Saturday, October 31, 2009

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் வழங்கிய நேர்காணல்

‘‘ஈழத்தின் ஒவ்வொரு பறவையும், விடுதலையின் பாடலைத் தன் இறக்கைகளில் சுமந்து உலகெங்கும் பறந்து செல்கிறது!’’ என்கிறார் ஈழக் கவிஞர் காசி ஆனந்தன்.

தாய் மண்ணைத் தொலைத்து, ஈழத்தின் நினைவுகளுடன் உலகெங்கும் அலையும் ஒவ்வொரு ஈழத் தமிழனும், இந்த உணர்ச்சிக் கவிஞரின் கவிதைகளுடன்தான் வாழ்கிறான். விடுதலைப் போராளி இயக்கங்களின் துப்பாக்கி முனைகளுக்கு நிகராக, காசி ஆனந்தனின் பேனா முனையும் தங்களை பலவீனப்படுத்துவதாக என்றென்றும் ஒரு கொதிப்பு இலங்கை ராணுவத்துக்கு உண்டு. அதனாலோ என்னவோ... துப்பாக்கிப் பயிற்சிக்கு இலக்காக இவரது ' கட்-அவுட்' களை நிற்க வைத்து, சிங்கள ராணு வத்தினர் சுட்டுப் பழகியதாகவும் ஒருகாலத்தில் சொல்வார்கள். . இன்றும், உலகெங்கும் தன் உணர்ச்சிக் கவிதைகளால் ஈழத் தமிழர்களுக்கான விடுதலை விளக்கை எடுத்துச் செல்லும் இந்தக் கவிஞர், இப்போது தமிழகத்தில் முடக்கப்பட்ட அகதி வாழ்வு வாழ்கிறார். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, விகடனுக்காக தன் மௌனம் கலைக்கிறார் காசி ஆனந்தன்.

உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த விடுதலைப் புலி திலீபன் பற்றிப் பேச்சு வந்ததும், நொடிப் பொழுதில் கவிஞரின் கண்கள் குளமாகின்றன...

"திலீபனின் தியாக மரணம் என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத தருணம். ஈழத்தின் விடுதலை உணர்வு தமிழகத்திலும் தீயாகக் கொந்தளித்த நேரம் அது. அங்கே நல்லூர் முருகன் கோயிலில் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். நான்தான் அந்தத் தம்பியை அழைத்துப் போய், விரத மேடையில் அமர வைத்தேன். 12 நாட்கள், சொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் வீர மரணம் அடைந்தான் தம்பி. உடல் துவண்டு, உயிர் அடங்கும் நேரத்திலும் கண்களில் ஒளி குன்றாத அந்தத் தம்பி, ' என் கடைசித் தறுவாயில் காசி அண்ணாவின் கவிதை வரிகள் என் இதயத்தை நிரப்ப வேண்டும்' என்று ஆசைப்பட்டான்.'

'நம்புங்கள், தமிழ் ஈழம் நாளை பிறக்கும்... நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்!'

என்ற எனது வரிகளைக் கேட்டபடியே திலீபனின் மூச்சு அடங்கியது.

மரணத்தைத் தன் பக்கத்திலேயே வைத்து நேசித்தவன் திலீபன். அவனுடைய தியாகத்தை நினைக்கும்போது, ஈழத்துக்குள் காலடி எடுத்துவைக்க முடியாமல் இங்கே அகதி வாழ்க்கை வாழ்கிற எனது துயரம் ஒரு பொருட்டாக எனக்குத் தோன்றுவதில்லை'' என்கிறார் காசி ஆனந்தன்.

அன்று முதல் இன்று வரையிலான தனது வாழ்க்கையின் ஓட்டத்தையும் மெதுவாக நினைவு கூர்கிறார்...

‘‘ஈழம் இன்று உலகின் முற்றத் தில் நிமிர்ந்து நிற்கிறதென்றால், அதற்குப் புலிகளும் ஈழ மக்களும் கொடுத்த விலை கொஞ்சநஞ்சம் அல்ல. தமிழர்களுக்கு எதிரான வெறுப்பை விதைக்கிற வேலையை காலங்காலமாகச் செய்து வருகிறது சிங்கள அரசு. சிங்களக் குழந்தைகளின் பாடப் புத்தகங்களில்கூட வெறுப்பைக் கக்கி, பிஞ்சு உள்ளங்களிலும் தமிழர்களுக்கு எதிரான நஞ்சை விதைக்கும் அரசு அது. நான் சிறுவனாக இருந்தபோது தமிழர்களை ‘தமிழ் பள்ளோ’ என்று தான் சிங்களர்கள் அழைப்பார்கள். ‘பள்ளோ’ என்றால் ‘நாயே’ என்று சிங்களத்தில் பொருள். பள்ளோ என்று அழைத்தவர்களை ‘கொட்டியா’ என்று அழைக்க வைத்தோம். கொட்டியா என்றால், ‘புலி’ என்று பொருள்" எழுபதுகளின் துவக்கத்தில் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தது சிங்கள ராணுவம். என் தம்பிகள் சிவஜெயம், சுதர்சனையும் (பின்னர் சயனைட் அருந்தி இறந்தார்) என் தங்கை சிவமலரையும் சிறையில் அடைத்தார்கள். நான் ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தேன்.

‘பத்துத் தடவை பாடை வராது. பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா... செத்து மடிதல் ஒரே ஒரு முறைதான்... சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!’ என்று ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதைதான் ' என்னை' யே இலக்காக வைத்து அவர்கள் சுட்டுப் பழகும் அளவுக்கு அவர்களின் கோபத்தைப் பெரிதாக மூட்டிவிட்டது!

என்னோடு சேர்ந்து என் மனைவி சரோஜினிதேவியும் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டாள்..அப்போதுதான் நாங்கள் அங்கிருந்து அகதியாக இன்னும் சிலருடன் தமிழ்நாட்டுக்கு வந்தோம். மீண்டும் நான் அங்கே போனபோது, மிகப் பெரிய பொறுப்புகள் ஒப்படைக் கப்பட்டன. அவற்றை நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது, அங்கு நிலைமை மோசமடைய, மீண்டும் இந்தியாவுக்கு வந்தேன். இதோ, இப்போது பதினைந்து வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். இப்போது நான் ஈழம் செல்ல விரும்பினால்கூட அரசு அனுமதிக்காது.

நான் கண் காணிக்கப்பட்டு, முடக்கப்பட்டு இருக்கிறேன்’’ என்கிற காசி ஆனந்தனின் சிரிப்பில் சிலிர்ப்பு வழிகிறது.

இந்திய அரசு ஏன் உங்களை முடக்கி வைத்துள்ளது?

‘‘அது ஏன் என்றுதான் எனக்கும் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சுகவீன மாகி ஈழத்தில் இறந்தபோது, ஈமக் காரியங்கள் செய் யக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. என் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எந்தத் தவறுகளும் நான் செய்யவில்லை.

இந்தியாவும் ஈழமும் நட்புடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றோம். எங்களுடையநோக்கம் ஒன்றுதான்... இந்தியா & ஈழத்தின் உறவை வலுப்படுத்துவதும், ஈழத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைதியைக் கொண்டுவருவதும், அமைதிப்படை ஏற்படுத்திய காயங்களைத் துடைப் பதும்தான் எங்கள் நோக்கம். நல்லெண்ணத்துடன் செயல்பட்ட என்னை மீண்டும் மீண்டும் விசார ணைக்கு உட்படுத்துவது மிகப் பெரிய துன்பமாக இருக்கிறது. என்னுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப் பட்டுள் ளது.

‘ஈழம் எங்கள் தாய் நாடு... இந்தியா எங்கள் தந்தை நாடு’ என்று ஆன்டன் பாலசிங்கம் சொன்னதைத்தான் நினைவுகூர்கிறேன். தந்தையின் மடியில்தான் என் உயிர் போக வேண்டும் என்றிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?' ‘இப்போது இலங்கை யில் நிலவும் அமைதி நிலை யானதா, நிஜமானதா?

‘‘சிங்களர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதல் என்பது இன்று நேற்றல்ல... 1500 ஆண்டு காலமாக நடந்து வரும் மோதல். சிங்களர்களின் நோக்கம், சிக்கலைத் தீர்ப்பதல்ல... தமிழர்களைத் தீர்ப்பதாக இருக்கிறது. சமாதானம் பேச வந்த நார்வேயைக்கூட சிங்கள அரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை. நார்வே அரசுக்கு எதிரான போராட்டங்களை சிங்கள பிக்குகளைத் தூண்டிவிட்டு சந்திரிகா செய்கிறார். ஒரு பக்கம் அமைதிப்பேச்சுவார்த்தை என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் விடுதலைப்புலிகளை தடைசெய்யக் கோரி உலக நாடுகளுக்குக் கடிதம் எழுதுகிறார் சந்திரிகா.

ஒன்று தெரியுமா... வியட்நாம் தன்னுடைய விடு தலைக்குப் போராடியபோது சீனாவும் ரஷ்யாவும் வியட்நாமுக்கு உதவின. பாலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளின் ஆதரவு இருந்தது. பங்களாதேஷ் ஆக்கிரமிக்கப்பட்ட போது இந்தியா தன் கைகளில் தாங்கிப் பிடித்தது. ஆனால், 28 ஆண்டு காலமாக விடுதலைப்புலிகள் எந்த நாட்டின் தயவும் இல்லாமல் வீரம் செறிந்த ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக் கிறார்கள். . அமைதிப் பேச்சு வார்த்தைக் காலத்தைப் பயன்படுத்தி, நூற்றுக்கணக்கான புலிகளைச் சிங்கள ராணுவம் கொன்று குவித்துள்ளது. இதனால், நிலவுவது அமைதியா போரா என்ற ஐயம் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சுனாமிக்குப் பிறகு, உயிரையும் உடைமைகளையும் வீட்டையும் இழந்த தமிழர்களுக்கு, உலக நாடுகள் வழங்கிய உதவிப் பொருட்களைக்கூட கொடுக்காமல் நீதிமன்றத்தின் மூலம் தடுத்து வைத்திருக்கிறது சிங்கள அரசு. ஆழிப் பேரலையின் கோர தாண்டவத்தைப் பார்க்க வந்த கிளிண்டனைக்கூட ஈழப் பகுதிகளுக்குச் செல்ல, பாதுகாப்பு காரணங்களைக் காட்டி மறுத்திருக்கிறது. மீண்டும் மீண்டும் தமிழர்களை யுத்த முனைக்குக் கொண்டு செல்வதே சிங்கள அரசின் விருப்பமாக இருப்பதுதான் வேதனை!’’

விடுதலைப்புலிகள் தங்கள் பெயரை சர்வதேச சமூகத்திடம் கெடுத்து வைத்திருக்கிறார்களே?

‘‘புலிகளை ஒரு போராளி அமைப்பாகப் புரிந்துகொண்டால் இந்த அவப்பெயரின் மீது இருக்கும் அரசியல் புரியும். உலகெங்கிலும் தேசிய இன விடுதலைக்காகப் போராடும் போராளிக் குழுக்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுதான் இது. ஈழ மக்கள் நிராயுதபாணிகளாக நின்றபோது, எமது மக்களைப் பாதுகாக்க ஆயுதம் எடுத்தவர்கள் புலிகள் . புலிகள் இல்லையென்றால், இலங்கையில் தமிழர்களின் கதி என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். . அமைதிப் படையுடனான மோதல்கூட தங்களைத் தற்காத்துக்கொள்ள நடத் தப்பட்டதுதானே தவிர, இந்தியாவை எதிர்த்து அல்ல!

ஈழ மக்கள் கேட்பதெல்லாம் ஒன்று தான்...பாலஸ்தீனப் போராட்டத்தைப் புரிந்துகொண்டதைப்போல, ஈழப் போராட்டத்தையும் சர்வதேச சமூகம் அங்கீகரிக்கட்டும்.

புலிகள் தங்கள் மீது சுமத்தப்படுகிற எல்லா களங்கத்தையும் துடைத்தெறிவார்கள் . எம் மண்ணின் விடுதலையை நாங்கள் மீட்டெடுப்போம். ஏனெனில், சுதந்திரம் என்பது சலுகை அல்ல... உரிமை!’’
ஈழத்தில் இருந்து ந.ஈழவேந்தன்



Friday, October 30, 2009

ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை -






ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை -
போராட்டத்தில் பங்கேற்று புரட்சிப் பாக்களை எழுதி இளைஞர்களை எழுச்சிகொள்ள
செய்தவர்.

•“இழந்து போனவனுக்கு வாழ்க்கை துயரம்
எழுந்து நடப்பவனுக்கு எல்லாமே மதுரம்”
“துயரம் அழுவதற்காக அல்ல... எழுவதற்காக

- இத்தகைய மகத்தான சொற்களை கவிதையாக எழுதியவர் அவர், ஆதலால்,
ஆற்றுப்படுத்திய மனத்துடன் கவிஞருக்கு பதிவை…

”அட மானுடனே!
தாயகத்தைக் காதலிக்கக் கற்றுக்கொள்
பெற்ற தாய் சுமந்தது பத்து மாதம்
நிலம் சுமப்பதோ நீண்ட காலம்.
அன்னை மடியில் இருந்து கீழிறங்கி
அடுத்த அடியை நீ வைத்தது
தாயகத்தின் நெஞ்சில்தானே.
இறுதியில் புதைந்தோ
அல்லது எரிந்தோ எருவாவதும்
தாய்நிலத்தின் மடியில்தானே.
நிலமிழந்து போனால் பலமிழந்து போகும்
பலமிழந்து போனால் இனம் அழிந்து போகும்
ஆதலால் மானுடனே!
தாய்நிலத்தைக் காதலிக்கக் கற்றுக் கொள்”
வாழ்க்கையின் மீதான அதி உன்னதமான நம்பிக்கைகளையும், அழகியலையும் தரும்
இத்தகைய உக்கிரமான கவிதைகளை எழுதிய கவிஞர் புதுவை இரத்தினதுரை, தனது
பதினான்காவது வயதில் கவிதை எழுத தொடங்கி, முப்பத்தேழாவது வயதில் (1935)
விடுதலைப் பாதையில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர், ஒரு சிற்பக்
கலைஞரும் கூட.

“எமது மக்களுடைய நுகத்தடிகளை உடைத்தெறிவதில் நானும் போராட வேண்டும்
என்று நினைத்தேனே தவிர, தொடர்ந்தும் கவிதை எழுதிக் கொண்டிருப்பேன் என்ற
நினைப்பில் நான் வரவில்லை. ஆனால், அமைப்புக்கு வருவதற்கு முன்பே எனது
துறை கலையாக இருந்தபடியால், அமைப்புக்குள் நுழைந்த பின்பும் இயக்கத்தில்
கலைப் பண்பாட்டுத் துறையை கவனிக்க வேண்டியதே எனக்கிடப்பட்ட பணி ஆகியது.
இந்தப்பணியை நான் செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்” என உறுதியுடன்
கூறிவந்த புதுவை இரத்தினதுரை, ”ஈழத்தில் மட்டுமல்ல மானுடம் எங்கு
வதைபடுகிறதோ, அங்கெல்லாம் அவர்களுடைய மொழியில் எனது கவிதை பேசும்”
என்கிறார்.

கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதைகளை படித்தும், கவிதைப் பாடல்களை
கேட்டும் பலநூறு இளைஞர்களும், இளைஞிகளும் விடுதலைப் படையினில் வந்து
சேர்ந்து “மண் மீட்புக்காக” களமாடிக் கொண்டிருப்பதை சென்னையில் என்
அண்டை வீட்டில் வாழும் ஈழத் தமிழ் நண்பர் யொனி, சொல்ல கேட்கும் பொழுது -
கவிஞரின் “கவிதாயுதம்” இருப்பதிலேயே உயர் கருவியாக மதிக்கப்பட்டு - மெய்
சிலிர்க்க வைக்கிறது.

ஈழமண்ணில் தோன்றிய மிகச்சிறந்த ஆய்வாளர்களும் ஒருவரான பேராசிரியர்
கா.சிவத்தம்பி அவர்கள், புதுவை இரத்தினதுரை கவிதைகள் பற்றி
குறிப்பிடும்பொழுது,

•“...இந்த மண் எங்களின் சொந்த மண் இதன்
எல்லைகள் மீறி யார் வந்தவன்.
நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து
நின்றது போதும் தமிழா - உந்தன்
கலைகள் அழிந்து கவலை மிகுந்து
கண்டது போதும் தமிழா இன்னும்
உயிரை நினைத்து உடலை சுமந்து
ஓடவா போகிறாய் தமிழா...”
என நெருப்பாக தொடங்கி நீளும் ஒரு பாட புதுவை இரத்தினதுரை எழுதியுள்ளார்.
அந்த பாடல் வரிகள் எத்தகைய தாக்கத்தை மக்கள் மனத்தில் ஏற்படுத்தியது
என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்கிறேன் - ஈழத்திலுள்ள திருநல்வேலி சந்தியில்
1993இல் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் ஒருவர் தேநீர் குடித்துவிட்டு,
சுருட்டு பற்ற வைத்துக்கொண்டு குளிருக்காக தலையையும் காதையும் மறைத்து
தான் போட்டிருந்த போர்வையுடன் மிதிவண்டியில் ஏறிய நேரத்தில் இந்தப்
பாடலும், “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலும் ஒலிபரப்பாக
மிதிவண்டியில் அப்படியே நின்றபடி கேட்டுவிட்டு சென்றார். புதுவை
இரத்தினதுரையின் புரட்சிக் கருத்துக்களையும் நெகிழ்ச்சியான
அனுபவங்கலையும் பாடலில் கேட்டு, உறைந்துபோன அந்த ஈழத் தமிழனின் செயலை
கண்டு மனம் நெகிழ்ந்தேன்” என்று பூரிப்போடு கா.சிவதம்பி எழுதியுள்ளார்.

விரும்பி இடம்பெயர்வது வேறு - விரும்பாமல் வன்முறை செய்து இடம்பெற
வைப்பதென்பது வேறு. புலம் பெயர வைப்பவன் - இறுதியில் எத்தனை முறை
மன்னிப்பு கேட்டாலும் அவனை மன்னிக்கவே கூடாது என மனம் பதற வைக்கிறது
புதுவை இரத்தினதுரையின் சில படைப்புகள்.

•“ஊர் பிரிந்தோம்
ஏதும் எடுக்கவில்லை
அகப்பட்ட கொஞ்சம் அரிசி,
பருப்பு, இரண்டு பாய், இருமல் மருந்து,
மனைவியின் மாற்றுடுப்பு மூன்று,
காற்றுப் போய்க்கிடந்த மிதிவண்டி,
காணியுறுதி,
அடையாள அட்டை அவ்வளவே,
புறப்பட்டு விட்டோம்.
இப்போ உணருகிறேன்
உலகில் தாளாத துயரெது?
ஊரிழந்து போதல் தான்.”
இந்த நிலை - அரை நூற்றாண்டாக... ஈழமண்ணில் தொடர்கிறது. இது நாளையும்
தொடரும் என்கிற போது... சொல்லி புலம்ப சொற்களில்லை. இயலாமையால் மனம்
மௌனமாகிறது.

•“தம்பி பெஞ்சாதியின் தமையன் வீட்டில்
இரவில் பாய்விரிக்க எங்கு இடமிருந்தாலும்
அங்கு உடல் சரிப்பு.
வீட்டுக்காரரின் தூக்கம் கலையுமென
இருமலைக் கூட உள்ளே புதைப்பு
களவுக்கு வந்தவன் போல மனைவியுடன் கதைப்பு
கிணற்று வாளி தட்டுப்பட்டாலே படபடப்பு
ஒண்டுக்கிருத்தல்,
குண்டி கழுவுதல்
ஒவ்வொன்றையும் பயந்தபடி ஒப்பேற்றல்.”
இப்படி காலம் காலமாக சிதைந்தும் - மனம் சிதையாமல் இருப்பதெப்படி?.
நம்பிக்கை. உண்மையின் மேல் ஈழத் தமிழர்கள் வைத்திருக்கும் பெரு
நம்பிக்கை. இந்த நூற்றாண்டிற்கு மட்டுமல்ல - இன்னும் பல
நூற்றாண்டுகளுக்கு தமிழனின் விடுதலைப் போராட்டத்திற்கான இந்த “எரிசக்தி”
கையிருப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.


•“இன்று நடை தளர்ந்தும்
நரை விழுந்தும் தள்ளாடும்
ஐம்பது ஆண்டுகளுக்கு முந்திய இளைஞர்களே!
வெள்ளைத் தோல் சீமான்கள்
வீடு திரும்ப மூட்டை கட்டியபோது
நீங்கள் ஏன் ஊமையானீர்கள்?”
என்று ஒரு ஞாயமான வினாவை தனது கவிதை மூலம் புதுவை இரத்தினதுரை
எழுப்புகிறார். செய்யவேண்டிய வேலையை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்து
விட்டால் தலைமுறைகள் ஏன் தத்தளித்தாடுகிறது என்று கேட்ட கவிஞர்,
இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கும் சுருக்கென சூடு வைக்க தயங்கவில்லை,

•“உடல்கீறி விதை போட்டால்
உரமின்றி மரமாகும்
கடல் மீது
வலை போட்டால்
கரையெங்கும் மீனாகும்.
இவளின் சேலையைப் பற்றி
இந்தா ஒருவன்
தெருவில் இழுக்கின்றான்
பார்த்துவிட்டுப்
படுத்துறங்குபவனே!
நீட்டிப்படு.
உனக்கும் நெருப்பூட்டிக் கொளுத்த
அவனுக்கு வசதியாக இருக்கட்டும்.
‘ரோஷ’ நரம்பை
யாருக்கு விற்று விட்டுப்
பேசாமற் கிடக்கின்றாய்?”
இத்தகைய அற்புத படைப்பின் மூலம் - ஈழத் தமிழ்மக்களை போராட்ட களத்திற்கு
செல்ல வழியமைத்தவர் புதுவை இரத்தினதுரை.

•“......சும்மா காற்றில் பற்றியா இந்தத் தீ மூண்டது?
இந்த அனல் பிடித்தெரிய எத்தனை காலம் பிடித்தது.
எத்தனை பேரைத் தீய்த்து
இந்த தீ வளர்த்தோம்.
எத்தனை பேரை நெய்யாக வார்த்தோம்
அணைய விடக்கூடாது
ஊதிக்கொண்டேயிரு.
பற்றியெரியப் போகுதெனப் பதறுவர்
ஊதுவதை நிறுத்தி விடாதே
இந்தத் தீயின் சுவாலையிற்தான்
மண் தின்னிகள் மரணிக்கும்.”
மீண்டும் ஊரில் நுழைய - தெருவில் நடக்க - தன் வீட்டு நிழலில் களைப்பாற
துடிக்கும் என் உறவு ஈழத்தமிழினத்திற்கு எப்போது விடிவுகாலம் பொறக்கும்
என்று எண்ணும்படியாக துக்கம் தொண்டையை அடைக்க என்னை நிலைதடுமாற செய்தது
புதுவை இரத்தினதுரையின் கவிதைகள். அவரின் படைப்பை மொத்தமாக ( நூல்:
பூவரசம்வேலியும் புலுனிக் குஞ்சுகளும்; ஆசிரியர்: புதுவை இரத்தினதுரை;
வெளியீடு: விடியல் பதிப்பகம், பக்கம்: 432; விலை: ரூ.300) படித்து
முடித்தபோது மண்ணைப் பற்றியும், மண்ணுக்கும் மனிதனுக்குமான பாசம்
பற்றியும், வாழ்க்கையைப் பற்றியும், உறவுகளைப் பற்றியும், உறவுப்
பிரிவின் துயரங்களைப் பற்றியும், வாழ்க்கையின் உன்னதங்கள், அழகியலைப்
பற்றியும், புரட்சியைப் பற்றியும், அறுந்துபோகாத உறுதியான நம்பிக்கைகள்
எனக்குள்ளே கூடியிருப்பதை உணர்கிறேன்.

உண்மையான ஒவ்வொரு தமிழனிடமும் கவிதை மூலமாக புலம்பினார் புதுவை
இரத்தினதுரை. மனித நேயமுள்ள உலகத்து மனிதர்களிடம் புலம்பினார். நெஞ்சு
வெடித்து இனத்துக்காகக் கதறிய இந்த கவிஞனுக்கு என்ன சொல்ல போகிறது இந்த
உலகம். பதறி துடிக்கும்போது கவனிக்காமல் போய் வழக்கம் போல் எழவுக்கு
துக்கம் விசாரிப்பது போலவே இந்த பதிவையும் வருத்தத்தோடு எழுதுகிறேன்.

குறைந்த அளவு இரக்கத்தையாவது உலகம் காட்டியிருக்கக் கூடாதா
ஈழமக்களுக்கு..? என் வாழ்நாள் முழுவதும் நினைத்து வெட்கப்படுவேன்.

•ஈழக் கவியரசே
நீயும் என்ன
பாவம் செய்தாயோ
நானறியேன்
ஈழத்தமிழனாய்
நீ பிறந்ததை தவிர

எம்மின மக்களை
எவனும் மதிக்கவில்லை
இந்த உலகில்

சிங்களவனாவது
பறவாயில்லை
தமிழனை மிருகமாய்
மதித்து சுட்டுக்
கொல்கிறான்

ஈழக்கவியரசே
என்ன பாவம்
செய்தாயோ
நானறியேன்
ஈழத்தமிழனாய் நீ
பிறந்ததைத் தவிர

நீ கூவியதெல்லாம்
கவிதையானது
உன் கவி கேட்டவர்
கண்களில் கண்ணீரெல்லாம்
கடலானது

பிறந்த மண்
சுட்டிருந்தாலும்
விட்டுப் பிரிந்தால்
காலமெல்லாம் நின்று
வலிக்கும் மனமென்று
பாட்டில் அழுதவன் நீ

பாவி நீ

பக்கத்து நாட்டில்
பிறந்திருந்தால்

தமிழனை மறந்து
தமிழ் எழுதி இருந்தால் கூட
தமிழர்களே விழா எடுத்து
உனக்கு
விருது வழங்கி
பாராட்டு விழா நடத்தி இருப்பார்கள்

ஏன் புதுவை நீ அமெரிக்காவில்
மைக்கேல் யக்சனாய்
பிறந்து இறந்திருந்தால்

எத்தனை தமிழர்கள்
அழுது கவிதையால் உனக்கு
மறுமொழி போட்டு இருப்பார்கள்

படுபாவம் நீ
தமிழ்கவி உன்னை கொன்ற
சிங்களவன் துப்பாக்கி கூட
தான் சிரித்ததற்காய் ஒரு
தடவையாவது அழுதிருக்கும்

ஆனால்
நீ இறந்த தகவலை
கண்ணீரோடு பகிர்ந்த என்
கண்ணீரை துடைக்க கூட
ஒரு வார்த்தை இட இங்கு
எந்த தமிழனும் இல்லை
என்பதால்

ஈழத்தமிழன் நானும்
பாவம்தான்....

யாரும் உனக்கு
அனுதாப அஞ்சலி
தெரிவிக்காமல் போனாலும்
என் கண்ணீர் கவி எழுதினால்
அது உன் இறுப்புக்காகத்தான்
இருக்கும்







Thursday, October 29, 2009

பிரபாகரனைத் தலைவனாக பெற்ற ஈழத்தமிழர்கள் பாக்கியசாலிகள்!



ஈழத்தமிழர்கள் பாக்கியசாலிகள். தம் இன மக்களின் விடுதலைக்காக தன்னையும், தன் பிள்ளையையும் அர்ப்பணிக்கும் மாவீரனைத் தலைவனாகப் பெற்ற ஈழத்தமிழர்கள் பாக்கியசாலிகள்தானே? இந்தியா, சீனா போன்ற வல்லரசுகள் ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசுக்கு துணைக்கு நின்றபோதிலும், உறுதியும் துணிச்சலுமாக தமது மண்ணின் விடுதலைக்காகப் போராடவும், மடியவும் தயராக இருக்கிற தலைவனைப் பெற்ற மக்களை நினைத்தும், அவர்களின் தலைவனை நினைத்தும் பெருமிதமாக இருக்கிறது.

ஆறரை கோடி எண்ணிக்கையில் இந்தியாவில் வாழும் தமிழர்களைப் போல ஈழத்தமிழர்கள் துரதிர்ஷ்டசாலிகள் இல்லையே! தன்னையும் தன்குடும்பத்து உறுப்பினர்களின் நலனையும் தவிர வேறொன்றும் தெரியாத தலைவர்களைப் பெற்ற இந்தியத் தமிழர்களைப் போல துர்பாக்கியம், ஈழத்தமிழர்களுக்கு இல்லையே. தேர்தல் நேரத்தில் தங்களை சீட்டுகளுக்கு விற்றுக்கொண்டார்கள் தலைவர்கள். நோட்டுகளுக்கு விற்றுக்கொண்டார்கள் தமிழர்கள். வரலாற்றின் கறைபடிந்த காலகட்டத்தில் தலைகுனிந்து தமிழகத் தமிழர்கள் இருக்கும்போதும், தன் வீரத்தால் ஈழத்தமிழர்களைத் தலைநிமிரவைத்திருக்கிறார் பிரபாகரன். அவர் உயிருடன் இருக்கிறாரா? இல்லை களத்தில் இறந்துபோனாரா? என்ற கேள்விகளுக்கு இருத்தரப்பிடமும் உறுதியான பதில்கள் தற்போது இல்லை. ஆனால், ஈழத்தில் உரிமை மறுக்கப்பட்டு வாழ்வு சூறையாடப்பட்டு ஒவ்வொரு நொடியும் அணுஅணுவாக செத்துப்பிழைக்கிற அப்பாவித் தமிழர்களின் நிலை அப்படியேதான் இருக்கிறது. இந்த நேரத்தில் பிரபாகரனைப் பற்றிய மர்மங்களைவிட, இந்தியத் தமிழர்களின் நிலைகுறித்து மிகுந்த அச்சம்கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்.


சமஉரிமை மறுக்கப்பட்ட தம் இன சகோதரர்களின் விடுதலைக்கும், பாலியல்வல்லுறவுக்கு ஆளான சகோதரிகளின் விடுதலைக்கும், பாலுக்கு அழுகிற பிள்ளைகளைவிட பயத்தில் அழுகிற தலைமுறையின் உரிமைக்கும் போராட தன் உடல், பொருள், ஆவி அத்தனையும் தந்திருக்கிறார் பிரபாகரன். சில மணி நேர உண்ணாவிரத நாடகம் நிகழ்த்துபவர்களையும், வாய்ச்சொல் வீரர்களாக ஒரு சீட்டுக்கு அணிமாறிய அசகாய சூரர்களையும், ‘முதலில் அசிங்கமானது அவர்கள்தான். அப்புறம்தான்நாங்கள் சீட்டுக்கு விலைபோனோம்’ என்று கூச்சமில்லாமல் பேசிய சிறுத்தைகளையும் தலைவர்களாகப் பெற்ற எம்மைப் போன்ற பாவப்பட்ட மக்கள் இல்லையே ஈழத்தமிழர்கள். உரிமைகளைப் பெற இந்தியத் தமிழர்களையும், தலைவர்களையும், இந்தியாவையும் நம்பி மோசம் போனது மட்டுமே அவர்கள் செய்தமாபெரும் பிழை. பிரபாகரனைப் போன்றே தமிழகத் தலைவர்களும் இருப்பார்கள் என்று நம்பியதுதான் அவர்கள் செய்த தவறு.

எங்களுடைய தலைவர்களுக்கு கவிதை எழுதத் தெரியும்; அறிக்கை விடத்தெரியும்; மரங்களுக்கும் உணர்ச்சிவருகிற அளவில் மேடைகளில் முழக்கமிடத்தெரியும். ஆனால் அவர்கள் மரத்துபோன இதயத்துக்குச் சொந்தக்காரர்கள். மானம் என்றால் என்னவென்றோ, மனிதநேயம்என்றால் என்னவென்றோ தெரியாதவர்கள். பிரபாகரனின் முடிவுகளிலும், செயல்பாடுகளிலும் கருத்துவேறுபாடுகள் இருக்க எல்லா நியாயங்களும் இருக்கின்றன. ராஜீவ் படுகொலை, இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைப்பாடு, மற்ற போராளி குழுக்களைக் கொலை செய்வது... என நிறைய இடங்களில் பிரபாகரனோடு முரண்படவும், விமர்சிக்கவும், எதிர்க்கவும் நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ‘தமிழர்களை அடகு வைத்து பிழைப்பு நடத்துகிறவர்’ என்று யாரும் விரல் நீட்டிக் குற்றம் சொல்லமுடியாத மானமுள்ள வாழ்வு வாழ்ந்திருக்கிறார் பிரபாகரன். வார்த்தைக்கும் வாழ்வுக்கும் வித்தியாசமில்லாத மாவீரனின் மரணம் பற்றிய மர்மங்களால் தவிக்கும் உலகத் தமிழர்களுக்கு எந்த வார்த்தைகளால் ஆறுதல் அளிப்பது?


‘வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் இதுதான்’ என்று இலங்கைராணுவமும், ராஜபக்ஷேவும் வெற்றிச் செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். ‘பிரபாகரன் இறந்த செய்தி பொய்யாகிவிடக்கூடாதா?’ என்று மருகியஉலகத்தமிழர்களின் முகத்தில் ஓங்கி அறைய, இலங்கை ராணுவமும், ராஜபக்ஷே கூட்டமும் வெறி கொண்டு அலைகிறது. இந்தவெற்றியில் இலங்கையைவிட இந்தியாவுக்கு அதிக பெருமிதம் இருந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.


வெளிநாட்டிலிருந்து திரும்பிய ராஜபக்ஷே இலங்கை மண்ணை முத்தமிட்டபோதே, அவருடைய உதடுகளில் ஈழத்தமிழர்களின் இரத்தம் ஒட்டியிருந்ததை கவனிக்கும் மனதிடத்தில் தமிழர்கள் இல்லை. பிரபாகரனின் மரண செய்தி கேட்டு சிங்கள மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியிருக்கிறார்கள். தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை மேலும் பொய்யாக்குகிறது சிங்கள மக்களின் வெற்றிக் களிப்பு. தனி ஈழம் மட்டுமே நிரந்தர தீர்வு என்பதற்கான அத்தனை கொடூரங்களும் அப்பாவித் தமிழர்கள் மீது அங்கு நிகழ்த்தப்படுகிறது. போரின் பெயரால் பல ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை ராணுவத்தளபதிகளுக்கு பதவி உயர்வு அளித்திருக்கிறார் ராஜபக்ஷே. இறந்ததமிழர்களுக்கு வாய்க்கரிசியையும், இருக்கும் தமிழர்களுக்கு வாக்குறுதிகளையும் வழங்கியிருக்கிறார். இந்தியத் தலைவர்கள் அதைவரவேற்கலாம். வார்த்தை செயலாகும்வரை பாதிக்கப்பட்ட மக்களால் அதை நம்பமுடியாது.


முன்னால் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை புலிகள்கொன்றார்கள் என்ற வரலாற்றுத் தவறுக்கு இந்தியா பழிதீர்த்துக் கொண்டதுஎன்றே சொல்லலாம். அதற்காக, பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும்போதுமௌனமாக இருந்ததும், ராணுவ உதவிகளை வழங்கியதும் தமிழகத் தமிழர்கள் மனதில்நூற்றாண்டு கடந்த கசப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. 'தன் கணவர் இறந்த மே21-ம் தேதிக்குள் இலங்கையில் எல்லாம் முடிந்துவிட வேண்டும் என்று விரும்பினார் சோனியா' என்கிற மாதிரியான செய்திகள் வெளியானபோது, அதை அந்த சமயத்தில் நம்பவோ, நம்பாமல் இருக்கவோ முடியவில்லை. ஆனால் இப்போது உண்மை புரிகிறது!


தன் கூட்டணி விசுவாசத்திற்கு மீண்டும் பலமான சில கேபினட் மந்திரி பதவிகளை தன் வாரிசுகளுக்காக வாங்குவார் தி.மு.க.தலைவர் கருணாநிதி.அந்த வாய்ப்பு நமக்கு இல்லாமல் போய்விட்டதே என்று வருத்தப்படுவார் மருத்துவர் ராமதாஸ்.தொல்.திருமாவளவனுக்கும் சொல்வதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும். சினிமாவில் புரட்சிக் கலைஞராக இருந்தவிஜயகாந்த் தன் பலத்தை நிரூபிக்க தனித்து நின்று 30 லட்சத்திற்கும்அதிகமான வாக்குகள் பெற்றதில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் பேரம் நன்றாகநடத்துவார்.


தமிழகத்தின் மிகப்பெரிய போராட்டமாக வெடித்து, திராவிடக்கட்சிகள் ஆட்சி வரக் காரணமான இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஆறு பேர்தான் உயிரிழந்தனர்.ஈழத்தமிழர்களுக்காக வரிசையாக இளைஞர்கள் தீக்குளித்தகாட்சிக்குப் பிறகும்,ஈழத்தமிழர்கள் உயிரிழப்பு மக்கள் பிரச்னையாகவில்லைஎன்று வாய்கூசாமல் சொன்னவர்களைப் பார்த்து வாயடைத்து நின்றோம் நாம்.ரௌடித்தனங்களிலும், மக்களின் வறுமையைப் பயன்படுத்திய குரூர புத்தியாலும் ஆட்சியைப் பிடித்தவர்கள், ‘மக்கள் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர்’ என்றுவெட்கமே இல்லாமல் சொல்கிறார்கள்.


தமிழ்நாட்டு தலைவர்களுக்கு கொஞ்சமேனும் மானம் இருந்தால், பிரபாகரன் இறந்துவிட்ட இந்தச் சூழலிலாவது, ஈழத்தமிழர்களின் பிரச்னை தீரும்வரை நாங்கள் நாடாளுமன்ற அரசியலியல்பங்கேற்க மாட்டோம் என்று சொல்ல வேண்டும். ஒரு பக்கம் பணத்தைக்காட்டியும், இன்னொரு பக்கம் ஈழத்தமிழர்களின் பிணத்தைக் காட்டியும் ஓட்டுகேட்ட தமிழக தலைவர்கள் தங்கள் மீது படிந்துள்ள வரலாற்றுக் கறையை நீக்கஇருக்கும் ஒரே கடைசி வழி நாடாளுமன்ற புறக்கணிப்புதான்.

பிணக்குவியலுக்குநடுவிலும் சிரித்துக்கொண்டே வாக்கு கேட்டவர்கள், இத்தகைய முடிவுஎடுப்பார்கள் என்பது அதிகபட்ச எதிர்பார்ப்பாக தெரியலாம். நம்முடைய எதிர்ப்பார்ப்பு என்பதைவிட அதுவே நியாயமானது. தலைமுறைகளைத் தவிக்கவிட்டு பதவியில் அமர்வது என்பது மனிதநேயத்துக்கு நேர்விரோதமானது.


நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுஆட்சியைப் பங்கு போடத் துடித்தவர்கள், இனி கட்சித் தலைவர்களாகவேண்டுமானால் வலம் வரலாம். ஆனால் தமிழினத் தலைவர்களாக தங்களை அடையாளம்காட்டிக்கொள்ளும் தகுதி தற்போது எவருக்குமில்லை என்ற வலிமிகுந்த உண்மையைஒப்புக்கொள்வது நம்முடைய கடமை. வீரமுள்ள தலைவனாகவும், மானமுள்ள தலைவனாகவும் தன் மக்களுக்காக களத்தில் நின்ற அல்லது நிற்கிற, பிரபாகரனைஜெயித்துவிட்டதாக இலங்கை ராணுவம் மகிழலாம். போர் என்கிற அடிப்படையில் ஊன்மையிலேயே இராணுவம் ஜெயித்திருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், ஈழத்தமிழர்கள் சந்தித்தபிரச்னைதான் பிரபாகரனை உருவாக்கியதே தவிர, பிரபாகரன் இலங்கைக்குப்பிரச்னையே இல்லை. இரண்டு வல்லரசுகளின் ஆயுதங்களால் மக்களையும் அவர்களின்தலைவனையும் கொலை செய்த இலங்கை அரசு, கிளையை மட்டுமே வீழ்த்தியிருக்கிறது.இன்னும் பிரச்னையின் வேர் அப்படியேதான் இருக்கிறது.


இலங்கைஅரசின் மகிழ்ச்சிக் கூச்சலில் ஈழத்தமிழர்களின் விசும்பல் யாருக்கும்கேட்காமல் போகக்கூடும். ராணுவம் வைத்திருக்கும் ஆயுதங்களைவிட அப்பாவிமக்களின் கண்ணீருக்கு வலிமை அதிகம் என்பதை யாரும் மறந்துவிடவேண்டாம்.தங்கள் உரிமைக்காக களத்தில் மகனையும், மகனையொத்த பலரையும்பலிகொடுத்தார் பிரபாகரன். ஈழத்தமிழர்களுக்கு பிரச்னை வந்தால் கௌரவமாக சொல்லிக்கொள்ள தலைவர் இருக்கிறார். தமிழகத் தமிழர்கள் ஏதாவது நிகழுமாயின் ஏனென்று கேட்க யாரும் இல்லை. பதவி சுகங்களுக்கு மொத்தமாக மக்களை அடகு வைக்கவும் தயங்க மாட்டார்கள் எம் தலைவர்கள் என்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தல் நிரூபத்தில் எம்மை உறைய வைத்திருக்கிறது. பிரபாகரனின் நிலைமை தமிழகத்தமிழர்களுக்கும் இது மீளமுடியாத துயரம்தான். ஆனால் அதையும்தாண்டி ,பிணங்களின் மீதும் அரசியல் நடத்த துணிந்துவிட்ட பச்சோந்தித்தனமானதலைவர்களைப் பெற்றிருக்கிறோமே என்கிற துக்கமே எமக்கு தொண்டையை அடைத்து, கண்ணில் நீரை வரவழைக்கிறது.


--
வாழ்க தமிழ்! வளர்க பகுத்தறிவு!!

விடுதலைவீரபத்திரன்
www.viduthalaiveeraa.blogspot.com
United Arab Emirates


Monday, October 26, 2009

மீண்டும் மீளூம் தலைவன் – களத்திலிருந்தும் புலத்திலிருந்தும் போராளிகள்

பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகி விட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், ‘அண்ணன் மிக பத்திரமாக இருக்கார்.

leader_16102009

அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரை விலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!’ என உறுதியாகச் சொல்கிறார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருபதாயிரத்துக்கும் மேற் பட்ட அப்பாவி மக்கள் பிரபாகரனின் சம காலத் தளபதிகள் என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்பு களையும், ஈழத்தின் கடைசி நிமிடங் களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள். அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!முப்பது வருடப் போராட்ட காலத் தில் அடுத்து என்ன நடக்கும்? என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம்பவே கெட்டிக்காரர்.

கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசி வரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோ சித்த தலைவர், ”நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம்.

அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!” என்று சொல்லி இருக்கிறார். அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சி குடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக் கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார். கடைசி வரை களத்தில் நின்ற கரிகாலன்! மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர்.

இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப் போனார்கள். ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வ பத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளி யேறினார்.

களத்தில் சார்லஸ் !தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளி வாய்க்காலில் தங்கவைத்திருந்தார். முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசி நேர நெருக்கடிகள் மிகுதியானபோது புலித் தளபதிகள் மக்களிடம், ”நீங்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய் விடுங்கள். ரசாயன குண்டுகளை வீசி மொத்தமாக அழிக்கப் போகிறார்கள்!”’என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ”மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் இராணுவக் கட்டுப் பாட்டுக்குப் போகமாட்டோம்” என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற் புறுத்தியிருக்கிறார்கள்.

அந்த நேரத்தில் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்து போனார்கள். கடைசி நாளில்: அடுத்தபடியாக மக்கள் மீது இராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!’- என்று நிறுத்தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை.

அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன். அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராச பக்சேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். ”ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் இராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்”’என்று ராசபக்சே சொல்லி இருக்கிறார். தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்அவர்களும் ராசபக்சேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத் தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள். ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த இராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்று விட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ர வதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத்தகவலையும் பெற முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற இராணுவத்தினர், காயம் பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக் கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை. அந்த உடல்: ஈழத்தையே முழுவதுமாக அழித்த இராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது. அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது இராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப் பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல இராணுவம் காட்டுகிறது. மாவீரர் தினத்தில் வருவார் !!!இராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27ஆம் தேதி – வீரவணக்க’தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலை வருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்! – என்கிறார்கள் உறுதி குறையாமல்.

நன்றி:தென்செய்தி












Saturday, October 24, 2009

இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றியமைத்த பெருமை, ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிய பேரம் போபர்ஸ்


இந்தியாவின் அரசியல் போக்கையே மாற்றியமைத்த பெருமை, ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதிய பேரம், இந்தியாவில் மிக நீண்டகாலமாக விசாரிக்கப்பட்டு இன்னமும் துப்பு துலங்காத வழக்கு... இப்படி பல பெருமைகள் போபர்ஸ் விவகாரத்துக்கு உண்டு. ‘செலக்டிவ் அம்னீஷியாவில் இருக்கும் நோயாளி’யின் நினைவுகள் போல, அவ்வப்போது இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படும்; அப்புறம் அப்படியே அமுங்கிவிடும். கடந்த செப்டம்பர் 29ம் தேதி, ‘இத்தாலி தொழிலதிபர் குவட்ரோச்சி மீதான போபர்ஸ் வழக்குக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இந்த வழக்கை மூடிவிட அனுமதி வேண்டும்’ என சி.பி.ஐ. சார்பில் டெல்லி கோர்ட்டில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் மனு தாக்கல் செய்தார். போபர்ஸ் விசாரணையின் இறுதி அத்தியாயமாக இது கருதப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் சில வழக்கறிஞர்களும் தவிர, இதை எதிர்க்க ஆளில்லை! ‘சென்சிடிவ்வான இந்த வழக்கை இப்படி குளோஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது’ என சி.பி.ஐ. முடிவுக்கு எதிராக, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய் அகர்வால் வழக்கு போட்டிருக்கிறார். அந்த வழக்கில் குவட்ரோச்சியின் தலைவிதி சிக்கிக்கொண்டிருக்கிறது.


ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்களை சாதாரணமாகப் பார்க்கும் காலம் இது; அந்த வகையிலான பல ஊழல்களின் பெயர்கள்கூட நமக்கு ஞாபகம் இருப்பதில்லை; வெறும் பேச்சளவிலேயே நின்றுபோய் அந்த ஊழல்கள் தொடர்பாக வழக்குகள்கூட எதுவும் போடப்படுவதில்லை. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவோம்’ என்று வாக்குறுதி கொடுக்கிற கட்சியே, ஊழல் செய்த கட்சியோடு தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக்கொள்கிற அரசியல் அசிங்கத்தை எல்லாம் சகித்துக் கொண்டு வாழப் பழகிவிட்டோம். இப்படி நம்மை ஊழல் விஷயத்தில் சுரணையற்றுப் போனவர்களாக மரத்துப் போகச் செய்த பெருமை போபர்ஸ் ஊழலுக்கு மட்டும்தான் உண்டு. இத்தனைக்கும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை வெறும் 64 கோடி மட்டும்தான் என்பதை இந்தத் தலைமுறை அரசியல்வாதிகள் ரொம்பவே கிண்டலோடு குறிப்பிடுவார்கள்.


24 ஆண்டுகளில் எத்தனை திருப்பங்களையும், மோசமான அரசியல் நாடகங்களையும் பார்த்திருக்கிறது இந்த வழக்கு...


கடந்த 86ம் ஆண்டு... இளம் ராஜீவ் பிரதமராகி, இந்தியாவை வித்தியாசமான வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லப்போவதாக வாக்குறுதிகள் கொடுத்துக்கொண்டிருந்த நேரம் அது. ராஜீவுக்கு முந்தைய காலம் வரை ராணுவ பேரங்களை இடைத்தரகர்கள் மூலமாக நிகழ்த்தி, அவர்களுக்கு நிறைய கமிஷனையும் தந்துகொண்டிருந்தது மத்திய அரசு. இதே ரேஞ்சில் அந்த இடைத்தரகர்கள் வெளிநாட்டு ஆயுத நிறுவனங்களிடமும் கமிஷன் வாங்கிக் கொண்டிருந்தார்கள். ‘இடைத்தரகர்கள் மூலமாக ஆயுதங்கள் வாங்குவதை நிறுத்தவேண்டும்; தேவையான ஆயுதங்களை நேரடியாகத் தயாரிப்பு நிறுவனங்களிடமே ஒப்பந்தம் போட்டு வாங்கவேண்டும்’ என்ற தைரியமான முடிவை ராஜீவ்தான் எடுத்தார்.


அவர் எடுத்த முடிவை அவரே மீற வேண்டிய சந்தர்ப்பம் நிகழ்ந்தது. அதுதான் போபர்ஸ் விவகாரத்துக்கான விதை. ஸ்வீடன் பிரதமர் ஒல்ப் பால்மே ராஜீவுக்கு நெருங்கிய நண்பர். 86ம் ஆண்டு ஸ்வீடனில் தேர்தல் வந்தபோது, அவரது தொழிலாளர் கட்சியின் செல்வாக்கு சரிந்திருந்தது. பெரிதாக ஏதாவது செய்யாவிட்டால் அவர் மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் என்பது ஸ்வீடன் நாட்டில் எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அப்போது ராணுவத்துக்கு புதிய பீரங்கிகளை வாங்க இந்தியா முடிவெடுத்திருந்தது; ஸ்வீடனில் இருக்கும் ஏ பி போபர்ஸ் ஆயுதத் தயாரிப்பு நிறுவனம், போதுமான ஆர்டர்கள் வராததால் மூடப்படும் அபாயத்தில் இருந்தது. ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்தால், தேர்தல் நேர நெருக்கடி இன்னும் முற்றும்.


இரண்டையும் முடிச்சு போட்டுப் பார்த்த பால்மே, ஆறு நாடுகளின் தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்காக டெல்லி வந்தபோது ராஜீவை தனிமையில் சந்தித்துப் பேசினார். பீரங்கி ஆர்டரை தங்கள் நாட்டு நிறுவனத்துக்குத் தருமாறு அன்போடு வேண்டுகோள் விடுத்தார். நண்பரின் கோரிக்கையை ராஜீவால் நிராகரிக்க முடியவில்லை. ஆயிரத்து 437 கோடி ரூபாயில் 400 ஹோவிட்ஸர் பீரங்கிகளை வாங்கும் ஆர்டர் போபர்ஸ் நிறுவனத்துக்குத் தரப்படுவதாக அறிவிப்பு வெளியானது. ஸ்வீடன் தேசமே இதைக் கொண்டாடியது. ராஜீவின் விருப்பத்தாலேயே ஒப்பந்தம் போடப்படுகிறது என்பது தெரிந்ததும், இதை எதிர்க்க யாரும் தயாராக இல்லை; ஒரே ஒருவரைத் தவிர! அவர், பாதுகாப்பு அமைச்சகத்தில் இணை செயலாளராக இருந்த எஸ்.கே.அக்னிஹோத்ரி. ‘இந்தியா நிர்ணயித்திருக்கும் தரத்தில் போபர்ஸ் நிறுவன பீரங்கிகள் இல்லை’ என அவர் ஒப்பந்த விவாதத்தில் குறிப்பு எழுதினார். அடுத்த சில தினங்களில் அக்னிஹோத்ரி ஜவுளி அமைச்சகத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட, மூன்று மாதங்களில் அப்படியே ஒப்பந்தம் கையெழுத்தானது.


ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு ஒரு மாதம் முன்னதாக, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஒரு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார் ஒல்ப் பால்மே. இன்றுவரை போபர்ஸ் ஊழல் போலவே, பால்மே படுகொலையும் விடுவிக்கப்படாத புதிராகவே இருக்கிறது. போபர்ஸ் ஊழலுக்கும் அவரது படுகொலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா; இல்லையா என்பதுகூட புலப்படவில்லை.


1987 ஏப்ரல் 16ம் தேதி... ஸ்வீடன் ரேடியோ நிருபர்கள் இருவர், ஒரு காலை மலர் நிகழ்ச்சியில் ஸ்கூப் நியூஸ் ஒன்றைத் தந்தனர். ‘போபர்ஸ் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்திய அரசியல்வாதிகளுக்கு 64 கோடி ரூபாய் லஞ்சம் தரப்பட்டது’ என அவர்கள் கொளுத்திப் போட்ட திரி டெல்லி வரை வெடித்தது. ‘போபர்ஸ் விவகாரத்தில் இடைத்தரகர்கள் யாரும் இல்லை; யாருக்கும் லஞ்சம் தரப்படவில்லை’ என நாடாளுமன்றத்தில் ராஜீவ் சொன்னதை யாரும் ஏற்கவில்லை. புகழின் உச்சியில் ராஜீவ் இருந்ததால், கிட்டத்தட்ட எதிர்க்கட்சிகள் அனைத்துமே முடங்கிப் போயிருந்த சூழல் அது! அல்வாத்துண்டு மாதிரி கிடைத்த வாய்ப்பை எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை.


ராஜீவை ஒரு திருடராக சித்தரிக்க அவை முயற்சி செய்தன. அதில் அவர்களுக்கு வெற்றியும் கிடைத்தது. சின்னக் குழந்தைகள்கூட, ‘ராஜீவ் ஒரு திருடன்’ என பாட்டு பாடும் அளவுக்கு போபர்ஸ் ஊழல் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆனது. வி.பி.சிங் என்ற புதிய தலைவர் உருவானார். ‘போபர்ஸ் ஊழலில் கைமாறிய லஞ்சப்பணம் ஸ்விஸ் வங்கியில் ரகசிய அக்கவுன்ட்களில் போடப்பட்டிருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்ததும் அதை அம்பலப்படுத்துவேன்’ என்று தேர்தல் பிரசாரம் செய்தார். ராஜீவ் தோற்றார். ஆனால் பிரதமரான வி.பி.சிங் அப்படி வேகமாக எதையும் செய்யமுடியவில்லை. வி.பி.சிங்கைக் கவிழ்த்துவிட்டு, சந்திரசேகரை தனது ஆதரவுடன் ராஜீவ் பிரதமராக்கியபோதே போபர்ஸ் விவகாரத்துக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதாகச் சொல்லலாம்.

வழக்கை விசாரித்த சி.பி.ஐ. குழுவினரைவிட இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்கள் கண்டுபிடித்தது அதிகம். போபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போவின் டைரி பக்கங்களைத் தோண்டியெடுத்து, யார் யாருக்கு லஞ்சம் தரப்பட்டது என்பதை வெளியிட்டது பத்திரிகைகள்தான்!


‘மிஸ்டர் க்யூ’, ‘நீரோ’, ‘காந்தி டிரஸ்ட் வழக்கறிஞர்’ என மூன்று பேரை சங்கேத வார்த்தைகளில் குறிப்பிட்டிருந்தார் ஆர்ட்போ. இதில் மிஸ்டர் க்யூ என்பது குவட்ரோச்சியையும் நீரோ என்பது ராஜீவ் அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த அவரது உறவினரான அருண் நேருவையும் குறிக்கும் என்பது யூகம்.


ராஜீவ் காந்தி, போபர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஆர்ட்போ, அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி வின் சத்தா, போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து லஞ்சப்பணத்தை பெற்று இந்திய அரசியல்வாதிகளுக்குக் கொடுத்ததாகக் கருதப்படும் குவட்ரோச்சி, இடைத்தரகர்களாக செயல்பட்ட தொழிலதிபர்கள் இந்துஜா சகோதரர்கள், அருண் நேரு, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் எஸ்.கே.பட்நாகர் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க குவட்ரோச்சி வெளிநாடு தப்பிச் சென்றார். திருடர் என்ற பட்டத்தைச் சுமந்து ராஜீவ் இறந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆனபிறகு, ‘ராஜீவ் குற்றமற்றவர்’ என கடந்த 2004ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதேபோன்ற வேகத்தில் போபர்ஸ் வழக்கு நடக்க, பட்நாகர், வின் சத்தா உட்பட குற்றம் சாட்டப்பட்ட பலரும் வழக்கு விசாரணை நடக்கும்போதே இறந்துவிட்டார்கள். போபர்ஸ் விவகாரத்தை வைத்து ராஜீவிடம் தினம் 10 கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்த பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, திடீரென ஒருநாள் இந்துஜா சகோதரர்களுக்காக வாதாடிய அசிங்கமான திருப்பத்தையும் இந்த தேசம் பார்த்தது.


இப்படியான முரண்பாடுகளுக்குப் பிறகு, போபர்ஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் இப்போது உயிரோடு இருக்கும் ஒரே நபர் குவட்ரோச்சிதான்! வழக்கு போடப்பட்டதும் அவர் மலேசியாவுக்குத் தப்பிச் சென்றார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவர சி.பி.ஐ. தீவிர முயற்சி எடுத்ததாக பல ஆண்டுகள் சொல்லப்பட்டது. ஆனால் இடையில் ஒருமுறை மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது இந்தியப் பிரதமர் வாஜ்பாயை சந்தித்தபோது, ‘சீரியஸாகவே குவட்ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறீர்களா... இந்த விஷயத்தில் நான் ஏதாவது உதவட்டுமா?’ என்று கேட்டதாகவும், வாஜ்பாய் இதற்கு பதிலே சொல்லாமல் ஜன்னல் வழியே வெளியில் எங்கோ வேடிக்கை பார்த்ததாகவும் சொல்வார்கள். ஒருவழியாக மலேசியாவிலிருந்து அவரை இந்தியாவுக்குக்கொண்டுவரும் முயற்சியில் சி.பி.ஐ. வெற்றிபெற்றபோது அவர் அர்ஜென்டினா தப்பிச் சென்றிருந்தார். இன்டர்போல் அமைப்பு மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்து, அவரைக் கைது செய்ய வைத்தது சி.பி.ஐ. ஆனால் உடனே குவட்ரோச்சிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. அர்ஜென்டினாவுக்கும் இந்தியாவுக்கும் சட்டப்பூர்வ ஒப்பந்தம் ஏதுமில்லாததால், குவட்ரோச்சியை இந்தியா கொண்டுவரும் முயற்சி பலனளிக்கவில்லை. லண்டனில் இருக்கும் அவரது வங்கிகணக்குகளை முடக்குவதற்காக எடுத்த நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில்தான், ‘குவட்ரோச்சி மீதான புகார்களுக்கு போதுமான ஆதாரம் இல்லை’ எனச் சொல்லி, வழக்கைக் கைவிட முடிவெடுத்திருக்கிறது சி.பி.ஐ.


64 கோடி ரூபாய் போபர்ஸ் ஊழல் விவகாரத்தை விசாரிக்க, சி.பி.ஐ. இதுவரை செலவிட்டிருக்கும் தொகை சுமார் 250 கோடி ரூபாய். கிட்டத்தட்ட ஊழலில் கைமாறிய லஞ்சப்பணத்தைவிட நான்கு மடங்கு அதிகம்! இவ்வளவு செலவிட்டு அவர்கள் கண்டுபிடித்த உண்மை... ‘போதுமான ஆதாரம் இல்லை’ என்பதுதான்!


சாதாரண இந்தியனுக்குள் எழும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்... ‘ராஜீவ் குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர்’ என்பதுதான் குவட்ரோச்சிக்கு இருக்கும் ஒரே இந்திய அடையாளம். அப்படிப்பட்டவர் மீதான குற்றச்சாட்டு இப்படியான ஒரு முடிவுக்கே வரும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. இதைக் கண்டுபிடிக்க மக்கள் வரிப்பணத்தில் 250 கோடியை வீணாக்கவேண்டுமா என்பதுதான்!
- நாடோடி





Wednesday, October 21, 2009

திருமதி தமிழ்செல்வன் நேர்காணல்

அன்புத்தோழி இசைச்செல்வி தமிழ்செல்வனின் வீரமுழக்கம்.
ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்று சொன்ன பெரியாரின்
வார்த்தையை உண்மையாக்கி உள்ளார் இந்த இசைச்செல்வி
நீங்களுகும் அவரின் பேச்சை கேளுங்களேன்...

Tuesday, October 20, 2009

கவிஞர் காசிஆனந்தன் கதைகள்

பதுங்கு குழிக்குள் இருக்கும் தாய்
அழும் குழந்தைக்குப் பாலூட்டியபடியே
பாடுகிற தாலாட்டுக்களின் நியாயங்கள் யாவும்
இந்த குட்டி கதைகளில் நிரம்பித்தழும்புகின்றன...

Monday, October 19, 2009

இந்திரா - கருணாநிதி தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை

u2_karunanadhhiஇராஜீவ் காந்தியின் தாயார் இந்திரா காந்தியின் ஆட்சியின் பொழுது பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருந்த தமிழின அழிப்பு ஒடுக்குமுறை மிசா சட்டத்தினை எதிர்த்த கருணாநிதி ஆட்சியில் இப்பொழுது ஈழத்தமிழினத்தினை அழிக்க தேசியப்பாதுகாப்புச்சட்டம். ம.தி.மு.க.விலிருந்து விலகி மு.கண்ணப்பன் தி.மு.க.வில் சேர்ந்தபோதுதான் கலைஞருக்கு 1976 ஆம் ஆண்டின் நெருக்கடி காலக் கொடுமைகள் எல்லாம் நினைவுக்கு வந்திருக்கிறது.

“நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தபோது இந்தியாவிலே முதன்முதலாகச் செயற்குழுவைக் கூட்டி நெருக்கடி நிலையைக் கண்டித்து அதைத் திரும்பப் பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஒரே அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்… நாம் ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நெருக்கடிக்காலச் சட்டத்தை மிசா கொடுமையை எதிர்க்கிறோம் என்று பிரகடனப்படுத்திய காலக் கட்டம் அது”.

- (‘முரசொலி’ மார்ச் 24) – என்று கலைஞர் மலரும் நினைவுகளை அசை போட்டிருக்கிறார்.

மு.க. ஸ்டாலின் தனது பேரன் பேத்தி குடும்ப சகிதமாக இடிக்கப்பட இருக்கும் சென்னை சிறையைப் பார்வையிட்டு, தாம் அடைக்கப்பட்டிருந்த சிறைப்பகுதிக்குள் சென்று, பேரனை புகைப்படம் எடுக்கச் சொல்லி கண்களில் நீர் மல்க, அந்தக் கால நினைவுகளை அசை போட்டிருக்கிறார். கலைஞருக்கு அவை மலரும் நினைவுகளாகவே முடிந்து போயிருந்தால் – நாமும் கூட மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால், அந்த அடக்குமுறைகளை மலரும் நினைவுகளாக அல்ல, நிகழும் நடப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோமே என்ற உணர்வுகளோ, உறுத்தலோ, அதற்கான சலனமோகூட கலைஞரிடம் இல்லாமல் போய்விட்டதே!

அன்று – விசாரணை ஏதுமின்றி ஓராண்டு சிறையில் அடைக்கும் ‘மிசா’வை காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்தி கைகளில் எடுத்தார் என்றால்,

இன்று – அதற்கு மாற்றாக கலைஞர் விசாரணை ஏதுமின்றி ஓராண்டு சிறையில் அடைக்கும் “தேசிய பாதுகாப்பு சட்டத்தை” தனது கைகளில் தூக்கியிருக்கிறார்; அவ்வளவுதான் வேறுபாடு!

அன்று – இந்திராகாந்தியின் அவசர நிலையை எதிர்த்து தி.மு.க. வெடிகுண்டு தூக்கவில்லை. கடற்கரையிலே மக்களை கூட்டி வைத்துக் கண்டனக் குரல் எழுப்பி பேசியது; அவ்வளவு தான். அதற்கு ஓராண்டு ‘மிசா’.

இன்று – கொளத்தூர் மணியும், இயக்குனர் சீமானும், நாஞ்சில் சம்பத்தும் வெடிகுண்டு தூக்கவில்லை. எந்த காங்கிரஸ் ‘மிசா’வின் கீழ் தி.மு.க.வை ஒடுக்கியதோ, அதே காங்கிரஸ், ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு துணை போவதை மக்களைக் கூட்டி வைத்து அன்று தி.மு.க. கடற்கரையில் பேசியதுபோல் இன்றும் மேடையில்தான் பேசினார்கள்.

ஆனால், அன்று – ‘அவசர நிலை எதிர்ப்புக் களத்தின் போர் வீரனாக’ நின்ற கலைஞர்,

இன்று – தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக மாறியிருக்கிறார்.

அன்று – இந்திரா அவசர நிலை பிரகடனம் செய்தபோது – கலைஞரின் ‘முரசொலி’ இந்திராவின் படத்தை ஹிட்லராக மாற்றி கேலிச் சித்திரம் போட்டது.

இன்று – நாஞ்சில் சம்பத், எந்த அரசுப் பதவியிலும் இல்லாத சோனியாவை முசோலினி என்று குறிப்பிட்டதற்காக கலைஞர் ஆட்சி ஓராண்டுக்கு சிறையில் வைக்கும் ஆள் தூக்கி சட்டத்தை ஏவுகிறது.

எந்த இந்திராகாந்தி ‘மிசா’வின் கீழ் தி.மு.க.வினரை சிறைப்படுத்தி சர்க்காரியா விசாரணை ஆணையத்தை நிறுவி அலைக் கழித்தாரோ, அவமதித்தாரோ அதே இந்திராவை – ‘நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக’ என்று பட்டுக் கம்பளம் விரித்து கைகொடுத்தவரும் இதே கலைஞர் தான்! அன்றும் – கலைஞரின் பச்சை அரசியல் சந்தர்ப்பவாதம் தான் அரங்கேறியது. கடற்கரைக் கூட்டத்திலே இந்த ‘தமிழினத் துரோக நாடகத்தில்’ கதாபாத்திரமேற்றிருந்த கலைஞர், இந்திராவுடன் கைகுலுக்கியபோது, அன்று – கலைஞரை திராவிடர் கழகம் ஆதரித்த நிலையிலும் – பொறுக்க முடியாத கோவை இராமகிருட்டிணன் தலைமையில் செயல்பட்ட திராவிடர் கழக இளைஞரணி – இந்த கூட்டணியைக் கண்டித்து சென்னை நகரிலே சுவரொட்டிகளை ஒட்டி, தனது எதிர்ப்பைப் பதிப்பு செய்தது.

சென்னை சிறையிலே மிசாவில் கைதானவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபுவும், சாத்தூர் பாலகிருட்டிணனும் சிறையில் பட்ட அடியால் மரணத்தையே தழுவினர். சிட்டிபாபு சிறையில் எழுதிய ‘டைரி’ சிறைக் கொடுமைகளை பதிவு செய்தது. முரசொலி மாறன் முதுகுத் தண்டும் பாதிக்கப்பட்டது. அதே ‘மிசா’வின் கொடுமையினால் தான்.

அன்று – இந்திராவின் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தமிழின உணர்வை நசுக்கி, ஆளுநர் ஆட்சியை அறிவித்து, ஆர்.வி.சுப்ரமணியம், தவே என்று இரண்டு பார்ப்பன ஆலோசகர்களை அனுப்பி, தமிழின உணர்வுக்கு எதிராக திட்டமிட்ட ‘அழிப்பையே’ நடத்தி முடித்தார்கள்; தமிழகம் பார்ப்பன அதிகார நாடாக மாற்றப்பட்டது.

இன்று – இந்திராவின் மருமகள் சோனியாவின் ஆட்சியில் என்ன நடக்கிறது?
ஈழத் தமிழர்களையும், அவர்களின் விடுதலைப்படையான விடுதலைப் புலிகளையும் பூண்டோடு ஒழிக்க சபதமேற்று செயல்படுகிறது. பணத்தையும், ஆயுதங்களையும் வாரி வழங்கி, உளவு நிறுவனங்களின் சேவைகளைப் பகிர்ந்து, ராடார்களையும், கப்பல்களையும் தூக்கிக் கொடுத்து தமிழர்களை நன்றாகக் கொன்று குவிக்க வைத்து வேடிக்கைப் பார்த்து மகிழ்கிறது.

அன்று – இந்திரா ஆட்சியில் தமிழகத்தில் ‘தமிழின’ அழிப்புக்கான ஒடுக்குமுறைகள்;

இன்று – சோனியா ஆட்சியில் ஈழத்தில் திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு பேராதரவு.

அன்று – இந்திரா ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்துப் பேசியதால் – தீர்மானம் போட்டதால் – விசாரணையின்றி ஓராண்டுக்கு மேல் சிறை;

இன்று – தி.மு.க. ஆட்சியில் சோனியாவை எதிர்த்தால், காங்கிரசின் துரோகத்தைக் கண்டித்துப் பேசினால், ராஜீவ் மரணத்தை விமர்சித்தால் – விசாரணையின்றி ஓராண்டு சிறை.

இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றுதான். அன்று காங்கிரசின் ஆணையில் அடக்கு முறை; இன்று காங்கிரசே கேட்க வேண்டாம்; ‘நான் எதற்கு இருக்கிறேன் தாயே’ என்று கலைஞரே – காங்கிரசின் ‘பாத்திரத்தை’ ஏற்றுக் கொண்டு விட்டார். அவ்வளவுதான் வேறுபாடு. கரம் என்றாலே இப்போது கலைஞருக்கு உடனடியாக நினைவுக்கு வருவது காங்கிரஸ்தான் என்றாகிவிட்டது. தி.மு.க.வில் இணைந்த கண்ணப்பன், ‘உங்கள் கரத்தைப் பலப்படுத்துவோம்’ என்று கலைஞரிடம் கூறியவுடன், ‘தோழமைக் கட்சியின் சின்னம் கரம்; காங்கிரஸ் கட்சியின் சின்னம் கரம்; அதைப் பலப்படுத்துவோம் என்று கண்ணப்பன் சொல்லியிருக்கிறார்” என்று கலைஞர் அதற்கு விளக்கம் தரும் எல்லைக்குப் போய் விட்டார்.

• அந்தக் ‘கரம்’ தான் – மிசாவின் கரம்;
• அந்தக் ‘கரம்’ தான் – சிட்டிபாபுகளையும், பாலகிருஷ்ணன்களையும் பிணமாக்கிய ‘கரம்’.
• அந்தக் ‘கரம்’ தான் – ஸ்டாலினையும், முரசொலிமாறனையும் – சிறைக்குள் அடித்து உதைத்த ‘கரம்’.
• அந்தக் ‘கரம்’ தான் – இன்றும் ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைகளுக்கு நீண்டிடும் கரம்.
இன்னமும் தமிழின உணர்வை இழந்திடாமல், அந்த உணர்வுக்காக – எந்தப் பலனையும் எதிர்பாராமல் தி.மு.க.வில் உழைத்துக் கொண்டிருக்கும் உண்மை தமிழின உணர்வாளர்களே; தமிழின இளைஞர்களே!
உங்கள் குருதியோட்டத்தோடு கலந்து நிற்கும் – அந்த இன உணர்வோடு சிந்தியுங்கள்!
கலைஞரின் இந்த நிலைப்பாடுகள் சரி தானா?
துரோக காங்கிரசைத் தூக்கி நிறுத்தி – அவர்கள் நடத்தும் இனப் படுகொலையின் கோர முகத்தை மறைக்கத் துடிப்பது – நேர்மை தானா?
காங்கிரசை மகிழ்விக்க – தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கையில் எடுப்பது நேர்மைதானா?

உள்ளத்தைத் தொட்டு சிந்தியுங்கள்!

அன்புடன் ஈழத்தில் இருந்து ந.ஈழவேந்தன்

பசி - குறும்படம்

http://www.tamilkathir.com/news/1742/57/.aspx

Wednesday, October 14, 2009

தீபாவளி

தீபாவளி

Friday, October 9, 2009

புரட்சி தீ

தமிழீழத்தின் எங்கள் தலைவனே!
இனத்தைக் காப்பதற்காக
இயந்திரத் துப்பாக்கியை
ஆறாவது விரலாய்
ஆக்கிகொண்டவனே!
பணப்பெட்டிகள்
உன்னை சுற்றி வந்தன
உன் விடுதலைப்போர்
பலமுறை
விலை பேசப்பட்டது...
துப்பாக்கியை கையில்
ஏந்தியவுடன்
முதலில் நீ
சுட்டு வீழ்த்தியது - உன்
சுயநலத்தை தானே
பிறகு எப்படி
பணப்பெட்டிகளின் மீது
பாசம் வைப்பாய்...
நாங்கள் இன்று வரை
உன்னை உணரவில்லை
திரைப்படத்தையும்
நடிகைகளின்
அங்கங்களைப் பற்றிய
ஆராய்ச்சியில் இருந்தே
இன்னும் மீளவில்லை...
பிறகு எப்படி உன்
புனித போரினை
புரிந்துக்கொள்ள முடியும்?
எத்தனையோ கவிதைகள்
இயற்றப்பட்டிருக்கலாம்
ஆனால்
உண்மை வீரனாகிய
உன்னை பற்றிய கவிதையை
உருவாக்கிய பின்புதான்
என் பேனா முனை
பெருமை படுகிறது...
உன் போராட்டத்தின்
முடிவு முற்று பெறவில்லை
ஆயினும்
உலக சரித்திரத்தில்
உனக்காக
சில பக்கங்கள்
ஒதுக்கப்ப்ட்டுவிட்டன...

Saturday, October 3, 2009

மக்கள் அரங்கம்

நம்பிக்கைதான் வாழ்க்கை..
இவர்களின் நம்பிக்கையை பாருங்கள்...
என் தமிழ் உறவுகளே...!!!