
அப்பா அம்மாவுடன்
கொஞ்சி மகிழ ஆசை
அண்ணா அக்கவுடன்
அன்பாக ஆடிபாட ஆசை
தம்பி தங்கையுடன்
தவழ்ந்து விளையாட ஆசை
உற்றார் உறவினருடன்
உறவாட ஆசை
பக்கத்து வீட்டு நண்பர்களுடன்
பந்து விளையாட ஆசை
சொந்த மண்ணில் சுதந்திரமாக
சுற்றி திரிய ஆசைதான்
ஆனால்
அந்நிய நாட்டில்
அனாதையாக அல்லவா
வாழ்கிறேன்...
வயல்தனை விட்டு
பிடுங்கிய நாற்றாய்
வாழ்ந்த வீட்டையும்
வாழவைத்த மண்ணையும் விட்டு
வெளியேறி வாடிப்போனது
என் இதயம்...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
No comments:
Post a Comment