
ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு போரைக் கண்டு உள்ளம் வெதும்பி, கையறு நிலையில் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குமார் பற்றிய ஆவண படம் 'ஜனவரி 29' என்கிற பெயரில் உருவாகியுள்ளது.
இந்த ஆவண படத்தின் வெளியீட்டு விழா(29.08.2010) அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் திரையரங்கில் நடைபெறுகிறது.
விழாவில் இயக்குநர் அமீர் கலந்துகொண்டு சிடியை வெளியிட, முத்துக்குமாரின் தந்தை குமரேசன், ரோட்டரி ஆளுநர் ஒளிவண்ணன் பெற்றுக்கொள்கின்றனர்.
இயக்குநர்கள் சுந்தரராஜன், ஆர்.கே.செல்வமணி, புகழேந்தி தங்கராசு, கவிஞர் அறிவுமதி, கவிஞர் தாமரை, எழுத்தாளர் பாலமுரளிவர்மன் ஆகியோர் பேச உள்ளனர். விழா நிகழ்ச்சிகளை இயக்குநர் ஐந்துகோவிலான் தொகுத்து வழங்குகிறார்.
No comments:
Post a Comment