குப்பைக்காடாய்
குவிந்துகிடக்கும்
நினைவுகளை
எரிக்க நினைக்கையில்
அழுது விழுந்து
ஆர்ப்பரிக்கிறது
உனது நிழல்
சிறிது தளரும் மனதை
இறுகப்பூட்டி
கவனமாக
தொடங்கியதிலிருந்து
முடிந்ததுவரை
சேர்த்து எரிக்கும்போது
ஆவியாகி மீண்டும்
என்னுள் நீ...
ஆரம்பம் என்று இருக்கையில்
முடிவு என்றும் இருக்கும்
ஆனால் நட்பில் மட்டும்
ஆரம்பமும் இல்லை
முடிவும் இல்லை
அன்று சந்தித்தோம்
இன்று பிரிகிறோம்
நம் நட்பு என்றும் பிரியாது
என்றும் நாம் இணைந்திருப்போம்
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment