Tuesday, September 20, 2011

Wednesday, September 7, 2011

மூவரின் தூக்கு நம் இனத்தின் மீதான சுருக்கு



அறத்தையே வாழ்வாகக் கொண்டு எவ்வுயிற்கும் அறம்போற்றிய இனம் தமிழினம். இன்று நீதிக்காக யார் யாரிடமோ கையேந்தி நிற்கிறோம். அகிம்சையை போதித்த மகாத்மா காந்தியை தேச தந்தையாகக் கொண்ட இந்தியா தமிழினத்திற்கு எமனாக நின்று நமது இரத்தத்தை குடிக்கிறது.இனி அவர்கள் தங்களின் தேச தந்தையாக எமனைத்தான் ஏற்கவேண்டும்.

ஒன்றரை இலட்சம் உயிர்களைக் குடித்தும் வெறி தீராமல் இன்னும் மூன்று அப்பவிகளின் உயிரையும் குடிக்க துடித்துக்கொண்டு இருக்கிறது. 11 ஆண்டுகாலம் முடிவெடுக்காமல் நிறுத்திவைக்கப்பட்ட கருணை மனுவால் ஒவ்வொரு நாளும் தூக்கை எதிர்நோக்கி வாழ்ந்த அந்த மனநிலை தூக்குத் தண்டனையை விட மேலான மிகவும் கொடுமையான தண்டனை ஆகும். இதனால் தண்டிக்கப்பட்டது பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகிய மூன்று தமிழ்ச்சகோதரர்கள் மட்டும் இல்லை. அவர்களின் குடும்பமும் சேர்ந்தே இதில் தண்டனையை அனுபவித்தது.

இராசீவ்காந்தி கொலைவழக்கு நடந்த விதம் என்பது நீதியை குழிதொண்டி புதைத்து தமிழர்களை பழிவங்கும் நோக்கத்துடனேயே முன் தீர்மானத்தோடு நடத்தப்பட்ட ஒரு வழக்காகும்.

இராசீவ்காந்தி கொலை தொடர்பாக பல்வேறு விசாரணை அமைப்புகள் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது, அவற்றில் ஜெயின் கமிஷனும், வர்மா கமிஷனும், தங்களது அறிக்கைகளை சமர்பித்து பல ஐயங்களை வெளியிட்டு இருந்தது.அதனடிப்படையில் எந்த நடவடிக்கையும் இல்லை.ஜெயின் கமிஷன் தனது விசாரணை சார்ந்த சில கோப்புகளை இந்திய மத்திய அரசிடம் கேட்டது. ஆனல் நரசிம்மராவின் கங்கிரசு அரசு அந்த கோப்புகளை காணவில்லை என்று பதில் சொன்னது. இங்கே கவனிக்கபடவேண்டிய விடயம் சந்திராசமி நரசிம்மராவின் நெருங்கிய நண்பர். ஜெயின் கமிஷன் சந்திராசமியை சந்தேக நபர் தீரவிசாரிக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. ஆகவே கங்கிரசு கட்சியே இராசீவ் காந்தியின் கொலைவழக்கு விசரணையை நேர்மையாக நடத்த விரும்பவில்லை.

இதை தொடர்ந்து அமைக்கப்பட்ட பண்ணோக்கு விசாரணைக்குழு தனது பணியை தொடங்கி முழுமையடையாத நிலையில், இந்த வழக்கில் மரண தண்டனை வழங்குவது என்பது நீதிக்கு முரணானது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட இவ்வழக்கானது சி.பி.ஐ அமைப்பால் தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டது. தடா சட்டம் என்பது மனித உரிமைக்கு எதிரான சட்டம் என்பதால் இந்திய அரசே அதனை காலவதியாக்கியது. இவ்வழக்கை தடா சட்டத்தின் கீழ் விசாரித்தது தவறு என்றும் ஆனல் வாக்குமூலங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது இந்திய நீதித்துறையின் பெரிய முரண்பாடு ஆகும்.
தடா சட்டத்தின்படி 20 வயதிற்குட்பட்டவர்களை கைதுசெய்ய இயலாது என்`ற நிலையிலும் 19 வயதே நிரம்பிய பேரறிவாளன் இச்சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பது இவ்விசாரணையின் முரண்பாட்டை தெரிந்துகொள்ள போதுமானது. பேரறிவாளன் தான் எழுதிய மடல்களில் அரசு தரப்பு வாதங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகவும், தங்களது வாதங்களை பதிவு செய்யப்படாமலேயே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார். இதோடு மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தி வாக்குமூலத்தை வாங்கியதாகவும் குறிப்பிடுகிறார்கள். இந்த வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் ஏற்கனவே 22 பேர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் சி.பி.ஐ இந்த வழக்கில் அப்பாவிகளையே குற்றவாளிகளாக்கி இருக்கிறது. ஆகவே நீதிக்கு புறம்பான இந்த வழக்கும் அதன் தீப்பும் தமிழர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.

அப்படி தூக்குத்தண்டனை கொடுக்கும் அளவுக்கு என்ன குற்றம் செய்தார்கள் இவர்கள். பேரறிவாளன் ஒரு பேட்டரியை வங்கி கொடுத்தார் என்று சொல்கிறது சி.பி.ஐ. அவர் வாங்கினார் என்பதற்கோ அந்த பேட்டரிதான் கொலைசெய்யபட்டவர்கள் பயன்படுதினார்கள் என்பதற்கோ எந்த விதமான ஆதாராமும் சான்றும் இல்லை. இதை நிறுபிக்கவும் இல்லை சி.பி.ஐ. இந்த வழக்கில் கதை வசனம் எழுதி புனைவுகளை உருவாக்கி அப்பவித் தமிழர்களை பழிதீர்த்து விட்டர்கள் என்பதே உண்மை.

தடா வழக்கு என்பதால் அவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உயர் நீதிமன்ற மேல் முறையீடும் இல்லாமல் போனது. ஆகவே பலமாக நீதியின் கதவுகள் அடைக்கப்பட்டு தூக்குக்கொட்டடிக்கு கொண்டு செல்லப்பட்டவர்களே இவர்கள்.
கருணை மனு மூலமாகவாது நீதியை வென்றெடுக்கலாம் என்று இருந்தபோதும் நீதிபதியாக இருந்து ஆளுநர் ஆன பாத்திமாபீவீ தமிழ்நாடு அமைசரவையின் ஒப்புதல் இன்றி நிராகரித்தார். உயர்நீதிமன்றம் இந்த நிராகரிப்பை தவறு என்று சுட்டிக்காட்டியது. இந்த நிலையில்தான் இந்திய அரசின் ஜனாதிபதிக்கு கருணை மனு கொடுக்கப்பட்டு 11 ஆண்டுகள் முடிவெடுக்காமல் நிறுத்துவைக்கப்பட்டு இருந்தது.

தேர்தலில் தோற்றும் பணநாயகத்தால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு ஜனநாயகத்தைக்கொன்ற ப.சிதம்பரம் அமைச்சராக இருக்கும் உள்த்துறை குடியரசுத்தலைவருக்கு கருணைமனுவை நிராகரிக்குமாறு பரிந்துறை அனுப்பி இருக்கிறது. இந்த பசப்பு சிறிப்பு பகல்வேடக்காரன் தமிழனாக பிறந்ததை சந்தேகப்படவேண்டி இருக்கிறது. எல்ல நிலையிலும் அநீதியாக தோற்கடிக்கப்பட்ட அப்பாவிகளை இன்று தூக்குக் கயிற்றுக்கு அருகில் நெருக்கித்தள்ளி இருக்கிறது இந்தியாவின் நீதி.

இன்று நாம் அவர்களைக்காப்பாற்ற ஏதாவது ஒருவழி தேடி நிற்கிறோம். இருந்த ஒரு வழியையும் தமிழக முதல்வர் செயலலிதா அறைந்து சாத்திவிட்டார். இனி இதை திறப்பது நமது பேரெழுச்சியான் போராட்டதிலேயே தங்கி இருக்கிறது.
சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சட்டமன்ற உறுப்பினர்களால் கொடுக்கப்பட்ட தீர்மானத்தை பிடிவாதமாக விவாதத்திற்கு எடுக்காமல் விட்டதன் மூலம் தமிழக அரசுக்கு அக்கரை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்து இருப்பதால் அதில் தலையிட தனக்கு அதிகாரமில்லை என இன்று சட்டமன்றத்தில் சொல்லி இருக்கிறார் முதல்வர் செயலாலிதா. இது தமிழர்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையாகும்.இந்த கூற்றில் துளியளவும் உண்மை இல்லை. விதி 161ன் படியே நாம் செயலலிதவை தமது அதிகாரத்தை பயன்படுத்தச் சொல்கிறோம். விதி 161 படி ஜனாதிபதியின் மன்னிப்பு அதிகாரமும் கவர்னரின் மன்னிப்பு அதிகாரமும் ஒன்றே ஆகும். இதற்கு முன்னுதாரனமாக தயாசிங் வழக்கை எடுத்துகொள்ளலாம்.இந்த வழக்கில் குடியரசு தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகும் மாநில ஆளுநருக்கு கருணை மனுபோடுகிறார். அவ்வறு போடுவதற்கு விதி 161 இடமளிக்கிறது என உச்சநீதி மன்றம் விளக்கமளித்துள்ளது. இதற்கு முன்னுதாரனமாக இன்னொரு வழக்கும் இருக்கிறது. கேரளத்தில் சி.ஏ.பாலன் கருணை மனுவை அப்போது குடியரசுத் தலைவர் நிராகரித்த பின் முதலமைச்சராக இருந்த இ.எம். எஸ் நம்பூதிரிபாட் அவர்களும் (1957) அப்போது கேரளா சட்ட அமைச்சராக இருந்த வீ.ஆர். கிருஷ்ண அய்யர் அவர்களும் தாங்கள் விதி 161ஐ பயன்படுத்தி சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று தூக்குத் தண்டனை நீக்கப் போவதாக அறிவித்தார்கள். அதன்பிறகு இந்திய அரசு இறங்கி வந்து சி.ஏ.பாலன் கருணை மனுவை ஏற்று அவரது தூக்குத் தண்டனையை நீக்கியது. தமிழக முதல்வர் இந்த முன் எடுத்துக்காட்டை பின்பற்றியாவது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் கருணை மனுவை மறு ஆய்வு செய்து ஏற்குமாறு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரலாம். தீர்மனத்தை நிறைவேற்றியதோடு நில்லாமல் உள்துறையையும் தன் வசம் வைதிருப்பதால் ஆளுநருக்கு கருணை மனுவை ஏற்குமாறு பரிந்துரையையும் அனுப்பி வைக்க வேண்டும்.அதை விடுத்து இந்த பிரச்சினையில் இருந்து ஒதுங்கிக்கொள்வதை தமிழமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள்.
தமிழர்களே நாம் தமிழக அரசு, இந்திய அரசு ஆகிய இரண்டையும் பணியவைக்கும் அளவில் நமது போராட்டதை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.



பேரறிவாளன் எதற்காக வங்குகிறோம் என்று தெரியாமல் ஒரு பேட்டரியை வாங்கிக்கொடுத்தது தூக்குத்தண்டனைக்குறிய குற்றமா..? என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும்.
இது குற்றமென்றால் எங்கள் மீது ஏவபட்ட இந்திய அரசின் கொடுங்கோண்மைக்கு என்ன தண்டனை. தமிழர்களே..?
இந்தி எதிர்ப்பு போராட்டதில் 400 பேர்வரை சுட்டுக்கொன்ற இந்திய இராணுவத்துக்கும் அதிகாரிகளுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது?
அகிம்சையை கையிலெடுத்து போராடிய வீரவேங்கைதிலீபனை கொன்ற இந்திய அரசுக்கும் அதிகாரிகளுக்கும் என்னை தண்டனை கொடுக்கப்பட்டது..?
அமைதிப்படை என்கிற பெயரில் அணுப்பபட்ட அட்டூழியப்படை செய்த பாலியல் வல்லுறவுகளுக்கும் கொலைகளுக்கும் என்ன தண்டனை கொடுக்கப்பட்டது.?
ஆயுதங்களை அள்ளிக்கொடுத்து ஈழத்தமிழர்களின் போராட்டத்தை நசுக்கி இலட்சக்கன தமிழர்களை கொன்று இனக்கொலை புரிந்த இந்திய அரசுகும் அதிகரிகளிக்கும் என்ன தண்டனை.?
தொடர்ந்தும் சிங்கள இராணுவத்தால் தாக்கப்பட்டு இறந்துபோன ஆயிரம் வரையிலான தமிழக மீனவர்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனை..? கொலை செய்ய விட்டு காவல் காத்த இந்திய இராணுவத்துகு என்ன தண்டனை?இதற்காக ஒரு வழக்கு கூட இன்னும் பதியவில்லையே. தமிழர்களே சிந்திப்போம்.
பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரின் கழுத்தை நெரிக்கத்துடிக்கும் தூக்குக்கயிறு அவர்கள் மூன்று பேரைமட்டும் நெறிக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழினத்தின் குரல்வளையையும் நெரித்துக்கொண்டிறுக்கும், நெரிக்கப்போகும் கயிறாகும். இதனை உணர்ந்து நாம் போராட்டத்தை தொடர்ந்தும் நடத்த வேண்டும். சகோதரி செங்கொடி இந்த போராட்டத்தில் தன்னை முன்னிறுத்தி சென்று இருக்கிறார். அவரின் தியாகம் வெற்றி பெறவேண்டும். ஒரு தனிமனிதனாக நான் எப்படி போராடுவது என்று சிந்திக்கலாம். கீழ்கண்ட போராடமுறைகளை கையிலெடுத்து நாம் தீவிரமாக போராடுவோம்.


அந்தந்த பகுதிகளில் எந்த இயக்கங்கள் போரடினாலும் கருத்து வேறுபாடுகளை மறந்து நேரடியாகச் சென்று பங்கெடுத்து ஆதரவுகொடுக்கவேண்டும். முடிந்தவரை குடிம்பத்துடன் போராடுவோம்.

கல்லுரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கனித்தும், அரசு அதிகாரிகள் பணிகளை புறக்கனித்தும், அரசுகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள் இயங்கவே கூடாதபடி செய்ய வேண்டும்.

இந்த தூக்குதண்டனை நிறுத்துவைக்கப்படும் வரை எல்லோரும் கருப்புக்கொடி அணிவோம்.

தன்னோடு வேலை செய்யும் தமிழர்களுக்கு பிரச்சினைகளை விளக்கி அவர்களையும் இனைத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நம்மவர்கள் நமக்கென்ன என்று இருந்துவிடக்கூடும்.

ஏற்கனவே வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடங்கி விட்டர்கள். அவர்களின் பின்நின்று ஆதரவு கொடுக்க வேண்டும்.

மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடப்படவேண்டும்.ஒரு இந்திய மத்திய அரசு அலுவலகங்கள் கூட இயங்ககூடாது. ஏற்கனவே குஜார் இன மக்கள் போராடிய விதத்தை நாமும் கையில் எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலிருந்து தொடர்வண்டிகள் இயங்கவே கூடாது.

ஆங்கங்கே தொடர்ந்து தன்னெழுச்சியாக போராட்டவடிவங்களை முன்னெடுக்க வேண்டும்.

தொழிற்சங்கங்களில் உள்ளோர் அந்தந்த சங்கங்களை வலியுறுத்தி போராட வைக்க வேண்டும்.

காவல்துறையில் உள்ள தமிழர்கள் தமிழர்களின் போரட்டத்தை ஒடுக்கமால் தமிழர்களாக நடந்துகொள்ளவேண்டும். மற்ற மாநில கவல்துறையினர் எப்படியோ அப்படியே நீங்களும் நடந்துகொள்ளுங்கள்.

 வீதி வீதியாக கிராமம் கிராமாக மக்களை சந்தித்து இருக்கும் வய்புகளை பயன்படுத்தி போரடுவோம்.

போரட்டத்துக்கு வரமுடியாதவர்கள் கருத்துக்களை துண்டறிக்கையாக மாற்றி தங்களால் இயன்ற பொருட்செலவில் போராடுவோம்.

சிறைக்கு செல்ல அனைவரும் தயாராக இருப்போம்.

வணிகர்கள் தாங்களாகவே கடையடைபுகளை நடத்த வேண்டும்.

நாம் நடதுகிற போரில் தமிழ் தேசியம் வெற்றிபெறவேண்டும். இந்திய தேசியம் தோற்கடிக்கபட வேண்டும். விரைவாக களம் காண்போம் மூவரின் தூக்கு நம் இனத்தின் மீதான சுருக்கு …

தோழர் சிவா.

உதவி : தமிழ்தேசப் பொதுவுடமை கட்சி வெளியீடுகள்

Monday, September 5, 2011

செங்கொடியையின் தியாகத்தை கொச்சை படுத்திய தினமலர் நாளிதழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் எரிப்பு.




மூவர் உயிரைக் காப்பதற்காக தீக்குளித்த, தோழர்.செங்கொடியின் தியாகத்தை கொச்சைப் படுத்தியும், தமிழினத்தையும், தமிழினத் தலைவர்களைப் பழித்தும் கட்டுரை வெளியிட்ட தினமலர் நாளேட்டை கொளுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். “தமிழகத்தை விட்டு தினமலரைத் துரத்துவோம். தமிழினத் துரோகியே வெளியேறு” என்று முழக்கங்கள் எழுப்பப் பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தமிழின விரோதி தினமலரின் இந்த செயலை கண்டித்து மானமுள்ள தமிழர்கள் கண்டன மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மாதிரி மின்னஞ்சல்: பெறுதல்: coordinator@dinamalar.in,webmaster@dinamalar.in,dmrpondy@dinamalar.in,

dmrcbe@dinamalar.in,dmrcbe@dinamalar.in,dmrmdu@dinamalar.in

பொருள் : தியாகச் சுடர் செங்கொடி பற்றி அவதூறாக எழுதியதற்கு மன்னிப்பு கேள்
பொருளடக்கம்: மூவர் உயிர்காக்க தன்னுயிர் நீத்த தியாகச் சுடர்,சகோதரி செங்கொடியை பற்றி அவதூறாக எழுதியதை உலகத் தமிழர் இணையக் குழு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

அவதூறாக எழுதியதற்கு உடனடியாக மன்னிப்பு கேள்; இல்லை என்றால் உங்கள் பத்திரிக்கையை புறக்கணிக்க வேண்டி மாபெரும் இணையப் போராட்டம் நடத்துவோம்…

இப்படிக்கு தமிழர்களே இதுதான் தினமலர் அலுவலகத்தின் எண்கள். .நம் தோழி செங்கொடி யை காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று எழுதி இருக்கிறான். .இதற்கு மேலும் பொறுமை கூடாது. .உங்களால் முடிந்ததை செய்யுங்கள். .
9944309600
9894009200
9894009400
044 2841 3553
044 2855 5783.

Sunday, September 4, 2011

ராகுல் காந்தியை பற்றி தெரிஞ்சுக்கோங்க...

இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை -நிதின் குப்தா,அய்.அய்.டி-மும்பை.

இந்தியனாக இருப்பதற்காக நான் வெட்கப்படவில்லை என்று மும்பை அய்.அய்.டி-யில் பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் நிதின் குப்தா ராகுல் காந்திக்கு பதிலளித்துள்ளார்.

எல்லோருக்கும் இந்த பதில் சற்று வியப்பாகவும் குழப்பத்தையும் ஏற்படுத்தும். உத்தரப்பிரதேசத்தில் நடப்பதைப் பார்த்தப் பிறகு, நான் இந்தியனாக இருப்பதற்காக வெட்கப்படுகிறேன் என்ற ராகுல் காந்தியின் அங்கலாய்ப்புக்கு நிதின் குப்தா கொடுத்துள்ள பதில் தான் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

இதோ நிதின் குப்தாவின் கட்டுரை:-

உத்திரப்பிரதேசத்தைப் பார்த்து வெட்கப்படாதீர்கள். காங்கிரசு தான் உத்திரப்பிரதேசத்தை விடுதலைக்கு முன்பும், விடுதலைக்கு பிறகும் என 1939 லிருந்து 1989 வரை ஆண்டுள்ளது. உன் பாட்டி இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட அவசர நிலைப் பிரகடனம் மற்றும் இருமுறை நடந்த இடைக்கால ஆட்சி நீங்கலாக.

இந்தியாவின் 14 பிரதமர்களில் 8 பேர் உ.பி. யில் இருந்து வந்தவர்கள்.அதில் 6 பேர் காங்கிரசை சேர்ந்தவர்கள்.

உங்கள் கட்சிதான் அரை நூற்றாண்டுக் காலமாகவும், அரை டசன் பிரதமர்களும் இந்த மாநிலத்தில் இருந்து நாட்டையும், மாநிலத்தையும் ஆண்டுள்ளனர்.முலாயம் சிங் ஆட்சிக்கு வந்ததற்கு காரணம், உங்கள் கட்சி உ.பி.யில் காந்தியவாதியாக தங்களுடைய கொள்கையில் நடந்துக்கொள்ளதது தான்.ஆக 50 ஆண்டு கால காங்கிரசு கட்சி மற்றும் அதன் தலைவர்களின் பொன்னான ஆட்சியினால் தான், இப்படிப்பட்ட ஒரு கட்டத்திற்கு உ.பி மாநிலம் தள்ளப்பட்டுளது என்பதை நீ சிந்தித்துப் பார்த்தால் ஒருகால் உங்களுக்கு உண்மை விளங்கலாம்.

ஆகையினால் இன்னும் நீ வெட்கப்படுவதற்கானத் தருணம் வரவில்லை அ(எ)ருமை ராகுல் அவர்களே.. கடந்த காலத்தில் உங்கள் கட்சி விவசாயிகளைச் சுரண்டவதற்காகப் பயன்படுத்திய அதே சட்டங்களையும், வழிமுறைகளையும் தான் தற்போது மாயாவதி பயன்படுத்தி வருகிறார்.

நீண்ட நெடுங்காலமாக ஆட்சியில் இருந்த உன் கட்சி ஏன் இந்தச் சட்டத்திட்டங்களை மாற்றவில்லை?

மாயாவதி செய்வதை நான் நியாயப்படுத்தவில்லை.மாயாவதி செய்துக் கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளமுடியாததுதான்.ஆனால் உன் கட்சியின் கடந்தக்கால ஆட்சியையும், தற்போது உன் விமர்சன்ங்களையும் வைத்துப் பார்க்கும் போது, உன் நோக்கம் மற்றும் நிலைத்தன்மை மீது கேள்வி எழுகிறது.

நீ கட்டாயம் வெட்கப்பட வேண்டும்.ஆனால் ஏமாற்றமோ அதிருப்தியோ அடைய வேண்டாம். நான் சில சம்பவங்களை இங்கு எடுத்துக்காட்டாகத் தருகிறேன்.

நீ கண்டிப்பாக வெட்கப்பட வேண்டுமா?

சுவிசு வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்ப்பட்டியலை ஏன் கொடுக்க மறுக்கிறார் என்பதை முதலில் பிரணாப் முகர்சியிடம் கேளுங்கள்.

அசன் அலி மீதான விசாரணையை யார் இழுத்தடிக்கிறார்கள் என்று உன் அம்மாவிடம் கேள்?

மேலும் கேள், இரணடாம் அலைக் கற்றை (2G) ஊழலில் 60% பணமூட்டை யாருக்கு கிடைத்தது என்று?

பொதுவாய விளையாட்டுப் போட்டி ஊழலில் (cwg) சில நூறு கோடிகளைத் தான் கல்மாடி களவாடினார். மீதியை யார் அள்ளிக்கொண்டார்கள்?

இந்தியன் ஏர்லைன்சை என்ன செய்தீர்கள்? ஏன் அது வருமானம் வரும் வழித்தடங்களில் பயனிக்கவில்லை? என்று பிரபுல் பட்டேலிடம் கேள்? உன் கட்சியை சேர்ந்த மந்திரிகளின் வேண்டுமென்றே செய்யப் பட்டத் தவறுகளுக்கு ஏன் வருமான வரி செலுத்தும் மக்கள் ஏர் இந்தியாவிற்கு பணம் செலுத்த வேண்டும்?

மேலும் உங்களால் ஒரு வானூர்தி சேவையை ஒழுங்காக நடத்த முடியவில்லை, நீங்கள் நாட்டை வழிநட்த்துவீர்கள் என்று நாங்கள் எப்படி நம்புவது?

எது/ஏன் உங்களை அமைதியாக வைத்துள்ளது என்று மன்(னு)மோகன் சிங்கிடம் கேள்?

கல்மாடியும், அ.ராசாவும் பலியாடுகள் தான், சில பெரியத் தலைகளின் பெயர்களைக் காப்பாற்றுவதற்காக. 1992 ல் நடந்த பங்குச் சந்தை முறைகேட்டில் எப்படி அர்சத் மேத்தாவோ அது போல.

20,000 க்கும் அதிகமான மக்கள் கொள்ளப்பட்ட போபால் நச்சு வாயுக்கசிவு சம்பவத்தின் குற்றவாளியை யார்த் தப்பிக்க விட்டார்கள்?

1984 ல் நடந்த சீக்கியர்களின் படுகொலைக்கு காரணகர்த்தா யார்?

உயர் நீதி மன்றம் இந்திரா காந்தியின் லோக் சபா வெற்றியை செல்லாது என்று அறிவித்த பின்பும், 76-77 ல் எப்படி நாட்டை அவசர நிலைக் கட்ட்த்திற்குத் தள்ளினார் என்பதையும் படித்துப் பார். அவர் எந்த அளவிற்கு மக்களாட்சியையும் நீதியையும் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தையும் ம(மி)தித்தார் என்பதை என்னால் பந்தயம் கட்ட முடியும்.

இவற்றிற்கான விடைகள் உனக்கு ஏற்கனவே தெரியும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. ஆக என்னுடையக் கேள்வி, மாயாவதி, உன் குடும்பம் மற்றும் உன் கட்சி இவற்றில் ஏன் இரட்டை நிலைப்பாடு அல்லது இரட்டை வேடம் கொண்டிருகிறாய்?

நான் மாயாவதியைக் கண்டிக்கிறேன். ஆனால் அவர் ஒருவரைப் பார்த்துதான் நீ வெட்கப்பட வேண்டுமா? உனக்கு நெருக்கமானவர்களைப் பற்றி என்ன நிலைப்பாடு? நாட்டின் முன்னேற்றத்திற்கு இழிநிலைக்கு) அவர்களின் பங்களிப்பானது ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது.

விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்ட்தைப் பற்றி பேசுகிறாயே, உன் கட்சியின் கீழ் உள்ள விதர்பாவில் எத்தனை விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர், அது உன்னை வெட்கப்பட செய்யவில்லையா?

உன் கட்சி 72,000 கோடி உருவா விவசாயக் கடன்களை கொடுத்துள்ளது. ஆனால் அவை அனைத்தும் விவசாயிகளுக்குப் போய் சேராதக்காரணத்தினால் தானே அவர்கள் தற்கொலைக்கு ஆளாகிறார்கள்.

ஆக ஏழைக் கிராமவாசிகளுடன் உட்கார்ந்து உணவு உட்கொள்ளுவது போல புகைப்படம் எடுத்து அதன் மூலம் புகழ் தேட, ஆதாயம் தேட நினைப்பதற்குப் பதிலாக, உன் கட்சியின் கீழ் உள்ள ஆட்சிப் பகுதியில் ஏன் உன் கொள்கைகளை நீ பரிசீலிக்கக் கூடாது?

பொதுப் பணத்தை எடுத்து விவசாயக் கடங்கள் என்றப் பெயரில் கொடுத்து அந்தப் பணத்தைக் கையாடல் செய்த உன் கட்சியைப் பார்த்து வெட்கப்படு.

ஏன் உ.பி-யில் நடந்தக் கைதை மட்டும் விளம்பரப்படுத்துகிறாய்?

2001 செப்டம்பரில் போசுடன் வானூர்தி நிலையத்தில் வைத்து எப்.பி.அய் (F.B.I) யினால் நீ கைது செய்யப்பட்டாய், உன் நினைவலைகளை சற்றுப் புதுப்பித்துக் கொள்ளுங்கள் அ(எ)ருமை ராகுல் அவர்களே..

1,60,000 அமெரிக்க டாலர் பணத்தை எடுத்து சென்றீர்கள், ஏன் அவ்வளவு பணத்தை எடுத்து சென்றீர்கள் என்று உங்களால் விளக்கம் கொடுக்க முடியவில்லை. உன்னுடன் உனது தோழியான “வெரொனிக் கார்டெல்லி” இருந்தார். இவர் யார்? பிரபல போதைக்கும்பல் தலைவனின் மகள் தானே. இது எதேச்சையான நிகழ்வா என்பது வாசர்களின் சிந்தனைக்கு.

ஒன்பது மணி நேரம் நீ வானூர்தி நிலையத்திலேயே வைக்கப்பட்டிருந்தாய். பின்னர் திரு.வாஜ்பாய் அவர்களின் தலையீட்டினால் விடுதலை செய்யப்பட்டாய். அதுவும் இங்கு முதல் தகவல் அறிக்கைக்கு ஒப்பான ஒரு வழக்குப் பதிவை எப்.பி.அய் மேற்கொண்டப் பிறகுதான் விடுதலை செய்தார்கள். இந்தக் கைதைக் கண்டுக்கொள்ளாமல் விடும்படி எப்.பி.அய்-யிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கு பதிலாக உன்னிடமிருந்து கடிதம் ஒன்றை எப்.பி.அய் கேட்டது.

“உன்னிடம் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை எனில் எப்.பி.அய்-யிடம் இதுப் பற்றி பேச எங்களுக்கு அனுமதி வழங்குங்கள்” என்று உனக்கு எழுதியக் கடிதத்தில் சுப்ரமணிய சாமி குறிப்பிட்டுள்ளார். உன்னிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இந்தக் கைது ஏன் முதன்மை செய்தியாக வரவில்லை ராகுல்? ஒருகால் “நான் இந்தியனாக இருக்க வெட்கப்படுகிறேன்” என்று நீ ஊடகங்களிடம் சொல்லியிறுக்கலாம்.

அல்லது நீ போலியானக் கைதைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுவாய். (உ.பி-யில் நடந்தது) உண்மையானக் கைதை அல்ல (போசுடனில் நடந்தது). அப்படிதானே. தயவுகூர்ந்து பதிலளிக்கவும்.

எதாவது ஒரு தருணத்தில் நீ வெட்கப்பட விரும்பினால், தொடர்ந்துப் படிக்கவும்.

2004ல் பிரதமர் பதவியைத் தியாகம் செய்தார் என்று உன் அம்மா அழைக்கப்படுகிறார்.

இந்தியக் குடியுரிமையியல் சட்ட்த்தின் படி, வெளிநாட்டை சேர்ந்தவர் இந்தியக் குடியுரிமை பெறும் போது அல்லது குடிமகனாக ஆகும் போது, சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தியர்களுக்கான அனைத்து சட்டத்திட்டங்களும் அவர்களுக்கும் பொருந்தும் அவர் இத்தாலி நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும். (படிக்கவும் பின்ணிணைப்பு 1&2)

நீ இத்தாலியில் பிறந்தவராக இருப்பினும் நீ இத்தாலியின் பிரதமராக வரமுடியாது.அதேபோல இத்தாலி நாட்டு குடிமக்களும் இந்தியாவின் பிரதமராக வரமுடியாது, அவர் இங்கே பிறக்காமல் போனால்.

மே-17,2004, மாலை 3.30 மணிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் உன் அம்மாவிற்கு அனுப்பியக் கடிதத்தில் இதே சட்டவிதிகளைக் குறிப்பிட்டுள்ளார். அதே நாளில் மாலை 5 மணிக்கு பதவி ஏற்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் மன்(னு) மோகன் சிங் உள்ளே இழுத்து வரப்பட்டார். உன் அம்மாவால் இயற்றப்பட்ட மற்ற தியாகம் செய்யும் நாடகங்கள் அனைத்தும் ஒரு கண் துடைப்பே.

இப்படி இருக்கும் போது, உன் அம்மாவே வெவ்வேறு மக்களவை உறுப்பினர்கள் கையொப்பம் இட்ட 340 ஆதரவுக் கடிதங்களைக் குடியரசுத் தலைவர் திரு.கலாம் அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

அதில் ஒரு கடிதத்தில், சோனியா காந்தியாகிய நான் ரேய் பாரலியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமராக ஆவதற்கு இக்கடிதத்தின் மூலம் முன்னிலைப்படுத்த விழைகிறேன்.

ஆக உன் அம்மாவிற்கு உண்மைத் தெரியும் வரை அல்லது சட்டச்சிக்கல் தெரியும் வரை அவர் மிகவும் விருப்பத்துடனேயே இருந்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. ஆக உன் அம்மா எந்தத் தியாகங்களையும் செய்யவில்லை.அவரால் பிரதமராக ஆகமுடியாது என்பதே உண்மை நிலைமை.

இதைப் பார்த்து நீ வெட்கப்பட்டிருக்கலாமே அ(எ)ருமை ராகுல் அவர்களே!!!

உங்களைப் பற்றி சற்றுச் சிந்தியுங்கள்

ஆர்வார்ட் பல்கலைக்கழகத்தில் கட்டணக்கல்விப் பிரிவிலே நீ சேர்ந்தாய்.அதே ஆண்டு ராசீவ் காந்தி ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது, ஆர்வார்ட்க்கு 11 மில்லியன் டாலர் இந்துசா சகோதரர்களால் கொடுக்கப்பட்டது. பிறகு 3 மாதத்தில் நீ அந்தப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டாய்.இதில் வருத்தம் என்னவெனில் அந்த நேரத்தில் மன்(னு)மோகன் சிங் ஆர்வார்டின் தலைமைப் பொறுப்பில் இல்லை. இல்லையெனில் உனக்கு வாய்ப்புக் கிடைத்திருந்திருக்கும்.என்ன செய்ய உன் கெட்ட வாய்ப்பு, ஒரே ஒரு மன்(னு)மோகன் சிங் தான் உள்ளார்.

ராசீவ் கொலை செய்யப்பட்டக் காரணத்தினாலேயே நீ ஆர்வார்டிலிருந்து நீக்கப்பட்டாய் என்றும் சிலக் கருத்து நிலவுகிறது. இருக்கலாம். ஆனால் பிறகு என்ன மயித்துக்கு நீ பொருளாதார வல்லுனர்னு பொய்ப்பேசித் திரியிர. அதுவும் ஆர்வார்டிலிருந்து.

நீ இந்தி தேர்விலும் தேர்ச்சிப் பெறவில்லை. ஆனால் நீ, மிக அதிக அளவில் இந்திப் பேசப்படும் மாநிலத்தில் இருந்து முன்னிருத்தப்பட்டிருக்கிறாய்.

உன் அம்மாவின் கல்வித் தகுதி

கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் பயின்றதாக வேட்புமனுத் தாக்கலின் போது தன்னுடையக் கல்வித் தகுதியில் உன் அம்மாக் குறிப்பிட்டுள்ளார். [பார்க்க பின்ணிணைப்பு-6,7,-37அ]

கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தைப் பொருத்தமட்டில், சோனியா என்றப் பெயரில் ஒரு மாணவரும் படிக்கவில்லை என்று சொல்லிவிட்டது.[பார்க்க பின்ணிணைப்பு-7-39]. இது தொடர்பாக சுப்பரமணியசாமி தொடர்ந்த வழக்கில், சோனியா தனது வேட்புமனுத் தாக்கலின் போது கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் தொடர்பான சர்ச்சையை விட்டுவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

சோனியா உயர்நிலைக் கல்வியையேத் தாண்டவில்லை, வெறும் அய்ந்தாவது மட்டுமே தேர்ச்சிப் பெற்றவர். இந்தச் சூழ்நிலையில் அவர் தன் கல்விப் பின்புலத்தை தனது இரண்டாம் அலைக்கற்றை வழக்கின் குற்றவாளி கருநா(ய்)நிதியுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.

நீயும், உன் அம்மாவும் உங்களுடைய கல்வித் தகுதியை பொய்யாகக் காட்டியுள்ளீர்கள். பிறகு “அரசியலிலே படித்த இளைஞர்கள் வேண்டும்” என்று வேறு சொல்லுகிறீர்கள். காந்தி தென் ஆப்பிரிக்கா சென்று தனது பட்டப்படிப்பை முடித்து முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்று, பின்பு தென் ஆப்பிரிக்க மக்களுக்காக அவற்றை விடுத்து போராடினார். பின்புதான் இந்தியாவிற்காக போராடினார்.

ஏன் கல்வித் தகுதியைப் பொய்க் கூறவேண்டும்

தலைசிறந்த தலைவராக வருவதற்கு கல்வித் தகுதி தேவையில்லை தான். ஆனால் பிறகு ஏன் நீயும் உன் அம்மாவும் பொய்யான கல்வித்தகுதியைக் காட்ட வேண்டும்.

உனது கல்வித் தகுதியில் பொய் பேசியதற்காக நீ வெட்கப் பட்டிருந்திருக்க வேண்டும். இப்படி பொய் பேசியதற்கு உன்னிடம் காரணம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும். காரணம் இந்தியாவில் நாங்கள் கல்வியை மதிக்கின்றோம்.ஆனால் நீ ஒரு முன்மாதிரி இளைஞனாக இருக்கும் போது யார் கல்வியைக் கருத்தில் கொள்கிறார்கள்?

முன்மாதிரி இளைஞர்

நீ உன்னுடைய 38வது அகவையில் தான் முதல் முறையாக உள்ளூர் தொடர்வண்டியில் பயணப்பட்டாய். தேர்தல் பரப்புரைக்காக சில சிற்றூர்களுக்கு சென்றாய்.அதனால் முன் மாதிரி இளைஞர் என்ற பட்டத்தை வென்றுள்ளாய்.

அன்றாடம் 25 மில்லியன் மக்கள் தொடர்வண்டியில் பயணிக்கின்றார்கள்.நீ தான் முதல் ஆள், தொடர்வண்டியில் பயணித்ததற்காக முன் மாதிரி இளைஞர் என்ற பெயரைப் பெற்றுள்ளாய். ஆயிரமாயிரம் அஞ்சலக ஊழியர்கள் அஞ்சல்களை எடுத்துக்கொண்டு பல சிற்றூர்களுக்கு செல்கின்றார்கள். அவர்களில் யாருக்கும் முன் மாதிரி இளைஞர் என்ற பெயர் இதுவரைக் கிடைக்கவில்லை. நீ இளைஞனுமல்ல, முன் மாதிரயான ஆளுமல்ல. ஆனால் இன்னும் நீ முன் மாதிரி மற்றும் இளைஞர்களாக இருக்கக் கூடிய ராகுல் டிராவிட் போன்ற போட்டியாளர்களை தோற்கடிக்கிறாய்.

சேக்சுபியர் சொல்கிறார், பெயரில் என்ன இருக்கிறது என்று? அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. எல்லாமே பெயரில்தான் இருக்கிறது, அதுவும் குடும்பப்பெயரில்.

உன்னுடைய குடும்பப் பெயரைப் பற்றி பேசுவோம்.

நீ உண்மையாகவே காந்தியை மதிக்கிறாயா? அல்லது பணத்தில் அவரது சிரித்தப் படம் இருக்கிறது என்பதற்காகவா? ஏனெனில் உன்னுடையக் கடவுச்சீட்டில் உன் பெயர் ராகுல் காந்தி அல்ல, ராகுல் வின்சி. நீ காந்தி என்று உன் குடும்பப் பெயரை எழுதியிருந்தால் அந்த வார்த்தைத் தரும் உணர்ச்சிகள் என்ன என்பதை பட்டறிந்து உணர்ந்திருப்பாய். உன் குடும்ப மக்கள் தான் காந்தி என்ற பெயரை தேர்தலில் போட்டியிடும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் அதிகம் பயன்படுத்துவதில்லை. அங்கதானே முழு அர்த்தமும் அடங்கியிருக்கு. கொஞ்சம் சிந்தித்துப் பார் உன்னுடையப் பெயரை ராகுல் வின்சி என்று வைத்துக் கொண்டுத் தேர்தலில் போட்டியிட்டால்.

உலகப்புகழ் பெற்ற தலைவர்களான நெல்சன் மண்டேலா, இளைய மார்டின் லூதர் கிங் மற்றும் சான் லெனான் போன்று காந்தியும் காந்தியும் ஒருவர். அவர் பெயரைக் கலங்கப்படுத்துவதுதான் வருத்தமாக இருக்கிறது. உன் நேருக் குடும்பம் மற்றும் உன் கட்சியை சேர்ந்தவர்களால், மேற்குறிப்பிட்டத் தலைவர்களைப் போல் மக்களை வசிகரிக்க இயலாதக் காரணத்தால், தேர்தலில் போட்டியிடும் போது மட்டும் காந்தியின் பெயரைப் பயன்படுத்துவது. ஆனால் கடவுச்சீட்டில் வசதியாக வேறு ஒரு பெயரைப் பயன்படுத்திக் கொள்வது. உன்னுடைய இந்த இரட்டை நிலைத் தன்மைக் குறித்து நீ வெட்கப்படலாமே.

அரசியலில் இளைஞர்கள்

இப்போது நீ அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்கிறாய். நீ முதலில் அரசியலில் சேர். ஏனெனில் நீ இன்னும் அரசியலில் சேரவில்லை, நீ சேர்ந்திருப்பது குடும்பத் தொழிலில்.

முதலில் நீ அரசியலிலே சேர்ந்து ராகுல் காந்தி என்றப் பெயரைப் பயன்படுத்தாமல் ராகுல் வின்சி என்றப் பெயரைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வென்றுக்காட்டு. பிறகு வந்து இளைஞர்களையும் படித்தவர்களையும் அரசியலிலே ஈடுபடக் கூப்பிடு.

அதுவரைக்கும் சச்சின் பைலட், மிலிந்த் தியோரா மற்றும் நவீன் சின்டால் போன்ற இளைஞர்கள் அரசியலிலே இணைந்துள்ளனர் போன்ற அடுத்துக்காட்டுகளைக் கொடுக்காதே. அவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் அரசியல்வாதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். அதேபோல அபிசேக் பச்சன் மற்றும் நடிகர்களின் மகன்கள் நடிகர்கள் அல்ல.அவர்கள் நடிகர்களாக மாறியுள்ளனர். ஆக நீ உன் திறமைகளை வளர்த்துக்கொள்ளும் வரை இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை நிறுத்திக்கொள்வாய் எனில் நாங்கள் உன்னைப் பாராட்டுவோம்.

நாங்கள் ஏன் அரசியலிலே சேரமுடியாது

ராகுல், புரிந்துக் கொள், உன் அப்பா இறக்கும் போது சுவிசு வங்கியில் உன் குடும்பக் கணக்கில் நிறையப் பணத்தைப் போட்டு வைத்திருந்தார். சாதாரண இளைஞர்கள் வாழ்வதற்காக உழைக்க வேண்டியுள்ளது. ஆனால் உன் குடும்பம் வாழ்வதற்கு காங்கிரசு என்ற கட்சி தேவை. எங்கள் அப்பாவும் ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்த்து வைத்திருந்தால் நாங்களும் அரசியலுக்கு வரலாம். ஆனால் நாங்கள் உழைக்க வேண்டியுள்ளது. எங்களுக்காக மட்டுமல்ல. உனக்காகவும் தான். அதனால் தான் எங்கள் வருமானத்தில் 30% அய் வரியாக செலுத்த வேண்டியுள்ளது.பிறகு அது வேறொரு புரியாத பெயரில், உன்னுடைய சுவிசு வங்கிக் கணக்கிற்கு அப்படியே மாறிப் போய்விடும்.

ஆக, இளைஞர்கள் அரசியலுக்கு வராத்தைப் பற்றி கவலைப் படாதே. உன்னுடைய தேர்தல் சுற்றுப்பயணங்களுக் கும், சிற்றூர்களுக்கான உலங்கு வானூர்திப் பயணங்களுக்கும் தேவையானப் பணத்தை நாங்கள் எங்கள் உழைப்பின் மூலம் சிறப்பாகவேத் தருகிறோம்.உன்னைப் போல அரசியல்வாதிகளுக்கு கொடுப்பதற்காக யாராவது ஒருவர் சம்பாதித்து தானே ஆக வேண்டியுள்ளது.

ஏர் இந்தியா, கே.ஜி வாயுப் பிரிவு, இரண்டாம் அலைக்கற்றை, பொதுவாயப்போட்டி, சுவிசு வங்கிக் கணக்கு விவகாரம், அசன் அலி, கே.ஜி.பி, எப்.பி.அய் கைது, அரசியலில் உன் குடும்பம் ஒரு பணம் பறிக்கும் எந்திரமாக மாறியிருப்பது. இவற்றைப் பற்றியெல்லாம் நீ வெட்கப்படு.

நீ காந்தியின் இரத்தவழி வந்தவன் இல்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. காந்தி என்பது ஒரு தத்துப்பெயர், கடன் வாங்கியப் பெயர். இந்தப் பெயரிக்காக உன் பாட்டி இந்திரா, மோகன்தாஸ் கரம் சந்து காந்தியின் மகனைத் திருமணம் செய்யவில்லை.

காந்தியின் உயிரணுக்களில் ஒன்றேனும் உன் அணுக்களில் இருந்தால், நீ பணத்தை மட்டுமே சம்பாதிக்கும் குறிக்கோளை கொண்டிருக்க மாட்டாய்.

காந்தி அவர்கள் தனது பெயரைப் பதிவு செய்து, உரிமம் வாங்கியிருக்க வேண்டும் என்பது என் விருப்பம். இதற்கிடையில், சோனியா தனது பெயரின் ஆங்கில முதல் எழுத்தான S அய் நீக்கிவிட்டு $ என்ற எழுத்தையும், ராகுல் தனது முதல் எழுத்தான R என்ற ஆங்கில எழுத்திற்குப் பதிலாக புதிய இந்திய ரூபாய்க் குறியீட்டையும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

“நான் இந்தியன் என்று என்னை அழைத்துக்கொள்ள வெட்கப்படுகிறேன்” என்று சொல்லும் உன்னை அப்படி கூப்பிட எங்களுக்கு கூடத் தான் வெட்கமாக இருக்கிறது. பிரபல ஊடகங்களெல்லாம் உங்களால் விலைக்கு வாங்கப்பட்டோ அல்லது மிரட்டப்பட்டோ இது போன்ற செய்திகளை வெளிவிடாமல் கட்டுப்படுத்தப் படுகின்றன.

இன்றும் சமூக ஊடகங்கள் மக்களாட்சித் தளத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பது என் யூகம். இப்போது அதற்கும் தணிக்கை வைக்க முயற்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன.

இதற்கிடையில், இங்கே கேட்கப்பட்டக் கேள்விகள் அனைத்தும், நாம் காந்தி தேசத்துக்காரர்கள், காந்திதான் தனது நாட்டின் தந்தை என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அந்த காந்தி வேறு, இந்த ஊழல் காந்திகள் வேறு என்பதை தெளிவுப்படுத்துவதற்காகத் தான்.

தங்கள் உண்மையுள்ள,

நிதின் குப்தா (ரிவால்டோ)

இளங்கலைத் தொழிற்கல்வி, அய்.அய்.டி

மும்பை.


நன்றி : சவுக்கு