
கரும்புலிகள்
பெற்ற தாய் நாட்டையும்
பேசும் தமிழ் மொழியையும்
பற்றுடன் மதித்து
மனதில் உறுதியும்
கொள்கையும் கொண்டு
கடற்புலியாகவும்
களப்புலியாகவும்
சாதனை படைக்கும்
கரும்புலி வீரரே
உமை நாம் வணங்குகிறோம்...
நேரம் குறித்து வைத்து
சாவைத் தோள் மீது தாங்கி
பட்டப் பகலிலும் கார் இருளிலும்
எதிரியை சிதறடித்து
வெந்து உடல் கருகி
வெற்றிகளை ஈட்டிதரும்
வேங்கையல்லவா நீங்கள்...
மண் மீது படை எடுத்த
மாற்றானின் முகம் கண்டு
பல்லைக் கடித்துக்கொண்டு
நெஞ்சமதில் வீரத்துடன்
மெய்தனிலே வெடி குண்டைச் சுமந்து
வெடித்து சிதறிய வேங்கைகள் நீங்கள்...
வேதனைக் கடலில் மூழ்கிய் போதும்
சோதனை புயலில் சிக்கிய போதும்
சாதனை புரிந்த சரித்திர
நாயகர்கள் நீங்கள்...
விடுதலைவீரபத்திரன்
துபாய்
1 comment:
உரம் ஏற்றும் கவிதை.
விதைக்கப்பட்டவர்கள் விருட்சமாவார்கள், தமிழீழ விடுதலை பூமியில்...
Post a Comment