சீமான் கைதை கண்டித்தும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சசிகலா கணவர் ம.நடராஜன், திருச்சி வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
திருச்சி வேலுச்சாமி பேசும்போது, ’’இந்திய இறையாண்மைக்கு எதிராக சீமான் பேசினார் என்று அவர் மீது குற்றம் சாட்டி உள்ளே தள்ளப்பட்டிருக்கிறார்.
பிரபாகரன் இறந்துவிட்டதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானபோது இதைக்கண்டு அதிர்ச்சியான ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், நேரே வீட்டுக்குச்சென்று பூஜை அறையில் இருந்த வெங்கடாஜலபதி படத்தை தூக்கிப்போட்டு உடைத்தார்.
அவர் மனைவி காரணம் கேட்டபோது, என் தலைவன் பிரபாகரனை காப்பாற்றாத இந்தச்சாமி எனக்கு இனி தேவையில்லை என்று மனைவிக்கு பதில் சொன்னார்.
நம் காவல் தெய்வம் வருமா?வராதா? என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு நடிகரின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார்.
சாதி,இனத்தின் பேரில் கலவரத்தை தூண்டுகிறார் என்றுதான் சீமான் மீது வழக்கு. சிங்களனும் இல்லை. சிங்களமும் இல்லை. இந்தியாவில் இல்லாத அவனைப்பற்றி பேசினால் எப்படி கலவரம் மூளும்.
இந்தியாவிலேயே இருக்கும் இந்தியை எதிர்த்து பேசியவர்களுக்கு எத்தனை தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சுவது?’’ என்று கேள்வி எழுப்பினார்.
நன்றி- நக்கீரன்
இந்துராஷ்டிரத்திற்காக செப்பனிடப்படும் தொகுதிகள்
6 hours ago
No comments:
Post a Comment