Sunday, February 13, 2011


காலையில் எழுந்து இர‌வுவ‌ரை வேலை பார்த்து முடித்துவிட்டு ம‌ன‌ம் வேர்த்து புழுங்கிய‌ நேர‌ம். ம‌ன‌து ஏதோ ஒரு த‌விப்புட‌ன் செய‌ல்ப‌ட்ட‌து. வானொலியை தேடினேன் முள்ளினை சிறிது சிறிதாக‌ ந‌க‌ர்த்திய‌ பொழுது ஏதோ ஒரு அலைவ‌ரிசை எடுத்த‌து. ஒரு க‌விஞ‌ர் க‌விதை வாசித்துக்கொண்டிருந்தார். இத‌ய‌ம் விலை ம‌திப்ப‌ற்ற‌தாக‌ இருந்த‌து என்கிற‌ வ‌ரிக‌ள் என்னை நிலை நிறுத்திய‌து. வ‌சிய‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ன் போல‌ சொற்க‌ளின் பின்னால் ந‌ட‌க்க‌ தொட‌ங்கினேன்.

இத‌ய‌ம் விலை ம‌திப்ப‌ற்ற‌தாக‌ இருந்த‌து

இப்போது அத‌ற்கு ஒரு விலையும் இல்லை

என்ற‌ முத‌ல‌டியை பாடி விட்டு க‌விஞ‌ர் நிறுத்தி விட்டார். மீண்டும் முத‌ல‌டியை பாடினார். ஆர்வ‌ம் அதிக‌ரித்து பொங்கி எழுந்த‌து. அடுத்த‌ அடியை பாடினார் வாங்கிய‌ ஒருத்தி திருப்பி கொடுத்துவிட்டு போய்விட்டாள்...

அட‌டா! என்ன‌ ப‌ரிதாப‌மான‌ வியாபார‌ம்?

திருப்பி கொடுத்து விட்டு போன‌வ‌ள் மீது கோப‌ம் பொங்குகிற‌து.

ப‌த்து இத‌ய‌மா இருக்கு ஒன்றில் நஷ்ட‌மான‌ல் ம‌ற்றொன்றில் ச‌ம்பாதித்து விட‌லாம் என்ப‌த‌ற்கு?

விலை கொடுத்தா வாங்கியிருப்பாள்?

இருக்காது, க‌ண்டிப்பா இருக்காது

அதுதான் விலைம‌திப்ப‌தாயிற்றே!

இத‌ய‌ம் ப‌ண்ட‌ மாற்று செய்து இருப்பாள் அல்ல‌து இந்த‌ பைத்திய‌க்கார‌ன் சும்மாவே தூக்கி கொடுத்து இருப்பான். ஒரு வ‌கையில் ஆறுத‌ல் ப‌ட்டுக்கொள்ள‌லாம் உடைத்து த‌ராம‌ல் முழுமையாக‌ கொடுத்திருகிறாளே. இன்னொரு முறை யோசித்து பார்த்தால் இர‌ண்டிற்கும் வித்தியாச‌ம் இருப்பதாக‌ தெரிய‌வில்லை. முழுமையாக‌ ம‌ட்டும் இருந்து என்ன‌ ப‌ய‌ன் ம‌திப்பே போய்விட்ட‌தே.

முன்னாலும் விலைம‌திப்பில்லை

இப்போதும் விலை ம‌திப்பில்லை

ஓ! எத்த‌னை பேரிட‌த்தில் இப்ப‌டி இத‌ய‌ங்க‌ள் மூளையில் கிட‌க்கின்றன‌? வாழ்க்கையே உன் முக‌வ‌ரி தேவை, எத‌ற்காம் உன்னை பிரிந்தால் எப்ப‌டி ம‌றுப‌டியும் ச‌ந்திப்பேன்

வாழ்க்கையே உன் முக‌வ‌ரி தேவை...

எவ்வ‌ள‌வு ஆழ‌மான‌ வ‌ரிக‌ள்?

வாழ்க்கையில் முக‌வ‌ரி கிடைப்ப‌து எத்த‌னை க‌டின‌மான‌ காரிய‌ம். யார் யாரோ இதுதான் வாழ்க்கையின் முக‌வ‌ரி என்று த‌ந்திருக்கிறார்க‌ள். தேடிபோய் பார்த்தால்தான் தெரிகிற‌து அங்கே வாழ்க்கையே இல்லையென்று.

ந‌ம்முடைய‌ எத்த‌னை க‌டித‌ங்க‌ள் திரும்பி வ‌ந்திருக்கின்ற‌ன‌ முக‌வ‌ரியாள‌ர் இல்லை என்று!

எத்த‌னை பேர் வாழ்கையை தேடுவ‌திலேயே ஆயுளை செல‌வ‌ழித்து விடுகிறார்க‌ள்...

என் உயிர் காத‌லிக்கு அழ‌கான‌ க‌டித‌ம் எழுதினேன்

பேனா இல்லை

காகித‌ம் இல்லை...

எவ்வ‌ள‌வு அழ‌கான‌ காத‌ல் க‌டித‌ம்

எழுத‌ப்ப‌ட்ட‌ காத‌ல் க‌டித‌த்தை விட‌

எழுத‌ப்ப‌டாத‌ காத‌ல் க‌டித‌ம்தான் அழ‌கான‌து

அப்ப‌டியே எழுத‌ நினைத்தாலும் எழுதிவிட‌ முடியுமா?

வ‌லைக்குள் மீன் சிக்கும், த‌ண்ணீர் சிக்குமா?

அன்புக்குரிய‌வ‌ளே..!

நான் உன்னிட‌ம் இருந்து விடைபெறுகிறேன். நேசிக்கிற‌ சிற்ப‌த்தின் மீது ஒரு கீற‌ல்கூட‌ விழுந்து விட‌க்கூடாது என‌ நினைப்ப‌வ‌ன் நான்.என் முக‌த்தையே உன் முக‌மாய் க‌ற்ப‌னை செய்து கொள்கின்ற‌ அள‌வுக்கு உன்னால் ஈர்க்க‌ப்ப‌ட்டிருக்கிறேன். உன் புகைப்ப‌ட‌த்தைக்கூட‌ நான் எடுத்து செல்ல‌வில்லை. ஏனென்றால் உருவ‌ம் என்ப‌து ந‌ம் அன்பில் எப்போதும் குறுக்கீடு செய்ய‌வில்லை என்றே எண்ணுகிறேன்...

காத‌லியாய் இருப்ப‌வ‌ள்தான்

க‌ன‌வுக‌ளில் க‌ளிக்க‌ வைப்ப‌வ‌ள்

கால‌மெல்லாம் உன் நினைவுக‌ளின்

க‌த‌க‌த‌ப்பிலே உயிர்வாழ்ந்து விடுவேன்...

எந்த‌வொரு க‌விதையை ப‌டிக்கின்ற‌ போது

நீ என்னை நினைத்துக்கொள்வாய் என‌

நினைக்கிறேன்...

நான் உன்னை நேசித்த‌த‌ற்கு

என் நெஞ்சு ம‌ட்டுமே அத்தாட்சியாக‌ இருக்கும்

இப்ப‌டியே வ‌ரிக‌ள் தொட‌ர்ந்த‌போது

இத‌ய‌ம் ந‌டுங்க‌ ஆர‌ம்பித்து விட்ட‌து

இர‌வில் தூங்குவ‌த‌ற்கு க‌ண்க‌ளை தேடினேன்...

No comments: