Friday, October 9, 2009

புரட்சி தீ

தமிழீழத்தின் எங்கள் தலைவனே!
இனத்தைக் காப்பதற்காக
இயந்திரத் துப்பாக்கியை
ஆறாவது விரலாய்
ஆக்கிகொண்டவனே!
பணப்பெட்டிகள்
உன்னை சுற்றி வந்தன
உன் விடுதலைப்போர்
பலமுறை
விலை பேசப்பட்டது...
துப்பாக்கியை கையில்
ஏந்தியவுடன்
முதலில் நீ
சுட்டு வீழ்த்தியது - உன்
சுயநலத்தை தானே
பிறகு எப்படி
பணப்பெட்டிகளின் மீது
பாசம் வைப்பாய்...
நாங்கள் இன்று வரை
உன்னை உணரவில்லை
திரைப்படத்தையும்
நடிகைகளின்
அங்கங்களைப் பற்றிய
ஆராய்ச்சியில் இருந்தே
இன்னும் மீளவில்லை...
பிறகு எப்படி உன்
புனித போரினை
புரிந்துக்கொள்ள முடியும்?
எத்தனையோ கவிதைகள்
இயற்றப்பட்டிருக்கலாம்
ஆனால்
உண்மை வீரனாகிய
உன்னை பற்றிய கவிதையை
உருவாக்கிய பின்புதான்
என் பேனா முனை
பெருமை படுகிறது...
உன் போராட்டத்தின்
முடிவு முற்று பெறவில்லை
ஆயினும்
உலக சரித்திரத்தில்
உனக்காக
சில பக்கங்கள்
ஒதுக்கப்ப்ட்டுவிட்டன...

1 comment:

தோழர்சிவா said...

Veera Kavithai unarvu poorvamaka irukkiradu.innum neengal niraiya puratchi theeyai yelutha vaalthukkal