
அத்துவானக் கட்டில்
வெந்து காய்ந்தும்
நனைந்து குளிர்ந்தும்
தலைவிரித்து
நின்று கொண்டிருக்கும்
ஒற்றைப் பனைமரத்தின்
துக்கங்களோடு
ஒளிபுக முடியா காலவெளிக்கப்பால்
அடர்ந்த காட்டில்
துள்ளி குதித்து
வீழ்ந்து கொண்டிருக்கும்
அருவியின்
சந்தோசங்களோடும்
ஆயிரமாயிரம்
நட்சத்திரங்களுக்கூடாய்
எதிலும் ஒட்டாது
வளர்ந்து தேய்ந்தும்
தேய்ந்து வளர்ந்தும்
காய்ந்து கொண்டிருக்கிறது
என் தனிமை நிலவு...
கண்ணாடி மனிதன்
நான் அப்படியே நானாகத் தெரிவேன்
நான் நானாகத் தெரிந்தாலும்
கண்ணாடி மனிதனுக்கு இல்லை
என்னைப் போல நிறைய முகங்கள்
எட்டுப்புலிக்காடு
ரெ.வீரபத்திரன் துபாய்
No comments:
Post a Comment