இன்பமான பள்ளி நாட்கள்
இணைகின்ற சிறு வயதின் ஆட்கள்
சிரிப்பொலியும் பேச்சொலியுமாய்இருந்தபோது
எங்கிருந்தோ வந்தபீரங்கி தோட்டாக்கள்
பள்ளி சுவர்களை சுக்கு நூறாக்கியது...
கை கால் இழந்து தவிக்கும்
கை கால் இழந்து தவிக்கும்
என் இன குழந்தைகளை
நினைகும்போது
குருதி கொப்பளிக்கிறது
இதயத்தில்...
தாயின் கற்பை சூறையாடிவிட்டு
தந்தையையும் அடித்து
இழுத்து சென்ற
கொடூரத்தை கண்டமகனும்,மகளும்
புத்தகப் பையைத் தூக்கி எறிந்து விட்டு
புல்லட்டுகளை தூக்க துணிந்தனர்
விடுதலை புலிகளாய்...
இறப்பது ஒருமுறைதான்
எப்படி இறந்தோம் என்பதை விட
எதற்காக இறந்தோம் என்பதை
வாழ்வின் கொள்கையாகக் கொண்ட
தமிழ்நாட்டு ஈழ ஆதரவாளர்கள்
போர் முழக்கமிட்டதால்
ஈழத்தில் வெடிக்கும் போர் ஓய்ந்தது...
பள்ளி,கல்லூரிகளும்
மருத்துவ மனைகளும்
புதிதாய் முளைக்க ஆரம்பிதன்..
சாதி,மத இன பாகுபாடுகளை மறந்து
கலப்பு திருமணம் செய்து கொண்டனர்
கணவனை இழந்த பெண்களுக்கு
மறுவாழ்வு கொடுத்தனர் இளைஞர்கள்.
அயல்நாடுகளில்
அகதியாய் அவதிபட்ட
அனைத்து இன மக்களும்
தமிழ் ஈழம் வந்து குவிந்தனர்...
அனைத்து நாட்டு நிருபர்களும்
போட்டா போட்டி எடுக்க
உலகத் தலைவர்களின்
வாழ்த்துச்செய்திவந்த வண்ணமிருக்க
ஈழ விடுதலைக்காக
தன்னுயிரை இழந்த மாவீரர்களுக்கு
ஈழ மக்களுடன்
வீர வணக்கம் செலுத்திவிட்டு
ஆட்சி பீடத்தில் அமர்ந்தார்
ஈழ நாயகன் பிரபாகரன்
விடியும் போது
நான் கண்டகனவே கலையாதே....
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன் துபாய்
நன்றி - அதிகாலை.கொம்
No comments:
Post a Comment