
கிழிந்த பாதம்
இரத்தத்தில் தோய
எல்லாமே கடந்துவிட்டோம்
தலை சுமையிறக்க
இன்னுமொரு
சத்திரம் கூட
கிடைக்கவில்லை...
இளைப்பாற நினைத்து
ஒதுங்கிய ஆலயங்களிலும்
எலும்பும் ஊனமும்
தடயங்களாக
மீண்டும் சுமையுடன்
நெடுந்தூராம் ஓடுகிறோம்...
நாதியற்றவராய்
தாய் நாட்டில் அன்னியராய்
அழைக்கழிக்கப்படுகிறோம்..
காரணம்
நாங்கள் தமிழனாக
பிறந்ததுதானாம்...!!!
1 comment:
வீரா,
நாங்கள் தமிழராகப்பிறந்ததுதான் எல்லாவற்றுக்கான காரணமும்.
நாதியற்ற இனமாய் தமிழினம் முட்கம்பி வேலிக்குள் முடங்கிப்போய் இருக்கிறது. விடிவை எதிர்பார்த்து.
சாந்தி
Post a Comment