சூடான் நாட்டிலிருந்து தெற்கு சூடான் எனும் புதிய நாடு நாளை உதயமாகிறது.
இதற்காக முதல் சுதந்திர தின விழா தெற்கு சூடான் நாட்டின் ஜூபா நகரில் கொண்டாடப்படவுள்ளது.
ஆப்ரிக்க நாடுகளில் மிகப்பெரிய நாடு சூடான். எண்ணெய் வளம் மிக்க இந்த நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும்
என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் ஏற்பட்ட உள்நாட்டு போரி்ல் 1.5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட அமைதி பேச்சவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தப்படி சூடானை இரண்டாக பிரிக்க மக்கள் வாக்கெடுப்பு
நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த மக்கள் வாக்கெடுப்பில் சூடான் இரண்டாக பிரிய ஆதரவு பெருகியதைத்தொடந்து. அதிபர் பஷீர்அல்-அசாத் சூடானை, சூடான், தெற்கு சூடான் என இரண்டாக பிரிக்கும் முடிவுக்கு அனுமதியளித்தார். அதன்படி நாளை (9-ம் தேதி) தெற்கு சூடான் தனி நாடு ஆப்ரிக்க கண்டத்தில் உதயமாகிறது. தலைநகர் ஜூபாவில் கோலாகல விழாவுடன் கொண்டாடப்படுகிறது. புதிய ராணுவ வீரர்கள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக தீவிர ஒத்திகையில் ஈடுபட்டனர்.இரு நாடுகளின் எல்லையாக அபைய், தெற்கு கோர்டோபான் நகரங்கள் பிரிக்கப்பட்டன.
தெற்கு சூடான் நாடு உதயமாவதற்கு , அதிபர் பஷீர் அல்-ஆசாத் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெற்கு சூடானின் தலைநகராக ஜூபா இருக்கும்.தெற்கு சூடான் புதிய நாட்டின் முதல் அதிபராக சல்வாகெய்ரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராணுவ உயரதிகாரியாக இருந்த இவர் சூடான் மக்கள் விடுதலை இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி தெற்கு சூடான்
விடுதலைக்காக பல ஆண்டுகளாக போராடி போராடி வந்தார். நாளை சல்வாகெய்ரர் தெற்கு சூடான் நாட்டின் முதல் அதிபராக பதவியேற்கிறார்.
--
Friday, July 8, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment