Sunday, August 30, 2009

ஈழத்தில் என்னாதான் நடக்கிறது

இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற கண்ணி வெடிகள் தடையாக இருக்கின்றன. அவற்றை அகற்றிய பின்னர்தான் மக்களை மீளக் குடியமர்த்த டியும் எனக் கூறும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம்,
கிளிநொச்சியிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும், இராணுவத்திற்கும், பௌத்த கோவில்களை அமைப்பதற்குமான பாய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

ஓமந்தையில் இருந்து பளை வரை ஏ9 பாதையின் இருமருங்கிலும் 150 யாருக்கு மேற்பட்ட பிரதேசத்தில் இருந்த சகல கட்டிடங்களும் தரை மட்டமாக்கப்பட்டு அவை இருந்த இடமே தெரியாமல் செய்யப்பட்டு வருகின்றது.சைவத்தையும் தமிழையும் பாதுகாத்த தமிழ் மக்களின் கலாசார சின்னமான யாழ். குடாநாட்டின் முகப்பான ஆனையிறவில் பிரமாண்டமான புத்த விகாரை கட்டப்பட்டு வருகின்றது. இங்கு எந்தக் கால கட்டத்திலும் சிங்கள மக்கள் வாழ்ந்ததில்லை. புத்த கோவிலும் இருந்ததில்லை.

இராணுவ காம் மட்டுமே இருந்தது. இன்று பௌத்த, சிங்களத்தின் ஆக்கிரமிப்பின் வடிவமாக யாழ்ப்பாணத்து நுழைவாயிலில் புத்த கோவில் கட்டப்பட்டு வருகின்றது.கிளிநொச்சியில் மிகச் சிறிய ஒரு நிலப்பரப்புக்குள் இருந்த புத்த கோவில் தற்போது பாரியளவில் கட்டப்பட்டுள்ளதுடன், அக்கோவில் கட்டுவதற்காக சுற்றிவர இருந்த கடைகள், வீடுகள் யாவும் அழிக்கப்பட்டு அவையும் புத்த கோவிலுடன் இணைக்கப்பட்டுள்ளன.இவை ஒரு புறமிருக்க, தமிழ் மக்களின் கலை மரபுகளை வெளிப்படுத்தும் கிளிநொச்சி மாவட்ட கலாசார மண்டபம், இந்துப் பேரவைக் கட்டிடம், பனம் பொருள் கைப்பணி மண்டபம் போன்ற அனைத்தும் மண்ணோடு மண்ணாக அழிக்கப்பட்டு, அங்கிருந்த கலாசாரச் சின்னங்கள் யாவும் அகற்றப்பட்டும் அழிக்கப்பட்டுள் ளன. பல கோடி பெறுமதியான இம்மண்டபங்களும் கலாசாரச் சின்னங்களும், அழிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கருகில் 350 கடைத்தொகுதிகளைக் கொண்ட கிளிநொச்சி பொதுச்சந்தை, எண்ணெய் நிரப்பும் நிலையம், போக்குவரத்து டிப்போ போன்ற சகல இடங்களும் கையகப்படுத்தப்பட்டு அங்கு யுத்தத்தில் கொல்லப் பட்ட சிங்கள இராணுவத்தினருக்கான சமாதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.இதனையும் விடக் கொடுமையான நடவடிக்கை கிளி நொச்சி பிரதேச சபைக்கு சொந்தமான இயற்கை பூங்கா வில் இருந்த பெறுமதி வாய்ந்த பல மரங்கள் (அம்மண்ணுக்கே சொந்தமான பல மரங்கள் அங்கு வளர்க்கப்பட்டன. அவை வெட்டி எடுக்கப்பட்டுள்ளதுடன் அப்பூங் காவிற்கு நடுவில் இராணுவத்தினருக்கான நினைவு ஸ்தூபி ஒன்றும் கட்டப்பட்டு வருகின்றது. இவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுவரும் மதில்கள் தலதா மாளி கையைச் சுற்றியுள்ள மதில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டு வருகின்றது.இப்பூங்காவுக்கு பின்புறமாக கட்டப்பட்டு வந்த நூல் நிலையம் பாயளவில் சேதமாக்கப்பட்டுள்ளது.மொத்தத்தில் கிளிநொச்சி நகரத்தின் மையப்பகுதிகள் யாவும் அகற்றப்பட்டு, தமிழன் கலாசார மண்டபங்களும் இடிக்கப்பட்டு அங்கு இராணுவ நினைவாலயம் பௌத்த கோவில்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.மக்கள் மீளக்குடியமர்த்தப்படும் பட்சத்தில் அங்கு சந் தையில்லை. பஸ் நிலையமில்லை. பொழுது போக்கு மண்டபம் இல்லை. பூங்கா இல்லை. நூல் நிலைய மில்லை. இவை யாவும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. 1981இல் யாழ்ப்பாண நூல் நிலையம் ஏறத்தாழ ஒரு இலட்சம் புத்தகங்களுடன் சிங்கள இன வாதிகளால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதுடன் சிங்கள இனவாதிகளால் ஓர் கலாசாரப் படுகொலைஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் அடுத்த கட்ட கலாசாரப்படு கொலைகள் கிளிநொச்சியில் அரங்கேறி வருகின்றன.இது தவிர கிளிநொச்சி பொன்னம்பலம் வைத்தியசாலையில் இருந்து கந்தசாமி கோவிலை உள்ளடக்கி கரடிப்போக்கு சந்திவரை பாய இராணுவத்தளத்துக்கான பகுதியெனவும் அதியுயர் பாதுகாப்பு வலயமெனவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு ஆக்கிரமிப்பு வேலைகளுக்கும் கண்ணிவெடிப் பிரச்சினை கிடையாது. மக்கள் குடியேற வேண்டுமாயின் கண்ணிவெடி என அரசாங்கத்தால் புரளி கிளப்பி விடப்படுகிறது.ஏ9 வீதியிலுள்ள அரச மரங்களுக்குக் கீழ் புதுப்புது புத்தர் கோவில்கள் உருவாகி வருவதுடன், பாய கண்காணிப்பு கோபுரங்களும் உருவாகி வருகின்றன.மக்கள் மீளக் குடியேறும் பொழுது அவர்களது வீடுகள் அவர்களுக்கு கிடைக்காது. அவர்களது பொதுக் கட்டிடங்கள், கோவில்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைக்காது. மக்கள் மீளக்குடியேற்றப்பட்டால் அவர்களது எதிர்ப்புக்கு மத்தியில் இவற்றைச் செய்ய முடியாது என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மக்கள் இன்னும் காம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.வன்னியை இராணுவ ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வந்து ஒட்டு மொத்த வடக்கு கிழக்கை சிங்கள பௌத்த பூமியாக மாற்றுவதே அரசின் கொள்கை என்பதை வன்னி நிலமைகள் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன. அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதற்கு சிங்கள ஜனநாயக ற்போக்கு புத்தி ஜீவிகளும், சர்வதேச சகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டிய காலகட்டமிது.

2 comments:

புலவன் புலிகேசி said...

நல்ல கவிதை நண்பரே...........

தமிழனின் நிலையை உருக்கமாக உணரவைக்கிறது.......

இளஞாயிறு said...

*த‌ற்குறித் த‌மிழ‌னின் விளங்குமா ?
தளராத உழைப்பிலான‌
விவ‌சாய‌ உண‌வை
உண்டுகொண்டே உள‌றுகிறான்
ந‌க‌ர‌த்துத் த‌மிழ‌ன்
“ஆங்கில‌மின்றி வாழ‌முடியாது”

*ஈழத்தமிழனின் அழிவை
காக்க கையாலாகாத
ஈனத் தமிழனின்
“கூனி”ப் பிழைப்பால்
மின்வேலிக்குள்
பிச்சையெடுக்கும் இனத்தமிழன்

*தனியார் விற்பனையில் கல்வி
வங்கிக் கடனில் பட்டம்
அரசுக் கடைகளில் மது
இலவச டிவியில் பெண்கள்
விவசாய நிலங்களில்
தொழில் பூங்காக்கள்

*தனி ஈழத்தை
ஆர்வமாய் எதிர்பார்த்து
அடங்கிப்போனான்
களம்காண முயற்சிக்காத
முட்டாள் தமிழன்.....
விளங்குமா நாடு...மொழி..இனம் ?

அ.இளஞாயிறு,
அருந்தமிழ்இல்லம்,
8/2822, பாண்டியன்நகர்,
திருப்பூர்.641602

ஈன‌த்த‌ன‌ சாதியால்...


சாதிக்கு ஒரு நீதி மட்டுமல்ல‌

சாதிக்கொரு திமிரும் கூட...

நெற்றியில் பிறந்தவ‌னுக்கு
எங்கு பிற‌ந்த‌வ‌னாயிருந்தாலும் இழிசாதியே..

பூணூலாரை சாமியென்று வ‌ண‌ங்கும்
ம‌ற்றெல்லாருக்கும்
தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ன் இழிசாதியே...

ஒரு சாதியார் நிறைந்த‌ இட‌த்தில்
ஒத்தைக்குடியிருப்பாய்
வ‌ந்த‌ சாதியானும் இழிசாதியே...

எந்த‌ சாதியான் ஆனாலும் எப்ப‌வுமே
பெண்சாதி அடிமைச் சாதியே...

சாத‌னையாள‌ரெல்லாம் சாதியால்
பிரிக்க‌ப்ப‌டும் வ‌ன்கொடுமை...

பிற‌சாதி சாத‌னையாள‌னை நாசூக்காய்
ந‌க்க‌ல‌டிக்கும் பின் கொடுமை...

சாதிய‌ம் புற்றுநோயாய் புரையோடிப்போன‌
சாக்க‌டை ச‌மூக‌த்திற்கு உட‌ன் தேவை,
ஈரோட்டுப் பெரியாரின் அறுவை சிகிச்சை...

94 வ‌ய‌துவ‌ரை போராடிய‌வ‌னின் கொள்கை
தோற்றுவிடுமோ ‍ ஓட்டுப் பொறுக்கிக‌ளால்..

ப‌ண‌ம் வ‌ந்துவிட்டால் சாதி ஓடிவிடும்
என்ப‌து பொய்..... அவர் தகுதிக்கு
சாதித்த‌லைவ‌னாய் ஆவார் என்ப‌தே உண்மை...

இத்த‌னை மூட‌த்த‌ன‌த்திலும்
இவ‌ன் த‌மிழ‌னாய் ஒன்றுகூட‌ முடியுமா?
காவிரி நீரைத்தான் பெற‌முடியுமா?
ஈழ‌த்த‌மிழ‌னை
ஈன‌ன் இவ‌ன் காப்பாற்ற‌ இய‌லுமா?