Friday, November 20, 2009

உலக தமிழ் இன தலைவர் என்று தன்னை தானே கூறி கொள்ளும் திரு. கருணாநிதிக்கு

உலக தமிழ் இன தலைவர் என்று தன்னை தானே கூறி கொள்ளும் திரு. கருணாநிதிக்கு வணக்கம்.
2009 நவம்பர் 17 அன்று புலிகள் பற்றி நீங்கள் கொடுத்த அறிக்கையை பார்த்தால் சிரிப்பு தான் வருகின்றது
அந்த அறிக்கையை நவம்பர் மாதம் வெளியிட வேண்டிய அவசியம் என்ன ? அந்த அறிக்கையின் நோக்கம்
தன்மானம் உள்ள தமிழர்கள் அனைவரும் அறிவர்
ஈழத்தை பற்றிய உங்கள் நிலைப்பாடு என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றது.
தமிழ் செல்வன் இறந்ததற்காக "எங்கே போனாய் தமிழ் செல்வா ? " என்று கவிதை எழுதுவீர்கள்
அதே தமிழ் செல்வன் இறந்ததற்காக திரு.நெடுமாறன் அவர்களும் , திரு.வை.கோ அவர்களும் மௌன ஊர்வலம் போனதால் அவர்களை சிறையில் அடைப்பீர்கள்.
2009 மே மாதம் என்.டி.டி.வி பேட்டியில் திரு.பிரபாகரனை தனது நண்பர் என்று கூறினீர்கள் . ஏன் என்றால் அப்போது தேர்தல் நேரம் .. உங்களுக்கு அப்படி கூற வேண்டிய கட்டாயம் .. இப்போது உங்களுக்கு அவர் எதிரி ஆகி விட்டார்.
ஈழத்திற்காக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் 1957 முதல் நீங்கள் ஈழம் தொடர்பாக விட்ட அறிக்கைகளை பட்டியல் இட்டு காட்டுவீர்கள். 2009 ஆண்டு பாரத பிரதமருக்கு நீங்கள் எழுதிய கடிதங்கள் ஒரு பக்க அளவிற்கு முரசொலியில் வரும் அதற்க்கு மேல் ஒன்றும் உங்களிடம் எதிர்பாக்க முடியாது ."பொக்கிஷம்" படத்தில் சேரன் கூட பத்மபியாவிற்கு
இவ்வளவு கடிதங்கள் எழுதியிருக்க மாட்டார் . அந்த சாதனையை நீங்கள் மிஞ்சி விட்டீர்கள்
நான்காம் ஈழ போர் (மறந்து இருப்பீர்கள் இந்த ஆண்டு தான் நடந்தது) தமிழக மக்களை எல்லாம் போரை
நிறுத்துமாறு பாரத பிரதமருக்கு தந்தி அனுப்ப சொன்னீர்கள். அப்படி தந்தி அனுப்பி ஏமாந்த தமிழர்களில் நானும் ஒருவன்
கண்டிப்பாக ஐந்தாம் ஈழ போர் விரைவில் வரும் , அப்போது போரை நிறுத்த சொல்லி பிரதமர் அவர்களுக்கு
SMS, இ-மெயில் போன்றவற்றை அனுப்புமாறு உங்கள் கட்சி தொண்டர்களுக்கு கட்டளை இடுங்கள் . போரை நவீன தொழில் நுட்பங்கள் கொண்டு நிறுத்துவதுதானே ராஜதந்திரம் !
புலிகள் சகோதர யுத்தம் புரிந்தனராம் என்ன வேடிக்கை !!
PLOTE - சபாரத்தினத்தை தவிர புலிகள் எந்த போராளி குழு தலைவரையும் கொலை செய்யவில்லை .
குட்டிமணி என்ற PLOTE - தலைவரை சிங்கள ராணுவத்திற்கு காட்டி கொடுத்த குற்றத்திற்கான தண்டனையை தான் அது அமிர்தலிங்கம் மற்றும் உமா மகேஸ்வரன் போன்றோரை கொலை செய்தது யார் என்று தமிழ் இனம் அறியும். அதை நான் இங்கு கூறினால் "தேசிய இறையாண்மைக்கு" எதிராக பேசியதாக கூறுவீர்கள்
டெசோ ஒப்பந்த மாநாட்டிற்கு திரு.பிரபாகரன் அவர்கள் வரவில்லையாம் ,தனது பிரதிநிதியை அனுபினாரம் , மற்ற எல்லா தலைவர்களும் வந்தார்களாம் .. உமா மகேஸ்வரன் உட்பட எல்லா தலைவர்களும் தங்கள் பிரதிநிதியை தான் அனுப்பினார்கள் இதை மாநாட்டின் நாயகம் திரு.நெடுமாறன் அவர்களே ஒப்பு கொண்டுள்ளார். திரு.நெடுமாறன் அவர்கள் உயிரோடு தான் உள்ளார் என்பதை மறந்து விட்டீர்கள் போலும் ,
சரி ஈழத்திற்காக நீங்கள் ஆற்றிய பணிகளுக்கு வருவோம்
காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் உண்ணா நோன்பு இருந்து போரையே நிறுத்தி விட்டீர்கள் ..
ஒபாமாவல் முடியாததை , பான்-கி-மூன் அவர்களால் முடியாததை
நீங்கள் சாதித்து விடீர்கள் . இது போலவே இந்திய-பாகிஸ்தான் பிரச்சனை , இந்திய-சீன பிரச்சனை , திபெத்-சீன பிரச்சனை , இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்சனை போன்றவற்றிற்கும் உண்ணா நோன்பு இருந்து தீர்த்து வைத்தீர்கள் என்றால் உங்களை "உலகின் ஆதவன் " என்று உலக மக்கள் உரிமையோடு அழைப்பர் . குறைந்த பட்சம் தலாய்லாமா விக்கு உண்ணா நோன்பு பற்றி ஆலோசனையாவது கூறுங்கள்.
அய்யா இதை எல்லாம் விடுங்கள் முல்லை பெரியாறு பிரச்சனையை உண்ணா நோன்பு இருந்து தீர்த்து வையுங்கள் உங்கள்ளுக்கு புண்ணியமாக போகும் .
தமிழக மக்களுக்கு சில கேள்விகள்
1) "செங்கல் பட்டு சிறப்பு முகாம் ஆரமித்தது யார் ?"
2) "ஈழ அகதிகள் தமிழ் நாட்டில் தொழிற் கல்வி பயில கூடாது என்று அரசு ஆணை ஏற்றியது யார் ?"
3) "தியாகி.முத்துக்குமார் இறந்த அன்று ஐந்து லட்சம் மக்கள் திரண்ட கூட்டத்தை தனது அடிவருடியின் உதவியால் அமைதி படுத்தி போராட்டத்தை திசை திருப்பியது யார் ?"
4) "இது வரை நானூறு தமிழக மீனவர்கள் சிங்கள ராணுவத்தினரால் சுட்டு கொள்ள பட்டுளார்கள். (புலிகள் ஆதிக்கம் இப்போது இருந்திருந்தால் அவர்கள் தான் கொன்றார்கள் என்று கதையை மாற்றி எழுதி இருப்பீர்கள் !) அதற்கு கடிதம் எழுதுவதை தவிர கருணாநிதி என்ன செய்து விட்டார்
இந்த கேள்விகள் எல்லாவற்றையும் திரு.கருணாநிதியிடம் கேட்டு பதில் கூறுங்கள்
திரு கருணாநிதி அவர்களே உங்கள்ளுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள் ..
தயவு செய்து ஈழ தமிழர்கள் பற்றியும் , புலிகள் பற்றியும் ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்கள்

1 comment:

இளவழுதி வீரராசன் said...

அற்புதமான கருத்து. நல்ல கேள்விகள்.
எல்லா தமிழனுக்கும் மனதில் உள்ள உணர்வுகள் உங்கள் எழுத்துகளில்.