உன்னை பிரியப் போகிறேன்
என்ற உண்மையை தெரிந்த பின்
என் உயிரில் உறைந்துள்ள
எல்லா அன்பையும்உனக்காக
தந்து விட்டுபோகப் போகிறேன்...
எங்கோ ஒரு தேசத்தில்
ஒற்றையாய் நிற்கும்
என் உயிரில் நிறைந்துள்ள
உயிரின் துடிப்புகளின்
உணர்வுகளுக்கெல்லாம்
சமாதானம் கூறுகிறாய்...
குளிர் கால இரவுகளில்
கொண்டாட்ட தினங்களில்
ஜோடி ஜோடியாக
நண்பர்கள் கூடி போக
கடந்த கால நினைவுகளிடம்
அந்த ஆனந்த வாழ்வை
மறுபடியும் தருமாறு
மண்டியிட்டு அழுகிறேன்...
ஒன்றாய் சேர்ந்திருந்து
ஓருயிராய் வாழ்ந்திருந்து
துருவத்திற்கு ஒருவராக
விதி பிரித்து போட்ட பின்
எந்த ஆறுதலுமில்லாத
துயரத்தீயில் வேகின்றேன்...
உன்னுயிரைப் பருகிப்பருகி
கண்ணீரும் வேதனையும்
விசுவரூப மெடுத்துவர
வேறெதும் செய்ய முடியாமல்
கரங்களை கட்டியவாறு
தலை தாழ்ந்து நிற்கின்றேன்...
என்னை தாக்கியது
மலையிலும் பெரிய துயரம்
அந்த அதிர்வுகளை எல்லாம்
உள்வாங்கிய என் நெஞ்சு
விக்கித்து நிற்கிறது...
இன்று விதி போட்ட புதிரின் முன்
என் வாழ்வைப் பலியிட்டே
விடை காண வேண்டியுள்ளது...
- எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
நன்றி-அதிகாலை.காம்
Tuesday, April 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பிரிவுகள் அன்பின் ஆழத்தை இன்னும் அதிகம் செய்யவே என்பது நீங்கள் அறிந்ததுதான்....
இது தந்தை மகனுக்கு கூறிவதாய்...
http://karuveli.blogspot.com/2008/12/blog-post_14.html
Post a Comment