
என்னையே சொல்லி
அழுது கொண்டிருப்பாய் அம்மா
கையாலாகாத மகன் கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
கண்காணாத தூரத்தில்...
முட்டிப்போன என் வயிற்றை
தொட்டுப்பார்க்கிறேன் அம்மா
ஒட்டி உலர்ந்து போன
உன் வயிறு ஞாபகம் வருகிறது...
வெள்ளைக்காரில்
வழுக்கிச்செல்லும் போதெல்லாம் அம்மா
வெறும் காலுடன்
நீ நடந்த தூரம்
நினைவுக்கு வரும்...
விழிகளுக்கும் உதடுகளுக்கும்
இனி வேலையில்லை அம்மா
காகிதங்களே கவலை சுமக்கும்
கண்ணீர் சுமக்கும்
அன்பு வளர்க்கும் ஆதரவு தேடும்...
வயிற்றுக்காய் வாழ்வு வளர்த்து
வாழ்வுக்காய் வயிறு வளர்த்து
ஆனால்
அன்புக்காக மட்டும்
அன்பு வளர்த்தது
என் அம்மா மட்டும்தான்...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
2 comments:
nalla iruku pa kavithai
அயல் நாட்டுப் பணி அம்மாவின் பிரிவு..வலி வார்த்தைகளில்...
Post a Comment