Thursday, April 30, 2009

Photobucket

Tuesday, April 28, 2009

தொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு தேசியத் தலைவர், விடுதலைப் போராளி, புரட்சியாளர், கெரில்லா வீரர், கொலையாளி, பாதுகாவலர், கொடுங்கோலர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், பயங்கரவாதி எனப் பலருக்கும் பலவகையில் தோற்றம் அளிக்கிறார். அவரைப் போற்றுவதும், தூற்றுவதும் அவரவரின் கொள்கை நிலையைப் பொறுத்தது.

பிரபாகரனின் சிந்தனையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் அச்சம் அடையவோ, விரக்தி அடையவோ இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
சாவைக் கண்டு அவர் அஞ்சவில்லை. 17 வயதிலிருந்தே அவர் சாவுடன் உறவாடி வருகிறார். அவர் சிறிதும் தளர்ச்சி அடையாத போர் வீரர். அனைத்து நடைமுறை விடயங்களில் இருந்தும் தத்துவஞானி போல விலகி நிற்பவர்.
எனினும், தனது கொள்கைத் திட்டக் குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைவதில், ஊசலாட்டம் அற்ற ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.
இந்தப் போர்ப் பின்னடைவுகள், இலட்சியத்தின் மீதான அவரின் நம்பிக்கையை அல்லது உறுதிப்பாட்டை தளர்வடையச் செய்துவிடுமோ, சீர்குலைத்துவிடுமோ, அழித்துவிடுமோ என்பது எனக்கு ஐயம்தான். அவர் தனது மக்களின் விடுதலைக்காகவே போராடி வருகிறார் என்பதில் அவர் மனத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் சாவதற்கும் தயாராக இருக்கிறார்.
வெற்றிகளும் தோல்விகளும் வரும், போகும். பிரதேசங்களை இழப்பதும், வெல்வதும் உண்டு. போராளிகள் இறப்பார்கள், தோழர்கள் துரோகம் செய்வார்கள். ஆனால் அவரின் இறுதி மூச்சு வரையில், தமிழ் ஈழத்துக்கே அவர் உண்மையானவராக இருப்பார்.

இந்த மோதல் குறித்து நான் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனுடைய போராட்டத்தில் இந்த அளவுக்குத் தனியாகவும், நண்பர்கள் இல்லாமலும் இதற்கு முன் ஒருபோதும் இருந்தது இல்லை.

பிரபாகரன் அவரின் சொந்தச் செயற்பாடுகள் மற்றும் உலகச் சூழ்நிலைமைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுக்கலவையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, இந்தியாவை மாற்ற முடியாத கருணையற்ற எதிரியாக அவர் ஆக்கிக் கொண்டார்.

அமெரிக்கா மீது செப்ரெம்பர் 11 இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜோர்ஜ் புஸ் அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர்க் கொள்கையால், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஒரு சூழ்நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பயங்கரவாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இது மங்கச் செய்துவிட்டது.

உலகில் அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாத விடுதலைப் படையோ, பதிலுக்குத் தங்களது தேசியவாதக் குறிக்கோள்களை அடைவதற்காக பயங்கரவாதத்தை ஒரு நடைமுறைத் தந்திரமாகப் பின்பற்றாத விடுதலைப் படையோ எதுவும் இல்லை. தான் போற்றி வணங்கும் மாவீரர்களாகப் பிரபாகரன் கருதும் நேதாஜி சுபாஷ் சந்திர போசும், பகத் சிங்கும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்தான்.

அண்மைக் காலம் வரையில் நெல்சன் மண்டேலாவும் கூட பயங்கரவாதிகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம், வரலாற்றில் பெரும் பேரழிவு ஆபத்து ஏற்பட உலகச் சமுதாயம் அனுமதித்து விட்டது.
இது விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த துன்பம் அல்ல, தமிழர்களுக்கு நேர்ந்த துன்பம்.

ஓராண்டுக்கும் மேலாக, அப்பாவிகளான தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசித் தாக்கி வரும் அரசு உலகில் வேறு எங்குமே இருக்காது. இதுபோன்ற குற்றத்துக்கு இஸ்ரேலிய, அமெரிக்க, நேட்டோ படைகள் கூட உள்ளானதில்லை.

மோதல் அற்ற பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியே, தாக்குதல் நடத்தும் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பெரிய சாவுக் களமாக மாறி வருகிறது.
வெளி ஆட்கள், சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் உலகில் எங்குமே போர் நடத்தப்பட்டது இல்லை. ஈராக்கில் இல்லை, ஆப்கானிஸ்தானில் இல்லை, காசா பகுதியில் இல்லை. ஆனால் இலங்கையில், போர்ப் பகுதிக்குச் செல்ல செய்தி ஊடகங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உதவிப் பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரே அமைப்பான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அங்கு அப்பாவி மக்கள் பேரழிவு நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், முடமாக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள், குருடாகிப் போனவர்கள். பிரபாகரனை ஆதரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஆதரிக்காதவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், அவர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.

இந்நிலையில் சாதாரண அப்பாவி மக்களைத் தண்டிப்பதை நியாயப்படுத்த முடியுமா? ஈராக்கில் புஷ் செய்த பாவத்துக்காக அமெரிக்கமக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா? சிறிலங்கா படைகள் விடுதலைப் புலிகளை அழிக்க முயல்வதில் தவறு காண முடியாது. ஆனால், அந்த நடைமுறையில், தமிழ் மக்களையும் அவர்களது தாயகத்தையும் சிறிலங்கா அரசு அழிப்பதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது.

ஆனால் இது பிரபாகரனை வலுப்படுத்தவே செய்யும். விடுதலைப் புலிகள் போரை வரவேற்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

ஏனெனில் அது அவர்களின் அணிகளை பெருகச் செய்கிறது, குறிக்கோள் மீது அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறது, தனிநாடு கோரிக்கைக்கு இன்னும் உணர்ச்சிமயமான ஆதரவை உருவாக்குகிறது. நான் பார்த்த முந்தைய போர்களில் (அப்போது செய்தியாளர்கள் போர்ப்பகுதிக்குள் செல்ல முடிந்தது) இருந்து, விடுதலைப் புலி போராளிகள் போரிடுவதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப் புலி கெரில்லாக்கள் கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும் இருக்கிறார்கள். போர்க் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு அதிக உணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை 'கொல்லப்பட்டிருக்கிறார்' அல்லது 'கொல்லப்படும் நிலையை நெருங்கியிருக்கிறார்.' அவரது பதுங்கு குழியைப் படையினர் எப்போதேனும் நெருங்கும் எனில், பிரபாகரன் தனது சயனைட் குப்பியைக் கடித்து விழுங்கி காவிய நாயகன் நிலையை அடைந்துவிடுவார்.

"தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறிலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிகையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.
கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன். பிரபாகரனின் பிடியில் இருந்து கடைசித் துண்டு நிலத்தையும் சிறிலங்கா படை கைப்பற்றிவிடும் என்பது உறுதி. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமே முடிந்துவிட்டது என அதற்குப் பொருளாகாது. அவர்கள் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள, யாரும் எதிர்பாராத நிலையில் தாக்கும் கொரில்லா போர்முறைக்குத் திரும்புவார்கள். ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது வேறு என்பதையும், அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல்வேறு சிக்கல்களை எழுப்பும் என்பதையும் ஏற்கெனவே பல்வேறு படைகள் உணர்ந்திருக்கின்றன.

பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப் படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒருமுறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார் அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.

54 வயதாகும் பிரபாகரனிடம், மீண்டும் தொடங்குவதற்கும், மேலும் 20 ஆண்டுக் காலம் தொடர்வதற்கும் இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது. இன்று பிரபாகரனின் நிலைமை ஆபத்துக்கும் அச்சத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது. ஆனால் நல்வாய்ப்புச் சக்கரம் அப்படியே நிற்பதில்லை.
நிலைமைகள் மாறும். அமெரிக்கா மாறியிருக்கிறது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் மதிப்பிழந்து விட்டது. சோசலிசம் பின்வாசல் வழியாக நுழைந்து கொண்டிருக்கிறது. பெரிய வங்கிகள் எல்லாம் நொடித்துப் போய்விட்டன. தலைப்புச் செய்திகளில் வளவாழ்வுச் செய்திகளுக்கு மாற்றாக துன்பச் செய்திகள் இடம்பிடித்து வருகின்றன.

புதிய காற்று கடந்த காலத்தின் அதீத நம்பிக்கைகள் பலவற்றையும் தூக்கி வீசி வருகிறது. உலக அரங்கில் புதிய வாய்ப்புகள், அணி மாற்றங்கள், முன்மாதிரிகள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தாக்கம் வெகுதொலைவில் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளிலும் உணரப்படும். கண்ணீர்த் துளி வடிவில் அமைந்த அந்த அழகிய மரகதத் தீவு அமைதியுடன் உறவாடுவதற்காக காத்திருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிதா பிரதாப்

Wednesday, April 22, 2009

மனித நேயம் என்பது வெறும் அலங்காரச் சொல்தானா...?

முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலயத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நாளில் படை நடவடிக்கையின்போது கொலையுண்டிருக்கிறார்கள். 1300 இற்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றிருக்கிறார்கள். சர்வதேச அவதானிகள் தெரிவித்த மனிதப் பேரவலம் அங்கு நிகழ்ந்தி ருக்கிறது. முல்லைத்தீவுக் கடற்கரையில் இரத்த ஆறு ஓடும் அபாயம் இருப்பதாக ஐ.நா.உட்பட பல தரப்புகளும் கவலையுடன் ஊகம் தெரி வித்திருந்த போதிலும் எவராலும் அதனைத் தடுக்க முடியாமற் போயிற்று! உலக வரலாற் றில், சமீப காலத்தின் பெரும் மனித அழிப்பு நடை பெற்றிருக்கிறது. நினைக்கவே இரத்தத்தை உறைய வைக்கும் இந்த மனித உயிர் இழப்புக் கண்டு ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் அனைத் தும் வெட்கித் தலைகுனியவேண்டும்.உரிய காலத்தில், உரிய வேளையில் தமது சக்திகளைப் பயன்படுத்தி இந்த மனித அழிவை, தமிழர் இன அழிப்பைத் தடுத்து நிறுத்தவில்லை என்ற பழியை சர்வதேசம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இது சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயங்களில் ஒன்றாகிவிட்டது. இத்தகைய ஓர் மனிதப் பேரழிவு கொடுமை எந்த இனத்திற்கு ஏற்பட்டிருந்தாலும் அது மனித நேயத்திற்கு விழுந்த பேரடியாகும்; பேரிடி யாகும். இதுபோன்ற மனித அழிவு உலகில் வேறெங்கு நடைபெற்றாலும் தாங்க முடியாதே. அது குறித்த அக்கறைக்குப் பதிலாக, அசட்டைத் தனம் மேலோங்கி நின்றதாலேயே, ஏனைய நானாவித ஒவ்வாத எண்ணங்கள் வந்து மேவி இப்படியொரு துன்பியல் பேரழி வைத் தந்திருக்கிறது.போர் முடிவுக்கு வந்ததும் தமிழர்களின் உரிமைகள் வழங்கப்படும், பிரச்சினை தீர்க்கப் படும் என்ற கோஷங்கள் அர்த்தமற்றுப் போய் விட்டன. இன ஒற்றுமை, சகோதரத்துவம் என் பன ஒரேயடியாக நிர்மூலமாகிவிட்டன. மக்கள் அழிந்த பின்னர் அவை வெறும் வேதாந்தமா கவே மிஞ்சி நிற்கின்றன.முல்லைத்தீவில் ஒருநாளில் ஓராயிரத்துக் கும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிட்டமை மனித உரிமை, மனிதநேயம் என்பவை எல் லாம் வெறும் அலங்காரச் சொற்களே அன்றிச் கவைக்கும் உதவாதவை என்பதனை வெளிப் படுத்தி உள்ளன. இது குறித்து முழு மானிட உலகமும், தமது இயலாமை குறித்து வெட்கித் தலைகுனிய வேண்டும். உயிர்கள் காப்பாற்றப்படவேண்டியவை, பேணப்படவேண்டியவை. அழிக்கப்படவேண்டி யவை அல்ல என்பதனை அர்த்தபுஷ்டி உள்ள தாக்க வேண்டுமென்ற சிந்தனை செயலுருப் பெறுவதற்கு பிடிவாதமும்மேலோங்கும்போக்கும் மனிதர்களிடம் இருந்து அகல வேண்டும் என் பதனை வன்னிப் பேரழிவு எடுத்தியம்புகிறது.போர்ப் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள லட்சக் கணக்கான மக்களில் எஞ்சியுள்ளவர்களின் கதி என்னவாகப்போகிறது என்பதனை நினைத்துத் தமிழ் உறவுகளின் நெஞ்சங்கள் இப்போது திணுக்குறுகின்றன. அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பாகும். ஆனால் ஏற்கனவே உண்டான இழப்புக்களின்போது மக்களின் உயிர்கள் காப் பாற்றவேண்டியவை, பறிக்கப்படவேண்டி யவை அல்ல என்ற மனித நேயம் முதலிடம் பெற்றிருக்கவில்லை. அங்கே எஞ்சியுள்ளவர்களைக் காப்பாற்றுவ தற்கேனும் ஐ.நா.உட்பட்ட சர்வதேசம் நேர் மையுடனும் மனித நேயத்துடனும் விரைந்து செயற்படுவதற்கு மனங்கொள்ளுமா? அதுவே இப்போதைய உடனடித்தேவை. தமிழர் நெஞ் சங்களை மீண்டும் மீண்டும் உறைய வைக் காமல் தடுக்க வழி ஒன்று பிறக்காதா? உலக நீதியின் பால், மனுநீதியின் பால், மனித நேயம் சிறிதளவேனும் பிறக்கக்கூடாதா?

Monday, April 20, 2009

உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் ஒப்ப‌ற்ற‌ த‌லைவ‌னே!



இப்போது இல்லையேல், இனி எப்போதும் இருக்காது


தமிழர்களுக்கு எதிரான சிறிலங்காவின் போரின் பின்னணியில் இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் பலமாக இருப்பதாகக் கருதப்படுகின்ற சூழலில் - தமிழ்நாட்டு மக்களினது தமிழீழ ஆதரவு எழுச்சியை மையமாக வைத்து நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலை ஆராய்கின்றார் சென்னனையில் இருந்து தமிழகத்தின் ஒர் இளம் ஊடகவியலாளரான அ.பொன்னிலா.
"எனது உடலைக் கைப்பற்றி ஈழப் போராட்டத்தைக் கூர்மையாக்குங்கள்" என்று முழங்கி ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த வீரமகன் முத்துக்குமாரின் உடல் கொளத்தூர் மூலக் கொத்தளத்தில் கிடத்தப்பட்டிருந்த போது ஏற்பட்ட எழுச்சி தமிழகத்தின் தன்னெழுச்சி.
வழிநெடுகிலும் கண்ணீரும் கம்பலையுமாக மெழுகுவர்த்தியோடு அந்தத் தியாகியை வழியனுப்பிய மக்கள், இந்த எழுச்சி இத்தனை வேகத்தில் அடங்கிப்போகும் என எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.
போராடிய வழக்கறிஞர்கள் மீது தாக்குதல், கல்லூரிகளுக்கு விடுமுறை என காங்கிரஸ், கருணாநிதி அரசு தொடுத்த அடக்குமுறைகளுக்கு பலியானது தமிழகம்.
ஆனால், ஈழத்துக்காக போராடிய போராடிக் கொண்டிருக்கும் நண்பர்கள் ஒன்றை கவனிக்கத் தவறுகிறார்கள்.
அதாவது, இந்தப் போராட்டங்களை இந்திய அரசியல் சட்டமோ அதனை நடைமுறைப்படுத்துகிற நீதிமன்றங்களோ தடுக்கவில்லை.
மாறாக இந்த ஈழத் தமிழர் எழுச்சிப் போராட்டத்திற்கு ஒருவிதமான சட்ட அங்கீகாரத்தை நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன.
இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவை பணிப்புறக்கணிப்பு போராட்டம் அறிவித்தபோது, அதனை சட்டவிரோதம் என அரசு நிர்வாகத்தைக் கொண்டுதான் தமிழக முதல்வர் கருணாநிதி தடுத்தார்.
ஆனால் உச்சநீதிமன்றமோ "மக்களின் உணர்வுகளில் தலையிட முடியாது" என்று சொல்லி பணிப்புறக்கணிப்புக்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. அன்றைய தமிழகம் தழுவிய பணிப்புறக்கணிப்புக்கு கிடைத்த சட்டப் பாதுகாப்பு.
அதுவே இன்று பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தது செல்லாது என்று சொல்லிவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
இதோ இப்போது சீமானை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது செல்லாது எனச் சொல்லி அதை இரத்தும் செய்து விட்டது நீதிமன்றம். சீமான் இன்னும் இரண்டொரு நாளில் விடுதலையாகிறார்.
கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத் என அனைவரின் விடுதலைக்குமே இத்தீர்ப்பு ஆதாரமான ஒன்றாக மாறியிருக்கிறது. வழக்கறிஞர்களைத் தாக்கிய வழக்கிலும் உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு சாதகமாக இல்லை.
இதெல்லாம் சட்டத்தின் நுணுக்கங்கள். ஆனாலும் ஒரு ஜனநாயக எழுச்சியை ஒடுக்க நினைக்கும் கருணாநிதி, காங்கிரஸ் கூட்டுக்கு தொடர்ந்து கிடைக்கும் சவுக்கடி.
கடந்த சில மாதங்களாக சோர்ந்து போய்க்கிடந்த தமிழக போராளிகளுக்கு இது தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு.
நூறு பெண்கள் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் இருக்கிறார்கள். மீண்டும் காங்கிரஸ் அலுவலகத்துக்கு முன் பெண்கள் மறியல் செய்கிறார்கள். சென்னைக்கு வெளியிலும் பலர் போராடுகிறார்கள்.
இதோ மீண்டும் பதின்மூன்றாவதாக ஒரு இளைஞன் தீக்குளித்திருக்கிறான். இந்த பதின்மூன்று பேரும் எதற்காகச் செத்தார்கள்?.
அவர்களைக்கொண்டு போய் புதைக்கவா? ஒவ்வொரு முறை எரிந்து விழும் போதும் விதையாக நினைப்பவர்களை நாம் விதைக்காமல் புதைக்க நினைத்ததன் விளைவு. போராட்டங்கள் நீர்த்துப் போயின.
பிணங்களைக் கொண்டு அரசியல் செய்து ஆட்சிக்கு வந்ததுதான் காங்கிரஸ் கட்சியின் வரலாறு. நாம் அரசியலுக்காக அல்ல ஈழ மக்களின் விடிவுக்காக. அங்கே செத்து மடிந்து கொண்டிருக்கும் நம் சொந்த மக்களுக்காக, போராடுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தருணங்கள் நமக்கு உருவாகி வருகிறது.
நாம் இதில் தோற்றுப் போவோம் என்றால் அன்றைக்கு மழையில் நனைந்து, பதவி விலகல் கடிதங்களைப் பெற்று, கவிதை எழுதி, கண்ணீர் விட்டு, கடைசியில் காலை வாரியபோதும் நாம் ஏமாந்த தமிழர்கள்தான் என்பது உண்மையாகிவிடும்.
இதோ ஒரு முருகதாஸ் புலத்தில் நெருப்பை மூட்டினான். இன்று புலத்தில் ஈழ மக்கள் லட்ச லட்சமாய் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
முப்பதுக்கும் அதிகமான நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் கொடியை புலம்பெயர் தமிழர்கள் சுமந்து அலைகிறார்கள். இரவு-பகலாய் அனைத்துலக சமூகத்தின் முகத்திற்கு முன்னால் ஒரு இனத்திற்கு இழைப்பட்ட அநீதியை முன்வைத்து நியாயம் கேட்கிறார்கள்.
இத்தனைக்கும் அவர்கள் எந்தப் புலிக்கொடியை தங்கள் தோள்களில் சுமக்கிறார்களோ அந்த புலிக்கொடி அந்த நாடுகளில் தடைசெய்யப்பட்ட கொடி என சிலர் ஈழ மக்களை பயமுறுத்துகிறார்கள்.
மேற்குலகம் அந்தப் போராட்டங்களை முற்றுமுழுதாக தடை செய்யவில்லை. கரிசனையோடு பதில் சொல்கிறது. பட்டும் படாமலும் பேரினவாத அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்கின்றது.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ்,கனடா, நோர்வே என எல்லா நாடுகளும் ஈழத் தமிழர்கள் மீது கவலை கொள்ளும் போது ஒரு சின்னஞ் சிறு தீவு ஏன் அந்த மேற்குலகின் குரலை உதாசீனப்படுத்துகிறது என தமிழக மக்களாகிய நாம் நினைத்துப் பார்த்ததுண்டா?.
ஆமாம் தென்கிழக்கில் நமது தாய்நாடான இந்தியாதான் இப்போதைய சண்டியர். அதுதான் இலங்கைப் போரை முட்டுக்கொடுத்து நடத்துகிறது. இதை நான் சொல்லவில்லை சிறிலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் சிறிபால டி சில்வாவே வெளிப்படையாக பல தடவைகள் கூறியிருக்கிறார்.
இதை நமது தாய்நாடான இந்தியாவும் மறுக்கவில்லை.
ஆமாம், தென்னாசியாவில் இந்தியாவை மீறி தற்கால உலகச் சூழலில் மேற்குலகம் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போட முடியாது நண்பர்களே! அதனால்தான் அது எல்லாவற்றையும் வேகமாக முடிக்க நினைக்கிறது.
5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்றொழித்த பிறகும் போர் நிறுத்தம் பற்றி சிறிலங்காவிடம் இந்தியா வாய் திறக்கவே இல்லை!
சோனியாவை கருணாநிதி வற்புறுத்துவாராம்; கடிதம் எழுதுவாராம்; சோனியா போரை நிறுத்த வேண்டும் என கருணாநிதிக்கு கடிதம் எழுதுவாராம்; அறிக்கைகள் கொடுப்பார்களாம்.
ஆக, இந்த நாடகங்கள் பலவீனமான தமிழகத் தலைமையை கேலிக்குள்ளாக்கியிருப்பதோடு, ஈழத் தமிழர் கொலையில் இந்த மௌனமும் ஒரு பிரதான காரணமாக இருப்பதை நாம் இன்னும் உணரவில்லையா?.
நமக்கு தேர்தல் முடிந்து யாருக்கு எத்தனை மந்திரிப் பதவி என்றெல்லாம் பங்கு போட்டு பின்னர் கடைசியில் ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம் என்றால் அப்போது ஒப்பாரி வைக்க ஈழம் ஒரு இடுகாடாக மட்டுமே இருக்கும்.
தோழர்களே!
போராடுவதற்கான வாய்ப்புக்கள் எப்போதும் வராது. எப்போதாவதுதான் வரும் கிட்டத்தட்ட 13 பேர் தீக்குளித்து மாண்டது நாம் போராட வேண்டும் என்றுதான்.
நாம் மீண்டும் மீண்டும் அவர்களைக் கொண்டு போய் புதைக்கிறோம். ஈழ எழுச்சியையும் சேர்த்துத்தான்.
இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் குண்டர்களால் கொல்லப்பட்ட அப்பாவி சீக்கிய மக்களுக்காக எரிந்த நெருப்பு இன்றும் எரிகிறது பஞ்சாப்பில்.
அந்த நெருப்பின் வெளிப்பாடே ப.சிதம்பரம் மீது வீசப்பட்ட செருப்பு.
மன்மோகன் பதறுகிறார்; சோனியா பம்முகிறார்; ஆனால் தமிழன் என்றால் இவனை எப்படியாகிலும் ஏமாற்றலாம் என்கிற எண்ணமும் துணிச்சலும் இருப்பதால்தான் ஈழத்துக்கான எழுச்சிகளை அடக்கி ஒடுக்கிறார்கள்.
போராடுவதற்கான, வீதிக்கு வருவதற்கான, வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் தவறவிட்டால் இனி எப்போதும் நம்மால் போராட முடியாது.
ஈழ மக்களைக் கொன்று எல்லா தமிழர் தாயகங்களையும் ஆக்கிரமித்து கடைசியில் பிரபாகரன் பற்றிய விருப்பங்களையும் வெளியிடுகிறார்கள் துரோகிகள்.
அன்பார்ந்த மாணவர்களே! வழக்கறிஞர்களே! பெண்களே! அக்கறையுள்ள அரசியல் தலைவர்களே! இப்போதும் நீங்கள் போராடத் தவறினீர்கள் என்றால் இனி எப்போதும் உங்களால் போராட முடியாமல் போகலாம்.
இன்று ஈழத்தில் வீசப்படும் குண்டுகள் நாளை நம்மீதும் வீசப்படாது என்பதற்கு ஒரு உத்திரவாதமும் இல்லை. அப்போது நமக்காக குரல் கொடுக்க இந்த உலகத்தில் ஒரு நாதியும் இருக்காது

அ.பொன்னிலா

தேர்த‌ல் ச‌ந்தை



மாண்ட‌வ‌ர் பெய‌ரைச்சொல்லி

வாக்குக‌ள் கேட்கும் விந்தை

வேறெந்த‌ நாட்டில் உண்டு.

இன‌த்துக்கு சேவை செய்ய‌

க‌ள‌த்துக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள்

இன்று காசு ப‌ண‌த்துக்க‌ல்ல‌வா

ப‌த‌வி ஆசை பிடித்து

அழைகிறார்க‌ள்.

ச‌ந்த‌ர்ப‌ சூழ‌லாலே

சில‌ த‌லைவர்க‌ள் ஆனோர்கூட‌

ச‌ந்திக்கு ச‌ந்தி நின்று

த‌லைக்கு மேலே

இரு கை தூக்கி

உன்னை ஈடாய்

வாக்குக்கு விலையும் பேசுகிறார்.

வாக்கெனும் ம‌ந்திர‌க்கோல்

வ‌ழ‌ங்கிடும் ப‌த‌விக்காக‌

காக்கையை குயிலாய்க்காட்டும்

க‌ய‌வ‌ர்க‌ள் வ‌ருவார் உனை தேடி.

சாக்க‌டை தொழிலுக்காய்

த‌ன் இன‌ மான‌ம் விற்போரின்

புக‌ழ்ச்சிக்கு ப‌லியாகிவிடாதே.

எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

Wednesday, April 8, 2009

இராஜபக்சே வென்றான் சோனியா தோற்றார்



வாழ்வுரிமைக்காக போராடி வரும் ஈழத்தமிழர்களை வேரறுக்க சிங்கள பேரினவாத அதிபர்கள் எடுத்த தந்திர செயலில் அவர்களே வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக இராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் தனி ஈழத்திற்காக போராடிவரும் போராளிகளை ஒடுக்க ஜெயவர்தனே செய்த தந்திர ஓப்பந்தத்தில் இராஜீவை கையெழுத்திடச்செய்து, ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தார்.

குறிப்பாக, இந்திய இராணுவ தளவாடங்களை வைத்து, போராளிகளை சிங்கள பேரினவாத அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக அணுகியது.
இதில் பல ஆயிரம் கோடிகளை இராணுவ செலவுக்காக இன அழிப்பு நடவடிக்கைக்காக கொட்டியது இந்திய அரசு. தமிழின படுகொலையை நிகழ்த்திய இந்திய அமைதிப்படையைப் பார்த்து கபட சிரிப்பு சிரித்தது சிங்கள அரசு. பொருள் இழப்பு, பல ஆயிரம் இந்திய படை வீரர்களை இழந்து வெறுங்கையுடன் திரும்பியது.

என்ன சாதித்தது?
அண்டை மண்ணில் மண்ணை கவ்வியப்படி முக்காடுப் போட்டுக் கொண்டு திரும்பியது அமைதிப்படை.

அது போலவே கணவனை இழந்து துயரத்தில் இருக்கும் சோனியாவின் குரோத்த்தை இராஜபக்சே பயன்படுத்திக் கொண்டான். அன்று ஒப்பந்தத்தின் மூலம் அத்துமீரல் நிகழ்த்தப்பட்ட்து. இப்போது சிங்கள அரசு தன் சொந்த மக்களின் மீதே முப்படைத் தாக்குதல்களை நிகழ்த்திவருகிறது.
இன்று ஒப்பந்தங்கள் இல்லை. மறைமுக தார்மீக ஆதரவு…
(இடையிடையே மேனன்,முகர்ஜி , சோனியா காந்தி போர் குறித்து ஆழ்ந்த கவலைகளை பகிர்ந்து கொள்வார்கள்)
வழி நடத்துவது இந்தியப்படை.
தொழில் நுட்ப உதவிகளை அளிப்பது இந்தியப்படை.
பயிற்சி அளிப்பது இந்தியப்படை.
நிதி உதவிகளை வழங்குவது இந்திய அரசு.
நேற்றுக் கூட உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட இரசாயண குண்டுகளை வீசியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்களை படுகொலை செய்யப்பட்டுள்ளதை உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

எதைக் கைப்பற்ற இந்த போர்?.
யாரைக்கேட்டார் சோனியா?
நாடாளுமன்றத்தில் விவாதித்தாரா?
எதிர் கட்சியுடனே பேசினாரா?
அல்லது தோழமைக் கட்சியின் ஒப்புதல் வாங்கினாரா?
சாதித்தது என்னவோ இராஜபக்சேதான்.

பல இலட்சக்கனக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
போராளிகளின் எல்லைகள் சுறுக்கப்பட்டு விட்டது. சம்மந்தமே இல்லாத இந்தியாவை, சோனியாவின் குரோத குணத்தைக் நயவஞ்சகமாக பயன்படுத்தினான் பக்சே.
இந்தியாவின் வெளியுரவுக் கொள்கை காற்றில் பறக்கிறது.
இந்திய சாமாதான புறா இரத்தத்தில் முகிழ்ந்து பறக்கிறது.
பல ஆயிரம் இந்திய வீரர்களின் மரணம் ஏன். யாரால்?
உலக வல்லரசுகளே நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளபோது இந்திய கரன்சிகள் கோடி கோடியாக இலங்கையில் ஏன் கொட்டப்படுகிறது?
சோனியா நினைக்கிறார் , போராளிகளை தனிமைப்படுத்தி ஒழிக்கலாம் என்று?.
இராஜபக்சேவுக்குத் தெரியும் போராளிகளும் மக்களும் வேறல்ல என்று.
சுமார் 3 இலட்சம் ஈழத்தமிழர் கொலைக்களத்தின் விளிம்பில் மிரட்சியோடு நிற்கிறார்களே யாரால்?
தினம் தினம் இந்திய வீரர்களின் சவப்பெட்டி வந்தவண்ணம் உள்ளதே யாரால்?
சோனியா எதை வென்றார்?
பதில் வெறுமையே.

Tuesday, April 7, 2009

பிரிவின் ர‌ண‌ங்க‌ள்

உன்னை பிரிய‌ப் போகிறேன்
என்ற‌ உண்மையை தெரிந்த‌ பின்
என் உயிரில் உறைந்துள்ள‌
எல்லா அன்பையும்உன‌க்காக‌
தந்து விட்டுபோக‌ப் போகிறேன்...

எங்கோ ஒரு தேச‌த்தில்
ஒற்றையாய் நிற்கும்
என் உயிரில் நிறைந்துள்ள‌
உயிரின் துடிப்புக‌ளின்
உணர்வுக‌ளுக்கெல்லாம்
ச‌மாதான‌ம் கூறுகிறாய்...

குளிர் கால‌ இர‌வுக‌ளில்
கொண்டாட்ட‌ தின‌ங்க‌ளில்
ஜோடி ஜோடியாக‌
ந‌ண்ப‌ர்க‌ள் கூடி போக‌
க‌ட‌ந்த‌ கால‌ நினைவுக‌ளிட‌ம்
அந்த‌ ஆன‌ந்த‌ வாழ்வை
ம‌றுப‌டியும் த‌ருமாறு
ம‌ண்டியிட்டு அழுகிறேன்...

ஒன்றாய் சேர்ந்திருந்து
ஓருயிராய் வாழ்ந்திருந்து
துருவ‌த்திற்கு ஒருவ‌ராக‌
விதி பிரித்து போட்ட‌ பின்
எந்த‌ ஆறுத‌லுமில்லாத‌
துய‌ர‌த்தீயில் வேகின்றேன்...

உன்னுயிரைப் ப‌ருகிப்ப‌ருகி
க‌ண்ணீரும் வேத‌னையும்
விசுவ‌ரூப‌ மெடுத்துவ‌ர‌
வேறெதும் செய்ய‌ முடியாம‌ல்
க‌ர‌ங்க‌ளை க‌ட்டிய‌வாறு
த‌லை தாழ்ந்து நிற்கின்றேன்...

என்னை தாக்கிய‌து
ம‌லையிலும் பெரிய‌ துய‌ர‌ம்
அந்த‌ அதிர்வுக‌ளை எல்லாம்
உள்வாங்கிய‌ என் நெஞ்சு
விக்கித்து நிற்கிற‌து...

இன்று விதி போட்ட‌ புதிரின் முன்
என் வாழ்வைப் ப‌லியிட்டே
விடை காண‌ வேண்டியுள்ள‌து...

- எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன்

நன்றி-அதிகாலை.காம்