Tuesday, March 1, 2011

தேர்வுக்குச் செல்லும் மாணவ - மாணவியருக்கு...



1.தொலைக்காட்சி பார்ப்பதை இந்த ஒரு மாதம் மறந்து விடுங்கள் (பெற்றோர்களும் பார்க்காமல் இருப்பது நல்லது)

2. நாம் அதிக மதிப்பெண் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவோம் என்ற மன உறுதியோடு படியுங்கள்.

3.நன்றாகப் படித்திருந்தாலும் அதை எழுதிப் பார்த்தால் மிக நல்லது. ஏனென்றால், ஒரு முறை எழுதிப் பார்ப்பது 5 முறை படிப்பதற்குச் சமம். மீண்டும் மீண்டும் எழுதும் பயிற்சி கணிதத் தேர்வுகளில் நல்ல பயனைத் தரும்.

4. பகலில் உறங்கி விட்டு இரவில் படித்தல் என்ற பழக்கம் தவறானது. ஏனென்றால் தேர்வின் போது தூக்கத்தை வரவழைத்து விடும்.

5.வழக்கமாக உறங்கும் நேரத்தைக் குறைக்காமல் இருப்பது நல்லது.

6.முதலில் தெரிந்த கேள்விகளுக்கு விடை எழுதிவிட்டு பின்னர் பிற கேள்விகளுக்கு விடை எழுதுதல் சிறப்பு.

**** தேர்வில் வெற்றிப்பெற எனது வாழ்த்துக்கள் *****

No comments: