Tuesday, February 3, 2009

க‌ரையை தொடாத‌ அலைக‌ள்



மாலை நேர‌ம் ம‌க்க‌ள் கூட்ட‌ம் அதிக‌மாக‌ இருந்த‌து. என்றைக்கும் என்னை தொட்டு பேசாத‌ என்ன‌வ‌ள் அன்று ம‌ட்டும் என் கையை பிடித்து நாங்க‌ள் எப்போதும் ச‌ந்திக்கும் இட‌த்துக்கு வ‌ர‌ச்சொல்லி விட்டு சென்றாள்.
நானும் அங்கு சென்று காத்திருந்தேன் அவ‌ளும் வ‌ந்தாள். எனக்கு முன் பேச‌ தொட‌ங்கினாள். “பிர‌பா நாம் இருவ‌ரும் இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாக‌ காத‌லிக்கிறோம்.ஒருவ‌ர் விர‌ல் கூட‌ இன்னோருவர் மேலே ப‌ட்ட‌தில்லை அப்படியிருந்தும் இப்ப‌ இந்த‌ அறையில் நாம் இருவர் ம‌ட்டும்தான். உங்க‌ள் விருப்ப‌ப‌டி என்னை என்ன‌ வேண்டும் என்றாலும் செய்து கொள்ளுங்க‌ள் பிர‌பா” என்று க‌த‌றி அழுதாள்.

என‌க்கு ஒன்றுமே புரிய‌வில்லை.

“சாலினி என்ன‌ நீ புரியாம‌ல் பேசுகிறாய் இன்னும் சில மாத‌ங்க‌ளில் என‌து ம‌ருத்துவர் ப‌டிப்பும் முடிந்துவிடும், பிற‌கு உங்க‌ள் வீட்டில் முறைப‌டி பேசி திரும‌ண‌ம் முடிக்க‌ போகிறோம். நீ க‌வ‌லை ப‌டாம‌ல் போ” என்ற போது...
”என்னை ம‌ன்னித்து விடுங்க‌ள் பிர‌பா வ‌ருகிற‌ தை மாத‌ம் 3-ந் தேதி என‌க்கு திரும‌ண‌ம்” என்று சொல்லிய‌வாறே அழைப்பித‌ழையும் கையில் கொடுத்தாள்.
உல‌கமே இருண்டு விட்ட‌து போல‌த்தோன்றிய‌து. உண‌வுத் தேடிச்சென்ற‌ ப‌ற‌வைக‌ள் எல்லாம் என்னை வெறித்து பார்த்து செல்வ‌து போல‌ தோன்றின‌. என் ம‌ன‌தின் த‌விப்பை க‌ண்டு சூரிய‌னும் ம‌றைந்து கொண்டிருந்தான். வார்த்தைக‌ள் ம‌ன‌தை விட்டு வர‌ம‌றுத்த‌ன‌. அவ‌ளை அழைத்து சென்று குளிர்பான‌ம் வாங்கி கொடுத்தேன். க‌டைசியாக‌ சொன்னாள்,

“நாம் இருவ‌ரும்தான் வாழ்க்கையில் ஒன்றுசேராமால் போய்விட்டோம். குழ‌ந்தைக‌ளுக்காவ‌து ந‌ம் பெய‌ரை வைப்போம்” என்று காத‌லித்து காத‌லனை விட்டுச்சென்ற‌ எல்லா காத‌லிக‌ளும் சொன்ன‌தை இவ‌ளும் சொல்லி விட்டுச்சென்றாள்.
’ந‌ன்றி சொல்ல‌ உன‌க்கு வார்த்தை இல்லை என‌க்கு’ என்ற‌ பாட‌ல் ஒலிப்பெருக்கியில் பாடி என்னை ம‌ண‌ப்ப‌ந்த‌லுக்கும் அழைத்த‌து. பெரிய‌வ‌ர்க‌ளும் சிறியோர்க‌ளும் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த‌ன‌ர். ம‌ண‌மேடையில் ஆல்வின் அம‌ர்ந்து இருந்தார். சிறிது நேர‌த்தில் சாலினி ஆல்வின் அருகில் வ‌ந்து அம‌ர்ந்தாள். கெட்டிமேள‌ம் நாத‌சுவ‌ர‌ம் முழ‌ங்க‌ ஆல்வின் தாலி க‌ட்டினார்.
ந‌ம‌க்குத்தான் கொடுத்து வைக்க‌வில்லை அவ‌ர்க‌ளா‌வ‌து ச‌ந்தோச‌மாக‌ இருக்க‌ட்டுமென்று கண்ணீர் துளிக‌ளால் ஆசிர்வாத‌ம் செய்துவிட்டு கிள‌ம்பினேன். சில‌ மாத‌ங்க‌ளுக்கு பிற‌கு நான் ம‌ருத்துவ‌க்க‌ல்லூரி ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌யிற்சியில் ஈடுப்பட்டிருந்த‌ போது அவ‌ச‌ர ‌சிகிச்சை பிரிவில் ஒரு பெண்ணை‌க் கொண்டு சென்றபோது த‌லைமை ம‌ருத்துவர் என்னையும் அழைத்தார்.
அங்கே போய் பார்த்த‌போது என‌க்கு ஒரே அதிர்ச்சி கார‌ண‌ம் அது சாலினி. வர‌த‌ட்ச‌னை கொடுமையால் விச‌த்த‌ன்மையுள்ள‌ மருந்தை குடித்த‌தாக‌ குடும்ப‌த்தின‌ர்க‌ள் சொன்னார்க‌ள்.முத‌லுத‌வி செய்ய‌ப்ப‌ட்ட‌து. சில‌ நாட்க‌ளில் கொஞ்ச‌ம் நிதான‌ம் திரும்பிய‌தால் அவ‌ள் அருகில் சென்று,

“ஏன் என்ன‌ ஆச்சு” என்று விசாரித்தேன்.

“உன‌க்குத்தான் அவ‌ர்க‌ள் கேட்ட‌ வர‌த‌ட்ச‌னைக்கு மேல‌ உங்க‌ள் வீட்டினர் செய்தார்க‌ளே அப்ப‌ற‌ம் எதுக்கு இப்ப‌டி செய்தாய்” என்று கேட்ட‌ போது,
”நீங்க‌ள் சொன்ன‌து எல்லாம் ச‌ரிதான் அதையெல்லாம் அவ‌ர் குடித்தும் சீட்டாடியும் அழித்துவிட்டார். அதும‌ட்டும‌ல்ல‌ த‌வ‌றான‌ பெண்க‌ளுட‌னும் அவ‌ருக்கும் ப‌ழக்க‌ம் இருந்த‌தையும் அறிந்தேன். இது ப‌ற்றி எதும் கேட்க‌ கூடாது என்றும் வீட்டில் போய் இன்னும் 2 ல‌ட்ச‌ம் ப‌ண‌ம் வாங்கி வ‌ர‌ச்சொல்லியும் அடித்து துன்புறுத்தினார்” என்று க‌ண்ணீர் ம‌ல்க‌ சொன்னாள்.

“பிர‌பா இப்போதாவ‌து ஒரு முத்த‌மிடுங்க‌ள் அப்போதுதான் என் ஆத்மா சாந்திய‌டையும். சாக‌ப்போகிற‌ ச‌ம‌ய‌த்தில் கூட‌ உங்க‌ளை பார்த்த‌தில் ச‌ந்தோச‌ம் தான்...” என்ற‌வாறு அவ‌ளுடைய‌ உயிர் பிரிந்த‌து.
அவ‌ளுடைய‌ ஆத்மா சாந்திக்காக‌ அவ‌ள‌து க‌ல்ல‌றையில் முத்த‌மிட்டேன்.

- எட்டுப்புலிக்காடு ரெ.வீர‌ப‌த்திர‌ன், துபாய்

ந‌ன்றி : அதிகாலை.கொம்

2 comments:

gayathri said...

என்னை ம‌ன்னித்து விடுங்க‌ள் பிர‌பா வ‌ருகிற‌ தை மாத‌ம் 3-ந் தேதி என‌க்கு திரும‌ண‌ம்” என்று சொல்லிய‌வாறே அழைப்பித‌ழையும் கையில் கொடுத்தாள்

pavam pa antha paiyan manasu enna kasta padum

gayathri said...

என்னை ம‌ன்னித்து விடுங்க‌ள் பிர‌பா வ‌ருகிற‌ தை மாத‌ம் 3-ந் தேதி என‌க்கு திரும‌ண‌ம்” என்று சொல்லிய‌வாறே அழைப்பித‌ழையும் கையில் கொடுத்தாள்