Wednesday, March 30, 2011

63 தொகுதிகளில் சீறும் சீமான்! - ஜூனியர் விகடன்

''காங்கிரஸ் வேட்பாளரை அவங்க கட்சிக்காரங்களே தோற்கடிப்பாங்க!''
காங்கிரஸுக்கு இது போதாத காலம். ஏறக்குறைய, அந்தக் கட்சி

போட்டியிடும் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து, அதிருப்தி வேட்பாளர்கள் கோதாவில் குதித்துள்ளனர். இன்னொரு பக்கம், சீமானின் 'நாம் தமிழர்’ கட்சி, 'காங்கிரஸை வேரறுப்போம்!’ என்ற கோஷத்துடன் களம் இறங்கி இருப்பதால், வெலவெலத்து நிற்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள்.
ஈழ மக்களின் நலனுக்கு எதிராக மத்தியில் ஆளும் காங்கிரஸ் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டும் தமிழ் அமைப்புகள், காங்கிரஸ் போட்டியிடும் 63 தொகுதி​களிலும் எதிர்ப் பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தன. அதையடுத்து, 'நாம் தமிழர்’ கட்சி, பல்வேறு தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துக் கச்சை கட்டி நிற்கிறது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பிரசாரத்தைத் தொடங்கிய சீமானின் பேச்சில் ரௌத்ரம் தாண்டவமாடியது!

''இந்தத் தேர்தல், தமிழ்த் தேசிய இனத்தின் துரோகியான காங்கிரஸுக்கும் 'நாம் தமிழர்’ இயக்கத்துக்கும் இடையே நடக்கும் அரசியல் யுத்தம். 'இதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும்’ என்று உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் அனைத்துத் தொப்புள்கொடி உறவுகளும் வாழ்த்துகின்றன. அதனால்தான், 'வெள்ளையனே வெளியேறு’ என்று வீர முழக்கமிட்டு, இந்தியச் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுத்த நெல்லை மண்ணில் இருந்து... பூலித்தேவன் மண்ணில் இருந்து காங்கிரஸை வேரறுக்கும் இந்த அரசியல் யுத்தத்தைத் தொடங்கி இருக்கிறோம். திசையன்விளையில் தொடங்கப்பட்டு இருக்கும் இந்தத் 'தொடக்கம்’... காங்கிரஸுக்கு 'அடக்கம்’!

சொந்தக் கட்சிக்காரர்களே காங்கிரஸை வீழ்த்தத் துடிக்கிறார்கள். ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்​கோவன், ப.சிதம்பரம், அவர் செல்ல மகன் கார்த்தி என்று பல கோஷ்டிகளாகப் பிரிந்து, ஒருவருக்கு ஒருவர் குழி பறிக்கிறார்கள். அதனால், இந்த முறை எங்களுக்கு அதிக வேலை இல்லை. நாங்கள் சுற்றுலா செல்வதுபோல சும்மா அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று வந்தாலே போதும்... மீதியை அவர்களாகவே முடித்துக்கொள்வார்கள். காங்கிர​ஸின் தோல்விதான் 'நாம் தமிழர்’ இயக்கத்தின் வெற்றி!

இப்போது இருக்கும் காங்கிரஸுக்கும், காமராஜருக்கும் ஒரு சொட்டுகூட தொடர்பு இல்லை. காமராஜர் இறந்ததுமே காங்கிரஸும் செத்துவிட்டது. மக்களுக்காக காங்கிரஸ் கட்சி என்றைக்காவது வீதிக்கு வந்து போராடி இருக்கிறதா? இப்போது இருக்கும் காங்கிரஸ், பிழைப்புவாதிகளின் கூடாரம்!

தமிழக மீனவர்கள் 539 பேர் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டார்களே... அதனைக் கண்டித்து அந்தக் கட்சி ஓர் அறிக்கைவிட்டதா? பி.ஜே.பி-யின் சுஷ்மா சுவராஜ்கூட ஓடி வந்து பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் சொன்னாரே! காங்கிரஸ் சார்பில் சோனியா, ராகுல்கூட வர வேண்டாம்... ஆனால், இங்கே இருக்கும் எந்த காங்கிரஸ் தலைவராவது அந்த மீனவக் குடும்பத்தினரை சந்தித்து எட்டணா தந்திருக்கிறீர்களா?!

காவிரியில் எங்களுக்கு உள்ள உரிமைக்காக வாதாடி இருக்கிறீர்களா? கேரள அரசாங்கம் முல்லை பெரியாறில் எங்களுக்கு உரிய பங்கைத் தராமல் இருப்பதைக் கேள்வி கேட்டு இருக்கிறீர்களா? எங்களது உரிமையைக் கேட்டு வாங்கித் தர முன்வராத உங்களுக்கு, எங்களுடைய ஓட்டு மட்டும் வேண்டுமா? என் வாழ்க்கை முக்கியம் இல்லை... ஆனால், என் வாக்கு மட்டும் உங்களுக்குத் தேவை என்பது என்ன நியாயம்? அட்டைப் பூச்சியாக எங்களுடைய ரத்தத்தையும் வேர்வையையும் உறிஞ்சி வாழும் காங்கிரஸை விரட்டி அடிப்பதுதான் நமது முதல் வேலை.

தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துத் தமிழர்களை மானம் இல்லாத கேவலமான சமூகமாக்கிவிட்டார்கள்! நாட்டில் எங்கும் ஊழல்... விலைவாசி விண்ணை முட்டுகிறது. மின்சாரமே இல்லை... ஆனால் கிரைண்டர், மிக்ஸி, டி.வி., லேப்டாப் தருகிறார்களாம்! ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டது. ஈழ மண்ணில் நடந்த யுத்தத்துக்குப் பழிக்குப் பழி தீர்க்கும் அரிய வாய்ப்பு, உன்னத சந்தர்ப்பம் இது!

நாம் பட்ட வலிக்குப் பழிதீர்க்கும் வகையில், 'கை’ சின்னத்தைப் பார்த்தால் காறித் துப்பித் தோற்கடியுங்கள். தமிழர் ரத்தத்தில் மூழ்கியுள்ள அந்தக் கட்சியைக் கொன்று ஒழிக்காமல், தமிழர் விடுதலையை வென்று எடுக்க முடியாது!''

- ஆண்டனிராஜ்

Monday, March 21, 2011

வைகோ vs போலி கம்யூனிஸ்டுகள் – ஒன்னு பெருசா இல்ல ரெண்டு பெருசா?

தாயே உன்னடி சரணம்! அம்மா தாயே உன் பாதம் சரணம் !!

“சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை” என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க.

இந்த அறிக்கை அம்மாவைக் குத்தியதோ இல்லையோ, மார்க்சிஸ்டுகளை குறிபார்த்து அல்லையில் குத்திவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் எட்டுக்கும் பத்துக்கும் திமுக அதிமுகவிடம் காவடி எடுக்கும் சூழ்நிலையால் மனம் வெறுத்துப் போன கட்சித் தோழர்களில் சிலர் , “நாமும் வைகோ பண்ணின மாதிரி பண்ணிடலாம்” என்று சொல்லத் தொடங்கி விட்டால் தங்கள் நிலை என்ன என்பது தா.பா, மற்றும் ராமகிருஷ்ணனின் கவலையாக இருக்கக் கூடும்.

“அப்ப எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லைங்கிறீங்களா? நாங்கள்லாம் மானம் கெட்டு பதவிக்காக அலைகிறோம் என்கிறீர்களா?” என்று வைகோ வை கேட்க வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்டுகளின் விருப்பம். ஆனால் அப்படிக் கேட்பதில் பல ஆபத்துகள் இருக்கின்றன என்பதால், “வைகோ தனது முடிவை மறுபரீசிலனை செய்து, அதிமுக அணியில் பங்கேற்க வேண்டும்” என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு வேண்டுகோளை அன்பு சகோதரி விடவில்லை என்பதும், அன்பு காம்ரேடுகள்தான் விட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சுயமரியாதை இழந்து” என்ற சொல்லுக்கு பொது வரையறையை எப்படி நாம் சொல்லமுடியும்? அது பற்றி நமது வரையறையும் தேர்தலில் பங்கேற்கின்ற கட்சிகளின் வரையறையும் வேறு வேறாக இருக்கலாமல்லவா? கூட்டணிக் கட்சிகளிலேயே சுயமரியாதை பற்றிய வைகோவின் வரையறையும், தா.பா வின் வரையறையும் வேறுபடலாமே!

ஏழு, எட்டு என்று தொகுதி எண்ணிக்கையைக் குறைத்து வைகோவை ஜெ அவமதித்தது என்னவோ உண்மைதான். ஆயினும், “அம்மா எப்ப கூப்டுவாரோ?” என்று போயஸ் தோட்டத்து வாசலில் வைகோ காத்திருக்கவில்லை என்பதும் உண்மை. அம்மா என்னிக்கு கூப்புடுவார்னே தெரியாமல், தெனம் காலையில சாப்பாடைக் கட்டிகினு வந்து தா.பா தலைமையில் தோட்டத்து வாயிலில் காத்திருந்தார்கள் வலது இடது தலைவர்கள்.

கோர்ட்டுலயாவது இன்னிக்கு வாய்தான்னு போட்டுட்டா, சாயங்காலத்துக்குள்ள எப்பவாவது கூப்ட்டுறுவாய்ங்க. ஆனா என்னிக்கு வாய்தான்னே தெரியாம நாள் கணக்கில காத்திருக்கிற கொடுமை இருக்கே அது பெருங்கொடுமை. கோர்ட் வாசல்ல வாய்தாவுக்கு ஒக்காந்திருக்கிறவன் கிட்ட, “சார் உங்கள எப்ப கூப்புடுவாங்க?”ன்னு கேட்டு எந்த மீடியாக்காரனும் வந்து டென்சனக் கிளப்ப மாட்டான். இங்கயோ அந்த நிம்மதியும் கிடையாது. டென்சனும் ஆக முடியாது. அம்மா கூப்புடுவாங்களா மாட்டாங்களான்னு தெளிவா தெரியாதபோதே, “இரட்டை இலையின் வெற்றிக்குப் பாடுபடுவோம்”னு டிவிக்கு பேட்டி கொடுக்கணும். கொடுத்தாங்க.

இதெல்லாம் சுயமரியாதைக் கேடுன்னு நாம் நினைக்கலாம். அம்மாவைப் பொருத்தவரை இதெல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கு வைக்கப்படும் என்ட்ரன்ஸ் எக்ஸாம். இந்தக் கட்டம் வரையில் நடந்த விசயங்கள் எதுவும் தமது சுயமரியாதையை சிதைத்து விட்டதாக கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கருதவில்லை. தங்கள் சுயமரியாதை பத்திரமாக இருப்பதாகவும், வைகோவின் சுயமரியாதைக்குத்தான் அம்மா சோதனை வைத்திருப்பதாகவும் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாக பல்வேறு விதமான என்ட்ரன்ஸ் எக்ஸாம்களிலும் பாஸ் பண்ணி, ஒவ்வொரு கூட்டணிக் கட்சியிலயும் எத்தனை ஆழ்வார்களுக்கு சீட் என்றும் முடிவாகி போட்டோவுக்கும் போஸ் கொடுத்தாகிவிட்டது. எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதி என்று உடன்பாடு இறுதியாக வேண்டும். அப்புறம் அந்த தொகுதியில யாரை நிப்பாட்றதுன்னு அந்தந்த கட்சி முடிவு செய்யணும். இதுதான் இந்திய ஜனநாயகத்தின் கூட்டணி அரசியலில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் மரபு, தருமம். மரபுகள் தருமங்களை உடைத்துக் கடாசுபவரல்லவோ புரட்சித்தலைவி! அது மட்டுமல்ல, நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து கிடந்தாலும், அப்படிக் காலில் விழுந்து கிடப்பவன் மீது காறித்துப்பி, அதற்கு அவனுடைய எதிர்வினை என்ன என்று தெரிந்து கொள்வதில் அம்மாவுக்கு எப்பவுமே ஒரு பேரார்வம்.

கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வராத நிலையில், கூட்டணிக் கட்சிகள் கேட்டிருந்த தொகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கி அடாவடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது போயஸ் தோட்டம். இதனைக் கண்டிக்கின்ற சொரணையோ, ஜெயலலிதாவிடம் விளக்கம் கேட்கும் தைரியமோ கூட்டணிக் கட்சிகள் யாருக்கும் இல்லை. தா.பா போன்றோருக்குக் கூடவா சுயமரியாதை இல்லை என்று அவசரப்பட்டு யாரும் எண்ணிவிடக் கூடாது.

கோயிலுக்குப் போகும் பக்தர்கள் வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு செல்கிறார்கள். கேரளத்தில் சட்டையையே கழற்றுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லை என்று சொல்லிவிட முடியுமா? போயஸ் ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன், காலணிகளுடன் வெட்கம், மானம், சூடு, சொரணை, சுயமரியாதை போன்ற அனைத்தையும் கேட்டிலேயே கழட்டிக் கொடுத்து டோக்கன் வாங்கிக் கொண்டு நுழைவதுதான் கூட்டணிக் கட்சிகளின் மரபு. “இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு கூட்டணி தருமத்தையும் மரபையும் அம்மா மீறிவிட்டார் என்புது உண்மையே என்றாலும், அதற்காக நாமும் நம்முடைய மரபையும் சம்பிரதாயத்தையும் மீறி திடீரென்று இருமுடியை இறக்கிவிட முடியாது” என்று “குருசாமி” தா.பா கூட்டணிக் கட்சிகளுக்கு அறிவுருத்தியிருப்பார்.

ஏன் துப்பினார்கள், என்ன மாதிரி சூழ்நிலையில் காறித்துப்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்றெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கு முன், அவசரப்பட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அறிக்கை விடுவதோ, உறவை முறித்துக் கொள்வதோ, மூன்றாவது அணி தொடங்குவதோ அறிவுக்கு உகந்ததல்ல என்பதை மார்க்சிஸ்டுகள் மற்றவர்களுக்கு அறிவுருத்தியிருப்பார்கள்.

இதெல்லாம் தெரியாமல், “மூன்றாவது அணி என்று ஒன்று தொடங்கினால், அதற்கு வைகோ தான் தலைவர்” என்று முன்கூட்டியே துண்டு போட்டு ரிசர்வ் செய்தார் நாஞ்சில் சம்பத். மூன்றாவது அணியின் தலைமைப் பதவிக்கு தா.பா வோ, ராமகிருஷ்ணனோ, கேப்டனோ போட்டிக்கு வரவில்லை. “வடக்கிருந்து சாவதுதான் முடிவு என்ற நிலைமை ஏற்பட்டு விட்டால், அதற்கு வைகோ தலைமை தாங்குவதே பொருத்தமாக இருக்கும்” என்று அவர்கள் கருதியிருக்கக்கூடும்.

“இன்று 21 தொகுதிக்கு குறைவான எதையும் ஒப்புக் கொள்ள முடியாது” என்று கூறியிருக்கும் வைகோவிடம், தேர்தல் புறக்கணிப்பை கைவிடுமாறும் அதிமுக அணியில் பங்கேற்குமாறும் மார்க்சிஸ்டுகள் கூறுகிறார்களே, இதன் பொருளை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? “12 தொகுதியை வாங்கிக் கொண்டு பொழைக்கிற வழியப் பாருய்யா” என்பதுதான் இதன் பொருள்.

“அம்மாவோடு கூட்டணி வைத்து பத்து இடத்தில் நின்று 2 இடத்திலாவது ஜெயிப்பதா, அல்லது மூன்றாவது அணி அமைத்து முப்பது இடத்தில் நின்று முப்பது இடத்திலும் டெபாசிட் இழப்பதா? எது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது?” என்பதுதான் அன்று வலது இடதுகளின் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதமாக இருந்திருக்கும்.

ஒருவேளை வலதுக்கு 3, இடதுக்கு 4 – இதுதான் முடிவு. என்று அம்மா சொல்லியிருந்தால்? தா.பா வும் மார்க்சிஸ்டுகளும் என்ன செய்திருப்பார்கள்? பதவியை விட சுயமரியாதையே பெரியது என்று கூட்டணியை விட்டு வெளியேறியிருப்பார்களா? ஒருக்காலும் இல்லை. சுயமரியாதை இல்லாமல் கட்சி உயிர்வாழ முடியும், ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமல், கட்சி உயிர் வாழ முடியுமா? உயிரே இல்லாத பிணத்துக்கு சுயமரியாதை இருக்க முடியுமா? ஆகவே, வலதுக்கு ஒண்ணு, இடதுக்கு ஒண்ணரை என்று அம்மா தொகுதி ஒதுக்கியிருந்தாலும் ஒப்புக் கொண்டிருப்பார்கள். பூச்சியத்தை விட ஒண்ணு பெரியது என்ற உண்மையை தா.பா தனது தோழர்களுக்கு புரியவைத்திருப்பார்.

“திமுகவின் குடும்ப ஆட்சியை அகற்றுவது, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை முறியடிப்பது” என்ற கொள்கைகளுக்காக கூட்டணி அமைத்திருக்கும் கம்யூனிஸ்டுகள், அந்தக் கொள்கை வெற்றி பெறுவதற்காக சொந்த தொகுதிகளையும், சுயமரியாதையையும் தியாகம் செய்திருக்கிறார்கள் என்று விளக்கமும் சொல்வார்.

பதவிக்காக சுயமரியாதையை தியாகம் செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார் வைகோ. இரண்டையும் தியாகம் செய்யலாம் என்பது வலது இடதுகளின் நிலை. யார் பெரிய தியாகி வைகோ வா, தாபா வா? எது பெரிது – ஒண்ணா ரெண்டா?
http://www.vinavu.com/2011/03/21/vaiko-vs-pseudo-communists/

Friday, March 11, 2011

விழித்தெழு புறப்பட...மறுபடியும் தேர்தல் சந்தை
கூடிவிட்டது
ஆட்டுமந்தைகளாய்
மக்களும் ஓட்டுப்போட
புறப்பட்டுவிட்டார்கள்...
அன்று கைகுலுக்கி கொண்டவர்கள்
இன்றைய எதிரிகளாக நிற்கிறார்கள்...
அன்றைய எதிரிகள்
இன்று கைக்குலுகி
நலம் விசாரிக்கிறார்கள்...
சென்ற முறை
சட்டசபைக்கு சென்று
கொள்ளை அடித்தவர்கள்
மீண்டும் வாய்ப்புத்தேடி
விண்ணப்பிக்கிறார்கள்...
பட்டி தொட்டியெல்லாம்
படைபடையாய்
வாகனங்கள் அணிவகுப்பு...
ஓட்டுடன் உன்னையும்
விலைபேசும்
புதிய அரசியல்வாதிகள்...
ஓட்டுப்போடும் நாளும் கூட
வேலைக்கு சென்றால்தான்
அன்றைய வயிற்றை நிரப்ப
ஆயத்தமாகும் ஏழைகள்...
வானொலியும், தொலைக்காட்சியும்
வெற்றிப்பெற்றவர்களை தொடர்ந்து
அறிவித்துக்கொண்டிருக்கிறது...
இரு கைக்கூப்பி
கும்பிடு போட்டவர்கள்
கோட்டையை நோக்கி
வேட்டையாட சென்றுவிட்டனர்...
போதைக்கு அடிமையாகி
புதல்வன் இன்னும் உறக்கத்தில்...
நாட்டையும் நம்மையும்
அடிமையாக்குவதற்கு முன்
விழித்தெழு மகனே
வேறு கிரகத்திற்கு சென்றுவிடுவோம்...

Thursday, March 10, 2011

வேட்டியோடு போன திமுக அமைச்சர்களது கோவணத்தையும் சோனியா உருவி அனுப்பியிருக்கிறார்!

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். (குறள் 969)

இந்தக் குறளுக்கு கலைஞர் கருணாநிதி எழுதிய உரை "உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்."

தனக்குச் சிறப்பாகக் கருதும் மயிர்த்தொகுதியில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமாவை யொத்த மானியர்; தமக்குச் சிறப்பாகக் கருதும் மானம் என்னும் உயிர்நாடிப் பண்பு கெடும் நிலைவரின் அப்பண்பைக் காத்தற் பொருட்டு வேறொன்றுங் கருதாது உடனே தம் உயிரை விட்டு விடுவர். இது பரிமேலழகர் உரை.

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கோவலனைக் கொல்வித்ததால் தன் செங்கோல் கோடியபோது தன் உயிர் துறந்து அதை நேராக்கியது போல்வதாம்.

நியாயமில்லாத கோரிக்கைகளைக் காங்கிரஸ் முன் வைப்பதால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகுவதாகவும் இனி எந்தக் காரணத்துக்காகவும் இணைந்து செயல்படுவது சாத்தியமில்லை எனவும் தங்களது ஆறு அமைச்சர்களையும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்ளப் போவதாகவும் நான்கு நாள்களுக்கு முன் அறிக்கை விட்ட திமுக தலைவர் இப்போது மானத்தை காற்றில் விட்டு காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளையும் சேதாரமின்றிக் கொடுத்துள்ளார்.

திங்கட்கிழமை காலை திமுக அமைச்சர்கள் ஆறு பேரும் தங்கள் பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்துவிட்டு தமிழ்நாடு திரும்புவார்கள் என்றுதான் பலரும் எண்ணி இருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு.

பதவி விலகல் மிரட்டலைக் கண்டு விட்டு காங்கிரஸ் படி இறங்கி 60 இடங்கள் போதும் என்று சொல்லும் என்று பார்த்தால் அப்படியொன்றும் நடக்கவில்லை. திமுக தான் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் மிரட்டலுக்குப் பயந்து கேட்ட 63 தொகுதிகளையும் கொடுத்துள்ளது.

சோனியா வேட்டியோடு போன திமுக அமைச்சர்களது கோவணத்தையும் உருவி அனுப்பியிருக்கிறார்! அவரோடான சந்திப்பு திமுகவுக்கு தலைக் குனிவை ஏற்படுத்துவதாகவே அமைந்தது. சோனியா கேட்ட பல கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் தயாநிதி மாறனும் மு.க. அழகிரியும் ஆடிப் போனதாகக் கூறப்படுகிறது.

இதைவிட மானக்கேடு வேறு எதுவும் இருக்க முடியாது! திருக்குறளுக்கு உரை எழுதுவது வேறு திருக்குறள் சொல்வதைக் கடைப்பிடிப்பது என்பது வேறு என்பதை கருணாநிதி எண்பித்துக் காட்டியுள்ளார்.

முதல்வர் கருணாநிதிக்கு மானம் இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது திமுக அமைச்சர்களைப் பதவி விலகச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மனிதசங்கிலிப் போராட்டம், தந்தி, உண்ணா நோன்பு என பல நாடகங்களை முதல்வர் கருணாநிதி மேடையேற்றினார்.

அன்று பதவி தோளில் போடும் துண்டு கொள்கை இடுப்பில் கட்டும் வேட்டி என்றெல்லாம் என்னமாய் சொற்சிலம்பம் ஆடினார்கள்? அவையெல்லாம் கனவாய் பழந்கதையாய் போய்விட்டது! இன்று கொள்கை தோளில் போடும் துண்டு பதவி இடுப்பில் கட்டும் வேட்டி என்று தலைகீழாக மாறிவிட்டது!

இந்தக் மானக்கேடு கருணாநிதிக்கு மட்டுமல்ல. முழுத் தமிழினத்துக்குமே தலைக்குனிவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இதனை எப்படிக் கொண்டாடுவார்கள் என்பதை மனக் கண்ணால் பார்க்க முடிகிறது. அதே சமயம் திமுக தொண்டர்கள்தான் பாபப் பிறப்புக்கள். இனிப்புக் கொடுத்து கொண்டாடிய கொண்டாட்டம் சோகத்தில் முடிந்துள்ளது.

விலகல் கடிதத்தை உடனடியாகத் தொலைப் படி மூலம் அனுப்பாமல் மூன்று நாள் கழித்து கொடுப்பது என்று திமுக முடிவெடுத்த போதே விலகல் என்பது வெறும் வெருட்டு புலுடா என்பது தெரிந்து போயிற்று. இப்படியா வெருட்டு முந்திய காலங்களில் பலித்திருக்கிறது. ஆனால் இம்முறை பிழைத்துவிட்டது.

திராவிட கழகத் தலைவர் மானமிகு வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலர் சுப வீரபாண்டியன் ஆகியோர்தான் பாவப்பட்ட பிறப்புக்கள். அவர்கள் விட்ட அறிக்கையில் காணப்பட்ட மை காயுமுன்னரே முதல்வர் கருணாநிதி அவர்கள் முகத்தில் கரி பூசிவிட்டார்.

கி.வீரமணி விட்ட அறிக்கை: குட்டக் குட்ட தி.மு.க., குனியக்கூடாது. காங்., இல்லாமல் போட்டியிட தி.மு.க., தயாராக வேண்டும். தமிழ் மானம், தன்மானம் இவற்றை காப்பதுதான் தி.மு.க.,வின் அடிப்படை லட்சியம். பதவிகளை விட கொள்கைகளும் அவற்றைபரப்பும் இயக்கமும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுநடந்தால் அனைவருக்கும்நல்லது. கட்சித் தோழர்கள், இன உணர்வாளர்கள், லட்சிய வீரர்கள் மகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் வகையில் தி.மு.க.,வின் தேர்தல் பணித் திட்டம் அமைய வேண்டும்.

திருமாவளவன் நேர்காணல்: தி.மு.க.,வின் உயர்நிலை செயல் திட்டக் குழுவின் முடிவு, கூட்டணியை எந்த வகையிலும் வலுவிழக்கச் செய்யவில்லை. இந்த முடிவால் கூட்டணி பலவீனமாகாது. தி.மு.க., அரசு தனிப் பெரும்பான்மையோடும், வலுவோடும், தமிழகத்தில் அமையும். தி.மு.க.,வின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கிறது.

பொதுச் செயலர் சுப.வீரபாண்டியன் அறிக்கை: மத்திய அரசின் அமைச்சரவையில் இருந்து விலகுவது என்றும், பிரச்னைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தருவதும் என்றும், தி.மு.க.,வின் உயர் மட்ட செயற்குழு முடிவை இப்பேரவை வரவேற்கிறது. தான் ஒரு மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்பதை நம்முடைய முதல்வர் கருணாநிதியும், தி.முக சுயமரியாதை இயக்கத்தின் தொடர்ச்சியே என்பதையும் கட்சியின் உயர் மட்டக் குழுவினர் மறுபடியும் மெய்ப்பித்துள்ளனர்.

சும்மா வாயை வைத்துக் கொண்டிருக்காமல் மானம், தன்மானம், முதல்வர் மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்றெல்லாம் தோள்தட்டி ஆர்ப்பரித்தவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாக முடங்கிப் போனார்கள்.

இந்த மூவரது முகத்தை மனக்கண்ணால்ப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துத் தேர்தல் பரப்புரை செய்யப் போகிறார்கள்?

காங்கிரஸ் - திமுக ஊடலுக்கு 63 தொகுதிகள் மட்டும் காரணமா அல்லது மேலும் ஏதாவது காரணங்கள் உண்டா?

"கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுவதற்குத் தொகுதிப் பிரச்னைதான் காரணமா?'' என்று செய்தியாளர்கள் கருணாநிதியிடம் கேட்டதற்க, "அதுவும் ஒரு காரணம்' என்று அவர் பதிலளித்தது முதலே காங்கிரஸ் - திமுக உறவில் விரிசல் விழுந்ததற்கான உண்மைக் காரணம், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் அல்ல என்பதும், முதல்வரின் குடும்பம் சம்பந்தப்பட்ட விசாரணைதான் என்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகவே பேசப்பட்டது.

ஏனைய காரணங்கள் என்ன? ஜி2 அலைக்கற்றை ஊழல் ஒன்று. இரண்டு கலைஞர் தொலைக்காட்சிக்க வந்த 216 கோடி பணம். இந்த இரண்டையும் காட்டித்தான் சோனியாவும் பிரணாப் முகர்ஜியும் அழகிரியையும் தயாநிதி மாறனையும் மிரட்டி இருக்க வேண்டும்.

தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க திமுக அல்லது அதிமுக 118 இடங்கள் வென்றாக வேண்டும். 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் திமுக 118 தொகுதிகளில் வெற்றி பெறுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. ஒருவேளை, ஏதோ காரணங்களால் திமுக அணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமேயானால் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்க முடியும்.

பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் என்பதற்கு திமுக அருமையான எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தத் தேர்தல் உடன்பாட்டின் மூலம் தமிழ்நாட்டுத் தமிழர்களது மானம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழினத்தின் மானம் காற்றில் பறந்துள்ளது.

வருகிற தோர்தலில் இந்த சந்தர்ப்பவாத திமுக - காங்கிரஸ் கூட்டணியை தேர்தலில் தோற்கடித்தால் மட்டுமே காற்றில் பறந்த மானத்தில் கொஞ்சமாவது திரும்பி வரும்.

நக்கீரன்

Tuesday, March 8, 2011

அம்மணமாக நிற்கும் கருணாநிதி

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி மீது எனக்கு மரியாதை இருந்தது. திராவிட தமிழ் தேசிய சிந்தனை உடையவர்களுக்கு கருணாநிதி மீது விமர்சனம் இருந்தாலும் அவரை நிராகரிக்க

முடிந்ததில்லை. காரணம் திராவிட சித்தாந்தம் கருணாநிதியின் நிழலில் தான் ஓரளவுக்கு நிலைத்து நிற்க முடியும் என நம்பினேன். அப்படி தான் பலரும் நம்பினார்கள். அது போல ஈழத் தமிழர்களுக்கு “முழுமையான” ஆதரவாக இல்லாவிடினும் எதிரியாக கருணாநிதி மாறி விட மாட்டார் என்றும் நம்பினேன்.

அதற்கு விழுந்தது 2009ல் மிகப் பெரிய வேட்டு. ஈழத்தில் தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுது ஒரு கையில் நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் கடிதம் எழுதிக் கொண்டு,

நாடகங்களை நடத்தி தன் பதவியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார் கருணாநிதி. அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் ஏமாற்றத்திலும் தள்ளப்பட்டோம். இதன் எதிரொலியாகவே கருணாநிதியை பழிவாங்க இரண்டாம் எதிரியான ஜெயலலிதாவை ஆதரிக்க துணிந்தோம். ஜெயலலிதாவை ஆதிரிக்க நேர்ந்தது மிகவும் அவலமான ஒரு சூழ்நிலையே. தமிழினத்தலைவர் எனக் கொண்டாடப்பட்டவர் தமிழின துரோகியானார். உடன்பிறப்புகள் ஈழத்தமிழர்களுக்கு எதிரான பரப்புரைகளை செய்தனர். தலைவர் பிரபாகரனை பார்ப்பனர்களுக்கு இணையாக உடன்பிறப்புகளும் அவதூறு செய்தனர். இப்படி உடன்பிறப்புகளும், கருணாநிதியும் தங்களுடைய முக்கிய அடையாளமான ”தமிழர் சார்பு அடையாளத்தை” இழந்து அரை ஆடையுடன் காட்சியளித்தனர்.

அடுத்த வந்த மாதங்கள் கருணாநிதியை இன்னும் அதிகமாக அம்பலப்படுத்தியது. தமிழக மீனவர் பிரச்சனையில் பேராசைக்கார மீனவர்கள் எல்லை தாண்டி போவதாக கருணாநிதி கூறினார். ஈழத்தமிழனை தான் காப்பாற்ற முடியவில்லை. வேறு நாடு என்றனர். உள்ளூர் மீனவனுக்கும் அதே கதி தான். கடிதத்தை எழுதிக் கொண்டே நாடகம் நடத்தினார். இதற்கு அடுத்த வந்த 2ஜியில் கருணாநிதியையும், திமுகவையும் ”கொள்ளைக்காரனாக” வட இந்திய ஊடகங்களும், காங்கிரஸ் கட்சியும் வெளிப்படுத்தின. ராஜா கைது செய்யப்பட்டார். அண்ணா அறிவாலயத்தினுள்

சிபிஐ நுழைந்தது. இது கருணாநிதியின் சுயமரியாதையை மட்டும் அல்ல. ஒட்டுமொத்த திமுகவின் சுயமரியாதையையும், உடன்பிறப்புகளின் சுயமரியாதையையும் சோதித்து பார்த்தது. அமைதியாக இருந்தார் கருணாநிதி. வேட்டி உருவப்பட்டாலும் எப்படி தான் ஒரு மனிதன் அமைதியாக இருக்க முடியும் என ஆச்சரியம் மட்டுமே பட்டோம். கோபப்படவில்லை.

சீமான் போயஸ் தோட்டத்தில் நுழைந்து ஜெயலலிதா காலடியில் விழுவார் என உடன்பிறப்புகள் கொக்கரித்த சமயத்தில் கருணாநிதி டெல்லிக்கு சென்று சோனியாவின் காலில் விழுந்து கூட்டணிக்கு

ஒப்புதல் வாங்கி வந்தார். திமுக தலைமையிலான கூட்டணியில் பாமக சேரலாமா வேண்டாமா என்று உத்தரவிடுவது கூட சோனியா தான். அன்புமணி சோனியாவின் காலில் விழுந்து ஒப்புதல் வாங்கியவுடன் தான் கூட்டணியில் சேர முடியும் என்ற நிலைமை. கருணாநிதி காலில் விழத் தயாராக இருந்த பாமகவை டெல்லி எஜமானியின் ஒப்புதல் வாங்க சொன்னார் கருணாநிதி. கருணாநிதி கூட்டணியின் தலைவரா, சோனியா தலைவரா என்று நாம் கேள்வி எழுப்பினோம். தீவிரமாக வாதாடும் உடன்பிறப்புகள் கூட இப்பொழுது அமைதியாக இருந்தனர்.

திராவிட சிந்தனை உள்ள அனைவருக்கும் திமுகவும், திகவும் தான் தாய் வீடு. எனக்கும் அப்படி தான். திமுக காங்கிரசால் அவமதிக்கப்பட்ட பொழுது நானும் தவித்தேன். இது கருணாநிதிக்கான தவிப்பு அல்ல. அண்ணா உருவாக்கிய பெரியாரின் சுயமரியாதை பாதையில் வந்த இந்த இயக்கம் அவமதிக்கப்படுகிறதே என்ற வேதனையே இந்த தவிப்பிற்கு காரணம். ஈழப் பிரச்சனையில் திமுக மீதும், கருணாநிதி மீதும் கடும் கோபத்தில் இருந்த பொழுதும் இந்த தவிப்பு மிக இயல்பாக என்னுள் எழுந்தது (Blood is thicker than Water). எல்லாவற்றையும் இழந்தாலும் ஒரு மனிதன் ஒரு போதும் தன் சுயமரியாதையை இழக்க மாட்டான். அதுவும் சுயமரியாதை இயக்கத்தில் வந்த ஒருவனால் தன் சுயமரியாதையை இழக்க முடியுமா ? தன்னுடைய சுயமரியாதையை நிச்சயம் திமுக காப்பாற்றிக் கொள்ளும் என நம்பினோம்.

ஆனால்...

இன்றைக்கு கருணாநிதியிடம் மிஞ்சி இருந்த சுயமரியாதை என்ற ஒரே கோமணமும் அவிழ்க்கப்பட்டு அம்மணமாக நிற்கிறார் கருணாநிதி. இப்பொழுது கருணாநிதியை பார்த்தால் கோபம் வரவில்லை. பரிதாபமாகவே உள்ளது. இதற்கு மேல் கருணாநிதியை விமர்சிப்பது கூட நமக்கு தான் அசிங்கம்.

நன்றி-தமிழ்சசி

மலையாளி -மார்வாடிகளின் ஆதிக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியசரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தமிழ்நாட்டில் மலையாளிகள் , மார்வாடிகளின் ஆதிக்கத்தால் தமிழர்களின் தொழில், வணிகம், வேலை பறிபோகிறது.

இதனால் மலையாளியான ஆலுக்காஸ் ஜூவல்லரி நிறுவனத்தை கண்டித்து , தஞ்சையில் உள்ள ஆலுக்காஸ் ஜூவல்லரி முன்பு நாளை மாவட்ட செயலாளர் பழ.ராசேந்திரன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

தமிழக தங்க நகைத்தொழிலை மார்வாடிகளும்,மலையாளிகளும், வங்காளிகளும் கைப்பற்றிக்கொண்டு நம் பொற்கொல்லர்களை வீதிக்கு விரட்டி விட்டார்கள்.

வறுமை தாங்காமல் நம் பொற்கொல்லர்கள் தற்கொலை செய்துகொண்டார்கள். அதைத்தக்கண்டித்துதான் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Saturday, March 5, 2011

கத்தியின்றி ரத்தமின்றி வரப்போகும் யுத்தமான 2011 சட்டமன்ற தேர்தல் - ஒரு சுதந்திரப் போர் வாசகர்களே...

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு உண்டு. அந்த ஜனநாயகத்துக்கு வலிமை சேர்க்க வேண்டிய முக்கியத் தூண்களாக இருப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை, பத்திரிகை ஆகியவைகளாகும். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை, செய்திகளை சொல்வதுடன் நின்றுவிடாமல் ஜனநாயகத்தின் மற்றொரு தூணான சட்டமன்றத்திற்கு நல்லவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்ல ஆட்சியாளர்கள் வரவேண்டும் என்பதற்காக நல்லவர் யாரென்பதை மக்களுக்கு தெரியப்படுத்த முடிவு செய்துள்ளது சூரியகதிர்.

இன்று நாம் சுவாசிக்கின்ற இந்த சுதந்திர காற்றானது இந்த மண்ணின் மீது பற்றுக்கொண்ட நம் முன்னோர்களின் உயிர் இழப்பினாலும் தியாகத்தினாலும் கிடைக்கப்பெற்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆரோக்கியமான சூழல் கொண்ட இந்தியாவை, தமிழகத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.

சாதாரண மக்களின் ஓட்டுத்தான் அரசை தீர்மானிக்கின்றது. அந்த அரசு செலவிடுகின்ற ஒவ்வொரு ரூபாயும் சாதாரண மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் வருகின்றது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அதிகாரம் கைக்கு வந்தவுடன் மக்கள் நலனை மறந்துவிட்டு அவர்களை கடும் சிரமத்திற்குள்ளாகிவிடும் அவலநிலையும் உருவாகின்றது. ஆகையால் வரவிருக்கின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் கடந்த கால ஆட்சியாளர்களின் நிர்வாகத்திறமை மக்கள் நலப்பணி போன்றவைகளை சிறப்பாக யார் செய்தார்கள் என்பதன் அடிப்படையில் நாட்டு நலன் கருதி மக்கள் நலன் கருதி மீண்டும் நல்லவர்களையே ஆட்சியில் அமரவைக்க வேண்டும் என்பதுதான் இந்த தலையங்கத்தின் நோக்கம்.

2006 & 2011 &ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நடந்த சில சம்பவங்களை பார்ப்போம். பனையூர் இரட்டைக்கொலை வழக்கு, திருச்சியில் இருவர் காரில் உயிரோடு வைத்து எரிக்கப்பட்ட கொலை வழக்கு, சேலத்தில் ஒரு காலத்தில் சட்டத்தை பாதுகாத்த இன்ஸ்பெக்டர் குப்புராஜ் குடும்பத்தை சட்டம் பாதுகாக்கத் தவறியதால் குப்புராஜ் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு. ஈரோட்டில் ஆள்கடத்தல், வீட்டை இடித்தல், நிலம் அபகரித்தல் ஆகியவைகளை செய்ததற்காக வழக்கு. திருச்சியில் 2007 &ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் திருச்சியின் முக்கிய அமைச்சர் குடும்பத்தினர் ஒரு ஹோட்டலை அபகரிக்க திட்டமிட்டது தெரியவந்ததும் அந்த ஹோட்டலை நடத்தி வந்தவர் அமைச்சர் குடும்பத்தின் திட்டத்தை விவரித்து பாதுகாப்பு அளிக்கக் கோரி காவல் ஆய்வாளர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர், தமிழக டி.ஜி.பி. முதலைமைச்சர் அலுவலகம் என்று பாதுகாப்புக்கோரி மனு கொடுத்தார். அனைத்து முன்னணி பத்திரிகைகளிலும் ‘ஹோட்டலை கடந்த 2 ஆண்டுகளாக நடத்தி வருகின்றோம் என்றும் பொதுவாழ்வில் உயர்பொறுப்பில் இருப்பவர்கள் இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடக்கூடாது’ என்றும் விளம்பரம் கொடுத்திருந்தார். அதன் பிறகு திருச்சி துணை மேயர் அன்பழகன் ஆயுதமேந்திய ரவுடிகளுடன் காரில் திமுகவின் கொடியை பறக்கவிட்டுக்கொண்டு பாதுகாப்புக்கொடுக்க வேண்டிய போலீசார் உடன் வர, அந்த ஹோட்டலை அபகரித்தனர். குற்றம் நடந்ததை விவரித்து முதலமைச்சர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்த போது, பாதுகாப்புக்கோரி மனு கொடுத்த போது மனுவை பெற்றுக் கொண்டதற்கான ரசீது கொடுத்தது போலவே இப்போதும் ரசீது கொடுத்தார்கள். ரசீது கொடுத்ததைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. இதற்குப் பதில் முதலமைச்சர் அலுவலகத்தின் தனிப் பிரிவை தபால் நிலையமாக மாற்றியிருந்தால் கூட பொது மக்களுக்கு நன்மை கிடைத்திருக்கும். தி.மு.க. கொடியை பறக்கவிட்டு ரவுடிகளுடன் வந்து குற்றத்தை செய்த சம்பவமானது ஒவ்வொரு தி.மு.க.வினரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய சம்பவமாகும். முதலமைச்சரின் கீழ் செயல்படுகின்ற போலீஸ் துறையே இந்த குற்றத்திற்கு பாதுகாப்பாக உடன் வந்துள்ளார்கள். இவரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வாக்களித்த ஒவ்வொரு குடிமகனும் வேதனைப்பட வேண்டிய விஷயமாகும்.

குற்றத்தை செய்ததோடு மட்டுமில்லாமல் அந்த ஹோட்டலை நடத்தி வந்த தொழிலதிபர் மீது ஒரு போலியான எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. முதலமைச்சர் தன்னுடைய ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்ற உண்மை தெரிந்துதான் காலத்திற்கு ஏற்ப தன்னுடைய ‘பெண் சிங்கம்’ கதையில் நேர்மையான அதிகாரி மீது போலீசார் எஃப்.ஐ.ஆர். பதிவு பண்ணுவது போன்று கதை அமைத்தாரோ என எண்ணத் தோன்றுகிறது.

முதலமைச்சர் அவர்களே இவ்வளவு பெரிய திமுகவில் நல்லவர்களே இல்லையா? அல்லது நல்லவர்களுக்கு இது போன்ற பதவிகளுக்கு வருவதற்கு தகுதி இல்லை என்று நினைக்கிறீர்களா?

முதலமைச்சர் அவர்களே இன்றைய இளைஞர்கள் பள்ளியில் படித்த போது எங்கோ தமிழகத்தின் மூலையில் அரியலூரில் நடந்த ரயில் விபத்திற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த லால்பகதூர் சாஸ்திரியை பற்றியும் மற்றும் நாட்டுக்காக உயிர் கொடுத்த தியாகிகள் பற்றியும் தினமும் பக்தியுடன் தேசீய கீதத்தை பாடி ஒரு இந்தியனாக தினம் தினம் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இதுபோன்ற கிரிமினல் தகுதிகளை உடையவர்கள் தான் ஆட்சியாளர்களாக வருவார்கள் என்று தெரிந்திருக்கவில்லை. பள்ளி பாடத்திட்டத்தில் இது போன்ற தவறானவர்கள்தான் ஆட்சி பொறுப்பிற்கு வருவார்கள் என்றும் அவர்களை சமாளிப்பது எப்படி என்ற படிப்பினையும் சேர்த்திருந்தால் இன்றைய இளைஞர்கள் பெரும் அதிர்ச்சியடைந்திருக்க மாட்டார்கள். உங்களுடைய தலைமையில் இயங்கும் அமைச்சர் பெருமக்களின் செயல்பாடுகளினாலும் உங்கள் தலைமையில் இயங்கும் போலீஸ் துறையின் செயல்படாத காரணத்தினாலும் சாதாரண மக்கள் பல துன்பங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருந்த வேளையில் நீங்கள் தினம் ஒரு பாராட்டுவிழா, தினம் ஒரு கலைவிழா என்று நேரத்தை செலவழித்தது சரிதானா என்று எண்ணிப்பாருங்கள்.

2008&ம் ஆண்டு மே மாதம் திருப்பூரில் காங்கிரஸ் இயக்கத்துக்காக உயிர் நீத்த கொடிகாத்த குமரனின் பெயரில் அமைந்துள்ள குமரன் ரோட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சரின் குடும்பத்தினர் ரவுடிகளின் துணையுடன் ஒரு ஹோட்டலை அபகரித்துக் கொண்டனர். சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரின் கவனத்திற்கு மேற்கண்ட சம்பவத்தைக் கொண்டு சென்றபோது அமைச்சர் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கோபப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பல நெருக்கடிகளுக்கும் நிர்ப்பந்தத்திற்கும் உட்படுத்தப்பட்டனர்.

வாசகர்களே... மேலே கூறப்பட்ட குற்றங்களைச் செய்தவர்கள் சாதாரண மக்கள் அல்ல. மக்களை வழிநடத்திச் சென்று மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசின் உயர் பொறுப்பில் இருக்கும் அரசியல் தலைவர்கள். இது போன்ற ஒரு ஆபத்தான சூழ்நிலையை நாடு இதுவரை சந்தித்திருக்கவில்லை. போலி மருந்து, கலப்பட பெட்ரோல், கலப்பட உணவு, போலி கோர்ட், போலி காவல்நிலையம் என்று அரசாங்கமே போலியோ என்று மக்கள் சந்தேகப்படும் அளவுக்கு நிர்வாக சீர்கேடு நடந்ததற்கு யார் காரணம்?

கிறிஸ்து, இந்து, முஸ்லீம் மற்றும் அனைத்து மதத்தினரும் தங்களுக்கு என்று ஒரு கடவுளை வழிபடுகிறார்கள். அதனடிப்படையில் தங்களை நல்வழிப்படுத்திக்கொண்டு தவறு செய்தால் கடவுள் தண்டித்துவிடுவார் என்ற அச்சத்தில் நல்லவர்களாக இருக்க முயற்சி செய்வார்கள். மதத்தின் மீதோ கடவுளின் மீதோ நம்பிக்கை இல்லாமல் இருப்பதினால்தானோ என்னவோ இன்றைய ஆட்சியாளர்கள் எந்தத் தப்பையும் செய்யத் தயங்குவதில்லை.

அந்தக் காலத்திலே வெள்ளையர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சொத்துக்களை விற்று மக்களுக்காக நஷ்டத்தில் கப்பல் ஓட்டினார் கப்பலோட்டிய தமிழர் வ.ஊ.சிதம்பரனார் என்பது வரலாறு. இன்றைய ஆட்சியாளர்களோ மக்கள் பணத்தில் தங்களுக்காக கப்பல் கம்பெனி நடத்துவாக கேள்விப்படுகின்றோம். இந்த ஆட்சியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செய்கின்ற சில தவறுகளை சுட்டிக்காட்டியிருக்கின்றோம். ஆனால், ஆயிரக்கணக்கான குற்றங்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடந்துவருவது அன்றாட வாடிக்கையாகிவிட்டது. காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர்களின் உரிமை, கச்சத்தீவை மீட்டெடுக்கும் முயற்சி போன்ற அனைத்திலும் தமிழகத்தின் உரிமைகளை இன்றைய தி.மு.க அரசு விட்டுக்கொடுத்துவிட்டது. தி.மு.க. ஆட்சியில் திமுகவினரும் ரவுடிகளும் கைகோர்த்து குற்றங்கள் செய்து பொது மக்களை துன்பத்திற்குள்ளாக்குவது மிக சாதாரணமாக உள்ளது. போலீஸ் செயலிழந்து உள்ளது. விலைவாசி பல மடங்கு அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் கடன் சுமையோ ஒருலட்சம் கோடியை தாண்டிவிட்டது. மற்றும் பெருகிவிட்ட ஊழல்கள் இவைகள்தான் கடந்த 5 ஆண்டு ஆட்சியின் அடையாளங்களாக தெரிகின்றன.

இப்போது 2001 & 2006ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி பற்றி பார்ப்போம். ஜெயலலிதா அவர்கள் ஒரு நல்ல கண்டிப்பு மிக்க ஆசிரியையாகவும் அவருடைய அமைச்சர்கள் அந்த ஆசிரியையின் கீழ் நல்ல பண்புள்ள மாணவர்களாகவும்தான் இருந்தார்கள். நிர்வாகத்திறமை இன்மை அல்லது பதவியை தவறாக பயன்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக தண்டிக்கப்பட்டார்கள் என்பதை அனைவரும் அறிவோம். போலீஸ் துறையில் எந்த வித அரசியல்தலையீடும் இல்லாமல் போலீசார் தலைநிமிர்ந்து சட்டத்தை பாதுகாத்தார்கள். அதனால் மக்கள் எந்த வித இன்னல்களுக்கும் ஆளாகாமல் நிம்மதியுடன் வாழும் சூழல் இருந்தது. சட்டம் பாதுகாப்பாக இருந்தது. அதனால் சட்டம் மக்களைப் பாதுகாத்தது. விலைவாசி குறைவாக இருந்தது. தமிழகத்தின் கடன் சுமையும் குறைவாக இருந்தது. காவிரி, முல்லைப்பெரியாறு போன்ற விஷயங்களில் போராடி தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டினார் ஜெயலலிதா. ‘கச்சத்தீவை மீட்டெடுத்தால்தான் மீனவர் பிரச்னை தீரும்’ என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் ஜெயலலிதா. சிறப்பான நிர்வாகத்தின் மூலம் தமிழகத்தின் நிதி நிலைமையை வலிமை ஆக்கினார். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டு 2001&2006 &காலத்தில் சிறப்பான நிர்வாகத்தை ஜெயலலிதா அவர்கள் கொடுத்தார்கள்.

மேற்கண்ட இரண்டு ஆட்சியாளர்களின் நிர்வாகத்திறனையும் மக்கள் வாழ்ந்த சூழ்நிலையையும் ஒப்பிட்டு பார்க்கையில் நாட்டு மக்களுக்கு எந்த ஆட்சி நன்மையை செய்தது என்று பார்த்தால் அது ஜெயலலிதா தலைமையிலான அ.திமுக ஆட்சிதான் என்பது அனைவரும் உணரக்கூடிய ஒன்று. அதிகார துஷ்பிரயோகம், ஊழல், வன்முறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போன்ற தி.மு.க. அரசின் செயல்கள் தேச விரோதம் என்றால் அதை அமைதியாக வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்ல அந்த தி.மு.க. ஆட்சியை தாங்கிப்பிடித்து மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்கிய காங்கிரஸ் செய்த செயல் தேசதுரோகமாகும். ராஜீவ்காந்தி மரணத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது. ஆனால், இலங்கையில் ரத்த உறவுகளான தமிழர்கள் கொத்து கொத்தாக இலங்கை அரசினால் கொலை செய்யப்பட்ட போது அதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த தமிழக அரசையும் மத்திய அரசையும் ராஜீவ் காந்தியின் ஆத்மாகூட மன்னிக்காது.

இந்த தமிழ் மண் வீரம்மிக்கது. மகாகவி சுப்ரமணியபாரதியார், வாஞ்சிநாதன், வ.ஊ.சிதம்பரனார், வீரபாண்டியகட்டபொம்மன் போன்ற வீர தமிழர்கள் பிறந்த மண்தான் இந்த தமிழ் மண். மக்கள் கொடுத்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு வன்முறை மூலமாக மக்களை சிரமங்களுக்கு உள்ளாக்குபவர்களுக்கு பதில் ஆயுதம்தான் என்றால்... அதையும் எடுக்க துணிந்தவர்கள்தான் இந்த மண்ணின் இளைஞர்கள். ஆனால், சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மதிக்கின்றவர்கள் என்பதால் அவர்களை குறைவாக மதிப்பிட வேண்டாம். நாட்டின் மீது பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும் ஜாதி, மதம், கட்சி போன்றவற்றிக்கு அப்பாற்பட்டு நடக்கின்ற அவலங்களை பார்த்து கோபப்பட வேண்டும்.

அந்த கோபத்தினை வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் வெளிப்படுத்த வேண்டும். உங்களை சுற்றி மாற்றம் தேவை என்றால் அந்த மாற்றம் உங்கள் ஒவ்வொருவரிடத்திலும் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஆம்! இந்த தவறான ஆட்சியாளர்களிடமிருந்து நாட்டைக்காப்பாற்ற நீங்கள் ஒவ்வொருவரும் பாரதியாராக, வ.ஊ.சிதம்பரனாராக, வீரபாண்டிய கட்டபொம்மனாக, ஜான்சிராணியாக மாறவேண்டும். இந்த மக்கள் விரோத ஆட்சியாளர்களை அகற்றும் சக்தி நம் ஒவ்வொருவரின் ஓட்டுதான். ஆகையால் உங்களிடத்தில் இருந்தே உங்கள் வரிப்பணத்தை திருடி உங்களிடமே அதை கொடுத்து உங்கள் ஓட்டை விலைக்கு வாங்க முயற்சிக்கும் தேசத் துரோகிகளின் லஞ்சத்திற்கு விலை போய் உங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையை உருவாக்கிவிடாதீர்கள்.

வாசகர்களே.. சட்டம் பாதுகாப்பாக இருந்தால்தான் அது தன் கடமையை செய்து மக்களைப் பாதுகாக்க முடியும். ஜெயலலிதா அவர்களின் ஆட்சியையும் கருணாநிதி ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் சட்டம் யார்கையில் பாதுகாப்பாக இருக்கின்றது என்று தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. மிகப்பெரிய ஆலமரம் சிறுவிதையில் இருந்து முளைப்பதைப் போல் உங்கள் ஓட்டு என்கின்ற சிறுவிதைதான் நாளைய தமிழகத்தை, இந்தியாவை பாதுகாத்திட முடியும். வரவிருக்கும் தேர்தலில் நாட்டுப்பற்றுள்ள ஒவ்வொருவரும் உங்களுடைய ஓட்டுக்களை உங்கள் நண்பர்களின் ஓட்டுக்களை, உங்கள் உறவினரின் ஓட்டுக்களை சிதறவிடாமல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அணிக்கு வாக்களித்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். தி.மு.க. தலைமையிலான தேசவிரோத சந்தர்ப்பவாத கூட்டணிக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றால் எகிப்தில் மக்கள் நலனை மறந்த சர்வாதிகார ஆட்சியையே மக்கள் ஒன்றுபட்டு தூக்கி எறிந்ததைப் போல மக்கள் கொடுத்த அதிகாரத்தை மக்கள் விரோத செயல்களுக்காக பயன்படுத்திய இந்த தி.மு.க. ஆட்சியை அகற்றிட வேண்டும் என்றால் கத்தியின்றி ரத்தமின்றி வரபோகின்ற யுத்தமான 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுக்க வேண்டிய ஆயுதம் ஓட்டு!

http://www.suriyakathir.com/issues/innerpage.php?key1=T1

Tuesday, March 1, 2011

தேர்வுக்குச் செல்லும் மாணவ - மாணவியருக்கு...1.தொலைக்காட்சி பார்ப்பதை இந்த ஒரு மாதம் மறந்து விடுங்கள் (பெற்றோர்களும் பார்க்காமல் இருப்பது நல்லது)

2. நாம் அதிக மதிப்பெண் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவோம் என்ற மன உறுதியோடு படியுங்கள்.

3.நன்றாகப் படித்திருந்தாலும் அதை எழுதிப் பார்த்தால் மிக நல்லது. ஏனென்றால், ஒரு முறை எழுதிப் பார்ப்பது 5 முறை படிப்பதற்குச் சமம். மீண்டும் மீண்டும் எழுதும் பயிற்சி கணிதத் தேர்வுகளில் நல்ல பயனைத் தரும்.

4. பகலில் உறங்கி விட்டு இரவில் படித்தல் என்ற பழக்கம் தவறானது. ஏனென்றால் தேர்வின் போது தூக்கத்தை வரவழைத்து விடும்.

5.வழக்கமாக உறங்கும் நேரத்தைக் குறைக்காமல் இருப்பது நல்லது.

6.முதலில் தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு பின்னர் பிற கேள்விகளுக்கு விடை எழுதுதல் சிறப்பு.

**** தேர்வில் வெற்றிப்பெற எனது வாழ்த்துக்கள் *****