காவிரி நதியோரத்து
காகித பூக்களாய்
இளைஞர்கள் கூட்டம்
வேலை வாய்ப்பு
அலுவலகத்தில்...
கைதடியே மூன்றாம் காலாக்கி
குனிந்த படியே கிளவி நடக்க
பாட்டி எதை தேடுகிறாய்
என்று கிண்டலாய்
இளைஞர்கள் சிரிக்க...
தம்பி!
கேள்விகுறியாய் வளைந்து
கிடக்கும் இந்தியாவுக்கு
ஒரு கைத்தடி தேடுகிறேன்...
வேலை வேலையென தேடி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
வேலை வாங்கிவிட்டால்
வேலை நிறுத்தம் செய்ய
ஒரு வாய்ப்பை தேடி அலைவீங்க
என்று கூற
இளைஞர்கள் மௌனத்தில்...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன் துபாய்
No comments:
Post a Comment