இளைஞர்களே! கனவு கானுங்கள் எதிர்கால இந்தியா உங்கள் கையில்தான் என்று முன்னால் ஜனாதிபதியும் அணுவிஞ்ஞானியுமான மரியாதைக்குரிய அய்யா அப்துல்காலம் அவர்கள் மாணவர்கள்,இளைஞர்களை சந்திக்கும் இடங்கள் எல்லாம் கூறிவருகின்றார்.அது சரிதான் என்று இதுநாள்வரை நாமும் நம்பியிருந்தோம்.
ஆனால் ஈழத்தமிழருக்கான போராட்டங்களில் சாதி,மத,அரசியலுக்கு அப்பாற்பட்ட மாணவர்கள் பலமுனை போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால் நடந்தது என்ன அவர்களை காவல்துறையினரை கொண்டு அடித்தும்.மிரட்டியும் கைது செய்தது தமிழகஅரசு.தினந்தோறும் வெளிவருகின்ற பல இதழ்களில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரைபற்றி உண்மைக்கு புறம்பானசெய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.அப்படி எழுதுவது ஒன்றும் குற்றமில்லையாம்.ஆனால் அவரை பற்றி மட்டும் பேசினால் குற்றமாம்? பேசியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்கிறதாம். நீங்கள் தான் தமிழின தலைவர்களா? நீங்கள் தான் தமிழர்களுக்காக எதையும் செய்யும் இதயம் கொண்டவர்களா? போதும் ஈழப்பிரச்சனையில் நீங்கள் நடத்தும் நாடகம்.
வருகின்ற மக்களவை தேர்தலில் மக்கள் நலத்திற்காக எந்த கூட்டணியும் சேரவில்லை. எந்த கூட்டணியில் சேர்ந்தால் உயர்பதவி கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் இப்போதைய கூட்டணி எல்லாம் இருக்கிறது.நேற்று எதிர் அணியில் இருந்து கொண்டு மற்ற தலைவர்களை கீழ்தரமான வார்த்தைகளால் பேசியவர்கள் இன்று தன் சுயநலத்திற்கேற்ப இடம் ஒதுக்கவில்லை என்பதற்காக அந்த கட்சியை விட்டு விலகி எதிரணியில் சேர்ந்துக்கொள்கிறார்கள்.ஆனால் கடந்த தேர்தலில் உறவுக்காரர்களாக இருந்தவர்கள் தனது கட்சிக்காக தேர்தலின்போது அடித்துக்கொண்டு இதுவரையிலும் பேச்சுவார்த்தையில்லாமல் தான் சார்ந்து இருக்கும் கட்சியே பெரிதாக நினைத்து வாழ்வோருக்கு என்ன பதில் சொல்லுவார்கள் இந்த தலைவர்கள்? இவர்கள் ஒருபோதும் மக்களை பற்றி கவலைப்பட்டதில்லை. பொதுநலத்தைவிட சுயநலமே முக்கியம் இவர்களுக்கு.ஆட்டுமந்தைகளை போல மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற நம்பிக்கைதான்.
எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்தான் என்று எத்தனை அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். சாகிற வயதில்கூட பதவியாசை பிடித்து அலையும் தலைவர்களை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் ஒதுங்கிக்கொண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பார்களா? நடக்கவே நடக்காது. அப்படி நடந்தாலும் தன் மகனுக்கு அல்லது தன் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கொடுத்துவிட்டுதான் ஒதுங்குவார்கள்.இப்படி இருந்தால் படித்த இளைஞர்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும். அப்படியே படித்தவர்கள் சுயேச்சையாக நின்றாலும் மக்கள் அவர்களை ஏற்றுகொண்டதில்லை.
ஆனால் இப்போது மக்கள் மாறத்தொடங்கிவிட்டார்கள். ஈழத்தமிழர் பிரச்சனையில் எந்த அரசியல்கட்சியும் துணிந்து போராடவில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்ட பின்புதான் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.இன்றும் போராட்டம் நடத்திகொண்டு இருக்கிறார்கள்.ஆனால் இதிலும்கூட தடியடி நடத்தியும் குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைத்துவிட்டு இன்று ஈழமக்களுக்காக நிவாரண பொருட்கள் அனுப்ப ஒவ்வொரு நிறுவனமாக சென்று பிச்சை வாங்கி அனுப்ப இருக்கிறார்கள். நீங்கள் அனுப்பிய பொருட்கள் அங்கே போய் சேரும்போது அதை வாங்க மக்கள் இருக்க மாட்டார்கள்.அவர்களின் கல்லரையின் மேலேதான் வைக்கவேண்டும். ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் தமிழக தலைவர்களே முன்பு போல மக்கள் இல்லை. மக்கள் நாட்டில் நடப்பவைகளை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழர்களுக்கு துரோகம் செய்த தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஒழித்துக்கட்டுவார்கள்.அது மக்கள் சக்தியால் மட்டுமே முடியும்.
என் அன்பான மக்களே எதிர்கால இந்தியாவை இளைஞர்கள் கையில் ஒப்படைக்காவிட்டாலும் பரவாயில்லை தமிழர்களுக்கு துரோகம் செய்த தலைவர்களிடம் ஒப்படைக்காமல் இருங்கள்.
எட்டுப்புலிக்காடு ரெ.விடுதலைவீரபத்திரன் துபாய்
Tuesday, March 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment