
புலர்ந்து கிடக்கிறது
புத்தாண்டு ஒரு பக்கத்தில்
இறந்து போய்க்கிடக்கிறது
சந்தோசம் இதயத்தில்...
இரண்டாயிரத்து எட்டின்
சிறகை உடைத்து
இரண்டாயிரத்து ஒன்பதின்
சிறகைக் கட்டி
பறக்க வந்து இருக்கும்
ஆண்டு புத்தகமே...
நீ எழுதப் போவது
எந்த அத்தியாயங்களோ?
வறுமையும் போருமே
உன் கருவானால்
தெருவெங்கும் வீசும்
பிணவாடைகள் தான்
உனக்கும் சுவாசிக்க கிடைக்கும்...
ஓயாத யுத்தம் , காயாத இரத்தம்
தமிழ் ஈழத்தில்
இவைகளை
ஒழிக்கச் சொல்லி
கடந்த புத்தாண்டுகளில்
என் ஆத்மாக்கள்
அலுத்துவிட்டன...
வறுமை நீங்கி
ஜாதி,மதங்கள் ஒழிந்தும்
வெடிக்கும் போர் ஓய்ந்து
என்றைக்கு அமைதியாகுமோ
அன்றைக்குப் பின் வரும்
புத்தாண்டுகளே
நமக்கு நல்ல ஆண்டுகள்
அதுவரை
புத்தாண்டெல்லாம்
புத்தெழுச்சியில்லா
ஆண்டுகள்தான்...
- எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
நன்றி : அதிகாலை.கொம்
No comments:
Post a Comment