Tuesday, August 31, 2010

"தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை
கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, நமக்கு அனுப்பியுள்ள, "இ-மெயில்' கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க... ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும்.

தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், "டாஸ்மாக்...' அங்க இருக்கிற சரக்குக்கு எல்லாம், தமிழ்லே பேர் வைச்சு சாதாரண, "குடி'மக்களை, "தமிழ் குடிமக்களாக' மாற்ற வேண்டுகிறேன். அதுக்காக, நானே சில பெயர்களை யோசிச்சு வைச்சிருக்கேன். இதை அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லை. நீங்க வேணும்னா, இதுக்குன்னு தமிழ் புலவர்களைக் கொண்ட ஒரு குழு அமைச்சு, நல்ல, நல்ல பெயரா வையுங்க...

அவர் அனுப்பியுள்ள பட்டியல்:

சரக்கு பெயர் தமிழ் பெயர்

1. மிடாஸ் கோல்டு - தங்கமகன்
2. நெப்போலியன் - ராஜராஜசோழன்
3. கோல்கொண்டா - கங்கை கொண்டான்
4. வின்டேஜ் - அறுவடைத் தீர்த்தம்
5. ஆபிசர்ஸ் சாய்ஸ் - அதிகாரிகள் விருப்பம்
6. சிக்னேச்சர் - கையொப்பம்
7. ஓல்டு மங் - மகா முனி
8. ஓல்டு காஸ்க் - பீப்பாய் சரக்கு
9. கேப்டன் - தனிச் சரக்கு
10. ஜானிவாக்கர் - வெளியே வா
11. ஓட்கா - சீமைத்தண்ணி
12. கார்டினல் - பொதுக்குழு
13. மானிட்டர் - உளவுத்துறை
14. பேக் பைப்பர் - "ஊத்து'க்காரன்
15. சீசர் - கரிகாலன்
16. மெக்டவல் - "மட்டை' வீரன்
17. டிரிபிள் கிரவுன் - மூணு தலை
18. மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி
19. ராயல் சேலன்ஞ் - நாற்பதும் நமதே
20. ஹேவார்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000
21. ஜிங்காரோ - சிங்காரி சரக்கு
22. கோல்டன் ஈகிள் - தங்க கழுகு
23. கிங் பிஷர் - மீன்கொத்தி
24. மார்பியூஸ் - மயக்கி

இப்படிக்கு
தமிழ் குடிமகன்கள்

Monday, August 30, 2010

இந்தியா உருவானது எப்படி?ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. மவுரியர், கனிஷ்கர், குப்தர், அர்ஷவர்த்தனர், சுல்தான்கள், பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். தனித்தனி நிலப் பகுதிகளில், தனித்தனி ஆட்சிகளே நடந்தன. ஒரே குடையின் கீழ் பெரும் நிலப்பகுதி கொண்டு வரப்பட்டபோது கூட, தன்னாட்சிகளை அழித்து விடவில்லை.
மராத்தியை மய்யமாகக் கொண்ட மத்திய இந்திய பகுதி, தக்காணிப் பிரதேசம் என்று அழைக்கப்படுவ தாகும். இங்கும், தனித்தனிப் பிரதேசங்களும், தனித்தனி ஆட்சிகளுமே நடந்திருக் கின்றன. மராத்தி, ஒரிசா, கன்னடம் மற்றும் ஆந்திரப் பகுதி களைக் கொண்ட இந்தத் தக்காணப் பிரதேசத்தில் சாத வாகணர் என்ற ஆந்திரர்கள், சாளுக்கி யர், ராஷ்டிரகூடர், கங்கர், கடம்பர் என்று பல் வேறு வம்சத்தினரின் ஆட்சி கள், தனித்தனிப் பகுதிகளில் நடந்தன.
13 ஆம் நூற்றாண்டில், வட இந்தியாவி லிருந்து, மொகலாயர்கள் படை எடுத்து வந்து, தக்காணத்தின் வடபகுதியைக் கைப்பற்றினர். அப்போது தக்காணத் தென்பகுதியில் விஜயநகரப் பேரரசு இருந்தது. இது, மத்திய இந்தியாவின் நிலை என்றால், தென்னிந்தியாவின் வர லாறு என்ன? சேரர், சோழர், பாண்டியர், களப்பிரர், பல்லவர் மற்றும் குறுநில மன்னர்களின் ஆட்சிகளுக்குட்பட்ட, தனித் தனிப் பிரதேசங்கள்தான் இருந்தன. இந்திய வரலாற்றில், பெரும் நிலப் பகுதியைக் கைப்பற்றி, பல தனி யாட்சிகளை ஒழித்து - ஒரு முக ஆட்சியை உருவாக்கியவர்கள் மொக லாயர்கள் தான்!
மொகலாயர்கள் பேரரசு நடந்த காலத்தில்தான் பார்ப்பனர்கள் நாடு முழுவதும், சமூக அரங்கில் தங்கள் ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொண் டார்கள். இந்தியாவில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாத பல்வேறு இனக் குழுக்களை, பார்ப்பனர்கள் தங்கள் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வந்ததும் இந்தக் காலத்தில் தான். முஸ்லிம் அல்லாத எல்லோரையும், மொகலாய மன்னர்கள் ‘இந்து’ என்று கூறியதும், ‘இந்து’ என்ற பெயர் வழக்கில் வந்ததும், அக்காலத்தில் தான். சமஸ் கிருத சுலோகங்களையும், வேதங்களை யும் பார்ப்பனர்கள், தங்கள் சுயநலச் சுரண்டலுக்கு ஏற்ப திருத்தி அமைத்துக் கொண்டதும் அப்போதுதான்.
அப்போதும் தமிழ்நாடு மொக லாயர்கள் ஆட்சியின் கீழ் வரவில்லை. அத்தகைய மொகலாயப் பேரரசுகூட, அவுரங்கசீப்புக்குப் பிறகு வீழ்ந்து விட்டது. அதன் பிறகு 66 ஆண்டு களுக்கு, இந்தியத் துணைக் கண்டத்தைக் கட்டி ஆளும் ஒரே மய்ய அரசு எதுவும் உருவாகியதில்லை. ஆங்கிலேயரின் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனிதான் இங்கே குறி வைத்தது. இந்த வர்த்தகக் கம்பெனி உருவாக்கப் பட்ட நாள் 1.12.1600. இந்திய அரசர் களிடம் உரிமை வாங்கிக் கொண்டு, கடற்கரை ஓரமாக தங்களது வர்த்தகக் குடியேற்றங்களை இவர்கள் ஏற் படுத்திக் கொண்டனர். கி.பி. 1612 இல் முதன்முதலாக சூரத்திலும் தொடர்ந்து மசூலிப்பட்டிணம் (1616), அரிகர்பூர் (1633), சென்னை (1640), பம்பாய் (1669), கல்கத்தாவிலும் (1686) வர்த்தகக் குடியேற்றங்களை நிறுவினர்.
வர்த்தகம் செய்ய வந்தவர்கள், நாடு பிடிக்கும் ஆசையை விட்டு விடுவார் களா? இந்தக் கம்பெனி வெறும் கை யுடன் வந்துவிடவில்லை. தனக் காக ஒரு கடற்படையை வைத்துக் கொள்ளவும், தேவையான சட்டங்களை இயற்றிக் கொள்ளவும் பிரிட்டிஷ் ராணியிடம் உரிமை பெற்றிருந்தது. முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிட்டகாங் பகுதியைத் தாக்கி தோல்வி கண்டார்கள். பிரிட்டிஷ் கம்பெனி நாட்டை விட்டே வெளி யேற வேண்டும் என்று உத்தரவு போட்ட அவுரகசீப் மரணமடைந் தார். (கி.பி.1707) பேரரசு சிதைந்து, தனித்தனி ஆட்சிகள் உருவானது. தனது அதிகாரத்தை உறுதிப் படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு நல்ல வாய்ப்பாகி விட்டது.
ராபர்ட் கிளைவ், ஆற்காடு பகுதியைப் பிடித்தார் (கி.பி.1749) தொடர்ந்து 12 ஆண்டுகள் போர் நடத்தி தென்னிந்தி யாவின் பல பகுதிகளைப் பிடித்தனர். கருநாடகப் போர்கள் மூலம் ஆந்திரத் தின் பெரும் பகுதியைக் கைப்பற்றினர். வெற்றி களைக் குவித்த ராபர்ட் கிளைவ் வடக்கே போனார். பிளாசி யுத்தம் நடத்தினார்; அதில் வங்கம் வீழ்ந்தது. அதைத் தொடர்ந்து ஒரு நூற்றாண்டில், படிப்படியாக ஆங்கிலேயர்கள் கைப் பற்றிய பல்வேறு பகுதிகள்தான் இந்தியா. ஆங்கிலேயர் ஆட்சி செய்த இந்தியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும் பகுதியும், பர்மாவும் (இன்றைய மியான்மர் நாடு) இலங்கையும் அடங்கி இருந்தது.
அப்போது இலங்கை ஒரு மாவட்ட மாகக் கூட அங்கீகரிக்கப்படவில்லை; ஒரு வட்டமாகவே கருதப்பட்டு, அதன் நிர் வாக அலுவலகமே தமிழநாட்டில் தான் இருந்தது. இன்றைய பாகிஸ் தானும் பங்களாதேசும் அன்றைய ‘இந்தியா’ தான். இப்போதுள்ள வட கிழக்கு மாநிலங்களோ, காஷ்மீரோ அன்றைய இந்தியாவில் இல்லை. ஆக, 3000 ஆண்டு கால வரலாற்றில் - தனித் தனிப் பகுதி களாக நிலவிய தேசங்களை - துப்பாக்கி முனையில் மிரட்டி, ஆங்கிலே யர்களால் உருவாக்கப்பட்ட நாடுதான் ‘இந்தியா’.

விடுதலை இராசேந்திரன்.

Saturday, August 28, 2010

ஜனவரி 29'... முத்துக்குமார் பற்றிய ஆவணப்படம்ஈழத்‌தி‌ல்‌ நடை‌பெ‌ற்‌ற தமி‌ழி‌ன அழி‌ப்‌பு‌ போ‌ரைக் கண்டு உள்ளம் வெதும்பி, கையறு நிலையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட முத்‌துக்‌குமா‌ர்‌ பற்‌றி‌ய ஆவண படம்‌ 'ஜனவரி‌ 29' என்‌கி‌ற பெ‌யரி‌ல்‌ உருவா‌கி‌யுள்‌ளது.

இந்‌த ஆவண படத்‌தி‌ன்‌ வெ‌ளியீ‌ட்‌டு விழா(29.08.2010) அண்‌ணா‌ சா‌லை‌யி‌ல்‌ உள்‌ள பி‌லி‌ம்‌ சே‌‌ம்‌பர்‌ தி‌ரை‌யரங்‌கி‌ல்‌ நடை‌பெ‌றுகிறது.

‌வி‌ழா‌வி‌ல்‌ இயக்‌குநர்‌ அமீ‌ர்‌ கலந்‌துகொ‌ண்‌டு சி‌டியை‌‌ வெ‌ளி‌யி‌ட, முத்‌துக்‌குமா‌ரி‌ன்‌ தந்‌தை‌ குமரே‌சன்‌, ரோ‌ட்‌டரி‌ ஆளுநர்‌ ஒளி‌வண்‌ணன்‌ பெ‌ற்‌றுக்‌கொ‌ள்‌கி‌ன்‌றனர்‌.

இயக்‌குநர்‌கள்‌ சுந்தரராஜன், ஆர்‌.கே‌.செ‌ல்‌வமணி‌, பு‌கழே‌ந்‌தி‌ தங்‌கரா‌சு, கவி‌ஞர்‌ அறி‌வு‌மதி‌, கவி‌ஞர்‌ தா‌மரை‌, எழுத்‌தா‌ளர்‌ பா‌லமுரளி‌வர்‌மன்‌ ஆகி‌யோ‌ர்‌ பே‌ச உள்‌ளனர்‌. வி‌ழா‌ நி‌கழ்‌ச்‌சி‌களை‌ இயக்‌குநர்‌ ஐந்‌துகோ‌வி‌லா‌ன்‌ தொ‌குத்‌து வழங்‌குகி‌றா‌ர்‌.

Wednesday, August 25, 2010

இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன் - நியாயம் கேட்கிறார் சீமான்
இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன், நான் பேசியதால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்றால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே செயலால் இரு நாடுகளின் உறவும் ஏன் பாதிக்கபடவில்லை என இயக்குனர் சீமான் சீற்றத்துடன் கேட்டார்.

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக கடந்த மாதம் 12ம் தேதி தமிழக அரசு சீமானை சிறையில் அடைத்தது. தேசிய பாதுகாப்பச் சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டதை ஆட்சேபித்து, நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்நதார். இறுதியாகக் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டதன் பின்னர் நேற்று வெளியே வந்த சீமான், மேற்படி தீர்ப்பாயத்தின் முன் ஆஜராகி தனது தரப்பு வாதங்களைத் தெரிவித்திருந்தார்.

பொலிஸ் காவலுடன் வெளியே வந்த சீமான், ஆட்சியதிகாரம் சிறையிலடைந்துச் சிறுமைப்படுத்த நினைத்த போதும், 'இருப்பாய் தமிழா நெருப்பாய், இருந்தது போதும் செருப்பாய் ' என அவர் அடிக்கடி உச்சரிக்கும் வரிகளுக்கு ஏற்ப சீறும் சிறுத்ததையாகவே காணப்பட்டார். காவலுக்கிருந்த பொலிசாரையும் மீறிப் பத்திரிகையாளர்களிடம் தன் தரப்பு நியாயங்களைக் கேள்விகளாக உதிர்த்தார்.

இறையாண்மைக்கு எதிராக நான் என்ன பேசி விட்டேன், நான் பேசியதால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்படும் என்றால் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே செயலால் இரு நாடுகளின் உறவும் ஏன் பாதிக்கபடவில்லை எனச் சீற்றத்துடன் கேட்டார். நான் பேசியது தவறு என்றால் இந்த குற்றத்தை தூண்டி விட்ட ராஜபக்சேவிற்கு தண்டனை வழங்குவது யார் ? சீமானை சிறையில் அடைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிட்டது என்று தமிழக அரசு பகல் கனவு காண்கிறது . மக்களுக்காக நடத்தப்படும் போராட்டம் தவறு என்றால் அதே தவறை மீண்டும், மீண்டும் செய்வேன் எனக் கர்ஜித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும், அரசியலில் லாபம் அடைவதற்காக தாம் அரசியல் இயக்கத்தை தொடங்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்திய சட்டம் 21ன் படி தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்பது தமிழனுக்கு கிடையாதா ? எனவும் கேட்டார்.

சீமானைச் சிறையிலடைத்ததின் மூலம், ஆளும் திமுக அரசு இரட்டை லாபம் அடையலாம் என திட்டம் தீட்டியது. ஒன்று காங்கிரஸ் தலைமைப்பீடத்திடம் நல்ல பெயர் எடுப்பது, மற்றொன்று தனக்கு எதிராக பேசுபவர்களுக்கு எல்லாம் இதுதான் கதி என மறைமுகமாக மிரட்டல் விடுப்பது, ஆனால் இவை எல்லாவற்றையும் மீறி, சீமான் தன் இலட்சியத்தின் வழியில் தொடர்ந்து பயணிக்கும் மிடுக்குடனேயே காணப்பட்டார் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

யானை பார்த்த குருடர்களாகத் தமிழினம்ஈழத்தமிழர்களின் எதிர்காலம் குறித்து என்ன நினைக்கிறீங்கள்?’

என்ற கேள்விக்கு பொருத்தமான, தெளிவான பதிலை இன்றைய நிலையில் யாரும் தெரிவிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படியான குழப்பகரமான நிலையில் ஈழத்தமிழரின் அரசியல் எதிர்காலமும் நிகழ்கால அரசியல் நடவடிக்கைகளும் இருக்கின்றன.நிகழ்கால நடவடிக்கைகளும் முயற்சிகளுமே எதிர்காலத்தை உருவாக்குகின்றன.

அதேவேளை அது நிகழ்காலத்தையும் பாதுகாக்கிறது.

இதுதான் பொதுவான விதி.

ஆனால், இந்த விதி ஈழத்தமிழரின் அரசியல் தலைவிதியிலும் வாழ்க்கையிலும் வேறுவிதமாகவே விளையாடிக்கொண்டிருக்கிறது.

அது நிகழ்காலத்தையும் பாழடித்து, எதிர்காலத்தையும் பழுதாக்கிக்கொண்டிருக்கிறது.

பொதுவாக சிதைந்து போன நிகழ்காலத்தின் முன்னே இருக்கும் எதிர்காலத்துக்கான கேள்விக்குறியின் மீது குந்திக் கொண்டும் படுத்துறங்கிக் கொண்டுமே ஒவ்வொரு தமிழரும் வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கிறது. முப்பதாண்டு காலத்துக்கும் அதிகமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட, முதன்மைப் போராட்டக்காரரான ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார். நான் மூன்று விதமான சவால்களை இந்த முப்பதாண்டுகால வாழ்க்கையிலும் எதிர்நோக்கியிருக்கிறேன்.

ஓன்று, நடந்து கொண்டிருந்த போராட்டத்தை வெற்றிபெற வைக்கவேண்டும் என்பதற்கான சவால். அதற்காக இரவு பகலாக பல்வேறு நெருக்கடிகள், அபாயங்களின் மத்தியில் உழைக்க வேண்டியிருந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி நிலைமைகளும் நிகழ்ச்சிகளும் அமையவில்லை. கண்ணுக்கு முன்னே அதுவரையான அத்தனை உழைப்பும் முயற்சிகளும் வீணாகி,வீழ்ச்சியடைந்ததைப் பார்த்தேன்.

அடுத்த சவால், நெருக்கடிக்குள்ளாகியிருந்த போராட்டத்தையும் போராட்டத் தலைமையையும் போராளிகளையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒருநிலையில் ஏற்பட்ட சவால். இந்தச் சவாலுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகளும் கடைசியில் வீணாகிவிட்டன.

இப்போது மூன்றாவது சவால் முன்னே வந்து நிற்கிறது. போரினால், பாதிக்கப்பட்டிருக்கும் மக்களையும் அந்த மக்களின் பிரதேசங்களையும் மீளக்கட்டியெழுப்பவேண்டும் என்ற சவால்.
இந்தச் சவாலை எப்படியும் வெற்றிகரமாக எதிர்கொள்ள வேணும்’ என்று சொல்லி அவர் பெருமூச்சு விட்டார்.

இதுதான் உண்மை.

ஈழத்தமிழரின் அரசியற் போராட்டம் இன்று இப்படித்தான் ஒருநிலையில் வந்து நிற்கிறது.

வெற்றியடைந்திருக்க வேண்டிய போராட்டம், காப்பாற்றப்பட வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டு, அதுவும் முடியாமல், இப்போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளது. ஆகவே இப்போது தமிழரின் அரசியல் என்பது மீட்புப்பணியை மேற்கொள்வதாகவே இருக்க வேண்டும் என்றாகியுள்ளது.

இதை இன்னொரு நண்பர் இன்னொரு விதத்தில் சொல்கிறார்,

இப்போது தமிழரின் அரசியல் போராட்டம் முதலுதவிப் போராட்டமாக மாறியிருக்கிறது’ என்று.

இப்படி இந்தப் போராட்டம் சிதைந்துபோனமைக்கு சகல தரப்பினரும் பொறுப்பாளிகளே. வேண்டுமானால், விகித வேறுபாடுகள் ஒவ்வொரு தரப்புக்கும் இருக்கலாம். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், மீண்டும் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்காமல், மேலும் காலத்தை வீணாக்காமல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணும்.

ஏனெனில், இது மீட்பு வேளை. பாதிக்கபட்ட மக்களை அவற்றிலிருந்த மீட்கும் நடவடிக்கை. அவர்களை மீட்டேயாக வேண்டிய கட்டாயம். மீட்புப் பணியில் தாமதத்திற்கு இடமேயில்லை. அங்கே நடவடிக்கைக்கே முதலிடம். விரைவே முன்மையாகும்.

ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அடிக்கடி சொல்வதைப் போல ‘உலகம் முழுவதிலும் இருக்கின்ற தமிழீழ விரும்பிகளுக்காக வன்னியிலும் வாகரையிலும் படுவான்கரையிலுமாக நான்கு லட்சம் மக்கள் சிலுவையைச் சுமந்தார்கள்’ என்பது இங்கே கவனிக்க வேண்டியது.
இதில் இறுதிப் போர் நடைபெற்ற வன்னியில், பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை இன்னும் மோசமானது. இதைச் சகலரும் அறிவர்.ஆனால், இந்த மக்களின் மறுவாழ்வைப்பற்றிச் சிந்தித்து, இந்த மக்களை அவர்கள் சந்தித்திருக்கும் அத்தனை பாதிப்புகளிலிருந்தும் மீட்பதற்கு எவர், என்ன முயற்சி எடுத்திருக்கின்றனர்?

அரசாங்கம் இதில் இன்னொரு குற்றவாளியாகவே செயற்பட்டு வருகிறது.

போர்க்குற்றம் மட்டுமல்ல, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறுவதும் குற்றமே.

பாதிக்கப்பட்ட மக்களின் நிகழ்கால, எதிர்கால உத்தரவாதங்களைச் சிதைப்பது பெரும் அடிப்படை மனிதவுரிமை மீறலாகும். ஆனால், உள்ளுர் அரசியல்வாதிகளிலிருந்து சர்வதேசம் வரை இந்தக்குற்றங்களைப் பார்த்துக் கொண்டு கைகளைப் பிசைகின்றனவே தவிர, இதற்கு மாற்றாக எந்த நடவடிக்கையும் எடுக்க முனையவில்லை.

போர் முடிந்து ஓராண்டாகிறது.

இதற்குள் நடைபெற்ற தேர்தல்களில் மும்முரமாக தமிழ் அரசியற்கட்சிகளே போட்டியிட்டிருக்கின்றன.

தாம் போட்டியிடாத ஜனாதிபதித் தேர்தலுக்குக் கூட, எத்தனையோ தடவை ஆலோசனைக்கூட்டங்கள் நடத்தி, ஊர் ஊராகச் சென்று மக்களிடம் ஆதரவு கேட்டுப் பெரும்பங்காற்றியிருக்கின்றன. ஊடகங்கள் கூட இந்தத் தேர்தல் திருவிழாக்களைக் கொண்டாடிய விதம் சிரிப்புக்கிடமானது.

ஆனால், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையும் அரசியற் போராட்டமும் வந்து நிற்கின்ற நிலையும் இடமும் பற்றிய கவலைகளை யாரும் பெரிதாக உணர்ந்த மாதிரி இல்லை.

இன்னும் யானை பார்த்த குருடர்களாகவே நடவடிக்கைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்கின்றனர்.

தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கான ஒரு தளம் தேவை. அது அரசியற்போராட்டமாக இருந்தாலும். அந்தத் தளம் என்பது பலமாக இருக்க வேணும். அந்தப்பலம் என்பது மக்கள் ஆரோக்கியமாக இருப்பதிலேயே அமைகிறது. இந்த ஆரோக்கியம் பல வகையில் அமையும்.

ஒன்று உடல் ஆரோக்கியம்.
அடுத்தது, வாழ்க்கையின் ஆரோக்கியம்.
மற்றது உள ஆரோக்கியம்.
அடுத்தது, சிந்தனை ஆரோக்கியம்.
இப்படி எல்லாத் தளங்களிலும் ஆரோக்கியமான நிலைமை இருக்கும் போது அல்லது ஏற்படும் போது அந்தப் போராட்டம், அந்த மக்கள் நிச்சயம் வெற்றி பெறுவர். இல்லையென்றால், பின்னடைவுகளும் தோல்விகளுமே சாத்தியமாகும்.

சுவலைத் தனங்களுடன் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ள முடியாது. இது வரலாறு திரும்பத் திரும்பச் சொல்லித்தரும் பாடமாகும். ஏதோ ஒரு நிலையில் ஆரோக்கியக் குறைபாடிருந்தாலும் அந்தச் சமூகத்தினால் முன்னேறவோ வெற்றியடையவோ முடியாது. ஆகையால், அரசியலாளர்களும் கல்விமான்களும் ஊடகங்களும் எப்போதும் மக்களை ஆரோக்கிய நிலையில் வைத்திருக்க உழைத்துக் கொண்டிருப்பது அவசியமாகும்.

இந்த முயற்சிக்கு

புலம் பெயர் நாடுகளில், ஈழத்தமிழரின் அரசியலைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கும் தரப்புகளும் சரி எல்லாமுமே புண்ணிருக்கும் இடத்தை விட்டு விட்டு வேறிடத்துக்கு மருந்து போடுவதிலேயே அக்கறைப்படுகின்றன. காயத்திலிருந்த இரத்தம் பெருக்கெடுக்கிறது. அதைக் கட்டுப்படுத்தி, மருந்து போட்டு ஆளைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக ஆளுக்குப் புரியாணிகொடுப்பதா, பட்டுச் சட்டை போட்டு அழகு பார்ப்பதா என்றே சிந்திக்கப்படுகிறது.

இந்த அரங்கம், அல்லது அரங்கத்துக்கு வெளியே இருக்கும் தரப்புகள் எவையாவது, எப்போதாவது இந்த பாதிக்கப்பட்ட மக்களின் மையத்திலிருந்து பிரச்சினைகளைப் பார்க்கின்றனவா?

பிரச்சினைகளைப் பேசுகின்றனவா?

இந்த மக்களின் அருகிலிருந்து கவனயீர்ப்புக்காகவாவது ஒரு ஊடகவியலாளர் சந்திப்பையாவது நடத்தியிருக்கின்றனவா?
போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகள் பற்றி ஒவ்வொருவருக்கும் அபிப்பிராயங்கள் இருக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் என்பதும் அவர்களுடைய பிரச்சினைகள் என்பதும் போராட்டத்தில் ஏற்பட்ட தவறுகளுக்கு அப்பாலானது. அது அரசாங்கத்திலிருந்து அனைவருக்கும் பொதுவானது. ஏப்போதும் பிரச்சினைகளையும் பொறுப்புகளையும் மற்றவர்களின் மீது தள்ளிவிடும் ஒரு போக்கு தமிழில் தீவிரமாக வளர்ச்சியடைந்து விட்டது.

இதிலும் சகல தரப்பினரும் அடங்குகின்றனர். நேரடியாக அரசியலில் ஈடுபடுவோரும் சரி, நேரடியாக இல்லாமல் பின்னணியில் நின்று இயங்குவோரும் சரி இதில் சேர்ந்து கொள்வர். இது ஒரு உளவியற்பிரச்சினையும் அரசியற் தந்திரமுமாகும்.

ஆனால், இந்தத்தந்திரம் இவர்களைத் தனிப்பட்ட முறையில் ஒரு எல்லைவரை காப்பாற்றலாம். ஒருகட்டம் வரையில் இவர்களை முதன்மைப்படுத்தக்கூடும்.

ஆனால், மக்களுக்கு இதனால், ஒரு போதுமே எந்தப் பிரயோசனமும் கிட்டிவிடாது. அதேவேளை ஒடுக்கும் அரசுக்கும் அதன் அதிகார வர்க்கத்துக்கும் இது அதிகவாய்ப்பைக் கொடுக்கிறது. இதுதான் இதுவரையிலும் நடந்து வந்ததுமாகும். இப்போது தொடர்வதுமாகும்.

ஆகவே, இப்போதிருக்கும் முதலுதவிப் பணியை யார் முன்வந்து செய்கின்றனரோ அவர்களுக்கே மக்களிடம் இடம் கிடைக்கும்.

வரலாற்றிலும் அவர்களுக்கே வாய்ப்புகள் கிட்டும்.

மக்களிடம் எந்தத் தரப்புக்கு இடமிருக்கிறதோ அந்தத்தரப்புக்கே வரலாற்றிடமும் இடமிருக்கும்.

முதலுதவிப் பணியை விரிவாக்கம் செய்து உலகத்தில் இருக்கின்ற தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரலாம்.

ஆனால், அது அரசியல் என்பதற்குப் பதிலாக மேலான மனிதாபிமானப் பணி என்ற வகையில் தொடங்கப்படுவதே சிறப்பு.

எந்த அரசியல் முன்னெடுப்பும் மேலான மனிதாபிமான எண்ணங்களிலிருந்தும் மேன்மையான மனிதாபிமானப் பணியிலிருந்தும் உயர்ந்த மனிதாய நோக்கிலிருந்துமே உருவாகிறது.

அது இல்லாத போது அது எத்தனை விதமான முயற்சிகளை எடுத்தாலும் வெற்றியடையாது.

வரலாற்றில் இதற்கும் ஏராளம் முன்னுதாரணங்கள் உண்டு. ஏன், எங்களிடமும் இதற்கு அனுபவங்கள் இருக்கின்றன.

ஆகவே, முதலில் தாகத்துக்குத் தண்ணீர் கொடுக்கும் பணியை – முதலுதவி அரசியலை – தமிழ் அரசியலில் ஆரம்பிப்போம்.

கட்டுரையாளர் கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் இன்போதமிழ் குழுமம்

Saturday, August 21, 2010

அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி !
‘நான் பெரியாரின் மகன். பிரபாகரனின் சகோதரன்‘என்று கோடம்பாக்கத்தில் நின்று கொள்கை பேசுகிற தீவிரம். இளையராஜா, ரஹ்மான் என யாருக்கு எழுதினாலும் ஆங்கிலம் கலந்து எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம். ”கிளிக்கு எதற்கு கழுகின் சிறகுகள்?” என்கிறார் கோபமாக.

இருபத்தைந்து ஆண்டுகளாகக் கவிதைத் தமிழும் இப்போது திரைத் தமிழும் எழுதுகிற அறிவுமதியின் பெயர் மதியழகன். நண்பன் அறிவழகனின் பெயரையும் தனதாக்கி அறிவுமதி ஆனவர். அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, பாரதிராஜாவிடம் பாடம் பயின்றவர். ‘சேது‘ பாலா, பழநி பாரதி தொடங்கி ஒரு இளமைப் பட்டாளத்துக்கே இவர்தான் ஆரம்பப் படிக்கட்டு. காதல் பற்றிப் பேச ஆரம்பித்தால் கவிதையாகப் பொழிகிறார்.

”காதலை உணர்வு பூர்வமாக, அறிவுபூர்வமாக என இரண்டு தளத்தில் அணுகினாலும் அது மிகச் சிறந்த வழியாகவே படுகிறது எனக்கு. எல்லா உயிர்களிலும் காமம், காதல் என்பன மிக இயல்பாக உள்நுழைந்து வெளியேறும்போது, மனிதர்களில் மட்டும் தான் நுழையத் திணறி, நுழைந்தாலும் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கிறது. சூழல்தான் காரணம். காதலை நாம் இலக்கியங்களில், திரைப்படங்களில் கொண்டாடுகிறோம். ஆனால், நிஜத்தில் நசுக்கப் பார்க்கிறோம். சமூகம் அதைக் கீழானதாகக் கருதி வெறுத்து ஒதுக்க ஒதுக்க, அது வெறி கொண்டு வளரத் தான் செய்யும். அதை நெறிப்படுத்தாத வரைக்கும் திரையரங்க இருளையும் வெளிச்சம் குறைந்த விடுதிகளையும்தான் தேடி ஓடும்.

காதலை மதிக்கப் பழகினால் போதும்… அது அதன் இயல்போடு மலரும். உறுதியானது வேர் பிடிக்கும். மற்றது எல்லாம் வாடி ஓடிவிடும். வாழப்போகிறவர்களை வாழ்த்தப் பாருங்கள். மறுத்தால் அந்த வாய்ப்பைக்கூட இழந்து விடும் அபாயம் உண்டு.” ”பரபரப்பான போட்டிகள் நிறைந்த உலகத்தில் காதல் மாதிரி மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறதா?” ”இது குருதி உறவுகளின் உலகம் அல்ல. இது நண்பர்களின் உலகம். பொருள் தேடிப் புறப்பட்ட பிறகு உறவுக் குழுக்களின் வாழ்க்கை தொலைந்து போயிற்று. திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் தான் கொத்துக் கொத்தாக மனிதர்களைப் பார்க்க முடிகிறதே தவிர… வாழ்கையென்னவோ தீராப்பெருநதியின் பயணமாகி ஓடுகிறது. பெண்கள் வந்துவிட்டார்கள். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எனக் கல்வி நிலையங்களிலும் பயணங்களிலும் அத்தனை அலுவலகங்களிலும் உரிமைகளை மீட்கிற போராளிகளாகப் பெண்கள் வந்த பிறகு வாழ்க்கை அதன் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.

பெண் சிநேகிதம் பெரிய கனவு என்ற மயக்கம் ஆண்களுக்கும் ஆண்களுடன் பேசுவதே அநாகரிகம் என்ற தயக்கம் பெண்களுக்கும் இப்போது இல்லை. கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல… அன்றாட வாழ்வின் அத்தனை சிக்கல்களிலும் பங்கேற்று உதவ வந்து ஆண் – பெண் நட்பு அழகாகிவிட்டது. என் நண்பன்… என் தோழி என்று வீட்டுக்கு வீடு வந்து போக அனுமதிக்கிற பக்குவம் பெற்றோருக்கும் வந்துவிட்டது. அப்படிச் சந்தித்துப் பேசிப் பழகிப் புரிந்து சேர்ந்து வாழத் துவங்குவது ஆரோக்கியமான விஷயம். ஒரு பெண்ணும் ஆணும் மணவறையில்தான் பார்த்துக் கொள்வதென்பது சோகம். அவர்களின் முதல் சந்திப்பு முதலிரவுதான் என்பது கொடுமை. ‘அடைய முடியாப் பொருளின்மீது ஆசை தீராது. அபிமானம் மாறாது‘ என்று தேவதாஸ் வரிகளை நினைவு கூர்கிறேன். புரிந்துகொண்டவர்கள் – பகிர்ந்துகொண்டவர்கள் இணைந்தால் ஒரு பொழுது போக்காக இருந்த காதல் பொறுப்பு உணர்வைத் தரும்.

அது வானைச் சிறகுகளாக்கி மேலே உயரும். உத்வேகம் ஊட்டும். உழைக்கத் தூண்டும்… அதோடு… இந்தச் சமுதாயத்தின் பல்வேறு அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து ஒன்று சேரவும் காதல்தான் மிகச் சரியான வழி.” ”காதல் தோல்விகளால் துவண்டு போகிறவர்களை எப்படிப் பார்க்கிறீர் கள்?” ”காதலை விட்டுக் கொடுப்பதும் காதல்தான் என்று என் தம்பிகளிடம் சமாதானம் சொல்வேன். காதல் என்பது ஒவ்வொரு உயிருக்கு உள்ளும் உண்டு. அது எங்கும், எதன் பொருட்டும் நின்றுவிடாது. ஒரு நதியின் பயணம் போல உயிருக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு உறவு நீடிக்க முடியாது என்கிற நிலை வரும்போது இருவரும் கலந்து பேசி இணக்கமான முடிவெடுத்துப் பிரிவது நல்ல விஷயம். எல்லா இதயங்களிலும் உண்டு கண்ணீரின் வலி. காலம் காயங்களாற்றும். காதலுக்காக இலக்குத் தெரியாமல் ஓடிப்போகிறவர்களையும் வாழ்வையே முடித்துக்கொள்கிறவர்களையும் பார்த்து நான் வருந்துகிறேன்.


காதல் வாழ்வின் கொண்டாட்டம்தான். வாழ்வு அதைவிடப் பெரியது!” ”காதலர் தினம் பற்றி உங்களது பார்வை என்ன?” ”மனிதர்களே பூத்துக் குலுங்குகிற திருவிழாக்கள் தான் நம் வாழ்வின் அடையாளம். கூடிவாழ்தலுக்கான அத்தனை வாய்ப்புகளையும் அந்தக் கொண்டாட்டங்கள் மீட்டுத் தருகின்றன. வண்ணங்கள், புன்னகைகள், பரிமாறல்கள், எனத் திருவிழாத் தருணங்களை நான் ரசிக்கிறேன். தமிழர் களின் காதலர் தினம் ‘காணும் பொங்கல்‘ காலம் தான். அன்பை வண்ணங்களாக்கி, பூக்களாக்கி ஊரும் உறவும் கூடித் திளைத்து நெலூசு பொங்கும் நேரம் அது. ‘காதலுக்கு தினம் ஏது தினமும்‘ என்று என் தம்பியருவன் எழுதியதைப் போலத்தான் எனது உணர்வும்.


‘காதலர் தினம்‘ என்பதை வியாபாரத்துக்கான அடையாளமாக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. தங்க நகைகள், பரிசுப்பொருட்கள் இவை அல்ல காதலின் அடையாளங்கள். காதலர் தினத்துக்குத் தரவோ பெறவோ மிகச் சரியான பரிசு காதல் மட்டும்தான்!”

ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள் நாம் அன்பே!அன்பே!

தாஜ்மஹாலில்
வசிப்பது
மும்தாஜா?
காதலா?

அருகில் இருக்கும்போது இதழை உறிஞ்சுகிறாய்!
தூர இருக்கும்போது உயிரை உறிஞ்சுகிறாய்!

ராசாத்தி
என் கனவுக்காட்டுக்குள்ளே வந்து
உயிரைக்கூட்டிச் சென்ற மகராசி!
உன்கொலுசுப் பாட்டுக்குள்ளே வந்து
மனசும்மாட்டிக்கொண்டுநாளாச்�
�ி!

ஊனே.. ஊனே… உருக்குறானே…
உயிரின் மீதே உயிரை வைத்து நசுக்கறானே…
கண்ணால் என்னைக் குடிக்கிறானே…
ஆதாம் ஏவாள் ஆப்பிள் தின்னஅழைக்கிறானே…

மறப்பதென்றால் அது முடியவில்லை.
நினைப்பதென்றால் மனம் சலிப்பதில்லை.

பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று!

காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை!
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை!

மாலை என்வேதனை கூட்டுதடி!
காதல் தன்வேலையைக் காட்டுதடி! அறிவுமதி

நன்றி: ஆனந்தவிகடன்

Friday, August 20, 2010

சீன - இந்திய - அமெரிக்க வல்லரசுகள்: மோதிக்கொள்ளுமா?01.
வெளிப்பார்வைக்கு தற்போதைய நிலையில் இந்திய - சீன அரச மட்டத்திலான உறவு நிலை திடமான தொன்றாகவே தோற்றமளிக்கிறது.

பல்வேறு அனைத்துலக வல்லரசு நாடுகளுடன் இவ்விரு வல்லரசுகளும் இணைந்து செய்து கொண்ட உடன்படிக்கைகளும் அவரவர் 'நம்பிக்கை', 'தோழமை' என்பவற்றை வலியுறுத்துவதாகவே இருக்கிறன.

உலகின் தலைநகரங்களில் இரு அரசுத் தலைவர்களும் சந்தித்த பொழுதெல்லாம் ஒரு பகுதி மறு பகுதியின் உணர்வுகளை சீண்டி புதிய முறுகல் நிலைகளை உருவாக்காது ஒருவரை ஒருவர் மதித்து நடந்து கொள்வது போன்ற உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகி இருக்கிறன.

மேலும் இந்தியாவும் சீனாவும் பொருளாதார தொடர்புகளிலும் மிகவும் வேகமாக முன்னேறி வருகின்றன.

இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புகளில் அமெரிக்காவின் இடத்தை நிரப்பும் அளவுக்கு இந்திய வர்த்தகம் சீனாவுடன் பெருகிவருவது குறிப்பிட தக்கதாகும்.

கடந்த ஆண்டு 40 பில்லியன் பெறுமதியான வர்த்தக தொடர்புகளை ஏற்படுத்திகொண்ட இந்தியா இவ்வாண்டு அதனை 60 பில்லியனாக அதிகரிக்க உள்ளது.

இந்தியாவின் வடபகுதியின் பாதுகாப்பு மற்றும் எல்லை முரன்பாடுகளை களையுமுகமாக பதின்மூன்று தடவை பேசியும் இணக்கம் காணப்படாத போதிலும் பதின்நான்காவது தடவையும் பேசுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.

பயங்கரவாத எதிர்ப்பு, ஆயுத கட்டுப்பாடுகள், மக்கட்தொகையை அழிக்ககூடிய தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மீதான வரையறைகள், மனித உரிமைமீறல்கள் மீதான கட்டுப்பாடுகள் என அரச மட்டத்திலான ஏராளமான உடன்படிக்கைகள் கைச்சாத்தாகியும் உள்ளன.

தனது மொத்த தேசிய உற்பத்தியிலும், தனிமனித வருமானத்திலும், அமெரிக்காவை அளவு கோலாக நோக்கும் சீனா தனது பொருளாதார எல்லைகளை எட்டும் வரை எந்த ஒரு வல்லரசுடனும் முரண்படக்கூடாது என்று கொள்கை வகுத்து இருக்கிறது.

இதற்கும் மேலாக சில நாட்களுக்கு முன்பாக Oxford University ஆய்வாளர்களினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இந்தியாவின வறுமை நிலை சில வடஆபிரிக்க நாடுகளிலும் பார்க்க அதிகரித்ததாக இருப்பதாகவும் 410 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வதாக குறிப்பிடப்பட்டிருப்பதும் மிக முக்கியமானதாகும்.

ஏனெனில் மிக வேகமான வளர்ச்சியை தன்னகத்தே கொண்டதாக காட்டிகொள்ளும் இந்தியாவின் சீரற்ற பொருளாதாரப்பரம்பல் நிலையை, சமூக அடிப்படையிலான கணிப்பீடுகள் மிக கச்சிதமான வகையில் வெளிக்கொனர்ந்தமை இந்தியா ஒரு வகையில் இன்னும் முன்னேற வேண்டிய தேவையை எடுத்து காட்டுகிறது.

இந்த அறிக்கை ஒருசில ஆளும் அரசியற் கட்சி சார்ந்த செல்வந்தர்களுக்கு மட்டும் அதீத வியாபார சலுகைகள் மற்றும் முன்னுரிமை வழங்கும் இந்திய மத்திய அரசின் இரகசிய கொள்கைகளுக்கு சவாலாக அமைந்திருப்பது இங்கே முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த 410 மில்லியன் வறிய மக்கள் இந்தியாவின் வடக்கே உள்ள எட்டு மாநிலங்களில் வாழும் அதேவேளை இந்தியா சீனாவுடன் முரண்பாட்டை உருவாக்கி செலவீனங்களை அதிகரித்து கொள்ளும் நிலையில் இல்லை.

ஏனெனில் இதர மேலைநாடுகளின் வியாபார உடன்படிக்கைகள் மீதான நம்பிக்கை சிதைவடைவதற்கான ஏது நிலைகளை இத்தகைய முரண்பாடுகள் உருவாக்கி விடலாம்.

இவ்வாறு பல்வேறு காரணங்கள் இந்தியா சீனாவுடன் தனது முறுகல் நிலையை தவிர்த்து கொள்வதற்கான காரணங்கள் இருந்தும்,

• கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இருதரப்பினரும் ஒருவரில் ஒருவர் நம்பிக்கை வைத்து செயற்படாமை வலுவான ஓரு காரணியாக இருந்து வந்திருக்கின்றமை,

• மிக விரைவில் இந்தியாவை சீனா 'கொள்ளடக்கி' கொண்டு விட போகிறது என்ற இந்தியாவின் பயம், இது வரும் காலங்களில் பாகிஸ்தானியர்கள் எதிர் பார்ப்பது போல 'இந்திய துணைகண்டம்' என்று அழைப்பதற்கு பதிலாக 'சீனதுணைகண்டம்' என்று அழைக்க கூடிய நிலை ஏற்படலாம் என்ற இந்திய ஆய்வாளர்களின் சிந்தனை,

• தெற்காசிய நாடுகள் மத்தியிலே இரு நாடுகளும் யார் பலம் வாய்தவர் என்ற போட்டி நிலை, சீனா சார்க் மகாநாடுகளில் இதர அங்கத்துவ நாடுகள் ஊடாக தன்னையும் ஒரு சார்க் அங்கத்துவ நாடாக ஆக்கிகொள்வதில் மறைமுக அழுத்தங்களை பிரயோகிப்பதால் அது சார்க் நாடுகளிடையே தனது ஏக பல நிலையை பாதிக்கும் என்ற இந்தியாவின் பயம்.

• சமாதானத்தை மையமாக கொண்டு அதீத வர்த்தக உடன்படிக்கைகளால் இரு நாடுகள் ஒருவரில் ஒருவர் தங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்படடாலும் பாரம்பரிய தேசிய அரசை பிரதிநித்துவபடுத்த கூடிய வகையில் இரு நாடுகளது பலம் சார்ந்த நிலையிலும் சமநிலை தென்படாவிட்டால் எந்த வர்த்தக நடவடிக்கைகளும் அதன் மையபொருளான சமாதானத்தை அடைவது கடினம் என்ற கோட்பாடும்.

• இந்தியாவுடனான சீனாவின் வர்த்தகத்திற்கும், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகத்துக்கும் இடையில் பாரிய வர்த்தக இடைவெளி தென்படுகிறது. அத்துடன் சீனாவை நோக்கிய இந்திய வர்த்தகத்தில் மூலப்பொருட்களே பெரும் இடத்தை வகிப்பதும், இந்தியாவை நோக்கிய சீன வர்த்தக நடவடிக்கைகளில் தயாரிக்கப்பட்ட முடிவுப்பொருட்களே அமைந்திருப்பதும் சர்வதேச வர்த்தக அவதானிகளால் நோக்கபட்ட தொன்றாகும்.

[இங்கே இந்திய மூலப்பொருள் ஏற்றுமதியில் தனிப்பட்ட முதலாளிகள் பெரும்பாலான பயன்பெறுவோராகவும் சீன முடிவுப்பொருள் ஏற்றுமதியில் ஏராளம் தொழிலாளர்களின் வேதனமும் உள்ளடக்கி இருப்பதும் சமூக ஆய்வாளர்களால் சுட்டிகாட்டபட்டுள்ளது.] ஆக இந்திய வர்த்தக, சமூக பொருளாதர பலவீனம் சீன பொருளாதார, இராணுவ திட்டமிடலாளர்களின் மனோபலத்தை மேலும் அதிகரிப்பதாக கணிப்பிடப்படுகின்றமை,

• இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவும் இந்தியாவும் புவிசார் அரசியல் ஆதிக்க போட்டிக்குள் சிக்குண்டு போயுள்ளதால் எகிறிச்செல்லும் இராணுவச் செலவீனங்கள் தவிர்த்து கொள்ள முடியாத நிலைக்கு வந்துள்ளன. பாரிய செலவீனங்கள் கொண்டு இராணுவதளபாடங்களை உற்பத்தி செய்யவும், கொள்முதல் செய்யவும் இரு நாடுகளும் தயங்கவில்லை. இதனால் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தக்கவைத்து கொள்வதிலும், இரகசியமாக பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் முனைந்து வருகின்றன. மேலும் எதிர்கால வர்த்தக நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கடல் வழி போக்குவரத்தை தக்கவைப்பதிலே கூடிய கவனம் செலுத்துகின்றன.

• இந்தியாவின் நிரந்தர எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தானுக்கு அணு ஆயுத வல்லமையை பெற்று தந்தது சீனாவே என்ற குற்றச்சாட்டும் இதனால் தெற்காசியாவிலே அணு ஆயுத போட்டி நிலையை சீனா உருவாக்கி விட்டது போன்ற விவகாரங்கள் என்றும் இவ்விரு நாடுகளையும் கொதிநிலைக்கு இட்டு செல்கின்றன.

எவ்வளவு தான் அரசதரப்பு ஒப்பந்தங்கள் செய்து கொண்டாலும் அருகிவரும் உலக மூலவளங்களும், பெருகிவரும் சனத்தொகையும் இயற்கையாகவே நாடுகளிடையே போட்டி நிலையை உருவாக்கி விடுகின்றன.

இதிலே அதீத சனத்தெகைப் பெருக்கத்துடன் வெகு வேகமாக பொருளாதார வலுநிலையை நோக்கி முன்னேறிவரும் சீனாவும் இந்தியாவும் பாரிய முரண்பாடுகளை எட்டுவது தவிர்க்க முடியாத தொன்றாகவே தெரிவதாக ஆய்வாளர்கள் நோக்குகின்றனர்.

02.
அனைத்துலக அரசியலில் 1917ம் ஆண்டு காலடி எடுத்து வைத்த அமெரிக்கா தனது படைவலிமை, பொருளாதாரவலிமை, இராஜதந்திர சூழ்ச்சித்திறன் இவை அனைத்தையும் முன்னிறுத்தி கடந்த சில பத்தாண்டுகளாக உலகின் ஏகோபித்த சலுகைகளை அனுபவித்து வருகிறது.

முதலாம் உலகப்போர் காலத்திலும்சரி, அதன்பின் உருவான League of Nations இலும் சரி, இரண்டாம் உலகப்போர் காலத்தின் பின் உருவான ஐக்கிய நாடுகள் சபையிலும் சரி அமெரிக்காவின் அனைத்துலக பலம் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் உபயோகிக்கப்பட்டு உலக ஓட்டத்தை அமெரிக்க நலன்களுக்கு ஏற்றவாறு திசைதிருப்புவதில் வெற்றியும் கண்டு வந்தது.

இதன் உச்சக்கட்டமாக தனக்கு சமனான பலம் கொண்டதாக கருதப்பட்ட சோவியத் ஒன்றியத்தினை தனது பல்வேறு சூழ்ச்சித்திறன்களால் பிளவுறச் செய்து தனக்கு ஆதரவான பல நாடுகளையும் உருவாக்கியமை குறிப்பிடதக்க தொன்றாகும்.

இதன் பின் கடந்த இருபது வருடங்களாக உலகின் தலைமையை தனி பெரும் வல்லரசாக அனுபவித்து வந்த அமெரிக்கா தற்போதய இந்திய - சீன திடீர் வளர்ச்சியால் சோவியத் பிளவுறுவதற்கு முந்திய நிலைக்கு செல்ல வேண்டியோ அல்லது 1917 இற்கு முந்தைய நிலையான எந்த அனைத்துலக அரசியலிலும் அதிகம் பங்குபற்றாது தனது சொந்த மூலப்பொருட்களையே நம்பி வாழ வேண்டிய கட்டத்துக்கு வரவோ விரும்புமா?

கடந்த ஆண்டுகளில் எந்த ஒரு அமெரிக்க பாதுகாப்பு வியூக அறிக்கையிலும் பின்வாங்குவதற்கான சிந்தனைக்கே இடமின்றி பதிலாக புதிதாக முன்னேறிவரும் வல்லரசுகளை தனது நலனுக்கேற்ப மாற்றுவது எவ்வாறு என்றே ஆராயப்படுகிறது.

அனைத்துலக அமைப்புகளான நேட்டோ அமைப்பு, ஐநா சபை, பாதுகாப்பு சபை, உலக வங்கி, நாணய நிதியம், இவற்றுடன் பல்வேறு கூட்டு வர்த்தக உடன்படிக்கைகளையும் தனது நலனுக்கேற்ப உலக ஒழுங்கை மாற்றுவதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் தனது நலனுடன் ஒத்திசைவாக செல்லாத நாடுகளுக்கெதிராக மனித உரிமை விவகாரம், காலநிலை மாற்ற விவகாரம், புதிய சர்வதேச சட்ட வரைமுறைகள் என்பனவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த ஆய்வுகளே அமெரிக்காவினால் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இதேவேளை ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கும் திறந்த வர்த்தகமும், சீனாவின் முன்னைநாள் அதிபர் டெங் சியாவோ பிங் வகுத்து கொடுத்த அடிப்படை நோக்கான பொருளாதாரமே பிரதான குறி, இதனூடாக கோடிக்கணக்கான சீன மக்களின் வறுமையை போக்குதல், எப்பொழுதும் அமெரிக்காவுடன் இசைவான நிலையையே கடைப்பிடிப்பது. போன்றன மூலோபாயமாகி போய்விட்ட இன்றய நிலையில் சீன - அமெரிக்க தரப்பினர் தற்போதைக்கு பகைத்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இருந்த போதிலும்,

• சீனா தனதென உரிமை கொண்டாடும் தாய்வானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை விவகாரம்,

• சீன தனது பண வலுநிலையை அதிகரிக்க முற்பட்டபோது ஏற்பட்ட தகராறு,

• கொப்பனேகனில் இடம்பெற்ற காலநிலை மாற்றம் குறித்த மகாநாட்டில் சீனா ஒத்துழையாமல் செயற்பட்டது,

• இந்தியாவின் வட எல்லைகளிலே பதட்ட நிலைமைகளை உருவாக்குவது.

• தென் சீன கடற்பகுதியில் சீன கடற்படையினர் அயலில் உள்ள கடல் எல்லைக்குள் பதட்ட நிலையை உருவாக்குதல் என பல்வேறு விவகாரங்களில் சீன அமெரிக்க விரிசல்கள் இருந்துவருகின்றன.

• இவ்வாண்டின் ஆரம்பத்தில் அதிபர் ஒபாமா திபெத்திய மதத்தலைவர் தலாய் லாமாவை சந்தித்தது சீனாவை எரிச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

• இவை எல்லாவற்றிற்கும் மேலாக அண்மையில் International Institute for Strategic Studies இனால் நடாத்தப்படும் ஆசிய பசுபிக் பாதுகாப்பு மகாநாடு சிங்கப்பூரில் நடைபெற்ற வேளை மேற்குறிப்பிட்ட விவகாரங்கள் குறித்து அமெரிக்க சீன பாதுகாப்பு செயலர்கள் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டமை பெரிதாக பேசப்பட்ட ஒன்றாகும்.

• அத்துடன் அமெரிக்க பத்திரிகைகளும் சிந்தனையாளர்களும் சீனா குறித்து பெரும் அவநம்பிக்கை கட்டுரைகளையே எழுதி வருவதும் மிக முக்கியமானதாகும்.

ஆக சீன - அமெரிக்க உறவு நிலையிலே சற்று தளம்பல் நிலைகள் தென்பட்டாலும் இவற்றை தற்காலிகமாகவேனும் சீர்செய்து கொள்ளவே இருநாடுகளும் விரும்பிகொள்ளும் எனலாம்.

ஆனால் உலகின் தலைமைத்துவம் என்றநிலை வரும்போது சீனாவை தனது சொற்படி செயலாற்ற வைக்க அமெரிக்காவின் கையில் மனித உரிமை மீறல்கள் காலநிலை மாற்றம் குறித்த குற்றசாட்டு, ஏற்றுமதி வரி அதிகரிப்பு, என்பனவே ஆயுதங்களாக உள்ளன.

சீனாவை எதிர் கொள்வதற்கு அனைத்துலக இராஜ தந்திர பலநிலை இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும்.

இந்தியாவின் பலகால ஆசைகளில் ஒன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர அங்கத்துவ நாடாக ஆகிவிட வேண்டும் என்பதாகும்.

இதனை நிறைவேற்றுவதற்கு இந்திய தலைவர்கள் அமெரிக்காவின் தயவை நாடி நிற்கின்றனர். அதேவேளை அமெரிக்கா சீனர்களை எதிர்கொள்ள இந்தியாவின் தயவு மிக அவசியமானதாக கருதப்படுகிறது. இதனால் இந்தியாவும் அமெரிக்காவும் ஒருவர் மீதொருவர் கூடுதல் நம்பிக்கை வைத்து செயலாற்ற ஆரம்பித்துள்ளனர்.

மறுவளமாக பார்ப்போமானால் ஒருவேளை ஒருவரில் ஓருவர் தங்கிவாழும் பொருளாதார வலை பின்னலினால் இந்திய - சீன உறவு நிலை மேம்படுமேயானால் அமெரிக்காவின் உலக தலைமைத்துவம் பெரும் கடினபாதைக்கு இட்டு செல்லபடலாம் என்பதனால் சீனாவை அதீதமாக சீண்டாத வகையிலாவது இந்தியாவுடன் பல்வேறு தெடர்புகளை பேணிக்கொள்வது.

உதாரணமாக உயர் கல்வி வசதிகள், அபிவிருத்தி திட்டமிடல்கள், தொழில்நுட்ப பரிமாற்றம், சுகாதாரம் வர்த்தகம்,கலாச்சார விழுமியங்களை பேனுவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவதனூடாக இரு நாடுகளின் உறவுகளையும் நெருக்கமாக வைத்திருக்க வழிவகை செய்வது இராஜ தந்திர யுக்திகளை தேவையான பொழுது இலகுவாக கையாள வகைசெய்யும்.

சமூக தேவைகளுக்காக அமெரிக்க கண்காணிப்பில் அணுசக்தியை பயன்படுத்துவது தெடர்பாகவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும் வரும் நவம்பர் மாதம் அதிபர் ஒபாமா இந்திய சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இதுகூட இந்திய அமெரிக்க கூட்டுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.

முரண்பாடுகள் என்ற நிலையில் இந்திய அமெரிக்க கொதி நிலையிலும் பார்க்க சீன அமெரிக்க கொதி நிலை மிக அதிகமாக காணப்படுவதே இன்றைய தெற்காசிய பனிப்போர் காலநிலையின் முக்கிய அம்சமாகும்.

தனது பொருளாதார சேதங்களை தவிர்த்து கொண்டு உலகின் தலைமையை பேண துடிக்கும் அமெரிக்காவும். அதே வகையில் பிராந்திய ரீதியில் தமது மேலாதிக்க நிலையை வலியுறுத்த முனையும் சீன இந்திய அரசுகளின் காய்நகர்த்தல்களுமே இப்பொழுது உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறன.

புதினப்பலகை'க்காக லோகன் பரமசாமி

Thursday, August 19, 2010

காக்கி உடையில் காட்டுமிராண்டிகள்மீண்டும் காக்கி உடை தனது கோர முகத்தை காட்டியிருக்கிறது. கருணாநிதி ஆட்சியாக இருந்தாலும் சரி. ஜெயலலிதா ஆட்சியாக இருந்தாலும் சரி. காவல் துறை எப்போதும் காட்டுமிராண்டித் துறையாகவே இருந்து வந்திருக்கிறது. பிடிக்காதவர்கள் மீது பொய் வழக்கு போடுவதானாலும் சரி, பிடித்தவர்கள் வீட்டில் சட்டி கழுவுவதானாலும் சரி, மனித உரிமை ஆர்வலர்ளை தீவிரவாதிகள் போல சித்தரித்து, சமயம் கிடைக்கும் போது, அவர்களை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதானாலும் சரி, அவ்வாறு சிக்கியவர்களை அடித்துத் துவைப்பதானாலும் சரி. இரண்டு ஆட்சிகளிலுமே காவல்துறையினர் காட்டுமிராண்டிகளாகத்தான் இருந்து வருகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம், ஆட்சியாளர்களுக்கு இந்த காட்டுமிராண்டித்தனம் தேவைப் படுவதுதான். ஜெயலலிதாவுக்கு, கருணாநிதியை நள்ளிரவில் கையை முறுக்கி கைது செய்ய காட்டு மிராண்டிகள் தேவை. கருணாநிதிக்கு, ஈழத் தமிழர்களையும், அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் அடித்துத் துவைக்க காட்டுமிராண்டிகள் தேவை.

அதனால், இரண்டு திராவிட கட்சிகளுமே காக்கிச் சட்டைகளை கையைக் காட்டினால் கடிக்கும் வேட்டை நாய்களாகவே உருவாக்கி வைத்திருக்கின்றன.

அந்த வேட்டை நாய்களுக்கு இரையானவர்தான் தோழர் இனியன். இவரின் இயற்பெயர் அஷோக் குமார். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர். பெயருக்கேற்றார் போல இனியவர். சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.

சவுக்கு முதன் முதலாக இனியனை சந்தித்து இரண்டு ஆண்டுகள் இருக்கும். ஒடிசலாக ஐந்தடி உயரத்தில் ஒரு உருவம். தமிழக மக்கள் உரிமைக் கழக அலுவலகத்தில் தான் இனியனை சவுக்கு சந்தித்தது. அமைதியாக இருப்பார். அலுவலகத்துக்கு வந்தால் எதுவுமே பேச மாட்டார். சவுக்கு அவரிடம் பேசி கலாட்டா செய்தால் கூட, மென்மையாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அமைதியாகத் தான் இருப்பார்.

மிக மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருபவர். மதியம் உணவு உண்ண காசு இருக்காது. மதியம் கல்லூரி தொடங்கும் என்பதால், சவுக்கும் நண்பர்களும் உண்ணச் செல்லும் போது, அவரை கட்டாயம் அழைத்துச் செல்வோம். வழக்கறிஞர் புகழேந்தி அவரை காலை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி நீதிமன்றம் சென்று, அங்கே நடக்கும் வழக்கு விவாதங்களை பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்ன அறிவுரையை ஏற்று, ஒரு வாரம் சென்றார். அங்கே ஆங்கிலத்தில் படித்த துரைகள் வாதாடுவதை கண்டு ஒன்றும் புரியாமல், பிறகு அலுவலகத்திலேயே இருப்பார். ஏதாவது வேலை சொன்னால் புன்னகையோடு செய்வார்.

இதுதான் இனியவன். அவர் படிப்பை தொடர, அமைப்பு பொருள் உதவி செய்து வந்தது. பிறகு சில நாட்கள் கழித்து, அமைப்பிடம் பொருள் உதவி பெறுவதற்கு சங்கடப் பட்டுக் கொண்டு, நான் வேலை பார்த்துக் கொண்டே படிக்கிறேன் என்று கூறி விட்டார்.

அமைதியாக இருந்த இனியவனின் மற்றொரு முகம் செங்கல்பட்டு அகதிகள் முகாமில், ப்ரேம் ஆனந்த் சின்கா என்ற எஸ்பியும், சேவியர் தன்ராஜ் என்ற உதவி எஸ்.பியும், சேர்ந்து நடத்திய நள்ளிரவு தாக்குதலுக்குப் பிறகு தெரிந்தது. தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் செங்கல்பட்டில் நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு பம்பரமாய் சுற்றி வேலை பார்த்தார். போஸ்டர் ஒட்டுவது முதல் ஆர்ப்பாட்டத்திற்கான அத்தனை வேலைகளையும் முன் நின்று செய்தார். செங்கல்பட்டு அகதிகள் மீதான காவல்துறையினரின் கொடிய தாக்குதல், அவரை கடுமையாக பாதித்திருக்கிறது என்பதை பார்க்க முடிந்தது.

இப்படி பம்பரமாகச் சுற்றி அவர் செய்த வேலையே அவருக்கு வினையாக முடிந்தது காலத்தின் கோலம் தானே… ?

செங்கல்பட்டு அகதிகள் மீதான தாக்கதலில் முன் நின்று தாக்குதலை நடத்தியவர் அப்போது செங்கல்பட்டு காவல்நிலைய ஆய்வாளராக இருந்த ஆல்பர்ட் வில்சன் என்பவர்.

நேற்று மாலை 6 மணியளவில் இனியன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கும் வேற்று மொழிக்காரர் ஒருவருக்கும் வாய்த் தகராறு ஏற்படுகிறது. இந்த தகராறு வலுக்க, ஓட்டுநர் பேருந்தை திருக்கழுக்குன்றம் காவல்நிலையத்திற்கு ஓட்டுகிறார். அங்கே தகராறு செய்த இருவரும் இறக்கி விடப் படுகிறார்கள். சட்டக் கல்லூரி மாணவர்தானே… நம்மை என்ன செய்யப் போகிறார்கள் என்று காவல் நிலையம் செல்கிறார்.

அங்கே இனியனை விசாரித்துக் கொண்டிருக்கும் போது குப்புசாமி என்ற காவலர், உதவி ஆய்வாளரிடம் “சார் இவன் மனித உரிமை இயக்கத்துல இருக்கான் சார். எப்போ பாத்தாலும் கூட்டம் போட்டு நம்மைத் திட்டுவான் சார்“ என்கிறார். உதவி ஆய்வாளர் “என்னடா எஸ்.சியா “ என்று கேட்கிறார். இனியன் ஆமாம் என்றதும் அருகில் இருந்த காவலர் குப்புசாமி பளாரென்று இனியன் கன்னத்தில் அறைகிறார். இனியன் “விசாரிக்காம அடிக்காதீங்க சார்“ என்கிறார்.

அப்போது அங்கே வந்த ஆல்பர்ட் வில்சன் “பறத் தேவிடியாப் பையனுக்கு என்ன திமிரு பாத்தீங்களா ? “ என்று உரத்தக் குரலில் கூறி, இனியனை ஷூ காலால் நெஞ்சில் எட்டி உதைக்கிறார். “இவன் துணிய அவருங்கையா ? ஹ்யூமர் ரைட்ஸா பேசறான் ? அடிக்கிற அடியில இந்தத் தேவடியாப் பையன் பேசவே கூடாது“ என்று சொல்லி முடிக்கும் முன்பே, அருகில் இருந்த காவலர்கள் சத்தினசாமி, நட்ராஜ், முனுசாமி, குப்புசாமி, பார்த்திபன், சௌந்தர்ராஜன், ராஜேந்திரன் உள்ளிட்ட காவலர்கள், இனியனின் உடைகளை அவிழ்க்க பொறுமை இல்லாமல் கிழித்து எரிகின்றனர். நிர்வாணமாக நின்ற இனியன் இரண்டு கைகளையும் வைத்து தன்னை மறைத்துக் கொள்ள “என்னடா பொட்டையா நீ“ “எதுக்குடா மறைக்கிற “ என்று மறைத்த கைகளின் மேல் லத்தியால் அடித்திருக்கின்றனர்.

பிறகு ஒரு மணி நேரத்திற்கு சரமாரி அடி. பிறகு நிர்வாணமாகவே லாக்கப்பில் போட்டு அடைத்திருக்கிறார்கள். இனியன் நினைவிழக்கும் நிலையில் இருந்த போது, வாளியில் தண்ணீரை பிடித்து லாக்கப்புக்குள் ஊற்றியிருக்கிறார்கள்.

இரவு 3.30 மணி அளவில் இனியனின் உறவினர்கள் வந்து இனியனை செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்திருக்கின்றனர். அனைவரும் கண்ணயர்ந்த நேரம் மருத்தவமனையிலிருந்து வெளியேறிய இனியன், வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து, குற்றுயிரும், குலை உயிருமாக இனியனை இறக்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

நீங்கள் செய்த காரியத்தை மன்னிக்க முடியாது தோழர் இனியன். உங்களை நிர்வாணப் படுத்தி அடித்த ஆய்வாளர் ஆல்பர்ட் வில்சன் மற்றும் உதவி ஆய்வாளர் சரவணின் சங்கை அறுத்திருந்தீர்களென்றால் பாராட்டியிருக்கலாம். ஆனால், நீங்கள் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றதை சவுக்கு ஒரு போதும் மன்னிக்காது.

இனியன் தற்கொலை முயற்சி செய்தி, காற்றிலே வதந்தியாக மாறி, இனியன் இறந்து விட்டார் என்று சட்டக் கல்லூரி வளாகங்களிலே பரவுகிறது. தகவல் அறிந்த சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டோர் உடனடியாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சாலையை மறிக்கிறார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மற்ற எல்லா போராட்டங்களையும், காவல்துறையை விட்டு ஒடுக்க முயற்சிக்கும் கருணாநிதி, இந்த மாணவர்களின் எழுச்சியை பார்த்து பம்மினார். காவல்துறை கைது செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இணை ஆணையர் சேஷசாயி மாணவர்களிடம் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்று பேச்சு வார்த்தை நடத்துகிறார். செங்கல்பட்டு ஆர்.டி.ஓ பத்மஜா தேவிதான், பனையூர் இரட்டை கொலைவழக்கில் குற்றம் சாட்டப் பட்டு காவல் நிலையத்தில் இறந்த ராஜன் மரணத்தையும், திண்டுக்கல் பாண்டி என்கவுண்ட்டரையும் விசாரித்தது. அந்த அதிகாரி எப்படி அறிக்கை கொடுப்பார் என்று தெரியாதா ?

ஆனால் மாணவர்கள் மசியவில்லை. எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை. சம்பந்தப் பட்ட காவல்துறையினரை இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இதற்கு நடுவே, மக்கள் வழக்கறிஞர் சங்கரசுப்பு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்னிலையில் ஆஜராகி, மாணவர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதையும், மாணவர்கள் போராட்டம் நடத்தவதையும் பற்றி முறையிட்டார். அவரை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அதையே ரிட் மனுவாக கருதி, மாலை 5 மணிக்கு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் இறுதியில் பாதிக்கப் பட்ட மாணவர் உடனடியாக சென்னை அப்போல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப் பட்டு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

இனியன் கொடுத்த புகார் மனுவின் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கை டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத ஒரு அதிகாரி விசாரணை செய்ய வேண்டும்.

மூன்று வாரத்துக்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவின் விபரங்களை வழக்கறிஞர் சங்கரசுப்பு, மாலை 6.00 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் இருந்த மாணவர்களிடம் சொன்னார். விபரங்களை கேட்டறிந்த மாணவர்கள் பலத்த கரகோஷத்தோடு கலைந்து சென்றார்கள்.

நீதிமன்ற உத்தரவுப் படி காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. என்ன தெரியுமா ? ஒரே ஒரு பிரிவு தான். 323. இது என்ன தெரியுமா ? லேசான காயத்தை ஏற்படுத்தவது. இது பிணையில் வரக்கூடிய பிரிவு என்பது முக்கிய அம்சம்.
ஏதோ ஒரு வகையில் இந்த அளவுக்காவது நிவாரணம் கிடைத்ததே என்ற வகையில் மகிழ்ச்சி.

இந்த போராட்டத்தில் இருந்த முக்கிய செய்தி என்னவென்றால், காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை மாநகரின் ஒரு முக்கிய சந்திப்பை மாணவர்கள் மறித்து எந்த வாகனத்தையும் நகர விடாமல் நிறுத்தி வைத்துள்ளார்களே ? இதனால் பொதுமக்கள் எவ்வளவு சிரமப் படுவார்கள் என்ற அக்கறை துளியும் காவல்துறையினருக்கோ, கருணாநிதிக்கோ இல்லை. ஏழு மணி நேரமாக அந்த சாலைகள் மறிக்கப் பட்டே கிடந்தன. இரு சக்கர வாகனங்களை கூட மாணவர்கள் அனுமதிக்கவில்லை.

இது போல பொதுமக்களை சிரமத்திற்குள்ளாக்கி நடக்கும் ஒரு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வராமல் வேடிக்கை பார்க்கும் காவல்துறையினரை எங்காவது கண்டிருக்கிறீர்களா ?

இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது என்ன செய்து கொண்டிருந்தார் சென்னை மாநகர காவல் ஆணையாளர் ? ஏழு மணி நேரம் நகரத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறதே…. என்ன செய்து கொண்டிருந்தார் ராஜேந்திரன் ? என்ன செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் ராஜேந்திரன்.

அவர் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டோடு இரண்டு மணி நேரம் எட்டு நிமிடங்கள், ஜாபர் சேட் மனைவி பர்வீன் மீது அவருக்கு வந்திருக்கும் மோசடி புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எப்படி மூடுவது, புகார் கொடுத்தவர் நீதிமன்றம் போனால் அதை எப்படி சமாளிப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்.

இப்படிப் பட்ட ஒரு மோசமான நிர்வாகத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா ?

Wednesday, August 18, 2010

“அனைத்துலகத் தமிழர் சொல்லப் போகும் செய்தி என்பது....?

“அவலத்தைக் கொடுத்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்”

"அன்றும் சரி, இன்றும் சரி, தமிழரின் உணர்வுகளை, அவர்களது வாழ்நிலை அவலங்களை, அவர்களது தேசிய அபிலாசைகளைச் சிங்களப் பெரும்பான்மை இனம் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள எத்தனிக்கவுமில்லை. புரிந்து கொள்ளும் ஆற்றலும் அறிவுத் திறனும் ஆன்ம பக்குவமும் அவர்களிடம் இருப்பதாகவும் தெரியவில்லை... சிங்கள மக்களின் மகாவம்ச மனவமைப்பில், அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கவில்லை. சிங்கள- பௌத்த மேலாண்மைவாதத்தின் வீச்சும் வலுவும் தணிந்து போகவில்லை. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது... "

- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள்-

நெஞ்சினில் நெருப்பேந்தி.......

மிக நீண்ட இடைவெளிக்கு பின்பு ஜரோப்பியத் தமிழ் சமூகம் ஜ.நா முன்றலில் ஒன்று கூடப் போகிறது. இந்த ஒன்று கூடலுக்கான தேவை என்பது பிரித்தானியாவிலிருந்து பாதயாத்திரை மேற்கொண்டுவரும் சிவந்தனுக்கு ஆதரவு தெரிவித்தும் அதனூடாக சிவந்தனின் கோரிக்கையோடு முருகதாசன் திடலில் சிவந்தனின் பாதயாத்திரை நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாநாடு உட்பட முள்ளிவாய்காலுக்குப் பின்னான தமிழர்களின் அடுத்த கட்ட எழுச்சியையும் வீச்சையும் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக் கூறவுள்ள இவ் வரலாற்று நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் விடுக்கப்பட்ட அறைகூவலோடு தமிழர் மீண்டும் பேரெழுச்சி பூண்டுள்ளனர் என்பதையே இது எடுத்துக்கட்டுகின்றமை மிக ஆரோக்கியமான ஒன்று..

இந்தத்தருணச்த்தில் சிவந்தனின் பாதயாத்திரையோடு முள்ளிவாய்காலுக்குப் பின்னான தமிழர்களின் அடுத்த கட்ட எழுச்சியையும் வீச்சையும் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக் கூற புலம்பெயர் தமிழர் போர்கோலம் பூண்டுள்ளனர் என தமிழ் ஊடகங்களில் மிகப் பிரம்மாண்டமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
இத் தருணத்தில் எம்மால் முன்வைக்கப்படும் வேண்டுகை என்பது

சிங்கள அரசைத் தோலுரிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பது தான்; [இவ்விடத்தில் சிவந்தனின் போராட்ட வடிவத்தை நாம் கொச்சைப்படுத்துவதாக எண்ணிவிடதீர்கள்,இது எமது மிகத்தாழ்மையான வேண்டுதல்]
காரணாம் உணர்வு மயமான போராட்டங்களை நாம் நடத்தும் காலம் தடுப்பு முகாம்களுடன் பெரும்பாலும் முடிவுக்கு வந்து விடும் என்றே நாம் நம்புகின்றோம் இதுபற்றி தெளிவு இல்லாவிட்டால் எந்தவொரு போராட்டத்தினாலும் வெற்றி பெற முடியாது. முள்ளிவாய்க்கால் பேரழிவு எமக்கு பெற்றுக் கொடுத்த பாடம் இந்த உலகத்தை எமக்கு புரிய வைத்தது எனவே இன்றைய உலக ஒழுங்கை கவனத்திலெடுத்து அரசியல், இராஜதந்திர வழிகளில் அதற்கான முயற்சிகளை எடுப்பதே தமிழர்களின் இலக்குநோக்கிய பாதைக்கு தற்காலிகமாக சிறந்தது.

“அவலத்தைக் கொடுத்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்”
என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளில் தனியே வன்முறை மட்டும் பொதிந்திருக்கவில்லை.

உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக என்று பலவழிகளிலும் அவலங்களை தமிழ் மக்கள் சந்தித்து விட்டார்கள். அதே வழியில் தான் நாம் அவர்களுக்கு அவலங்களைப் பரிசளிக்க வேண்டும். இப்போதைய நிலையில் அவலங்களைக் கொடுத்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியான அவலங்களை கொடுப்பதே மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும். எம்மை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தவர்களையும் அப்படியே செய்வதற்கு இது தான் உகந்த வழி. இந்த வழியில் அவர்களைத் தோற்கடிப்பதற்கு நகர்வுகளை மேற்கொள்ளாதிருப்பதோ அல்லது தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையில் அது குறித்துச் சிந்திக்காமல் இருப்பதோ பாரிய பின்னடைவுகளுக்கே வழி கோலும்.

நீண்டகால நோக்கில் தமிழர் தரப்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கோட்பாட்டு ரீதியான செயற்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

அரசியல்,அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்களை எப்படி எங்கெங்கு நடத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

வெறுமனே வாழ்வதற்கான உரிமைகளைக் கொடுங்கள் என்று எத்தனை காலத்துக்குத் தான் கேட்க முடியும்?
எனவே;

மகிந்த அரசைத் தோலுரிக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

தமிழரின் போராட்டம் இராணுவ ரீதியான தோல்வியை சந்தித்ததை தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவோ சகித்துக் கொள்ளவோ முடியாதிருப்பது உண்மை. ஆனால், இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்தி தமிழ்மக்களால் நிரந்தரமாகத் தலையெடுக்க முடியாதபடி- நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதும் இதற்கு தமிழ்த் தேசியத்தின் வழிவந்தோரே காரணமாக அமைந்திருப்பதும் தான் வேதனையான விடயம்.

புலத்தில் தமிழர் ஒன்றுபட்டு பலத்துடன் நிமிர்ந்துள்ளோம் என்பதை எப்படி நிரூபிக்கப்போகின்றோம்.

விடுதலை வேட்கைகொண்டு தணியாத தமிழீழ தாகத்துடன் எழுச்சி பெற்று நிற்கும் இளம் தலைமுறைக்கு எப்படி வழிகாட்டப்போகின்றோம்
இதுவே இன்று எம்முன் எழுந்து நிற்கும் பெரும் கேள்விக்குறி

தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தமிழ் மக்கள் புரிந்துள்ள மாபெரும் தியாகத்தை, அதன் ஆன்மீக மகத்துவத்தை, அதன் வரலாற்று முக்கியத்துவத்தைச் சிங்களத் தேசம் மட்டுமன்றிச் சர்வதேசச் சமூகமும் உணர்ந்து கொள்ளாதது எமக்கு ஏமாற்றத்தையும் வேதனையையும் தருகிறது.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர்- தமிழர் தரப்பில் முன்வைக்கப்பட்டு வந்த, முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுக் கிடக்கும் தமிழ் மக்களை சுதந்திரமாக வாழவிட வேண்டும், மனிதப்பேரவலத்தை உருவாக்கி இன அழிப்பை மேற்கொண்ட சிங்கள தேசத்தை சர்வதேச சமூகம் போர்குற்றவாளியாக நிறுத்த வேண்டும் என்ற கோசம் இப்போது வலுவிழக்கத் தொடங்கியுள்ளது. முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள பெரும் பகுதி மக்களை மீளக்குடியமர்த்தும் முயற்சியிலும் போராளிகளுக்கான மறுவாழ்வு என அரசாங்கம் இறங்கியுள்ளதால் தான் இந்தநிலை ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக சிங்கள அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியாக தமிழ் மக்கள் முன்னெடுத்து வந்த போராட்டங்களிலும் ஒருவித தொய்வும் தேக்கமும் ஏற்படத் தொடங்கியுள்ளது. சிங்கள அரசு முன்னெப்போதும் இல்லாதளவுக்கு சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில்- தமிழர் தரப்பு அதற்கேற்ப காய்களை நகர்த்த முடியாமல் இருப்பது கண்கூடு.

போர் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது- போரை நிறுத்த வேண்டும் என்றும், பாதுகாப்பு வலயங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு நிர்ப்பந்தம் கொடுக்குமாறும் போராட்டங்கள் தமிழர் தரப்பால் மேற்கொள்ளப்பட்டன. போர் முடிவுக்கு வந்த பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுள்ள மக்களை வெளியே விடுமாறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் அரசாங்கம் சுமார் இரண்டுலட்சம் வரையான மக்களை யாழ்ப்பாணம், வன்னி, கிழக்கு போன்ற பகுதிகளுக்குச் செல்ல அனுமதித்துள்ளதால் இந்தக் கோரிக்கையை முன்னிறுத்தும் போராட்டங்களின் வீரியம் குறைந்துள்ளது.

குறுகிய காலத்துக்கு மட்டுமே நீடிக்கும் கோரிக்கைகளை முன்வைத்து நடத்த முற்பட்ட போராட்டங்களால் தான் இந்த நிலை. அதற்காக இவை ஒன்றும் அவசியமற்ற போராட்டங்கள் என்றோ முன்னிலைப்படுத்தத் தேவையில்லாத விடயங்கள் என்றோ கருதி விட முடியாது. ஆனால், தமிழர் தரப்பு அரச எதிர்ப்புப் போராட்டங்களுக்கு குறுகிய காலத்துக்கு மட்டுமே முன்னிலைப்படுத்தக் கூடிய விடயங்களை மட்டும் நம்பியிருந்தது தான் தவறு.

இன்னும் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் வரையானோர் தடுப்பு முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். ஆனால் அவர்களை முன்னிலைப்படுத்தும் போராட்டங்களால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. ஏனென்றால் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏற்படும் தாமதத்துக்கு அரசாங்கம் கூறும் நியாயங்களை சர்வதேசம் ஓரளவுக்கேனும் ஏற்றுக் கொள்கிறது.கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும் என்ற அரசின் நியாயத்தை உணர்ந்து கொள்வது அவசியம்.

ஏற்கனவே அவலத்தின் உச்சங்களைத் தொட்டு விட்ட மக்களை இன்னும் அதற்குள் தள்ளி விடுவதற்குத் துணை போகக் கூடாது. இலங்கை அரசு இந்த விடயத்தில் கூறும் நியாயங்களை ஓரளவுக்கு சர்வதேசம் புரிந்து கொண்டிக்கிறது. ஆனால் முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாடுகின்ற அடிப்படைச் சுதந்திரத்தையேனும் வழங்குமாறு சர்வதேசம் கேட்டு வருகிறது.

அதாவது மீள்குடியமர்வுக்கு தாமதம் ஏற்பட்டாலும் சரி,அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. இதற்குக் கூட அரசாங்கம் புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடித்து சர்வதேசத்தின் கோரிக்கைகளை அலட்சியம் செய்து வருகிறது . எனினும் அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தல்களை கவனத்திலெடுத்து அங்குள்ள மக்களின் வாக்குகளுக்காக எதையும் செய்வதற்கு அரசு தயாராகவே இருக்கிறது. அப்படியொரு நிலை வந்து விட்டால் சிங்கள அரசுக்கு எதிரான தமிழர் தரப்பின் போராட்டங்கள், கோசங்கள் முற்றாகவே வலுவிழந்து போய்விடும்.

அதற்குப் பிறகு எந்த நிலைப்பாட்டை முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படப் போகின்றன?

இந்தக் கேள்வி இப்போதே எழுந்திருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் மக்களை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் தான் அவர்களை வடக்கு கிழக்கில் முதலீடு செய்ய வருமாறு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருக்கிறது.அவர்களின் போராட்டங்கள் சிங்கள அரசுக்கு சவால் மிக்கதாகவே இன்றும் இருந்து வருகிறது. ஆனால் அந்த அச்சத்தை தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்கு, சிங்கள அரசின் போக்கை- சர்வதேசத்தின் முன்பாகத் தோலுரிப்பதற்கு நாம் என்ன செய்கிறோம்- என்ன செய்யப் போகிறோம் என்று சிந்திப்பது அவசியம்.

போர் முடிந்து விட்டது. அரசியல்தீர்வு பற்றிய பேச்சையே காணவில்லை.

தமிழ்மக்களின் உரிமைகள் குறித்து எவரும் கதைப்பதாகவே தெரியவில்லை.

இந்த நிலையில் தான் புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தீவிரமாக இடம்பெற வேண்டும்.
ஆனால் அது நடக்கவில்லை.

இப்போது சர்வதேச சமூகத்திடம் முதலையின் வாயில் சிக்கியது போன்ற நிலையில் சிங்கள அரசு சிக்கிப் போய் இருக்கிறது. சிங்கள அரசைப் பணிய வைப்பதற்கு சர்வதேச ஆதரவைத் தேடிக் கொள்வதற்கு ஏற்ற தருணம் இதைவிட வேறேதும் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

ஒரு பக்கத்தில் போர்க்குற்ற விசாரணைகள் என்று சிங்கள அரசைத் துரத்துகிறார்கள்.

மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருளாதார ரீதியான சலுகைகளை இடைநிறுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

அரசியல் தீர்வு பற்றி வலியுறுத்துகின்றன.

பொருளாதார கட்டுப்பாடுகள் பற்றிப் பேசப்படுகிறது.

ஜனநாயகத்துக்கான அடிப்படை அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாத- அதன் வழி நடக்காத நாடுகள் தான் இப்போது சிங்கள அரசுக்கு சாமரம் வீசுகின்றன. மற்றெல்லா நாடுகளும் அதற்கு எதிராகவே நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.
இப்படியொரு தருணத்தில் சிங்கள அரசை போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து, அதை தமிழ்மக்களுக்கு நியாயமான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கு பயன்படுத்திக் கொள்வதே மிகச் சிறந்த இராஜதந்திரம்.

முள்ளிவாய்க்கால் பேரழிவு எமக்கு பெற்றுக் கொடுத்த பாடம் இந்த உலகத்தை எமக்கு புரிய வைத்தது.

எனவே இன்றைய உலக ஒழுங்கை கவனத்திலெடுத்து அரசியல், இராஜதந்திர வழிகளில் அதற்கான முயற்சிகளை எடுப்பதே தமிழர்களின் இலக்குநோக்கிய பாதைக்கு தற்காலிகமாக சிறந்தது.

“அவலத்தைக் கொடுத்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்” என்ற தேசியத் தலைவரின் வார்த்தைகளில் தனியே வன்முறை மட்டும் பொதிந்திருக்கவில்லை.

உடல் ரீதியாக, உள ரீதியாக, பொருளாதார ரீதியாக என்று பலவழிகளிலும் அவலங்களை தமிழ் மக்கள் சந்தித்து விட்டார்கள். அதே வழியில் தான் நாம் அவர்களுக்கு அவலங்களைப் பரிசளிக்க வேண்டும். இப்போதைய நிலையில் அவலங்களைக் கொடுத்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக, அரசியல ரீதியான அவலங்களை கொடுப்பதே மிகச் சிறந்த வழிமுறையாக இருக்கும். எம்மை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தவர்களையும் அப்படியே செய்வதற்கு இது தான் உகந்த வழி. இந்த வழியில் அவர்களைத் தோற்கடிப்பதற்கு நகர்வுகளை மேற்கொள்ளாதிருப்பதோ அல்லது தீர்க்கமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலையில் அது குறித்துச் சிந்திக்காமல் இருப்பதோ பாரிய பின்னடைவுகளுக்கே வழி கோலும்.

நீண்டகால நோக்கில் தமிழர் தரப்பில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கோட்பாட்டு ரீதியான செயற்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.

அரசியல்,அடிப்படை உரிமைகளை பெறுவதற்கான போராட்டங்களை எப்படி எங்கெங்கு நடத்துவது என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.

வெறுமனே வாழ்வதற்கான உரிமைகளைக் கொடுங்கள் என்று எத்தனை காலத்துக்குத் தான் கேட்க முடியும்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் பகிரங்கமான படுகொலைகள் நின்று போயிருக்கின்றன. இந்தக் கட்டத்தில், இப்படிப்பட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்து போராட்டங்களை நடத்தி வந்தால் அது காலப்போக்கில் வலுவிழந்து விடும். நிச்சயமாக வெளிப்படையான இனப்படுகொலைகள் இலங்கையில் இனிமேல் நிகழாது.அப்படிப் பார்த்துக் கொள்வார்கள் சிங்கள ஆட்சியாளர்கள்.ஆனால் வேறு விதமாக தமிழரை நசுக்குவதற்கு திட்டங்கள் தீட்டுவார்கள்.

அது அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக அல்லது கலாசார ரீதியாக என்று பல வழிகளிலும் தமிழ்த் தேசிய இனத்தைப் பலவீனப்படுத்த முனைவார்கள். இனப்படுகொலைகளில் ஈடுபட்டால் வெளிநாடுகளின் ஆதரவு கிடைக்கவே கிடைக்காது. இதனால் அவர்களுக்கு ஒரு முகத்தைக் காண்பித்துக் கொண்டு தமிழருக்கு இன்னொரு முகத்தை காண்பிப்பார்கள்.

சிங்கள அரசுகளின் இத்தகைய போலிதனத்தை அரசியல்தீர்வு பற்றிய ஏமாற்றுத்தனத்தை, தமிழருக்கு உரிமைகளை வழங்க மறுக்கம் விடயத்தை சர்தேச சமூகத்தின் முன் கொண்டு செல்வதே இன்றைய தேவை.

இனப்படுகொலைகள், கைதுகள் காணாமற்போதல்கள், பொருளாதாரத்தடை என்பன உணர்வு மயமான விடயங்கள். இவை சர்வதேசத்தின் கண்களில் அதிக உறுத்தலை ஏற்படுத்தும்.

ஆனால் அரசியல் ரீதியான போராட்டங்கள் அப்படி எடுபடாது. ஆனால் இனிமேல் இத்தகைய போராட்டங்கள் தான் அவசியப்படும். ஏனென்றால் உணர்வு மயமான போராட்டங்களை நடத்தும் காலம் தடுப்பு முகாம்களுடன் பெரும்பாலும் முடிவுக்கு வந்து விடும். இதுபற்றி தெளிவு இல்லாவிட்டால் எந்தவொரு போராட்டத்தினாலும் வெற்றி பெற முடியாது.

கொடியையும், பதாகையையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு வீதியில் பேரணி செல்வதால் சாதிப்பதற்கு ஏதும் இருக்காது. நியாயமான காரணங்களை நியாயமான வழிகளில் முன்வைப்பது அவசியம். முன்னர் ஒரு காலத்தில் புலிகளைக் காரணம் காட்டி ஒதுங்கியிருந்த நாடுகளால் இப்போது அப்படிச் செய்ய முடியாது. எனவே சர்வதேசத் தலையீட்டை உருவாக்கிக் கொள்வதற்கு இப்போதைய தருணமே மிகச் சிறந்தது. சர்வதேசத் தலையீடு தவிர்ந்த வேறெந்த வழிகளிலும் தமிழருக்கு நியாயம் பிறக்காது. இதை உணர்ந்து சாத்தியமானதும்- தமிழருக்குச் சாதகமானதுமான கோரிக்கைளின் ஊடாக போராட்டகளை முன்னெடுக்கத் தயாராக வேண்டும்.
அதுவே மூன்று தசாப்தப் போரினால் சீரழிந்து போயிருக்கும் தமிழ்ச் சமூகத்துக்கு நியாயம் பெற்றுக் கொடுக்கும்.போராட்ட வடிவங்கள் மாறலாம். அது அடிப்படை இலட்சியத்துக்கு உரம் சேர்ப்பதாக இருந்தால்; எனவே ஒன்றுபடுவோம். ஒருங்கிணைந்து செயற்படுவோம்.

எமது பலம் வெறும் ஆயுதப்போராட்டத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டதல்ல- அதற்கும் அப்பாற்பட்டதென்ற உண்மையை புரிய வைக்க வேண்டும். சாத்தியமான வழிகளினூடாகப் போராட்டத்தை நகர்த்தி உரிமைகளைப் பெறுவதே புத்திசாலித்தனமானது. அதைவிட்டு விட்டு சாத்தியமற்ற வழிகள் மீது நம்பிக்கை வைப்பதும், எம்மை நாமே முட்டாள்களாக்கிக் கொள்வதும் சேறு பூசிக் கொண்டிருப்பதும் தமிழினத்துக்கு விடிவைத் தரப்போவதில்லை. என்பதை உணர்ந்து உரிமைப்போருக்காய் உழைப்போம். வாரீர்.

மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.

- தொல்காப்பியன்

தமிழ்' வாழ வழி ஏற்படுமா?அரசாங்கம் என்பது என்ன? "மக்கள் நலனைக் கட்டிக் காக்கும் ஒரு மாபெரும் அரசியல் அமைப்பு' என்றே அரசியல் சாசன விற்பன்னர்கள் கருத்துக் கூறுகின்றனர். ஆனால், இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய - மாநில அரசுகள் அப்படி இருக்கின்றனவா?
""மதுக்கடைகளின் வருமானத்தைவிட பொதுமக்களின் அமைதியான வாழ்வுதான் முக்கியம்; அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக பொதுமக்கள் தங்கள் அமைதியான வாழ்வை விலையாகக் கொடுக்க முடியாது...'' என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளது. இருந்தாலும் என்ன, அதற்காக நமது அரசு எந்திரம் அசைந்து கொடுத்து விடுமா?
மதுக்கடைகள் அரசின் வணிக நிலையங்களாகவும், கல்விக்கூடங்கள் தனியாரின் வணிக நிறுவனங்களாகவும் மாறி விட்டதைவிடப் பெரிய சமுதாயச் சீர்கேடு இருந்தால் சொல்லுங்கள்.
சமத்துவ சமுதாயத்துக்கான தொடக்கமாக சமச்சீர் கல்வியை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தியிருப்பதை நாம் வரவேற்கிறோம். தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி 6,400 பள்ளிகள் நீதிபதி குழுவிடம் மேல்முறையீடு செய்துள்ளன.
இதுபற்றி அரசின் முடிவு தற்போதுதான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்புக் கல்வியாண்டில் நீதிபதி கோவிந்தராஜன் குழுவால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கல்விக் கட்டணமே பொருந்தும். மேல்முறையீடு செய்துள்ள பள்ளிகள், நீதிபதி குழு இந்தக் கல்வி ஆண்டு தொடக்கத்தில் நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றியெல்லாம் தனியார் மற்றும் சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் கவலைப்படவில்லை; பழையபடியே கட்டண வசூலை நடத்தி முடித்துவிட்டன.
தனியார் பள்ளிகளில் நீதிபதி குழு நிர்ணயித்த கட்டணத்தைவிட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பெற்றோர், நீதிபதி கோவிந்தராஜன் குழுவிடம் புகார் அளித்துள்ளனர். அத்துடன் அந்தப் புகார்கள் தொடர்பாகத் தொடர்புடைய பள்ளிகளுக்கு விசாரணைக்குச் செல்லும் அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
அதிகக் கட்டண வசூல் தொடர்பாக பொதுமக்கள் அளித்த 113 புகார்களில் 21 புகார்கள் உண்மை என்று நிரூபணம் செய்யப்பட்டன. பள்ளிகளில் ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது உயர் அதிகாரிகள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார். இதுபற்றியெல்லாம் தனியார் கல்வி நிறுவனங்கள் கவலைப்படாததற்குக் காரணம், அவர்களுக்குத் தமிழக அரசு கல்வித்துறையில் இருக்கும் செல்வாக்குத்தான்.
சமச்சீர் கல்வி தொடர்பாக, பேராசிரியர் முத்துக்குமரன் குழு பரிந்துரைகள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது தெரிந்ததே. குழுவின் முக்கியப் பரிந்துரையாகிய தமிழ் வழிக் கல்வி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
கோவைத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வரின் முக்கிய அறிவிப்பாகிய தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பது வரவேற்கத்தக்கதாகும். எனினும், தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணித்துவிட்டு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்பது சரியான நடைமுறைதானா என்ற கேள்வி எழுகிறது.
இது போதாது என்று இப்போது மற்றோர் அறிவிப்பும் தாய்மொழிக் கல்விக்கு எதிராக அமைந்துள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பின்தங்கிய பகுதிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான "மாதிரி பள்ளி'களைத் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் நடப்புக் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய 18 ஒன்றியங்களில் ஒன்றியத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளி வீதம் 18 மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. காமராஜின் 107-ம் பிறந்தநாளான 15-7-10 அன்று தமிழக முதல்வர் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார். இம்மாதிரிப் பள்ளிகள் அனைத்திலும் ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரிப் பள்ளிகள் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்துக்கு எதிரானது; சமச்சீர் கல்விக்காக அமைக்கப்பட்ட பேராசிரியர் முத்துக்குமரன் அறிக்கையில் பள்ளிக்கல்வி அனைத்தும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
1956-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்துக்கும் எதிரானதாகும். அத்துடன் தமிழக அரசின் இச்செயல்பாடு மக்களிடம் பரவி வரும் ஆங்கில மோகத்துக்கும், ஆங்கில மோகத்தையே மூலதனமாகக் கொண்டு நடைபெற்றுவரும் தனியார் கல்வி வணிகத்துக்கும் துணை போவதாகும். மக்கள் நலம் நாடும் ஓர் அரசு பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய் எப்படி இருக்க முடியும்?
தமிழ் அமைப்புகளின் நீண்டநாள் கோரிக்கையான மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி அனைத்தும் தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்பதைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. நடப்புக் கல்வியாண்டு முதல் பொறியியலில் கட்டடவியல், இயந்திரவியல் என இரு பிரிவுகளில் தமிழ் வழியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொறியியல் தமிழ்வழிப்படிப்பு மாணவர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைச் செயலர் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அறிவித்தபடி பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பிரிவுகளில் தமிழ்வழிப் படிப்பில் 1,380 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் கலந்தாய்வின் மூலம் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அதே தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வியில் ஆங்கில வழிக் கல்வியை மத்திய அரசுத் திட்டத்தின்கீழ் கொண்டு வருவது முன்னுக்குப் பின் முரணாகத் தெரியவில்லையா? இளம்வயதிலேயே நுழைவுத் தேர்வு நடத்தி, தரமான குழந்தைகள் என்றும், தரமில்லாத குழந்தைகள் என்றும் பிரிப்பது அறிவுசார் பாகுபாட்டுக்கு வழிவகுக்காதா?
மேலும், பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை அனைவருக்கும் தரமான, சமச்சீரான கல்வியை இலவசமாக அளிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும். இதற்கு மாறாகப் பின்தங்கிய பகுதியில் ஒன்றியத்துக்கு ஒரு மாதிரிப் பள்ளியைத் தொடங்குவது, பெரும்பான்மையான மாணவர்களுக்குத் தரமான கல்வியைத் தர வேண்டிய கடமையிலிருந்து அரசாங்கம் பின் வாங்குவதாகும்; செம்மொழி மாநாடு நடத்தி தாய்மொழிக்குச் சிறப்புச் சேர்த்திருக்கும் அரசு, ஆங்கிலப் பள்ளிகளைத் திறப்பதன் மூலம் பழியையே சுமக்க வேண்டிவரும்.
ஆங்கில மோகம் தலைவிரித்தாடும் இன்றைய சூழலிலும் பள்ளிக் கல்வியில் 85 விழுக்காடு மாணவர்கள் தமிழில்தான் பயின்று வருகிறார்கள். ஆனால், இந்த ஏழை-எளிய மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உரிய இடங்கள் கிடைப்பதில்லை என்பதே மிகப்பெரிய சோகம்.
உண்மையான சமச்சீர் கல்வி என்பது பொதுப்பள்ளிகள் மற்றும் அருகாமைப் பள்ளிகள் மூலமாகவும், அனைத்துப் பள்ளிகளிலும் தாய்மொழியே பயிற்றுமொழி என்ற இலக்கை அடையும்போதுதான் முழுமையடையும். அத்துடன் இப்போது பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி மறுபடியும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் "மாநிலத்தில் சுயாட்சி' என்பதும், "மத்தியில் கூட்டாட்சி' என்பதும் பொருத்தமாக இருக்கும். ""தமிழா! பயப்படாதே. ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் ஆரம்பித்து ஐரோப்பிய சாஸ்திரங்களையெல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்...'' என்று பாரதி அன்றே கட்டளையிட்டார். ஆனால், நாம் இப்போதும் பயந்து நடுங்குகிறோம்.
ஓர் அரசாங்கத்துக்கு வழிகாட்ட வேண்டிய கடமை கல்வியாளர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும் இருக்கிறது. அவர்கள் வழிநடக்கும் அரசே மக்கள் நல அரசாகும்; அது மக்கள் பக்கமே நிற்கும்; மக்களும் அதன் பக்கமே நிற்பர்.
தேர்தல் வரும்; போகும்; தேசம் நிலையானது; மக்களும் அப்படித்தான்; மக்களை மறந்துவிட்டு தேசத்தைக் காப்பாற்ற முடியாது.

- தமிழன்

Tuesday, August 17, 2010

எந்திரன் திரை விமர்சனம்...


திருக்குவளை பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆக்டோபஸ் குடும்பத்தின் மேற்பார்வையில் வெளிவந்திருக்கும் படம்தான் எந்திரன்.

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப் பட்டிருக்கிறது என்ற ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை படம் கிளப்பியிருக்கிறது. ஆனால் தியேட்டருக்கு சென்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. திருட்டு விசிடியில் பார்க்கக் கூட இந்தப் படம் லாயக்கில்லை என்று தியேட்டரை விட்டு வெளியே வரும் பார்வையாளர்களின் முணுமுணுப்பை வெளிப்படையாக கேட்க முடிந்தது.

படத்தின் ஹீரோ ரோபோ, ஹீரோவா வில்லனா என்பது கடைசி வரை புரியாத வகையில் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது.

திருக்குவளையில், முத்துவேல் ரோபோ தயாரிப்பு கம்பேனியில் ஒரு பிற்பட்ட ஏழை வகுப்பில் உருவான கருணா ரோபோ எப்படி தமிழ்நாட்டுக்கே நம்பர் ஒன் ரோபோவாக மாறுகிறது என்பதுதான் கதையின் சாரம்.

தொடக்கத்தில் விறுவிறுப்பாக தொடங்குகிறது படம். ஆரம்பக் கட்டத்தில் திருக்குவளையில் இருக்கும் கருணா ரோபோ, திமுக என்ற கம்பெனியில் தனது பாதத்தை மட்டும் எடுத்து வைக்கிறது. பாதத்தை மட்டும் வைத்த ரோபோ, ஒட்டகம் கூடாரத்தில் நுழைந்த கதையாக, மொத்த கம்பெனியையும் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல், தனது குட்டி ரோபோக்களை வைத்து, அந்தக் கம்பெனியில் உள்ள மற்ற ரோபோக்களை காலி செய்வது கதையில் விறுவிறுப்பை கூட்டுகிறது.
மற்ற ரோபோக்களைப் போல அல்லாமல், கருணா ரோபோவுக்கு அசாத்திய பேச்சுத் திறமை. மற்ற ரோபோக்கள் தங்கள் பேச்சுக் கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கையிலேயே, திமுக கம்பேனியை உருவாக்கிய அண்ணா ரோபோவிடம் நெருக்கமாகிறது கருணா ரோபோ. ஆனால் கருணா ரோபோவுக்கு அண்ணாவிடம் இருக்கும் செல்வாக்கைப் போலவே, எம்ஜிஆர் ரோபோவும், அண்ணா ரோபோவிடம் நெருக்கமாக இருக்கிறது. இது கதாநாயக கருணா ரோபோவுக்கு அறவே பிடிக்கவில்லை.

எம்ஜிஆர் ரோபோவை எதிர்க்கலாம் என்று பார்த்தால், அந்த ரோபோவுக்கு மற்ற ரோபோக்களிடம் இருக்கும் செல்வாக்கு பிரமிக்க வைக்கிறது. சரி வேறு வழியில்லை, உறவாடிக் கெடுக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறது கருணா ரோபோ.

எம்ஜிஆர் ரோபோவிடம் நெருக்கமாக உறவாடி, தன்னை திமுக கம்பேனியின் தலைமைப் பதவிக்கு பரிந்துரைக்குமாறு கருணா ரோபோ கேட்டுக் கொண்டதை எம்ஜிஆர் ரோபோ நம்பி, கருணா ரோபோவை தலைமை பொறுப்புக்கு கொண்டு வருகிறது. ஆனால், கருணா ரோபோ, ஏற்கனவே திட்டமிட்டுருந்தது போல, எம்ஜிஆர் ரோபோவிடம் பேட்டரிகள் எண்ணிக்கை குறைகிறது என்று கணக்கு கேட்டு குற்றம் சாட்டுகிறது. இருக்கும் அத்தனை பேட்டரிகளையும், கருணா ரோபோவிடம் கொடுத்திருந்தும், தன்னிடம் கணக்கு கேட்டதைக் கண்டு அதிர்ச்சியான எம்ஜிஆர் ரோபோ, திமுக கம்பேனியை உடைத்து, அதிமுக என்ற தனிக் கம்பேனியை ஆரம்பிக்கிறது.

இதற்கிடையே இந்திரா என்ற தலைமை ரோபோ, இந்தியா முழுவதும் ரோபோக்களின் நடமாட்டத்தை தடை செய்யும் வகையில், நெருக்கடி நிலை ஒன்றை செயல்படுத்துகிறது. இதையடுத்து, கருணா ரோபோ, இந்திரா ரோபோவுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறது.

இந்த நெருக்கடி நிலை சமயத்தில், கருணா ரோபோ, ரோபோ தயாரிப்பில் பேட்டரிகள், சிப்புகள், ஐசிக்கள் வாங்குவதில் முறைகேடு செய்து விட்டதாக, சர்க்காரியா என்ற நீதிபதி ரோபோவை விசாரிக்க உத்தரவிடுகிறார். அந்த சர்க்காரியா ரோபோ, ரோபோக்களுக்கே உரிய நேர்த்தியுடன் கருணா ரோபோ, விஞ்ஞான முறையில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டுகிறார்.

இந்த நீதிபதி ரோபோவின் தொல்லையிலிருந்து விடுபட, இந்திரா ரோபோவிடம், தனது பேட்டரியை கழற்றி காலில் வைத்து மன்னிப்பு கேட்கிறது கருணா ரோபோ. இந்திரா ரோபோவும், போனால் போகிறது என்று நீதிபதி சர்க்காரியா ரோபோ கொடுத்த விசாரணை அறிக்கையை, கழுதை ரோபோக்களுக்கு தின்னக் கொடுத்து விடுகிறார்.

இதற்கிடையே கருணா ரோபோ, ஒரு மூன்று பெண் ரோபோக்களை துணைக்கு சேர்த்துக் கொண்டு ஏகப்பட்ட குட்டி ரோபோக்களை தயாரித்து தமிழகமெங்கும் அனுப்புகிறது. அந்த குட்டி ரோபோக்கள் செய்யும் அட்டூழியங்கள் கடைசியில் கருணா ரோபோவுக்கே வினையாக வந்து முடிகிறது.

எம்ஜிஆர் ரோபோ, பிரிந்து தனிக் கம்பேனி தொடங்கியதும், கருணா ரோபோ, திமுக கம்பேனியை நடத்த முடியாமல் கடும் சிரமப் படுகிறது. எப்படியாவது, எம்ஜிஆர் ரோபோவை ஒழித்து விட வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்கிறது. ஆனால் எம்ஜிஆர் ரோபோவுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு கருணா ரோபோவை மண்ணைக் கவ்வச் செய்கிறது.

எம்ஜிஆர் ரோபோவுக்கு முக்கியமான இரண்டு சிப்புகளும் பழதடைந்து ரிப்பேர் செய்வதற்காக அமேரிக்காவில் உள்ள ப்ரூக்ளின் ரோபோ ரிப்பேர் கம்பேனிக்கு செல்கிறது. கருணா ரோபோ இந்த கேப்பில் கடா வெட்ட முயற்சி செய்கிறது. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் வெற்றி பெறாமல் கருணா ரோபோ மண்ணைக் கவ்வுகிறது.

இந்நிலையில் எம்ஜிஆர் ரோபோ மிகவும் ரிப்பேராகி, இனி சரிசெய்ய முடியாது என்ற நிலையில் பேட்டரி தீர்ந்து போய் செயலிழந்து விடுகிறது.

இந்த நிலையில் தான் கதையில் இடைவேளை. இடைவேளை முடிந்ததும் எம்ஜிஆர் ரோபோ செயலிழந்து விட்டதால், கருணா ரோபோவுக்கு ரோபோ தலைவர் பதவி கிடைக்கிறது. இனிமேல் கருணா ரோபோவுக்கு எதிரிகளை கிடையாது என்று நினைக்கும் வேளையில், எம்ஜிஆர் ரோபோ கம்பேனியில் இருந்து ஜெயலலிதா என்ற பெண் ரோபோ திடீரேன்று கிளம்பி, கருணா ரோபோவுக்கு பெரும் தலைவலியாக உருவாகிறது.

ஜெயலலிதா ரோபோவுக்கு பின் மற்ற ரோபோக்கள் அணி திரள, கருணா ரோபோ திகைக்கிறது. அகில இந்திய ரோபோக்களின் தலைவன் ஒரு விபத்தில் இறந்ததால் ஏற்பட்ட அனுதாப அலையில் ஜெயலலிதா ரோபோ ரோபோக்கள் தலைவராகிறது. ஆனால் தலைவரானதும், ஜெயலலிதா ரோபோவின் போக்கு மிக மிக மோசமாக இருப்பதால், கருணா ரோபோவுக்கு மீண்டும் அடிக்கிறது யோகம். இப்போது கருணா ரோபோவுக்கு பதவி வந்ததும் ஜெயலலிதா ரோபோவை, கோடவுனில் அடைக்கிறது கருணா ரோபோ. ஜெயலலிதா ரோபோவை சிறையில் அடைப்பது மட்டுமல்லாமல், அந்த ரோபோவுடன் இருக்கும் மற்ற அல்லு சில்லு ரோபோக்களையும் சிறையில் அடைக்கிறது கருணா ரோபோ. ஜெயலலிதா ரோபோ, இவ்வாறு கோடவுனின் அடைத்ததை மறக்காமல், ஐந்து ஆண்டுகள் கழித்து தனக்கு மீண்டும் தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோவை நள்ளிரவில் பிடித்து கோடவுனின் அடைக்கிறது. இது கருணா ரோபோவை மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது. அவ்வாறு கோடவுனில் அடைக்கையில், கருணா ரோபோ “அய்யோ கொலை பண்றாங்க, அய்யோ கொலை பண்றாங்க“ என்று கதறுவது பெண் பார்வையாளர்களை உருக்குகிறது.

இந்தப் போக்கு இப்படியே தொடரும் நிலையில், கருணா ரோபோவுக்கு மீண்டும் தலைவர் பதவி கிடைக்கிறது. கிடைத்த வாய்ப்பை கருணா ரோபோ மிக சாதுர்யமாக பயன்படுத்திக் கொள்கிறது. தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோவின் குட்டி ரோபோக்கள் தமிழகமெங்கும் செய்யும் அட்டூழியங்களை கருணா ரோபோ கண்டு கொள்ளாமல் இருப்பது, கதையின் ஹீரோ கருணாநிதி ரோபோவை வில்லன் போலச் சித்தரிக்கிறது.

இந்த முறை தலைவர் பதவி கிடைத்ததும், கருணா ரோபோ, ஜாபர் சேட் என்ற ஒரு ரோபோவை உருவாக்குகிறது. இந்த ஜாபர் சேட் ரோபோ, மற்ற ரோபோக்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டு கருணாநிதி ரோபோவிடம் சொல்வது போல் அமைந்துள்ள காட்சி மிகவும் புதுமையானது.

உலகில் எந்த ரோபோவும் செய்யாத புதுமையை கருணா ரோபோ செய்கிறது. மற்ற ரோபோக்கள் படும் துன்பத்தை பார்த்து மனம் வருந்தி, உண்ணாவிரதம் இருக்கிறது, மனிதச் சங்கிலி நடத்துகிறது, போராட்டம் நடத்துகிறது. ஆனால் இது எதுவுமே எடுபடாததால் மிகவும் மனம் வருந்துகிறது கருணா ரோபோ.

இந்த வருத்தத்தில் இருந்து விடுபட, ஒரு புதிய கம்பேனியை உருவாக்குகிறது கருணா ரோபோ. அந்த கம்பேனியின் வேலையே, கருணா ரோபோவை பாராட்டுவதுதான். இந்த பாராட்டு மழையில் நனைந்து மற்ற எல்லாவற்றையும் மறந்து ஆனந்தமாக இருக்கிறது கருணா ரோபோ. அந்த பாராட்டு கம்பெனியின் தலைவராக ஜெகதரட்சகன் ரோபோவை நியமிக்கிறது கருணா ரோபோ. அந்தக் கம்பெனியின் மற்ற ரோபோக்கள், துரைமுருகன் ரோபோ, தமிழச்சி ரோபோ, சுப.வீரபாண்டியன் ரோபோ, கமலஹாசன் ரோபோ, ரஜினிகாந்த் ரோபோ, வாலி ரோபோ, வைரமுத்து ரோபோ. இந்த பாராட்டு கம்பேனி ரோபோக்கள் அடிக்கும் கூத்துக்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.

கமலஹாசன் ரோபோ, ரோபோவை கண்டுபிடித்ததே கருணா ரோபோதான் என்று பேச, ரோபோவுக்கு தமிழ் கற்றுத் தந்ததே கருணா ரோபோதான் என்று பேச, வாலி ரோபோ, தமிழ் மட்டுமல்ல, எல்லா மொழிகளையும் கற்றுத் தந்ததே கருணா ரோபோதான் என்று பேச, தியேட்டரில் உள்ள பார்வையாளர்கள், சிகரெட் பிடிக்க கூட்டம் கூட்டாக வெளியே செல்வதை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா ரோபோவின் கதை முடிந்து விட்டது என்று நினைக்கும் வேளையில், ஜெயலலிதா ரோபோ, கோயம்பத்தூரிலும், திருச்சியிலும், ரோபோக்களின் பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தி கருணா ரோபோவின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்.

இந்த இரு ரோபோக்களுக்கும் நடக்கும் போட்டியின் கிளைமாக்ஸ் 2011ல் நடக்கிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார் என்பதை திரையில் காண்க.

கருணா ரோபோவுக்கு பத்மாவதி ரோபோ, தயாளு ரோபோ, ராசாத்தி ரோபோ என்று மூன்று ஹீரோயின்கள். இந்த மூன்று ஹீரோயின்களில் பத்மாவதி ரோபோவின் பேட்டரி படத்தின் தொடக்கத்திலேயே செயலிழந்து விடுகிறது. மற்ற இரண்டு ஹீரோயின் ரோபோக்களும், திரையில் பெரும் பங்கு வகிக்கவில்லை என்றாலும், கருணா ரோபோ எடுக்கும் முடிவுகளிலும், நடவடிக்கைகளிலும் இவர்களின் பெரும் பங்கு இருக்கிறது என்பதை பார்வையாளர்களால் எளிதாக உணர முடிகிறது.

கருணா ரோபோ, “நான் நின்னா தமிழ், நடந்தா பாரசீகம், பேசுனா உருது, பாடுனா வங்காளம், மொத்தத்துல நான் கலைக்களஞ்சியம்டா“ என்று பேசும் பன்ச் டயலாக்குகள் எடுபடவில்லை.

படத்தின் ஒளிப்பதிவு அழகிரி ரோபோ. வெளிச்சம் பத்தாத இடங்களில், பத்திரிக்கை அலுவலக ஊழியர்களை எரித்து லைட்டிங் எஃபெக்ட் கொடுக்கிறார். ஆடியோ மற்றும் லைட்டிங் ஆற்காடு ரோபோ. பல நேரங்களில் ஆடியோ மந்தமாகவும், லைட்டிங் பற்றாமல், இருட்டில் பல காட்சிகள் எடுக்கப் பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் எந்திரன், எந்திரிக்காதவன்.

சவுக்கு
--

Monday, August 16, 2010

காஞ்சிக்கு தனி ஆட்சி

காஞ்சி ஜெயேந்திரனும் கருவறை புகழ் அர்ச்சகர் தேவநாதனும் நீதிமன்றம் வந்தபோது சந்தித்துப் பேசுகிறார்கள்

ஜெயேந்திரன் : அம்பி, தேவநாதா, நம்ம காஞ்சிபுரத்து பெருமையை பரப்புறதுல நீயும், என்னோட சேர்ந்துட்டே போலிருக்கே!

தேவநாதன் : எல்லாம், தாங்கள் காட்டிய வழி சுவாமி!

ஜெயேந்திரன் : போடா, அபிஷ்டு. நானாவது மடத்துக்குள்ளே அப்படி இப்படின்னு இருந்தேன். நீ கர்ப்பக கிரகத்துக்குள்ளேயே திருவிளை யாடல்களைத் தொடங்கிட்டியே, அபார துணிச்சல்டா, நோக்கு!

தேவநாதன் : இதுக்கு என்ன சாமி, துணிச்சல் வேண்டியிருக்கு. நம்ம பகவான்கள் செய்யாததையா நாம் செய்துட்டோம். பகவான்கள் கற்பழிப்பு நடத்தினா, ‘புனிதம்’ங்கிறான்! நாம் செய்தால் கிரிமினல் குற்றம்ங்கிறான். சே... பகவானோட நெருங்கி இருக்குற, நமக்கு, இந்த அற்ப உரிமைகள் கூட கிடையாதா?

ஜெயேந்திரன் : விவரம் தெரியாமப் பேசாதடா அம்பி! பகவானே, இப்ப நேரில் வந்து அந்த திருவிளையாடல்களை நடத்துனா, சட்டத்துலே யிருந்து, எவனும் தப்பிக்க முடியாது தெரியுமோன்னோ?

தேவநாதன் : பகவான் தப்ப முடியாதுங்கிறது, சரிதான்! ஆனா, நீர் தப்பிட்டேளே! கோயிலுக் குள்ளேயே சங்கர்ராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உங்களுக்கு எதிரான சாட்சிகள் எல்லாம், பல்டி அடிக்க ஆரம்பிச்சுட்டாளே! தி.மு.க. ஆட்சியிலே, காத்து உங்க பக்கம் வீசுறதே!

ஜெயேந்திரன் : அம்பி, அதுக்கெல்லாம் கொடுத்து வைக்கனும்டா! இப்போ நேக்கு எதிரான சாட்சியெல்லாம் பல்டி அடிச்சுட்டாளே; இதை எவனாவது எதிர்த்து வாயை திறக்குறானா பாத்தியா? ஒரு பயலும் பேச மாட்டான். சுப்ரமணியசாமியி லிருந்து சோ ராமசாமி வரைக்கும் எல்லோரும் வாயை மூடிட்டா... என்னைக் கைது செஞ்ச அந்த அம்மாளே, இப்போ, எனக்கு எதிரா வாய திறக்குறதுல்லேயே! போலீசு எல்லாம்கூட இப்ப என் பக்கம் சாஞ்சிடுச்சு! ‘தினமணி’, ‘தினமலர்’ எல்லாம் மீண்டும் நம்மள புகழத் தொடங்கிட்டானே! கவனிச்சியோ!

தேவநாதன்: ம்... கவனிச்சுண்டுதான் இருக்கேன்.... தினகரன் எரிப்பு வழக்குல கூட குற்றவாளி எல்லாம் தப்பிச்சுட்டா! போலீசே பல்டி அடிச்சுடுத்து. அதேபோல உங்களுக்கும் அடிக்குது யோகம்!

ஜெயேந்திரன் : அம்பி, தினகரன் எரிப்பு வழக்குல, போலீசே பல்டி அடிச்சத துக்ளக் சோ கண்டிச்சு எழுதிட்டான். ஆனால் என் விஷயத்துல கண்டுக்கவே இல்லயே கவனிச்சியோ?

தேவநாதன் : அது, எப்படி சாமி கவனிக்காம இருப்பேன். நான் கர்ப்பகிரகத்துக்குள்ளே ‘கசமுசா’ செய்தேனே; அதை நம்ம ராமகோபாலன்னோ, துக்ளக் ராமசாமியோ, சு.சாமியோ கண்டுக்கலியே? இந்து விரோதின்னு எவனாவது சுண்டு விரலை அசைத்தானா? இல்லையே, சாமி! இப்படி நமக்குள்ள ஒரு நல்ல ‘அன்டர்ஸ்டான்டிங்’ இருக்கற துனாலதான் நம்ம, வண்டி ஓடிகிட்டு இருக்கு. ஆனா லும், நீங்க தப்பிச்சுட்ட மாதிரி, நான் தப்பிக்கிற துக்கும், ஏதேனும் வழி செய்ய மாட்டேளா சாமி.

ஜெயேந்திரன்: மடையா, செல்போன ஆத்துலேயே விட்டுட்டு வராம - ஏண்டா கர்ப்ப கிரகத்துக்குள்ளே எடுத்துட்டு போன! பூணூலை மட்டும் மாட்டிட்டு வந்தா போதாதோ? அது தானே வினையா வந்து ‘முடிஞ்சுருச்சு’! சமஸ்கிருத மந்திரம் மட்டும் ஒலிக்க வேண்டிய இடத்துல, ‘செல்போன்’ அபசுரம் கேட்கலாமோ!

தேவநாதன்: நீங்க சொல்றது சரிதான் சாமி! ஆனா ‘பார்ட்டிகளை’ அவசரமாக அழைக் கிறதுக்கு, செல்போன் வேணுமே சாமி. பக்தர்கள், கூட்டம் இல்லாத நேரம்பார்த்து, பகவான் மட்டும் தனியா இருக்குற நேரத்துல அவசரமா ‘பார்ட்டிகள’ அழைக்கணும்னா, பகவானையா அனுப்ப முடியும்? அவன்தான் போவானா? அவன் இருக்கிற இடத்துல கல்லா தானே உட்கார்ந்திருப்பான்! விவரம் தெரியாம பேசறேளே! அவசரத்துக்கு செல்போன் உதவுமே தவிர, ஆண்டவனா உதவுவான்?

ஜெயேந்திரன்: அந்த ஆண்டவன்தான் எதுக்கும் உதவ மாட்டான்ங்குறது நமக்குத் தெரியாதா? நன்னாவே தெரியும். அதனால் தானே, நீயும், நானும் மடத்தையும் கருவறையையும் நமக்கு வசதியா பயன்படுத்த முடியுது! ஆனா, காலம் கெட்டுப் போச்சுடா! இனி நம்ம இஷ்டம்போல விளையாட முடியாது போலிருக்கு.
தேவநாதன் : என்ன சொல்றேள்?

ஜெயேந்திரன் : கர்ப்பகிரகம், மடத்துக்குள்ளே எல்லாம், வீடியோ கேமராவைப் பொருத்திட்டான்னு வச்சுக்கோ, நம்ம கதை அம்போ தான்!

தேவநாதன்: அந்த அளவுக்கு ஏமாந்துருவோமா? அதெல்லாம் சாஸ்திரத்துக்கு விரோதம்னு நம்ம, இராமகோபாலன், துக்ளக், ராமசாமி எல்லாம் கூச்சல் போட வச்சுட்டா போச்சு!

ஜெயேந்திரன்: ஆமாண்டா, அம்பி! கவர்ன்மென்ட்ல அப்போ பயந்துடுவான்ல. இந்த “சாஸ்திர விரோதம்”, “ஆச்சார விரோதம்”, “பழக்க வழக்க விரோதம்” என்கிறதையெல்லாம் நாம இறுக்கிப் பிடிச்சுக்கனும். இல்லாட்டா, நம்ம பாடு அவ்வளவுதான்!

தேவநாதன்: அதாவது, இந்த “விரோதங்”களை யெல்லாம் செய்யறதுக்கு பூதேவராகிய நமக்கு மட்டுமே உரிமை. மற்றவர்களுக்கு இல்லேங்கிறேள். அப்படித்தானே?

ஜெயேந்திரன் : இதையெல்லாம் நோக்கு விளக்கி விலாவாரியாக சொல்லணுமாடா? புரிஞ்சுக்க வேண்டியது தான்.

தேவநாதன்: புரிஞ்சுகிட்டேன் சாமி. அப்படியே என்னை வழக்கிலேயிருந்து காப்பாத்துறதுக்கு ஏதாவது வழிசொல்லுங்களேன்.

ஜெயேந்திரன் : யோசனை இருக்குடா, அம்பி! காஞ்சிபுரத்தை - தமிழ்நாட்டிலேயிருந்து தனியா பிரிச்சு, நம்ம தலைமையிலே தனி ஆட்சியக் கொண்டு வந்துட்டோம்னா, ஒரு பயலும் நம்மை அசைச்சுக்க முடியாதுடா. அதைத்தான் ஆலோசனை பண்ணிகிட்டு இருக்கேன்.

தேவநாதன் : சபாஷ்! சரியான யோசனை சாமி. அதுல, என்னையும் சேர்த்துக்கோங்க! காஞ்சிபுரத்த நாம் எல்லாம் சேர்ந்து “புண்ணிய” பூமியா மாத்திடுவோம்! அப்ப, எந்த கூட்டம், எந்த போலீசு வந்துடுவான், பார்த்துடுவோம்!

- கோடாங்குடி மாரிமுத்து

Sunday, August 15, 2010

சுதந்திர தின செய்தி

ஊழல்களின் தேசம்!

நல்ல மனிதர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே தீவினையின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Edmond Burke
1993 மும்பை குண்டு வெடிப்பின் போது

இன்று இந்தியாவில் ஊழல் ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகிப் போய் விட்டது. ஊழலைப் பொறுத்தவரை நமக்கு மிக அதிகமான சகிப்புத் தன்மை வளர்ந்து, ஊழலை ஒரு பொருட்டாகவே நாம் கருதாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

ஊழல் என்ன அவ்வளவு பெரிய விஷயமா ? எல்லோரும்தான் ஊழல் செய்கிறார்கள், யார்தான் ஊழல் செய்யவில்லை என்று கேட்பீர்கள்.

1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பை மறந்திருக்க மாட்டீர்கள்.

250 பேர் இறந்தார்கள். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். இந்த சதிச்செயலில் 1500 கிலோவுக்கும் மேற்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து பயன்படுத்தப் பட்டது.

1993 பிப்ரவரி 2 மற்றும் 8 தேதிகளில் 1500 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து, இந்திய கடல் வழியாக சட்ட விரோதமாக வருவதற்கு காரணம் யார் தெரியுமா ?

மும்பை மாநகரத்தின் கூடுதல் கஸ்டம்ஸ் கலெக்டராக இருந்த சோம்நாத் தாப்பா.

மும்பை ஸ்ரீவர்தன் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ண பாட்டீல் கோந்கா செக்போஸ்டில், ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வைக்கப் பட்டிருந்த வண்டியை இடை மறித்து, பணம் பெற்றுக் கொண்டபின் மும்பை செல்ல அனுமதித்தவர்.

அடுத்து கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவந்த் கவுரவ். இவர், வெடிப்பொருள் இருந்த வண்டியை, மும்பை நகருக்குள் வரும் வரை பாதுகாப்புக்காக தன்னுடைய காரில், வந்து விட்டுச் சென்றவர்.

இந்த அரசு அதிகாரிகள், லஞ்சம் வாங்காமல் தங்களுடைய கடமையைச் செய்திருந்தால் 250 அப்பாவி மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். 700 அப்பாவிகள் படுகாயமடைந்திருக்க மாட்டார்கள்.

சுதந்திர இந்தியாவில், ஊழலை இப்போதும், அப்போதும், தாலாட்டி சீராட்டி வளர்த்தெடுத்து, இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்.

காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப் பட்ட கட்சிகள் அனைத்தும், இன்று காங்கிரஸ் அரவணைப்பில் இருப்பதற்கு காரணமும், காங்கிரஸ் கட்சியின் ஊழல் கலாச்சாரம்தான்.

நகைச்சுவையாக ஒரு கதை சொல்வார்கள். நேரு பிரதமராக இருந்த காலத்தில், கட்சிக்காக எவ்வளவு பணம் வாங்கப் படுகிறது என்பதே நேருவுக்கு தெரியாது. இந்திரா காலத்தில், இந்திரா பெட்டிகளை எண்ண ஆரம்பித்தார். ராஜீவ் காலத்தில் சில்லரைகளையும் எண்ண ஆரம்பித்தார் என்று காங்கிரஸ் கட்சியின் மதிப்பீடுகளின் வீழ்ச்சியை குறிப்பிடுவார்கள்.
1993 வி.கே.கிருஷ்ண மேனன்.

சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல் நேருவின் நம்பிக்கைக்கு பாத்திரமான நெருங்கிய நண்பரும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் சம்பந்தப் பட்டது.

1948ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக கிருஷ்ண மேனன் இருந்தார். அப்போது, பாகிஸ்தானுடன் போர் துவங்கிய நிலையில, லண்டனைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய ஒரு நிறுவனத்திடமிருந்து 2000 ஜீப்புகள் வாங்க பரிந்துரை செய்தார். அந்நிறுவனத்திற்கு, ஏறக்குறைய மொத்த பணமும் முன்பணமாகவே வழங்கப் பட்டது.

2000 ஜீப்புகளுக்கு பதிலாக வெறும் 155 ஜீப்புகள் மட்டுமே, அவையும் தரம் குறைந்ததாக வந்து சேர்ந்தது. இது பற்றி பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்திகள் வந்தும், நேரு கிருஷ்ண மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார். இந்த ஊழலில் மொத்த மதிப்பு ரூபாய் 80 லட்சம்.

1949ல் ராவ் சிவ பகதூர் சிங் என்பவர், ஒரு வைரச் சுரங்க உரிமத்தை புதுப்பித்து தருவதற்காக சச்சேந்திர பாரன் என்ற வைர வியாபாரியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்த ராவ் சிவ பகதூர் சிங் யார் தெரியுமா ? மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த அர்ஜுன் சிங்கின் தந்தை.

அடுத்த ஊழல், 1951ம் ஆண்டில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட்ராமன் சம்பந்தப் பட்டது. ஒரே நிறுவனத்துக்கு சைக்கிளின் உதிரி பாகங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய ஆணையிட்டதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு, வெங்கட்ராமன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

அடுத்த ஊழல் 1958ம் ஆண்டு, வெளி வந்த “முந்த்ரா ஊழல்“ என்று அழைக்கப் பட்ட ஊழல் தான். இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்தது யார் தெரியுமா ?

நேருவின் மருமகனும், இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தி.

1993 பெரோஸ் காந்தி

1957ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ரா என்பவர்தான் இந்த ஊழலுக்கு வித்து. கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர்தான் ஹரிதாஸ் முந்த்ரா. இவர் பங்குச் சந்தையிலும் ஹர்ஷத் மேத்தாவுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

இவரது 6 தொழில் நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தையில் அசுர வீழ்ச்சி அடைந்ததனால் இந்நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு நிறுவனமான எல்.ஐ.சி யை வாங்க வைத்தார். எல்ஐசியும், அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் ஆலோசனையின் பேரில், 1.25 கோடிக்கு, முந்த்ராவின் ஆறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது.

ஆனால், வாங்கிய பங்குகள் அனைத்தும், விலை வீழ்ச்சியடைந்து, எல்ஐசியின் மொத்த முதலீடும் காணாமல் போனது. இது தொடர்பாக, பெரோஸ் காந்தி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 1958ம் ஆண்டு கேட்ட கேள்வி, இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியது.

இது தொடர்பாக சொல்லப் படும் ஒரு நகைச்சுவை கதை சுவையானது.

நேருவின் மருமகன் ஆனதால், நிதி அமைச்சல் டிடிகே, பெரோஸ் காந்தியை நேரு குடும்பத்தின் செல்ல நாய் என்று கூறுவது வழக்கம்.

முந்த்ரா ஊழல் தொடர்பாக தனது பேச்சை தொடங்கிய பெரோஸ் காந்தி “நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்னை நேரு குடும்பத்தின் வளர்ப்பு நாய் என்று கூறுகிறார். அவர் தன்னை பாராளுமன்றத்தின் தூண்களில் ஒருவர் என்று கூறிக்கொள்கிறார். ஒரு நாய், தூணைப் பார்த்தால் என்ன செய்யுமோ அதை நான் இப்போது செய்யப் போகிறேன்” என்று கூறிவிட்டு பேச்சைத் தொடங்கினார் என்று கூறுவார்கள்.

பெரோஸ் காந்தியின் குற்றச் சாட்டைத் தொடர்ந்து, நாடெங்கும் பெரும் அமளி கிளம்ப, நேரு, நீதிபதி சாக்லா என்பவர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். நீதிபதி சாக்லா தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் என்ன தெரியுமா ? 24 நாட்கள்.

நீதிபதி லிபரான் தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட 18 ஆண்டுகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீதிபதி சாக்லா தனது அறிக்கையில் இந்த ஊழலுக்கு அப்போதைய நிதித் துறை செயலர் ஹரிபாய் படேல், மற்றும் இரண்டு எல்ஐசி அதிகாரிகளே இந்த ஊழலுக்கு காரணம், அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதித் துறைச் செயலரின் நடவடிக்கைகளுக்கு, நிதி அமைச்சர் என்ற வகையில் கிருஷ்ணமாச்சாரியும் பொறுப்பு என்று கூறினார். கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

இதற்கு அடுத்த பெரிய ஊழல் 1958ம் ஆண்டில், இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் முதலாளி ராமகிருஷ்ண டால்மியாவை பற்றியது. ராமகிருஷ்ண டால்மியா தன்னுடைய காப்பீட்டு நிறுவனமான பாரத் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திலிருந்து, 2.5 கோடியை கையாடல் செய்தார்.

1962ம் ஆண்டு தேஜா கேப்பர் ஊழல் என்று அழைக்கப் படும் ஊழல். ஜெயந்தி தர்மா தேஜா என்பவர், ரூபாய் 200 முதலீட்டில் ஒரு கப்பல் நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்திற்கு அரசிடமிருந்து 200 கோடியை கடனாகப் பெற்றார்.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களின் பணம் அனைத்தும், ஜெயந்தி தர்மா தேஜாவின் சொந்த வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப் பட்டது. 1970ல் லண்டனில் கைதான தேஜா, காவலில் இருந்து தப்பிச் சென்றார். இன்று வரை அவர் எங்கிருக்கிறார் என்ற விபரம் இல்லை.

1962ம் ஆண்டு, பஞ்சாப் முதல்வராக இருந்த பிரதாப் சிங் கேரோன் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச் சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.

நீதிபதி தாஸ் தனது அறிக்கையில், ஒரு தந்தை, தனது மகன்கள் செய்யும் எல்லா காரியங்களுக்கும் பொறுப்பாக முடியாது என்றாலும் முதலமைச்சராக இருப்பவருக்கு தனது மகன்களின் செயல்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது என்று அறிக்கை அளித்தார். இதை ஏற்ற பிரதாப் சிங் கேரோன், உடனடியாக பதவி விலகினார்.

அடுத்த ஊழல், 1971ம் ஆண்டில் நகர்வாலா ஊழல் என்று பிரபலமாக அழைக்கப் பட்ட ஊழல். 1971ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராளுமன்ற தெரு கிளையின் தலைமை காசாளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு இந்திரா காந்தியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் 60 லட்சம் ரூபாயை எடுத்து, பங்களாதேஷை சேர்ந்த ஒரு நபருக்கு அளித்தார்.

பின்னர், விசாரணையில் இந்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த ரஸ்தம் சோரப் நகர்வாலா என்பர்தான் இந்திராவின் குரலில் பேசினார் என்று கண்டிறியப்பட்டது. கைது செய்யப் பட்ட நகர்வாலா, சந்தேகத்திற்குரிய முறையில் 1973ம் ஆண்டு, சிறையிலேயே இறந்தார்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி காஷ்யப் மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.

1976ம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஹாங்காங்கைச் சேர்ந்த, இல்லாத ஒரு நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட நஷ்டம் 2.2 கோடி.

1981ல் மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வர் பிசினெஸ் நிறுவனங்களிடமிருந்து பெற்ற பணத்தை, தனக்கு சொந்தமான ஒரு தனியார் ட்ரஸ்டில் டெபாசிட் செய்த தொகை 30 கோடி.

1987ல் ஜெர்மனியைச் சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் நிறுவனம், கப்பல் விற்பதற்காக இந்திய அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணம் 20 கோடி.

1982ம் ஆண்டு மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த அர்ஜுன் சிங், சுர்ஹத் குழந்தைகள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் லாட்டரி டிக்கட்டில் 5.4 கோடி ஊழல் புரிந்தார் என்று குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால், இந்த குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவேயில்லை.

இதற்குப் பிறகு, இந்தியாவை உலுக்கி, ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த மிகப் பெரும் ஊழல் போபர்ஸ் ஊழல்.

1987 ஏப்ரல் 16ல், சுவீடன் வானொலி போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து இந்த போபர்ஸ் பீரங்கி வாங்கப் பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இந்தியாவில் பெரும் புயல் கிளம்பியது.

இந்த பேரத்தில் லஞ்சமாக 139 கோடி ரூபாய்கள் ராஜீவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான ஒட்டாவியோ கொட்டரோக்கியின் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நார்ட்பினான்ஸ் வங்கியின் 18051-53 என்ற கணக்கில் போடப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த ஊழல் வெளியானதால், ஆட்சியை இழந்த ராஜீவ், கடைசி வரை இந்த புகாரை மறுத்து வந்தார். கடும் போராட்டத்துக்கு பிறகு வி.பி.சிங் பிரதமாரான பிறகு, சிபிஐ, இவ்வழக்கில் விசாரணையை துவக்கியது. பல ஆண்டுகள் கடந்தும், இவ்வழக்கில் ஒருவருமே தண்டிக்கப் படவில்லை.

காங்கிரஸ் 2004ல் பதவியேற்றதும், முடக்கி வைக்கப் பட்டிருந்து கொட்டரோக்கியின் வங்கிக் கணக்குகள், ரிலீஸ் செய்யப் பட்டன. பத்திரிக்கைகளில் இச்செய்தி வெளியாகி, பரபரப்பாவதற்குள், கொட்டரோக்கி, மொத்த பணத்தையும், வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து விட்டார்.

இன்று, காங்கிரஸ் அரசாங்கம், இந்த வழக்கை மொத்தமாக மூட, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

1990ல் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யாமல், ஏர் பஸ் நிறுவனத்தோடு செய்த ஒப்பந்தத்தால் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வாரத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 2.5 கோடி.

இதற்குப் பிறகு இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல் 1992ம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா ஊழல். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலின் மொத்த ஊழல் தொகை 5000 கோடிக்கும் மேல்.
ஹர்ஷத் மேத்தா

இந்திய பங்குச்சந்தையில் நாட்டுடைமையாக்கப் பட்ட வங்கிகளின் பணத்தை வைத்து, பல பங்குகளின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்த ஹர்ஷத் மேத்தா ஊழல் வெளி வந்ததும், பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஹர்ஷத் மேத்தா, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு 1 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்ததாக திடுக்கிடும் புகாரைக் கூறினார்.

இந்த பங்குச் சந்தை ஹர்ஷத் மேத்தா ஊழல் தொடர்பாக விசாரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையில் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.வெங்கட்ராமன், துணை கவர்னர்கள் அமிதவ் கோஷ் மற்றும் ஆர்.ஜானகிராமனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று பரிந்துரை அளித்தது.

மேலும், மத்திய அமைச்சர்கள் ராமேஷ்வர் தாகூர், சங்கரானந்த், மாதவராவ் சிந்தியா, மன்மோகன் சிங் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்திருந்தது. ஆனால், நரசிம்ம ராவ், இந்த பரிந்துரையின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

1993 முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்

அடுத்து 1994ம் ஆண்டின் சர்கரை இறக்குமதி ஊழல். மார்க்கெட்டில், சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்க்கரை விலை உயர்ந்ததையடுத்து, க்யான் பிரகாஷ் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.

இக்கமிஷன், சந்தையில் சர்க்கரை கிடைக்காமல் தட்டுப்பாட்டை ஏற்பட காரணம், மத்திய அமைச்சர் கல்பனாத் ராய்தான், சர்க்கரை ஆலைகளுக்கு விலையேற்றம் காரணமாக லாபம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில், கல்பனாத் ராய், இவ்வாறு செயல்பட்டுள்ளார் என்று பரிந்துரை செய்யப் பட்டது.

இந்த அறிக்கையின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டார் நரசிம்ம ராவ்.
தொண்ணூறுகள் தொடங்கி, ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

1995ல் யுகோஸ்லாவியா தினார் ஊழல், மேகாலயா வன ஊழல்,

1996ல் உர இறக்குமதி ஊழல், .யூரியா இறக்குமதி ஊழல், பீகார் மாட்டுத் தீவன ஊழல்,

1997ல் சுக்ராம் ஊழல், லவ்லீன் திட்ட ஊழல், பீகார் நில பேர ஊழல், பன்சாலி பங்கு வர்த்தக ஊழல்,

1998ல் தேக்கு மரக்கன்று ஊழல்,

2001ல் யுடிஐ ஊழல், தினேஷ் டால்மியா பங்கு வர்த்தக ஊழல், கேத்தன் பரேக் பங்கு வர்ததக ஊழல்,

2002ல் சஞ்சய் அகர்வாலின் வீட்டு வர்த்தக ஊழல்,

2003ல் போலி முத்திரைத் தாள் ஊழல்,

2005ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல், பீகார் வெள்ள நிவாரண ஊழல், ஸ்கார்ப்பீன் நீர்மூழ்கி கப்பல் ஊழல்,

2006ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், உத்தரப் பிரதேசத்தில் தாஜ் காரிடார் ஊழல்,

2008ல் பூனேவைச் சேர்ந்த ஹசன் அலி கான் வருமான வரி ஏய்ப்பு, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்டிரா ஊழல், ஸ்விஸ் வங்கிகளில் இந்தியக் கருப்புப் பணம், ஜார்க்கண்ட் மருத்துவ உபகரணங்கள் ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், ஒரிஸ்ஸா சுரங்க ஊழல் மற்றும் இறுதியாக மது கோடாவின் ஊழல் என ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்கள் என்று எடுத்தால், 1 சதவிகிதத்திற்கும் கீழே. இருப்பார்கள்.

இந்த ஊழல் பட்டியலில் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் போது, எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விலை கொடுத்து வாங்கப் படுவது சேர்க்கப் படவில்லை.

கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் போது, ஒரு எம்பியின் விலை 25 கோடி என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. தற்போது, எடியூரப்பா அரசாங்கத்தை காப்பாற்றவும், ஒரு எம்எல்ஏவின் விலை 25 கோடிக்கும் மேல் என்று தகவல்கள் வந்துள்ளன.

சுதந்திர இந்தியா சந்தித்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடியைத் தாண்டுகிறது.

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே, அதாவது மாதம் ரூபாய் 300க்கும் கீழே சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 30 கோடி. இந்தப் புள்ளி விபரம், இந்திய அரசின் கணக்கு. யதார்த்த நிலை இன்னும் மோசமாகவே இருக்கும்.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட நபர்கள், கட்சி வித்தியாசங்களை கடந்து அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். தேர்தலை சந்திக்கவும், கட்சித் தாவும் எம்எல்ஏ எம்பிக்களை விலைக்கு வாங்கவும், கருப்புப் பணம் பயன்படுவதால், ஊழலில் ஊறித் திளைக்க அரசியல் கட்சிகள் அஞ்சுவதே இல்லை.

சரி மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறதா ?

பெருமளவில் மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறது.

எந்த அளவுக்கு மாற்றம் என்றால், தேர்தல் வந்தால், பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

இலவச டிவி கொடுத்தால், முண்டி அடித்துக் கொண்டு, வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.


1993 கே.கே.நகரில் வெள்ள நிவாரணம் வழங்கும் போது நெரிசலில் சிக்கி தன் உறவினரை இழந்தவர்கள் கதறி அழுகின்றனர்

வெள்ள நிவாரணத் தொகை வழங்கினால் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் ஏறி மிதித்து, 42 பேரை கொன்று, 2000 ரூபாய் பெரும் அளவுக்கு மாறி இருக்கிறது.

ஹெல்மெட் கட்டாயம் போட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், ட்ராபிக் போலீஸ் காரருக்கு லஞ்சம் கொடுத்தாவது, ஹெல்மெட் போடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு வந்தால், யாரைப் பிடித்தாவது, லஞ்சம் கொடுத்து, அரசு வேலை வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

அடுத்தவன் குடியைக் கெடுத்தாவது தானும் தன் குடும்பமும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் எனும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

பேய்கள் அரசு செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்றான் பாரதி. சாத்திரங்கள் பிணந்தான் தின்று கொண்டிருக்கின்றன.

*********************************************************************************************************************************************************************
போபால் தீர்ப்பு சொல்லும் உண்மை என்ன?

நம் மக்களுக்கு இருப்பது போல மறதி வியாதி மற்ற நாட்டு மக்களுக்கு உண்டா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை... எவன் வீட்ல எழவு விழுந்தா எனக்கென்ன என் வீட்ல டிவி சிரியல் ஒழுங்காதெரிஞ்சா போறும் என்று நினைப்பதுதான்... இந்தியா முழுதுமான மக்களின் தற்போதைய மனநிலை என்பேன்...


இந்தியாவின் மிகப்பெரிய சோகம் 1984ல் யூனியன் கார்பைடு நிறுவனத்தில் வெளியான நச்சுபுகை... 5லட்சத்து 75 ஆயிரம் பேரை கண் பார்வை போய்...மூச்சு திணறலில் பலர் சுவாச பாதிப்புக்குள்ளாக்கி மரித்து போக செய்தது.....

20,000 மக்களின் கனவுகள் சிதைக்கபட்டன....சுதந்திர இந்தியாவில் அமெரிக்க ஓநாய்கள் நம் மக்களை செல்லா காசாக நினைத்ததன் விளைவு... 20,000் மக்கள் இறந்து போனார்கள்.... அது ஒரு தொழிற்சாலை விபத்து என்று சப்பை கட்டு கட்டியது அரசாங்கம்...இரண்டாம் தலைமுறை குழந்தை பிறப்பின் போது கூட குழந்தைகள் ஊனமாக பிறக்கின்றனர்.... இது எல்லாருக்கும் தெரிந்த சேதிதான்...

26 வருடங்களுக்கு பிறகு கொடுத்த தீர்ப்பில் இரண்டு வருட தண்டனை கொடுத்து விட்டு.. தண்டனை பெற்றவர்கள் உடனே ஜாமீனில் வெளியே வந்து இருக்கின்றார்கள்... அது அமெரிக்க கம்பெனி என்பது ஒரு காரணம்... பொதுவா பணம் இருக்கறவனுக்கு மட்டுமே இந்த உலகத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும்...

இந்த சாபக்கேடு இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் இருக்கும் எல்லா நாடுகளிலும் பொருந்தும்...சிபிஜ விசாரனை சரியில்லை என்று எல்லோரும் குறைபட்டுக்கொண்டு இருக்கும் போது... இங்கு நமது பிரதமரே சரியில்லை எனும் போது எதையும் குற்றம் சொல்ல முடியாது...

நம்ம பக்கத்துல இருக்கற சின்ன நாடு இலங்கை... நம்ம இந்திய மீனவன் கச்சை தீவு கிட்ட இலங்கை கடற்படையால் தினமும் செம மாத்து வாங்குறான்... அதை கேட்க துப்பில்லை, ஏன்டா அவனங்களை அடிக்கிறிங்கன்னு இந்திய கடற்படை இதுவரை கண்டித்ததாக சரித்திரம் இல்லை... சின்ன நாட்டையே கண்டிக்க துப்பில்லை...

அமெரிக்கா அதுவும் எவ்வளவு பெரிய நாடு அது என்ன சொன்னாலும் ஒரு பிரதமர் கேட்டுக்கொண்டு இருக்கின்றார்....அவர்கள் சொல்வதே வேதவாக்காய் செயல் படுகின்றார்....

சரி இந்த தீர்ப்பு சொல்லும் சேசதி என்ன?

இந்தியாவுல எந்த தப்பை செஞ்சாலும் பெரிசா செய்யனும்.....அதுதான் கெத்து...

20 ஆயிரம் பேர் சாவுக்கு காரணமானவனுங்களுக்கு 2 வருட சிறை தண்டனை உடனே ஜாமீன்...

ராஜீவ் காந்தியும் கூட சிலர் இறந்து போனதுக்கு ஆயுட்கால சிறை.... ஆட்டோ சங்கர் அப்படி என்ன தப்பு செஞ்சிட்டான்? வீரப்பன் அப்படி என்ன தப்பு செஞ்சான்...எதுக்கு அவனுங்களுக்கு தண்டனை? இரண்டு வருட சிறையும் 25 ஆயிரம் அபராதம் கொடுத்து விட வேண்டியதுததானே...???

நிறுத்து கோட்டை தாண்டி வண்டி நிறுத்தினால் சாமானியனுக்கு ஸ்பாட் பைன்.....ஹெல்மெட் போடவில்லை என்றால்.. சட்டத்தை மீறியதாக ஒரு வழக்கு....

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை ஏற்று, ஆட்சிக்கு வந்து, அரசு நிலத்தை வாங்கிய முதல்வருக்கு உச்சநீதி மன்றம் ஒரு கண்டனத்தை மட்டும தெரிவிக்கின்றது....

ஆக.. இந்தியாவில் Think Big...குற்றத்திலும் .....

சரி இந்திய ஊடகங்கள் இதனை சரியாக கையாளவில்லையா? இந்தியாவின் பாதி ஊடகங்கள் பன்னாட்டு பண்ணாடைகளிடம் மாட்டி பல வருடம் ஆகின்றது... சரி அப்படியே... இந்த விஷயத்தை வெளிக்கொண்டு வந்தாலும் "ஷில்பா" தாலியை கையில் கட்டிக்கொண்ட செய்திக்கு பொதுமக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் இது போலான பொது விஷயத்தில் கொடுப்பதில்லை என்பதே உண்மை...

அரசியல்வாதிங்க ஒரு விஷயத்துக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி நடந்த சம்பவத்துக்கு ஒரு சீன் போட்டானுங்க பாருங்க.. அது செம காமெடி..

பாராளுமன்றத்தில் தீவிரவாதிகள் உள்ளே புகுந்து சுட்ட போது...ஐயோ இந்திய இறையான்னைமக்கு பெரிய வெட்கம் அது இது என்று பதறியது... எனக்கு தெரிந்து உள்ளே போய் நாலு பேரை போட்டு தள்ளி இருக்கனும்... அதுக்கு உடைந்தையானவங்களுக்கு தூக்கு.......

ஆனா 20 ஆயிரம் பேர் செத்ததுக்கு 2 வருட தண்டனை....அதே போல் இந்தனை பேர் இறந்த வழக்கு விசாரனை சாதாரண ஒரு நீதி மன்றத்தில் நடக்கின்றது...

ரோட்டில் போகும் போது நடக்கும் சாமானிய மனிதருக்குள் நடக்கு சண்டையில் கூட ஒரு நியாயம் இருக்கின்றது..ஆனால் நீதி மன்றம் போய் கேட்க நினைக்கும் நியாங்கள்... கோர்ட்டில் பிரிட்டிஷ்காரன் போட்டு விட்டு போன பழைய பேனிலேயே தூக்கு போட்டு தொங்கிவிடுகின்றன...இப்போதெல்லா
ம் நீதி.... நீதி மன்றங்களில் கதறகதற வன்புணர்ச்சி செய்து அணு அணுவாக கொலை செய்யப்படுகிறது.


உங்க வீட்ல ஒரு பிள்ளை கை சும்பி போய் பிறந்தா ஏத்தக்குவிங்களா? அங்க இரண்டு தலைமுறையா அப்படிதான் இருக்கு....

பல கோடி வழக்குகள் இந்தியாவில் தேங்கி கிடக்கின்றன.. சாமனிய மக்கள் தீர்பை எதிர்பார்த்து காத்து இருக்க....
எல்லாத்துக்கும் நீதி சொல்லும் நீதிபதிகள்.. வெள்ளைகாரன் காலத்தில் நீதி மன்றத்துக்கு கோடை விடுமுறை விட்டது போல் இன்னும் தொடர்வது எந்த விதத்தில் நியாயம்?

இதே நிலை நீடித்தால் பொது மக்கள் எல்லோரும் நக்சல் பாரி,மாவோவில் சேர்ந்து துப்பாக்கி தூக்கும் நிலை வெகு சீக்கிரத்தில் வந்தாலும் ஆச்சர்யப் பட தேவை இல்லை...

நன்றி!
ரிவோல்ட்