
அன்று பெய்த மழையில்
பூக்கள் பூத்தன
செடிகளுக்கு புது வாழ்வாம்...
தவளைகள் மகிழ்ச்சி
ஆராவாரத்தில்
பறவைகள்
பாடத் தொடங்கின...
இருந்தும்
அழுதபடியே
அனாதை குழந்தை
தெரு ஓரமாய்
பாழும் ஈழத்தில்
அன்று பெய்த மழையில்…
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
No comments:
Post a Comment