வாழ்வும் வெறுத்துவிட்டது
வயதுகள் உருண்டோடிவிட்டன
வாலிபம் பறந்துவிட்டது
வழிக்காட்டிகள் செத்துவிட்டனர்...
பிறக்கும் முன்பே
பண்பாடுகள்
புண்பட்டுவிட்டன
பிறந்த சட்டத்தில்வாழ்ந்ததும்
வழிகேட்டில்...
வழிகாட்டிதான்
இல்லையென்றிருந்த
எங்களுக்கு
வாழக்கூட
இடமில்லாமல்போனதேன்...
நாங்கள் பூமிக்கே
பாரமென்றிருந்தால்
பூமிக்கடியிலாவது
புதைந்திருக்கலாமே
அகதியாகிவிட்டநாங்கள்
நம்பவில்லைநாளை
நமக்கு விடிவு
உண்டென்று...
ஏனெனில் இங்கு ஆழ்வது
சுயநல மனிதனின்
ஓரக்கண் சட்டங்கள்
நாங்கள் நம்பவில்லை
நாளை நமக்கு
விடிவு உண்டென்று
ஏனெனில்
இங்கு ஆழ்வதே
சிங்களவனின் சட்டங்கள்...
எட்டுப்புலிக்காடு விடுதலைவீரபத்திரன்
துபாய்
காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!
12 hours ago
No comments:
Post a Comment