
உன் இதழ்மீது
மழைத்துளி விழுந்தாலே
என் இதயத்தில்
இடிவிழுந்தது போல இருக்கிறது...
உன் காற்றில் பறக்கும்
மகரந்தத்தை சுவாசிக்கிறேன்
நீ பேசுவதில்லை
நானும் தான்
பரவாயில்லை
நம் மௌனங்களாவது
பேசிக்கொள்ளட்டும்...
நான் பார்க்கும் திசையெல்லாம்
நீ தெரிகின்றாய்
என் இரவின் நிலவாய்
சிரிக்கின்றாய்
என் கவிதையின் கருவாய்
உயிர்க்கின்றாய்
சில சமயம் நானாகவும்...
நான் நீயாக இருப்பதால்தான்
நான் நானாக இருப்பதில்லை
எப்போதுமே...
காற்று பட்டாலே கசங்கிவிடுவாய்
உன் காம்பை முறிப்பதில்
எனக்கு விருப்பமில்லை
ஏனென்றால்
உன்னை எப்போதே
நேசிக்க தொடங்கிவிட்டேன்
ஒரு வண்டாக அல்ல...
எட்டுப்புலிக்காடு ரெ.வீரபத்திரன்
No comments:
Post a Comment