Friday, February 11, 2011

மே 2011: ஆட்சி மாற்றத்திற்கான தேர்தலல்ல - கா.தமிழ்வேங்கை

தமிழகத்திற்கு 2011 மே மாதம் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி தமிழ்த்தேசிய ஊணர்வாளர்களிடையே ஓருவித பரபரப்பு காணப்படுவதை ஆறிய முடிகிறது,

இந்த முறை காங்கிரசை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என ஒரு சிலரும், கருணாநிதியை தோற்கடிக்க வேண்டும் என ஒரு சிலரும், மூன்றாது அணி அமைக்க வேண்டும் என ஒரு சிலரும்,ஜெயலலிதாவை ஆதரிக்கலாம் என ஒரு சிலரும்,கருணாநிதியை எதிர்த்தால் மீண்டும் ஜெயலலிதா வந்துவிடுவார் பாசிச ஆட்சி மீண்டும் ஏற்படும் என ஒரு சிலருமாக கருத்துத் தெரிவிக்கின்றனர்.

உண்மையில் தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் எண்ணம். மனநிலை சிதைந்து வெகுவாகக் கூறுபட்டுக் காணப்படுவதின் மூலம் மேற்கண்ட கருத்துச் சிதறல்களில் காணமுடிகிறது,பேராசிரியர் கல்யாணி. ஜார்ச் புஷ்சை எதிர்த்து மேடையில் பேசுபவன் உள்ளூர் காவல் அதிகாரியை எதிர்த்துப் பேசத் தயங்குகிறான் என்பார்,காங்கிரஸ்தான் தமிழினத்தின் முதல் எதிரி என்று கூறுபவர்களின் மனநிலையும் ஜார்ச் புஷ்சை எதிர்ப்பவனின் மனநிலையும் ஒன்றுதான், (இப்போது ஒபாமா) காங்கிரசைத் தலையெடுக்க விடாமல் இந்தத் தேர்தலில் செய்ய வேண்டும் என்று கூக்குரலிடும் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள், திண்டிவனம் நகரில் பெருந்தலைவர் காமராசர் சிலை அருகில் டாஸ்மாக் மதுக்கடையைத் திறந்தபோது சில நாளிதழ்களில் எதிப்பு தெரிவித்துச் செய்தி வெளியானதால் உடனடியாக அப்புறப்படுத்தினார்கள், டாஸ்மாக் கடையை அல்ல காமராசரின் சிலையை.இதைக் கண்டித்து தமிழகத்தில் ஒரு காங்கிரஸ் நாய்கூட குரைக்கவில்லை. இதுதான் இன்றைய காங்கிரஸ், காங்கிரசின் தேசிய செயல்திட்டம் என்பது அதன் தலைவர்களின் பிறந்தநாளுக்கு இனிப்பு வழங்கிக்

கொண்டாடுவதுதான். சுருக்கமாகச் சொன்னால் காங்கிரஸ் ஒரு தலையில்லாத முண்டம்.அந்த முண்டத்திற்கு முகமூடிபோட்டு தங்களின் தோள்களில் தூக்கிவரும் கொத்தடிமைகள் தான் திமுக, அதிமுகவாகும், தற்போது கொத்தடிமை வேலையை சிறப்பாகச் செய்து முன்னிலை வகிப்பது திமுக என்பது எல்லோருக்கும் தெரியும்,காங்கிரசும் அதன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சோனியா ,மன்மோகன் சிங்,சிதம்பரம் போன்றவர்கள் நம் இனத்தின் எதிரிகள் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை, ஆனால் பெருந்தலைவர் காமராசருக்குப் பிறகு முடமாகிக் கிடக்கும் காங்கிரசுக்கு இன்று முட்டுக்கொடுப்பவர்கள் யார் ?

திமுகவும். அதன் தலைவர் கருணாநிதியும் தானே .ஆனால் தமிழினத்தின் எதிரிகளை வரிசைப்படுத்தும் சிலர் காங்கிரசை முதலிலும் திமுகவை இரண்டாம் இடத்திலும் வைத்துப்பார்ப்பது எப்படி சரியானது என்பதுதான் தெரியவில்லை, திமுகவைத் தொடங்கிய அண்ணா கழகத்தைக் குடும்பமாக்கினார் இனால் இன்று குடும்பதையே கழகமாக்கிவிட்டார் கருணாநிதி, ஆசியப் பணக்காரர்களின் வரிசையில் இன்று தனக்கொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது கருணாநிதியின் குடும்பம், போகட்டும்.

ஆனால் ஐந்து முறை அரியணையில் ஏற்றிய மக்களுக்கு நன்றி சொல்லத் தேவையில்லை துரோகம் செய்யாமல் இருந்தாரா கருணாநிதி, ஈழம் இன்று சுடுகாடானதற்கு முக்கியக் காரணம் கருணாநிதிதான்,ஓரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் இராஜபக்சே நமக்கு மூன்றாம் எதிரி. ஆயுதத்தை அள்ளிக்கொடுத்த சோனியா. மன்மோகன்சிங் நமக்கு இரண்டாம் எதிரிகள், ஈழத்தில் இரத்த ஆறு ஓடியபோது மழை நின்றாலும் தூவானம் தொடரத்தான் செய்யும் என்று இனப்படுகொலையை நியாயப்படுத்தியவர் கருணாநிதி,ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இவரே நேரடி சாட்சி, மலையாள சிவசங்கரமேனனும். எம்,கே,நாராயணனும். பிரணாப்முகர்சியும் சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்து கலந்தாலோசிதுவிட்டுத்தான் கொழும்புக்குச் சென்றார்கள், செய்யவேண்டியதை நீங்கள் செய்யுங்கள் திறமையாக நாடகமாடி தமிழ்நாட்டு மக்களை நான் சமாளித்துக் கொள்கிறேன் என்று கொலைகாரனுக்கு துணைபோனவர்களை வாழ்த்தி வழியனுப்பியவர் கருணாநிதி, தமிழின வரலாற்றில் நீண்ட காலம் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும். தமிழ்மண்ணுக்கும் துரோகம்

செய்தவர் என்ற பெருமை கருணாநிதியையே சாரும், தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது அதே விமானத்திலேயே திருப்பி அனுப்பிய கல்நெஞ்சக்காரர்.

ஈழத்து இனப்படுகொலை கண்டு தமிழகத்தின் குக்கிராம மக்கள் கூட குமுறி எழுந்தார்கள், முத்துக்குமார் தன்னை தீக்கு இரையாக்கிக்கொண்டு தமிழகத்து இளைஞர்களை வீதிக்குக் கொண்டு வந்து போராடவைத்தார், பற்றிப்படரும் தமிழ்த்தேசிய தீச்சுவாலையை எப்படி அணைப்பது என்று திட்டம் தீட்டுவதிலேயே கருணாநிதி கவனமாக இருந்தாரே ஒழிய நம் இனத்தின் குரலாய் கடைசிவரை அவர் ஒலிக்கவே இல்லை, தமிழினம் கருவருக்கப்படுவதை முதலமைச்சர் நற்காலியில் படுத்துக்கொண்டு அவர் குரூரமாக ரசித்துக் கொண்டிருந்தார், ஒரு இனத்தின் தலைவனாய் தேசத்தின் முதல்வனாய் இந்த தமிழ் இனத்திற்கு அவர் செய்த ஒரே தியாகம் அண்ணா சமாதியில் உட்கார்ந்து காலை உணவிற்கும். மதிய உணவிற்கும் இடைப்பட்ட வேளையில் பட்டினி கிடந்து சாதனை புரிந்ததுதான்,தமிழினத்தை கருணாநிதி எட்டிக்காயாக வெறுப்பதை இரண்டு எளிய எடுத்துக்காட்டுடன் விளக்க விரும்புகிறேன், ஒன்று தமிழ் குறித்தது மற்றொன்று தமிழினம் குறித்தது,தன்னுடைய மகன் அமைச்சர் அழகிரிக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரியாததால் ஒரு முறை கூட நாடாளுமன்றத்தில் அழகிரி பேசவில்லை, தேசிய மொழி. தொடர்பு மொழி ஏன்ற அடையாளத்துடன் இந்தியும் ஆங்கிலமும் திகழ்வதால் இவ்விரண்டு மொழியும் தெரியாத அழகிரி. திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப்போல திருதிருவென விழிப்பது கண்டு கருணாநிதியால் கொதித்தெழ முடியவில்லை,

டெல்லியின் பிராந்திய மொழிப் பட்டியலில் இருக்கும் தமிழ். எங்கள் தமிழர்களுக்கு தேசிய மொழி. அம்மொழியில் பேச அழகிரியை அனுமதிக்க வேண்டும் என்று சுயநலத்துடன் தன் மகனுக்காகக் கூட தமிழை உயர்த்திப்பிடிக்க விரும்பாதவர் கருணாநிதி,மற்றொன்று. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து வரும் ஜெயலலிதா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் ஏற்பட்ட ஈழ எழுட்சியைக் கண்டு தன் நிலைப்பாட்டை ஓட்டுக்காக மாற்றிக்கொண்டார்.ஈழத்தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்க முயற்சி செய்வேன். ஈழவிடுதலைப் போராட்டம் நியாயமானது என்றெல்லாம் போகுமிடத்தில் பேசி கைதட்டல் பெற்றார்.

ஜெயலலிதாவின் முன் கதை நமக்குத் தெரியாததல்ல,வாக்கு வங்கியை கவர்வதற்காகவே அவர் அப்படி பேசினார், ஆனால் தனக்கு வாக்கு

வேண்டும் என்கிற சுயநலத்திற்காகக்கூட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்காதவர் கருணாநிதி, இப்படி ஒன்றல்ல இரண்டல்ல கருணாநிதியின் ஓராயிரம் துரோகத்தைப் பட்டியலிடலாம்.

ஒரு சிலர் கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஒரு சேரப் பார்க்கிறார்கள்,ஜெயலலிதா சேலைகட்டிய கருணாநிதி, கருணாநிதி வேட்டி கட்டிய ஜெயலலிதா என்று எளிமையாக இவர்கள் தரும் விளக்கம் கேட்பதற்கு நகைச்சுவையுடன் கூடிய அழகியல் இதில் இருந்தாலும் இருவருக்குமான பண்பு வேறுபாட்டை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள், உண்மையில் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர் கருணாநிதி, அடித்துப் பிடுங்குபவர் ஜெயலலிதா, கருணாநிதி எழுதிய பாயும்புலி பண்டாரக வன்னியன் என்ற கதையில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் பிலிமதல்லவை. சூழ்ச்சிக்குப் பெயர் போன பிலிமதல்லவையைப் பற்றி கருணாநிதி இப்படி எழுதியிருப்பார் -ஆயிரம் குள்ள நரிகளின் மூளை ஓரு வெள்ளைக்காரனுக்கு ஆயிரம் வெள்ளைகாரனின் மூளை தான் ஓரு பிலிமதல்லவையின் மூளையாகும். சூழ்ச்சியில்,வஞ்சகத்தில், குழிபறிப்பதில்,காட்டிக்கொடுப்பதில், துரோகத்தில் ஆயிரம் பிலிமதல்லவையின் மூளைக்கு சமமானவர் கருணாநிதி தமிழைக் கரைத்துக்குடித்து ஏப்பம்விட்ட தமிழாய்ந்த தமிழறிஞர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆயிரம்தான் இருந்தாலும் ஜெயலலிதா ஒரு பாப்பாத்தி அதுவும் கன்னடப் பாப்பாத்தி என்பது சிலரின் வாதம், அடிப்படையில் பெரியாரின் கொள்கைப்படி நடந்து கொள்வதாகத் தங்களுக்குத் தாங்களே மகுடம் சூட்டிக்கொள்ளும் மடையர்கள் இவர்கள், 03-02௨011 அன்று சென்னையில் திமுகவின் பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி. பொதுக்கூட்டத்திற்கான விளம்பரத்தை வெளியிட தினமலர் நாளிதழ் மறுத்ததை சுட்டிக்காட்டி வழக்கமான தனது ஆரிய-திராவிடப் பசப்புமொழியை அள்ளி வீசினார், ஆரியர்களை எதிர்ப்பது உண்மையென்றால் ஆரிய தினமலரிடம் ஏன் விளம்பத்திற்காக அலையவேண்டும், தனது விளம்பத்தை நிராகரித்த தினமலரை உடன்பிறப்புக்கள் நிராகரிக்கவேண்டும் என்று கருணாநிதி கூறுவாரா? அப்படிக் கூறினால் உடன்பிறப்புக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையில்தான் உள்ளனரா? ஜெயலலிதாவைவிட பார்ப்பனர்களை வளர்த்துவிடுவதில் முனைப்புகாட்டி வருவபர் கருணாநிதி என்பதை நாடே அறியும், தனது சுயநலத்திற்காகப் பார்ப்பனர்களை சம்மந்தியாக்கிக்கொண்டு இந்து ராம். எஸ்,வி,சேகர் போன்ற கழிசடைகளுடன் கொஞ்சிக்குலாவும் கருணாநிதி. திரும்பத் திரும்ப ஆரிய திராவிடப்போர் ஏன்று மேடையில் மட்டும் முழங்குவதை பெரியாரின் பிஞ்சுகள் உணரவேண்டும்,தமிழுக்கு அடுத்தபடியாகத் தங்களுக்குப் பிடித்த மொழி எது? என்ற வினாவிற்குக் கருணாநிதியின் விடை சுந்தரத் தெலுங்கு என்பதாகும், சுந்தர அல்லது சுந்தரம் என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு அழகு என்று பொருள், அழகுத் தெலுங்குதான் தனக்கு பிடிக்கும் என்பததன் பொருள்.

தனது முன்னோரின் மொழி தெலுங்கு என்று தெரிந்ததால்தானே கருணாநிதி இப்படிப் பேசுகிறார், கன்னடப் பாப்பாதி என்று ஜெயலலிதாவைக் கூறும் பெரியாரின் கைத்தடிகள் கருணாநிதியை தெலுங்கர் என்று ஏன் கூறுவது இல்லை, தமிழுக்கு அடுத்தபடியாக என்று கேள்வி எழுப்பாமல் பிடித்த மொழி எது ஏன்று கேட்டிருந்தால் அப்போதும் சுந்தரத் தெலுங்கு என்று ‘தமிழினத் தலைவர்’ கருணாநிதி சொன்னாலும் வியப்பதற்கில்லையே,புலிகள் பயங்கராவதிகள் என்று பிதற்றுவதோடு ஜெயலலிதா நிறுத்திக்கொள்கிறார், ஆனால் கருணாநிதியோ புலிகளை நாள்தோறும் வன்மத்தோடு வசைபாடுவதிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறார். தனது குடும்பத்தில் இன்னும் குத்து வெட்டு நடக்காததுதான் பாக்கி.வாரிசு அரசியலை வளர்த்து விட்டு வாரிசுகளாலேயே தனது கதை முடியப்போகிறது என்று தெரிந்தும்

புலிகளின் தேசப்பற்றை - வீரம் செரிந்த விடுதலைப்போராட்டத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இழிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல்,துரோகிகளுக்கு எதிரான புலிகளின் நடவடிக்ககையை சகோதரச்சண்டையாகத் திரித்துக் கூறிவருபவர்தான் கருணாநிதி.

இந்த நேரத்தில் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் பிரபாகரன்.

கொல்லப்பட வேண்டும் என்று சோனியா,ராஜபக்சேவைவிட அதிகமானத் துடிப்பவர் கருணாநிதி, நாற்பது வயதிலேயே உலகத் தமிழர்களின் தலைவனாக உயர்ந்து விட்டாரே பிரபாகரன், ஆனால் நாமோ ஜால்ராக்களின் பாராட்டுக் கூட்டங்களில்தான் தமிழினத்தலைவராக பேசப்படுகிறோம் என்ற காழ்ப்புணர்ச்சியினால் பிரபாகரனை வெறுப்பவர்களில் இன்று உலகதில் முதலாவதாக இருப்பவர் கருணாநிதிதான், அதனால் தான் பிரபாகரன் கைது செய்யப்பட்டால் அவரை போரஸ் மன்னன் போன்று கவுரமாக நடத்தவேண்டும் என்று கருணாநிதியால் கற்பனை செய்ய முடிகிறது, ஆனால் இவரது எண்ணம் தவிடுபொடியாகும், புலிகள் மீண்டு வருவார்கள். மீண்டும் வருவார்கள்,தலைவர் பிரபாகரன் தலைமையில் வீரம் செரிந்த விடுதலைப்போர் மீண்டும் வெடிக்கும், துரோகி கருணா(நிதியின்) காலத்திலேயே ஈழம் மலரும்,சிங்களக் கடற்படையினரால் இதுவரை 537 மீனவத் தமிழச்சிகளின் தாலிகள் அறுக்கப்பட்டுள்ளன, 2011 ஜனவரி மாதத்தில் மட்டும் 2 தாலிகள் சிங்கள ஈராணுவத்தால் அறுக்கப்பட்டுள்ளன.

இந்தியக் கடற்படைத் தளபதி கருணாநிதியைச் சந்தித்து இனி மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் கேடு நேராது என்று வாக்குறுதி கொடுத்த சில மணி நேரங்களிலேயே ஜெயக்குமார் என்ற மீனவர் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார், புஷ்பவனம் கிராமத்தில் ஒப்பாரி ஓலம் ஒலித்துக்கொண்டிருந்த நேரத்தில் பிரணாப்முகர்சி சென்னை வந்து கருணாநிதியைச் சந்தித்த புகைப்படம் அனைத்து நாளிதழ்களிலும் முதல் பக்கத்தில் வெளியானது, அதில் சிரித்துக்கொண்டு கருணாநிதி காட்சியளிப்பது அவரது இதயத்தில் ஈரம் இல்லை ஏன்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது, இவர்கள் வீட்டில் பிணம் விழுந்தால் இந்த தேசமே அழவேண்டும், ஆனால் இந்த தேசத்தில் ஒரு பிணம் அதுவும் இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு விழ்ந்தபோது இவர் சிரித்துக் கொண்டு இருக்கிறார், (சிரிப்பாய்ச் சிரிக்கும் இவரது குடும்ப அரசியலைப் பார்த்து நாடே நகைப்பது இவருக்கு தெரியாது போலும்) இப்போது மீனவர்களின் போராட்டம் சற்றுத் தீவிரமடைவதைக் கண்டு சிங்காரவேலருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக அறிவித்துப் பிரச்சனையைத் திசை திருப்புகிறார் மீனவனுக்குக்கடலிலேயே சமாதிகட்டும் சிங்களவனை எதிர்த்துக் கேட்கத் துப்புக்கெட்ட கருணாநிதி.

மீனவர்களின் போராட்டத்தை மழுங்கடித்து மணிமண்டபம் நாடகம் ஆடுகிறார், இப்படித் தமிழினம் கூர்மையடையும் போதும்.பொங்கி எழும்போதும் தனது சூழ்ச்சியால் ,நயவஞ்சகத்தால் முனை மழுங்கச் செய்வதும் முறியடிப்பதும் கருணாநிதியின் வாடிக்கையாகும், நீயென்ன சொல்வது நானென்ன கேட்பது என்று முரண்டுபிடிக்கும் ஜெயலலிதாவிற்குக் கருணாநிதி போன்று சூழ்ச்சி அரசியல் தெரியாது. சோவும். சு,சாமியும் கூட ஜெயலலிதாவிற்கு அப்படிச் சொல்லிக்கொடுப்பதில்லை என்பதைக் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் என்று வாதிடுபவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்,அது சரி ஒருவர் நெஞ்சில் குத்துகிறார், மற்றொருவார் முதுகில் குத்துகிறார், இதிலென்ன அளவுகோல் இவ்விருவரையுமே அப்புரப்படுத்தியாக வேண்டும் என்று வீராவேசமாகத் தலையங்கம் எழுதுபவர்கள் எழுதுவதோடு சரி,தமிழனத்தின் இருபொரும் தீய சக்திகள் கருணாநிதி,ஜெயலலிதா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உடன்பிறப்புக்கள் அல்லது ரத்தத்தின் ரத்தங்கள் முழங்குவது போன்று யாரும் இங்கு நிரந்தர முதல்வர் கிடையாது, ஜெயலலிதா மீதான எதிர்ப்பு கருணாநிதிக்கு ஆதரவாக மாறுகிறது, கருணாநிதியின் மீதான கோபம் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக மாறுகிறது, உண்மையில் காலம் கடந்த பின்பும் கருணாநிதி முதல்வராக நீடிப்பதற்குக் காரணம் ஒரு வகையில் ஜெயலலிதாதான்,ஜெயலலிதாவின் வரலாற்றுத் தவறுகள் கருணாநிதிக்கு வாழ்வு தந்து கொண்டிருக்கின்றன, இருவரின் எதிரெதிர் அரசியலால் தமிழகம் தனது உரிமைகள் இழந்து அடிமை தேசமாக மாறிக்கொண்டிருக்கிறது, இதற்கு என்ன வழி?

கருணாநிதியின் இந்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் வேறெப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன, ஒரு அடி மணல் உருவாக 10 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன, ஆனால் 15 அடிக்கும் அதிகமான ஆழத்தில் மணலை அள்ளி ஆந்திரா, கேரளா மற்றும் மாலத்தீவுக்கும் அரபு நாடுகளுக்கும் பகிரங்கமாகத் திமுகவினர் கடத்தி வருகின்றனர். மலைகள் உடைக்கப்படுகின்றன,காடுகள் அழிக்கப்படுகின்றன, நீர் நிலைகள் பராமரிப்பில்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன, விவசாயிகள் நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு நகரங்களில் குடிபெயர்கிறார்கள், கிராமங்கள் அழிந்து வருகின்றன, வேளாண் நிலங்கள் தரிசு நிலங்களாக இருந்தாலும் பரவாயில்லை கால்நடைகளின் மேய்சலுக்குப் பயன்படும். மாறாக அவை வீட்டு மனைகளாகக் கூறுபோடப்படுகின்றன, இதனால் உணவு உற்பத்தி குறைந்து விட்டது, உலகின் பழமையான ஓர் இனம் விரைவில் வயிற்றுப்பசிக்காகப் பிச்சையெடுக்கப்போகிறது.

விலைவாசி விண்ணை முட்டுகிறது. படித்த 70 லட்சம் பேருக்கு வேலை இல்லை, கள்ளுக்கடையை எதிர்க்கும் கருணாநிதி சாராயக்கடையைத்

திறந்து இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகிறார்.மனித உரிமைகள்,மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படுகின்றன, இந்த ஆட்சியில் இதுவரை 36 பேர் மோதல் படுகொலை என்ற பெயரில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன. அதோடு திரைத்துறையையும் தன்வசப்படுத்திக் கொண்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக தன்மானமுள்ள ஒரு தேசிய இனத்தைச் சுயநலக்கூட்டமாக சோம்பேறி இனமாக வாழவேண்டும் என நினைத்து மாதத்திற்கொரு இலவசத்திட்டங்கள், தங்கக்குவியலைக் கண்டவர்கள் அனைத்தும் தனக்கே என ஊரிமை கோருவதுபோல தமிழ்நாட்டையே தனது குடும்பச் சொத்தாக்கிக்கொண்டிருக்கும் கருணாநிதியை நிரந்தரமாக வீட்டிற்கு அனுப்ப சரியான தருணம் இந்த தேர்தல்தான், அடுத்த தேர்தலை அவர் சந்திக்கப்போவதில்லை, காரணம் அவரது வயதும் வாரிசுகளும் அதற்கு இடம் கொடுக்கப்போவதில்லை,அப்படியானால் ஜெயலலிதா ஒன்றுமே செய்யாத அப்பாவியா என்றால் இல்லை,

வேறுபாடு என்னவென்றால் ஜெயலலிதாவின் ஊழல் அல்பத்தனமானது. அதனால்தான் தனது தோழி சசிகலாவுடன் சேர்ந்து நகையை அள்ளி பூசிக்கொண்டு புகைப்படத்திற்கு காட்சிதந்தது, நூறு ஜோடிக்கும்மேல் செறுப்பு வாங்கி அடுக்கியது, ஆனால் கருணாநிதியின் ஊழல் அப்படியல்ல, கனிமொழியைப் பாருங்கள் பத்து ரூபாய் மதிப்புள்ள பாசிமணியைத் தவிர அவரது கருத்தில் வேறுரொன்றும் இல்லை குழந்தைத்தனமான அவரது புன்னகைக்குள் ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிம் கோடி ஒளிந்திருப்பதை எவர் அறிவார், தயாநிதிமாறன் 600 கோடியை லஞ்சமாகத் தனது பாட்டி தயாளுவிடம் கொடுத்துத்தான் ஜவுளித்துறையைப் பெற்றார் என்று ஊடகங்கள் திரும்பத் திரும்ப கூறியபோதும் பாட்டியும் பேரனும் வாய்திறக்கவில்லை.
தாத்தா மட்டும் அது அண்டப்புழுகு என்று மண்ணுக்கும் விண்ணுக்குமாக எகிறிக்குதிக்கிறார் இதுதான் இன்றைய திமுக.டுனீசியா. எகிப்து, யேமன் நாட்டு அதிபர்களுக்கு எதிராக அந்நாடுகளின் மக்கள் கொதித்திதெழுந்து போராடுவதுபோல கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு.

ஊழலுக்கு எதிராகத் தமிழக மக்கள் வீதிக்கு வந்து போராடியிருக்க வேண்டும்,இருந்தாலும் பரவாயில்லை ஆனால் கருணாநிதியின் குடும்பத்திடம் மீண்டும் அதிகாரத்தை ஒப்படைத்தால் பிறகு ஊழலுக்கும் சர்வாதிகாரத்திற்கும்.துரோகத்திற்கும் மக்கள் அங்கீகாரம் கொடுத்துவிட்டதாக ஆகிவிடும்,வரப்போகும் ஐந்தாண்டிற்கும் கருணாநிதி குடும்பமே தமிழகத்தை ஆளும்நிலை ஏற்பட்டால் தமிழகம் சுடுகாடாகும். தமிழீழம் நாதியற்றுப்போகும் .ஆறுதலான செய்தியென்னவென்றால் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள், உண்மையில் வீழ்த்தப்பட வேண்டியவர்கள் கருணாதியும் ஜெயலலிதாவும்தான்,கருணாநிதியின் வீழ்ச்சியால் ஜெயலலிதா மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், ஈழ இதரவாளர்கள், மனிதஉரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள் (இப்போது மட்டும் என்னவாம்) இது ஊண்மை, கருணாநிதியையும். ஜெயலலிதாவையும் ஓரே நேரத்தில் வீழ்த்த வேண்டுமானால் அய்யா பழ,நெடுமாறன் கூறுவதுபோல மூன்றாவது அணி ஒன்று தேவை, இனால் மூன்றாவது ஆணி அமைக்கவேண்டியவர்கள் இரண்டு கழகங்களிடமும் பெட்டிக்கும்,தொகுதிக்கும் கையேந்துகிறார்கள், பிறகு எஞ்சியிருப்பது தமிழ்த்தேசிய சக்திகள்தான்.

தமிழர்கள் ஓன்றுபட வேண்டுமென்று முழக்கமிடும் தமிழ்த்தேசியத் தலைவர்கள் திசைக்கொருவராய்ப் பிரிந்துகிடக்கிறார்கள்.காரணம் கவிஞர் பழமலய் கூறுவதுபோல ஐந்துபேருக்கு ஆறு தத்துவம்தான்.

இதற்கு என்னதான் வழி? ஒரு கழகத்தின் தவறு இன்னொரு கழகத்தை வாழவைத்துக் கொண்டிருக்கின்றன, ஆனால் இது நிலையானதல்ல வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தினால் பிறகு அதிமுகவும் விரைவில் வீழ்ச்சியுறும்.கருணாநிதி, இரக்கமற்ற வஞ்சகமான துரோகி.ஜெயலலிதா நேர்மையான எதிரி.காலமும் வரப்போதகும் சட்டமன்ற தேர்தலும் நமக்கு துரோகியை வீழ்த்த வாய்ப்புதர உள்ளன. இந்த ஆட்சியின் மீது மக்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் மறக்கமுடியாத மாறாத சினம் பொங்கி ஆழிப்பேரலையாக உயர்ந்து எழுந்து சீறிப்பாய்ந்து வருகிது.மக்கள் நலனின் அக்கறை உள்ளவர்கள் யாராக இருந்தாலும் இந்த நேரத்தில் மக்களோடு கைகோர்ப்பதுதான் சரியானதாக இருக்கும்,திமுக-காங்கிரஸ் அதனோடு ஒட்டிக்கொண்டு தேர்தலைச் சந்திக்கும் எந்தக்கட்சியும் தமிழினத்திற்கு எதிரிகள்தான் இவர்களை எதிர்ப்பதால் நாம் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக ஆகிவிடுமே என்று சிலர் வாதிடுகின்றனர்.

எங்கள் பக்கம் இல்லாதவர்கள் பயங்கரவாதிகள் பக்கம் இருக்கிறார்கள் என்று உலக நாடுகளை அமெரிக்க அரசு கூறுவதற்கும் மேற்படி கருத்துக்கும் வேறுபாடு இல்லை. நான்கு மாடுகளை மோதி வீழ்த்தமுடியாத சிங்கம் தனது தந்திரத்தால்மாடுகளைப்பிரித்து ஓவ்வொரு மாடாக வீழ்த்துவதுபோலத்தான் இதுவும்,வீழ்த்தப்படவேண்டியவர்கள் இருவரும்தான் ஆனால் இரண்டு தீயசக்திகளையும் வீழ்த்த சூழலும் வலிமையும் இல்லாதபோது சிங்கத்தின் தந்திரத்தை கையாளுவதுதான் புத்திசாலித்தனம்.அதைவிடுத்துக் காங்கிரசை மட்டும் வீழ்த்துவோம் என்பதும் அல்லது தேர்தலைப் புறக்கணிப்போம் என்பதும். 49 ஓவுக்கு ஓட்டுப்போடுவோம் என்பதும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். தோழர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியுடன் எனக்கு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் திமுக -காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவேன் என்று அவர் அறிவித்ததிருப்பது மக்களின் மனநிலையை அறிந்து எடுத்த முதிர்ந்த முடிவாகும்,

தேர்தல் என்றால் மூன்று வழிகள்தான் உள்ளன, ஒன்று தேர்தலில் பங்கேற்பது இரண்டு தேர்தலைப் புறக்கணிப்பது. மூன்று தேர்தலில் ஒரு அணியை ஆதரித்து அல்லது எதிர்த்துப் பரப்புரை செய்வது, சுருக்கமாகச் சொன்னால் பங்கேற்பா?புறக்கணிப்பா?பரப்புரையா? என்பதுதான்.இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய சக்திகள் பங்குபெறக்கூடாது. காரணம் மக்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளாமல் தனித்து நின்று தனிமைப்படத் தேவையில்லை.கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர்களை மக்கள் மூன்றாவது அணியாக அங்கீகரிக்கத் தயாரானபோது அதன் தேர்தல் தலைவர்கள் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு கழகங்களிடம் இணைந்து கொண்டனர், தற்போது மூன்றாவது அணிக்கான சூழல் இல்லை, தேர்தலைப் புறக்கணிப்பது என்பது இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை தேவையில்லாதது.இது பிரச்சினையைக்கண்டு ஒதுங்குவதாகும். இந்தத் தேர்தலில் பரப்புரை செய்வதும் அதன் மூலம் துரோகிகளை மக்களுக்கு தோலுரித்துக்காட்டுவதுதான் சிறந்ததாகும்,வழக்கம்போல் இந்தத் தேர்தல் ஆட்சிமாற்றத்திற்கு மட்டும் வழிவகுக்கப்போவதில்லை மாறாக ஆதிக்க சக்திகளுக்கு தமிழினத்தின் நிரந்தரத் துரோகிகளுக்கு சாவு மணி அடிக்கும் தேர்தலாகும். அதோடு இந்தத் தேர்தலில் மக்கள் இன்னொரு தீர்ப்பையும் வழங்கியிருக்கிறார்கள்.

அது, ஓரு கட்சி இட்சி இனி இல்லை என்பதுதான்.எனவே மக்கள் உணர்வை மதித்து அவர்களோடு இணைந்து திமுக. காங்கிரஸ் தலைமையினான தமிழினத் துரோகிகளை வீழ்த்துவோம்.

இனி எப்போதும் எழுந்திருக்க முடியாதளவிற்கு வீழ்த்துவோம். இந்த வீழ்ச்சி எதிரிக்கும் ஒரு பாடமாக அமையட்டும். பிறகு எதிரியையும் வீழ்த்துவோம்.

தமிழ்த் தேசத்தை கட்டி ஏழுப்புவோம்,


கா.தமிழ்வேங்கை

No comments: