளுக்கு உரிய பதில் இல்லாமல் பிரபாகரன் தன் வாழ்வை ஒரு போதும் வெற்றிடமாக்கியிருக்க மாட்டார். புதுமாத்தளன் நிகழ்விற்கு சில நாட்கள் முன்னதாக நடேசனிடம் ஒரு செய்தியை தெரிவித்தார்… அது புலிகளுக்கு பிறகு வெற்றிடம் என்பது இல்லை என்ற செய்திதான்… அதற்குப் பிறகு பிரபாகரனின் கருத்துக்கள் எதுவும் வெளியாகவில்லை.. எனவே அன்று வெற்றிடமில்லை என்று கூறியவர் அதற்கான பதிலைத் தராமல் தன் பணியை ஒருபோதும் முடித்திருக்க மாட்டார். ஒன்றுமில்லாத வாய்ப்பேச்சு வீரரின் வெற்றிடத்தில் விடுதலைப் புலிகளை உருவாக்கியவர் பிரபாகரன். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்ற முடிவுரையை எழுதிவிட்டே போராட்டம் என்ற முதல் அத்தியாயத்திற்குள் போனவர் பிரபாகரன்.. இப்போது அவர் நேதாஜிபோல ஒரு வெற்றிடத்தை தன் வாழ்வில் எழுதியுள்ளார் என்று முன்னர் கூறியிருந்தேன். இப்போது மறுபடியும் அந்த இடத்திற்கே திரும்பி வருகிறேன்.. அன்று நேதாஜி ஒரு வெற்றிட நிலையை உருவாக்கி, அதன் மூலம் இந்திய சுதந்திரத்தை ஏற்படுத்தினார் என்பதுதான் நேதாஜி கதையின் வெற்றிடத்தில் நிற்கும் மர்மமான உண்மை. பிரபாகரனும் அதே முடிவுரையைத்தான் எழுதியுள்ளார். தமிழ் மக்களின் கனவுகளை நினைவாக்க அவர் இருந்தும் போராடுவார் இல்லாமலும் போராடுவார்.. மறுபடியும் வெற்றிடம்.. வெற்றிடத்தில் யார் வருவார்… மேலும் வசனங்களில் வேண்டுமா இல்லை போதுமா ?

கேள்வி : நன்றி, வணக்கம். உங்கள் பேட்டி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. உங்களை மறுபடியும் அவ்வப்போது சந்திக்க இருக்கிறோம் ..

மனோகரன் : வாருங்கள்.. என் தம்பிபற்றி சொல்ல என் இதயத்தில் மேலும் ஏராளம் செய்திகள் உண்டு.

வெல்வோம் வணக்கம்