
தைப்பொங்கலும் வந்து விட்டது
ஆனந்தமான வருடத்தின்
ஆரம்பமே தைப்பொங்கல்தான்...
சூரியனுக்கு அதிகாலையிலே
சூடாக பொங்கல் படைத்து
ஆனந்தமாய் பொங்கலை
அயலவர்களுடன் உண்டு மகிழ..
வந்தது இங்கே பொங்கல்
வானோர் எல்லாம் போற்றஉ
ழவர்கள் ஆனந்தமாய்
உழ வேண்டும் என வேண்டி...
படைப்பார் பொங்கல் இங்கே
பன்டைய காலந்தொட்டு
தையிலே கொண்டாடி வந்த
தைப்பொங்கள் திருநாளே இது...
தைமாதம் பிறந்தால்
தானாகவே வழி பிறக்கும் என்பர்
தையும் பிறந்து விட்டது
எமது தமிழீழத்திலும்
வழி பிறக்குமென
எதிர்பார்ப்போம்...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
நன்றி : அதிகாலை.கொம்
No comments:
Post a Comment