Sunday, October 10, 2010

காமன்வெல்த் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் பரிசு.



டெல்லியில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில், வில்வித்தை பந்தயத்தில் ஆண்களுக்கான காம்பவுண்ட் பிரிவில் சி.ஸ்ரீதர், ஜிக்னேஷ் சிட்டி பொம்மா, ரிதுல் சேட்டர்ஜீ ஆகியோர் கொண்ட இந்திய அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா 229 231 என்ற புள்ளி கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு மயிரிழையில் தங்கப்பதக்கத்தை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.

வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வில்வித்தையில் இடம் பெற்றிருந்த சி.ஸ்ரீதர் தமிழகத்தை சேர்ந்தவர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி இவரது சொந்த ஊராகும். விவசாய குடும்பத்தை சேர்ந்த 28 வயதான ஸ்ரீதர், இந்த காமன்வெல்த்தில் பதக்கம் என்ற முதல் தமிழக வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார். அவர் நாசிக்கில் ராணுவத்தில் பணியாற்றி கொண்டே, போட்டியிலும் பங்கேற்று வருகிறார்.

காமன்வெல்த் போட்டியில் சாதனை படைத்த தமிழக வீரர் ஸ்ரீதருக்கு சென்னையில் தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது. தமிழ்நாடு வில்வித்தை சங்கத்தின் சார்பில் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்து இருந்ததன்படி, அந்த தொகை தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில் ஸ்ரீதருக்கு வழங்கப்பட்டது.

No comments: