Sunday, December 12, 2010

”கிரவுண்ட் றிப்போர்ட்”என்ற இணையத் தளத்தில் வி சுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

”கிரவுண்ட் றிப்போர்ட்” என்ற இணையத் தளத்தில் வி சுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

(DELHI MORE ALARMED THAN COLOMBO OVER THE MULLIVAYKAL MASSACRES AND SRI LANKA (SL) WAR CRIMES)

http://www.groundreport.com/World/DELHI-MORE-ALARMED-THAN-COLOMBO-OVER-THE-MULLIVAYK_5/2931789

”கிரவுண்ட் றிப்போர்ட்”என்ற இணையத் தளத்தில் விசுப்ரமணியம் என்ற பத்திரிகையாளர் எழுதிய கட்டுரையின்தமிழாக்கம்

முள்ளிவாய்க்கால் படுகொலையில் புதுடில்லியின் தென்தொகுதியின் (South Block) ஈடுபாடு தொடர்பான விவரங்கள் தற்போது வெளிவந்திருக்கின்றன. இங்கு தென்தொகுதி என்பது வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றையே குறிக்கிறது.
தற்போது காத்திரமான போர்க் குற்ற ஆதாரங்கள் வெளிவருவதானது புதுடில்லிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கைக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புகளை தடுத்து நிறுத்திய சோனியாவின் அதிகாரம் பெற்ற புதுடில்லி முகவரது செயற்பாடுகளை இந்த ஆதாரங்கள் சீர்குலைத்துவிட்டன.
போரின் இறுதிக் கட்டத்தில் நாராயணன், மேனன் போன்ற சோனியாவின் உயர்மட்ட முகவர்களது அறிவுறுத்தல்களுக்கு அமையவே இலங்கை செயற்பட்டிருந்தது.

எனினும் தற்போது "றோ" தன்னிடம் உள்ள போர்க்குற்ற ஆதாரங்களைக் காட்டி இலங்கையை மிரட்டுவதுதான் கோத்தபாய புதுடில்லி மீது சீற்றம் கொள்வதற்கான காரணம். தமிழினப் படுகொலை இடம்பெற்றதைக் காட்டும் வானிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் (ஆதாரங்கள்) "றோ" வசம் இருக்கின்றன.
போரின் இறுதி நாள்களில் முள்ளிவாய்க்கால் பகுதியில் குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் செறிந்திருந்தனர். அதேவேளையில், மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை "றோ" இலங்கைப் படைகளுக்குச் சரியாக இனங்காட்டியிருந்தது.

முள்ளிவாய்க்கால் பகுதியில் போரற்ற பகுதி என்று இராணுவம் அறிவித்த இடங்களில் மக்கள் செறிந்திருந்த பகுதிக்குள் இறுதி வலிந்த தாக்குதலை மேற்கொள்ளும் திட்டத்தை முன்னெடுக் குமாறு எம்.கே.நாராயணனும் சிவ் சங்கர் மேனனும் இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.
பொன்சேகா தரும் தகவலின்படி, பொதுமக்கள் இழப்புக்களைக் குறைக்கும் வகையில் ஓகஸ்ட் மாதம் அளவிலேயே இறுதி வலிந்த தாக்குதலை நடத்துவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையினை இல்லாது செய்யவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் செயற்பட்ட சோனியாவின் அதிகாரம்பெற்ற முகவர்களான நாராயணனும் மேனனும், காலம் கடத்துமிடத்து அமெரிக்கா விடுதலைப் புலிகளின் தலைமையினையும் பொதுமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு வழிசெய்துவிடும் என்று அஞ்சினர்.
இதன் விளைவுதான் முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலை. தமிழ் ஆயுதக்குழுக்களை முற்றாக இல்லாதுசெய்வதற்கான கொழும்பினதும் புதுடில்லியினதும் கூட்டிணைந்த முயற்சிதான் இது. இதன்போது ஏற்பட்ட பெரும்எண்ணிக்கையான பொதுமக்கள் இழப்பை ஏற்றுக் கொள்ளக்கூடிய "தவிர்க்கமுடியாத" இழப்புகள் என இரு அரசுகளும் வகைப்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் நடைபெற்ற படுகொலைக்கான தனிப்பொறுப்பினை கோத்தபாய மேல் மட்டும் சுமத்த முடியாது. சோனியாவின் அதிகாரம் பெற்ற முகவர்களின் மறைமுகமான கையாளாகவே கோத்தபாய அப்போது செயற்பட்டிருக்கிறார்.
போரின் இறுதி நாள்களில் இடம்பெற்ற படுகொலையினை உறுதிப்படுத்தும் வீடியோ ஆதாரங்கள் (வானில் இருந்து செய்மதிகள் மூலம் எடுக்கப்பட்டவை) தன்னிடமிருப்பதாகக் கூறிய புதுடில்லி, போரில் அளவுக்கதிகமான பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டதற்கு இலங்கைதான் முழுப்பொறுப்பு என குற்றம் சுமத்தியது. அதைத் தொடர்ந்தே இனப்படுகொலை தொடர்பான விவரங்கள் வேகமாக வெளிவந்தன.

புதுடில்லியின் இந்தக் குற்றச்சாட்டினையடுத்து கொழும்பு வேகமாகவும் துணிவுடனும் செயற்பட்டது. இறுதியில், போர்க் குற்றங்கள் தொடர்பாக”முழுமையாக மௌனம் காக்கவேண்டும்”என்ற கொழும்பினது கோரிக்கைக்கு வளைந்து கொடுக்கவேண்டிய நிலைக்குப் புதுடில்லி தள்ளப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இலங்கைக்கு வெற்றியினைப் பெற்றுக்கொடுத்த சிறிலங்காப் படைப்பிரிவும் இந்தியாவின் இரகசியப் படைப்பிரிவும் இணைந்து முன்னெடுத்த வலிந்த தாக்குதல் தொடர்பான மிகவும் முக்கியமான வான்வழிப் புலனாய்வுத் தகவல்களைப் பெறுமாறு புதுடில்லியின் தென்தொகுதி அதிகாரிகளே "றோ"வினைக் கோரியிருந்தனர்.
இதனால் போர் உக்கிரமாக நடைபெற்ற போது ஏற்பட்ட உண்மையான இழப்புக்களை உறுப்படுத்தும் வான்வழியே எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களை எடுக்கும் அருமையான வாய்ப்பு "றோ"வுக்குக் கிடைத்தது.
தமிழ் ஆயுதக் குழுக்களின் மறைவுக்குப் பின்னானதொரு சூழலில் கொழும்பு மீது காத்திரமான அழுத்தினைப் பிரயோகித்து அதனை அடிபணிய வைப்பதற்கான ஓர் ஆயுதமாகவே புதுடில்லியும் "றோ"வும் போர்க்குற்ற ஆதாரங்களைப் பார்த்தன. ஆனால், கொழும்பு இதுபோன்ற அழுத்தங்களுக்கு அடிபணியாது நேரெதிர் மாறான நிலைப்பாட்டினை எடுத்துச் செயற்பட்டது.
புதுடில்லியின் இந்தக் குற்றச்சாட்டினால் கோபமடைந்த கோத்தபாய, கொழும்பு போர்க் குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர்கொள்ள நேர்ந்தால் அதற்கு புதுடில்லியின் தென்தொகுதியும் உடந்தையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில்தான் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம் பெற்ற ஆள்களுடனான தொடர்பாடல் பதிவுகளைக் கையிலெடுத்தார். இது டில்லியின் வாயை முழுமையாக அடைத்தது.
இதனால் குழப்பமடைந்த புதுடில்லி துரிதமாகவும் நிதானமாகவும் செயற்பட்டது. மே 2009இல் ஐ.நாவினது மனித உரிமைச் சபையில் இலங்கை மீது குற்றஞ்சாட்டிக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. இவ்வாறு, போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்காக சில மேற்கு நாடுகள் மேற்கொண்ட

முயற்சியை முறியடித்ததன் மூலம் கொழும்பினைச் சாந்தப்படுத்தியது. நீண்டபல ஆண்டுகளுக்கு இந்தியாவினைத் தனது சொற்படி ஒழுகவைக்கக்கூடிய இந்தப் பிடியினை கொழும்பு தற்போதும் அழுத்தமாகக் கொண்டிருக்கிறது.
தனது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையினையும் தமிழர்களை மேலும் மேலும் அந்நியப்படுத்தும் வகையிலான அரசியல் செயற்பாடுகளையும் இலங்கை தொடர்ந்தும் மூர்க்கமுடன் முன்னெடுக்கின்ற போதும் இதுவிடயம் தொடர்பில் புதுடில்லி மௌனம் காக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதே உண்மை நிலை.
இந்தியா மௌனம் காப்பது தொடர்பில் தமிழ்நாடு கோபாவேசத்துடன் செயற்படுகின்ற போதும் புதுடில்லியால் எதுவுமே செய்யமுடியவில்லை; முடியாது என்பதுதான் யதார்த்தம். இப்போது, ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் இருக்கிறது இந்தியா.
இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான தனது நிலைப்பாட்டிற்குத் தமிழ்நாட்டு அரசும் தனது ஆதரவினையும் வழங்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதற்கான அனைத்துவித முனைப்புக்களிலும் ஈடுபடுவதற்கு புதுடில்லி ஒருபோதும் தயங்கவில்லை.
இதன் அடிப்படையிலேயே "ஸ்பெக்டராம்" (அலைக்கற்றைகளை ஒதுக்கும் முறைமை) ஊழல் விவகாரத்தின் மூலம் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைக் கெடுப்பதற்கு புதுடில்லி திரைமறைவு முயற்சிகளை எடுத்திருந்தது.

இலங்கை அரசானது தமிழ் மக்களுக்கு எதிரான இனக்கொலையினை முழு வேகத்துடன் முன்னெடுத்தபோதும், வடக்கு கிழக்கினைத் தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தி மேலும் பல தமிழர்களை இடம்பெயர வைக்கின்றபோதும்,
கடுமையான எதிர்ப்புக்களின் மத்தியிலும் நாட்டினது வடக்குகிழக்குப் பகுதிகளில் இன ரீதியிலான குடிப்பரம்பலை மாற்றும் முனைப்புக்களை மஹிந்த அரசு மேற்கொண்டு வருகின்ற போதும் இந்தியா தொடர்ந்தும் மௌனம் காத்து வருகிறது.
இதற்கெல்லாம் இலங்கை அரசு தன்னிடம் வைத்திருக்கும் இந்தியா தொடர்பான பலமான பிடிதான் காரணம்.

இலங்கை மேற்கொண்ட, மேற்கொள்ளும் இனக்கொலையில் புதுடில்லியும் பங்கெடுத்திருக்கிறது. இடம்பெற்ற போர்க் குற்றங்கள் சுதந்திரமாக விசாரிக்கப்படவேண்டும் என அனைத்துலக சமூகம் வலியுறுத்திவரும் நிலையில் இதுபோன்றதொரு பாரதூரமான குற்றச்செயலுக்கு டில்லியும் துணைபோயிருப்பது அனைத்துலக அளவில் இந்தியாவின் ஒழுக்கத்தினை மேம்படுத்துவதற்கு ஒருபோதும் உதவாது.
எல்லாவற்றுக்கும் மேலாகப் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்படும் ஒரு நாட்டுக்கு முண்டு கொடுத்து நிற்பதும் குறிப்பிட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை வெளிப்படுத்த மறுப்பதும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தினைப் பெறும் இந்தியாவின் முயற்சியினைப் பாழாக்கிவிடும்.

இது குற்றவியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஒப்பானது. தற்போதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளின் செயற்பாட்டுக்கும் இந்தியாவின் இதுபோன்ற நடவடிக்கைக்கும் வித்தியாசம் ஏதும் கிடையாது. இவ்வாறாக இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் புதுடில்லி வேண்டுமென்றே மௌனம் சாதிப்பதானது, மனித உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் யாரோ அவர்கள் மீது இந்தியா வெளிப்படையாகக் குற்றம் சுமத்தவேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும் அளவிற்கு நிலைமைகளைக் கொண்டு சென்றுள்ளது.
மேற்கு நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு எதிரான போரைத் தான் முன்னெடுக்கப் போவதாக அண்மையில் இலங்கை வெளிப்படையாகவே அறிவித்திருப்பதானது தொடர்புடைய நாடுகளில் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழர்கள் அதிகம் வாழும் புலம்பெயர் நாடுகளில் இலங்கை அரசு தனது புலனாய்வாளர்களை நிறுத்தியிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் வாழும் இந்தத் தமிழர்கள் தங்களது உறவுகளைப் பார்ப்பதற்காக இலங்கைக்குப் பயணம் செய்யும்போது திரட்டப்பட்ட புலனாய்வுத் தகவல்களுக்கு ஏற்ப அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு முன்னெடுத்து வருகிறது.
இலங்கைக்குப் பயணம் செய்யும் தமிழர்கள் பலர் காணாமற்போயிருக்கின்றனர்; கட்டாயக் கைதுக்கும் உட்பட்டிருக்கிறார்கள். அரசின் முழுமையான ஆதரவுடன் செயற்படும் வெள்ளைவான் கும்பல்களே இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இதுபோன்ற சம்பவங்களை வெளிப்படுத்தும் முனைப்புக்களிலும் பாதிக்கப்பட்டவர்களின் சார்பான சட்டச் செயற்பாடுகளிலும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கும் இலங்கை அரசிற்கு எதிரான போர்க் குற்றப் பரப்புரைகள் அனைத்துலகின் ஆதரவினை இப்போது பெற்று வருகிறது.
இனக்கொலையினை முன்னெடுத்த தரப்புகள் எவையோ அவற்றுக்கெதிரான சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கக்கூடிய அனைத்துலக அளவிலான கட்டமைப்புக்களை வலுப்படுத்துவதன் ஊடாகக் குற்றவாளிகள் யாரோ அவர்களைக் கைதுசெய்வதற்கான வாய்ப்புகளும் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்வதாகவே நம்பப்படுகிறது.

http://www.groundreport.com/World/DELHI-MORE-ALARMED-THAN-COLOMBO-OVER-THE-MULLIVAYK_5/2931789

http://www.eelamwebsite.com/?p=9541

No comments: