Friday, December 9, 2011

மலையாளிகள் - ஒரு பார்வை : ( சும்மா ஒரு மீள்பதிவு :) - நாஞ்சில் எக்ஸ்பிரஸ்™

ஒரு முறை பீகாரில் நடந்த ரயில் விபத்து பற்றி இந்து பத்திரிக்கை வெளியிட்ட செய்தியில் வேடிக்கையாக ஒரு செய்தி வெளியிட்டிருந்ததாம் இந்த விபத்தில் மலையாளிகள் யாரும் இறக்க வில்லையென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அளவிற்கு மலையாளிகள் இல்லாத இடமில்லை. சாதாரண தொழிலாளி முதல் பெரிய உயர்பதவிகள் வரை இவர்களை பார்க்கலாம். இவ்வளவு இருந்தும் இவர்களிடம் இருக்கும் குறுகிய மனப்பான்மை படிப்பறிவு அற்ற பீகாரிகளை விட கேவலமான ஒன்று. மற்ற மாநிலத்தவர்களை ஏளனமாக பார்ப்பது மலையாளிகளின் குணம். அதிலும் தமிழன் என்றால் இவர்களுக்கு கேலிப்பொருள். சமீபத்தில் நடிகர் ஜெயராம் தமிழ்பெண்களைப்பற்றி விமர்சனம் செய்தது ஒன்றும் மலையாளிகளை பொறுத்த வரை புதிய விசயமல்ல. தமிழர்களையும், தமிழ்நாட்டையும் கிண்டல் பண்ணுவது என்பது அவர்களுக்கு சாதாரணமான ஒன்று. தமிழனை பாண்டி என்றும் பெண்களை தமிழத்தி என்றும் என்றும் கிண்டலாக அழைப்பதுண்டு. காடுகளில் வாழ்ந்து கப்பை கிழங்கையும், மத்தி மீனையும் சுட்டுத்தின்று கட்டஞ்சாயா குடித்து வயிறு நிரப்பியவர்களுக்கு நாகரிகம் கற்றுக்கொடுத்து, பேச மொழியையும் கற்றுக்கொடுத்தவன் தமிழன். மலையாள இலக்கியம் தமிழ் இலக்கியத்தின் கடைசி தலைமுறை. இவர்கள் தமிழர்களை கிண்டல் பண்ணுவது வேடிக்கைான ஒன்று. பத்து மலையாளிகளுக்கு நடுவில் ஒற்றைத்தமிழனாக வேலைசெய்து பார்த்தால் தெரியும் நீங்கள் எப்படி தனிமைப்படுத்தப்படுவீர்கள் என்று, அதுவே பத்து தமிழர்களுக்கு நடவில் ஒரு மலையாளி என்றால் அது மாதிரி நமக்கு யோசிக்கவே தோணாது. மலையாளக்கரையோரத்தில் பிறந்தவன் என்பதால் மலையாளிகளைக்குறித்து சற்று அதிகம் தெரிந்தவன் நான். நான் சும்மா சொல்கிறேன் என்று நம்ப மறுத்தால் நாஞ்சில் நாடன் எழுதிய தீதும் நன்றும் படித்துப்பாருங்கள். மலையாள கரையோர எழுத்தாளனின் அனுபவங்களில் இதைப்பற்றி அதிகம் எழுதியிருப்பார். அவர் சொல்லியிருக்கும் இதுபோன்ற பல உதாரணங்களில் ஒன்று: மலையாள நாடன் பாட்டு என்று சொல்லப்படும் நாட்டுப்புற பாட்டு ஒன்றில் "சுத்தம் இல்லாத தமிழனுக்கு சூலடி" என்று ஒரு வரிவரும், சூல் என்றால் துடைப்பைக்கட்டை. சுத்தம் இல்லாத தமிழனுக்கு துடைப்பக்கட்டையால் அடிகொடுக்கவேண்டும் என்பது அர்த்தம். சுத்தம் பற்றி பேசுபவர்களின் சுத்தம் எப்படி என்று தெரியவேண்டுமென்றால் திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்துநிலையம் சென்றால் அறியலாம். ஒரு மாநிலத்தில் தலைநகரின் முக்கிய பேருந்து நிலையம் எப்படி நாறிப்போய் கிடக்கிறதென்று பார்க்கலாம். வெயில் காலத்திலேயே கால் வைத்தால் தொற்றுநோய் வந்துவிடுமோ என்றநிலை. மழைவந்தால் சும்மா மணக்கும். இவர்கள் தமிழனின் சுத்தம் பற்றி பேசுகிறார்கள். சினிமாவிலும் தமிழர்களை கிண்டல் பண்ணுவதை கவனிக்கலாம். திருடர்கள், கூலிவேலைக்காரர்கள், வீட்டுவேலைக்காரர்கள், அடியாட்கள் இதுபோன்ற பாத்திரங்களில் தமிழர்களையே தமிழ்பேசி நடிக்க வைப்பார்கள் அல்லது மலையாளிகளை தமிழ்பேசவைத்து நடிக்க வைப்பார்கள். தமிழர்களின் ஒழுக்கத்தை குறை சொல்பவர்களின் ஓழுக்கம் பற்றி ஊருக்கே தெரியும். இந்தியாவில் அதிகம் மது அருந்துபவர்கள் இருக்கும் மாநிலம் கேரளா, அதிகம் கருச்சிதைவு நடக்கும் மாநிலம் கேரளா. மலையாளிகள் பங்கு இல்லாமல் வளைகுடாக்களில் கொலை, கொள்ளையில் நடப்பதில்லை. இந்த லட்சணத்தில் இவர்கள் தமிழனின் ஒழுக்த்தை குறைசொல்கிறார்கள். கோவை, குமரி மாவட்டத்தின் எல்லைகளில் செல்லும் வாகனங்களை இரண்டு நாட்கள் நிறுத்தினால் மொத்த கேரளாவும் அரிசி கிடைக்காமல் பட்டினி கிடக்கும், குழந்தைகள் பால் இல்லாமல் பசியில் அழும், கட்டிட வேலைகளுக்கு மண் இல்லாமல் வேலைகள் முடங்கும், நெய்வேலியிலிருந்து செல்லும் மின்சாரத்தை நிறுத்தினால் மொத்த கேரளாவும் இருட்டில் மூழ்கும். மொத்தத்தில் தமிழ்நாட்டை அண்டிப்பிழைக்கும் இவர்களுக்கு இத்தனை நக்கல் அதிகம் தான். சொந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் ஆப்படிக்கும் நோக்கத்தில் கட்சி நடத்தும் சிவப்புக்கொடி கட்சிகளுக்கு ஆதரவு அளித்து அவர்களை ஆட்சியில் அமர்த்துவதிலிருந்தே தெரிகிறது, மலையாளிகளின் புத்திசாலித்தனம். மலையாளிகள் தமிழர்களை கிண்டல் பண்ணுவதற்கும் சூரியனைப்பார்த்து நாய் குரைப்பதற்கும் பெரிதாக வித்தியாசயொன்றுமில்லை. நல்லாருங்கடே மக்கா...

No comments: