Monday, November 30, 2009

மனதில் உறுதி வேண்டும்; தலைவரின் வழி செல்வோம்; மலரட்டும் தமிழீழம்

சில சந்தர்ப்பங்களில் குழப்பமான சூழலில் சிக்குண்டு வாழும் நிலை எமக்கு விதிக்கப் பட்டு விடுகின்றது. எம்மை மீறிய செயல்ப்பாடுகள்… எம்மால் சுமக்க முடியாத சுமைகள் எம் மீது சுமத்தப்படும் போது அவை எம்மை திக்குமுக்காடச் செய்து விடுகின்றுது. எதையும் சமாளிக்க முடியாது என்ற ஒரு சூழலில் தன்னம்பிக்கையை இழந்து விடுகின்றோம்.

anna-thalaiஇங்குதான் முடிவுகள் எடுப்பதில் சிக்கல்கள் உருவாகின்றது. சில சமயங்களில் வாழ்வதை விட இறப்பது சிறப்பானது என்ற முடிவுக்கு வருபவர்களும் உண்டு. ஏன்டா இந்த இனத்தில் வந்து பிறந்தோம் என்று எண்ணவும் தோன்றும.

நான் தமிழனாக பிறந்ததனால்தான் என் தலைவனை தலைவனாக பெறும் பாக்கியம் கிடைத்தது. வரலாற்று நாயகர்களுடன் பழகும் பெரும் பாக்கியம் கிட்டியது. தமிழின் தொன்மையான சிறப்பு ஒரு புறம். ஆழகிய மொழியை வளர்க்கப் பாடுபடும் வாய்ப்பும் கிடைத்தது என்ற மகிழ்ச்சி இன்னொருபுறம். பிற மொழிகளும் பல சோக வரலாற்றை கண்டுதான் வளர்ந்துள்ளது.

எனவே தமிழானாக பிறந்து தமிழனாக வாழ்வதில் எனக்கு பெருமைதான். உழைப்பில் ஆசையுள்ளவன் தொழிலை வெறுக்கமாட்டான். தாய் மீது அன்பு கொண்டவன் தாய்மொழியை சிறுமையடைய விடமாட்டான்.

நோக்கம் தெளிவானதாக இருக்குமானால் முடிவுகள் சுலபமானதாக இருக்கும். பிரிவை வகுத்த பின்பு பயந்தென்ன இலாபம்.. என்ற கண்ணதாசன் வரிகள் நடைமுறைச் சிக்கல்கல்களை கண்டு பயப்படாது உங்கள் இலட்சிய பயணத்தை தொடருங்கள் என்று சொல்லுகின்றது.. இதுபோன்று எத்தனை பாடல் வரிகள் உள்ளன.

நடைமுறைச் சிக்கல் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றது. நாம் அதை சரியாக பகுத்து அறியாமல் விடை காண அவதிப்படுகின்றோம். உதாரணமாக சிறிய வயதில் சில பிரச்சனைகள் எங்களை பயமுறுத்தியுள்ளன. அவற்றை இலகுவாக வெல்லும் ஆற்றல் அப்பொழுது எம்மிடம் இருக்கவில்லை. அன்றைய சூழலில் எமது அறிவும் வசதியும் அச் சிக்கலைக் கையாள போதுமானதாக இருக்கவில்லை எனலாம்.

மிகவும் சுலபமாக கையாளக் கூடிய விடயங்கள் அன்று பூதாகாரமான தோற்றத்தை கொண்டு பயமுறுத்தியுள்ளது. இன்று அதை நினைக்கும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கை முறையின் குறைகளை விளங்க இவ்வளவு ஆண்டுகள் சென்றுள்ளது என எண்ணத் தோன்றுகின்றது. காலம் பதில் சொல்லும் என்பதை நாம் புரிந்துகொள்ள இது நல்ல உதாரணமாக இருக்கும் என்று நான் நம்புகின்றேன். ஒரு காலத்தில் முடியாத விடயம் இன்னொரு காலத்தில் இலகுவானதாகி விடுகிறது

நாங்கள் ஒரு சிறுவட்டத்துக்குள் இருந்துகொண்டு சிலவற்றை சிந்திக்கின்றேம். எங்கள் ஊருக்குள் மட்டும் நாங்கள் வாழ்ந்தபோது நாங்கள் பெற்ற அறிவும் வாய்ப்புக்களும் போதுமானதாக இருந்ததில்லை. இந்த உலக ஊரெல்லாம் திரிந்து நாம் பெற்ற அறிவும் வளமும் எவ்வளவு வேறுபாடானது என்பதை இன்று உணருகின்றோம்.

சிந்திக்கும் வளம் கற்றலினால் தோன்றுகின்றது. அனுபவக் கல்வியை மிஞ்சிய கல்வி ஏதும் இல்லை என்பார் கற்றவர்.. எமது அனுபவமின்மை எப்பொழுதும் சில முடிவுகளை எடுக்கத் தடையாக உள்ளது. சில சமயங்களில் மற்றவருடன் முரண்படவும் வழிவகுத்து விடுகின்றது. நோக்கம் ஒன்றாக இருப்பினும் அடைவதற்கான வழிகளில் வேறுபாடுகள் உருவாகின்றது. நோக்கம் ஒன்றாக இருப்பினும் பல மார்க்கங்களான சமயங்கள் தோன்றுவதற்கு வெவ்வேறு அனுபவங்கள்தான் காரணமாகின்றன.

மற்றவருடைய அனுபவத்துக்கும் மதிப்புக் கொடுக்கும்போது இலகுவாக புரிந்துணர்வு ஏற்பட்டு விடுகின்றது. இஸ்லாமியரின் கலாச்சாரம் பாலைவன சூழலில் உருவாகியது. கொடும் மணல் புயலிலிருந்து தம்மையும் குழந்தைகளையும் பாதுகாக்க பெண்கள் முழவதும் மூடிய ஆடைகளை அணியவேண்டிய அவசியம் தோன்றியது. ஆதுவே காலப் போக்கில் இஸ்லாமிய பண்படாக வலுவடைந்து விட்டது

இறைவனை நம்புகின்றவருக்குள் எத்தனை பிரிவுகள் என்றாலும் நோக்கம் இறைபதம் அடைவதுதான். இந்த நடைமுறை வேறுபாடுகள் தோன்றக் காரணமான மொழி சமய பழக்கவழக்கங்கள் புவியியல் அமைப்பு பிராந்திய சமூக பொருளாதார அமைப்பு என்று பல்வேறுவிதமான சூழல் குழம்பு காரணிகளாக அமைந்துவிடுகின்றன. பன்னெடுங்காலம் சில பழக்க வழக்கங்களோடு வாழ்ந்தவரிடம் புதிய மாற்றங்களை இலகுவாக கண்டுவிட முடியாது. எனவேதான் உன்னைப்போல் உன் அயலவனையும் நேசி என்று யேசுபிதா சொன்னார்.

எமது தமிழ்ச் சமுதாயத்தின் சிக்கலான பழக்க வழக்கங்களை நாம் நன்றாக அறிந்திருந்தாலும் இச் சமுதாயத்தின் சிறப்பான குணங்கள் அதைவிட அதிகமானதாக
காணப்படுகின்றது. தோல்லியைக் கண்டு துவண்டு விழும் தமிழன் ஒரு வெற்றிச் செய்தியை கேட்டதும் துணிந்து எழுந்துவிடுவான்.

சில சமயங்களில் வெற்றிகரமான பின்வாங்கல் எதிர்கால வெற்றியை வலுப்படுத்த அத்தியாவசியமாகின்றது. இச் செயல் எதிரிக்கு இன அழிப்பு செய்ய வழிவகுத்து விடுகின்றது. பாரதூரமன விளைவுகளை ஏற்படுத்தி அழிவுகளைச் செய்ய எதிரிக்கு வாய்ப்பாகி விடுகின்றது.

விடுதலைப் போரை நசுக்குவதற்கு எதிரி போராடும் இனத்தை கொடுமையான சித்திரவதைக்குள் உட்படுத்துவான். இக் கொடுஞ் செயலுக்கு காரணம் போராடும் குணம் என்று அடிமைப் படுத்துவான். இங்குதான் நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். பொறுமையாக விடயங்களை அலசிப்பார்க்க வேண்டும்.. நிதானமாக எமது இலக்கு நோக்கிய பயணத்தை வலுப்படுத்த தேவையான வழிவகைகளை ஆராய்ந்து செயல்படவேண்டும். என்று மாசேதுங் கூறியுள்ளார்

தன் பலம் பிறர் பலம் அறிந்து செயல்பட வள்ளுவனார் போதித்த திருக்குறள் தமிழனை ஈராயிரம் ஆண்டுகளாக வழிமுறை செய்து வருகின்றது. சின்ன பாம்பை அடிப்பதானாலும் பெரிய தடியால் அடிக்கவேண்டும் என்றும் தேசிய தலைவர் கூறுவதும் நாம் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும்.

எமது தேசிய விடுதலை பல முட்டுக்கட்டைகளை கொண்டிருந்தமை 1977க்கு முன்னதாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்தியாவின் கொடும் பிடிக்குள் எமது தாயகம் இருப்பதை தேசியத் தலைவர் தெளிவாக புரிந்து வைத்திருந்தார். இலங்கை பேரினவாதிகளுடன் போரிட்டு வெல்வது மட்டுமன்றி இந்திய கூட்டு மாநில ஆட்சியாளரையும் வெல்ல வேண்டும் என்றும் அவர்களை வெல்வதுதான் சிரமமானது என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்த அடிப்படையில்தான் இந்திய சதித்திட்டத்துககுள் அகப்படாமல் தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும் வழிநடத்தி எமது போராட்டத்ததை உலக அரங்குவரை கொண்டு வந்துள்ளார் எமது தேசியத் தலைவர்.

ஓரு மிகப் பெரிய நாடு என தன்னைச் சொல்லிக் கொள்ளும் இந்தியாவின் கூட்டு மாநில ஆட்சி முறைக்கு அசாமின் காஸ்மீரின் விடுதலைப் போராட்டங்கள் எவ்வளவு அச்சுறுத்தலோ அவ்வளவு அச்சுறத்தலாக எமது போராட்டமும் அமைந்து விடும் என்ற கருத்தை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மிக உறுதியாக கையிலெடுத்துளளார்கள்.
எந்த விலைகொடுத்தும் தமிழீழம் அமைவதைத் தடுப்பது தான் அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.

ஈழ மக்கள் பாமரர் என்ற வகையில் இந்தியா தனது திட்டத்தை 1983க்கு முற்பட்ட காலங்களில் கையாண்டது. தேசிய தலைவர் தவிர்ந்த ஏனைய போராட்டக் குழு தலைவர்கள் இந்தியாவின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு தாம் இழைத்த பிழையை தேசிய தலைவர் மீது சுமத்தி தம்மை நியாயப்படுத்த முனைந்து தோல்வி கண்டனர்.

தமிழீழ மக்களின் விவேகத்தின் மிது நம்பிக்கை கொண்டு தேசியத் தலைவர் போராட்டத்தை விரைவுபடுத்த தொடங்கிய காலத்தில் 1987 ல் சிங்கள இராணுவம் மாபெரும் பின்னடைவை சந்திக்கும் போது தமிழீழம் விடுதலை அடையும் சூழலும் உருவாகிக் கொண்டிருந்தது.

தமிழீழத்தின் பொது நிர்வாக அலகுகள் தமிழரின் கைக்கு வரத் தொடங்கியிருப்பதை கண்டு டெல்லி அரசு அதிர்ந்தது. நாம் வேண்டாத போது தனது படையை எம்மண்ணில் நேரடியாக இறக்கி. புல சூழ்ச்சிகளை செய்து எமது தேசிய விடுதலைப் போரை நசுக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொல்லணா கொடுமைகளை எம்மீது திணித்து பயனற்று இழப்புடன் நாடு மீண்டது.

தனது திட்டம் சிறு பயனைக் கொடுத்தது என்ற நிறைவு இந்தியாவுக்கு இருந்தாலும் அது பூரணமான விளைவை ஏற்படுத்த வில்லை. அதி உயர் விலையை கொடுத்தாயினும் தமிழீழ விடுதைலப் புலிகளின் சர்வதேச செல்வாக்கை குலைத்துவிடும் திட்டங்கள் 1990ல் இந்தியாவினால் வகுக்கப்பட்டன.

புலம் பெயர் நாடுகளில் பல கூலித்தமிழரும் இந்தியாவின் திட்டத்தை வழிநடத்த தயாராக இருந்தனர். இவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. இலங்கை இ.ந்திய கூட்டுச் சதியாக போதைவஸ்து கடத்தும் நாடகம் அரங்கேறியது. பிடிபடும் அனைவரும் தம்மை விடுதலைப் புலிகள் என்று சொல்வதனூடாக அனுதாபத்தை பெற்று வெளிநாடடு சுங்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்கும் அளவுக்கு விடுதலைப் புலிகள் மீதான அனுதாபமும் பிரமிப்பும் வெளிநாட்டவரிடையே பரவி இருந்தது.

தொடர்ச்சியான இச்சதியால் விடுதலைப் புலிகளின் நற்பெயர் பாதிப்புக்குள்ளானது. தமது முயற்சியில் ஓரளவு வெற்றியை கண்ட இந்திய இலங்கை கூட்டுச் சதியாளர். துமது அடுத்த கட்ட நடவடிக்கையாக சிறர்களை படையில் இணைக்கும் விடையத்தை கையிலெடுத்தனர்.

தமது அதிகாரத்தையும் அரசியல் செல்வாக்கு நிதி வசதி என்பவற்றை பயன்படுத்தி பல செய்தி நிறுவனங்களை தம் வசமாக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளை மிக இலகுவாக பரப்பினர்.

ராஜீவ் காந்தி முதல் கதிர்காமர் வரை பல கொலைகள் மிக இலகுவாக நடத்தப்பட்டன. இவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டு நடத்தியதாக மின்னல் வேக பரப்புரைகள் நடந்தேறின.

சிங்கள கிரமங்கள் மீதான பல தாக்குதல்களும் பள்ளிவாசலகள் மீதான தாக்குதல்களும் கூட விடுதலைப் புலிகளின் பெயரில் நடத்தப்பட்டன. இவை உலக அரங்கில் மிக கொடுமையாக எடுத்துக் காட்டப்பட்ட போது பலரும் அதை நம்ப வேண்டிய சூழல் உருவாகியது.

இதுவே விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலுக்குள் சில நாடுகள் சேர்த்துக் கொள்ள போதுமானதாக இருந்தது.

தேசியத் தலைவரை நன்கு தெரிந்திருந்த இந்திய ஆட்சியாளா தலைவரின் தன்நலமற்ற சமூக நலத்திட்டங்களைக் கண்டு மிரண்டு போயினர். மகாத்மா காந்தியை நாவளவில் வைத்துக் கொண்டு மிக மோசமான ஆட்சியை நடத்துபவர் மத்தியில் மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு ஒரு அழகான நாட்டை கட்டிய பெருமை தேசியத்தலைவருக்கு உரியது.

தெற்காசியாவின் புரையோடிப் போன வறுமையும் பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறையும் சாதிக் கொடுமையும் தமிழீழத்தில் துடைத்து ஒழிக்கப்பட்டது. இந்த பிராந்தியத்தின் ஆட்சியாளர்களிடையே தங்களை தங்கள் நாட்டு மக்கள் இழிவுபடுத்த தமிழீழம் வழி வகுத்துவிடும் என்ற பயமும் இருக்கின்றது.

ஏறக் குறைய மூன்றில் ஒரு பங்கு தமிழீழ மக்கள் வெளிநாடுகளில் வசதியாக வாழ்வதால் தமிழீழம் மேற்குலகின் கொள்கையை தனது கொள்கை வகுப்புக்குள் செல்வாக்கானதாக ஆக்கிவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு.

சாக்கடைப் பெருச்சாளிகள் போன்று குப்பத்து மக்கள் இல்லாத வளமான நாடாக தமிழீழம் அமைந்து விடுவது இந்திய அரசியலில் பல குழப்பங்களளை உருவாக்கிவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு.

இதை விட சிங்கள தேசமும் தனது கையை விட்டு சென்றுவிடும் என்ற பயமும் இந்தியாவுக்கு உண்டு. ஈழப் பிரச்சினை ஒன்றுதான் சிங்கள தேசத்தை இந்தியாவின் கைக்குள் வைத்திருக்க உதவுகின்றது. ஈழப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்த இந்தியா எப்பொழுதும் முயற்சி செய்யும்.

வுலுவுள்ள ஒரு நாடாக பாகிஸ்தான் போன்று சிங்கள தேசம் வளரும்போது வங்காளதேசம் அமைந்ததுபோல் ஈழம் அமையலாம். ஆனாலும் அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. தமிழ் நாடு பிரிந்து விடும் என்ற பயம் இந்தியாவுக்கு நிறையவே உண்டு. அதனால்தான் சிங்கள தேசத்துடனாக சீனாவின் பாகிஸ்தானின் சிநேகத்தையும் இந்தியா விரும்புவதில்லை.

தமிழர்களாகிய எங்கள்மீது பல அவதூறான பொய்யான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. தெரிந்தோ தெரியாமலோ உங்கள் செயல்கள் எம் இனத்தின் நற்பெயரைக் கெடுக்காமல் பார்த்துக் கொண்டாலே அது நீங்கள் எம் இனத்துக்கு செய்யும் பெரும் நற்செயலாகும்.

அதை விட ஒரு படிமேலாக எங்கள் போராட்டம் பற்றிய விளக்கத்தையும் உண்மை நிலையையும் உலகத்தாருக்கு எடுத்துச் சொல்வதனூடாக நீங்களும் தேசிய உணர்வாளராக தேசிய தலைவரால் தமிழீழத்தில் மதிப்பளிக்கப்படுவீர்கள்

அன்புத் தமிழ் மக்களே நாம் எத்தகைய சிக்கலில் உள்ளோம் என்பதை தலைவர் மிகத் தெளிவாக உங்களுக்கு பல கோணங்களில் தெளிவு படுத்தியுள்ளார். எம்மைச் சூழ பல நடைமுறைச் சிக்கல்கள் காணப்பட்டடாலும் போராடும் தன்மையை இழக்காமல் காய் நகர்த்தலை மேற் கொள்ள தலைவர் படும் துயரம் நெருப்புள் வாழ்வதை விடக் கொடியது.

எங்கள் இனத்துக்காக முப்பதாயிரத்துக்கும் அதிகமான மாவீரரும் நூற்றைம்பது ஆயிரத்துக்கும் அதிகமான தன்மானத் தமிழரும் தற்கொடை ஆகியுள்ளனர். இவர்களின் தியாகம் எமது மன உறுதியை வளர்த்துள்ளது. உலக நாடுகளிடம் எங்கள் நியாயங்களை இடை விடாது எடுத்துச் சொல்வதனூடாக எங்கள் தாயகத்தை மீடகும் தார்மீக கடமை புலம் பெயர்ந்து வாழும் எம்மிடம் தேசியத் தலைவரால் ஓப்படைக்கப்பட்டுள்ளது..

யார் எதைச் சொன்னாலும் சொல்லிவிடடுப் போகட்டும்.. எவர் வேண்டுமானாலும் அறிக்கைளை விடட்டும். எமது தலைவரின் சிந்தனை எது என்று உங்களுக்கு தெரியும். தலைவர் வெளிப்படும்வரை பொறுமையாக நிதானமாக உறுதியோடு செயல்ப்படுங்கள்.

இந்திய வல்லாதிக்கம் இலங்கை இனவாதிகளின் சதி வலைக்குள் தானாக சிக்கித் தவிக்கின்றது. இலங்கை இனவாதமும் சீர்குலைந்து நாசவழியை தேடிக்கொண்டு தவிக்கிறது. நீங்கள் புத்திஜீவிகளாக வாழ்கின்றீர்கள். எதையும் பகுத்தறிந்து செயற்படக் கூடியவர்களாக இருக்கின்றீர்கள்;.

இன்றும் உங்கள் இதயத்துள் ஆறாத வடுக்களாக பல துயரங்கள் இருக்கின்றன. இவை எல்லாம் எப்படி நடந்தேறின என்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்துள்ளீர்கள். நாங்கள் நீதியின் பக்கம் நின்று இவ் உலகிடம் நீதி கேட்கின்றோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எமது பாதை எது என்பதும் தேசியத்தலைவரின் வழிநடத்தலும் எம்மிடம் நிலைத்திருக்கும்.

தமிழ் தேசத்தின் சிற்பம் செதுக்கப்பட்டு பாதி வேலை முடிந்த நிலையில் உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சகல சர்வதேச தடைகளையும் தகர்த்து எம் இனிவரும் சந்ததிக்கு நல்லதொரு வாழ்வைக் காட்ட இப்புலம் பெயர் நாட்டின் வாழ்க்கை வாய்ப்பபை பயன் படுத்துவோம்.

நாம் புலம் பெயர்ந்தது அகதியாக வாழ்ந்து மடிவதற்காக இல்லை
நம் நாடு காணும் இறுதிப் பணி ஏற்று விடிவு காண்பதற்காக. காலம் இட்ட கட்டளை உன்னையும் என்னையும் புலம்பெயரச் செய்துள்ளது. தேசப் பணியாற்ற விரைந்து வா.

மனதில் உறுதி வேண்டும்
தலைவரின் வழி செல்வோம்
மலரட்டும் தமிழீழம்


No comments: