Friday, October 21, 2011

1 . மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்த பின்னரே, அணு உலையை திறக்க வேண்டும் என்பது சரி. ஆனால் நாகர்கோவில் நகரத்தில் 6 ,500 பேர் வசிப்பதாக அறிக்கை தயாரிக்கும் இந்திய அரசை, போபால் விஷ வாயு விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பல வகையிலும் கை விட்ட , இன்றளவும் கை விட்டு வரும் இந்திய அரசின் நம்பக தன்மையை எப்படி நம்புவது? இத்திட்டத்தின் , கட்டுமான பணியை துவக்கிய திட்ட இயக்குனர் அகர்வால் மர்ம மரணம் குறித்து அரசிடம் இருந்து எந்த விளக்கமும் இதுவரை இல்லை. 2 . இந்தியா இதுவரை ,திட்டமிட்டுள்ள அனைத்து அணு உலைகளும் இயங்கினாலும் , அணு மின் சக்தியின் பங்களிப்பு 10 % மட்டுமே. இந்த வெறும் பத்து சத வீததுக்காக ஏன் இத்தனை ரிஸ்க் எடுக்க வேண்டும்?.இதில் வேறு இதன் கழிவுகளை 24 ஆயிரம் வருடங்கள் பாதுகாக்க வேண்டுமாம். நினைத்து பார்க்கவே மலைப்பாக இல்லையா? 3 . தொண்ணூறு சதவீதம் பங்களிப்பு தரும்,அனல்,புனல்,காற்று, சூரிய சக்தி திட்டங்களை பற்றி அரசு அதிகம் சிந்தித்ததாக தெரியவில்லை. ஐம்பது வருடங்களாக கிடப்பில் உள்ள ஒகேனக்கல் புனல் மின் திட்டத்தை அரசு ஏன் துவங்க மறுக்கிறது? 4 . கூடன் குளம் திட்டம் துவங்கபட்ட ஆண்டு 1988 -89 .அப்போது நிறைய போராட்டங்கள், ஊர்வலங்கள் நாகர்கோவிலில் இருந்து கூடங்குளத்திற்கு நடத்தப்பட்டன. துப்பாக்கி சூட்டில் இருவர் பலி ஆகினர். தீவிர போராட்டங்களின் காரணமாக ,அடிக்கல் நாட்ட வர இருந்த ராஜீவ் காந்தி தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். போராட்டம் என்றால் 2 பேர் செத்தது போதாதா?. 200 பேர் சாக வேண்டுமா என்ன ?. 5 . அதன் பின்னர் , ரஷ்ய உடைந்தபின்னர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக இத்திட்டம் கிடப்பில் கிடந்தது. ரஷ்யா உடைந்து விட்டதால், இத்திட்டம் வராது என்று மக்கள் நம்ப தொடங்கி விட்டனர். 6 . ஆனால் திட்ட பணிகள் துவங்கியபோது , பெருமளவு எதிர்ப்பு இல்லை என்பது உண்மை. அதே வேளையில் ,அடையாள உண்ணா விரதங்கள் நடந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளும் அடையாள உண்ணா விரதங்கள் நடந்தன.அது மீடியாக்களால், கண்டு கொள்ள படவில்லை. ஈழத்தில் படுகொலைகள் நடந்த போது ,மானாட மயிலாட கண்டவர்கள் நாம் என்பதை மறக்க வேண்டாம். மீடியாகளால் கண்டு கொள்ளப்படாதவை ,மக்கள் சபைக்கு வருவதில்லை. அதனால் உங்கள் கவனத்திற்கு வர வாய்ப்பில்லை. 7 . அடுத்து திட்டம் துவங்கிய போது, மக்கள் சுனாமி,ஆழி பேரலை போன்ற வார்த்தைகளை அறிந்து இருக்கவில்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். தமிழ் நாட்டு வரலாறு அறியாத, ஏன் தனது ,தனது குடும்பத்து வரலாறு அறியாத, எம்.ஜி .ஆர்,சிவாஜி ,ரஜினி வரலாறு அறிந்த, இன்னும் அணு வின் தீமைகளை அறியாத படித்தவர்கள் வாழும் பூமி இது. இந்த நிலையில் ,கூடன்குளத்தை சுற்றி வாழும் படிப்பறிவில்லாத ,பாமர மக்கள் எதை தெரிந்து வைத்திருப்பார்கள் என நீங்கள் நம்புகிறீர்கள்? 8 . பத்து ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பானில் அணு உலையும் வெடிக்கவில்லை , இந்தியாவில் சுனாமியும் வரவில்லை. இதை ஏன் நீங்கள் உணர மறுக்கிறீர்கள். இவை ஏற்பட்ட பின்னர் தான் ,மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டது. 9 . ரஷ்ய தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு இருப்பதாக நாங்கள் நம்பவில்லை. ரஷ்ய தொழில் நுட்பம் இரண்டாம் தரமானது. உதாரணம் , இந்திய விமான படையில் உள்ள மிக்-21 . விமான படையில் இருபது வருடங்கள் பணியாற்றிய எனது நண்பர் சொன்னார்,அவர் கண் எதிரே, நான்கு விமானங்கள் தீ பிடித்தன என்று. அதை ஏன் ரஷ்ய பொறியாளர்களால் சரி செய்ய இயவில்லை? இவர்களுடைய அணு பாதுகாப்பு மட்டும் எப்படி தரமாக இருக்கும்? 10 . ரஷ்ய எம்.பி.பி.எஸ் தரமற்ற கல்வி என்பதால் ,இந்திய அரசு அதை நேரிடையாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. 11 . மக்கள் எதிர்ப்பு அல்லது புரட்சி வெடிப்பதற்கு நீங்கள் காலக்கெடு எப்படி விதிக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. லிபியாவில் அறுபது ஆண்டுகளாக மக்கள் மௌனமாக எல்லாவற்றையும் பொறுத்து கொண்டு இருந்தனர். எப்படி திடீர் என்று புரட்சி செய்யலாம் என்று நீங்கள் கேட்பதை போல் உள்ளது. 12 . எண்ணெய் ,வாயு துறையில் லீக் ஏற்பட்டால் அருகில் நிற்கும் நபர் மட்டுமே சாவார். அவரது குடும்பமோ ,வருங்கால சந்ததியோ சாகாது. ஆனால் அணு கதிரியக்கத்தில் சந்ததி சாவும் அல்லது ஊனமாகும். அணு துறையை , எண்ணெய் துறையுடன் ஒப்பிடுவது ஏற்புடையதல்ல. 14 . இந்தியாவில் மின்சார தட்டுபாடாம். ஆனால் இலங்கைக்கு கொடுக்க மட்டும் மின்சாரம் இருக்கிறதாம். உங்கள் வசதிக்காக கீழே தந்துள்ளேன். India Sri Lanka to Share Electricity through Undersea Power Cables As a step towards strengthening bilateral relations, India and Sri Lanka are planning to share electricity through undersea power cables. The interesting features of the project are: A. Indian power circuit Indian power grid from Madurai to feed Rameswaram through an overhead transmission line From Rameswaram undersea cable would be laid to connect Talai Mannar, Sri Lanka B. Sri Lankan power circuit Talaimannar to feed to Anuradhapura through an overhead line to connect to Sri Lankan power grid Key Facts : 1.cost of the project is Indian Rupees 2292 crores 2.power cables would be laid in seabed like telecom or internet cables 3.to have built in safety to address electrocution on both sides in case of 4.undersea cable damage 5.an optical fibre cable also would be laid along with power cables to monitor power cables and to enhance communication facilities on both sides 6.to start with, power sharing would be of 500 MW and later can be enhanced up to 1000 MW 7.could be completed in 42 months 15 . இப்படி இலங்கைக்கு மின்சாரம், என்.எல்.சி , அணை நீர் பிரச்சினை என்று எல்லாவற்றிலும் நாம் இந்திய அரசால் வஞ்சிக்கப்படுகிரோம். இதை டமிளர்கள் என்று புரிந்து கொள்ள போகிறார்களோ தெரியவில்லை. நன்றி பகலவன் குழுமம் (இணையதளம்)

No comments: