ஈழ மக்களின் துயரை துடைக்க நம்மை போன்ற தமிழ் உணர்வாளர்களின் உணர்வுகள் மட்டும் போதாது, செயல்பாடும் இத்தருணத்தில் அத்தியாய தேவையாகிறது.
நம்முடைய தேசியதலைவர் மேதகு. வேலு பிள்ளை பி்ரபாகரன் அவர்களின் கூற்றுப்படி ஈழப்போராட்டத்தின் அடுத்தகட்டம் புலம்பெயர்வாழ் தமிழர்களின் போராட்டத்தினுடாக ஐக்கியநாட்டு அமைப்பினையும், ஏனையநாடுகளின் கவனத்தினையும் ஈர்க்கமுடியும் என்பதை இங்கு நாம் உணரவேண்டும்.
மேதகு. வேலு பிள்ளை பி்ரபாகரன் அவர்களின் தலைமையின் கீழ் மூன்று சகாப்தங்களுக்கும் மேலாக ஆயுத போராட்டத்தினுடாக மட்டுமே தனி தமிழீழம் அமைக்க முடியும் என்பதை உணர்ந்து போராடி கொண்டு தனி தமிழீழம் அமைப்போம் என்ற தனியாத தாகத்தினை கொண்டு தன் உயிரையும் துச்சமாக மதித்து தமிழீழம் அமைய தன்னுயிரை நீத்த அனைத்து போராளிகளுக்கும் ஆண்டுதோறும் தலைவர் அவர்களால் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது.
இத்தனை வருட காலம் ஈழத்தில் இருந்த போராளிகளும், ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழீழவர்களும், அவர்களுடைய உறவினர்கள் மட்டுமே அனுசரித்த இந்த மாவீரர் தினம். இந்தவருடத்தில் இருந்து தமிழகத்திலும், தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து வாழும் புலம்பெயர்வாழ் மக்களினுடாக இந்த தினம் அனுசரிக்கப்படவேண்டும் என்பதே எனது செய்தி.
நவம்பர் 27ம் திகதி நம்முடைய வீட்டிலும் அந்த மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்துவோம். நம்முடைய உறவினர்களுக்கும் குடும்பத்தினருக்கும். குழந்தைகளுக்கும் இந்நாளை போற்ற வேண்டிய அவசியத்தினனயும் புரியவைப்போம். வீடுதலை போரட்டத்தில் உயிர் இழந்த மாவீரர்களுக்கும், போரினால் உயிரழந்த அப்பாவி மக்களுக்கும், இந்த நொடி வரையிலும் இறந்து கொண்டு இருக்கும் இயக்க போராளிகளும் இந்த தினம் அனுசரிப்போம்.
இந்த மின்னஞ்சலை உங்களில் உள்ள உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்புவதோடு அல்லாமல் அதனுடைய அவசியத்தினையும் உணர்த்துங்கள். அதேவேளை உங்களில் யாருக்கு எந்த மொழியில் புலமை இருக்கின்றதோ, அத்தனை மொழிகளிலும் மாவீரர் தினம் அனுசரிக்க வேண்டியதன் அவசியத்தினையும், சிறப்பினையும் எடுத்துரைக்க தவறாதீர்கள். அனைத்து மொழிகளிலும், அனைத்து நாட்டவரும் அவசியம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதனை உணர தவறாதீர்கள்.
மாவீரர் தினத்தின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்துங்கள். . . உங்களுடன் தொடர்பு கொண்டு இருக்கும் மற்ற நாட்டு நண்பர்களுக்கும் இந்நாளின் மகத்துவத்தை உணர வைத்திடுங்கள்.
ஈழவிடுதலை போராட்டத்திற்காக இத்தனை தியாகங்களை
புரிந்துள்ளார்கள் என்பதை உணர வைத்திடுங்கள்.
1 comment:
மாவீரர் நாள் தகவல் நிறைந்த கட்டுரைக்கு பாராட்டுக்கள் வீரா.
Post a Comment